Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 18

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் வரவா – 18



வாசு டைம் ஆயிடுச்சு,ஏன் இன்னும் தூங்கற ஆபிஸ் போகலையா

என்னை தூங்க விடு நல்ல கணவுல இருக்கேன் இன்னிக்கு லீவ் போகல.

ஜாக்கிங் ,அதுக்கும் லீவ்.எனக்கு காபி வேனும் வாசு, எழுந்திரு

சரி ,உனக்கு ஒரு சர்பிரைஸ்,இரு கையால் அவளை தூக்கிக்கொண்டு வீட்டின் முன் சிட்அவுட்டுக்கு வந்தான் மெதுவாக அவளை மரஊஞ்சலில் உட்கார வைத்தான்.

ஹய்யா ஊஞ்சலா எப்போ வாங்கன ,எப்படி வந்தது.காலையில 6.30 பிக்ஸ் பண்ணேன் , அப்பறம் தோட்டத்திலும்

ஊஞ்சல் போட்டிருக்கேன்.எனக்காக வாங்கினியா

ம்ம் அப்ப மாமாக்கு என்ன தருவ அவள் பக்கத்தில் உட்கார்ந்து தன் காலால் ஊஞ்சலை ஆட்டினான்.அவ்வளவுதான அவன் இரு கண்ணங்களையும் பிடித்துக்கொண்டு என் செல்லக்குட்டி, புஜ்ஜுக்குட்டி..

சீசீ பே, விட்டா மணியோட குட்டின்னு சொல்லுவ போடி உங்கிட்ட போய் கேட்டேன் பாரு. இருவரும் காலை உணவை முடித்தார்கள்.

மீண்டும் ஊஞ்சலில் மித்ரா உட்கார்த்திருக்க ,அவள் மடியில் படுத்துக்கொண்டு செல்லில் மையில் பார்த்துக்கொண்டிருந்தான்.மித்ரா வாசுவின் தலையை வருடினாள். வாசு என்ன செய்ற

மெயில் பார்க்கிறேன் மித்ரா.

கொஞ்சம் நேரம் தூங்கு வாசு.எப்ப பார்த்தாலும் வொர்க் செஞ்சிட்டு இருக்க பேசாத உன் வேலைய ரிசைன் பண்ணு, நம்ம சூப்பர் மார்கெட்டேல வர பணமே போதும்.

அதுவே போதுமா நம்ம பெரிய பணக்காரனா ஆகவேணாமா

இருக்கிற பணம் போது வாசு பணத்துக்கு பின்னாடி அலைய வேண்டாம்.நம்ம பண்னைக்கு போலாம் வாசு.

சரிடி, என்னை பார்த்தா மாட்டுக்கு புண்ணாக்கு வைக்கிற பையன் மாதிரி இருக்கு ம்ம், கடைக்கு எல்லாத்தியும் மேனேஜ் பண்ண லேடி ஓருத்தங்கள அப்பாயின்மென்ட் செஞ்சியிருக்கேன்.

சரி நீ,கொஞ்ச நேரம் தூங்கு வாசு.அவள் மடியில் படுத்தான். மனைவி மடியில தூங்குவதும் ஒரு தனி சுகம், தலையை நீவிட்டு, ஒரு கையை அவன் தோளில் வைத்து தட்டினாள் , உலகையே வென்று விட்ட மகிழ்ச்சி வாசுவிற்கு, இனிமேல் தன்னை புரிந்துக்கொள்வாள்.

அயர்ந்து உறங்கிவிட்டான் ஓரு மணிநேரம், செல் அடிக்கவும் எழுந்துவிட்டான், அடுத்த முனையில் நான் பிரேம் பேசிறேன்டா, ஆங் வந்துட்டார் நீ கிளம்பி வா.

சரிடா சொல்லி போனை அனைத்தான்,மித்ரா வெளியே போறோம், நைட் பீச் ரிசார்ட்ல தங்குறோம் தேவையானதை எடுத்து வச்சிக்கோ.ஆங் மித்ராவை கப்போர்டு முன்னாடி நிறுத்தி இந்த லாக்கர்ல பணம், ச்சுவல்ஸ் இருக்கு, பக்கத்து லாக்கர்ல நம்முடைய போட்டோஸ், டாக்குமண்ட் இருக்கு, பணம் தேவையினா எடுத்துக்கோ.

புகழ்பெற்ற கண் மருத்துவனைக்கு அழைத்து சென்றான். வாசு எங்க வந்திருக்கோம். ஐ ஆஸ்பிட்டல் மித்ரா ,

ஏன் வாசு,கொஞ்சம் போறு. சார் பிரேம் சார் கூப்பிடறார் அட்டண்டர் சொன்னவுடன்,மித்ராவை கூட்டிக் கொண்டு பிரேம் ரூமில் நுழைத்தான்.

வாடா மச்சான், புதுமாப்பிள்ள எப்படி இருக்கடா, மித்ரா நல்லாயிருக்கீயாமா.

ம், மித்ரா என் பிரண்டு டாக்டர் பிரேம்,

நல்லாயிருக்கேன் அண்ணா, உன் கல்யாணத்துக்கு வந்தேன்மா. டெல்லியில் பெரிய டாக்டர் ரிசர்டு வரவச்சிருக்கான் உன் புருஷன், இப்பதான் இவங்க ரிப்போர்ட் பத்தி பேசிட்டு இருந்தோம். அவரு செக்க செஞ்சிட்டா ஆபரேஷன் டேட் அனோன்ஸ் பண்ணிடுவார். வாசு என்ன நடக்குது,

ஆக்ஸிடேண்ட் ஆன உடனே ஆபரேஷன் பண்ணிருந்தா உனக்கு பார்வை கிடைச்சிருக்கும் உன் சித்தப்பா கண்டுக்காம விட்டுட்டான் புறம்போக்கு.

