Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அரக்கன்( ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்று EPISODE - 15

Advertisement

naveen prabu

Member
Member
EPISODE - 15/21

“தப்பிச்சிட்டானா எப்புடி?…”


“எனக்கும் இதே ஊருல இருக்க ஒரு பிரபல ரௌடிக்கும் ரொம்போ நாலா பிரேசனை இருந்துது, மணல் கடத்துறது, மரம் கடத்துறதுனு நறிய தப்பு செஞ்சிட்டு இருந்தான், என் மேல் அதிகாரிகளே அதை கண்டுக்காதன்னு என்கிட்ட நறிய நாள் சொல்லி இருக்காங்க, என்னால கண்டுக்காம இருக்க முடியல அப்போ இந்த சம்பவம் நடந்த அதே நாள் மரம் கடத்துன அவன் கூட்டத்தை சேர்ந்த 8 பெற நா அரெஸ்ட் பண்ணிட்டன், கோவத்துல அவன் அன்னைக்கு நைட் அவுங்க ஆளுங்களோட எங்க ஸ்டேஷனையே கொளுத்தி எங்க ஸ்டேஷன்ல இருந்த எல்லாரையும் கொன்னுட்டான்…. இந்த பிரேசனைல எல்லா கைதிகளும் தப்பிச்சிட்டாங்க சூர்யாவும் தப்பிச்சிட்டான்… என்னையும் பலமா தலைல தாக்கிட்டாங்க, அந்த சம்பவம் நடந்து 3 மாசம் நா கோமால இருந்தனு சொன்னாங்க… அதுக்கு அப்புறம் நா ஸ்டேஷன்ல சொல்லி தேட சொன்னான் அவனை கண்டுபுடிக்க முடியல… அந்த பாடியையும் காணும்… கோமாவுல இருந்ததுனால அவன் முகம் எனக்கு மறந்துடுச்சி சார்…”


“கொஞ்சம் யோசிச்சு பாருங்க சார்.. அவனை பத்தி எந்த டீடெயில்ஸ்சும் எங்ககிட்ட இல்ல… அவன் இது வரைக்கும் எத்தனை பேரை கொன்னு இருக்கான், இன்னும் எத்தனை பேரை கொள்ள போறான்னு எதுமே தெரியல…. கேஸ் ரொம்போ சீரியஸ் கொஞ்சம் யோசுச்சி பாருங்க சார்…” என்றார் சத்தியா


“சாரி தம்பி நான் ரொம்போ நாலா அவன் முகத்தை நினைவு படுத்த ட்ரை பண்ணிக்கிட்டு தான் இருக்கன் ஆனா என்னால முடியல…”

நவீன் திடீரென எழுந்து வீட்டை விட்டு வெளியே சென்றார், நவீன் சென்றதை பார்த்து சத்தியாவும் கலைவாணனிடம் சார் நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க தொ வரோம்… சொல்லிவிட்டு விடியோவை கட் செய்துவிட்டு நவீன் பின்னால் ஓடினார். நவீன் வாசலில் நின்று “எப்புடி அவனை கண்டு புடிக்கறது…” சத்தமாக தன்னை தானே கேட்டு கொண்டிருந்தார்… பாக்கெட்டில் தொட்டு பார்த்தார் சிகிரெட் காலி சத்யவிடம்



“சிகிரெட் வெச்சி இருகியா…”


“இல்ல சார்…”


“பொய் சீக்கிரம் வாங்கிட்டு வா சத்தியா…” வீட்டுக்கு எதிரே இருந்த போட்டி கடையை நோக்கி ஓடினார் சத்தியா… சிகிரெட் வந்தது... நவீன் பத்தவைத்தார்… “என்ன டா சத்தியா கேஸ் தலியாருக்குது…”


“மறந்துட்டாரே சார்… அவனோட போட்டோ வேணும்னா கலைவாணன் மனக்குள்ள பொய் தான் போட்டோ எடுக்கணும் போல…”


“என்ன சொன்ன…”


“ஒன்னும் இல்ல சார்… சாரி…”


“டேய் சொன்னதை திருப்பி சொல்லு டா…”


“கலைவணனோட மனசுக்குள்ள பொய் தான் அந்த கில்லர் போட்டோ எடுத்துட்டு வரணும்னு… சாரி சார்…”


“சூப்பர் ஐடியா சத்தியா… என் போன் எங்க?...”



