Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயம் கேட்கும் காதல் 6

Advertisement

Super sis :) சிடுமூஞ்சி ஹரி action la இறங்க போறான் போல இருக்கு :)
 
S
இதயம் கேட்கும் காதல்…
பகுதி
6

மாலை எப்போதும் செய்யும் படி ரிப்போர்ட்ஸ் முடித்து சந்துருவிடம் தரும் வரை கூட அவளுக்கு அன்றைய நாளின் முக்கியத்துவம் மறந்து போயிருந்ததால், சந்துருவுக்கு மேற்படி வேறு திட்டம் போட வேண்டிய அவசியம் ஏற்படாது இருக்க, அதுவே ஒரு விதத்தில் அவனை நிம்மதியாய் இருக்க வைத்தது.

ஏற்கனவே, இதழினி வீட்டிலிருந்து மறுபடியும் வந்த அழைப்பும், அவளை சென்று அடையாதபடி செய்ததற்கே ஒரு மாதிரி மனதில் குற்ற உணர்வோடு இருந்தவனுக்கு,
'இனியும் எதாவது செய்ய வேண்டி வருமோ?!' என்ற நினைப்பே கசக்கத்தான் செய்தது என்றால் மிகையில்லை.
இதழினியோ, எப்போதும் கிளம்பி செல்வது போல அலுவலகத்திலிருந்து வெளியே வந்தவளுக்கு, அதன் பிறகே தந்தை சொன்ன விசயம் நியாபகம் வந்தது.

'அப்பா, கல்யாணத்துக்கு சம்மதம் கேட்ட போது சரின்னு சொல்லிட்டு, இப்ப லேட்டா போறோமே, அப்பா இதை எப்படி எடுத்துப்பாங்களோ தெரியலையே! மாப்பிள்ளை வீட்டு காரங்க வேற வந்திருப்பாங்க. அவங்களுக்கு என்ன பதில் சொல்லியிருப்பாங்க?! இதை அவங்க எப்படி எடுத்துக்குவாங்க' என்ற எண்ணம் கொடுத்த பதட்டத்தோடு வீட்டிற்கு அழைத்தாவது,

'வீட்டிற்கு இன்னும் சிறிது நேரத்திற்குள் வருவதாய்' சொல்ல நினைத்தவளுக்கு, அப்போது தான் கைபேசி இல்லாதது தெரிந்தது. (புள்ளைக்கு இந்த வாட்ஸ்அப், பேஸ்புக் எல்லாம் தெரியாது போல, ரொம்ப நல்ல புள்ள…)

வேகமாக சென்று பேருந்துக்கு காத்திருக்க, நேரம் சென்றதே ஓழிய பேருந்து வரும் பாட்டை காணோம்.. எப்படியோ ஒரு வழியாய் வந்த பேருந்தில் ஏறி, கூட்டத்தில் நெறுக்கியடித்து, அவளின் இருப்பிடம் வந்து சேர எப்போதும் வரும் நேரமாகியிருந்தது.

****
வீட்டினுள் வந்த ஹரிஹரன் குடும்பத்தாருக்கு, இதழினியின் வீட்டினரின் அதிர்ந்த தோற்றமே ஒரு மாதிரி இருக்க, அதன் தாக்கம் அவர்கள் முகத்தினில் வெளிப்படையாகவே தெரிந்தது.

அதனை கண்டதும் சட்டென சுதாரித்த அபி தான், முதலில் அனைவரையும் வரவேற்றாள். அடுத்து மாரியப்பனும், அவர்களை வரவேற்று, அமரவைக்க வினி தண்ணீர் தந்து உபசரித்தாள்.

ஹரிக்கு அந்த வீட்டில் மேலும் இரு பெண்களை பார்த்ததுமே, 'இது சரி வருமா?' என்ற எண்ணம் வலுக்க, தனது அன்னையை அங்கேயே முறைக்க துவங்கிவிட்டான் அப்பட்டாமாய்.. அவனின் பார்வையை உணர்ந்தாலும், அதை காணாதது போல பார்வதி,

"பொண்ண வரச்சொன்னா, பார்த்துட்டு, அடுத்து மத்தத பத்தி பேசலாமே. நல்ல நேரம் வேற போகுது" என ஆரம்பிக்க, அபி, வினி இருவரும் கைகளை பிசைந்தபடி முழித்துக்கொண்டு நின்றனர்.

