Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற II -12

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற II -12

காலை சூரியன் தன் பணியை தொடர, குயில், கிளிகள் கீச் கீச் என குரல் எழுப்ப, தன் வீட்டு பால்கனியில் யோகாவை முடித்து, மெல்ல எழுந்தான் இனியன்..

எங்கும் பச்சைபசேல் மரமும் செடியும் சூழ்ந்திருந்த அந்த கிராமம், இயற்கையான காற்று மாசுப்படாமல் இருந்தது.. இனியன் மனத்திற்கு நிம்மதியாக இருந்தது... ரொம்ப நாட்கள் கழித்து ஒரு மனநிம்மதி அவனுள்..

பக்கத்து ரெட்டி வீட்டில் பெரியவர்களின் குரல் கேட்க ஆரம்பித்தது... சிறுவர்கள், அங்கும் இங்கும் ஒடிக்கொண்டிருந்தார்கள்... வாசலில் பெரிய கலர் பொடிகள் தீட்டி கோலம் வரைந்துக்கொண்டிருந்தாள் அவனின் அவள்..

காதில் கம்மல் ஆட, காலையில் குளித்து தலையில் துண்டை கட்டிருந்தாள்... ஐலாவின் கவனம் கோலம் போடுவதில் இருந்தது.. அவளுடன் சேர்ந்து அந்த வீட்டின் வயதுபெண்கள் நால்வரும் உதவி செய்து கொண்டிருந்தார்கள்...

கழுத்தில் துண்டை மாட்டி இயற்கையை ரசிப்பதை நிறுத்திவிட்டு தேனுவை ரசிக்க ஆரம்பித்தான்.. பொண்டாட்டியை அவளுக்கு தெரிகயாம சைட் அடிக்கிறது ஒரு சுகம்தான்..

ஓய்..ஸ்...ஸ்ஸ்.. மியாவ்..மியாவ் என்று சமிக்கை விட்டான்..

கூட கோலம்போட்ட பெண் ஒருத்தி அக்கா மாமா உனக்கு நூல் விடுது போல..

கோலம் போடுவதை நிறுத்திவிட்டு என்னடி உளற..

மேலே பாருங்க அக்கா, மாமோய் உன்னைதான் கூப்பிடுது..

அவள் கையை காட்டிய திசை நோக்கி நிமிர்ந்து பார்த்தாள் தேன்மொழியாள்..

சூப்பரா இருக்காரு, பார்த்துட்டே இருக்காலாம் போல, அவ்வளவு ஹன்ட்ஸம்...

எல்லாருக்கும் ஷோ காட்டுவான்.

அங்கிருந்தே உதட்டை சுழித்து முத்தமிட்டான்..

தேனு முறைக்க, அடுத்த ஏவுகனையாக ப்ளைங் கிஸை அனுப்பினான்..

என்னடா போன கிஸ் ரிஜக்ட் ஆகுது... சின்னா வந்து குறுக்கே நின்று கையை இடுப்பில் வைத்து இனியனை பார்த்தான்..

இவனா, வர வர கொசு தொல்லை தாங்கல.. ச்சீ நகரு சைட் அடிக்க விடுறானா பாரு..

ஐலா கலெக்டரு டிஸ்டப் செய்யாரா.. சின்னா கேட்டான்

ஆமாம் மாமா கத்தி சொல்ல..

மறுபடியும் அவனை மாமா சொல்லுறீயாடி என்று பக்கத்திலிருந்த ஜுஸ் பாட்டிலை தூக்கி சின்னாமேல் ஏறிந்தான் இனியன்..

அய்யோ என்று சின்னா கத்த..

என்னாச்சு என்று அந்த பெரிய குடும்பமே ஒன்று கூடிவிட்டனர்... அதற்குள் இனியன் எஸ்கேப் ஆகி ருமிற்குள் சென்றான்..

என்ன மாமா ஆச்சு மோகன் கேட்க..

ம்ம்.. உனக்கு புதுசா ஒரு மாமன் வந்திருக்கான் அவன் நெற்றியை புளந்துட்டேன்...

