Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 26

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் வரவா – 26

சென்னை ஆபிஸ்ல ஏதோ ப்ராபளம் வாசு மாமா வந்தாங்க , ஆனா எங்களுக்கு தெரியாது.நான் வீட்டில இல்ல.இங்க இருந்தேன். உடனே வாசு எங்க மதருக்கு போன் பண்ணி, நான் எப்படி படிக்கிறேன் விசாரிச்சாரு , எங்க மதர் நான் ஸ்கூலுக்கு வரல சொல்லிட்டாங்க. அப்பதான் மாட்டனும். செம அடிபின்னி எடுத்திட்டாரு
,
என்னடா சொல்லற

ஆமாக்கா.வாசுக்கு கோவம் வந்தது அவ்வளவு தான் நடந்ததை சொல்லறேன் கேளு.

பார்வதி மதியம் வீட்டிற்குள் நுழைந்தார். ஹாலில் உட்கார்ந்திருந்த வாசுவை பார்த்து ,எப்ப வந்த வாசு என்றார்
.
இப்பதான் மா, நீங்க எங்க போனீங்க மா.

ஆபிஸிலிருந்து இப்பதான் வந்தேன் காலையில் போனது.

அப்படியா,ம்ம் சின்னா எங்க

அவன் அவன் ஆங் டூர் போயிருக்கான் ஸ்கூல் டூர். நீ சாப்பிட்டியா கண்ணா.

ம் ஏம்மா பேச சொல்ல தடுமாறீங்க

அது டயர்டா இருக்கேன். சரிம்மா நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. நாளை காலையில பிளையிட் நான் மும்பாய் போனோம்.
எத்தனை மணிக்குப்பா, ஏழு மணிக்கும்மா, நான் ஆறு மணிக்கே கிளம்பனும். சரிப்பா சொல்லி ரூமிற்குள் சென்றுவிட்டாள் பார்வதி, நல்ல வேளை மாட்டிருப்போம் என்று பாரு நினைக்க, நீ ஏற்கனவே மாட்டிட்ட பாருன்னு வீதி சிரித்தது வாசுதான் காலையிலே ஆபிஸ் வந்துட்டானே.

இன்டர்காமில் டிரைவரை அழைத்தான் வாசு,

சார் -டிரைவர்

எங்க போயிட்டு வரீங்க

ஆபிஸ்க்கு சார்

ஓ ஐ சீ சொல்லி பளார் அவன் கண்ணத்தில் அடித்தான் வாசு.

சார் என்னை தப்பா நினைக்காதீங்க ,அம்மாதான் உங்கிட்ட சொல்லக்கூடாது.

எங்க போறாங்க.
ஒரு பொண்ணு வீட்டூக்கு
வாட்
ஆமாங்க சார், அம்மாவும்,சின்னதம்பியும் அங்க தான் போறாங்க.

எத்தனை நாளா

இரண்டு வருஷமா

நாளைக்கு வழக்கமா நீ கூட்டிட்டு போ, எங்கிட்ட சொன்னதை எதுவும் சொல்லகூடாது. நீ கிளம்பு

அடுத்தநாள் காலை 10.00 மணிக்கு மித்ராவீட்டில் காலிங்பெல் அடிக்க கதவை திறந்தார் பார்வதி, வெளியே வாசு நிற்க அதை பார்த்த கை உதற ஆரம்பித்தது பார்வதிக்கு.

சோபாவில் அமர்ந்து , அப்பறம் எவ்வளவு சம்பளம் வாங்கிறீங்க, பாத்தரம் விளக்கி , சமைக்க ,ம் சொல்லுங்க.

உங்க பையன் செத்துட்டானா,

வாசு ஏன்டா , இப்படி பேசற

பாரும்மா பசிக்குது சாப்பாடு போடுங்க என்று சின்னா உள்ளே நுழைய வாசுவை பார்த்தவுடன் நின்றுவிட்டான்.

இது என்ன டிரஸ் , உன்ன ஸ்கூல் அனுப்பினா , சூப்பர்மார்கெட்ல வேளை செய்யற, அடிக்க ஆரம்பித்தான்.