வினி மெதுவாக அபியின் பக்கம் குனிந்து, "அபி, அக்கா ஏன் இப்படி செஞ்சா?! நீ போன் பண்ணி பேசினப்ப வர்றேன்னு சொன்னா தானே?!" என்று குசுகுசுவென கேட்க, அப்போது தான் அவள் இதழினியின் பதிலை கேட்காததே நினைவுக்கு வந்தது.

"வினி, அக்கா பதில் சொல்றதுக்குள்ள லைன் கட்டாகிடுச்சு. இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூப்பிட்டா லைன் போகலடீ" என தனது தவறை மறைத்து பூசி மொழுக, இனி தந்தை எப்படி இதை சமாளிக்க போகிறாரோ?! என்ற தவிப்போடு அவரை பார்க்க,

"மன்னிக்கனும். உங்கள அவமானப்படுத்த நாங்க நினைக்கல. ஒரு முக்கியமான வேலை, அதான் இதழினி இன்னைக்கு ஆப்பிஸ் போயே ஆகணுமின்னு போயிருக்கா. இதோ அவ வர்ற நேரம் ஆகிடுச்சு, இப்ப வந்திடுவா.. நீங்க டிபன் சாப்பிடுங்க. அபி, வினி ரெண்டு பேரும் காபி டிபன் கொண்டு வாங்க"

என அவர்களிடம், தங்களின் நிலையை வேறு மாதிரி சமாளிப்பாக கூற...
ஹரியின் அக்கா கவிதா.. பார்வதியிடம்,

"ஏம்மா, நிஜமா அந்த பொண்ணு வேலைக்கு போயிருக்கா?! இல்ல.. வேற எங்கையும் போயிடுச்சா?!
ஏன்னா, இன்னைக்கு நம்ம வர்றது தெரிஞ்சும், இப்ப வரை வரலையே, ஒரு வேள இஷ்டமில்லாம இருந்து வரலையோ, இல்ல வேற யாராச்சும் மேல இஷ்டமிருந்ததால வரலையோ?! யாருக்கு தெரியும், எதுக்கும் யோசிச்சு முடிவெடு" என கிசு கிசுக்க,

அவள் சொன்னது மெல்லவாகினும் , அந்த இடத்தில் இருந்த அமைதியின் காரணமாக, அவளின் வார்த்தைகள் மற்றவருக்கு தெளிவாகவே புரிந்தது.

ஹரியோ பார்வதியை ஏற்கனவே இருந்த கடுப்போடு மேலும் முறைக்க, அதை பார்த்த தீபாவோ,
"அக்கா, நீ வாய வச்சிட்டு சும்மா இருக்க மாட்டியா? வந்த இடத்துல எதுக்கு இப்படி?" என அவளிடம் முனுமுனுக்க,

அதே நேரம் சரியாக உள்ளே வந்தாள் இதழினி. காலையிலிருந்து வேலை பார்த்து, பேருந்து நெரிசலில் சிக்கி தலை லேசாய் கலைந்து, புடவையும் கசங்கி இருந்த போதும், துலக்கி வைத்த பாத்திரமாய் ஜெலித்தவளை பார்த்ததும், ஹரிக்கு மற்ற விசயங்கள் மனதின் ஒரு மூலைக்கு சென்றது தான் அதிசயத்திலும் அதியசம். அது வரையிலும் இருந்த கடுப்பு நீங்கி அவ்விடம் ஒரு வித பரவசம் நிறைய இதழினியை பார்த்திருந்தான்.

அவள் வரும் போதே பேச்சு சத்தம் கேட்டதால், அவள் உள்ளே வந்ததும் அனைவருக்கும் பொதுவாக வணக்கத்தை வைத்தவள்.

"ஒரு முக்கியமான வேலை அதான் கண்டிப்பா போக வேண்டியதாயிடுச்சு. ரொம்ப நேரம் காக்க வச்சிட்டேன், மன்னிச்சிடுங்க" என கூற,

அவளின் தந்தையும், அதை கூறியிருந்ததாலும், அவளும் வந்ததும் சொல்வது ஒத்து போக, அதுவரை இருந்த சூழல் இலகுவாக மாறியது.

