Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் சிறப்பு பதிவு 1

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
கண் விழித்தேன் உன் நினைவில்
-- செசிலி வியாகப்பன்

எப்பிலாக்

சென்னை நகருக்கு நடுவில் அந்த இரண்டு அடுக்கு வெள்ளை மாளிகை பிரம்மாண்மாகவும் கம்பீரத்துடனும் தன் உரிமையாளர்களுக்காக காத்திருந்தது. அந்த மாளிகையின் ஒவ்வொரு மூலையும் பார்த்து பார்த்து ஜித் அண்ட் லி குடுப்பத்திற்கு என்று உருவாக்கப்பட்டது.

"எங்க காலத்துல எல்லாம் எதோ ஒன்னு ரெண்டு தனிக்குடுத்தனம் போவங்க... அதயே நாங்க பாவமா நினப்போ. இப்ப எல்லா யாரு கூட்டு குடும்பமா இருக்கா. கல்யாணம் ஆனா மறுநாளே தனியா போகதான நினைக்குதுக இந்த காலத்து புள்ளைங்க... "
கோவில் ஒரு பெரியவர் பேசிக்கொண்டு இருந்ததை கேட்ட 16 வயது கவிஜித் வீட்டிற்கு வந்ததும்
"ப்பா... ம்மா... கல்யாணம் ஆகிட்ட எல்லாரும் குடும்பத்தை விட்டுட்டு போகிடுவாங்களா? எனக்கு போக வேண்டாம் ப்பா.... எனக்கு என்னுடைய குடும்பத்தை கூடவே தான் எப்பவும் இருக்கணும்." என்று வார்த்தைகளில் தன் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லக் கூடாது என்ற ஏக்கத்தை நிறைத்து கவி பேச கேட்டுக்கொண்டிருந்த அனைவருக்குமே ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை. சூழ்நிலையை கையில் எடுத்துக்கொண்ட விஸ்வஜித்

"அப்படி எல்லாம் நம்ம குடும்பத்துல உள்ளவங்க பிரிஞ்சு போறவங்க கிடையாது. எப்பவுமே நாம எல்லாரும் ஒரே குடும்பம் தான்." என்று மகனை சமாதானப்படுத்த நிலைக்க, அவனோ

"அப்படியெல்லாம் இல்லப்பா.... இன்னைக்கு கோவில்ல ஒரு தாத்தாவை பார்த்தேன். அந்த தாத்தா சொன்னார் 'கல்யாணமாயிட்டா எல்லாரும் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியே போய் விடுவார்களாம்.' கிருபாலி அக்கா கூட இப்போ நம்ம கூட இல்ல தானே. எல்லாருக்கும் கல்யாணம் ஆகிவிட்டதா எல்லாரும் என்னை விட்டுட்டுப் போயிடுவாங்க தானே. எனக்கு தனியா இருக்க முடியாது."

பதினென் வயதின் பாதியில் இருந்த கவிஜித் கும்பத்தை நினைத்து குழந்தையாக மாறி பேச,

"கவி அம்மாவை பாரு...." கவிஜித்தின் முகவாயை பற்றி தன் புறம் திருப்பிய கனலி

"பொறுமையா அம்மா சொல்றதை கேட்கணும்.... கிருபா ஒன்னும் கல்யாணம் ஆனதுனால நம்மள விட்டு பிரிஞ்சு இருக்கல. இப்போ அவ காஞ்சிபுரம் கலெக்டர். கிருபா இங்க இருந்து தினமும் கலெக்டர் ஆபீஸ் போயிட்டு வர்றது கஷ்டம். அதனால அவ காஞ்சிபுரத்துல தங்க வேண்டியதா இருக்கு.
உன் அத்தான் சென்னை கமிஸ்னர். சாே அத்தானுக்கும் அவங்க வீட்டுல இருந்து கமிஷனர் ஆபீஸ் போறதுதான் பக்கம். அதுக்கு தான் அவரும் அவங்க வீட்ல இருந்து போய்கிட்டு இருக்கிறார். ஒருவேளை அவ சென்னை கலெக்டரா இருந்திருந்த.....
சர்வஜித் கமிஷனர் ஆபீஸ் நம்ம வீட்டு பக்கமா இருந்துச்சுன்னா.... நம்ம வீட்ல இருந்து தான் ரெண்டு பேரும் வேலைக்கு போய் இருப்பாங்க. இவங்க மட்டும் இல்ல, நாளைக்கே இந்திரா, அபி, தீபா, ரூபா எல்லோரும் வேலைக்காக வெளியிடங்களுக்கு போக வேண்டிய சூழ்நிலை வந்துச்சுன்னா அங்கு தங்க மாதிரியும் நிலைமை வரும்.