யாரு அந்த பாரின் பார்ட்டி சின்னாவா..

ம்ம்...

மாமா நான் போய் பார்த்துட்டு வரேன், மோகன் கிளம்ப..

டேய் உங்க அக்காவ வேறுப்பேத்தாதே.. அவ உங்க அக்காடா.

என் மாமாவ வேணாம் சொன்னவங்க எனக்கு வேண்டாம்... ரொம்ப பரிந்து பேசிறீங்க.. உங்களை அக்கா சீண்ட கூட மாட்டறா.. போ மாமா..

டேய் டேய் இனியன் கூப்பிட கூப்பிட பக்கத்துவீட்டிற்குள் நுழைந்தான் மோகன்.. தோட்டத்துக்கு பக்கம் சென்றான்...

தேனு வேலையாட்களிடம் பூக்கூடையை வாங்கிக்கொண்டு வர...

மோகன், தேனூக்கா... என்றான்

நின்றுவிட்டாள் அவன் அழைத்தவுடன்... இரண்டு வருடம் பார்க்காத தம்பியாயிற்றே...

தம்பி என் பெயர் ஐலா... தேனு இல்ல..

அக்கா இந்த டயலாக்கை மாமாகிட்ட சொல்லு, உன்னை நம்புவாரு... எனக்கிட்ட வேணாம் அக்கா..

டேய் மோகன்..

ஏதோ பிரச்சினை இருக்கு , மாமாகிட்ட சொல்ல வேணாம்.. உன் தம்பிங்க இரண்டுபேர் இருக்கோமே எங்க கிட்ட வரக்கூடாதா..

கண்களிருந்து கண்ணீர் வழிந்தோட, எனக்கு எங்க மாமா தான் முக்கியம், நீ அவர தூக்கி எறிஞ்சிட்ட, என்னால முடியாது ஏன்னா நான் மாமாவ அப்பாவா பார்க்கிறேன்...

பேசி முடிச்சிட்டீயாடா..

இன்னும் முடியல, நீ ஏன் பப்புவ மாமாகிட்ட இருந்து பிரிக்கிற..

பப்பு எனக்கும் பிள்ளைடா, அவரு வேற கல்யாணம் பண்ணி பத்துபிள்ளை கூட பெத்துப்பாரு... என்னால.

ஓஓ.. உனக்கு மாமா வேற கல்யாணம் செஞ்சிப்பாரு நம்பிக்கையிருக்கா.. ஹா..ஹா.. சிரித்தான் மோகன்..

எல்லாம் நந்தினியை மாமாவுக்கு பிடிச்சிருக்கு கட்டிப்பாரு.. நிச்சியமே முடிஞ்சிடுச்சு..

அப்படியாக்கா..

மோகன் இந்த கல்யாணத்தில ஏதாவது கோல்மால் செஞ்ச என்னை உயிரோட பார்க்க முடியாது சொல்லிட்டேன்...

அவளின் கண்களையே பார்த்திருந்தான் மோகன்... உன்னால மாமாவிட்டு இருக்க முடியுமாக்கா.. இல்ல மாமா உன்னை மறந்துடுமா..

இன்னொரு பெண் வாழ்க்கையில வந்தா மாமா மாறிடுவார் மோகன்..

ஐலா என்று துளசி குரல் கொடுக்க..

மோகன் யார்கிட்டையும் சொல்லாதேடா... கண்கள் கலங்க அவனருகில் சென்று அவன் சிகையை தடவினாள்..

அழாதேக்கா எனக்கும் பிடிக்காது, மாமாவுக்கும் பிடிக்காது..

......

காலை எட்டு மணிக்கு இனியன் வீட்டிற்கு ரெட்டியும், ஐலாவும் வந்தார்கள்.. கதவை திறந்து

வாங்க.. என்று சோபாவை காட்டினான் இனியன்..

அம்மா ஐலா தம்பிக்கிட்ட மாம்பழத்தை கொடுமா...

