Chapter 25
என் உயிர் தொட்ட உரிமை மலர் நீயடி,
உன்னையன்றி வேறொரு பெண்ணை
எங்கனம் தேடுவேன்..
உதிர்ந்தாலும் சறுகானாலும்
நீயே என் உணர்வானவள்...
“சீக்கிரம் கிளம்பு என் பொண்ணை போய் காப்பாத்தி கூட்டிக்கிட்டு வரணும்”
சாவதானமாக அமர்ந்து இருந்த அருணா, “ஏன் என்ன ஆச்சு அவளுக்கு” என்று கேட்டார்.
“என் பொண்ணு இத்தனை நாளா ஒரு போன் கூட பண்ணாதப்பவே எனக்கு சந்தேகமா இருந்தது. அவளை நம்ம யார்க்கிட்டேயும் பேச கூடாதுன்னு சொல்லி அடைச்சு வச்சுருக்கான் உன் அண்ணன் மகன். இதை எல்லாம் கேட்டும் நான் இங்கே இருந்துகிட்டு வேடிக்கை பார்க்கனுமா” என்று ஏகத்துக்கும் குதித்தார்.
“இப்போ என்ன உங்க பொண்ணை யார்க்கூடவும் பேசகூடாதுன்னு சொல்லிட்டாங்க அவ்வளவு தானே, இதுக்கு ஏன் இவ்வளவு ஆர்பாட்டம், இத்தனை நாளா எங்க வீட்டு ஆளுங்க கூட பேசாம தானே நானும் இருக்கேன். நான் எந்த ஆர்பாட்டமும் செய்யலையே” என்றார் அருணா.
உள்ளே லேசாக சுருக்கென்று இருந்தாலும் மகள் மீதான முக்கியத்துவம் காரணமாக “இங்கே பாரு அருணா வீணா பேசி என்னை கடுப்பேத்தாத, கிளம்ப போறியா இல்லையா” என்றார் சற்றே காட்டத்துடன்.
இவர்கள் சத்தம் கேட்டு உள்ளிருந்து வந்த சஞ்சய், “என்னப்பா எதுக்கு சத்தம் போட்டுட்டு இருக்கீங்க” என்று கேட்டான்.
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவனை பார்த்த சுகுமார், அங்கே உன் அக்காவை அந்த வீரா கொடுமை படுத்தறான்னு சொல்றேன், இவ எனக்கென்ன மாதிரி இருக்கா. பெத்த பொண்ணு மேலே பாசம் இருக்கா பாரு” என்று அவனிடமும் காய்ந்தார்.
“அக்காவை கொடுமை படுத்தறாங்கன்னு யார் உங்களுக்கு சொன்னது”
“என்னடா நீ வேற கேள்வி மேலே கேள்வி கேட்டுகிட்டு இருக்க, மேகா தான் சொன்னா. என்னை வந்து கூட்டிட்டு போங்கப்பான்னு அழுதா. என் பொண்ணு அங்கே என்ன பாடு படறாளோ” என தவித்தார்.
“அக்காவே சொன்னாங்களா, அப்போ போய் பார்த்துட்டு வர வேண்டியது தான்” என்றான் இவனும்.
அருணா மகனை கேள்வியாக பார்க்க, “அக்கா தானேம்மா சொல்லிறுக்காங்க அப்போ நாமளும் போகலாம், அப்போ தானே அங்கே என்ன நடக்குதுன்னு நமக்கும் தெரியும்” என்றான்.
“உணக்காவது புத்தி வந்ததே, உங்கம்மாவை கிளம்ப சொல்லு நீயும் கிளம்பி வா” என்றார் சலிப்பாக.
“அம்மா வாங்க போய் என்னதான் நடக்குதுன்னு பார்க்கலாம், அப்போ தானே யார் நல்லவங்க யார் கெட்டவங்க எல்லா உண்மையும் தெரியவரும்” என்றான்.
அதன் பிறகு அருணா ஒன்றும் பேசவில்லை, கிளம்ப சென்றார். அவர்கள் இருவரும் கிளம்பி வருவதற்குள் தானும் கிளம்பி வந்திருந்தார் சுகுமார்.
