Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இமை மீதூறும் துளிகளில் -26 (FINAL)

Advertisement

துமி

Well-known member
Member
அத்தியாயம் 26

"ஏங்க இதுக்கு மேல இங்க இருந்தா நமக்கு தான் அவமானம்! வாங்க போலாம்..." கணேசனை இழுத்தார் சரிதா. அதிர்ச்சியில் உறைந்திருந்த கணேசனும் அவரின் இழுப்பிற்கே சென்றார்.

நித்யாவின் அருகில் வந்த கௌதம், "பதினெட்டு வயசுல என்னை பாத்தாலே பயந்து ஒளியற அந்த அப்பாவி நித்யா நீ இல்லனு எனக்கு தெரியும். உன்கிட்ட மன்னிப்பு கேக்க கூட எனக்கு தகுதி இல்லை. இருந்தாலும் என்னை மன்னிச்சிடு..." என்றுவிட்டு, தன் மனைவியை அழைத்து கொண்டு வெளியே சென்றான்.

கௌதமின் பேச்சு நித்யாவிற்கு புதிதாக இருந்தது. போகும் அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.

"எப்பேர்ப்பட்டவன் என் புள்ளை… அவனையே மன்னிப்பு கேக்க வச்சிட்டல… போதுமாடி உனக்கு? இனி என்ன நடந்தாலும் இந்த வீட்டு வாசல்ல நாங்க காலெடுத்து வைக்க மாட்டோம்.." என்று அழுது கொண்டே சரிதா, கணேசனை இழுத்து கொண்டு சென்றார்.

கணேசன் எதுவுமே சொல்லாமல் செல்லும் பொழுது நித்யாவிற்கு வலிக்க தான் செய்தது. தந்தையின் இடத்தில் இருந்து இத்தனை நாட்கள் பார்த்து கொண்டவர் அல்லவா! தங்க கூண்டு அழகாய் இருக்கிறதென்று எத்தனை நாட்கள் சிறையிருக்க முடியும். பறக்க வேண்டுமென நித்யா முடிவு செய்த பின், இந்த வலிகளுக்கு பயந்தால் ஆகுமா!

அலையிலாடும் தோணி ஒன்று புயலில் மாட்டி, உடைந்து கரை ஒதுங்கியது போல் இருந்தாள் நித்யா.

கணேசன் குடும்பம் சென்றதும் ஓய்ந்து போய் சேரில் அமர்ந்தாள் நித்யா. இரு கைகளாலும் முகத்தை அழுந்த துடைத்தாள். துக்கங்களை துகிலுரிவது போல் இருந்தது அவள் செயல். சத்யபாமாவின் அழுகை இன்னுமின்னும் அதிகரித்து கொண்டே இருந்தது.

"ஏன் மா அழுதுட்டே இருக்க??" பெருமூச்சை வெளியேற்றிய படியே கேட்டாள் நித்யா.

"உன் வாழ்க்கைக்கு நீயே குழி பறிச்சிகிட்டியே டி… பத்தாததுக்கு உன் மாமாவையும் அசிங்க படுத்தி அனுப்பிட்ட… இனிமே எப்படி டி உன் கல்யாணம் நடக்கும்??" அழுதபடியே கேட்டார் சத்யபாமா.

"அந்த மாப்பிள்ளை வீட்டுக்கு போன் போடு... நான் பேசுறேன்." நித்யா சொல்ல,

"இதெல்லாம் பெரியவங்க பேச வேண்டியது. நீ என்ன டி‌ பேசுவ??" ஆதங்கத்துடன் சத்யபாமா கேட்டார்

"நீ போட்டு குடு நான்‌ பேசறேன்..." என்றாள் நித்யா.

சத்யபாமா மாப்பிள்ளை வீட்டாரின் எண்ணிற்கு அழைத்து, அவள் கையில் தர, வீட்டின் உள்ளே ரஹீமும் சந்தீப்பும் உள்ளே நுழைந்தனர்.

"நித்யா..." என்று எதையோ சொல்ல வந்த ரஹீமை கை காட்டி தடுத்தவள், அங்கிருந்து எழுந்து சென்று தனியே போனில் பேச ஆரம்பித்தாள்.

