Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிகார்த்தி ‘ இளந்தென்றலோடு ஒரு கவிதை 21

Advertisement


வணக்கம் சகோதரிகளே....

மன்னிக்கவும்..... முதல் பகுதி தனுஷ் தென்றலோடு தொடங்கி முடிந்தது.

இந்த பகுதி விதுரன் - வித்யாவுடன் தொடங்குகிறது.

மறுபடியும் மன்னிக்கவும் அனைவருக்கு ரிப்ளே விரைவில் செய்கிறேன்.. மன்னித்துகொள்ளுங்கள்.

படித்துப்பாருங்கள்...





இளந்தென்றலோடு ஒரு கவிதை 21



விவி கன்ஸ்ட்ரக்‌ஷன் பதினைந்தாம் ஆண்டின் அடி எடுத்து வைக்கிறது இதை கொண்டாட அந்த துறையை சேர்ந்த தொழில்துறை நண்பர்களும், நட்பு பாரட்டும் நண்பர்களும். நண்பர்கள் மட்டுமில்லை நெருங்கிய சொந்தங்களும் அதில் இருந்தனர்.


விவி கன்ஸ்ட்ரக்‌ஷனின் தலைவரான விஸ்வநாதன் பற்றியும், அவரின் உழைப்பையும் பாராட்டும் வகையில் எந்த இடத்தில் இருந்து அவர் தொழில் தொடங்கினார் என்பதை விளக்கும் வகையில் விஸ்வநாதனின் காரியத்தரசி உரைத்துகொண்டிருந்தாள்.



”ஆல் ஜெண்டில்மேன்ஸ் அண்ட் ஜெண்டில் வுமன்ஸ் கீரிட்டிங் வெல்கம். என்ன பற்றி நான் அவ்வளவா சொல்லனும் அவசியம் இல்லை. என்னை பற்றி அறியாதவங்க யாரும் இங்க இருக்க முடியாது. உங்க எல்லார் முன்னாடியும் நான் விவி கன்ஸ்ட்ரக்‌ஷனோட ஓனரா தான் தெரியுறேன். ஆனா என்னை பற்றி அறியாத இன்னொரு பக்கமும் இருக்கு.”



“அதோ அமர்ந்திருக்காங்களே என் மனைவி விசலாட்சி அவங்க என் மனைவியா தான் உங்களுக்கும் தெரியும். ஆனா அவங்க என் மனைவியா ஆகுறதுக்கு முன்னே என் குரு, அம்மா, தோழி, அடுத்து காதலி, இப்போ என் மனைவி. என்னை சோர்ந்து போகவிடாம இது உன்னால் முடியும்னு வெற்றியோ தோல்வியோ அதை முயற்சி செய்து பார்க்கலாம் வா... என் கை பிடிச்சு முதல் வெற்றிய நோக்கி அழைச்சுட்டு போனாங்க.”




“அப்போ தொடங்குன என் தொழில் வெற்றி இப்போ உங்க முன்னாடி தொழில் அதிபரா இருக்கேன். எனக்கு வர்ர பாராட்டு, புகழ்ச்சி, பூங்கொத்து, கிஃப்ட்ஸ் எல்லாமே எல்லாமே அவங்களுக்கு தான் சொந்தம்.எனக்கு இதை சொல்லுறதுக்கு பெருமையா இருக்கு என் தோல்விக்கும் வெற்றிக்கும் பின்னாடி என் மனைவி இருக்கிறாள். தோல்வியை ஏன் என் மனைவியோடு ஒப்பிட்டு சொல்லுறேனா, அந்த நேரத்துல ‘நீ தோல்வியடையிறதுக்கு இன்னும் நேரமும் காலமும் இருக்கு இந்த நேரத்துல இருந்து உனக்கு வெற்றி தான்’ சொன்ன என் மனைவியை நான் இன்னும் என் குருவா தான் பார்க்குறேன்.”