ஒன்றும் புரியாமல் சத்தியா பாக்கெட்டில் இருந்த நவீனின் போனை எடுத்து கொடுத்தார், நவீன் போனை டயல் செய்தார்….


“ஹலோ….. நா இன்ஸ்பெக்டர் நவீன் பேசுறேன்… டாக்டர் பாலா இருக்காரா…”


“டாக்டர் கொஞ்சம் பிஸியா இருக்காரு… ஒரு கேஸ் அன்டன் பண்ணிக்கிட்டு இருக்காரு…” டாக்டர் பாலாவின் அசிஸ்டன்ட் பதிலளித்தார்


“டேய்… ரொம்போ இம்போர்ட்டண்ட்… அவன்ட ஒடனே போன் குடு… போ…” அதட்டினார் நவீன்.


சிறிது நேரத்தில் பாலா பேச தொடங்கினார்…


“ஏன் டா அவனை மிரட்டுன…( டாக்டர் பாலா ).


“டேய் விலாடுறதுக்கு எனக்கு இப்போ நேரம் இல்ல ரொம்போ சீரியசான மேட்டர்…”


“சொல்லு டா…”


“நீ ஷய்காட்ரிஸ்ட் தானே…”


“எத்தனை வாட்டி டா மறப்ப... ஆமா டா…”


“எனக்கு ஒரு டவுட்?…”


“சொல்லி தொலை டா… பேஷன்டு வெய்ட்டிங்…”


“இப்போ ஏற்கனவே பாத்த ஒரு முகத்தை நான் மறந்துட்டேன் வெச்சிக்கோ அத உன்னால எனக்கு நியாபக படுத்த முடியுமா?…”


“கண்டிப்பா முடியும் டா…”


“நீ உடனே சேலம் வரணும்…”


“என்ன விளையாடுறியா நறிய ஒர்க் இருக்கு டா…”


“சரி உனக்கு தெரிஞ்ச ஷய்காட்ரிஸ்ட் யாராச்சும் சலேத்துல இருபங்களா…”


“ஹ்ம்ம் என் பேட்ச் மெட் லதா அங்க தான் கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்ல சீனியர் ஷய்காட்ரிஸ்ட்டா ஒர்க் பண்ணுற… நா அவல உனக்கு ஹெல்ப் பண்ண சொல்லி சொல்லுறன்… நீ இருக்குற இடத்தோட அட்ரெஸ் மெசேஜ் பண்ணு நா அவளை வர சொல்லுறன்…”


“பாலா லேட் பண்ணுற ஒவ்வொரு நிமிஷமும் ஒரு சைக்கோ கில்லர் யாரையாவது கொள்ளலாம், சோ அந்த பொண்ண சீக்கிரமா வர சொல்லு இட்ஸ் அர்ஜென்ட்…”


“புரியுது டா… உடனே வர சொல்லுறேன்…”


போன் காலை துண்டித்த உடன் “சத்தியா…. இந்த அட்ரெஸ்ஸை அந்த நம்பருக்கு அனுப்பு, அப்புறம் இங்க இருக்க லோக்கல் ஸ்டேஷனை காண்டாக்ட் பண்ணி பாரென்சிக் டிபார்ட்மெண்ட்ல இருந்து காம்போசிட் ஆர்ட்டிஸ்ட் ஒருத்தரை வரவை கலைவாணன் சொல்ல சொல்ல வரையரமாரி… சீக்கிரம்…” சத்தியா நடக்க போறதை அறிந்தவனாய் நவீனின் ஆற்றலை கன்டு வியந்தான்…