தம்பி இந்த வருஷம் பழுத்த முதல் மாம்பழம்... சீசன்ல வர முதல் மாம்பழம் ரொம்ப இனிப்பா இருக்கும்... நம்ம தோட்டத்து காய்பா.. எங்கவீட்டு மாப்பிள்ளைக்கு தான் கொடுக்கனும்..

வாங்கிக்கோங்க..

தேனு அவனிடம் நீட்ட..

மல்கோவா மாம்பழம் தம்பி...

தேனுவை கண்களால் தீண்டி ,ரொம்ப நாளாச்சு ஸார், இந்த மாம்பழத்தை ரசிச்சு, ருசிச்சு, கடிச்சு சாப்பிட்டு, இரண்டு வருஷம் ஆகுது...

அவன் கண்கள் அவளின் தனங்களை பார்க்க...

வெளியே வேலையாட்கள் ரெட்டியை அழைத்தபோது.. அவர்களுக்கு பதில் அளித்தபடி, இதோ வரேன் என்று வாசலுக்கு வந்தார் ரெட்டி

அறிவில்ல நீயெல்லாம் கலெக்டரு, எப்படி பேசற டபுள் மீனிங்கில, தேனு சட்டென்று கேட்க..

என்னடி கலெக்டரா, கலெக்டரா கேட்கிற கண்ணத்தில ஒண்ணு வெச்சேன் அவ்வளவு தான் சுருண்டுபோய் விழுவ... இனியன் எகிறிக்கொண்டு வந்தான்..

அவள் பின்னுக்கு செல்ல, முதுகு சுவற்றில் மோதியது... இதற்கு மேல் நடக்கமுடியாமல் நின்றாள்..
என்ன சொன்ன டபுள் மீனிங்கா.. அவனின் பரந்த நெஞ்சை தேனுவின் மேல் மோதினான்..

ஹம்மா என்றாள்..

ஆனா எனக்கு வலிக்கலையே, இங்க மோதினா அடியே படமாட்டுது சோ ஸாப்ட் தேனுக்குட்டி.. இத ரொம்ப மிஸ் செய்றேன்..

“உன் நெஞ்சதை மஞ்சமாகி

அதில் தஞ்சம் கொண்ட

என்னை வஞ்சம் கொண்டாயடி பெண்ணே...”

ரெட்டி உள்ளே நுழையும்போதே பார்த்துவிட்டார், இருவரின் நெருக்கத்தை கண்டுக்கொள்ளாமல் சத்தமாக ஐலா என்று கூப்பிட்டார்..

இனியன் விலகி நின்றான்..

ஐலா மாமாவுக்கு ஜூஸ் போடும்மா..

மாமாவா...

ஆமாம் தம்பி அவங்க அக்காவ கட்டிக்க போறீங்க அப்ப மாமாதானே...

ஆமாம் ஆமாம்... நான் அவளுக்கு டபுள் மாமா இல்ல...

அவனை முறைத்துக்கொண்டே கிச்சனுக்கு சென்றாள்..

இன்னும் மூனுநாள் தான் இருக்கு தம்பி கல்யாணத்துக்கு...நிறைய வேலையிருக்கு நான் வரட்டுமா தம்பி, ரெட்டி விடைபெற்று சென்றார்..

அவர் பின்னாடியே சென்ற தேனு... டி.வி யில் சொல்லும் செய்தியை பார்த்து திடுக்கிட்டு நின்றாள்...

தமிழ்நாட்டின் தொழிலதிபர் அன்புவேந்தன், இரவு 12.30 மணிக்கு போதையால் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து அந்த இடத்திலே உயிரை விட்டார்.

நேற்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு பார்ட்டி கொடுத்தார், அதில் அவர் போதை மருந்தை எடுத்துக்கொண்டார் என்று போலீஸார் கூறுகின்றனர்...

இவர் ஏற்கனவே தமிழ்நாட்டில் போதைமருந்து கடத்தின வழக்கில் கைது செய்யப்பட்டார்..

தேனு திரும்பி இனியனை பார்க்க, தன் செல்லில் ஏதோ பார்த்தபடி அவள் கொடுத்த மாம்பழம் ஜூஸை பருகிக் கொண்டிருந்தான்...