அதுக்காக அவங்க எல்லாரும் நம்முடைய குடும்பம் இல்லன்னும்.... நம்மள விட்டு பிரிஞ்சு போயிட்டாங்கன்னும் அர்த்தம் கிடையாது. அவங்க நம்மை விட்டு தூரமா இருக்கிறாங்களே தவிர நம்மள தவிர்த்துவிட்டு தள்ளி இருக்கல.

எங்க இருந்தாலும் அவங்க எல்லாரும் உன்னையும்.... நம்ம வீட்டையும் நினைக்காமல் இருக்க மாட்டாங்க ." என்று கவிஜித்தை கனலி சமாதானப்படுத்தினாள்.
அன்று கனலி கவிஜித்தை சமாதான படுத்தினாலும் வீட்டின் கடைக்குட்டி இளவரசன் மனதில் விழுந்த சகோதர பாசத்தை இறுதிவரை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் விதை மற்றவர்களின் மனதில் விருட்சமாக வளர ஆரம்பித்தது.

படிப்பு முடிந்து வேலையின் நிமித்தம் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கை பயணத்தை தொடங்க ஆரம்பித்த பொழுது, தங்களை இணைக்கும் பாலமாக பெற்றோருக்குப் பின்பும் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கட்ட ஆரம்பித்ததுதான் இந்த வெள்ளை மாளிகை.

இடம் விஸ்வஜித் பெயரில் இருக்க அதன் மீது கட்டப்பட்ட கட்டிடம் சகோதர சகோதரிகள் உழைப்பின் கிடைத்த வருமானத்திலும், அவர்கள் வாழ்க்கை துனைகளின் பங்களிப்பிலும் உயர்ந்தது. ஒவ்வொருவரும் தங்களுக்கான அறையை அதில் தங்கள் வாழ்க்கை துணையின் குடும்பத்தையும் இணைக்கும் வகையில் உருவாக்கியிருந்தனர்.
வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஒற்றை அரண்மனை போல் காட்சியளித்தாலும் உள்ளே அது பல குடும்பங்கள் வசிக்கும் சிறு கிராமம் போல உருவாக்கியிருந்தனர்.

ஒரே நேரத்தில் 20 கார் வரிசையாக நிற்கும் அளவிற்கு நீண்ட போர்டிகோவிலிருந்து பத்துப் படிகள் மேலே ஏறிச் சென்ற பிறகு பர்மா தேக்கினால் செய்யப்பட்ட அந்த இரட்டைக் கதவு. பார்த்தவுடனே அதன் உறுதியையும் கம்பீரத்தையும் பறைசாற்றும் விதமாக இருந்தது.

ஏறத்தாழ இருநூறு பேர் ஒரே நேரத்தில் இருக்கும் அளவிற்கு மிகப்பெரிய வரவேற்பு அறை.
இரண்டாக பிரிந்து மாடிக்குச் செல்ல வழி அமைத்துத் தரும் படிக்கட்டுகள்.
மின்சாரத்தின் உதவியால் வெளிச்சத்தை பரப்பும் மின்விளக்குகள்.
தரையில் விரிக்கப்படும் கம்பளங்கள் என அனைத்தும் பார்ப்பவர்களை ஒரு நிமிடம் வியந்து நிற்க வைக்கும் விதமாக அந்த அரண்மனையில் இருந்த ஒவ்வொரு பொருட்களும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

தரை தளம் முழுவதும் வரவேற்பு அறை, சமையல் அறை, நூலகம், விருந்தினர் அறை என இருக்க, முதல் தளம் முழுவதும் வீட்டில் உரிமையாளின் குடும்பத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
முதல் தளத்தின் நடுநாயகமாக இருந்த அறை விஸ்வஜித் கனலி தம்பதிகளுக்காகவும், வலதுபுறம் இருந்த அறைகள் ஜித் அணியினருக்கும், இடதுபுறம் இருந்த அறைகள் லி அணியினருக்கும் பார்த்து பார்த்து கட்டப்பட்டு இருந்தது.

அனைத்து அறைகளில் வண்ணங்களும் அதன் அலங்காரப் பொருட்களும் மாறுபட்டாலும் ஏறத்தாள அனைத்து அறைகளும் கட்டமைப்பும் ஒன்று போலிருந்தது அவர்கள் மனது போல..... ஒவ்வொருவரின் அறையும் ஒரு சிறு பங்களா என்று கூறும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருந்தது நுழைந்ததும் மிகப்பெரிய வரவேற்பு அறை அதை ஒட்டினாற்போல அவசர சேவைக்கு தேவைக்கு சமைத்துக் கொள்ள சிறிய சமையலறை அதன் அருகிலேயே டைனிங் டேபிள் என்று இருந்தது அதற்கு எதிர்ப்புறம் அலுவலக அறை அதனை ஒட்டி இரண்டு படுக்கை அறைகளும் இருந்தது ஹாலில் இருந்து மேலே செல்லும் படிக்கட்டு இரண்டாம் தளத்தில் இருக்கும் அறைகளுக்குச் செல்ல அமைக்கப்பட்டிருந்தது.