"என்ன டா நாம சொல்ல வர்றதை முழுசா கேக்காம, அவ பாட்டுக்கு எழுந்து போய் பேச ஆரம்பிச்சிட்டா..." சந்தீப் மெல்லமாய் ரஹீமிடம் முணுமுணுக்க,

"அதான் டா எனக்கும் புரியல…" என்றான்‌ ரஹீம்.

போனை பேசி முடித்து விட்டு நித்யா தன் அன்னையை பார்த்து, "மாப்பிள்ளை வீட்டுல நான் பேசிட்டேன், அவங்க ஓகே சொல்லிட்டாங்க..." என்றாவாறே வர, பேய் அடித்தாற் போன்ற முகத்துடன் நின்றிருந்தான் திலீப்.

மெக்கானிக்கல் டிப்பார்ட்மென்டும், சிஎஸ்சும் ஒட்டு மொத்தமாய் ஒன்றாய் திரண்டிருந்தனர். வண்ண வண்ண ஆடை உடுத்தி, மகிழ்ச்சி எனும் மத்தாப்பூ மனமெங்கும் பூத்து குலங்க, அந்த மண்டபத்தில் வளைய வந்து கொண்டிருந்தனர்.

இன்று மெக்கானிக்கல் மற்றும் சிஎஸ் டிப்பார்ட்மென்ட்டின் ஸ்பெஷல் ரீயூனியன்; சுருங்க சொல்ல வேண்டுமென்றால், திலீப் நித்யாவின் திருமணம் இன்று.

ஸ்ரீராமிற்கு அழைத்து நித்யாவின் எண்ணை கேட்க எண்ணினான் திலீப். ஆனால் அவன் அழைப்பை எடுக்காமலே இருக்க, கல்லூரிக்கே மீண்டும் சென்றான் திலீப்.

ஸ்ரீதர் தன் வேலைகள் எல்லாவற்றையும் முடித்துவிட்டு, கிளம்ப எத்தனிக்கையில், திலீப்பிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. ஸ்ரீதரை அங்கேயே காத்திருக்க சொன்னான் தீலிப். முக்கியமான விசயம் பேச வேண்டும் என்றிருந்தான்.

"ஸ்ரீதர் அது வந்து..." தயங்கி மேலே எப்படி பேசுவதென்று புரியாமல் இருந்தான் திலீப்.

"என்ன நித்யா நம்பர் வேணுமா இல்ல அவ அட்ரெஸ் வேணுமா??" அசால்ட்டாய் கேட்டான் ஸ்ரீதர்.

"உனக்கு எப்படி தெரியும்??" அதிர்ச்சியாய் கேட்டான் திலீப்.

மற்றவர்களை காட்டிலும் சுபிக்ஷா நெருக்கமான தோழியாய் இருந்த போதிலும், அவளிடம் கூட நித்யாவின் கும் அவனிற்கும் இடையில் இருக்கும் ஊடலை சொல்லி நித்யாவின் எண்ணை கேட்க விருப்பமில்லை திலீப்பிற்கு; மாறாக எல்லாம் தெரிந்த ஸ்ரீதரிடமே கேட்க நினைத்தான்.

"பேட்ஸ்மேன் மூச்சை பார்த்தாலே தெரியாதா, இந்த பாலை அடிப்பாரா மாட்டாரானு?" டைமிங்காக ஸ்ரீதர் பேச, திலீப் முறைத்தான்.

நித்யாவின் எண்ணை திலீப்பிடம் தந்தான் ஸ்ரீதர்.

"நீங்க தர மாட்டிங்க... நிறைய ரூல்ஸ் பேசுவிங்கனு நினைச்சேன்." மனதில் இருப்பதை திலீப் கேட்க,

"நாளைக்கு கல்யாணம் புள்ளி குட்டினு அடிச்சி பிடிச்சிக்க போறது நீங்க… இதுக்கு நடுவுல நான் எதுக்கு??" வெளிப்படையாக அவர்களின் காதலை ஆதரித்தான் ஸ்ரீதர்.