ஏதாவது கேட்டாள், தன்னை அறிந்துக்கொள்வான்.. பேசாமல் போய்விடுவதே நல்லது என்று நினைத்து தன் இல்லத்திற்கு வந்தாள் தேனு..

......

அன்று மதியம் தாலி படைப்பதாக கூறி இனியனை அழைத்தார் ரெட்டி... மதிய விருந்தும் அங்கே..

மாப்பிள என் பொண்ணு ஏதோ பேசனோம் சொன்னா , மாடியிலதான் இருக்கா நீ போய் பேசிட்டு வாங்க ரெட்டியின் தம்பி இனியனை பார்த்து சொல்ல..

சரிங்க என்று தலையாட்டி மாடியேறினான்..

ரூமின் கதவு திறந்திருந்தது.. உள்ளே செல்ல தயங்கி வெளியவே நின்றான்... நந்தினி என்று கூப்பிட நினைக்க உள்ளே அவள் பேசும் சத்தம் கேட்டது..

ஐலா... கலெக்டர் எப்படி கேரக்டருன்னு தெரியல.. எனக்கு வேற கூச்சமா இருக்கு அவர்கிட்ட பேச, என்கிட்ட ஏன் பேசமாட்டுறாரு... நீ விசாரிச்சியா நான் அவங்க வீட்டுக்கு அனுப்பினேனே..

விசாரிச்சேன் நந்துக்கா.. நீ பயப்படுற மாதிரியில்ல... அவரு பொண்டாட்டிதான் சரியில்ல போல, நல்ல மனுஷன்தான்.. இம்பூட்டு படிப்பு படிச்சிருக்காரு.. டக்கென்று பேச வராதில்ல...

எனக்கு தெரிஞ்சு, அவர் பொண்டாட்டிய விட்டு நகரமாட்டாரு போல, நந்தினி அவளை எதுக்கு என்பதுபோல் பார்த்தாள்..

பொம்பள வீக்கனஸ் போலக்கா... தினமும் பொண்டாட்டி வேணும் போல, அவரை புடிச்சி முந்தானையில முடிச்சுக்கோ.. இல்லனா..

இல்லனா வேற பொண்ண பார்ப்பாரா ஐலா...

ம்ம்.. கண்டிப்பா.. உன் கையில்லதான் இருக்கு சொல்லிட்டேன்..

எல்லாவற்றையும் கேட்டு அப்படியே கண்ணை மூடி நின்றான் இனியன்..

நந்தினிக்கு போனில் கால் வர அதை ஆன் செய்து மாடிக்கு பின்பக்கம் சென்றாள்..

ஐலா ரூமைவிட்டு வெளியே வர...இனியனை பார்த்து திடுக்கிட்டு தன் நெஞ்சில் கையை வைத்துக்கொண்டாள்...

அது என்ன பண்ணிச்சு அங்கிருந்து கையை எடு, இதயம் ஒன்று இருந்தா தானே...

அப்ப உனக்கு தினமும் செஸ் டார்ச்சர் கொடுத்தேனா டி, நான் பொம்மள வீக்னஸா.. அதான் என்னை விட்டு போயிட்டியா.. எப்படி முன்பின் தெரியாத பொண்ணுக்கிட்ட அப்படி சொன்னே.. அவள் கழுத்தை பிடித்தான்...

பயப்படவில்லை ஐலா.. அவனை மட்டுமே பார்த்தாள்.. பின்னாடி யாரோ வரும் அரவம் கேட்டு அவளை விடுவித்தான்..

ஆயிரம் வாட்ஸ் பல்பு போல் பளீச்சென்று இருந்த முகம், பியூஸ் போய் தொங்கி விட்டது தன்னவளின் பேச்சை கேட்டு.. ஒவ்வொரு வார்த்தையும் அவன் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது...

கீழேயிறங்கி ரெட்டியிடம்.. ஸார் எனக்கு அவசர மீட்டிங் இருக்கு நான் போகனும் என்று கிளம்பிவிட்டான்...

அவன் அறையில்...

