Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இராவணத்தீவு - 10

Advertisement

துமி

Well-known member
Member
அத்தியாயம் ‌ 10

காதலுக்கென்று எத்தனை காரணங்களை வேண்டுமானாலும் வரிசை கட்டி கூறலாம். ஆனால், பிடித்திருக்கிறது என்பதை தவிர வேறு எந்த உவப்பான காரணமும் தேவையில்லை காதலுக்கு.

ஆதிக்கு அவளை பிடித்திருக்கிறது. அவள் எப்படி இருந்தாலும், அவளை மிகப் பிடிக்கும் அவனுக்கு. தேவை இல்லாமல் யோசிப்பதை காட்டிலும், கிடைத்த குறைந்த நேரத்தை, அவளோடு செலவிடுவதை பற்றி யோசித்தான் ஆதி.

“நெக்ஸ்ட் டைம் என் பேர்ல ஒரு போன் வாங்கி தர்றேன். அதை உன்னால பத்திரமா வச்சிக்க முடியுமா?” என்று கேட்டான் ஆதி.

சக்தியின் கண்கள் பளீரிட்டன. ஆதிக்கு அவளின் சம்மதம் வாய் சொல்லாமலே புரிந்தது.

எப்பொழுது அவன் கைகளுக்குள் அவள் கை சென்றதேன்றே தெரியவில்லை. வழுக்கும் அவள் கையிக்கும், கரடுமுரடாக இருக்கும் அவன் கையிக்கும் அத்தனை பொருத்தமாக இருந்தது.

இருவரும் சேர்ந்திருக்கும் தருணங்களை, யாரோ ஒரு ஆள் புகைப்படங்களாக சுருட்டுவது தெரியாமல், அக்கணத்தில் மகிழ்ந்திருந்தனர் இருவரும்.

“வந்து… ரொம்ப லேட் ஆகிடுச்சு.” பிரிய‌ மனமே இல்லாமல் சொன்னாள் சக்தி.

“நெக்ஸ்ட் டைம் ஆபிஸ்ல மீட் பண்ணலாம்.” என்றான் ஆதி. அவளும் சம்மதமாக தலையசைத்தாள்.

“இது… வந்து… இதை நீங்களே எடுத்துட்டு போய்டறீங்களா?” என்று கேட்டாள், கையிலிருந்த பூங்கொத்தை காட்டி.

“பர்ஸ்ட் டைம் உனக்காக தேடி அலைஞ்சி வாங்கிட்டு வந்துருக்கேன்.” என்றான் ஆதி.

தன் நெஞ்சோடு பூங்கொத்தை பொத்தி வைத்துக் கொண்டாள்.

தலையசைத்து விட்டு முதலில் அவனே கிளம்பினான்‌.

கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது, அவள் தன்னை சமாளித்துக் கொள்ள. இனிமையான படபடப்பில் எகிற துடித்த இதயத்தை, கைவைத்து சமாதானம் செய்தாள். என்ன செய்தாலும் இதழ்களில் உறைந்த புன்னகை போக மாட்டேன் என்றது. சரி போ என்று விட்டுவிட்டாள்.

கையில் வைத்திருந்த பூங்கொத்தை பார்த்தாள். ஒரு முடிவெடுத்தவளாக அருகே இருந்த புத்தகங்கள் விற்பனை செய்யும் கடைக்கு சென்றாள் சக்தி. அவளுக்கு தேவையான சில புத்தகங்களை வாங்கிக் கொண்டாள். காபேயில் கொஞ்சம் மறைவாக சென்று அமர்ந்தவள், ஒவ்வொரு ரோஜா இதழ்களாக, பூக்களுக்கு வலிக்காமல் கிள்ளி எடுத்தவள், அதை மிக ஜாக்கிரதையாக, ஒவ்வொரு புத்தகத்தின் பக்கங்களிலும் வைத்தாள்.

புத்தகங்களின் எடையை விட பூக்களின் எடை கனத்தது. நினைக்கவே சிரிப்பு வந்தது. ஆகாயத்தில் மிதக்கும் உணர்வோடே பயணித்தாள் சக்தி.

வேகமாக ஓடி வந்து முகத்திலே நின்றுக் கொண்ட சிரிப்பை அடக்க தெரியாமல், தலையை அடிக்கடி கோதி கொண்டான் ஆதிரையன். மூச்சை இழுத்து விட்டான். ஆயினும் எதிலுமே அவனால் கவனம் செலுத்த முடியவில்லை.