சாரி மாமா சின்னா கெஞ்ச,டேய் வாசு விடு அவன ,வலிதாங்க மாட்டான்டா.

என்னால உங்கள எதுவும் பண்ணமுடியில இவன அடிக்கிறேன்.

நைட்டும்,பகலும் உங்களுக்காக உழைக்கிறேன், கோடி கோடியா சம்பாரிக்கிறது யாருக்காக மா, சொல்லுங்க

வாசு,
பேசாதீங்க வாசு கோபத்தின் உச்சியில் இருந்தான் நேற்றிலிருந்தே அவனுக்கு சிந்தனை நம் குடும்பத்தை கவனிக்கவில்லையா என்று.

பாரும்மா... கூப்பிட்டுக்கொண்டே உள்ளே வந்தாள் மித்ரா. பாரும்மா நான் பாஸ் ஆயிட்டேன் சொல்லிக் பாருவை அனைத்து முத்தமிட்டாள்,
அப்படியா மித்ரா ரொம்ப சந்தோஷம், எல்லாம் உங்களால பாரும்மா, நீங்கதான் டிகிரி போடசொன்னீங்க, இல்லைன்னா படிச்சிருக்க மாட்டேன்.
யாராவது வந்திருங்காங்களா பாரும்மா,

ஆமாம் மித்ரா எனக்கு .தெரிஞ்சவங்க, சரி நான் உள்ளே போறேன்.

அப்பறம் உன்னை பார்த்திலிருந்து மாமா பிளாட் , உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் சொன்னாரு,அப்பறம் உன் மெடிக்கல் ரிபோர்ட்வாங்கிட்டு போனாரு.எனக்கு தெரிஞ்சு ஒரு வருஷமா உன் ஆபரேஷனுக்கு கஷ்டபட்டார்.

ஆனா அன்னிக்கு செம அடிக்கா,

பின்ன படிக்க அனுப்பினா நீ செஞ்சது தப்புதான
.
அக்கா மாமா என் மேல எவ்வளவு பாசமா இருப்பார் தெரியுமா, என்ன வளர்த்தே மாமாதான்க்கா ,மாமா மேல என்ன தப்பு இருக்கு நீ ஏன் சண்டை போடற, மாமாவ கஷ்டப்படுத்தன எனக்கு புடிக்காது சொல்லிட்டேன்.

உனக்கு புரியாது சின்னா, நீ இதைப்பத்தி பேசாத,.

எங்கடா காலையிலே கிளம்பிட்டிங்க நீயும்,தாத்தாவும்.—மனோ

மனோ அவன் பொண்டாட்டிய சைட் அடிக்கபோறானாம் , அதுவும் பைக்கில.

சல்லுபாய் ,அவன்கிட்ட என்ன வெட்டிப்பேச்சு,நாம்ம போலாம் வா.

டேய் உலகத்தில கட்டின மனைவிய சைட்அடிக்கிறது நீ மட்டும்தான்டா அதுவும் உன் தாத்தாகூட.

சீக்கீரம்வா சல்லு , அவங்க கிளம்பிட்டாங்க

ரம்யா ஸ்கூட்டி ஓட்ட பின்னாடி மித்ரா உட்கார்ந்தாள்.

ஹெல்மட்டில் முகத்தை மறைத்துக்கொண்டு வாசுவும் ,தாத்தாவும் பின் தொடர்ந்தார்கள்.

ஹே ஆடி கார் போகுதுடி,கண்டிப்பா வாசுதான் ,சேஸ் பண்ணுடி, மித்ரா சொல்ல ரம்யா ஸ்பிடா போனாள். ஓரு சந்துக்குள் நுழைந்தது
.
வாசு அவர்களை ஓவர்டேக் செய், பின்னாடி வந்த ரம்யா வாசுவின் வண்டியில் இடித்துவிட்டாள்,

சல்லு ஆரம்பி என்று வாசு சொல்ல.

சாரி சார்,ரம்யா வண்டியை எடுக்க

ஏய் பொண்ணுங்களா, கண்ண என்ன பின்னாடியா வச்சிருக்கிங்க, இடிச்சிட்டு நீங்க போயிட்டா,

சார் தெரியாத பண்ணிட்டோம்,மண்ணிச்சிங்க ரம்யா சொல்ல
அதெல்லாம் முடியாது.

