Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 17

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
ஹலோ ப்ரெண்ட்ஸ்
படிச்சுட்டு மறக்காம கமெண்ட் பண்ணுங்க முடிஞ்ச அடுத்த அப்டேட் நாளைக்கு தான் தருவேன்.
மீ வெய்டிங்.
சைலண்ட் ரீடர்ஸ் அண்ட் லைக் மட்டும் காெடுக்கும் வாசகர்களே மறக்காம கமெண்ட் பண்ணுங்க.



கண் விழித்தேன் உன் நினைவில்
--செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 17


"யாரை கேட்டு நீ எந்த முடிவை எடுத்த, எவளோ ஒருத்தி ஜேஎம்டி ஆகுறதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்." என்று

கோபத்தின் உச்சியில் விஷ்வாவின் தந்தை ரஞ்சித் கத்திக்கொண்டு இருக்க, அது எதுவும் என் காதில் கேட்கவில்லை என்ற விஷ்வா அமர்ந்திருக்க, அதனால் எங்கு தன் கணவனின் கோபம் அதிகரிக்குமாே என்று பயத்தில் பூரணி

"விஸ்வா அப்பா சொல்றது கொஞ்சம் கேளுடா, அவரும் உன்னுடைய நல்லதுக்கு தானே சொல்றாரு. நீ நம்ம கம்பெனில யாரோ ஒரு பொண்ணுக்கு ஜேஎம்டி போஸ்ட் கொடுக்க முடிவு பண்ணி இருக்கிறது எங்களுக்கு யாரோ ஒருத்தர் சொல்லி தெரிய வேண்டிய தான் இருக்கு.

நியாயமா பார்த்தா நீதான் இதை எங்க கிட்ட சொல்லி இருக்கணும்." என்று 'நீ தவறு செய்துவிட்டாய்' என்ற குற்றச்சாட்டை முன்வைக்க, விஸ்வா அப்பொழுதும் கண்டுகொண்டான் இல்லை.

மேற்கொண்டு இவனிடம் என்ன பேசினாலும் அதற்கான பிரதிபலிப்பு எதுவும் இருக்கப்போவதில்லை என்பதை புரிந்து கொண்டு

"நாளைக்கு அவ எப்படி பதவி ஏற்க போறான்னு நானும் பார்க்கிறேன். நீ அந்த கம்பெனிக்கு எம்டி இருந்தாலும் அதுல எங்க எல்லாருக்கும் ஷேர் இருக்கு.

ஒரு மகனா பெத்தவங்களுக்கு எங்களுக்கு பதில் சொல்லாமல் இருந்தாலும், போர்ட் மீட்டிங்ல ஷேர் ஹோல்டர்க்கு பதில் சொல்லித்தான் ஆகணும்." என்று

தானும் கைதேர்ந்த வியாபாரி என்பதை ரஞ்சித் நிரூபிக்க நினைக்க, ஒரு நக்கல் சிரிப்புடன் எழுந்துநின்ற விஷ்வா

"உங்களால ஒன்னும் பண்ண முடியாது டாடி பிகாஸ் இப்பாே விகே குரூப் ஆஃப் கம்பெனி மேஜர் ஷேர் ஹோல்டர் நானும் கனலியும் தான்."

விஷ்வா அசராமல் முதல் இடியை ரஞ்சித் மற்றும் பூரணி தலையில் இறக்க,அவர்களும் தங்கள் மகனை அதிர்ந்து பார்த்தனர். அவர்கள் பார்வையில் இருந்த கேள்வியின் அர்த்தத்தை புரிந்து கொண்டு

"டேட் நம்மளுடைய ப்ராப்பர்ட்டீஸ் கம்பெனி எல்லாம் நீங்க உருவாக்கினது இல்லை, எல்லாம் தாத்தா உருவாக்கினது.

தாத்தா அத உங்ககிட்ட தரும்பொழுது நல்லாதான் நடந்துகிட்டு இருந்துச்சு. பட் நீங்க டேக் ஓவர் பண்ண கொஞ்ச வருஷத்துல கம்பெனிக்கு ரொம்ப நஷ்டம் வர ஆரமிச்சிட்டு.

சாே உங்க மேல நம்பிக்கை இல்லாத தாத்தா அவர் பெயரில் இருந்த சொத்து எல்லாத்தையும் பாட்டி பேர்ல எழுதி வச்சுட்டு தான் போனாங்க. அதே மாதிரி கம்பெனி மேஜர் ஷேர் பாட்டி கிட்ட தான் இருக்கு.