காதலை எல்லாம் முகத்தில் இருந்து மறைக்கவே முடியாது. ஏனெனில், தன்னை இந்த உலகத்தில் ஓர் உயிர் எவ்வித காரண காரியமும் இல்லாமல், தனக்காக மட்டுமே முழு மனதோடு நேசிக்கிறது என்பதை எண்ணி, மனம் பேருவுவகை கொள்ளும். பெருமிதத்தில் நெஞ்சம் விம்மும். கர்வத்தில் கால்கள் தரையில் படாது. அப்படியாக தான் பரவசத்தில் நடையில் துள்ளளோடு அரண்மனைக்குள் நுழைந்தாள் சக்தி.

அவளின் சிரிக்கும் அதரங்களும், மின்னும் கண்களையும் யார் கண்டாலும் எளிதில் சொல்லிவிடலாம், சக்தி காதல் வயப்பட்டுவிட்டால் என்று. அவளையே பொற்செல்வி பார்த்துக் கொண்டிருந்ததை அறியாமல், மகிழ்ச்சியுடன் தன் அறைக்கு வந்து சேர்ந்தாள் சக்தி.

அறைக்கு வந்தவள் வேக வேகமாக குளியலை போட்டுவிட்டு, புத்தகங்களை எடுத்துக் கொண்டு நூலகத்திற்கு சென்றாள். யாரும் பார்க்கிறார்களா என்று‌ எட்டி எட்டி பார்த்துக் கொண்டே சென்றாள். மனம் முழுக்க பயம் அப்பிக் கொண்டது.

தான் கொண்டு வந்த புத்தகங்களை எல்லாம் ஒரு மூலையில் அடுக்கி வைத்தாள் சக்தி. புன்னகையோடு அதை தடவி கொடுத்துவிட்டு, அவள் நகர, மூளைக்குள் ஏதோ குறுகுறுப்பு. சட்டென்று‍ அவள் வாங்கி வந்த புத்தகங்களை மீண்டும் எடுத்தவள், அதிலிருந்த ரோஜா இதழ்களை எடுத்து, ஒவ்வொரு இதழாக தன் தந்தையின் ஒவ்வொரு புத்தகங்களிலும் வைத்தாள்.

கடைசியாய் இன்னும் ஒரு இதழ் மிச்சம் இருந்தது‌. அதை கையில் எடுத்தவள், தன் தந்தைக்கும் அவளுக்கும் மிக நெருக்கமான சிவகாமி சபதம் புத்தகத்தினுள்ளே வைத்தாள்‌‌.

கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. என்னமோ நேரிலே தன் தந்தையிடம் காதலை சொன்னது போல உணர்ந்தாள். உணர்வுகளின் தத்தளிப்பில் மிதந்துக் கொண்டிருந்தாள். அதை குலைக்கும் விதமாக சுந்தரேஸ்வரியின் குரல் நாராசமாய் ஒலித்தபடி வந்தது.

“ஏய் சக்தி எங்க இருக்க?” என்றபடியே நூலகத்திற்குள் நுழைந்தார் சுந்தரேஷ்வரி.

திடுக்கிட்டாள் சக்தி.

அவசர அவசரமாக புத்தகத்தை எடுத்து இடத்திலே வைத்துவிட்டு, சுந்தரேஷ்வரியின் குரல் வந்த இடத்தை நோக்கி ஓடினாள்.

தீவிரமான முகத்தோடு, கண்களின் வழியே வெறுப்பை கக்கிக் கொண்டு, நின்றார் சுந்தரேஷ்வரி.

“எங்க டி நீ வாங்கிட்டு வந்த புத்தகம் எல்லாம்?” நேரடியாக விசயத்திற்கே வந்தார் சுந்தரேஷ்வரி.

புரியாமல் விழித்தாள் சக்தி.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ புக்ஸ் வாங்கிட்டு வந்தல… அதெல்லாம் எங்க வச்சிருக்க?” பொற்செல்லி அதட்டலாக கேட்டாள்.

வின்னென்று தலை வலித்தது சக்தி. கொஞ்சம் கூட ஆசுவாசமாக இருக்க முடியாதா அவளால்? என்ன வாழ்விது? நொந்துக் கொள்ளவும் நேரமில்லை.

“என்ன‌டி மசமசனு இருக்க? போங்க போயி… இவ வாங்கிட்டு வந்த புக் எங்க இருக்குனு பாருங்க.” என்று சக்தியிடம் ஆரம்பித்து தன் பாதுகாவலர்களிடம் முடித்தார் சுந்தரேஷ்வரி. அவர்களும் ஒவ்வொரு அடுக்காக தேடிக் கொண்டே சென்றனர்.

