Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா! -13

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -13

துக்கத்துக்கு வந்திருந்த சொந்தங்கள் எல்லாம் காரியம் முடிந்த கையோடு அழுது ஓய்ந்த முகங்களை சுமந்து கொண்டு கிளம்பினார்கள்.

துபாயிலிருந்து உயிரற்ற மதுபாலாவோடு வந்த ஹேமந்த் குமாரை யாரும் எந்த கேள்வியும் கேட்கவில்லை. மாறாக அவனுக்காக அனுதாபப்பட்டார்கள்.

" எவ்வளவு நல்ல வாழ்க்கை. இதை விட்டுட்டு போயிட்டாளே.."

" புள்ளையே தங்கலையாம்.. அந்த சோகம் தான்.."

" பழைய நெனப்போட வாழ முடியாம போயிட்டா போல.."

என்ற வார்த்தைகள் தான் அதிகம் பேசப்பட்டது. துபாயிலேயே எல்லா பரிசோதனைகளும் செய்யப்பட்டதாம். இறந்து அன்றோடு ஐந்து நாள் என்று கொண்டு வந்த வேகத்திலேயே அவளை சுடுகாட்டுக்கு இட்டுச்சென்றார்கள்.

மித்ராவுக்கு தெரியும் அந்த உடம்பில் தழும்புகள் இருக்கும் என்று. 'இன்னும் என்ன என்ன கொடுமைகளை அனுபவித்தாளோ.. எனக்கு லெட்டர் எழுதினதுக்கு யார்கிட்ட சரி உதவி கேட்டிருக்கலாமே மது.. அவ எப்படி கேட்பா.. வாயில்லா பூச்சி அது. எவ்வளவு தூரம் மனது வேதனை பட்டு இருந்தால் உயிரை மாய்த்து கொள்ள துணிந்திருப்பாள்..' என்று மித்ரா துக்கத்தோடே எண்ணிக்கொண்டு இருந்தாள்.

எல்லாமும் அவசர அவசரமாக நடந்தது. எதற்குமே அவகாசம் தராமல் அவன் அவசரப்படுத்தியதில் இருந்தே தெரிந்திருக்க வேண்டாமா?ஆனால் இருந்த துக்கத்தில் அதை யாரும் கண்டுகொள்ளவேயில்லை. காரியங்கள் நடந்து எல்லாம் ஓய்ந்தது. அவளைக் கொண்டு சென்றார்கள்.

ஒரு வாரம். மதுபாலா ஃப்ரேம் போட்ட படத்தில் அடைப்பட்டு சிரித்துக்கொண்டு இருந்தாள். அங்கும் அடைப்பட்டு தான் இருந்தாள். ஆனால் சிரித்துக்கொண்டு இருந்தாள். அது ஒன்று தான் வித்தியாசம்.

வீடே ஸ்தம்பித்துப் போனது. யாருடைய முகத்திலும் சிரிப்பு என்பதே காணாமல் போனது. தன்னால் தான் மகளுக்கு இந்த நிலைமை என்று ஐராவதம் உடைந்து போனார். மதுபாலாவை அவசரப்படுத்தி அந்த கல்யாணத்தை நடத்தியது தவறென்று அப்போது உணர்ந்தார். ஆனால் மன்னிப்பு கேட்க அவள் உயிரோடு இல்லையே. பாமாவோ மகளோடு இன்னும் கொஞ்சம் நெருக்கமாக பழகியிருக்கலாமோ என்று வருத்தப்பட்டார். அவரால் என்ன செய்ய முடியும். அவரே ஒரு கிணற்றுத்தவளை. வருண் ஏழாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தான். அக்காவின் ஞாபகம் வரும் போதெல்லாம் மித்ராவின் மடியில் சுருண்டு கொள்ள ஆரம்பித்தான். மித்ராவுக்குள் மட்டும் பல கேள்விகள்.

