Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 24.2

Advertisement

தேவிக்கு குழந்தையில்லை என்பது கவலை தான்…ஆனால் அவர் சாருலதாவிடம் சொன்னது போல இந்தக் குமரனுக்கு அந்த ஒரு விடயமே அவர்களது 8 வருட வாழ்க்கையை மீறி அடுத்து ஒருத்தியைக் கல்யாணம் செய்ய போதுமாயிருந்தது…இது கூட ஒரு கணவன் மனைவியை ஏமாற்றுவது தான். இந்தக் குமரன் பாண்டியம்மாளிடம் நான் இன்னொரு பெண்ணைக் கல்யாணம் பண்ண மாட்டேன் …நாங்களிருவரும் ஒரு குழந்தையைத் த்த்தெடுக்கின்றோமென்றோ அல்லது ஒரு வாடகைத் தாய்மூலம் எங்கள் குழந்தையைப் பெற்றெடுக்கின்றோமென்று உறுதியாக நின்றிருந்தால் தேவி எவ்வளவு சந்தோஷப் பட்டிருப்பார்.
நான் முன்பு சொன்னது போல பிரகாஷைப் போல இந்தக் குமரனும் கேடுகெட்டவன் தான்.
என்ன ஆச்சரியமென்றால் சித்திராவின் ஒரு பிள்ளை கூட தேவியுடன் பாசமாக ஒட்டவில்லையே…எவ்வளவு அன்பு காட்டியும் தேவியை அவர்கள் அணைக்கவில்லையே:cry:
எல்லோருமே தேவி விடயத்தில் சுயநலவாதிகளாகி விட்டார்கள்.
ஆனாலும் குழந்தை பெறுவது தான் பெண்மைக்கு இலக்கணமா என்று அழகாக் கேட்டுள்ளீர்கள் ஆராதனா (y)
என்னைப்பொறுத்தவரை பெண்மையின் இலக்கணம் ஒன்றிரண்டு வசனங்களில் அடங்குவதில்லை.
 
குழந்தையை கண்டிக்க
இவளுக்கு அனுமதி இல்லை
ஏன் பிள்ளைக அம்மானு
கூப்பிட செய்யல யாரும்
 
சாருபாலா அவர்களை எங்கள் ஆஸ்தான மருத்துவராக முடிவுசெய்து விட்டோம்,,,தங்களுடைய எல்லா கதைகளிலும் இவர்களை வரவழைத்து கெளரவ படுத்த வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்
 
Top