அபி கொண்டு வந்த காபியை வாங்கி அனைவருக்கும் கொடுத்தவளை பார்த்ததும், அவளின் நடவடிக்கைகளையும், பாந்தமான அழகும் தீபாவுக்கு அவளை மிகவும் பிடித்து போயிற்று.

அனைவருக்கும் கொடுத்ததும், அவள் ஒதுங்கி நிற்க, ஹரியின் பார்வையோ நொடியும் விலகாது அவளையே மொத்துக்கொண்டிருந்தது.

அவனின் பார்வை தனக்கு ஒரு மாதிரி இருந்தாலும், அங்கிருந்து சட்டென விலகி செல்ல முடியாது தவிப்போடு அங்கே நின்றவளுக்கு துணையாய் வந்த இரு தங்கைகளை பார்த்தவளுக்கு, ஒரு விதத்தில் நிம்மதி வந்தது என்பதே
உண்மை.. பார்வதிக்கு, ஹரியின் பார்வையிலேயே அவனின் பிடித்தம் தெரிய,

"எங்க எல்லாருக்கும் உங்க பொண்ண பிடிச்சிருக்கு. நீங்க என்ன சொல்றீங்க?!" என்று பார்வதி சைகை காட்டப்பட்டதும், மயில்சாமி கேட்க,

மாரியப்பனோ, தன் மூத்தமகளை திரும்பி பார்த்தார். அதில் பிடித்தமின்மைக்கான எந்த அறிகுறியும் இல்லாது போக, "எங்களுக்கும் பரிபூரண சம்மதம்" என்று கூறியதும்,

"அப்ப சரிங்க சம்மந்தி. மேற்படி விசயத்த பேசி முடிச்சிட்டா, ஒப்பு தாம்பூளம் மாத்தி, இப்பவே முடிவு செஞ்சிடலாம். அடுத்து வர்ற நல்ல முகூர்த்ததுல கல்யாணத்த வச்சிடலாம். என்ன சொல்றீங்க?" என பார்வதியின் ஸ்கிப்ட்டை, மயில்சாமி மாறாது வாசிக்க..

"எனக்கு, என்னோட பொண்ணு வாழ்க்கை நல்லபடியா அமையனும். அதுக்கு என்னால என்ன முடியுமோ, அத நிச்சயமா செய்றேன், சம்மந்தி" என்று பட்டும்படாமல், தன் தகுதியை கூறினார் மாரியப்பன்.

அவர் சொல்வதில் இருக்கும் சூட்சமம் அறியதவரா பார்வதி. அதனால், "என்னங்க அண்ணே சொல்லிறீங்க. இதழினிய ஹரிக்கு கட்டி வச்சா, அவ உங்கள மாதிரி அரசாங்கத்துல வேலை பார்க்கறவனோட பொண்டாட்டி. அதுக்கு தகுந்த மாதிரி செய்ய வேணாமா? அப்ப தானே எங்க சொந்தங்க முன்னாடி அவளுக்கு பெருமை" என கோடு போட,

ஹரியின் சித்தியோ, அக்கா போட்ட கோட்டில் ரோடு போடும் விதம்,
"எங்க ஹரிக்கு நான், நீ ன்னு போட்டி போட்டுட்டு பொண்ணு கொடுக்க ரெடியா இருக்காங்க.
அரசாங்க வேலை, பார்க்க லட்சணமா இருக்கான். ஒரு சின்ன கெட்ட பழக்கம் கிடையாது. அவனே கஷ்டப்பட்டு இடமெல்லாம் வாங்கி போட்டுட்டான். அக்கா, தங்கச்சிங்களுக்கு பொறுப்பா நின்னு எல்லா நல்லது கெட்டது செஞ்சிருக்கான்.