“செம சார்… தொ உடனே ஏற்பாடு பண்ணுறன் சார்…” சத்தியா வேலையை தொடங்கினான்



அரை மணி நேரத்தில் டாக்டரும், படம் வரைபவரும் கலைவாணனின் வீட்டில் இருந்தனர். நவீன் டாக்டரிடம் விவரித்தார்


“மேடம் நாங்க ஒரு சைக்கோ சீரியல் கில்லர தேடிகிட்டு இருக்கோம்…. அவனை பத்தி எந்த எவிடென்சும் எங்க கிட்ட இல்ல… அவனை பாத்த ஒரே ஒரு ஆளு மிஸ்டர் கலைவாணன் மட்டும் தான்… ஆனா அவுரும் இப்போ மறந்துட்டார்… நீங்க எப்புடியாவது கலைவாணனுக்கு அந்த கில்லரோட முகத்தை நியாபக படுத்துங்க…”


“கண்டிப்பா மிஸ்டர் நவீன்… மிஸ்டர் கலைவாணன் அந்த கில்லரை பாத்தது என்ன தேதினு தெளிவா சொல்ல முடியுமா…”


தேதி ஜனவரி 22, 2019 சனிக்கிழமை டைம் ஒரு 6 மணிக்கு மேல…. (ஸ்டேஷன் எறிந்த தேதியை விசாரித்து வைத்திருந்தார் டாக்டர் வருவதற்குள்)


“இது போதும்… நா பாத்துக்குறேன்…”


“அப்புறம் நீங்க... அவர் சொல்ல சொல்ல அந்த கில்லர வரஞ்சி தரணும்…” வரைபவரிடம் கூறினார் நவீன்


“கண்டிப்பா சார்…”


டாக்டர் கலைவாணனின் ரூமினுள் நுழைந்ததும் ரூமில் இருக்கும் அணைந்து ஜென்னலையும் தாழ் போட்டு விட்டு அனைவரையும் பார்த்து “இங்க என்ன தவிர வேற யாரும் எந்த சூஸ்நிலையிலும் பேச கூடாது…. உங்க மொபைல்ஸ் எல்லாம் சுவிட்ச் ஆப் பன்னுங்க எந்த சத்தமும் வர கூடாது புரியுதா…” என்றார்


“நவீன் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... மிஸ்டர் கலைவாணனை சாய்ந்த மாதரி உக்கார வையுங்க…”


நவீன் கலைவாணனை படுக்கையை அட்ஜஸ்ட் செய்து சாய்ந்த நிலையில் அமரவைத்தார், டாக்டர் லதா கலைவாணனுக்கு நேர் எதிரே உள்ள சுவற்றில் பேட்டரியினால் இயங்கும் குழலும் சக்கரத்தை மாட்டி, கலைவனனின் அருகில் ஒரு சேரில் அமர்ந்து பேச தொடங்கினார்….


“மிஸ்டர் கலைவாணன்… எப்புடி இருக்கீங்க?…”


“நல்லா இருக்கேன் மேடம்…”


“ஒன்னும் இல்ல உங்கள மெதுவா ஆழ்ந்த தூக்கத்துக்கு கொண்டு போக போறன், சில கேள்விகள், அப்புறம் திரும்ப மெல்லமா உங்கள ரிவைவ் பண்ணிடுவேன் பயப்படுறதுக்கு ஒண்ணுமே இல்ல சரியா…”


“ஹ்ம்ம்….”


“நா சொல்லுறத மட்டும் செய்யுங்க…”



“ஹ்ம்ம்…”



இணைந்திருங்கள் அடுத்த பாகத்துக்காக...
மறக்காம இந்த பாகம் எப்புடி இருந்துதுனு எனக்கு எழுதி அனுப்புங்க. உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நவீன் பிரபு....
நன்றி....!
 
Last edited:
Top