ஆயுதம் தேவை...
எங்களின் பிள்ளைகள்..
விருப்பமாய் பள்ளி செல்ல...
பதின்ம வயதில்...
பாதை தவறாதிருக்க...
வேலை செல்லும்
பெண்ணின் பெண்ணியம் காக்க...
சுயமரியாதை ஆண்களின்
கண்ணியம் காக்க...
இன்னமும் மிச்சமிருக்கும்...
வளங்களையும் அழிக்காதிருக்க...
யாரோ துவளும் போதெல்லாம்...
அதோ பார், என உவமையாய்
இருக்கும்.. யாரோ ஒருவனையும்
அழிக்காதிருக்க...
இதுபோல இன்னும் நிறைய...
ஆயுதம் தேவை...