Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 25

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
கண் விழித்தேன் உன் நினைவில்
--செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 25

நகரின் புகழ்பெற்ற பல்நோக்கு மருத்துவமனையின் முதலில் தளத்தில் காத்திருப்பு பகுதியில் இருந்த இருக்கையில் தலையின் பாரம் தாங்க முடியாமல் தன் இரு கைகளால் தாங்கி பிடித்த வண்ணம் கனலி அமர்ந்து இருந்தாள்.

தன்னை கடந்து செல்லும் எந்த உருவத்தையும் உணரும் நிலையில் கனலி இல்லை. அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்திக்காமல் அவள் மூளை வேலை நிறுத்தம் செய்திருந்தது.

ஒவ்வொரு நொடியும் அவள் முகத்தில் தோன்றி மறையும் கலவையான உணர்வை விஷ்வா பார்த்துக் கொண்டு இருந்தாலும் அவனுக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை.

கலக்கத்துடன் அமர்ந்து இருப்பவளுக்கு ஏதாவது சமாதானம் கூறலாம் என்று நினைத்தாலும் அவனால் அதை செய்ய முடியவில்லை.

அவன் வாயை திறந்தாலே கனலி என்னும் எரிமலை வெடித்து அதிலிருந்து வெளிவரும் லாவா விஷ்வா என்னும் காகிதத்தை பொசுக்க தயாராக இருந்தது.

வியாபாரத்தில் ஏற்படும் சிக்கல்களை எல்லாம் தூசியை தட்டுவது போல் உதறி செல்லும் விஷ்வாவிற்கு எந்த ஒரு காலத்திலும் கனலியை சமாளிப்பது என்பது சவால்கள் நிறைந்த ஒரு பயணமாகவே தோன்றியது.

எந்த நேரத்தில் கனலி மனநிலை எப்படி இருக்கும், என்ன மாதிரி நடந்து காெள்வாள் என்பது கடவுள் மட்டுமே அறிந்த ரகசியம்.

மிகப்பெரிய பிரச்சினை என்று கருதிய ஐவரின் ஒற்றுமை கூடவே இப்பொழுது அவனுக்கு பெரிதாகத் தோன்றவில்லை. மாறாக இப்பொழுது தன்முன் அமர்ந்திருக்கும் கனலியிடமிருந்து என்ன வரப் போகின்றதாே என்ற பயத்தில் விஷ்வா உள்ளுக்குள் இறுகி இருந்தான்.

இன்று கனலி இப்படி கலக்கமாக அமர்ந்து இருப்பதற்கு தான் மட்டுமே காரணம் என்பதால் எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டு இருந்தான்.

நீண்ட நேரம் நின்றுகொண்டே இருந்ததால் கால் வலிப்பது போல தோன்ற கனலி அருகில் இருந்த இருக்கையில் அமரச் சென்றான்.

தன் அருகில் அமர வந்தவனை முறைத்து பார்த்த கனலி பார்வைக்கு மட்டும் சக்தி இருந்திருந்தால் இருந்தாள் விஷ்வா அந்த இடத்திலேயே சாம்பலாகி இருப்பான்

கனலி பார்வையில் இருந்த உஷ்ணத்தில் இருக்கையை விட்டு எழுந்த விஷ்வா கனலியை விட்டு பத்தடி தள்ளி சென்று நின்று கொண்டான்.

கனலி தற்போது இருக்கும் கோபத்திற்கு தாங்கள் இருப்பது மட்டும் வீடாக இருந்திருந்தால் விஷ்வாவை கனலி கவனிக்கும் கவனிப்பில் அவன் தலை முடிகள் அனைத்தும் அல்லது அவனது சில பற்கள் இப்பொழுது கனலி கையில் இருந்திருக்கும்.

தான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அதையெல்லாம் விஸ்வா அலட்சிய படுத்தியதால் தான் இந்த நிலையில் அமர்ந்து இருப்பதாகவே அவளுக்கு என்ன தோன்றியது.

காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் ஏதோ பழுக்கக் காய்ச்சிய கூரிய கத்தியின் மீது அமர்ந்திருப்பது போல கனலி உணர்ந்தாள்.