தன் கணவன் தன்னை பற்றி இவ்வளவு புகழாரம் சூட்டுவார் என விசலாட்சி நினைக்கவில்லை. விஸ்வநாதன் ஒவ்வொரு முறையும் தன்னை பற்றி சொல்லும் போது நொடிக்கொரு முறை தன் மீது விழும் கேமிராவின் போக்கஷில் இருந்து அவரால் முகத்தை மாற்ற முடியவில்லை. ஏன்னென்றால் அவ்வளவு மகிழ்ச்சி எந்த கணவன் தன் வெற்றிக்கு பின் மனைவி தான் இருக்கிறாள் என சொல்லுவார்கள். ஆனால் என் கணவன் தயக்கமின்றி கூறுகிறார். இவரை காதலிக்க நான் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.



உரையாடல் முடிந்ததும் அனைவருக்கும் பஃபே முறையில் உணவை ருசித்தனர். ஒவ்வொருவரும் விஸ்வநாதன் விசலாட்சியை பேசிவிட்டும், வாழ்த்திவிட்டும் சென்றார்கள். அனைவரின் வாழ்த்துகளை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார்கள்.



விசலாட்சியின் கண்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தவனை தேடியது. “ஃபங்கஷன் ஆராம்பிக்கும் போது கரெக்ட்டா நான் அங்க இருப்பேன் ம்மா.” என சொல்லிசென்றது அவரது காதில் ஒலித்துகொண்டிருந்தது. ஆனால் ஏன் இன்னும் காணவில்லை.



சிலர் சென்றிருந்த நிலையில் ஒரு பென்ஸ் கார் உள்ளே நுழைந்தது. அதில் இருந்து கோட் சூட்டில் நடிகர்களை மிஞ்சிவிடும் அளவுக்கு அவனின் ட்ரெஸ் செலக்‌ஷன் இருந்தது. அது மட்டுமில்லை கழுத்தில் மிக லேசான தங்க சங்கிலியில் விவி என ஹார்ட் ஷேப்பில் இருந்தது. கையில் விலையுர்ந்த கைகடிகாரம், விரலில் வைரம் பதித்த மோதிரம், என விஸ்வநாதன் விசலாட்சியின் வம்சம் என சொல்லும் அளவுகு விசலாட்சியின் அச்சு அசல் அவனின் முகம். இதோ வந்துவிட்டான் என் மகன், இல்லை இல்லை எங்கள் காதலின் பொக்கிஷம் விதுரன்விஸ்வநாதன்.



தாய், தந்தையை நோக்கி வந்தவனின் முகம் மகிழ்ச்சியில் இருந்தது. “ம்மா... என்னை எதிர்ப்பார்த்தீங்களா..” அவரின் தவிப்பில் சரியாக சொன்னான்.




“ஆமா கண்ணா... ஏன் இவ்வளவு நேரம் ஃபங்கஷன் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி நான் உன்னை எதிர்ப்பார்த்தேன்.”



“ம்மா... கொஞ்சம் பர்ஷனல் வேலை... நான் தான் அங்க இருக்கனும். அதான் அங்க உடனே போயிட்டேன்... ஃபங்கஷன் இன்னும் முடியல்லையே... வாங்க அப்பா எங்கே..” அம்மாவிடம் பதில் சொல்லிக்கொண்டே தந்தையின் அருகே சென்றனர்.



“அப்பா...”



தொழில்துறை நண்பருடன் பேசிகொண்டிருந்த தந்தையை அழைத்தான்.



“விதுரா... எப்போ வந்த...”




“இப்போ தான் அப்பா... ஃபங்க்‌ஷன் எப்படி போச்சுப்பா.” அமைதியாக கேட்டான்



“நல்லபடியா போச்சு... என்ன, உன்னை பற்றி தான் சொல்லவிடவில்லை நீ.”



“அப்பா, உங்க மகன் நான் தான் பலபேருக்கு தெரியும். ஆனா அதுவே என் வேலைக்கு உலை வைத்துவிட கூடாது. அதற்க்கு தான் என்னைப்பற்றி சொல்லவேண்டாம் என்றேன்.”