வெற்றிடமான ஒரு அறைக்குள், மத்தளம் ஒன்றை மிக வேகமாக யாரேனும் வாசித்தால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது சக்தியின் இதயத்துடிப்பு! இதயம் வெடித்துவிடும் போல இருந்தது! வெடித்துவிட்டால் கூட தேவலை! நித்ய கண்டம் பூரண ஆயுளை அவளா கேட்டால்?

“மேடம் இங்க இருக்கு…” என்று ஒரு பாதுகாவலர் சொன்னார். பழைய புத்தகங்களின் நடுவே புத்தம் புதிதாய் இருந்த புத்தகத்தை கண்டுபிடிப்பது மிக எளிமையாக இருந்தது.

வேக வேகமாக சுந்தரேஷ்வரியும் பொற்செல்வியும் அந்த புத்தகங்கள் இருந்த இடத்திற்கு சென்றனர்.

“இந்த புக்கெல்லாம் எடுத்து அதுல எதாச்சும் இருக்கா பாருங்க…” என்று சுந்தரேஷ்வரி தன்‌ பாதுகாவலர்களிடம் கட்டளை இட்டார்.

உதட்டை கடித்துக் கொண்டு, தன் பதற்றத்தை வெளியே காட்டாதவாறு, ஒருவித இயலாமையோடு நின்றிருந்தாள் சக்தி.

சுந்தரேஷ்வரியின் பாதுகாவலர்களும், சக்தி வாங்கி வந்த புத்தகங்களை எடுத்து, ஒவ்வொரு பக்கமாக பிரட்டி பார்த்தனர். மணிக்கணக்கில் சுந்தரேஷ்வரியின் பாதுகாவலர்கள், அந்த புத்தகங்களை ஆராய்ந்தனர். ஆனால், அவர்களுக்கு உபயோகமாய் ஒன்றுமே கிடைக்கவில்லை. சுந்தரேஷ்வரியின் முகம் கறுத்தது.

“என்ன டி இந்த அரண்மனைக்குள்ள கொண்டு வந்த?” என்று கேட்டு சுந்தரேஷ்வரி, சக்தியை உலுக்கினார்.

“நீங்க என்ன எதிர்பாக்குறீங்க?” வலி, ஏமாற்றம், இயாலாமை, யாசிப்பு, மிக மெல்லியதாய் ஒரு கோபம் என அத்தனையும் கலந்த குரலில் கேட்டாள் சக்தி.

என்னவென்று சுந்தரேஷ்வரி சொல்லுவார்? மனதிற்குள்ளே சக்தியை‌ பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு பயபந்து உருண்டு ஓடுவதை அவர் மட்டுமே அறிவார். இவளால் தன்‌ மகனுக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ என்ற அச்சம், அவரை ஒரு பொழுதும் விட்டு நீங்கியதில்லை. சுந்தரேஸ்வரியின் அச்சதிற்கு ஏற்ப, இராஜாத்தியனும் சக்தியின் பால் சாய்ந்துக் கொண்டிருக்கிறானே! ஆகையாலே‍, சக்தியை காணும் பொழுதெல்லாம், அவளை கொட்டிக் கொண்டே இருக்கிறார் சுந்தரேஷ்வரி.

சக்தியை முறைத்துக் கொண்டே சுந்தரேஷ்வரி, அங்கே இருந்த சில புத்தகங்களை கலைத்து விட்டு சென்றார். ஏதோ அவரால் முடிந்த பழிவாங்கல். கலைந்து விழுந்து கிடந்த புத்தகங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி. அவளின் மனம் ஒரு நிலையிலே இல்லாது,‌ தத்தளித்துக் கொண்டிருந்தது.

“மனசுல தேவை இல்லாத நினைப்புலாம் வச்சிக்காத சொல்லிட்டேன்.” என்று தன் பங்குக்கு தானும் எதையோ சொல்லிவிட்டு சென்றாள் பொற்செல்வி.

அயர்ந்து போய் அப்படியே சரிந்தாள் சக்தி!

கீழே விழுந்து கிடந்த புத்தகங்களையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி.

எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ தெரியவில்லை. யாரோ கதவை மூடும் சப்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

இராஜாதித்தயன் தான் கம்பீர நடை போட்டுக் கொண்டு வந்தான்.

நேர் கொண்டு அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் சக்தி. கண்களில் கோபக்கனல் தெரிந்தது. அவளின் அருகினில் வந்து அமர்ந்தான் இராஜாதித்யன்.

