மூனு மூஞ்சிலும் பிரவி கரிய பூசுனது தான் சந்தோஷம் எங்க தேவதாஸ் மட்டும் தான் இதுங்களை பேசி சமாளிப்பாரோ என்று நினைத்தேன் ஆனா பிரவி பதிலடி கொடுத்தது தான் நச்சுன்னு இருந்துச்சு
வீட்டோட மொத்த செலவையும் இவ தலையில் கட்டிட்டு மூனு பேரும் சொகுசா இருந்திருக்கீங்க இதுல அவ இவங்க தயவில் வாழுற மாதிரி அனுசரிச்சு போன்னு எப்பவும் மகேஸ் கூவி கிட்டே இருக்கும்
கல்யாணத்துக்கு புடவை எடுக்காததுக்கு பண கணக்கு பார்த்தவங்க இந்த வீட்டு செலவை ஏன் கணக்கு பார்க்கல
ஆர்த்தி உன் வீடா நல்லா திருப்பி கொடுத்தாளா ப்ரீத்தி என்ன பெரிய அப்பாடக்கரா அவ கையெழுத்து போட்டா சொத்து உனக்கு வந்திடுமா கரெண்ட் பில் வாட்டர் பில் எல்லாம் வேணுமா உன் புருஷனும் நீயும் அவ பணத்துல தெண்ட சோறு தான் திங்குறீங்க என்று இப்போ தெரிஞ்சிடுச்சா
ப்ரீத்தி பிரேம் முகத்தை கூட பார்க்காமல் ஒதுக்கி வச்சது இனி வாழ்க்கை முழுக்க தொடரணும்
பிரவி உன் புருஷனை பத்தி யோசிச்சு யோசிச்சு உன் மகனை விட்டுடுர நீ இப்பவும் பசில அழுற குழந்தைய கவனிக்காமல் உன் கஷ்டத்தை பத்தி தான் நினைக்குற நீயே உன் மகனை மனநோயாளி ஆக்கிடுவ
மத்தவங்களை விட பிரவி தான் தனக்கு புருஷன் இல்லை தான் அடங்கி தான் போகணும் என்கிற எண்ணத்தை அதிகமா வளர்த்துக்கிறா இப்பவும் இந்த ராத்திரியில் இவ்வளவு தூரம் குழந்தைய இழுத்துட்டு வரணுமா
ஒரு வேளை மித்ரன் வரலைன்னா இவ அழுது மனசு தெளிவாகுறதுக்குள்ள பசியிலும் இந்த இருட்டிலும் ஆதிரன் மனநிலை என்னவாகியிருக்கும்
தேவதாஸ் நீங்க கூடவே வந்திருக்கணும் இல்லை பிள்ளையாவது பிடுங்கி வச்சிட்டு நீ மட்டும் போயிட்டு வான்னு விட்டுருக்கணும்
பிரேம், பிரீத்தி, ஆர்த்தி இவங்களை விட்டுட்டு தூரமா ஒதுங்கி போ பிரவி. என்ன ஜென்மங்களோ? மொத்த வீட்டு செலவையும் இவ தலையில் கட்டிட்டு அப்பா பென்ஷன் காசை சேவ் பண்ணி வச்சாரா? கொடுமை. அந்த குழந்தை முகத்தை பார்த்தாவது மகள் பெயரில் பணம் போட்டு வைத்திருக்கலாமே. அப்பா அம்மா சரியில்லை. அடுத்து தானே கூட பெறந்தவங்க. எல்லாரும் வேஸ்ட். சுயநலம் பிடித்த பிசாசுகள். இவ்ளோ நாள் வாய் மூடி இருக்க வேண்டிய அவசியம் என்ன? அவ தான் செலவுக்கு பணம் கொடுத்தா இவங்களும் வாங்கி திம்பாங்களா? கொடுமை. இதுல ஸ்கூல் பீஸ் கட்ட கொடுத்த கடனுக்கு சேலை கூட வாங்கி தரல. இவங்களே பொண்ணை தள்ளி நிப்பாட்டி வச்சா. வந்தவ எப்படி மரியாதை கொடுப்பா?
இன்னைக்காவது வாய் திறந்து பேசுனியே. சந்தோசம் பிரவி. எப்பவும் உன் இடத்தில் நின்றே யோசிக்கிற. அத்து குட்டியை மறந்துட்டு சுடுகாட்டுக்கு தூக்கி போகலாமா? அப்பான்னு பிள்ளைக்கு தெரியுமா? பயம், பசி, அழுகைனு அவனை ரொம்ப வாட்டி வதைக்குற. மித்து ரெண்டு பேரையும் கையோடு உன் வீட்டுக்கு கூட்டி போப்பா. புண்ணியமா போகும்.
மித்ரன் கூட இளங்கோ ஆத்மா அவளை சேர்த்து வைக்கட்டும். அழுது முடிச்சிட்டு யோசித்தால் எல்லாம் மனம் உணரும். கஷ்டம் மறந்து இனியேனும் வாழட்டும்.
எமோஷனல் அப்டேட் என்ன ஜென்மங்க இதுங்க எல்லாம் ஆர்த்தி எல்லாம் புருஷன் குடுக்குற தைரியம் பிரவீ அழுது முடிச்சு தெளிவா முடிவெடு.... இவங்களுக்கு மத்தியில குழந்தை நிலை தான் ரொம்ப மோசம்....
ஏதோ மித்ரன் பிரவீனா வாழ்க்கையில் நுழைய ஆசைப்படும் நேரம், அவளோட அம்மா-அப்பா அவளுக்காக பேசி இருக்காங்க. இல்லைனா இப்பவும் அந்த மகேஸ்வரி பிரவீனாவை தான் அடக்கி இருப்பாங்க.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.