விஷ்வாவிற்கு தான் அந்த சூரியனின் மேலே நிற்பது போல இருந்தது. அப்படி அவன் நினைத்துக்கொண்டு இருக்கும்பொழுது அவன் மனசாட்சி

"நீ ஒத்துக்கொண்டாலும் ஒத்துக்கவில்லை என்றாலும் ஒரு சூரியனை (கனலி என்ற பெயருக்கான அர்த்தம் சூரியன்/பகலவன்) தான் கல்யாணம் செய்து குடும்பம்(?) நடத்திக்கிட்டு இருக்க."என்று இடித்துரைக்க,

இருக்கும் சூழ்நிலையை மறந்து அவன் இதழ்களில் ஒரு புன்னகை தோன்றி மறைந்தது.

ஓரக்கண்ணால் அவன் செய்கையை பார்த்துக்கொண்டு இருந்தனர் கனலி விஷ்வாவை முறைத்து பார்க்க, குனிந்த தலையை நிமிராமல் நின்றுகொண்டு இருந்தான்.

அவனை தன்னால் முடிந்த மட்டும் முறைத்துப் பார்த்த கனலி மனசுக்குள்

'எல்லாம் என்னை சொல்லணும்.
இவன் சொன்ன காரணத்தை எல்லாம் நம்பி போன என்னுடைய புத்தியை செருப்பாலே அடிச்சுக்கனும்.' என்று மானசீகமாக தன்னையே அடித்துக்கொண்டு இருந்தாள்.

'இவன் சொன்னதை நம்பி நான் அங்கு போகாமல் இருந்திருந்தால் இப்போ இப்படி புலம்ப வேண்டிய அவசியம் வந்திருக்காது.' என்று தனக்குள் அர்ச்சனை செய்து கொண்டு இருந்த கனலி அன்றைய தினத்தை எண்ணி பார்த்தாள்.


மகிழ்ச்சியின் உச்சத்தில் தன் அறைக்குள் வந்த விஷ்வாவை பார்த்த கனலி 'எதற்காக இந்த சந்தோஷம்' என்று பார்வையால் கேட்க,

அவள் அருகில் வந்த விஷ்வா அவள் இரு கைகளையும் பிடித்து நாற்காலியில் இருந்து எழுப்பி தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான்.

"நான் இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன்."

காற்று கூட செல்ல வழியில்லாமல் தன்னை இருக்கி பிடித்த கணவனை கஷ்டப்பட்டு தன்னிடமிருந்து தள்ளி நிறுத்திய கனலி

"ஃபஸ்ட் என்னன்னு விஷயத்தை என்கிட்ட சொல்லு, சொன்னால் நானும் சேர்ந்து சந்தோஷப்படுவேன் தானா." என்று கேட்க,

அவள் இடையை தன் கைகளால் பற்றி தூக்கி மேசையின் மீது அமர வைத்த விஷ்வா

"நமக்கு மிகப் பெரிய ஆஃபர் ஒன்று கிடைச்சிருக்கு. இதை மட்டும் நாம சக்ஸஸ்புள் எல்லாம் செய்து முடித்து விட்டால் நாம நம்முடைய வாழ்க்கையில இன்னும் ஒரு படி முன்னேற்றம் வந்த மாதிரிதான்." என்று தன் மகிழ்ச்சியை கனலியுடன் பகிர்ந்துகொள்ள கனலி ஒரு ஆராய்யும் பார்வையுடன்

"புதுசா....!
புதுசா என்ன ஆஃபர்.....
சாப்ட்வேர் கம்பெனியில ஏற்கனவே நாம முடிச்சு கொடுக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு. அதையெல்லாம் கம்ப்ளீட் பண்றதுக்கு கிட்டத்தட்ட ஆறு மாசம் ஆகும்னு நீதான் என்கிட்ட சொன்ன.

கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி முழுக்க என்னுடைய கன்ராேல்ல இருக்கு சோ எனக்கு தெரியாம எந்த ப்ராஜெக்ட் வருவதற்கான வாய்ப்பு இல்லை.

தென் நம்மளுடைய கிரானைட் மார்பிள்ல கூட வழக்கமா சப்ளை பண்றேன் கஸ்டமர்ஸ்க்கு மட்டும்தான் இப்ப வரைக்கும் சப்ளே பண்ணிக்கிட்டு இருக்கிறோம்.

