Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிக்கார்த்தி ‘ இளம்தென்றலோடு ஒரு கவிதை 2

Advertisement

ilakkikarththi

Well-known member
Member

இளந்தென்றலோடு ஒரு கவிதை 2




“பார்வதி... பார்வதி இங்கன செத்த வாத்தா...” என பார்வதியின் மாமியார் மணிமேகலை, பார்வதியை அழைக்க.



“இதோ வரேன் அத்தை...” மாமியர் சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது போல் நடக்கும் மருமகள்.


“என்ன அத்தை எதாவது வேண்டுமா...”


“ஏன் ஆத்தா, பேராண்டி இன்னேரம் ஊரு எல்லைக்கே வந்திருக்குமே, யாரு கூப்பிட போயிருக்கா பார்வதி.”




“உங்க பிள்ளையும், என் அண்ணன் மகன் கௌதம் போயிருக்காங்க அத்தை”




“சரி ஆத்தா... பேராண்டி வரான் அவனுக்கு பிடிச்ச மாதிரி சாப்பாடு செஞ்சிட்டயா பார்வதி.”


“எல்லாம் முடிஞ்சது அத்தை. வெந்நீர் காயுது, உங்க பேராண்டிக்கு பிடிச்ச மாதிரி மட்டன் கூட்டு, குடல் குழம்பு, தோசை. இது எல்லாம் காலையில சாப்பாடு அத்தை, மதியம் சாப்பிடுறதுக்கு தம்பிக்கு என்ன பிடிக்கும் கேட்டு பண்ணலாம்னு சித்ராகிட்ட சொல்லிட்டேன் அத்தை”



”அதுவும் சரி தான் ஆத்தா...”




“என்ன பேரன் வரான் தெரிஞ்சதுமே வீடு முழுக்க கறி வாசனையா வருது... ஆஹா என்னம்மா பார்வதி உன் மகனுக்கு பிடிச்சதெல்லாம் சமைச்சுட்டியா. வாசனையே இவ்வளவு நல்லா இருக்கே அப்போ சாப்பாடு இன்னும் நல்லா இருக்கும்.” என சொல்லிக்கொண்டே வந்தார் மணிமேகலையின் கணவர் மேகநாதன்.





“வாங்க மாமா சாப்பிடலாம்...’



“ என் பேரன் வந்த பின்னாடி அவன்கூட சேர்ந்து சாப்பிடுறேன் மருமகளே.”



“ மாமா நீங்க சாப்பிட்டு மாத்திரை போடனும் வாங்க.”





” என் பேரனுக்கு முன்னாடி அந்த மாத்திரை மருந்தெல்லாம் ஒன்னுமில்லைம்மா...”



“அப்பொழுது வீட்டின் முன் க்வாலிசி கார் வந்து நிற்க அதில் இருந்து இறங்கினார்கள் அந்த வீட்டின் பிறந்தவர்கள். சேதுமாணிக்கம், மகாலெக்‌ஷ்மி, ராதா.”


“மேகநாதன் – மணிமேகலை இவர்களின் பிள்ளைகளான செல்வராஜ், சேதுமாணிக்கம், மகாலெக்‌ஷ்மி, ராதா. இவர்கள் தவமிருந்து பெற்றது மூத்த மகனான செல்வராஜ். செல்வராஜ் பிறந்த நேரம் நல்ல நேரமாக இருந்ததால் அவர்களின் பரம்பரை தொழில் ஆனா இரும்பு ஏற்றுமதியும், விவசாயமும் நல்ல முன்னேற்றமாக இருந்தது. செல்வராஜ் அடுத்தடுத்து பிறந்த பிள்ளைகளால் அவர்களின் வாழ்வும் அமைதியாகவும், சந்தோஷமாகவும் சென்றது.”