"நித்யாவோட அட்ரஸ் கிடைக்குமா??" என திலீப் கேட்க,

"என்கிட்ட இல்ல… என் ப்ரெண்ட் தான் அவளை ட்ராப் பண்ண போனான். இருங்க அவன்கிட்ட கேக்குறேன்." என்ற ஸ்ரீதர், ரஹீமிற்கு அழைத்தான்.

"மச்சான் நித்யாவை சேஃபா அவ வீட்டுல விட்டுட்டியாடா??" என ஸ்ரீதர் கேட்க, அங்கு நடந்த அனைத்தையும் ரஹீம் அவனிடம் சொல்லி விட்டான். அவ்வளவு தான் ஆண்கள் இருவரும் அடித்து பிடித்து நித்யாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

"மாப்பிள்ளை வீட்டுல ஓகே சொல்லிட்டாங்க மா..." என்றவாறே நித்யா உள்ளே இருந்து வெளியே வர, அவ்வளவு தான் திலீப்பின் முகம் செத்தே போய் விட்டது.

உண்மையில் நித்யா மாப்பிள்ளை வீட்டாரிடம் இந்த திருமணம் வேண்டாம், நிறுத்தி விடுமாறே கூறி இருந்தாள். ஒழுங்காக அவள் சொல்லி முடிக்கும் முன் உள்ளே வந்த திலீப் அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தான்.

திலீப் வந்து நிற்பதை பார்த்து நித்யாவும் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

"என்ன டி சொல்லுற??" ரஹீம் தான் சுதாரித்து முதலில் கேட்க,

"அந்த பையன் வீட்டுல கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டேன் டா… அவங்களும் எங்களுக்கு இந்த மாதிரா பொண்ணு வேண்டாம்னு சொல்லிட்டாங்க சிம்பிள்." என்றாள்.

அதுவரை இழுத்து பிடித்திருந்த மூச்சை ஆண்கள் அனைவரும் ஒரு சேர விட்டனர். அப்பொழுதே நித்யாவின் நண்பர்களும் திலீப்பும் பேசி சத்யபாமாவை ஓரளவு கரைத்தனர்.

திலீப்பின் வீட்டில் தன் காதலை சொன்னதும் அவர்களும் பச்சை கொடி காட்டி விட்டனர். ஒரு நடிகையோ அல்லது மாடல் அழகியோ தங்களுக்கு மருமகளாக வந்துவிட கூடாது என வேண்டி கொண்டிருந்த திலீப்பின் பெற்றோருக்கு நித்யாவை கண்டதும் பிடித்து விட்டது.

சத்யபாமாவிற்கு நடப்பதெல்லாம் கனவு போல் இருந்தது. மகள் நல்லதொரு வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசை பட்டார். திருமணம் நின்றதும் நொறுங்கி போனார். ஆனால் உடனே மகளுக்கு இப்படி ஒரு வாழ்வு கிடைக்கும் என அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை! பிரபல கிரிக்கெட் வீரர் திலீப் தன் மருமகனாக போகிறான் என்பதை அவரால் இன்று வரை நம்பவே முடியவில்லை.

பெரிய கிரிக்கெட் வீரன் தங்கள் வீட்டிற்கு மாப்பிள்ளையாக போகிறான் என தெரிந்ததுமே, முதல் ஆளாக வந்து நித்யாவின் அத்தை வரிந்து கட்டிக் கொண்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தார். நித்யாவே ஆச்சரியத்தில் புருவம் உயர்த்தும் வகையில் இருந்தது அவரின் செய்கை.

நித்யாவும் திலீப்பும் மீண்டும் ஒரு முறை பேசி தங்களுக்கு இடையே இருந்த கசடுகளை வெளியேற்றினர். மரத்து போய், மரித்து போய் விட்டது என அவர்கள் நினைத்து கொண்டிருந்த காதல், கற்பக தருவாய் அவர்கள்‌ முன்னே பரந்து விரிந்து கிடந்தது.

முதல் நாள் திருமணத்தில் உற்றத்தாரும், நட்புகளையும் அழைத்திருந்தனர். மறுநாள் ரிஷப்சனுக்கு திலீப்பின் சக வீரர்கள், அரசியல்வாதிகள் இன்னும் பிறரை அழைத்திருந்தனர்.