அதில் எந்த மாற்றமும் இல்லன்னு போனவாரம் ராம் கொடுத்த ரிப்போர்ட்டை பார்த்ததற்கு அப்புறமா நீ சொன்ன." என்று

விஷ்வா ஆரம்பித்த மற்றும் பரம்பரை தொழில்கள் ஒன்றுவிடாமல் வரிசைப்படுத்தி அதன் நடவடிக்கை அனைத்தையும் புள்ளி விபரமாக கூறும் மனைவியை மனதுக்குள்

'அடியே நீ ஏண்டி இவ்வளவு புத்திசாலியா இருக்க. தெரியாத்தனமா நீ காலேஜ் படிக்கும் பொழுது உனக்கு எல்லா விஷயம் தெரிஞ்சு இருக்கணும்னு சில காேர்ஸ் சேர்த்து விட்டு கத்துக்க வைச்சது தப்ப பாேச்சு.

எப்பவும் நீ கூடவே இருக்கணும்னு உனக்கு ஒரு போஸ்டிங் கொடுத்து உட்கார வெச்சா இப்படி அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு தாெழில் எல்லாத்தையும் ஞாபகம் வச்சு இருக்கியே.' என்று நினைத்துக்கொண்டான்.

பதிலுக்காக தன் முகத்தையே பார்த்துக் கொண்டே இருக்கும் கனலியை பார்த்து

"நம்ம கூட ஒரு பெரிய ஃபாரின் கம்பெனி டையப் பண்ண போறாங்க. இந்த சான்சை நாம நல்லாபடிய யூடிலைஸ் பண்ணிக்கிட்டா வீ வில் சக்ஸ்சீட், சோ காண்ட்ராக்ட் சைன் பண்ண நாம அங்க போக வேண்டியது இருக்கும்."

"ஃபர்ஸ்ட் ஏதாே ஆஃபர்ன்னு என்கிட்ட சொன்ன, இப்போ பெரிய கம்பெனியோட டையப் பண்ணபாேறாேன்னு சொல்ற.
எந்த கம்பெனி?
எதுக்காக நாம டையப் பண்றோம்?
இதுல நமக்கு எந்த அளவுக்கு பெனெஃபிட்?
இப்போ நாம எதுக்கு இப்படி ஒரு முடிவு எடுக்கனும்?
காண்ட்ராக்ட் சைன் பண்ண நான் எதுக்கு?" என்று மூச்சு விடாமல் கனலி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறி சமாளித்து மூன்று நாட்களுக்குப் பின்பு கனலியுடன் விமானத்தில் பறந்து கொண்டு இருந்தான்

கனலி எத்தனை விதமாக மாற்றி மாற்றி கேள்வி கேட்டாலும் விஸ்வாவிடம் இருந்து சில கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் வந்தது.

அவையெல்லாம் விஸ்வா மீது சில சந்தேகத்தை ஏற்படுத்தினாலும் ராம் ஆனந்த் இருவரும் தங்களுக்கும் இந்த ஒப்பந்தம் பற்றி தெரியும் என்பது போல பேச கனலி சந்தேகம் காணாமல் போனது.

"பிரிவ்ஜா" (க்ரீஸ் முக்கிய நகரம்) நகரின் ஏர்போர்ட்டில் இறங்கி தங்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட இருந்த ஹோட்டல் அறைக்கு உள்ளே வரும்வரை கனலிக்கு இருந்த சிறு தயக்கம் உண்மை தான் என்பதை அந்த அறை இருந்த அழகிலேயே தெரிந்து கொண்டாள்.

தூய வெள்ளை நிறத்தில் இருந்த அந்த அறையின் ஒவ்வொரு பொருள்களும் இது சாமானியர்களுக்கான இடம் அல்ல என்பதையும்,

வரவேற்பு அறையைத் தாண்டி இருந்த அறையின் மையத்தில் இருந்த கட்டில் வெள்ளை, இளஞ்சிகப்பு, சிகப்பு என வண்ண ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்க, அவற்றையெல்லாம் கவனித்த கனலி தன்னை எந்த அளவு விஷ்வா ஏமாற்றி இருக்கின்றான் என்பதை உணர்ந்து கொண்டாள்.

கோபத்துடன் பேச திரும்பியவள் தன் இதழ்களை பிரித்து ஒரு வார்த்தையும் வெளிவிட முடியவில்லை.

திட்டம் தீட்டி கனலியை இங்கு இழுத்து வந்த கள்வன் அவள் இதழ்களையும் சிறை செய்திருந்தான்.