அங்கே வீடே கல்யாண கலை கொண்டிருந்தது, இவர்கள் வந்து இறங்கி நிற்க ஒன்றும் புரியாமல் விழித்தார் சுகுமார்.
“என் பொண்ணை அடைச்சு வச்சு, கல்யாண வேலை எல்லாம் பார்க்காறாங்களா” என்று போலீஸ்க்கு உதவி வேண்டி அழைத்தார்.
அதை தடுத்த சஞ்சய் தான், “அப்பா முதல்ல அக்காவை பார்ப்போம் அதுக்கு பிறகு என்ன நடந்ததுன்னு கேட்டுகிட்டு போலீஸை கூப்பிடலாம்” என்றான்.
என்னவோ மகன் தனக்கு சாதகமாக பேசுகிறான் என்று நினைத்தவர், உள்ளே செல்ல சென்றார். இத்தனை வருடம் தான் அங்கே வராதது, தனக்கும் அந்த வீட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொன்னது. தனது ஈகோவை தூக்கி பிடித்தது, என்று எதுவுமே அவருக்கு அப்போது நினைவவில் இல்லை. அவர் நினைவில் நின்றது எல்லாம் தன் மகள் மட்டுமே. முதலில் சென்றவர், மனைவி வராமல் வெளியிலேயே நிற்கவும், “என்னடி உன்னை வெத்தலை பாக்கு வச்சு ஆரத்தி எடுத்து கூப்பிடனுமா, அப்படியே சிலை போல நிக்கிற” என்று கத்தினார்.
ஆனால் அடுத்த நொடியே, ஆரத்தி தட்டுடன் வந்த இரு பெண்கள் வந்து நின்றனர். அவர்கள் பின்னேயே வேதாசலம் குடும்பம் மொத்தமும் அங்கே வந்து நின்று இவர்களை வரவேற்க. என்ன இதெல்லாம் என்று சுகுமார் திகைத்து நிற்க, “உள்ளே வாங்க மாப்பிள்ளை” என்று அழைத்தார் வேதாசலம்.
ஏதோ கல்யாண வீடு போல இருந்த அந்த வீட்டை பார்த்த சுகுமாரின் கோபம் எல்லை மீறியது.
“என்ன எல்லாம் விளையாடறீங்களா, எங்கே என்னோட பொண்ணு, என்ன பண்ணீங்க அவளை” என்று கத்தினார்.
“இங்கே தான்பா இருக்கேன்” என்று உள்ளிருந்து வந்து நின்றாள் மேகவினி. கிட்டதட்ட திருமண கோலத்தில் இருந்த மகளை பார்த்த சுகுமார், “என்னம்மா நடக்குது இங்கே” என்று புரியாமல் கேட்டார்.
“நீங்க அம்மாவை கூட்டிட்டு உள்ளே வாங்கப்பா, பேசலாம்”
“என்னம்மா ஆச்சு, இவங்க எல்லாம் உன்னை கொடுமை படுத்தறாங்கன்னு சொன்ன, இப்போ.. நீ வா மேகா நாம நம்ம வீட்டுக்கு போகலாம்” என அவளை கை நீட்டி அழைத்தார்.
“உங்க பொண்ணு உங்க கூட வரணும்னா எங்க வீட்டு பொண்ணு எங்க வீட்டுக்குள்ள வரணும் மிஸ்டர் சுகுமார்” என்றார் வீரா.
அதை கேட்டு கொதித்து போன சுகுமார், “என்னடா வேணும்னே பண்றியா, உங்களை எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும். நான் ஸ்டேஷன்க்கு போன் பண்ணி போலீசை வர வைக்கிறேன்” என்று போனை எடுக்க,
“அதுக்கெல்லாம் அவசியம் இல்லைப்பா, நீங்க அம்மாவை உள்ளே கூட்டிட்டு வாங்க. அப்போ தான் நானும் உங்ககூட வருவேன், உங்க பொண்ணு மேலே பாசம் இருந்தா வாங்க” என்று கூறினாள் மேகவி.