இரண்டாம் தளம் என்பது முதல் தளத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் அறையின் மாடி அறையே. அதிலும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப ஏற்பவும் அவர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் இரண்டு படுக்கை அறையும், அலுவலக அறை அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த வீட்டை கட்டும் முன்பு ஒவ்வொருவரும் இது சரி வருமா? எந்த அளவுக்கு இது மற்றவர்களுக்கு ஒத்துப்போகும்? என்று பல வகையில் பேசி ஆலோசித்து சென்ற வருடம் தான் இதை கட்டி முடித்தனர்.

கட்டி முடித்ததும் தங்கள் பெற்றோரையும் தங்களுடன் அழைத்துக் கொண்டு இந்த வீட்டில் குடியேறி விட்டனர். சொந்த காரணங்களுக்காக வெளியூர் செல்லும் சமயங்களை தவிர மற்ற நேரம் அடைத்தும் அனைத்தும் அனைவருக்கும் இந்த கூட்டு குடும்ப வாழ்க்கையே பிடித்துப் போனது. வயதான காலத்தில் ஏதாவது ஒரு மூலையில் தனியாக இருப்பதற்குப் பதிலாக இப்படி தங்களுக்குள் ஒற்றுமையாகவும் ஒரு மனதாக வாழ்வது மூத்த தலைமுறையினருக்கும் சந்தோஷமாகவே இருந்தது.

"டென்ஷன் ஆக்குற.....
காலையில இருந்து மூஞ்சை தூக்கி வச்சுக்கிட்டு உட்கார்ந்திருந்தா... எப்படியோ கிடைச்ச கேப்புல அவளை சமாதான படுத்தி வச்சிருந்தேன். இப்போ இந்த அண்ணிகளும், அக்காங்களும் சேர்ந்து அவகிட்ட என்ன பத்தி என்ன எல்லாம் சொல்ல போறாங்களோ..! இவளும் அதை கேட்டுட்டு வந்து எப்படி நடந்துக்க போறாளோ..! கவி குட்டி இன்னைக்கு உனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்த மாதிரி தான்."

கவிஜித் வீட்டின் கடைக்குட்டி என்பதால் அனைவருக்குமே அவன் செல்லப்பிள்ளை. அதனாலோ என்னவோ அவனிடம் குறும்புத்தனம் அதிகமாகவே இருக்கும். அவன் தன் குறும்பு தனத்தால் தன் அண்ணன்கள் அக்காக்கள் வாழ்விலும் சேட்டைகள் செய்து வைத்திருக்க, இன்று அதன் விளைவு எப்படி இருக்குமோ என்று பயப்பட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டான்.

நேரம் சென்று கொண்டிருந்ததே தவிர கீதாஞ்சலி வருவதற்கான அறிகுறிகள் இல்லாததால் கவி தன் பொறுமையை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்தான்.

"என்ன போலீஸ்கார்.....
வீட்டுக்குள்ளேயே வாக்கிங் போயிட்டு இருக்கீங்க. இப்படி நீங்க நடு ஹால்ல வாக்கிங் போறதுக்கு பதிலா ரோட்டில இறங்கி நடந்தா இந்நேரம் நீங்க மதுரைக்கு போய் சேர்ந்து இருப்பீங்க." என்று இந்திரஜித் தன் மூத்த தங்கையின் கணவரை வம்பிழுக்க, அவனை முறைத்துப் பார்த்த சர்வஜித்

"நீ எல்லாம் நக்கல் பண்ற அளவுக்கு என்னுடைய நிலைமை இருக்குது பாரு.... என்னைக்கு உங்க குடும்பத்துல வால்லென்டரியா வந்து வாக்கப்பட்டேனோ அன்னையிலிருந்து எல்லாரும் என்ன கலைச்சுட்டு போறீங்க. உங்களுக்கு கலாய்க்கணும் போல எண்ணம் வந்துச்சுன்னா இதோ இருக்காங்களே இந்த வீட்டு ரெட்டைவால் ரெட்டை ரோஜாவ கல்யாணம் பண்ணின பெரிய மனுஷங்க... இவர்களை கலாய்க்க வேண்டியதுதானே. இவங்க எல்லாம் உங்க கண்ணுக்கு தெரிய மாட்டாங்களே. எப்பவும் நான் மட்டும்தான் உங்களுக்கு தெரிவேனோ..?" என்று சர்வஜித் என்று சோபாவில் அமர்ந்து தங்களுக்குள் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த தீபா ரூபா இருவரின் கணவன்மார்களை கைகாட்ட, மகேந்திராஜித்

