Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 24

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் வரவா – 24

இதே வேலையா போச்சு வாசு உனக்கு இரு பேக் கேமிரா ஆன் செய்யறேன்.புளு டூத் வழியாக பேசினான் . மித்ரா கேமிராவில் தெரிய, சோகமாக உட்கார்ந்திருந்தாள் என் செல்லம் எப்படி இருக்கா பாருடா.அப்ப கண்ணு கூசுது சொன்னா இப்ப பரவாயில்லையா.

ம்ம்

ரொம்ப சோர்வா இருக்கா சாப்பிட ஏதாவது கொடு சின்னா.

அக்கா இந்தா உனக்கு புடிச்ச தேன்மிட்டாய் நான் ஊருலிருந்து வாங்கி வந்தேன்.

டேய் அத கொடுக்காத சின்னா,

தூக்கி ஜன்னலில் எறிந்தாள் மித்ரா

ஏனக்கா இப்படி பண்ண எல்லாம் வேஸ்ட் ஆயிடுச்சு.அழ ஆரம்பித்தாள் மித்ரா.

அக்கா மாமா ஞாபகம் வந்துச்சா,

அவன் என்னை வாழவும் விட மாட்றான் சாகவும் விட மாட்றான் , அக்கா சித்தப்பா நம்மல பார்க்கிறாரு அழாம இரு.

சின்னா இந்த ட்ரேயின்ல வாசு என்ன ஃபாலோ பண்ணற மாதிரி இருக்குடா. நமக்கு பின்னாடி சீட்ல கார்னர்ல இருக்கானே அவன் வாசுவா.

நம்மையே நோட் பண்ணறான்.

மாமா இல்லக்கா , நீ லூஸா அவன போய் மாமா சொல்லற.

இந்த சைட் ஓருத்தன் அவனா பாரு

அக்கா மாமா இல்ல, உனக்கு வேணுமா சொல்லு மாமா போட்டோ காணபிக்கிறேன் போன்ல இருக்கு.

வேணாடா , அவன பார்க்காமலே பைத்தியமா இருக்கேன் அவன பார்த்தா ச்சே எப்படியெல்லாம் தோணுது.

நீதான வேணா சொன்ன , இப்ப ஃபில்லிங்கா பேசிற.

எல்லாம் அந்த வாசு எருமையால வந்தது, நிம்மதியா இருந்தேன், என் வாழ்க்கையே நாசம் பண்ணிட்டான்.

டேய் என் பேபி எப்படி ஃபில் பண்ணறா நான் இல்லாம, வாசு போனில் பேச, மெல்லிய குரலில் சொன்னான் சின்னா, உன்ன கழுவி ஊத்தறா.

சின்னா இப்ப கூட வாசு என்ன கூட இருக்கிற மாதிரி இருக்கு.

ம் அப்படியா -வாசு

சின்னா இப்ப வாசு பேசின மாதிரி இல்ல, ‘ம் அப்படியா.’வாசு சொல்லுவான். ஐயோ புளூ டூத் கட்டாயிடுச்சு போல சமாளி.

எனக்கு கேட்கல அக்கா நீ மாமாவே நினைச்சிட்டு இருக்குல்ல அதான்.

சரி உன் போன கொடு நான் ரம்யாகிட்ட பேசனும்.வாசு காலை கட் செய்தான். இந்தா அக்கா போன்.

சின்னா , இது என்ன பழக்கம் ஸ்க்ரின்ல யாரோ இந்தி நடிகர் போட்டோவ வச்சிருக்க தமிழ் நடிகரா வைக்கலாம் இல்ல.

ஐயோ அக்கா உன் புருஷனே அவன்தான், மாமா இந்திக்காரன்க்கா,வாசு நிலைமை ரொம்ப கஷ்டம்தான்போ என்று மனதில் நினைத்தான் சின்னா.

8 நாட்கள் முன்பு, ஆபரேஷன் முடிஞ்சு மித்ரா கண் திறந்தாள். கொஞ்சம் வெளிச்சமாக தெரியுது என்றாள் மித்ரா. சிறிது சிறிதாக பிம்பங்கள் தெரிந்தது. பிறகு இரண்டு நாட்கள் கழித்து பார்வை தெரிய ஆரம்பித்தது. யாரை முதல்ல பார்க்க போற மித்ரா என்று மனோ கேட்க சாமி போட்டோ இருந்தா காட்ட சொல்லுங்கண்ணா .

டாக்டர் போட்டோ காண்பித்தார், கண்ண திறம்மா , இங்க புகழ் பெற்ற சாமி கிருஷ்ன வாசுதேவன் சொல்ல , கிருஷ்னனின் உருவத்தை பார்த்தாள் , மனதில் வாசுவை நினைத்தாள். மித்ராவுக்கு ஓய்வு தேவை சொல்லி அனைவரும் அனுப்பி வைத்தார் நர்ஸ்.

சிறிது நேரம் கழித்து, மனோ உள்ளே நுழைந்தான். மித்ரா வாசு உனக்கு சர்பிரைஸ் ஓன்னு காண்பிக்கனும் சொன்னனா

ம்ம் ஆமாம்.

