இந்த நாவலை கண்டுபிடிக்க உதவுங்கள் 🙏

Advertisement

captain

New member
Member
நான் சுமார் 2015–2019 காலகட்டத்தில் சென்னை வில்லிவாக்கம் மார்க்கெட் பகுதியில் இருந்த ஒரு சிறிய Lending Library-ல் இந்த நாவலை படித்தேன்., don't exactly remember when it was published)அந்த library-ல் பெரும்பாலும் தமிழ் நாவல்கள் மட்டுமே இருந்தது. இப்போது அந்த library மூடப்பட்டுவிட்டதாக நினைக்கிறேன்.
நாவல் பற்றிய எனக்கு நினைவில் இருக்கும் விஷயங்கள்:
• பெண் எழுத்தாளர் எழுதிய நாவல்.
• கதை நவீன/எளிமையான தமிழ் நடையில் இருக்கும்.
கதாநாயகன் பெயர் கௌதம் / கவுதம் / கெளதம் என்று நினைவில் இருக்கிறது.
• கௌதம் ஒரு தொழிலதிபர்; கொஞ்சம் கோபக்காரர், possessive character.
• கதாநாயகி கல்லூரி மாணவி — குறும்புத்தனமாகவும், ஜாலியாகவும், எல்லோரிடமும் மிகவும் friendly-ஆகவும் இருப்பாள்.
• திருமணத்திற்குப் பிறகு இருவரும் கௌதமின் வீட்டில் வசிப்பார்கள்.
ஒரு பாட்டி இருப்பார் (dont remember whose paati was that or even there is a paati); திருமணத்திற்குப் பிறகு அவர் கதாநாயகியை மிகவும் விரும்பி, support செய்வார்.
• கௌதமின் நெருங்கிய நண்பன் பெயர் அசோக்.
• ஒரு scene-ல் கௌதமும் அசோக்கும் கதாநாயகியின் கல்லூரிக்கு செல்வார்கள். அப்போது அவள் ஒரு ஆண் மாணவனுடன் மிகவும் friendly-ஆக பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து கௌதம் jealous/angry ஆவார்.
• அதற்கு கதாநாயகி, தான் எல்லோரிடமும் இயல்பாகவே friendly-ஆக பேசுவதால், ஆண்கள் தன்னை காதலிப்பதைவிட friend-ஆகவே பார்ப்பார்கள் என்று explain செய்வாள்.

கௌதம் + அசோக் என்ற characters இருப்பது மட்டும் எனக்கு மிகவும் strong-ஆக நினைவிருக்கிறது.
இந்த நாவலை யாராவது படித்திருந்தால் title + author name சொல்லுங்கள் 🙏
சிறிய clue கிடைத்தாலும் மிகவும் உதவியாக இருக்கும்.
 

Advertisement

Advertisement

Back
Top