ஒரு நொடி அதிர்ந்து போய் விழித்தார் சுகுமார், ஆனால் அதற்கு மேல் அவர் யோசிக்கவில்லை, மனைவியின் கையை பற்றிய உள்ளே இழுத்து செல்ல முயல, அவர் கையை உதறி விட்டு நின்றார் அருணா.
“ஏய் என்னடி வர போறியா இல்லையா”
“ஏன் எதுக்கு வரணும், நீங்க போக கூடாதுன்னு சொன்னா போக கூடாது, வான்னு சொன்னா வரணும். நான் ஒண்ணும் பொம்மை இல்லை நீங்க சொன்னபடி ஆட” என்று திருப்பி கொண்டு நின்றார்.
“அருணா இப்போ வர போறியா இல்லையா”
“வர முடியாது, உங்க பொண்ணு உங்களுக்கு முக்கியம்னா நீங்க போங்க” என்றார் அருணா திடமாக.
“ஏண்டி அவ உனக்கும் பொண்ணு தானே” என்று திகைத்தார் கணவன்.
“ஓஹ் உங்களுக்கு அந்த நினைப்பு கூட இருக்கா, இத்தனை நாளும் என் பிள்ளைகளுக்கு என்னை ஒரு வேலைக்காரியை போலத்தானே வச்சிருந்தீங்க. இப்போ என்ன” என்று ஏளனமாக கேட்டார்.
“அருணா இதெல்லாம் பேச வேண்டிய நேரமாடி இது, நம்ம பொண்ணு நமக்கு வேணும்னா”
“வேணும்னா என்ன வேணும்னாலும் செய்வீங்க அப்படித்தானே. ஆனா எனக்கு அவளை இங்கே இருந்து கூட்டிட்டு போக வேண்டாம். அவ வரவே வேண்டாம். இங்கேயே இருக்கட்டும் சஞ்சய் வாடா போகலாம்” என்றார்.
ஆனால் சுகுமாருக்கு என்னவோ இதெல்லாம் ஒரே குழப்பமாக இருந்தது. அவர் குழம்பி நிற்க,” அருணா, இந்த வீட்டு பொண்ணு நீ, நாங்க இங்கே வாழ வந்தவங்க, நாங்க சொல்றோம் உள்ளே வாம்மா” என்று அழைத்தார் மீனா.
மீனாவும், மேகவினியும் வந்து அருணாவிற்கு ஆரத்தி எடுத்து அழைக்க, இதற்கு மேல் இங்கே நிற்க கூடாது என்று நினைத்த அருணா விறுவிறுவென உள்ளே சென்றார்.
அருணாவுடன் மொத்த குடும்பமும் உள்ளே சென்று விட, தனியாக நின்ற தந்தையிடம் வந்தாள் மேகவினி.
நடப்பதை எல்லாம் நம்ப முடியாமல் நின்ற சுகுமார், மகளை விரக்தியாக பார்த்தார், “என்னம்மா அவங்களோட சேர்ந்து நீயும் என்னை பழி வாங்கற போல” என்றார்.
அவரை பார்த்து நின்றவள், “இல்லைப்பா, இந்த வீட்டை விட்டு நீங்க கூட்டிட்டு போன அம்மாவை நீங்களே இங்கே கூட்டிட்டு வந்து விடனும்னு நினைச்சேன் அவ்வளவு தான்” என்றாள்.
“ம்ச் அவங்க பண்ணதெல்லாம் தெரிஞ்சா நீ இப்படி செய்திருக்க மாட்ட மேகா”
“சரிப்பா, நீங்க செய்ததை சொல்லுங்க, நான் செய்தது சரியா தப்பான்னு பார்க்கிறேன்”
“அவங்க என்னை அசிங்கப்படுத்தினாங்கமா, வீட்டோட மாப்பிள்ளையா இருக்கேன்னு குத்தி கட்டினாங்க. அது எனக்கு எவ்வளவு அவமானமா இருந்திருக்கும்னு உனக்கு புரியாது”
“அப்படியே நடந்திருக்கட்டும். தினம் தினம் செய்தாங்களா இல்லை, ஒரு நாள் நடந்ததா” அவள் ஒரு வக்கீல் போல அவரை இடை கேள்வி கேட்டு வைக்க, “ஒரு நாள் தான்” என்றார்.