அவன் கைகள் தன் உடலில் செய்த மாயத்தில் கனலி தன் கோபத்துடன் அனைத்தையும் மறந்தாள்.

தற்பாேது அவள் நினைவில் இருந்தது எல்லாம் விஜி.... விஜி..... விஜி.... மட்டுமே.

காதல் மனைவியின் எதிர்ப்பில்லை ஒத்துழைப்பில் காதலிக்கும் பொழுது காவலனாக இருந்தவன் காமத்தின் கள்வனாக மாறிப் போனான்.

தன்னருகில் குழந்தைத்தனமான முகத்துடன் உறங்கிக்கொண்டிருந்த மனைவியின் முகத்தை நெடுநேரம் பார்த்துக்கொண்டு இருந்த விஸ்வா அவளை எழுப்ப நினைக்க, அவளோ மேலும் தன் கனவன் வெற்று மார்பில் முகத்தை அழுத்தி புதைத்துக் கொண்டு தன் தூக்கத்தை தொடர ஆரம்பித்தாள்.

புலராத காலைப்பொழுதில் மனைவியுடனான அந்த நேரத்தை அனுபவித்து ரசித்தாலும் தான் செல்ல திட்டமிட்ட இடத்திற்கு இப்பொழுது கிளம்பினால் தான் நேரம் சரியாக இருக்கும் என்பதால் கஷ்டப்பட்டு கனலியை எழுப்பி தயாராக செய்தான்.

கட்டிலில் இருந்து இறங்கும் வரை விஷ்வா உடன் செல்லம் கொஞ்சிக் கொண்டே இருந்த கனலில் கீழே இறங்கிய அடுத்த நொடி தன்னை இங்கு அழைத்து வர விஷ்வா நடத்திய நாடகம் அனைத்தும் நினைவு வர, சூரிய உதயத்திற்கு முன்பே நண்பகல் வெயிலென விஷ்வாவை வாட்டி எடுக்க ஆரம்பித்தாள்.

கொஞ்சி... கெஞ்சி... மிஞ்சி... என அனைத்து வழிகளிலும் கனலி சமாதானப்படுத்தி அழைத்து வர வழிநெடுகிலும் கனலி பேசாமல் முகத்தை திருப்பிக்காெண்டு அமைதியாகவே வந்தாள்.

அவள் செய்கை ஒவ்வொன்றும் கிருபாலி கோபத்தில் இருந்தால் இப்படித்தான் நடந்து கொள்வார் என்பதை நினைவுபடுத்த வாய்விட்டு சிரித்தான்.

சிரித்த அவனைப்பார்த்து கனலி முறைக்க விஸ்வா தன் புன்னகையை கட்டுப்படுத்திக்கொண்டு

"நீ வர வர ஸ்வீட்டி மாதிரியே பிஹேவ் பண்ண ஆரம்பிச்சுட்ட." என்று கூற

'தான் சிறுபிள்ளை தனமாகவா நடந்து கொள்கின்றோம்.' என்று நினைத்துப் பார்த்த கனலிக்கு அவளை மீறி புன்னகை அரும்பியது.

புன்னகையுடன் இருவரும் இறங்கிய இடத்தை பார்த்த கனலிக்கு தாங்கள் எதற்காக இங்கே வந்து இருக்கின்றோம் என்று புரியவில்லை.

'எதற்காக என்னை இங்கே அழைத்து வந்து இருக்கின்றாய்.' என பார்வையால் கனலி கேட்க, விஷ்வா அவளைக் கண்டுகொள்ளாமல் டிரைவரிடம் எதோ பேசிக்கொண்டு இருந்தான்.

அவன் தன்னை கண்டுகொள்ளாத எரிச்சலில், சுற்றிலும் பார்வையை பதிக்க தாங்கள் இருப்பது ஏதோ கிராமம் போல தோன்றியது.

"அழகான கிராமம்....!" என்று மனதுக்குள் சாெல்லிக்காெண்டாள்

"பிசினஸ் டீலிங்ன்னு பொய் சொல்லி ஹனிமூன் டிரிப் கூட்டிகிட்டு வந்தான். வந்த இடத்தில ஒரு கிராமத்துல நிப்பாட்டி விட்டுட்டு இவனுக்கு என்ன டிரைவர் கூட பேச்சு வேண்டியதா இருக்குதாம்." என்று விஷ்வாவை வசவு மழைகளில் குளிப்பாட்ட, அவனும் நிதானமாக

"கனலி வா போகலாம்." என்று அழைக்க எதுவும் பேசத் தோன்றாமல் கனலில் அவனுடன் நடந்து சென்றாள்.