”ஆமாம் பெரிய வேலை... ஊரான் கம்பெனியில் வேலை பார்ப்பது தேவையா. என் தொழில் பங்கெடுத்து கொள் இல்லையா எனது தொழில் முழுவதுமே நீயே பார்த்துகொண்டு எம்.டியாக இரு என்றால் கேட்க்கிறாயா. கேட்டால் மற்றவரின் கீழ் வேலை பழகி கொண்டு அடுத்ததாக நம்ம தொழிலில் பங்கெடுத்துகொள்கிறேன் என்கிறாய்.”ஒரு தந்தையாக கவலைகொண்டாலும், மகனின் இச்செயலில் அவர் இரண்டாவதாக பெருமை கொண்டார். இதுவே விதுரன் இடத்தில் வேறொருவன் இருந்தால் அப்பன் சொத்தில் காலத்தை ஓட்டுவான். ஆனால் விதுரனோ வேறொருவரின் கீழ் வேலை பார்த்துகொண்டு அடுத்ததாக நம் தொழில் இறங்க கொஞ்சம் எக்‌ஷ்பீரிஷன் இருக்கும் என நினைக்கும் விதுரனை நினைத்தால் அவருக்கு இன்னும் பெருமையாக இருந்தது.




”அப்பா... ஏன் இந்த டென்ஷன்... ரிலாக்‌ஷ். நான் இன்னும் கொஞ்சம் நாட்கள் தான் அங்கு வேலைப்பார்பது. அதற்கடுத்து நானே ரிஷைன் செய்துவிடுவேன் உங்களுக்கு தெரியாத.” தந்தையை சமாதானம் செய்தான்



”போதும் பிள்ளையை பேச வைப்பது... வந்தவனை உங்க நண்பர்களுக்கு இண்ட்ரோ கொடுக்காமல் அவனை நிற்க வைத்து வேறு பேசிகொண்டு இருப்பது நல்லது இல்லை. முதலில் அவனை மற்றவர்களுடன் பழகவிடுங்கள்”



“ஆமாம் அப்படியே உன் பிள்ளையும் சமத்தாக என் நண்பர்களுடன் பேசினாலும். வீட்டில் எப்படி அமைதியாக இருக்கிறானோ அதையே வெளி இடத்திலும் அமைதியாக இருக்கிறான். நானும் அவனிடம் பல முறை எடுத்து சொல்லிவிட்டேன் இப்படி அமைதியாக இருந்தால் எந்த தொழில் துறையினருடன் நாம் சுமூக உறவை வைத்துகொள்ள முடியாது என்று.”



“அப்பா... போது உங்கள் புகழ்ச்சி... நான் என்ன செய்வது எனது பழக்கமே அதுவாகிவிட்டது. இனி மாற்றிக்கொள்கிறேன் என் பழக்கங்களை.”



இப்படியாக மகனை பற்றி பெற்றவர்கள் பேசிகொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களை கவனித்துகொண்டிருந்தனர் மற்றவர்கள். அதிலும் சிலர், தங்கள் பெண்ணுக்கு இவனையே மாப்பிள்ளையாக தேர்ந்தெடுக்க முடிவு செய்ய இருந்தனர்.



விஸ்வநாதன் தன் தொழில்துறை நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் தன் மகனை அறிமுகம் செய்தனர். தனக்கு ஒரு மகன் இருந்தால் அது விஸ்வநாதனின் மகன் போல இருக்க வேண்டும் என நினைக்கும் அளவுக்கு அவனின் பண்பு, மரியாதை இருந்தது.



ஃபங்கஷன் நல்ல முறையில் முடிந்து வந்திருந்த அனைவரும் விடைபெற்றுகொண்டு சென்றிருந்தனர். இறுதியில் விஸ்வநாதன் குடும்பம் மட்டுமே இருந்தது.



“அப்பா நீங்க அம்மாவ அழைத்துகொண்டு செல்லுங்கள். நான் மற்ற வேலைகளை முடித்துகொண்டு உங்கள் பின்னயே வருகிறேன்.”



“இல்ல கண்ணா, நாங்களும் உன்னுடனே வருகிறோம்.” விசலாட்சி சொல்ல



“அம்மா, உங்களுக்கு பிபி இருக்கு... டேபிலட் மறக்க போடனும். அப்பாவுக்கு டபயட்டீஸ் இருக்கு அவரும் நேரத்துக்கு டேபிலட் போடனும். இப்பவே நேரம் ஆகிவிட்டது நீங்கள் கிளம்புங்கள்.” என அவர்களை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தான்



இல்லாத வேலையை இருக்கு என பொய் கூறி அவன் பெற்றோர்களை அனுப்பி வைத்துவிட்டு. அடுத்த நிமிடம் அந்த இடத்தைவிட்டு அகன்றான். கார் அந்த பைபாஸ் ரோட்டில் வேகமாக சென்றுகொண்டிருந்தது. அமர்ந்திருவனுக்கோ உள்ளுக்குள் எரிச்சல், வெறுப்பு, கோவம், என முகம் வேறு வேறு நிலையை எடுத்துகூறியது.