"காவக்காரரே உங்கள ஒருத்தர் கலாய்ச்சா பதிலுக்கு நீங்க கலாய்க்கலாமே தவிர, கம்முனு உட்கார்ந்து கதை பேசிக்கிட்டு இருக்கவங்க காதை கடிக்க கூடாது.... என்ன நான் சொல்றது? என்று துணைக்கு சுஜித்தை அழைக்க

"ஆமா சகலை... நீங்க எதுக்கு எங்கள தேவையில்லாம உங்க பிரச்சினைக்குள்ள எங்கள இழுக்கிறீங்க. மாமன் மச்சான் சண்டைய நீங்க போய் தனியா பேசி தீர்த்துக்கோங்க." என்று சுஜித் கூறி முடிக்கும் முன்பு அங்கு வந்து சேர்ந்த அபராஜித்

"அவங்க ரெண்டு பேரும் மாமன் மச்சான் ஓகே... அப்படின்ன நீங்க ரெண்டு பேரும் யாரு? இது சரி இல்லையே! இதப்பத்தி தீபா ரூபா ரெண்டு பேர் கிட்டயும் உடனே பேசிடனும்." என்று கூறிக்கொண்டே தீபா ரூபாய் இருவரையும் தேடுவது போல் பாவனை காட்ட, வேகமாக வந்து அவனது கையைப் பற்றிய சுஜித்

"ஏன்டா? ஏன்? உனக்கு ஏன் என்மேல இந்த கொலை வெறி? சும்மாவே உன் தங்கச்சி என் தலை மேல ஏறி நின்னு ஆடிக்கிட்டு இருக்கிற... இதுல நீ போயி இத சொன்னா அவ்வளவுதான்,
எங்க அண்ணே உங்களுக்கு யாரு? அவர் கிட்ட நீங்க எப்படி அப்படி பேசலாம்? அப்படின்னு ஆரம்பிச்சு விடிய விடிய நான் ஸ்டாப்பா எனக்கு வேப்பிலை அடிக்க ஆரம்பிச்சுடுவா. அப்புறம் எனக்கு ட்ரீட்மென்ட் பண்றதுக்கு வேற ஒரு டாக்டரை தேடி நீங்க அலைய வேண்டிய நிலைமா வந்துடும். அதுக்கு முன்ன நானே உங்ககிட்ட மன்னிப்பு கேட்கிறேன். நான் பேசுனது தப்புதான்.
நாமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு....
ஒரே தோட்டத்து மர கண்ணு...
நீ பேசாம இங்க வந்து நின்னு...." என்று மருத்துவர் தன் அடுக்குமொழி வசனத்தை எடுத்துவிட, அபியின் இன்னொருபுறம் வந்து நின்ற மகேந்திரன்

"கிரிமினல் லாயர் மேடம் வேப்பிலை அடிக்கிறதோட நிறுத்தி விடுவாங்க. ஆனால் என் ஜிஎம் மேடம் என்ன கம்பெனி போஸ்டிங்ல இருந்து மட்டுமில்லம கணவன் என்கிற போஸ்டிங்ல இருந்தும் துரத்திவிட்டுவா. அப்புறம் நான் எங்க போவேன்? எனக்கு யார் இருக்கா?" என்று தன் கண்ணில் இருந்து வராத கண்ணீரை துடைத்தபடி கூற,அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்

"டேய் அண்ணாஸ் அண்ட் அத்தான்ஸ்" என்ற குரலில் அனைவரும் திரும்பிப் பார்க்க, கோபமாக நின்றுகொண்டிருந்தாள் கவிஜித்.

"டேய் புது மாப்பிள்ளை...
நீ எதுக்கு இங்க வந்து நிக்கிற. இன்னைக்கு உனக்கு ஃபர்ஸ்ட் நைட் டா." என்று அவனையும் இந்திரா கலாய்க்க,

"அது எனக்கு நல்லா தெரியும்." என்று வார்த்தைகளை பற்களுக்கு இடையில் கடித்து துப்ப,

"அப்புறம் எதுக்குடா இங்க வந்து நிக்கிற? உனக்கு எதுவும் சந்தேகமா?" என்று சர்வஜித் கேட்க

"அப்படி எதுவும் சந்தேகம் இருந்தால தயங்காம எங்க கிட்ட கேளு." என்று குறும்பு கொப்பளிக்கும் குரலில் சுஜித் கூற