ஜஸ்ட் உங்களுக்கு அதை நிர்வாகம் பண்ணுவதற்கான பவர் ஆஃப் ஃபட்டாணி மட்டும்தான் இருந்துச்சே தவிர, அதிகாரம் பண்ணுவதற்கான உரிமை இல்லை.

நான் பிசினஸா ஆரம்பிச்சு கொஞ்ச நாள்ல நஷ்டத்தில் போன கம்பெனியை தூக்கி நிறுத்தினேன். ஆர்கே குரூப் ஆப் கம்பெனி உங்களுடைய அடையாளமா இருந்துச்சி, அத விகே குரூப் ஆப் கம்பெனி அப்படின்னு என்னுடைய அடையாளமாக மாற்றி அஞ்சு வருஷம் ஆகிட்டு.

அதுமட்டுமில்லாமல் பாட்டி அவங்களுடைய ஷேர் எல்லாத்தையும் கனலி பெயருக்கு மாற்றி எழுதி வச்சுட்டாங்க. நீங்க கோர்ட் கேஸ்னு போனா கூட உங்களால் ஒன்னும் பண்ண முடியாது. இப்போதைக்கு உங்களைவிட கனலிக்குதான் கம்பெனியில அதிக அதிகாரம் இருக்கு." என்று

இத்துடன் தன் பேச்சு முடிந்தது என்று எழுந்து நின்ற விஷ்வா, ஒரு நிமிடம் அதிர்ந்து நின்ற தன் தாய் தந்தையரை பார்த்து மனதுக்குள் கஷ்டமாக இருந்தாலும் அவற்றை வெளியில் காட்டிக் கொள்ளாமல்

"அண்ட் ஒன் மோர் திங் நாளைக்கு ஜேஎம்டி யா பொறுப்பெடுக்க போறது யாரோ ஒரு பொண்ணு இல்ல என்னுடைய மனைவி. அவளுக்கு உண்டான மரியாதை இந்த வீட்டுல கிடைக்கணும்.

அப்படி அவளுக்கு மரியாதை கொடுக்க விரும்பாத யாரும் இந்த வீட்டில இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. இது என்னுடைய சம்பாத்தியத்தில் நான் வாங்கின வீடு, பரம்பரை சொத்து கூட கிடையாது." என்று கூறிவிட்டு வேகமாக படியேறி தன் அறைக்குள் சென்று மறைந்தான்.

படி ஏறி செல்லும் தன் மகனின் முதுகை வெறித்துப் பார்த்தபடி நின்ற ரஞ்சித் பூரணி அருகில் வந்த சுந்தர்

"நான் சொன்ன அன்னைக்கே என்னுடைய பொண்ணு மாலினியை விஸ்வாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருந்தா உங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்காது. இன்னைக்கு யாரோ ஒருத்திக்காக பெத்தவங்களயே வீட்டைவிட்டு போக சொல்லிட்டு போறான் உங்க பையன்."

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல விஸ்வாவின் பெற்றோர் மனதில் கனலி பற்றி நஞ்சை தாெடர்ந்து ஏற்ற ஆரம்பித்தான்.

"சுந்தர் நாங்களே இப்போ என்ன பண்ணனும்ன்னு தெரியாம நிக்கும்பாேது தேவையில்லாமல் பேசி எங்களை எரிச்சல் படுத்தாத."

"அத்தான் நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க அன்னைக்கு உங்களுக்காக தான் கனலியை விஷ்வா வாழ்க்கையிலிருந்து துரத்தி விட்டேன். இப்பவும் நீங்க சரின்னு சொன்னா அவள திரும்பவும் என்னால் அனுப்பி வைக்க முடியும்."

"எப்படியாவது எங்களுக்கு அந்த கனலி எங்க பையன் வாழ்க்கையிலிருந்து போனா போதும். தப்பான தொழில் பண்றாரு ஒருத்தி எங்களுடைய பையன் வாழ்க்கையில வரவே கூடாது." என்று அந்த நிமிடம் தாங்க விஷ்வாவின் தாய் தந்தையராக மட்டுமே யோசித்து பேசினர்.

"கவலைப் படாதீங்க அத்தான் என்னுடைய அக்கா பையனுக்காக இது கூட நான் செய்ய மாட்டேனா. நாளைக்கு அந்த கனலி ஆபீஸ்க்கு வரமாட்டா."

தன் அறைக்குள் வந்த விஷ்வா மனதுக்குள்

"அம்மா அப்பா சாரி காலையில உங்க எல்லா கேள்விக்கும் உங்க மகனா பதில் சாெல்றேன். அதுவரைக்கும் என்ன நினைச்சு வருத்த படாதீங்க."