என்ன வாழ்க்கையடா சாமி, போதும் இந்த ஜென்மம் என்று அலுத்துக்கொண்டான் இனியன்.. எங்கு தவறு செய்தோம் என்றுதான் புரியவில்லை..

இடது கையை மடக்கி தன் நெற்றிமேல் வைத்து கண்ணை மூடிக்கொண்டிருந்தான்..

அசோக் கையில் கேரியரோட அவனருகே வந்தமர்ந்தான்.. டேய் மச்சான் ஏன் சாப்பிடாம வந்தே, உனக்கு பிடிச்சதை செஞ்சிருந்தாங்களாம் அதான் கேரியர்ல போட்டு கொடுத்துவிட்டுச்சு ஐலா..

அவ கொடுத்தா ஏன்டா வாங்கிட்டு வந்தே, ஏற்கனவே ஸ்ட்ரா போடாம என் ரத்தத்தை உரிஞ்சி எடுக்குற.. அவகிட்டவே போய் கொடு, ஒருவேளை சாப்பிடாம இருந்தா செத்தா போயிடுவேன்..

நீங்க காலையிலும் சாப்பிடலையே மாமா.. கொஞ்சமாவது சாப்பிடுங்க, பின்னாடியே வந்த மோகன் சொல்ல.

வேணாம் என்று தலையை ஆட்டினான்..

இல்ல இது சரிப்பட்டு வராது வாங்க நம்ம ஊருக்கு போவோம்... எத்தனையோ நல்ல பெண்கள் இருக்காங்க மாமா... உங்க குணத்து அவங்க கொடுத்து வச்சிருக்கனும்.. அசோக் அண்ணா எனக்கும் சாப்பாடு வேணாம்..

நீ ஏன்டா சாப்பிடல...

ஒருவேளை சாப்பிடாமயிருந்தா செத்தா போயிடுவோம் அசோக் அண்ணா..

ஆமான்டா, எனக்கும் வேணாம் அசோக் வெளியேபோக எழும்ப..

அவன் கையை பிடித்தான் இனியன், சாப்பிடலாம் வா.. இந்தாங்க தட்டு என்று பப்பு தட்டை எடுத்து வந்தான்..

மூவரும் சேர்ந்து இனியனுக்கு ஊட்டிவிட்டனர்...

சிறிது நேரம் கழித்து அசோக் செல்லில் ம்ம்... சாப்பிட்டான் நீ சாப்பிடுமா என்று செல்லை அனைத்தான்..

.......உன்னில் சிக்க வைக்கிற

Nirmala vandhachu ???
 
அதிக பாசம் கொண்டவளே
அதிகம் கோபம் படுத்துகிறாள்
அது எப்படி என்னை
அடுத்தவரிடம் விட்டுக் கொடுக்கலாம் அனைத்தையும் கேட்டதும்
அன்பான இனியன் மனம் வாட
அவன் உணவு வேண்டாம் என்றால்
அனைவரும் சாப்பிடாமல் செல்ல
அவர்களுக்காக சாப்பிட்டால் இனியன்
அனைத்தையும் அறிந்தவள்
அவனை விலக்கி வைப்பதேனோ அவனை காயப்படுவத்துவதேனோ.....
 
இன்னும் என்ன பிரச்சினை
இருக்கு தேனு இப்படி
தவிக்கறா அளவுக்கு
 
அதிக பாசம் கொண்டவளே
அதிகம் கோபம் படுத்துகிறாள்
அது எப்படி என்னை
அடுத்தவரிடம் விட்டுக் கொடுக்கலாம் அனைத்தையும் கேட்டதும்
அன்பான இனியன் மனம் வாட
அவன் உணவு வேண்டாம் என்றால்
அனைவரும் சாப்பிடாமல் செல்ல
அவர்களுக்காக சாப்பிட்டால் இனியன்
அனைத்தையும் அறிந்தவள்
அவனை விலக்கி வைப்பதேனோ அவனை காயப்படுவத்துவதேனோ.....
செம சிஸ் கவிதை நடை சூப்பர்
 
Top