"என்ன இருந்தாலும் கல்யாண வாழ்க்கையில நாங்க எல்லாரும் சீனியர்ஸ் அண்ட் அனுபவசாலிகள். அதனால உனக்கு வர்ற எல்லா சந்தேகத்தையும் தீர்த்து வைக்க நாங்க இருக்கிறோம்." என்று மகேந்திரஜித் கூறி முடிக்க, அனைவரும் ஒன்று போல் தங்கள் வலது கையை இதயத்தின் மீது வைத்து

"நாங்க இருக்கிறோம்.." என்று போஸ் கொடுத்து நிற்க

"எனக்கு வர்ற கோவத்துக்கு நான் என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது. சந்தேகத்தை தீர்த்து வைக்கிறாங்களாம்... நானே இவ்வளவு நேரமா என்னுடைய அஞ்சல வராத கோபத்துல இருக்கிறேன். இதுல இவங்க எல்லாம் சேர்ந்து என்ன கலாய்ச்சிட்டு இருக்கிறாங்க." என்று புலம்ப ஆரம்பித்தான்.

"இதுக்குத்தான் சொல்றது அப்பப்போ கொஞ்சம் பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து அடக்க ஒடுக்கமா இருக்கணும். எங்க வாழ்க்கையில எவ்வளவு நாரதர் வேலை பார்த்து வச்ச. அதுக்கு எல்லாம் சேர்த்து வச்சு இப்போ எங்க பொண்டாட்டிங்க உன்ன சுத்தல்ல விடுறாங்க. என்ன இருந்தாலும் பொண்ணுங்க தான் கிரேட்." என்று சர்வஜித் மேலும் கவியை உசுப்பேற்ற தன் தலையை இரு கைகளால் தாங்கி பிடித்தவனும் ஒற்றை சோபாவில் அமர மற்றவர்களுக்கு அவனின் தோற்றம் கொஞ்சமே கொஞ்சம் அவனின் மீது இரக்கத்தை வரவழைத்தது. தன் தம்பியின் தோள் மீது கையை வைத்த இந்திரஜித்

"மொத இப்படி தலையில் கையை வைச்சுகிட்டு உட்காராம எழுந்திரு. எழுந்திருச்சு உன்னுடைய ரூமுக்கு போ. நாங்க என்னன்னு போய் பார்க்கிறோம்." என்று தன் தம்பியை அவளது அவனது அறைக்கு அனுப்பி வைத்தனர்.
கவி அவனது அறைக்கு அனுப்பி வைத்ததும் தம்தம் மனைவிமார்களை போனில் அழைக்க, சொல்லி வைத்தது போல அனைவருக்கும் கிடைத்தது ஒரே பதில்

"தாங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எண் தற்பொழுது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பின்னர் முயற்சிக்கவும்."

"ஐயோ இவளுக வேற.... நேரம் காலம் தெரியாம சின்ன பையன் கூட சரிக்கு சமமா போட்டி போட்டுக்கிட்டு இருக்கிறாங்க. சத்தமா பேர சொல்லி கூப்பிடவும் முடியாது. கூப்பிட்டா 'என்னங்க இதோ வந்துட்டேன்னு..' சொல்றதுக்கு இது என்ன வீடா? சந்திரமுகி அரண்மனை மாதிரி எவ்வளவு பெருசு தேவையா?" என்று இந்திரஜித் புலம்ப, சுஜித்

"அப்படியே நாம கூப்பிட்டா மட்டும் 'இதோ வந்துட்டேங்க' அப்படின்னு ஓடிவந்து முன்னாடி நின்னுருவாங்கலா." என்று தன் கருத்தை கூற மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.

என்னதான் வீட்டிற்கு வெளியே சீறும் சிங்கங்களாகவும், வெறி கொண்ட வேங்கைகளாகவும், கட்டுக்கு அடங்காத காளைகளாகவும் வலம் வந்தாலும் மனைவிகளிடம் மட்டும் தங்களது ஜம்பம் பலிக்காததை எண்ணி அந்த அப்பாவி கணவன்மார்கள் ஒருவர் மற்றவரை நிலையைபார்த்து தங்களை சமாதானப்படுத்திக் கொண்டனர்.

சத்தம் எழுப்பி பெரியவர்களையும் உறங்கும் குழந்தைகளையும் தொந்தரவு செய்யாமல் ஜித் அணி பிரிந்து ஒவ்வொரு அறையாக தேட ஆரம்பித்தனர். எந்த அறையிலும் பெண்கள் லி அணி இல்லாததை கண்டு ஆச்சரியப்பட்ட அனைவரும்

"எங்க போய் இருப்பாங்க?" என்று யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுதே ஐவர் அணி மொட்டை மாடி படிக்கட்டில் இறங்கி வந்து கொண்டு இருந்தனர்.