"சுந்தர் மாமா நீ எவ்வளவு ஆட முடியுமோ ஆடிக்காே உன்னுடைய ஆட்டம் நாளைக்கு காலை வரைக்கும் தான்." என்று புன்னகையுடன் நினைத்துக்கொண்டு தன் காதல் மனைவியுடன் இனி வரும் நாள்களில் வாழப்போகும் சந்தோஷமான வாழ்க்கையை நினைத்து மகிழ்ச்சியில் கண்ணயர்ந்தான்.

♥_♥_♥_♥_♥_♥_♥_♥_♥_♥_♥_♥_♥_♥_♥

"கனலி பூஜா சொல்வதெல்லாம் உண்மையா, நீ இன்னைக்கு அவள எல்லோர் முன்னாடியும் வச்சி அவமான படுத்தி பேசினியா."

எங்கே தன் மகளால் நீண்ட நாள் கழித்து தன்னுடன் தங்க வந்த மகனும் மருமகளும் கோபித்துக் கொண்டு சென்று விடுவார்களோ என்ற பயத்தில் திலகவதி மகளை திட்டிக்கொண்டு இருக்க,

கனலி தன் தாயின் பின்புறம் முறைத்து பார்த்துக்கொண்டு நிற்கும் தன் அண்ணி பூஜாவையும், அவள் அருகில் கோபத்துடன் நிற்கும் அண்ணன் கார்த்திக்கையும் ஒருமுறை பார்த்துவிட்டு தன் தாயிடம்

"அம்மா நீ கேட்கிற எல்லா கேள்விக்கும் நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். ஆனால் என்கிட்ட நீ பேசும் பொழுது எனக்கு அம்மாவா மட்டும் தான் பேசணும். அப்படி எனக்கு அம்மாவா நீ பேசினா ஒரு மகளா என்னுடைய பதில் இருக்கும். அப்படியில்லாமல் உன் மருமகளுக்கு மாமியாரா மட்டும் பேசுனா..... சாரி என்ன மன்னிச்சிடு மா உன்கிட்ட பேச எனக்கு விருப்பமில்லை."

இனி எதுவென்றாலும் அது உங்கள் முடிவில் தான் இருக்கின்றது என்ற ரீதியில் கண்களில் கண்ணீருடன் பேச திலகவதி

"அப்படினா இதுவரைக்கும் நான் உன்கிட்ட அம்மாவா நடக்கலையா கனலி."

மகளின் கண்ணீரும் அவள் வார்த்தைகளும் இதயத்தில் ஈட்டியாய் தைக்க, முதல் முறை தான் கனலிக்கு ஒரு தாயாக நடக்கத் தவறி விட்டோமோ என்ற எண்ணத்தில் திலகவதி நாற்காலியில் பொத்தென்று அமர்ந்தார்.

தன் தாயின் காலடியில் அமர்ந்த கனலி அவர் மடியில் தலை சாய்த்து

"எனக்கு இப்படி உன் மடியில் தலைசாய்த்து பேசணும்னு ரொம்ப ஆசை மா. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளுக்கு அப்புறம் இப்பதான் உன்னுடைய மடியில நான் தலை வச்சு உட்கார்ந்து இருக்கேன்."

மனதில் வருத்தங்கள் தோன்றி மறைந்தாலும் திலகவதியின் கைகள் மகளின் தலையை வருட ஆரம்பித்தது. அந்த சிறு செய்கையில் தன் தாயின் பாசத்தை புரிந்து கொண்ட கனலி,

"உனக்கு என் மேல பாசமே இல்லன்னு நான் எப்பவும் சொல்லவே மாட்டேன் மா. ஆனா அந்த பாசத்தை நீ என்கிட்ட காட்டினது இல்லைன்னு மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும்."

கனலி பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் திலகவதி மனதில் பெரும் மாற்றத்தை கொண்டு வர ஆரம்பித்தது. இதையெல்லாம் திலகவதி உணர்ந்தராே இல்லையோ அவர் முகத்தை பார்த்துக்கொண்டு நின்ற பூஜாவும் கார்த்திக்கும் நன்கு உணர்ந்தனர்.

இம்மாற்றம் தங்களுக்கு நல்லது இல்லை என கருதி பூஜா கனலியின் முகம் பார்க்க அந்நொடி கனலியும் பூஜாவை பார்த்து கண்ணை சிமிட்டினாள்.