“சக்தி…” என்று அவன் அழைக்க, இவள் பார்வையை தழைத்துக் கொண்டாள். முகத்தில் இன்னமும் தீவிரம் குடி கொண்டிருந்தது.

“அம்மா பண்ணது தப்புன்னு நினைக்கறியா?” என்று நிதானமாக கேட்டான் அவன்.

பதில் சொல்லாமல் அவனின் கால்களையே வெறித்தாள் சக்தி.

“நீ ராஜ குடும்பத்து பொண்ணு சக்தி. உன்கிட்ட பேசறவங்க எல்லாருமே ஏதோ ஒரு உள் நோக்கத்தோடதான் பேசுவாங்க.” என்று அவளுக்கு விளக்கும் பாவனையுடன் பேசினான் இராஜாதித்யன்.

கூர்மையாக அவனை ஒரு பார்வை பார்த்தாள். அதில் ‘நீயும் தானே?’ என்ற பொருள் இருந்தது. வாயே திறவாது, மீண்டும் அவன் கால்களையே பார்த்தாள்.

சக்தியின்‌ பார்வையில் சற்றே துணுக்குற்றான் இராஜாதித்யன்.

“சக்தி நமக்கு கிடைச்ச வாழ்க்கையை எல்லாரும் ஒரு வரம்னு நினைக்கிறாங்க. ஆனா அது அப்படி இல்லை. அது ஒரு சாபம்! அந்தந்த சூழ்நிலையில வாழறவங்களுக்கு மட்டும் தான் அது புரியும் சக்தி!”

ஒவ்வொரு வார்த்தையும் எண்ணி எண்ணி பேசுபவன், இன்றோ சக்தியிடம் கேள்விகள் இன்றியே வீண் விளக்கங்களை கொடுத்துக் கொண்டிருந்தான்.

சக்தியின் பார்வை‍, இராஜாதித்யன் அணிந்திருந்த, அவனுக்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட காலணிகள் மீதே இருந்தது.

“சக்தி…” என்று ஆதரவாக அவளின் தலைமீது கையை வைத்தான் இராஜாதித்யன்.

கூடை தீயை அள்ளி தலையில் வைத்தது போல இருந்தது அவளுக்கு!

சட்டென அவன் கையை தள்ளிவிட்டு, எழுத்துக் கொண்டவள், இராஜாதித்யனை தாண்டி செல்ல முற்பட்டாள்.

அமர்ந்திருந்த வாக்கிலே அவளது மணிக்கட்டை பற்றி, அவளை நிறுத்தினான் இராஜாதித்யன். அவள் திமிறி தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சிக்கவில்லை.

“நான் உன்கிட்ட பொறுமையா பேசுறதால, நீ அதிக அட்வான்டேஜ் எடுத்துக்கற சக்தி! அது இரண்டு பேருக்குமே நல்லதில்லை!” எச்சரிக்கை போல சொன்னான்.

நிதானமாக அவன் பக்கம் திரும்பியவள், “மாமானு கூப்பிடுனு அடிக்கடி சொல்லுறப்பவும் நான் ஏன் உங்களை அப்படி கூப்பிடலை தெரியுமா? ஏன்னா என் ராஜா மாமா எப்பவோ காணா போயிட்டாங்க. இங்க இருக்கிறது ஒரு நாட்டோட ராஜா மட்டும் தான். இவர்கிட்ட என்னால என் சின்ன வயசு ராஜா மாமாவ தேடவும் முடியாது. அட்வான்டேஜ் எடுக்கவும் முடியாது. இந்த நாட்டோட்ட ராஜாவை பாக்கற ஒவ்வொரு நொடியும் உயிர் பயம் ஒன்னு மட்டும் தான் என் உடம்பு முழுக்க ஓடிட்டு இருக்கு!” என்றாள். கடைசி வரியை சொல்லும்‌ பொழுது குரல் கொஞ்சம் உடைந்தது.

இராஜாதித்யன் தன் பிடியை விலக்கிக் கொண்டான்.

“நான் உக்காந்திருக்க அரியாசனத்தோட விலை என்ன தெரியுமா சக்தி?” என்று கேட்டவன், அவளது கண்களை நோக்கினான்.

என்னமோ அவன் கண்கள் அவளை சங்கிலியால் பிணைப்பது போல ஒரு மாயை அவளுக்கு! அவளாலும் தன் பார்வையை அகற்ற முடியவில்லை.