“தாத்தாவோ பாட்டியோ, இல்லை மாமாவோ அப்படி பேசினாங்களாப்பா,
இல்லை என்று தலையசைத்தார்.
“சரிப்பா அப்படியே அத்தையும் அவங்க அண்ணனும் ஏதோ பேசி இருக்காங்க. ஆனா நாம எல்லாம் மனுஷங்க தானே, ஏதோ ஒரு நாள் நம்ம நிலை தவறி பேசறது இயல்பு தானே. அதுக்காக ரெண்டு நாள் பேசாம இருந்திருக்கலாம். இல்லை அப்போவே நீங்களும் பதிலுக்கு பேசி இருக்கலாம். ஆனா யாரோ பண்ண தப்புக்கு எந்த தப்பும் செய்யாத அம்மாவை இத்தனை நாளும் அவமானப்படுத்தி, தனிமைபடுத்தி, அவங்க அம்மா இறப்புக்கு கூட வர விடாம செய்திருக்கீங்களே அப்போ நீங்க யாருப்பா. ஒருத்தர் என்னைக்கோ தன்னுடைய நிலையிலே இருந்து தவறலாம். ஆனா ஒருத்தர் ஒரே நிலையிலே தொடர்ந்து இருந்தா அது தானே அவரோட குணமா இருக்கும். அப்போ அவ்வளவு குரூர மனம் கொண்டவராப்பா நீங்க. இவ்வளவு நாளும் எங்க கிட்டே ஒரு முகமும் அம்மாகிட்டே ஒரு முகமும் காட்டி இருக்கீங்களே சொல்லுங்கப்பா நீங்க யாரு” என்றாள்.
“மேகா என்னோட வலி வேதனை உனக்கு தெரியாதும்மா”
“நான் கூட ஒரு பொண்ணா இருந்தும் இவ்வளவு நாளும் அம்மாவோட கஷ்டங்களை புரிஞ்சுக்காம தான்பா இருந்திருக்கேன். அவங்க வலியும் வேதனையும் இப்போ தான் பா எனக்கு புரியுது. அப்படியே உங்களுக்கு அம்மா வீட்டு ஆளுங்களை பிடிக்கலைன்னா கூட நீங்க அம்மாவை சந்தோஷமா வச்சிருக்கலாமேப்பா. உங்களுக்கு அம்மாவை பிடிக்காதாப்பா” என்று அவள் கேட்டதும் விலுக்கென நிமிர்ந்தார் சுகுமார், “ஆனா அம்மாவுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்பா. முதல்ல நீங்க வீட்டோட மாப்பிள்ளையா வர மாட்டேன்னு சொன்னப்ப, எல்லாருமே இந்த சம்மந்தம் வேண்டாம்னு முடிவு பண்ணிருக்காங்க. ஆனா அம்மா உங்களை விரும்புறது தெரிஞ்சு தான் மாமா திரும்பவும் உங்ககிட்டே பேச வந்திருக்காங்க, அதுக்குள்ள நீங்களே கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்கீங்க. உங்களை விரும்பி கல்யாணம் செய்துகிட்ட அம்மாவுக்கு நீங்க தந்தது என்னப்பா, அவமானமும், அடக்குமுறையும், ஆணாதிக்கமும் தானே. ஆனா அம்மா இதுவரைக்கும் உங்களை எங்கேயாவது, யார்க்கிட்டயாவது விட்டு கொடுத்து இருக்காங்களா. அவ்வளவு ஏன் எங்ககிட்டே கூட உங்களை பத்தி தப்பா எதுவுமே சொன்னதில்லைப்பா” என்றாள்.
அவர் அமைதியாக நிற்க “இப்போ ஏன்பா இவ்வளவு அவசரமா என்னை தேடி வந்தீங்க”
“என்னம்மா இப்படி கேட்டுட்ட, நீ என்னோட பொண்ணும்மா” என்றார் சுகுமார் வேகமாக.