"அத்தை உங்க பொண்ணு உங்க மனசை மாற்றுவதற்காக நடிக்கிறா. இவ பேசுற பசப்பு வார்த்தையே நம்பிடாதீங்க." என்று

தன் மாமியாரை தங்கள் பக்கம் நிறுத்தி வைத்துக்கொள்ள முயற்சிக்க, தாயின் மடியை விட்டு எழுந்த கனலி கண்களைத் துடைத்துக்கொண்டு ஒன்றும் பேசாமல் தன் அறைக்குள் செல்ல முயற்சிக்க, தன் மகளை தடுத்து நிறுத்திய திலகவதி

"நீ சொல்ல வந்ததை சொல்லி முடிச்சுட்டு போ கனலி."

"அத்தை..." என்று இருவரும் பேச விடாமல் தடுக்க நினைத்த பூஜாவை பார்த்து

"பூஜா தயவுசெஞ்சு எதுவும் பேசாத...
குறைந்தபட்சம் இன்னும் ஒரு அரை மணி நேரத்துக்காவது நான் என்னுடைய மகளுக்கு மட்டும் அம்மாவா இருந்துட்டு போறேன்."

தாயின் இந்த வார்த்தைகளே கனலிக்கு போதுமானதாக இருந்தது. வாழ்க்கையில் முதல்முறையாக தன் தாய் தனக்காக பேசியதை நினைத்து கடலுக்கு மனதுக்குள் பெரும் மகிழ்ச்சி உண்டாகியது.

"சொல்லு கனலி இப்போ உன் முன்னாடி இருக்கிறது உன்னுடைய அம்மா மட்டும் தான். நீ என்ன நினைக்கிறாயோ அது எல்லாத்தையும் தயங்காம என்கிட்ட சொல்லலாம்."

தாயின் கண்களில் இருந்த அனுமதியை விட வருத்தமே அதிகம் இருப்பது போல் தோன்ற, கனலி மீண்டும் பழையபடி தாயின் காலடியில் அமர்ந்து அவர் கைகளை பிடித்துக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.

"எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும் மா.. உன் கைய புடிச்சு நடக்கணும், நீ எனக்கு சோறு ஊட்டி விடனும், உன் கூட கதை பேசிக்கிட்டு ஸ்கூலுக்கு போகணும், நீ சொல்ற கதைய கேட்டுக்கிட்டே உன் மடியில் படுத்து தூங்கணும், இப்படி எனக்கு சின்ன சின்னதா நிறைய ஆசை இருந்துச்சு.

ஆனா அப்ப நீ அண்ணன் கூடவே இருந்த, என்கூட அதிகமா இருந்தது இல்லை. அப்ப எல்லாம் அப்பா சித்தப்பா ரெண்டு பேரும் தான் என்ன கவனிச்சிட்டாங்க.

என்கிட்ட பாசமா இருந்த ரெண்டு பேரு என்ன விட்டுப் போனது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்."

தன் பேச்சிற்கு ஒரு நிமிடம் இடைவெளி விட்டு தாயின் முகத்தை பார்த்த கனலி

"எதுக்காக அம்மா என்ன பாதர் ஆபிரகாம் கூட அனுப்பி வைச்ச."

மகளின் கேள்வியில் திடுக்கிட்டு அவள் முகத்தை திலகவதி பார்க்க

"நீ நினைக்கலாம் நான் பெங்களூரில் ஊர் சுத்திக்கிட்டு, பெரிய காலேஜ்ல படிச்சு, சந்தோஷமா இருந்ததா. ஆனா ஒவ்வொரு நிமிஷமும் நான் உன்னைத்தான் தேடுனேன்னு உனக்கு தெரியுமா.

என்னதான் நம்மள சுத்தி ஆயிரம் பேரு பாசம் காட்ட இருந்தாலும் பொண்ணுங்களுக்கு சில விஷயத்தை அம்மா கிட்ட மட்டும் தான் சொல்ல முடியும்.

அப்படி நான் சொல்ல நினைக்கும் போது எல்லாம் நீ என்கூட இருந்ததே இல்லம்மா. ஒருவேளை நீ என்கூட இருந்திருந்தா எனக்கு விஜி மேல காதல் வந்திருக்காதோ என்னமோ.

என்கிட்ட ரொம்ப பாசமா இருப்பான் மா என்னுடைய விஜி. என்ன மனசுல இருந்து சிரிக்க வைப்பான் மா. எனக்காக சின்ன சின்ன விஷயத்துக்கு கூட பார்த்து பார்த்து செய்வான்.

ஆனா நான் அவனுக்காக எதுவுமே செஞ்சதில்லை. சில சமயம் குழந்தை தனமா நிறைய சேட்டை பண்ணுவேன். அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு பாேவானே தவிர கோவபட மாட்டான்.