ச்சே ரம்யா , கார் போயிடுச்சிடி ,வாசுவ பார்க்க முடியல ஜஸ்ட் மிஸ், எல்லாம் இந்த கிழவனால வந்தது.

ஹலோ ,யார பார்த்து கிழவன் சொன்ன

ம்ம் உன்னை பார்த்துதான்,உன்கூட வந்தவர் யாரு
என் பேரன்.
அவங்களே புல்பேன்ட் போட்டிருக்கான்,இந்த வயசில உனக்கு ஆப் ட்ராயிர் கேட்குதா. வாசு வாயை மூடிசிரித்தான், எப்படி வாய் அடிக்கிறா பார்
வண்டிய உடைச்சுட்டு பேச்சுபத்தியா, வாய் ரொம்ப நீளம் தான்.

ஏன் ஸ்கேல் எடுத்துட்டு வந்து அளயேன்.

நீயேன்டி டென்ஷன் ஆகுற-ரம்யா

பின்ன என்னடி மிஸ் பண்ணிட்டேன் அவன.

ஓ லவ்வரா, அதான் கடுப்போ, பையன் போயிட்டானோ.

வேணா ஓவரா பேசாத வயசானவருன்னு பார்க்கிறேன், ,உன்கிட்ட என்ன பேச்சு,சார் வாசுவை கூப்பிட்டாள்

அமைதியாக இருந்தான்,

உன் பேரன் பேச மாட்டா ரோ.

ம் அவன் ஊமை பேச மாட்டான்,எங்கிட்ட பேசு

உங்கிட்ட பேச ஓண்ணுமில்ல, சாரி சார் எங்க மிஸ்டேக் தான்.

தலையை ஆட்டி வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

அப்பா என்று கண்ணை முடினாள் மித்ரா,ரம்யா வண்டிய ஸ்டார்ட் பண்ணு சீக்கிரம் இது வாசு வண்டி சத்தம், கோ பாஸ்ட், ஸ்கூட்டியில் பின் தொடர்ந்து போனார்கள் , எந்த பக்கம் போனார்கள் தெரியவில்லை.

ச்சே அண்ணாமாதிரி தான் இருந்தது.

ஹெல்மட் எடுக்காதபோதே யோசித்திருக்குனும் ரம்யா அது யாரு வாசுக்கூட. தாத்தா.
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்

ஆனால் அப்டேட் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப குட்டியா இருக்கேப்பா
 
Last edited:
ஹா ஹா ஹா
கேடிப் பய வாசு பொண்டாட்டி இவனை தெரிஞ்சுக்கக் கூடாதுன்னு ஹெல்மெட் போட்டுட்டு போனாலும் ரம்யா கண்டுபிடிச்சுட்டாளே
இப்ப என்ன செய்வ இப்ப என்ன செய்வ வாசு பையா
ஹா ஹா ஹா
வாசு ஊமையா?
அந்தர் பல்ட்டி அடிச்சுட்டாரே சல்லு
ஹா ஹா ஹா
வாசுவின் ஆடி கார் மிஸ் பண்ணியதாலே தாத்தாவுக்கு செமையா கிடைக்குது
பேரனே முழு டிரஸ் உனக்கு ஹாப் டிராயரா தாத்தா?
ஹா ஹா ஹா
சின்னாவுக்கு இன்னும் இரண்டு கொடு, வாசு
படிக்க ஸ்கூலுக்கு அனுப்பினால் சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்து வேலை பார்த்தானா?
ஆனால் அதனாலதானே மித்ராவை நீ பார்க்க முடிஞ்சது
அதனால சின்னாவை மன்னிச்சுடலாம் வாசு
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்

ஆனால் அப்டேட் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப குட்டியா இருக்கேப்பா
Same feel banu sis
Lakshu sis nice ud sis sallu boy ku neraiya vaaippu kudunga sis enakku thaaththava romba pidichirukku
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்

ஆனால் அப்டேட் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப குட்டியா இருக்கேப்பா
Banu mam 5 pages type pananen nigaa rombaa kutti sollitiga, thk u for ur comments
 
Top