அவ்வளவு நேரமாக அணைத்து வைத்திருந்த செல்போனை காரை ஓட்டிகொண்டே ஆன் செய்தான். ஆன் செய்த போனில் பதினைந்து போன்கால், முப்பதுக்கு மேற்ப்பட்ட மெசேஜ்கள். அத்துனையும் ஒரே எண்ணில் இருந்து வந்திருந்தது. அதை பார்த்திருந்த அவனது கண்கள் இப்பொழுது கோவம் மட்டுமே சுமந்துகொண்டு இன்னும் வேகமாக காரை ஓட்டிகொண்டு அந்த பங்காளவின் முன் நிறுத்தினான்.



முதலாளியின் காரை பார்த்ததும் சல்யுட் செய்து கேட்டை திறந்துவிட்டான். வணக்கத்தை கவனிக்காமல், போர்டிகோவில் காரை நிறுத்திவிட்டு, வீட்டினுள் சென்றான் வேகமாக. படிகளை தாவி சென்று ஒரு அறையின் முன் நிதானமாக மூச்சை இழுத்துவிட்டு தன்னை நிலைப்படுத்திகொண்டு அறையின் கதவை தட்டினான்.



கதவு திறந்தது “சார், அவங்க கொஞ்சம் கூட சாப்பிட மாட்டேங்கிறாங்க. நானும் வற்புறுத்தி சாப்பிட வைக்க முயற்சி செய்துட்டேன்... என்னால முடியலை சார். அதான் உங்களுக்கு போன் செய்தேன் மன்னிச்சுக்கோங்க சார்.” தன்னிலை விளக்கத்தை அவனிடம் உரைத்தாள்



”அவள் எங்கே...”



“மூலையில படுத்திருக்காங்க சார்... எவ்வளவு அழைத்தும் மெத்தையில் அமர மாட்டேன் என்று அடம் செய்கிறாள்”



“இனி நான் பார்த்துகிறேன் நீங்க கீழ போங்க... கதவை பூட்டிட்டு நீங்க உங்க இடத்துக்கு போங்க.” அந்த பெண்ணை போக சொல்லிவிட்டு அந்த அறையில் அவன் நுழைந்து அவள் இருக்கும் திசையை நோக்கி சென்றான்.



மூலையில், முழங்காலை கட்டிகொண்டு தலையை முழங்காலில் புதைத்துகொண்டு விசும்பி கொண்டிருந்தாள். அவள் அருகே செல்ல அவனுக்கு மனம் வலித்தது, ஆனால் அவள் முன் தன் வலியை காட்டினால் அதை அலட்சியம் செய்வாள்.



”வித்யா... வித்யா...” அவளை அழைக்க



நிமிர்ந்து அவனின் முகத்தை பார்த்தவள் வெறுப்பாக முகத்தை திருப்பிக்கொண்டாள். பிடிக்காத விசயத்தை கூட அவள் இப்படி வெறுத்திருக்க மாட்டாள் ஆனால் அவனின் முகத்தை பார்க்க பார்க்க அவளுக்கு வெறுப்பாக தான் இருந்தது.



“எழுந்திரு... வா அங்க வந்து உட்கார்.” அவளை எழுப்ப முழங்ககையை பிடிக்க சென்றான்



“தொடாதே... என்னை தொட்ட நான் செத்திருவேன்.” அழுகை கோவமாக வெடிக்க.



“தொட்ட செத்திருவயா...” கலங்கிவிட்டான்


உயிருக்கும் மேலாய் காதலித்தவளின் வாயில் இருந்து அவன் இதை தான் கேட்க விரும்பினான. இதற்க்கு பதில் அவள் தன்னை இரண்டு அறை கொடுத்திருக்கலாம். இதற்க்கு மேல் இவளிடம் கெஞ்சிக்கொண்டிருந்தாள் வேலை நடக்காது.