“அம்மாவும் இன்னொருத்தங்களுக்கு மக தான்பா, உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டதால உங்களுக்கு அடிமைன்னு ஆகாது. அம்மா இவ்வளவு நாளும் உங்க பேச்சை மீறி இந்த வீட்டுக்கு வர முடியாம இல்லை. ஆனா அவங்களுக்கும் அவங்க பொண்ணு, என் மேலே இருந்த பாசம், என் மேலே நீங்க வலுக்கட்டாயமா செய்ய வச்ச சத்தியம், அதை மீறினா தன்னோட பிள்ளைக்கு ஏதாவது ஆகிடுமோன்ற பயம் அதனால தான். செய்யாத சத்தியத்திற்கு, என் மேலே வச்ச பாசத்திற்கு அம்மா மதிப்பு கொடுத்து இருந்திருக்காங்க. ஆனா நீங்க என்னை வச்சே அம்மாவை மிரட்டி பணிய வச்சிருக்கீங்க. இதுல இருந்தே தெரியுது யாருக்கு என் மேலே உண்மையான பாசம் இருக்குன்னு”
“மேகா, அப்பாவுக்கு உன் மேலே பாசம் இல்லைன்னா நினைக்கிற”
“இருக்குப்பா, அதை நானும் மறுக்கலை அதனால தானே இவ்வளவு தூரம் ஓடி வந்திருக்கீங்க. இதுவரைக்கும் வராத வீட்டுக்கு என்னை தேடி வந்திருக்கீங்க. ஆனா நாம ஒருத்தர் மேலே வச்ச பாசத்தை வச்சே அதை இன்னொருத்தருக்கு எதிரா திருப்பினா அது எப்படிப்பா. அது தப்பு இல்லையா” என்று கேட்டாள்.
சுகுமார் அமைதியாக இருந்தார், அவருக்கு ஏதோ புரிவது போல இருந்தது. ஆனாலும் உடனே தன்னுடைய தவறை ஒத்துகொள்ள அவருடைய சுயமரியாதையும் பிடிவாத குணமும் ஒப்பு வரவில்லை. சிலருக்கு சுயமரியாதைக்கும் வெட்டி வீராப்புக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. எல்லாமே ஈகோ என்ற போர்வையில் தன்னுடலை போர்த்தி இருக்கும் அகம்பாவம் என்பதும் புரிவதில்லை. அது புரிந்து விட்டால் பிறகு எல்லாமே சரியாகி விடும்.
தந்தையை நிற்க வைத்து கேள்வி கேட்பதில் மேகவிக்கும் விருப்பம் இல்லை தான். ஆனால் கேட்க வேண்டிய நேரத்தில் கேட்டு விட வேண்டும். போனால் போகிறது என்று பொறுத்து போவதினால் எல்லா கேள்விகளுக்கும் விடைகள் கிடைப்பது அரிதாகி விடுகிறது. தந்தையும் மகளும் மட்டுமே அங்கே நின்றிருக்க, “உங்க அப்பாவை உள்ளே கூட்டிட்டு வா மேகவி” என்று குரல் கொடுத்தான் வீரபத்ரன்.
“உள்ளே வாங்கப்பா” என்றாள்.
அவர் மறுப்பாக தலையசைத்தார், அவரை பற்றி அவளுக்கும் தெரியும் தானே. உடனே எல்லாவற்றையும் தூக்கி ஓரம் வைத்து விட்டு இறங்கி போவது எல்லாம் சுகுமாருக்கு எளிதான காரியம் கிடையாது.
தந்தையின் அருகில் வந்தவள், “அப்பா ரெண்டு நாள்ல எனக்கு கல்யாணம்” என்றாள்.