"இவ்வளவு நேரம் எங்க போயிருந்தீங்க? கீதாஞ்சலி எங்க? அவன்தான் சின்னப்பையன் ஏதோ தெரியாமல் சேட்டை செஞ்சா.. அவனுக்கு சரியா நீங்களும் இப்படித்தான் விளையாடுவீங்களா? எதுல விளையாடனும் ஒரு வரைமுறை இல்ல." என்று இந்திரஜித் கோபமாக பேச, தன் கணவனின் கோபத்தை கண்டுகொள்ளாத விஷாலி அவன் சட்டைப் பையில் இருந்த போனை எடுத்து கவிஜித்தை அழைத்தாள். அழைப்பு ஏற்கப்பட்ட நொடி விஷாலின் கையிலிருந்து செல்போனை பரித்த மைதிலி

"ஹலோ கொழுந்தனாரே.... உங்க பொண்டாட்டி மொட்டை மாடி ரூஃப் கார்டன் பக்கத்துல பத்திரமா இருக்கிற. போய் பாருங்க." என்று தன் கணவன் அபராஜித் பார்த்துக்கொண்டே பேசி முடித்தாள்.

மைதிலி பேசி முடித்ததும் அவள் கையிலிருந்து செல்போனை வாங்கிய கிருபா அதைத் தன் கணவனின் கையில் வைத்து விட்டு

"சின்ன பையன் கூட சரிக்கு சரி வம்பு வழக்கு எங்களுக்கு தெரியாது .எங்களுக்கும் கொஞ்சம் அறிவு இருக்கு." என்று கோபமாக பேசிவிட்டு படியேறி தங்கள் அறைக்கு செல்ல, அவளைப் பின்பற்றி மற்றவர்களும் தம்தம் அறைக்கு சென்றனர். இறுதியாக சென்ற தீபா தன் கணவனைப் பார்த்து அனல் தெறிக்கும் பார்வை ஒன்றை வீசி விட்டுச் செல்ல

"செத்தடா மகனே இன்னைக்கு." என்று அவன் மனம் அவனை பார்த்து கைகொட்டி சிரித்து கேலி செய்தது.

"இவங்க அஞ்சு பேரும் கவிஜித் கீதாஞ்சலி காக ஏதோ ரொமான்டிக்கா பிளான் பண்ணி இருக்காங்க. அது தெரியாம நாமதான் சொதப்பிட்டோம் போலயே. இன்னைக்கு நமக்கு ட்ராஜடி தான். கடவுளே எங்கள காப்பாத்து." என்று அனைவரும் அவசரமாக கடவுளை நோக்கி ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு, தங்கள் மனைவிகளை எவ்வாறு சமாதானம் செய்வது என்று எண்ணத்தில் அறைக்குள் அடியெடுத்து வைத்தனர்.

சர்வஜித் அறைக்குள் காலடி எடுத்து வைத்த நொடி ஒரு தலையணை ஒன்று பறந்து வந்து அவன் காலடியில் விழுந்தது.

"ஆத்தாடி கலெக்டர் காளி தேவியா மாறிட்டா போல... இனி இன்னைக்கு தூங்குன மாதிரி தான்." என்று புலம்பிக்கொண்டு தலையணையை தூக்கிக் கொண்டு உள்ளே வந்தான்.
தலையணையுடன் உள்ளே வந்த தன் கணவனை முறைத்துப் பார்த்த கிருபாலி

"என்ன பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது? சீரியல் வில்லி மாதிரி தெரியுதா.. இல்ல குடும்பத்துல உள்ளவங்க மேல பாசமே இல்லாம அவங்கள கொடுமைப்படுத்திற மாதிரி தெரியுதா. கைதிகள், குற்றவாளிகள் கூட காலத்தை தவிர தள்ளுற உங்களுக்கு வரவர இப்போ என்ன பார்த்தாலும் அப்படித்தான் தெரியுது." என்று படபடவென பட்டாசாக வெடிக்க, இடையில் பேச முயற்சி செய்த சர்வஜித்க்குதான் வாய்ப்பு கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் தன் மனைவி பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் மனதுக்குள்ளேயே புலம்ப ஆரம்பித்தான்

"அன்னைக்கே அத்தை சொன்னாங்க..."

"அப்படி என்ன அம்மா சொல்லி இருப்பாங்க?"

"இவனையெல்லாம் நம்பக்கூடாதுன்னு"

"நம்பக்கூடாத அளவுக்கு நம்ம அப்படி என்ன பண்ணேன்."

"என்னதான் நாம பார்த்து பார்த்து ஒவ்வொரு விஷயமா செஞ்சாலும், இவங்க எல்லாருக்கும் நாம என்ன தப்பு பண்ணுவோம்.... நம்மளை எப்படி திட்டலாம்னு மட்டும்தான் மூளை யோசிக்கும்... இவர்கள் குணமே இப்படித்தான்..."