“இப்போ எழுந்து அங்க வரலைனா, அடுத்து உன்னை அங்க தூக்கிட்டு போவேன். எது வசதினு நீயே யோசிச்சுக்கோ.” சோபாவில் அமரவில்லை என்றால், மெத்தையை கண் காட்டினான்.



அவன் சொல்லிய விதம் அவளுக்கு உடல் நடுங்க ஆரம்பித்தது. இம்முறை அவள் எதுவும் பேசாமல், அவன் பேச்சையும் கேட்காமல் அமர்ந்த இடத்தைவிட்டு அகலவில்லை. அவன் பொறுமையை அவள் சோதித்துகொண்டிருந்தாள், அவனோ பொறுமையற்றவனாக அவளை ஒரே தூக்கில் தூக்கிக்கொண்டு மெத்தையில் அமர வைத்தான்.



கோஃட்டை கழட்டிவிட்டு உள்ளிருந்த சட்டையை தளர்த்திவிட்டு, அவளின் அருகில் நெருகி அமர்ந்தான். ”ஏன் சாப்பிட மாட்டேங்கிற... என்னாச்சு...” அமைதியாக கேட்டான்.



“எதுக்கு சாப்பிடனும்... எனக்கு என்ன ஆனா உனக்கு என்ன... நீ யாரு என்னை கேள்வி கேட்க்க. நான் யாரு உனக்கு... பதில் சொல்லு...”



”இதுக்கு ஒரே பதில் நீ என் மனைவி... வேற எந்த பதிலும் என்கிட்ட எதிர்ப்பார்க்காதே.”



“உனக்கு மனசாட்சியே இல்லையா... வீட்டுல பார்த்த மாப்பிள்ளையோட எனக்கு நிச்சயம் செய்ய இருந்த என்னை, என் சொந்தம் பந்தம் முன்னாடி அசிங்கம் படுத்தி என் அப்பா, அம்மாவ கேவலப்படுத்தி வலுக்கட்டாயமா தாலியை கட்டி, கதற கதற என்னை இங்க அழைச்சிட்டு வந்து அடைச்சி வச்சிருக்க. கேட்டா மனைவினு சொல்லுற. நீ எல்லாம் மனுஷனே இல்லை” அவனின் சட்டையை உலுக்கினால்



அவளின் கையை மெதுவாக விளக்கியவன், “ஆமா நான் மனுஷன் இல்லை... எந்த பையனும் தான் காதலிச்சவளை எவன்கிட்டையும் விட்டுகொடுக்கமாட்டான். அதே மாதிரி தான் என்னாலையும் உன்னை விட்டுகொடுக்க முடியாம தான் உடனே தாலி கட்டினேன்.” அவளின் கண்களை பார்த்துக்கொண்டு கூறியவனின் குரலிலும், கண்களிலும் காதல் அப்பட்டமாக தெரிந்தது.



“உன்னை கனவுல கூட வேற ஒருத்தவன் கூட சேர்த்து வச்சு பார்க்க முடியாது. இதுல உனக்கும், அவனுக்கு நிச்சயம் பண்ணுறாங்க உங்க வீட்டுல எப்படி சும்ம இருக்க முடியும் என்னால சொல்லு இப்போ எனக்கு பதில் சொல்லு.”



“உன்னால எனக்கு பதில் சொல்ல முடியாது... ஆனா என் மனசையும், காதலையும் நீ ரொம்ப அலட்சியமா பார்க்குற. இதுக்கெல்லா நீ பதில் சொல்லியாகனும்.” அவளை தாண்டி அந்த அறையைவிட்டு வெளியேறி சென்றான்.



இரவு முழுவது இருவருக்கு உறாங்கா இரவாகிப்போனது. ஆனால் அவளை என்றும் கைவிடப்போவதில்லை என்று உறுதி மட்டும் எடுத்துகொண்டு, பணிப்பெண்ணின் பார்வையில் அவளை ஒப்படைத்துவிட்டு தன் வீட்டு நோக்கி பயணம் செய்தான்.




தொடரும்…………
















 
Top