தந்தை கேள்வியாக அவளை பார்க்கவும், “எனக்கு பிடிச்சு தான்பா இந்த கல்யாணம் நடக்க போகுது. நம்ம குடும்பம் ஒண்ணா சேரணும்னு வீரா நினைச்சிருக்காரு, அதனால தான் இந்த என்னை ஏமாத்தி கல்யாணம் செய்ததா சொல்லி இங்கே கூட்டிட்டு வந்திருக்காரு. முதல்ல நான் கூட வீரா உட்பட எல்லாரையும் தப்பா தான் நினைச்சுட்டு இருந்தேன். அதனால சில தவறுகளையும் செய்தேன். ஆனா எனக்கு என்னோட மனசை புரிஞ்சுக்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சுதுப்பா, என்னோட மனசுல யார் இருக்கான்னு தெரிஞ்சுகிட்டேன். அதனால மனசார வீராவை நம்ம குடும்பம் எல்லார் முன்னாடியும் கல்யாணம் செய்துக்க நினைக்கிறேன். அதுக்கு நீங்க அம்மா தம்பி எல்லாரும் இருக்கணும்னு நினைச்சதால தான் உங்களை இங்கே வர வச்சேன். இது என்னோட சுயநலத்துக்காகவும் தான்பா” என்றாள்.
அவர் அமைதியாக இருக்கவும், “உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா சொல்லுங்கப்பா நானும் உங்க கூடவே வரேன். அம்மாவுக்காக இவ்வளவு செய்தவ உங்களுக்கா இதை செய்ய மாட்டேனா” என்றாள்.
சுகுமாருக்கு கண்கள் கலங்கி போனது, மகளின் தலையில் தடவி கொடுத்தவர், “என்னால சட்டுன்னு எதுவும் யோசிக்க முடியலைம்மா. உங்க அம்மா விஷயத்துல நான் தப்பு செய்திருக்கேன். இவ்வளவு நாளும் அது புரியாம எது என்னை தடுத்தது தெரியலை. ஆனா என் பிள்ளைகள் விஷயத்திலே நான் சரியா தான் இருந்திருக்கேன். அதை என்னால உறுதியா சொல்ல முடியும். ஆனாலும் எனக்குன்னு இருக்க, சுயமரியாதையை சட்டுன்னு தூக்கி போட்டுட்டு வர என்னால முடியலை. நீ கல்யாணம் பண்ணிக்கோமா, நல்லா இரு” என்றவர் திரும்பி நடந்தார்.
மேகவிக்கு முனுக்கென கண்ணில் நீர் திரண்டு விட்டது, தந்தையையே பார்த்து நின்றாள். “மச்சான் நில்லுங்க” என்ற குரல் அவரை இடையிட்டு நிறுத்தியது. அவர் நின்று திரும்ப, விசுவும், மீனாவும் ஓடி வந்தனர்.
அவரிடம் வந்த விசு, “இன்னும் பழசை எல்லாம் தூக்கி பிடிச்சுக்கிட்டு இருக்கணுமா, எவ்வளவு காலம் தான் வாழ்ந்திட போறோம், இருக்கிற கொஞ்சம் நாளை சொந்த பந்தங்களோட வாழ வேண்டாமா. நமக்கு பிறகு நம்ம பிள்ளைகளுக்கு அவங்க தானே ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்க போறாங்க. எல்லாத்தையும் மறந்துட்டு சேர்ந்து வாழலாமே” என்றார்.
அவர் பேச பேச சுகுமாருக்கு என்னவோ செய்தது, அண்ணா என்னையும் மன்னிச்சிருங்க, தப்பெல்லாம் எங்க மேலே தான்” என்று அவர் கூறும்போதே, “இல்லை இல்லை அதெல்லாம் விடுங்க, யாரும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நானே பல தப்புகள் செய்திருக்கேன், இதுல மன்னிப்பெல்லாம் எதுக்கு. எனக்கு எல்லாத்தையும் ஏத்துக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு. அதனால தான் போறேன். மத்தபடி எதுவும் இல்லை” என்றவர் மகள் பக்கம் திரும்பினார்.
மகளின் கண்ணீர் நிரம்பிய கண்களை பார்த்தவர், எதுவும் சொல்லாமல் சென்று விட்டார்.
போகும் தந்தையையே பார்த்து நின்றாள் மேகவினி.
அவளை அணைத்து ஆறுதலாக உள்ளே அழைத்து கொண்டு சென்றாள் மீனா.