மதுபாலா கடைசியாக எழுதிய கடிதத்தோடு போலீஸ் நிலையம் சென்றால் என்ன? என்று யோசித்தாள். மதுபாலா இருந்ததோ துபாயில். அங்கு என்ன நடந்தது என்று சரியாக தெரியாது. எதற்கும் ஆதாரம் இல்லை. இந்த கடிதத்தை தவிர. இது கேஸ் என்றே எடுத்துக்கொள்ள மாட்டார்கள். துரத்தியடிப்பார்கள். இந்த மாதிரி பெண்களை துஷ்பிரயோகம் செய்யும் ஆண்களை பழி வாங்கும் படலங்களெல்லாம் சினிமாவில் மட்டும் தான் நடக்கும். அங்கு மட்டும் தான் நிஜ ஹீரோக்களும் நிஜ ஹீரோயின்களும் வந்து போவார்கள். தனக்கு ஏன் அந்த ஹீரோயிசம் இல்லை என்று யோசித்தாள். தன் படிப்பு இன்னும் முழுமை பெறவில்லை. தன்னிடம் படிப்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம். தனித்து நிற்கலாம். வீறு நடை போடலாம். தன்னுடைய பேச்சு எடுபடும் என்று நம்பினாள். அதனால் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினாள்.

அப்படியே கொஞ்ச நாளில் எல்லோரும் மதுபாலாவை மறந்தே போனார்கள். மித்ராவால் மட்டும் அது முடியவில்லை. அவள் மதுபாலா இறப்புக்கு கொடுத்த விலை தான் ஐராவதத்துடனான தொடர்பை முற்றிலும் முறித்தது. ஆம். அன்றிலிருந்து சரியாக இரண்டு வாரத்தில் மதுபாலா பற்றிய பேச்சு எழுந்த போது மொத்தத்தையும் கொட்டி விட்டாள் மித்ரா.

" மித்ரா.. அப்பாகிட்ட பேசுற.. பார்த்து பேசு.." பாமா உள்ளே புகுந்தார்.

" இனி என்ன பேச வேண்டி இருக்கு.. அவளை கொன்னதே நீங்கதான்.. உங்களால் தான் அவ வாழ்க்கையே போச்சு.. நிம்மதியா இருந்திருப்பா.. அவசர அவசரமாக விசாரிக்காம ஒருத்தன் தலையில் கட்டிவச்சி அவ வாழ்க்கையையே நாசம் பண்ணிட்டிங்க.."

" மாப்பிள்ளையை பற்றி குறை சொல்லாதே மித்ரா.." ஐராவதம் எகிறினார்.

" மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை. மண்ணாங்கட்டி. அவன் முதல் நாளே அவகிட்ட என்ன கேள்வி கேட்டான் தெரியுமா? ச்சீ.. சொல்லவே நா கூசுது. அவ எத்தனை வேதனையை அனுபவிச்சாளோ.. என்கிட்ட கூட சொல்லாம மறைச்சிட்டா.. எவ்வளவு விரக்தி இருந்திருந்தா என்கிட்ட கூட எதுவுமே சொல்லாம மறைச்சி வேதனை பட்டிருப்பா.. யாருக்காக இவ்வளவும் செஞ்சா.. உங்களுக்காக தான். புடிச்சவன் கைவிட்டுட்டான். அப்பா நமக்கு தவறான வாழ்க்கையை அமைச்சு தர மாட்டானு நம்பினா. அதுக்கு அவள் தந்த விலை.. அவள் உயிர்.."

அவள் ஒவ்வொன்றும் பேச பேச ஐராவதம் இடிந்து போக ஆரம்பித்தார். அவள் சொல்வதிலும் உண்மை இருக்கத்தானே செய்கிறது. கிளியை வளர்த்து குரங்கு கையில் கொடுத்த கதையாய் அல்லவா ஆகிவிட்டது.