”செல்வராஜ் – பார்வதி திருமணமும் ஊரே மெச்சும் படி கோலாகமாய் நடந்தது. மருமகள் வந்த நேரம் அந்த வீட்டின் பெண் பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமைந்தது. ராதவிற்கு, பார்வதியின் கூடப்பிறந்தவன் ஆனா பிராகரனை மணம் முடித்து வைத்தனர்.



"லெக்‌ஷ்மிக்கு மட்டும் வெளி சொந்தத்தில் மணம் முடித்து வைத்தனர்.”




“செல்வராஜ் –பார்வதியின் தம்பதியர்க்கு இரண்டு பிள்ளைக்கள், சேதுமாணிக்கம் – லதா தம்பதியர்க்கு இரு மகள்கள் [பார்கவி,லாவன்யா], ராதா – பிரபாகரன் தம்பதியர்க்கு இரு மகன்கள் [கௌதம்,ப்ரவீன்], மகாலெக்‌ஷ்மி – ராஜேஷ் தம்பதியர்க்கு ஒரு மகன், ஒரு மகள் [வருண், அகல்யா].”





“ வாங்க மருமகனே, வாம்மா...” என பிள்ளைகளையும், மருமகனையும் வரவேற்றனர் பெரியவர்கள்.


“வரோம் அத்தை, மாமா...”



“என்ன சேது கம்பெனில வேலை அதிகமா” என மேகலை கேட்க.




“ ஆமா, அம்மா... அதான் முடிச்சுட்டு இவங்க கூடவே வந்தேன்.




” வாங்க அண்ணி, வாங்க அண்ணா... வாங்க கொழுந்தனாரே” என அந்த வீட்டின் மருமகளாய் அனைவரையும் வரவேற்றார் பார்வதி.”



“எப்படி இருக்கீங்க, அண்ணி, என் மருமகன் வந்துட்டான.” என கேட்ட மகாலெக்‌ஷ்மி.



“ கூப்பிட போயிருக்காங்க அண்ணி,”




” தம்பிக்கு பிடிக்கும்னு சீம்பாலும், பால்கோவா கொண்டு வந்திருக்கேன் அண்ணி இந்தாங்க.” என ராதா ஒரு பெரிய தூக்கு வாலியை எடுத்து கொடுக்க.




“ஏம்மா, லதா நீயாவது நேத்தே வரவேண்டியது தானே...” என மேகலை கேட்க.




“அத்தை நான் நேத்தே கிளம்பிட்டேன், உங்க பிள்ளை என்னை அவர் கூட தான் வரனும் சொல்லி இப்போ கூப்பிட்டு வந்துருக்காங்க” கணவரின் மீது பழி போட.






“ அம்மா, லதா இல்லம கூட நான் இருந்திருவேன், ஆன உன் மருமகளுக்கு நான் இல்லாம இருக்கமாட்ட. நானும் நேத்தே கிளம்ப்ப சொல்லிட்டேன் ஆனா லதா நான் இல்லாம ஊருக்கு போகமாட்டேனு சொல்லிட்டா.”




“இப்படியே, ஒருத்தர் மீது ஒருத்தர் பழி போடுங்க. சரி உள்ள வாங்க எல்லாருக்கும், காபி போட்டு கொடு பார்வதி.’




“சரிங்க அத்தை.”



“ராதா, லெக்‌ஷ்மி, எங்க, எங்க பேர பிள்ளைகளை காணோம். ஏம்ப சேது உன் பிள்ளைகள எங்க.”




“அவங்க எல்லாரும், பின்னாடி வந்திட்டு இருக்காங்க ம்மா,” சேது சொல்ல



”ஆமா, அம்மா அவங்க எல்லாரும், ஒரு கார்ல வராங்க. இன்னேரம், ஊருக்குள்ள வந்திருப்பாங்க.” என ராதவும், லெக்‌ஷ்மியும் சொல்ல.



“சரியாக இன்னொரு கார் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது.