“என்னோட உயிர்! ஒவ்வொரு நாளும் என் உயிரை பணயம் வச்சி தான் இந்த அரியணையில நான் இருக்கேன். எதுக்காகனு நினைக்கிற? என்னை சார்ந்தவர்கள் பாதுகாப்பா இருக்கறதுக்காக தான்! என்னை சார்ந்தவங்கன்னா, அதுல நீயும் அடக்கம் தான் சக்தி! இன்னும் சொல்ல போனா, அதுல முதல் ஆளா நீ தான் இருக்க!”

சக்தி அவன் பேச்சில் விக்கித்து நின்றாள்‌; இதென்ன புதுகதை என்பது போல.

எழுந்து நின்றவன், தன் இரு கைகளையும் பாக்கெட்டிற்குள் விட்டபடியே, அவளை நோக்கி ஒவ்வொரு அடிகளாக எடுத்து வைத்தவாறே, மீண்டும் பேச ஆரம்பித்தான்.

“உன் சின்ன வயசு ராஜா மாமாவை விலையா கொடுத்து தான் சக்தி, இந்த நாட்டோட ராஜாவா மாறிருக்கேன். அதனால தான் நீ, நான், எங்கம்மா, பொற்செல்வி எல்லாரும் உயிரோட இருக்கோம்! இந்த ராஜாவால உனக்கே உனக்காக, உன்னோட இருக்கப்ப மட்டும் உன்னோட சின்ன வயசு ராஜா மாமாவை திருப்பி கூட்டிட்டு வர முடியும். அதுக்கு நீ தான் ஒத்துழைக்கனும்!” என்ற இராஜாதித்யன், அவளின் மிக அருகே நூலிலை தூரத்தில் வந்து நின்றான்.

“நான் சொன்னதெல்லாம் புரியும்னு நினைக்கறேன். சோ தேவை இல்லாததெல்லாம் மனசுல வச்சிக்காத. எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு, இந்த அரண்மனையோட சொந்தகாரியா நீ இருக்கனும் சக்தி!” என்று அவன் இரகசியமாய், அவள் காதோரம் சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

காதோரத்தில் பட்ட அவனின் மீசை முடி, அவள் மூளைக்கு கற்றாழை முள்ளாக குத்தியது! உடல் முழுக்க கூசியது அவளுக்கு. இராஜாதித்யனின் நெருக்கத்தை உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் வெறுத்தாள்!
 
🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ ஆதிரையன் சக்தி பேசுற சீன் நிறைய வச்சா தான் என்னவாம் 🤗🤗🤗


குடும்பமே சக்தியை மிரட்டி கிட்டு தான் சுத்துதுங்க 🥶🥶🥶🥶

சக்தியோட காதல் ராஜாவுக்கு தெரிஞ்சிடுச்சு போல 🤔 🧐 🧐 அப்போ ஆதியோட கம்பெனிக்கு வேலைக்கு போக விட மாட்டானே 🤨🤨🤨🤨🤨🤨
 
Last edited:
சக்தி கொஞ்ச நேரம் சந்தோசமா இருந்தா கூட பிடிக்காது போல சங்கரேஸ்வரிக்கு 🥶🥶🥶🥶🥶
பின்னாடியே வேவு பார்க்க வந்துட்டாங்க..... 😬😬😬😬
இந்த ராஜா வேற மிரட்டுறான்....😨.
 
🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ ஆதிரையன் சக்தி பேசுற சீன் நிறைய வச்சா தான் என்னவாம் 🤗🤗🤗


குடும்பமே சக்தியை மிரட்டி கிட்டு தான் சுத்துதுங்க 🥶🥶🥶🥶

சக்தியோட காதல் ராஜாவுக்கு தெரிஞ்சிடுச்சு போல 🤔 🧐 🧐 அப்போ ஆதியோட கம்பெனிக்கு வேலைக்கு போக விட மாட்டானே 🤨🤨🤨🤨🤨🤨
ஆதிக்கும் சக்திக்கும் நிறைய சீன் வச்சா குறுக்கால இந்த கௌசிக் (இராஜா) வந்து நிப்பானே... வாட் ஐ டூ 🤷🏻‍♀️🤷🏻‍♀️
 
சக்தி கொஞ்ச நேரம் சந்தோசமா இருந்தா கூட பிடிக்காது போல சங்கரேஸ்வரிக்கு 🥶🥶🥶🥶🥶
பின்னாடியே வேவு பார்க்க வந்துட்டாங்க..... 😬😬😬😬
இந்த ராஜா வேற மிரட்டுறான்....😨.
அவ சந்தோசமா இருந்தா யாருக்குமே பொறுக்காதுங்க 🫢🫢🫢
 
Top