இப்படிதான் பெண்ணை பெற்று பொத்தி பொத்தி வளர்த்து சரிவர விசாரிக்காமல் மாப்பிள்ளை வசதியாக புகழோடு இருந்தால் போதும் என்ற நினைப்பில் பல பெண்களை கட்டிக்கொடுத்துவிடுகிறார்கள். அங்கு அந்த பெண்கள் படும் கஷ்டத்துக்கு அளவே இருக்காது. அவளோ பிறந்த வீட்டுக்கு மேலும் சுமையை தர விரும்பாது ஒவ்வொன்றாக மறைத்து மறைத்து கடைசியில் ஒருநாள் போயே சேர்ந்து விடுவாள். அதனால் தான் பல கேஸ் வெடிப்பு சம்பவங்களும், மண்ணெண்ணெய் கேன் வெடித்து தீப்பற்றிய மரணங்களும், புடவையில் தொங்கிய தற்கொலைகளும் விபத்துக்களாகவே முடிந்தும் போகின்றன. அவை பேசும் பொருளாகவே இருந்ததில்லை. அது வெறும் செய்தி. பத்திரிக்கையில் ஆறாம் பக்கத்தின் ஓரத்தில் வரும் ஒரு சாதாரண செய்தி. அவ்வளவே. இதற்கெல்லாம் எந்த நூற்றாண்டில் விடிவு வரப்போகிறது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

சங்கமித்ரா அன்று கடைசியாக ஒன்று சொன்னாள்.

" மதுவோட வாழ்க்கையை சிதைச்ச மாதிரி என் வாழ்க்கையை யாரும் சிதைக்க விடமாட்டேன். என் வாழ்க்கை என் கையில் தான் இருக்கு. அதுக்குள்ள யாரும் தலையிட கூடாது.." என்று காரமாக சொல்லிவிட்டு அறைக்குள் புகுந்து குலுங்கி குலுங்கி அழத்தொடங்கினாள். அவளை தேற்ற யாரும் இருக்கவில்லை. அன்று முதல் அவளுக்கு அவளே துணையானாள்.

அன்று தொட்டு அவள் தந்தையோடு பேசவேயில்லை. தாயோடும் பேசாமல் இருக்க அவளால் முடியவில்லை. அதனால் பேசினாள். ஆனால் அளவாக பேசிப் பழகினாள். அவளுக்குள் ஒரு சோகம் எப்போதும் அப்பிக்கிடந்தது. அப்படிப்பட்டவள் படிப்பு முடிந்து வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும் சுயமாக வாழ தொடங்கினாள். எதற்கும் தந்தையை எதிர்பார்க்காமல் தன் செலவுகளை தானே பார்க்க ஆரம்பித்தாள். அதற்காக குடும்பத்தை கண்டு கொள்ளாமல் இல்லை. தன்னுடைய செலவு, சேமிப்பு போக ஒரு பெரும் தொகையை பாமாவின் கையில் எடுத்து வைப்பதே அவளது முதல் வேலையாக இருந்தது. மொத்தத்தில் அவள் அவளாக வாழ ஆரம்பித்தாள். ஆனால் ஆண்கள் என்றாலே ஏமாற்று பேர்வழி, வன்மம் பிடித்தவர்கள் என்ற எண்ணம் அவளது ஆள் மனதில் பதிந்து போனது. அதனாலேயே ஆண்கள் என்றாலே எரிந்து விழுந்தாள். அப்படிப்பட்டவள் எப்படி நவிலனிடன் நெருங்கி பழக ஆரம்பித்தாள்..? நினைக்கும் போது அவளுக்கே ஆச்சர்யமாகத்தான் இருந்தது. அவன் சராசரி ஆண்களில் இருந்து மாறுபட்டவனாய் இருந்தான். எடுத்ததும் வழியவில்லை. நட்பு பாராட்டினான். மரியாதை கொடுத்தான். அவளை பாதுகாத்தான். அவனது குடும்பத்தாரிடம் இட்டுச் சென்றான். ஆனாலும் காதலை சொல்லிவிட்டான்.

' ச்சே.. எல்லா ஆண்களும் ஒரே மாதிரி தான் போல..' என்று எண்ணியவளுக்கு தானும் அவனை விரும்புகிறோம் என்று மட்டும் புரியவேயில்லை.

நவிலனை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற நினைப்பிலேயே அவள் உறங்க, அங்கு அவனோ அவனது அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு அவளிடம் காதலை சொல்லிவிட்டது பற்றி ஒப்பித்துக்கொண்டு இருந்தான். கூடவே அவளது கதையையும்.

" என்னது..? அதுக்குள்ள காதலிக்கிறேனு சொல்லிட்டியா..?" ரோகிணி அதிர்ந்தார்.