“காரில் முன்னில் இருந்து கௌதமும், செல்வராஜும் இறங்க, பின்னில் இருந்து இறங்கினான் சிவா.”



“வீட்டில் உள்ளே நுழைய இருந்த அனைவரும், வாசலில் வந்த காரில் இறங்கியவர்களை பார்த்து அப்படியே நின்றுகொண்டனர்.”



“ஏத்தா, பார்வதி என் பேரன் வந்துட்டான், சித்ராகிட்ட சொல்லி ஆராத்தி கரைச்சு எடுத்துட்டு வாம்மா.” மேகலை குரல் கொடுக்க.



” வாங்க, மச்சான், மாமா... வாங்கம்மா...” என செல்வராஜ் தன் கூட பிறந்தவர்களை வரவேற்க. அவர்களும், செல்வராஜிற்க்கு தலையசைத்து ஏற்றுகொண்டனர்.




“சிவாவை பார்த்து அனைவரும் நல்லம் விசாரிக்க. அவனோ, சிறு புன்னகையுடன் அதை ஏற்றுகொண்டு, அவர்களிடமும் நலம் விசாரித்தான்.”



“மேகலையும், நாதனும், சிவாவை கட்டி அணைத்து தங்களின் பாசத்தை சிறிதாய் கண்ணீர் மூலமும் வெளிப்படுதினர்.”




“ ஏன் ராசா... எப்படி இருக்கிய்யா... எப்படி இருக்க பேராண்டி” என மேகலையும், நாதனும் கேட்க.





“நல்லா இருக்கேன் பாட்டி, தாத்தா...”




“நீங்க எப்படி இருக்கீங்க.”




” எங்களுக்கு என்ன ராசா... உன்னை பத்தி தான் நினைப்பு எல்லாம்... ஏன் யா இந்த கெழவிய பார்க்க இத்தனை வருஷம் கழிச்சு தான் நீ வரனுமா...” கண்ணீர் மொழியில் பேச.



“ ஏய் மேகலை என்ன பேசுற, நம்ம பேரனே இப்போ தான் வந்திருக்கான் அவன்கிட்ட அழுதுகிட்டு பேசுற. முதல அழுகைய நிறுத்து.” அவர் சத்தம் போட.





” ஆமாம், நான் ஒரு கிறுக்கி, வந்த ராசவ வரவேற்காம அழுதுட்டு இருக்கேன். ஏய் சித்ரா விரசா வா… என் பேரன் வெளியவே நிக்குறான்.” சத்தம் போட.




“ இதோ வந்துட்டேன், பாட்டிம்மா... பெரியம்மா சீக்கிரம் வாங்க.” என பார்வதியை அழைக்க.




” பார்வதியும், மேகலையும் சேர்ந்து சிவாவிற்க்கு ஆராத்தி எடுத்தனர்.”




“இந்த இதை வாசல்ல கிழக்கும், மேற்க்குமா ஊத்திட்டுவா சித்ரா.” அவளிடம் கொடுத்துவிட்டு அவனை அழைத்து சென்றனர் அந்த வீட்டினர்.




“ வருண், ஊரு வந்துருச்சா...” என பார்கவி கேட்க.



“ ஏன், ஊரு வந்தா இறங்கி ஆத்துல குளிக்க போறயா?”




’உன்கிட்ட கேட்டேன் பாரு, ‘ ப்ரவீன் மாமா ஊரு வந்துருச்சா’ ப்ரவீனிடம் கேட்க



‘ இன்னும் அரைமணி நேரத்துல நாம வீட்டுக்கு போயிடலாம் கவி’



‘சரிங்க மாமா”


“கௌதம் மாமா இன்னேரம் சிவா அண்ணன கூப்பிட்டு வீட்டுக்கு வந்திருப்பாங்கள ப்ரவீன் மாமா” பேச்சை வளர்க்க இது ஒரு சாக்கு அவளுக்கு.