"இப்போ இவ யாரு கூட என்ன கூட்டு சேர்ந்து பேசுறா?"

"எல்லாம் அவங்க பாட்டி குணம்... அப்படியே அவங்க பாட்டிக்கு வாரிசா வந்து பிறந்து தொலைத்திருக்கான்னு."

"ஆக மொத்தத்தில் மாமியாரும் மருமகளும் கூட்டுசேர்ந்து என் பாட்டியை தான் கழுவி கொட்றாங்களா?"
"அன்னைக்கு நான் உங்க அம்மா சொல்றதை நம்பல. இப்ப தானே தெரியுது அவங்க எந்த அளவுக்கு உங்களை புரிந்து வச்சுக்கிட்டு என்கிட்ட சொல்லி இருக்காங்கன்னு. நான் தான் என் புருஷன் என்ன நல்லா பாத்துக்குவாருன்னு நெனச்சேன்."

"அடிப்பாவி இது உனக்கே நியாயமா இருக்கா.... கல்யாணம் ஆகி இந்த 13 வருஷத்துல என்னைக்காவது நான் உன் பேச்சை மீறி இருப்பேனா... உன்கிட்ட அடங்கி ஒடுங்கி பொறுப்புள்ள பூச்சி மாதிரி தானே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்."

"ஓ அப்படின்னா நான் உங்கள அடக்கி கொடுமைப்படுதிறோனா? நான் கொடுமைக்காரி.... நீங்க அப்பாவி...." என்று தன் வார்த்தைகள் உஷ்ணத்தை அதிகப்படுத்தி கிருபா பேச அதன்பின்னே மனதுக்குள் புலம்புவதாக எண்ணி பேசிய தன் முட்டாள்தனத்தை சர்வஜித் உணர்ந்துகொண்டான்.

"இப்படியாடா உன் சொந்த வாயாலே உனக்கு சூனியம் வச்சிக்கிற." என்று மானசீகமாக தன் தலையில் ஒரு குட்டு வைத்து கொண்டு

"ஸ்வீட்டி உன்ன சொல்லுவேனா.. என்னைக்கும் உன் அன்புக்கு நான்அடிமையாக இருக்கிறது தப்பேஇருக்கிறது தப்பே இல்ல. அப்படி இருக்கும் பொழுது என்ன எனக்கு தெரியாமலேயே காதலிச்ச என்னுடைய தேவதைக்கு காலம் முழுக்க ஒரு சேவகன இருக்கிறதுல எனக்கு ஒரு சந்தோஷம் தான்."
"ஸ்வீட்டி" என்ற அழைப்பிலேயே கிருபா கோபம் குறையத் தொடங்க அதன்பின்பு தன் கணவன் பேசிய காதல் மொழிகளில் தன் கோபத்தை மொத்தமாக கைவிட்டாள்.

"போதும் போதும் ரொம்ப நடிக்க வேண்டாம். நாளைக்கு நீங்க மதுரை போகணும். அதன் ஞாபகம் வச்சிக்கோங்க." என்று கணவனுக்கு அவரது கடமையை நினைவுபடுத்த

"ஏன்மா காதல் வசனம் பேச வேண்டிய நேரத்தில் இப்படியா கடமையை பத்தி ஞாபக படுத்தற.. சரி விடு எப்படி இருந்தாலும் நீயும் இன்னும் ஒரு வாரத்துல அங்கு வந்து தான ஆகனும்."

இருவரும் அரசாங்க அதிகாரிகளாக இருக்க ஒருவர் மற்றவருடன் இருக்கும் நேரங்கள் அரிதாகவே இருந்தது.. விஸ்வஜித் அரசியல் பிரமுகர்களிடம் தனக்கு இருந்த செல்வாக்கினால் இருவருக்கும் முடிந்த அளவில் அருகிலேயே பணி நியமனம் இருக்கும்படியாக பார்த்துக்கொள்வான். இவை அனைத்தும் கிருபா சர்வஜித் இருவருக்கும் தெரிந்திருந்தாலும் அதை கண்டுகொள்வது இல்லை. மூன்று மாதங்களுக்கு முன்பு மதுரை டெப்டி கமிஷனராக சர்வஜித் பதவியேற்று இருக்க, மதுரைக்கு ஒரு முக்கிய பணியின் அதிகாரியாக கிருபாலி பணி நியமனம் செய்யப்பட்டு இருந்தாள். தற்பொழுது இருவரும் ஒரே இடத்தில் அவர்களது பணி.