வீடு கட்டிட்டு தான் கல்யாணம் செய்வேன்னு சொன்னவன, உங்களுக்காக தான் கல்யாணத்த செஞ்சிட்டு, அப்புறமா கட்டிக்கோ ன்னு சொல்லி கூட்டிட்டு வந்திருக்கோம். நல்லா யோசிச்சுக்கோங்க அண்ணா.
போன வாரம் கூட,50 பவுனுல நகையும், பைக்..5 லட்சம் பணம் கொடுத்து, கல்யாண செலவும் செய்யற மாதிரி ஒரு இடம் வந்துச்சு. நான், தான் இதழினிக்கு பேசலாம், அவங்களும் குறையில்லாம செய்வாங்க ன்னு சொல்லி கூட்டிட்டு வந்தா, இப்படி பட்டும்படாம பேசலாமா?!" என தங்களின் எதிர்பார்ப்பை, அப்பட்டமாக சபையில் சொல்லிவிட,

மாரியப்பனுக்கு பதில் பேச நா எழவே இல்லை. அவருக்கு, அவர்கள் சொல்வதில் பாதி செய்வதற்கே தனக்கு வரும் தொகை பத்தாது எனும் போது அவரும் என்ன சொல்வார்.

ஹரி, இதழினியின் முகம் பார்க்க, அவள் இதுவரை இருந்த புன்னகை முகம் மாறி, கோபத்துடன் தன் தந்தையை பார்த்துவிட்டு, அடுத்த நிமிடம் அவனை பார்க்க, அவளின் கண்களில் இருந்தே, அவளின் எண்ணம் புரிந்து போனது.
இனி அவர்களை பேச விட்டால், தனக்கு இதழினி கிடைக்க மாட்டாள் என்பதை அவளின் பார்வையில் உணர்ந்தவன், உடனே,

"அம்மா, எனக்கு இதழினிய ரொம்ப பிடிச்சிருக்கு. அவ என்னோட மனைவியா வந்தா போதும். அவ கொண்டு வர்ற, எந்த நகையும் பணமும் எனக்கு வேண்டாம்" என்று கூறிட, பார்வதிக்கும், கவிதாவிற்கும் தான் மிகவும் அதிர்ச்சி.
கவிதாவுக்கோ,

'சிடுமூஞ்சியாய் வலம் வரும், தம்பி இப்படி பார்த்தவுடன் மாறி போனால், நாளை அவள் வீட்டிற்கு வந்த பின் தங்களின் நிலை?!' என யோசிக்க..

'வீடு கட்ட தேவையானதை மட்டுமில்லாமல், அவள் மூலம் வரும் சம்பளத்தையும் கொண்டு, இனி மேலும் வசதியாய் வாழலாம் என்றால், இவன் பேசுவதை வைத்து பார்த்தால், எப்படியும் தனிக்குடித்தனம் போய் விடுவானோ?!' எனும் அளவுக்கு பார்வதி யோசிக்க துவங்கி விட்டார்.

அதன் விளைவால் வந்த எரிச்சலை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு, முடிந்த வரையிலும் நிதானமாக, "ஹரி, நீ சும்மா இரு. பெரியவங்க பேசறப்ப என்ன பழக்கம் இது. எதுவும் வாங்காம கல்யாணம் பண்ணா, நாளைக்கு உனக்கு தான் குறை ஏதோ இருக்குங்கற மாதிரி பேசுவாங்க. எதுவானாலும் நாங்க பேசிக்கறோம். நீ அமைதியா இரு" என்றுவிட்டு,

"இங்க பாருங்க, எங்க பக்கத்தை நாங்க சொல்லிட்டோம். முடிவு உங்க பக்கம். அத நீங்க யோசிச்சு பேசிட்டு சொல்லுங்க. இப்ப நாங்க கிளம்பறோம்" என்று விட்டு, உடனடியாக குடும்பத்தோடு வெளியேற,

ஹரிஹரனின் பார்வையோ இதழினியை காண, அவள் மறந்தும் அவன் பக்கம் தலையை திரும்பாது நின்றாள். ஒரு முறை என்னை பார்க்க மாட்டாளா என்ற ஏக்கம் வந்தாலும், இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது என்பது புரிய, அவனும் மாரியப்பனிடம் விடை பெற்று சென்றான், மனதில் எழுந்த வேறு சில முடிவோடு...


To Be Continued...
Super sis
 
சிடுமுஞ்சி ஹரி கூட soft ஆ ஆகிட்டான் போல...
But அவங்க அம்மா அக்கா கூட இதழினி யால் எப்படி சமாளிக்க முடியும்...
இன்டெர்ஸ்டிங் ud sis
 
Top