‘ ம்ம் ஆமாம், கவி இன்னேரம் வந்திருப்பாங்க’



‘சரிங்க மாமா’



‘ப்ரவீன் மாமா... ‘ என அவள் தொடங்க.



“ இன்னேரம் என் மச்சான் குளிச்சுட்டு சாப்பிட்டு இருப்பாங்க, பாட்டிகிட்ட பேசிட்டு இருப்பாங்க. ஏன் பாரு உனக்கு என் அண்ணன்கிட்ட பேசுறதுக்கு வேற வார்த்தை கிடைக்கலையா?”



“சும்மா, சும்மா, சிவா வந்திருப்பான்ல, சாப்பிட்டு இருப்பான்லனு கேட்டுட்டு இருக்க. நீ எல்லாம் எதுக்கு என் அண்ணனை காதலிக்குற. டேய் அண்ணா உன்கிட்ட போன வாரம் லவ் சொன்ன பிரேமாவ நீ ஓகே பண்ணு. பாரு எல்லாம் உனக்கு செட் ஆகமாட்ட.”


“ டேய் ரோட்ட பார்த்து வண்டிய ஓட்டுடா, எதுக்கு கவிய திட்டுற. அவ என்ன உன்கிட்ட கேட்டாலா... பேசாம வா” அவனை திட்டிவிட்டு அமைதியாக இருந்தான்.




“கவியோ, வருண் சொல்வதை எல்லாம் காதில் கேட்க்காமல், ப்ரவீனை அமைதியாக சைட் அடித்துகொண்டிருந்தால். அவள் பார்ப்பதும் அறிந்தும், அவன் அமைதியாக இருந்தான்.”



’இந்த காலத்துல சொந்த அண்ணன கூட நம்ப முடியலை. எல்லாம் என் நேரம்... நமக்குனு ஒருத்தி இருக்காளே,” என சொல்லிகொண்டே, காரில் ரிவ்யு கண்ணாடியில் பார்த்தான், லாவன்யாவை. நன்றாக தூங்க்கிகொண்டிருந்தால் அகல்யாவின் தோள் மீது.”



” அவனது அறைக்கு சென்றவன் மனது ஒரே கலக்கத்தில் இருந்தது. ஆனால் அவன் முகம் அதை வெளிகாட்டவில்லை. மெத்தையில் அமர்ந்தவன் தோள் மீது கை வைத்தார்.”



“ எப்படி இருக்கப்பா...” பார்வதி கேட்க




“நல்லா இருக்கேன் ம்மா... நீங்க எப்படி இருக்கீங்க.”



“உன்னை பார்த்ததால தான் இந்த அம்மா நல்லா இருக்கேன் ப்பா...”


‘ ஏன் ம்மா அப்படி சொல்லுறேங்க. அப்பா உங்களை நல்லா பார்த்துக்களையா”


“ சிறிய புன்னகையில் அவரின் மனம் அவனுக்கு புரிந்து போனது.”



‘உன் முகம் ஏன் கவலையா இருக்கு சிவா.’


‘ஒன்னுமில்லை ம்மா... வேலையில இருந்தேன்ல அதான் கொஞ்சம் கலைப்பா இருக்கேன் அவ்வளவு தான்”.




”எதா இருந்தாலும் அம்மாக்கிட்ட மறைக்க கூடாது சிவா... சரியா.”



” ஒரு நிமிடம் தாயின் சொல்லில் அதிர்ந்தவன், மறுநொடி மாற்றிவிட்டான்.


‘உங்ககிட்ட நான் எதையும் மறைக்க மாட்டேன் ம்மா...”



“சீக்கிரம் குளிச்சுட்டு வாப்பா... கீழ உனக்காக தான் எல்லாரும் காத்துட்டு இருக்காங்க.’



“ சரிங்க ம்மா...” அவனிடம் சொல்லிவிட்டு அறையைவிட்டு வெளியேறினார்.



தொடரும்……..
 
Top