குனிந்த தலை நிமிராமல் தன் சிந்தனைகளில் நடந்து சென்று அவளின் தோளைத் தொட்டு விஷ்வா உலுக்க அதில் நிமிர்ந்து பார்த்த கனலி 'கடலின் அடி ஆழத்தில் இருந்து எழுந்துவரும் சூரியனின் அழகில்' தன்னை மறந்து நின்றாள்.

தன்னை மறந்து நின்றவளின் பின்புறம் இருந்து தன் அணைப்பிற்கு கொண்டுவந்து அவள் தோள்களில் தன் முகத்தை புதைத்து

"கனல் பேபி உனக்கு இந்த கனலியை புடிச்சிருக்கா." என்று கேட்டவனை தன் தலையை மட்டும் நிமிர்த்தி பார்க்க, அவள் கண்களோடு தன் கண்களையும் உறவாட விட்டவன் சிறிது நேரத்திற்குப் பின்பு

"இந்த இடத்தின் பெயரும் கனலி தான்...
புடிச்சிருக்கா...!" என்று விஸ்வா கேட்க,

அவன் புறம் திரும்பி அவன் மார்புக்குள் தன்னை தன் முகத்தை புதைத்துக் கொண்ட கனலி

"புடிச்சிருக்கு....." என்று பதிலளிக்க

"என்ன புடிச்சிருக்கு....." மீண்டும் கேள்வி கேட்க

"கனலிக்கு கூட்டிக் கொண்டு வந்த இந்த கனலியின் விஜியை எனக்கு புடிச்சிருக்கு."

அதன் பின் காதல்+காதல்+காதல்.......... மட்டுமே.

'பிரிவ்ஜா'வில் இருந்த ஐந்து நாட்களும் தங்கள் உலகில் தங்களுக்கான மகிழ்ச்சியை திகட்ட திகட்ட அனுபவித்த காதல் ஜாேடிகளை அவர்களை பிள்ளைகளிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு மீண்டும் சென்னைக்கு இழுத்து வந்தது.

வந்தவர்களுக்கு காத்திருந்தது..........(சாரி டைப் பண்ண நேரம் இல்ல, நெக்ஸ் எப்பில சாெல்றேன்.)
....அன்று விஸ்வா நடத்திய நாடகத்தை நம்பி கனலி அவனுடன் பிரிவ்ஜா சென்றதன் விளைவு இப்பொழுது கனலி கலக்கத்துடன் மருத்துவமனையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மருத்துவரின் வாயிலிருந்து வரும் ஒரு வார்த்தைக்காக காத்திருந்தாள்.

எங்கே தான் ஒரு தாயாக நடக்க தவறி விட்டாேமாே, இந்த உலகம் தனக்கு 'இவள் சித்தி தானே' என்ற பட்டத்து தந்து விடுமாே என்ற பயம்
பயம்.....!
பயம்......!


நினைவு நிஜமாகுமா...........
 
அடங்கொன்னியா
ஒரு சின்ன பையன் கண்ணாலமானா பொஞ்சாதியைக் கூட்டிக்கினு ஹனிமூனு போவக் கூடாதா?
அதுக்கு கனலி கோவப்படறதா?
என்னதான் அண்ணன் பிள்ளைகள்ன்னு இருந்தாலும் தனக்குன்னு குழந்தை குட்டி வோணாமா?
இது இன்னாப்பா அக்கிறும்பு?
 
Last edited:
அடங்கொன்னியா
ஒரு சின்ன பையன் கண்ணாலமானா பொஞ்சாதியைக் கூட்டிக்கினு ஹனிமூனு போவக் கூடாதா?
அதுக்கு கனலி கோவப்படறதா?
என்னதான் அண்ணன் பிள்ளைகள்ன்னு இருந்தாலும் தனக்குன்னு குழந்தை குட்டி வோணாமா?
இது இன்னாப்பா அக்கிறும்பு?
கனலிக்கு என்ன அக்கிறமம் பண்ணானும் நம்ம ஹீராே சார் தாங்குவார்.
தாங்கித்தானே ஆகனும்.
 
Top