ஹாய் வாசு ,ஹவ் ஆர் யு பிஸி மேன்.

பைன் சார், அரைமணி நேரம் மித்ராவை செக் செய்து , சில டெஸ்ட் எடுத்து வாசுவை அழைத்தார்கள், அவங்களுக்கு பார்வை கிடைக்க வாய்ப்பிருக்கு 15 நாள் இங்க டிரிட்மேன்ட் எடுத்துட்டு வரனும், டெல்லி ஆஸ்பிட்டல அட்மிட்டு பண்ணிடுங்க, ஆபரேஷன் முடிச்சி.உடனே தெளிவா தெரியாது. கொஞ்சம் கொஞ்சமா ரிக்கவர் ஆகும்.

தேங்க்யூ டாக்டர், ஐம் வெரி ஹாப்பி .மனோ டாக்டர் வந்து போன பிளைட் செலவு ,ஹோட்டல் செலவு எல்லாத்தியும் செட்டில் பண்ணிடு சொல்லி போனை வைத்தான்.

இரவு பீச் மணலில் வாசுவின் தோளிலில் சாய்ந்து, வாசு நிஜமாவே கண்ணு தெரியுமா எனக்கு, நம்பவே முடியல.

கண்டிப்பா தெரியும், உன்ன சீக்கரம் கல்யாணம் பண்ணினதே அதுக்குதான்.

எனக்கு இனிமே பார்வை கிடைக்காது சொல்லிட்டாங்க, அதான் நான் ட்ரை செய்யல. இப்ப பழகிட்டேனே இது அவசியமா,

ஏன்டி என்ன பார்க்க உனக்கு இஷ்டமில்லையா,

இருக்கே நிறைய ,

மித்ரா , உனக்கும் எனக்கும் ஓரே மாதிரி செயின் வாங்கியிருக்கேன், சின்ன பெடன்ட், தொட்டு பார்த்த மித்ரா.

இது என்ன பூடிசைன் மாதிரி இருக்கு வாசு, போட்டு விடு வாசு.அவளை மடியில் உட்கார வைத்து செயின் போட்டுவிட்டான்.

எப்படியிருக்கு வாசு. –ம்ம் சூப்பாரா இருக்கு, வாசு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு, அவள் கண்ணத்தை இதழால் வருடிக்கொண்டே ,நிஜமாவ தேனு, -ம்ம் எனக்கு வெட்கமா இருக்கு வாசு.

டைம் ஆச்சு ரூமுக்கு போலாம். கதவை திறந்தவுடன் என்ன வாசு ரூமே வாசனையா இருக்கு ,

பூவுல அலகரிச்சு,வாசனை மெழுகு அரை முழுக்க ஏற்றியிருந்தார்கள். மித்ரா இது ஹனிமூன் சூட்.அவளை அள்ளிக்கொண்டு பெட்டில் கிடத்தினான், மித்ரா ,ம்ம் அவள் தோள்வளைவில் சாய்த்தான், சிறிதுநொடி ஏய் வாசு என்ன பண்ணற, என்னடி, நீ பேட் டச் பண்ணற,

என்னதுது , நான் உன் புருஷன்டி.

எனக்கு மிஸ் சொல்லி கொடுத்திருங்காக இது பேட் டச் ,எங்கம்மாவும் சொல்லியிருக்காங்க. நீ ரொம்ப மோசம்,தள்ளி படுடா.உங்கூட சேரகூடாது. ஏய் என்ன படுத்தாதிடி, நடிக்காத.

இது பேட் டச் அவ்வளவுதான்.

மனோ பேட் டச்சுன்னு சொல்லிட்டாடா.

சரி விடு,அழாத விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி. இரண்டு நாள் லீவ் எடுத்துக்கோ வாசு.

போடா நான் விட்டுடேன், அவளே என்ன புரிஞ்சு வருவா,ஆனா நடிக்கிறாடா.

ஹலோ அண்ணா நான் ரம்யா பேசிறேன், பக்கத்துவீட்ல மித்ரா அண்ணா பொண்ணு வயசு வந்துடுச்சின்னு ,

ஆங் , சொன்னாமா பங்ஷன்னு ,

அவ அத்தை பொண்ணு வித்யாவும், கமலாவும் மித்ராவை கூட்டிட்டு போயிருங்காக, அண்ணா அவங்க சரியில்லண்ணா நீங்க போயி பாருங்க, நானில்லாத போக மாட்டேன் சொன்னாம்மா, காரை வேகமாக எடுத்தான்.

காலையில் வித்யா மித்ராவிடம், என்ன கல்யாணம் ஆயிடுச்சு கேள்விப்பட்டேன். எப்படிஇருக்க மித்ரா உன்ன பார்க்கதான் வந்தேன், தேன்போல பேசி அவளை அழைத்து சென்றாள். கமலாவும், வித்யாவும் கூட்டுசதி செய்து மித்ராவை பழிவாங்க ....

 
The story has been going very well from the beginning to the present day.The whole mind is filled with joy while reading. Thank you so much sis
 
The story has been going very well from the beginning to the present day.The whole mind is filled with joy while reading. Thank you so much sis
Thk you for supporting sathya sis this is my first story, and i like ur comments pls keep going on at end of the story.i expect ur encouragement sis
 
Top