ஒரு தடவை நான் அவனை அடிச்சு கூட இருக்கேன் அப்பக்கூட அவனுக்கு என் மேல ஒரு சின்ன வெறுப்பு கூட வரல. நான் ஒரு தடவ அவன் கிட்ட கேட்டேன்
'எதுக்குடா உனக்கு என் மேல இவ்வளவு காதல், உனக்கு என் மேல கோபமே வராதான்னு'

அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா?

'ஏன் பொண்ணுங்க மட்டும் தான் அவங்க புருஷனை முதல் குழந்தையாக நினைக்கவேண்டுமா? பசங்களும் அப்படி நினைக்க கூடாதா.
நீ என்னைக்குமே என்னுடைய முதல் குழந்தை மாதிரிதான். என்ன கொஞ்சம் அடம் பிடிக்கிற சேட்டைக்கார குழந்தை.

நீ என்ன பண்ணாலும் எனக்கு அதுல குழந்தைத்தனம் தெரியும் சோ அதை நான் ரசிச்சு பார்பேனே தவிர கோபப்பட மாட்டேன்.' அவன் என்ன ஒரு நல்ல அம்மாவா பார்த்துக்கிட்டான் மா.

பாதர் ஆப்ரஹாம் இறந்துபோன அன்னைக்கு மறுபடியும் நான் தனியாக ஆயிட்ட மாதிரி எனக்கு தோணிச்சு. அப்போ நான் பதினாறு வயசுல உன்கிட்ட எதிர்பார்த்த அந்த அரவணைப்பு எனக்கு விஜி கிட்ட கிடைச்சுது மா.

நீ அன்னைக்கு சொன்ன மாதிரி நான் கண்டவன் கூட அவங்க வீட்டுல தனியா இருக்கால. நான் அவன் பாட்டி கூடத்தான் இருந்தேன். அவன் பாட்டி கூட என்கிட்ட ரொம்ப பிரியமாக இருந்தாங்க.

விஜி நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்கும்போது எனக்கு உன்னுடைய ஞாபகம் மட்டும் தான் வந்துச்சு. உன்கிட்ட நான் மறைக்க நினைக்கல, ஒருவேளை நீ மறுத்தால் என்னால உன்னை எதிர்த்து பேசி காயப்படுத்த முடியாது மா.

அதுக்குத்தான் உன்கிட்ட இருந்து மறைச்சிட்டேன். அன்னைக்கு எங்களுக்கு கல்யாணம் நடக்கிறதா இருந்துச்சு, நீ போன் பண்ணி தற்கொலை பண்ணிக்குவேன் சொல்லும்பொழுது எனக்கு என் காதலை விட நீ தான் முக்கியம்னு.தோணுச்சு மா, அதான் விஜிகிட்ட

"விஜி அம்மா கால் பண்ணாங்க, எனக்கு இப்போதைக்கு என் குடும்பத்துல இருக்குற பிரச்சினையை சமாளிக்கிறது தான் முக்கியமா படுது.

அதுமட்டுமில்லால் இப்பாே யாேசித்து பார்த்த அவங்க சம்மதம் இல்லாம உன்ன மேரேஜ் பண்ண எனக்கு பிடிக்கல சோ நான் இப்போ அங்க போறேன்.

உன்கிட்ட சொன்னா நீ விட மாட்ட, அதனால தான் இப்போ சொல்லாமல் இங்க இருந்து கிளம்புறேன். என்ன மன்னிச்சிடு."

என்ன எனக்காக மட்டும் காதலித்தவனை காயப்படுத்திட்டு வந்துட்டேன் மா. அப்ப கூட அவன் என்மேல கோபப்படலாமா. இன்னும் எனக்காக காத்துகிட்டு இருக்கான்.

அன்னைக்கு நான் உன்கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணனும்னு நெனச்சேன் தப்புதான். அதுக்காக என்ன மன்னிச்சிடு மா.

நீ அனுமதி கொடுக்காமல் நான் விஜி கூட வாழ போகமாட்டேன். இப்ப கூட எனக்கு என்னுடைய காதலை விட நீதான் முக்கியம்." என்று

தன் மனதில் இத்தனை நாள் ஏற்றி வைத்திருந்த பாரத்தை எல்லாம் தாயின் காலடியில் இறக்கி வைத்துவிட்டு கனலி கதறி அழ ஆரம்பித்தாள்....


இனி நிஜங்களுடன்....
 
Last edited:
Top