" ஏம்மா..? நான் பண்ணினது தப்பா..?" பதில் கேள்வி கேட்டான் நவிலன்.

" இல்ல கண்ணா.. அவளைப் பற்றி இன்னும் கொஞ்சம் புரிஞ்சிக்கிட்டதுக்கு பிறகு சொல்லியிருக்கலாம்.. அவளுக்கு உன்னை பிடிச்சிருக்கோ என்னமோ..."

" என்னம்மா.. இப்படி குண்டை தூக்கிப் போடுறிங்க.. அவளுக்கு என்னைப் பிடிக்குமா..?"

" என்னைக்கேட்டா..? " தாய் கையை விரித்தார்.

" அவளுக்கு என்னைப் பிடிக்கும்..!" என்று உறுதிபட சொன்னான்.

" எப்படிடா..?"

" அவ கண்ணு பொய் பேசாதும்மா.. அவ கண்ல காதல் இருக்கு. என்ன ஏடாகூடமாக தத்துவம் பேசிக்கிட்டு எனக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்ல நவிலன்னு சொல்லிக்கிட்டு திரிவா.."

" பாவம் டா அவ.. அவ மனசு படுற பாடு உனக்கு புரியுது தானே.."

" புரியுதும்மா.. அவளை நான் கட்டாயப்படுத்த மாட்டேன்.. பயப்படாதிங்க.. நான் உங்க பையன். எப்பவும் தப்பா நடந்துக்க மாட்டேன்.." என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றான் நவிலன்.

மகனது காதல் நிறைவேறுமா என்ற கலக்கத்துடன் அவனையே பார்த்த ரோகிணி தன் இரு கைகளையும் உயர்த்தி ' முருகா! நீதான் என் பையனுக்கு அவனோட வாழ்க்கை கிடைக்க உதவனும்..' என்று வேண்டிக்கொண்டார்.

நவிலனுக்கு உறக்கமே வரவில்லை. மித்ராவோடு பேசினால் மட்டுமே அவளை ஒரு தெளிவுபடுத்த முடியும் என்று நவிலன் நம்பினான். ஆனால் அவள் தான் ஆ.. ஊ.. என்று தொட்டதிற்கெல்லாம் குதிப்பாளே. ஆனாலும் அவன் அவனது முயற்சியை கைவிடப்போவதில்லை என்று முடிவு செய்து கொண்டான். மித்ராவை எங்கு மடக்கலாம் என்று யோசித்தவனுக்கு அந்த ஐடியா கிடைத்தது.

'ஏய் ஜான்சி ராணி..! காத்திரு.. நாளை வருகிறேன்..' என்று சபதம் செய்து விட்டு கவிதையோடு தூங்கிப்போனான்.

'உன்னைப் பார்க்கும் முன்
எப்படித்தான் இருந்தேனோ
தெரியவில்லை...
உன்னை காதலிக்காமல்..!'

அன்று அலுவலகத்தில் ஏகப்பட்ட வேலை. மித்ராவுக்கு மதிய நேர சாப்பாட்டை கூட எடுத்து சாப்பிட நேரம் இருக்கவில்லை. தலை வலித்தது. மணி ஆறாகப் போகிறது. மிச்சத்தை நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று மூட்டை கட்டி விட்டு வெளியே வந்து ஒரு ஆட்டோவில் ஏறினாள்.

ஏனோ அவளுக்கு நவிலன் ஞாபகமே வந்து போனது. பைக்கில் அந்தப் பெண் அவளது காதலனை இறுக கட்டிப்பிடித்து கொண்டு போகையில் அவன் ஞாபகம் வந்தது. க்ராஸ்ஸிங்கில் அந்தப் பையன் அவன் லவ்வரை லவ்விக்கொண்டு கடக்கையில் அவன் ஞாபகம் வந்தது. ரோட்டோரமாய் நின்று ஐஸ்கிரீம் சுவைத்துக்கொண்டு இருந்த ஜோடிகளை பார்த்த போது அவன் ஞாபகம் வந்தது. அந்த உயர்ந்த ரக கார் அருகில் வந்து நின்ற போது அந்த இருக்கையில் இருந்த உயரமானவனைக் கண்டதும் அவன் ஞாபகம் வந்தது.