மனோ பக்கத்தில் ஓரு உருவம் வந்து நின்றது.

நான் வெளிய நிற்கிறேன் யாராவது வாராங்களா பார்க்கிறேன் என்று மனோ சென்றான்

அக்கா நான் யாரு தெரியறேனா என்றான் குரலை வைத்து கண்டுபிடித்தாள் ‘சின்னா’ ஆனா நீ நீ என்று மித்ரா அவன் புருவத்தில் மேல் இருந்த வடுவை தொட்டு பார்த்தாள் பிறகு காதருகில் உள்ள மச்சத்தை பார்த்தாள். சீனுவாசன் , என் தம்பி சீனு நீ எப்படிடா என்று கட்டிக்கொண்டாள். அக்கா நான் சாகல பாரும்மா கிட்டதான் இருந்தேன்

கட்டிக் கொண்டு அழுதான்.

இதெல்லாம் கனவா சீனு இல்லக்கா நிஜம்.

உன்னையும் என்னமாதிரியே ஏமாத்திருக்கான் இந்த வாசு.

இல்லக்கா , மாமாவுக்கு நான் அவங்க அப்பா பிரண்டுடோட பையன் தான் சொன்னாங்க. ஓரு வருஷம் முன்னாடிதான் தெரியும்.

அக்கா நான் அப்பறம் சொல்றேன் சித்தப்பா வராரு நான் யாருன்னு சொல்லாதே சேப் இல்ல வாசு மாமா சொன்னாரு.ஒரு மாசம் பொறுத்துக்கோ நான் மேஜர் ஆயிடுவேன் வந்துட்டாருக்கா என்று விலகி நின்றான். மனோ டாக்டர் பார்க்க போறேன் நழுவிச் சென்றான்.

உள்ளே நுழைந்தார் கார்மேகம், அவருடன் அழகாக நாகரிக உடை அணிந்து , மேக் கப் கலையாமல், நான் மேல்தட்டுவர்க்கத்தை சேர்ந்தவள் என்ற திமிர் இருந்தது.

மித்ரா இவங்க உன்னை பார்க்கனும் வந்திருங்காங்க .

ஹலோ ஐம் ஸ்ருதி .

என்ன விஷியமா பார்க்கனும் .

நான் உன் புருஷனோட கேர்ள் பிரண்டு.

அதுக்கென்ன இப்போ-மித்ரா.

அவன் கூட டேட்டிங் எல்லாம் போயிட்டு வந்திருக்கேன், உன்ன பார்த்தா சுமாரா பட்டிகாடா இருக்கு உன்ன எப்படி மேரேஜ் பண்ணிருக்கான்.

போய் அவன்கிட்ட கேள் அந்த பட்டிகாட்டு பொண்ண ஏன் கல்யாணம் செஞ்ச,.

நீ தான் அவன்கூட வாழல இல்ல அப்ப டைவர்ஸ் கொடு.

மித்ரா ,இப்படி ஒரு பொண்ணோட சுத்தி உன்ன ஏமாத்திருக்கான்.அவன் உனக்கு தேவையாம்மா.

சித்தப்பா அது எனக்கு அவனுக்கும் உள்ள பிரச்சனை , அதுல தலையிட யாருக்கும் உரிமையில்ல.

இங்க பாரு என்ன பெயர் சொன்ன ம்ம் ஸ்ருதி ,அவன் ஓகேன்னா நீ தாராளாமா கல்யாணம் செஞ்சிக்கோ. இப்ப கிளம்பரியா காத்து வரட்டும்.

யு ஸூடுபிட் கேர்ள் ,என்ன இப்படி பேசற மரியாத இல்லாத என் ஸ்டேடஸ் உனக்கு தெரியுமா.

அது தெரிஞ்சு நான் பொது அறிவு ஐ மீன் ஜென்ரல் நாலேட்ஜ் வளர்த்துக்கனும் அவசியமில்ல.

ச்சே வெளியெ சென்றாள் ஸ்ருதி கூடவே கார்மேகமும் சென்றான்.

டேய் வாசு நீ மட்டும் என் கையில கிடைச்ச தோள உரிச்சடுவேன்டா. வாசு திருந்தவே மாட்டானாடா சின்னா, என் பிரச்சனை பத்தாத இவ ஒரு தலைவலி. டேய் எங்கடா இருக்க கத்த ஆரம்பித்தாள்.

ஹாஹாஹா சிரிக்க ஆரம்பித்தான் வாசு, அனைத்தும் மனோ செல்லில் லைவ்வாக பார்த்துக்கொண்டிருந்தான்.

‘சல்மான் பாய்’ சொல்லுடா பேராண்டி என்ன ஓரே சிரிப்பு.

என் பொண்டாட்டி பார்ம்க்கு வந்துட்டா நாம்ம இந்தியா போறோம் என்று தன் தாத்தாவை தூக்கி சுத்தினான்.
 
Mitharava idhu ipdi pesuranga sariyana nosecut shruthiku romba swarasyama irukku sis waiting for tom and jerry download.png
 
thk u for giving wonderful support rudharan sir, amutha,anandhi,sathya sis,banu mam
 
Top