"எந்த நேரத்துல இந்த வீட்டை இந்திரா சந்திரமுகி கோட்டைன்னு சொன்னேனோ... அப்பவே எனக்கு ஏழரை ஸ்டார்ட் ஆகிட்டு. இப்போ இவ வீட்டுக்குள்ள கங்கா வா இருக்காளா... இல்ல முழுசா சந்திரமுகியா மாறிவிட்டாளான்னு தெரியலையே." என்று புலம்பிக்கொண்டே சுஜித் தங்கள் அறைக்குள் வர ரூபா தங்கள் அறையில் இருந்த பால்கனியில் நின்று கொண்டு வானத்திலிருந்து நிலவை ரசித்து கொண்டு இருந்தாள்.

"அப்பா அப்பாடி இவர் அமைதியாக நிற்கிறா. அதனால் பிரச்சனை இல்ல." என்று நினைத்துக்கொண்டு பின்னிருந்து தன் மனைவியை அணைக்க தன் கணவனின் அணைப்பிலிருந்து விடுபட்ட ரூபா

"யார் சார் நீங்க? எதுக்காக இப்போ என்னுடைய ரூம் குள்ள வந்து இருக்கீங்க." என்று அறிமுகமில்லாத நபரிடம் பேசுவது போல பேச

"அடியே ரூபா குட்டி நான் உன் புருஷன் டி... புருஷனை பார்த்து இப்படி கேட்கலாமா??? வாயில போட்டுக்கோ.." இன்று அப்பாவின் பாவனையில் பேச ரூபா

"யாரு நீங்க என்னுடைய புருஷனா... இது எனக்கு தெரியாம போச்சே. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் என்னுடைய புருஷன் ஒரு அப்பாவி. அவருக்கு என்ன குற்றவாளி மாதிரி நிக்க வச்சு கேள்வி கேட்கத் தெரியாது. சின்ன வயசுல அவங்க அப்பா கூட எங்க வீட்டுக்கு வரும்போது எல்லாம் அவருடைய கண்ணு என்ன மட்டும்தான் சுத்தி கொண்டே வரும்.

நான் காலேஜ் போக ஆரம்பிச்சதும் அவர் கண்ணோட சேர்ந்து அவருடைய காலும் என்ன சுத்த ஆரம்பிச்சது. எந்த அளவுக்குனா அவங்க அப்பா வந்து கேக்கும் போது அவர்கிட்ட செகண்ட் இயர் படிச்சிக்கிட்டு இருந்த என்னுடைய கையை பிடிச்சு கொடுக்கிற அளவுக்கு பைத்தியக்காரத்தனமா என் பின்னாடி சுத்திகிட்டு இருந்தாரு."
 
ஹா ஹா ஹா
என்ன ஒவ்வொரு "ஜித்"தும் அவனவனோட "லி" பொண்டாட்டிக்கிட்ட இப்படி பம்முறானுங்க
அவ ஒரு அஞ்சு தோப்புக்கரணம் போடச் சொன்னால் இவனுங்க ஐநூறு போட்டுட்டுத்தான் ஓய்வானுங்க போல
அதெல்லாம் நம்ம சூப்பர் ஸ்டார் விஷ்வஜித் போல வருமா?
என்னா கெத்து?
(எதுக்கும் இன்னொரு பார்ட்டையும் படிச்சுட்டு சொல்லுறேன்
பய புள்ளை கனலிக்கிட்ட எப்படி பம்முதோ தெரியலையே)
 
Last edited:
அடங்கொன்னியா
வீட்டுக்குள்ளே இருக்கிற ரூமிலேயே இன்னொரு வீடா?
அதுக்கு தனியாக மாடி வீடு வேறயா?
இதெல்லாம் ரொம்ப ரொம்ப அநியாயம், செசிலி டியர்
 
ஹா ஹா ஹா
என்ன ஒவ்வொரு "ஜித்"தும் அவனவனோட "லி" பொண்டாட்டிக்கிட்ட இப்படி பம்முறானுங்க
அவ ஒரு அஞ்சு தோப்புக்கரணம் போடச் சொன்னால் இவனுங்க ஐநூறு போட்டுட்டுத்தான் ஓய்வானுங்க போல
அதெல்லாம் நம்ம சூப்பர் ஸ்டார் விஷ்வஜித் போல வருமா?
என்னா கெத்து?
(எதுக்கும் இன்னொரு பார்ட்டையும் படிச்சுட்டு சொல்லுறேன்
பய புள்ளை கனலிக்கிட்ட எப்படி பம்முதோ தெரியலையே)
வெளிய புலியா இருந்தாலும் வீட்டுக்குள்ள புள்ளி மான் கிட்ட அடங்கிதான் போகனும்.
அடங்கட்டி அவஸ்தை ஆணுக்கு தான்.
 
Top