சுபிக்ஷா தன் கணவன் அபி மற்றும் குழந்தை பூர்ணாவுடன் வந்திருந்தாள். ஸ்வாதியும் வந்திருந்தாள். சிஎஸ்சில் இருந்து முடிந்தவரை திலீப்பின் நட்பு பட்டாளம் வந்திருந்தது. நித்யாவின் பக்கம் மெக்கானிக்கல் டிப்பார்ட்மென்ட்டில் இருந்து அனைவரும் வந்திருந்தனர் தினேஷை தவிர.

புனிதா, ஸ்வாதி, காசி என நித்யா வேலை பார்க்கும் இடத்தில் இருந்து ஒரு பட்டாளமும் வந்து இறங்கியிருந்தனர். ஏற்கனவே அங்கு பணி புரியும் பெண்களுக்கு நித்யா ஒரு ரோல் மாடல் போல. அதிலும் இன்று திலீப்பை மணமுடித்து இன்னும் உயரம் போவதில், ஆச்சரிய பார்வையுடனே அவளை பார்த்தனர்.

மங்கள வாத்தியம் முழங்க, மாங்கல்ய சரடை, நித்யாவிற்கு அணிவித்தான் திலீப். இருவரின் உள்ளத்திலும் எதுவோ ஒன்றை சாத்தித்த திருப்தி. கிட்டவே கிட்டாது என்று தூரம் சென்று தொலைந்து போன பொருளொன்று கைக்கு கிட்டிய நிம்மதி இருவருக்கும்.

"மச்சான் டேய்..." விஜய் கத்த, மற்றவர்களும் திரும்பி பார்க்க, ஹேண்டசமாக வந்து கொண்டிருந்தான் தினேஷ்.

"தினேஷ்..." மேடையில் இருந்தவாறே நித்யா சத்தமாய் கூப்பிட,

"இன்னைக்கு ஒரு நாளைக்கு அடக்க ஒடுக்கமா இருடி… உன்‌ ப்ரெண்டிஷிப்பை அப்பறம் நிலை நாட்டிக்கலாம்…" காதோரமாய் சத்யபாமா கடிந்துரைத்தார். அவர் சொன்னது திலீப்பிற்குமே நன்றாக கேட்டது.

"நம்ம கல்யாணத்துக்கு வர சொன்னா உன் ப்ரெண்ட்சை பாரு கெட் டூ கெதருக்கு வந்த மாதிரி இருக்கானுங்க..." கணவன் ஆனதும் தன்னுடைய சிறப்பான பணியை ஆரம்பித்தான் திலீப்.

"இந்த பக்கம் பாரேன்… டே கேர் சென்டர் புள்ளையா சேக்க போற மாதிரி உன் ப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்திருக்காங்க..." நித்யாவிடம் இருந்து வந்த கவுண்டரில் வாயை மூடிக் கொண்டான் திலீப்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என சந்தோசமாய் நித்யா திலீப்பின் திருமணம் நிறைவுற்றது.

நித்யா திலீப்பின் காதலும், அவர்களின் நட்பும் என்றும் சிறக்க வாழ்த்தி விடைபெறுவோம்.

காதல் மண் போன்றது;
மழை போன்றது;
விதை போன்றது;
விருட்ஷம் போன்றது;
சமயத்தில் குழந்தை ஆகின்றது;
அதுவே குரங்கு சேட்டையும் செய்கின்றது;
ஊஞ்சலிலை மனதை ஆட்டுகின்றது;
உயிர் வரை அது செல்கின்றது;
மொத்தத்தில்...

யாவும் இங்கு காதல் மயமே!!!
 
Ayyo super appadiye school life poiduchu college girls mattum Nala ippadi ellam nadakkala but ithila last ah thavira fulla school days la nadanthathu miss u all the days
 
அருமையான கதை 😍😍😍.....
எவ்வளவு நாளைக்கு அடங்கிட்டே போறது..... நித்யா துணிஞ்சு எடுத்த முடிவால எப்பவும் சந்தோஷமா வாழனும்... திலீப்பும் அவனோட காதல் விட்டுக்குடுக்க முடியாம வந்திட்டான் 🤗🤗🤗.....
அவங்களோட ஃபிரண்ட்ஷிப்லாம் சூப்பர் 😍😍😍.....
 
Top