" கடவுளே...!" என்று வாய் திறந்தே சொன்னாள்.

" கூப்பிட்டிங்களாம்மா..?" ஆட்டோக்காரர் திரும்பி கேட்டார்.

" அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நீங்க போங்க.." என்றவளுக்கு அவன் தனக்குள் வெகு ஆழமாக வேரூன்றிவிட்டான் என்று மட்டும் புரிந்தது. சிரமப்பட்டு அவன் நினைவுகளை ஒதுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வீட்டுக்குள் நுழைந்தால் அங்கு அவன் ஒய்யாரமாக அமர்ந்து காபியோடு பேசிக்கொண்டு இருந்தான்.

அவளுடைய அழகு விழிகள் ஒரு செக்கன் விரிந்து பழைய நிலைக்கு திரும்பின.

இப்போது அவனைக் கண்டு கொள்ளாது உள்ளே போனால் அத்தை மங்களா ஆயிரம் கேள்விகள் கேட்பார். அப்புறம் உண்மையை சொல்ல வேண்டி வரும். பிறகு மங்களாவின் பங்களாவிற்கு விடை கொடுக்க வேண்டி வந்தாலும் வரலாம். காரணம் நவிலனும் மங்களாதேவியும் வருணும் அவ்வளவு அன்னியோன்யமாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.

" ஹேய்.. மித்ரா..! வா.. வா.. இங்க பாரு.. யாரு வந்திருக்கதுனு.." அத்தை வரவேற்றார்.

" வா..வாங்க நவிலன்.." அவளிடமிருந்து சுரத்தேயில்லாமல் வார்த்தை வந்தது.

" ஹாய் மித்ரா!" அவன் முதல் நாள் எதுவுமே நடக்காதது போல பேசினான்.

" அக்கா.. நான் ஸ்கூல் விட்டு வரும்போது நவிண்ணா வந்தாரா.. அத்தை வீட்டுக்கு தான் வாரேனு சொன்னதும் கூட்டிக்கிட்டு வந்துட்டார்.."

'இது எதேச்சையாக நடந்ததா??' என்ற பார்வை அவனைப் பார்த்தாள் மித்ரா.

'ஆம். எதேச்சையாக நடந்தது தான் தேவி..' என்ற ரீதியில் நவிலன் அவளைப் பார்த்தான்.

அவர்களது பார்வை பரிமாற்றத்தை நொடிப்பொழுதில் ஊகித்த மங்களா " நீங்க பேசிக்கிட்டு இருங்க.. நான் மித்ராவுக்கும் காபி போட்டு எடுத்துக்கிட்டு வாரேன்.." என்று எழுந்து சென்று கிச்சனில் இருந்து குரல் கொடுத்தார்.

" வருண்...!"

" இதோ வாரேன் அத்தை..."
அவன் உள்ளே போனதும் அவள் கேட்டாள்.

" எதுக்கு வந்திங்க நவிலன்..?" முகத்தில் அடித்தாற் போல ஒரு கேள்வி.

" ம்.. உன்னை கடத்தத்தான்..." அவன் சொல்ல அவள் அதிர்ச்சியோடு அவனை பார்த்தாள். அந்த பார்வை அவனுக்கு பிடித்திருந்தது.

' என்னைத் தொலைத்திடவோ
நானுனை காதல் செய்தேன்?
உன் அதிர்ச்சிப் பார்வைகூட
அசர வைக்கிதே தேவி..!'

அவன் ஏதோ ஒரு லோகத்துக்குப் போய்க்கொண்டு இருந்தான்.

ஆட்டம் தொடரும் ❤️?

Nirmala vandhachu ???
 
Nice epi dear.
Mathubala pavam.
Nalla kaalam adutha ponna intha pavam maapillaiku kalyanam katta plan pannathu vittare intha Ayra.
Nallavanae, oru mudivodu than vanthu irruka alla.
Amma vera kadavulkku application pottu irrukuranga,so...
2 wicket out. matraya randu ennamum than konjam kastam parkalaam.
Yedi, unnakku manda odi poi. Nalla yosi prachanai enna nu puriyum.
 
Thank you for your lovely review Leenu ❤️
 
Top