Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கனவுப் பூக்கள்...அத்தியாயம் 1.

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
வண்ணக் கனவுகள் என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்த வீட்டு வாசலில் பெரிதாகக் கத்திக் கொண்டிருந்தான் ஆனந்த். நல்ல களையான முகம் இப்போது கோபத்தில் சிவந்திருந்தது. அவன் விழி வீச்சுக்குப் பயந்து வேலை அங்கு வேலை செய்யும் ராமுவும் , பாபுவும் பதுங்கியிருந்தார்கள்.

"ராமு அண்ணே! எங்க போயிட்டீங்க? கால் மணியாக் கத்திக்கிட்டு இருக்கேன். இங்க நான் முதியோர் இல்லம் நடத்துறேனா இல்லை ஹாஸ்டல் நடத்துறேனா? இது வீடு மாதிரி பாத்துக்கணும்னு சொல்லியிருக்கேன் இல்ல? இப்ப எதுத்தாப்புல வரப்போறீங்களா இல்லை வேலையை விட்டுத் தூக்கவா?"

மெதுவாக கழுத்தை நீட்டிப் பார்த்தான் பாபு.

"என்ன தம்பி ஏன் கத்திக்கிட்டு இருக்கீங்க?"

"இப்பக் கேளுங்க! ஏன் உங்களுக்குத் தெரியாதா? இன்னிக்குக் காலையில டிஃபன் சரியில்லைன்னு சொல்றாங்க? எங்க ராமு அண்ணன்?"

"இதோ இங்க இருக்கேன் தம்பி" என்றபடி நொண்டி நொண்டி நடந்து வந்தார்.

"இன்னிக்குக் காலியில என்ன டிஃபன் போட்டீங்க?"

"உப்புமா! நேத்து கரண்டு கட் ஆனதுல மாவு அரைக்க முடியல்ல! நாளைக்கு இட்லி போட்டுடறேன் தம்பி"

"ஏன் உப்புமாவை இப்படி வேகாமப் போட்டீங்க? பாருங்க இங்க தங்கியிருக்கறவங்கள்ல சில பேருக்கு ஒத்துக்காம உடம்பு சரியில்லாமப் போயிட்டுது. நான் எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? இங்க இருக்கறவங்க எல்லாம் வயசானவங்க! நல்ல சத்துள்ள சாப்பாடா குடுக்கணும்னு?"

"இன்னிக்கு ஒரு நாள் மன்னிச்சுக்க தம்பி! நாளையிலருந்து நான் சரியாச் செய்யறேன்" என்றதும் உள்ளே போனான் ஆனந்த். அவன் தலை மறைந்ததும் பேச அரம்பித்தான் ராமு.

"ஆமா! இங்க தங்கியிருக்கறவங்க எல்லாரும் பெரிய ஆளுங்க பாரு. புருஷன் இல்லாததும் , மகனால கைவிடப்பட்ட கேசும் தான் வருது. அவங்க கெட்ட கேட்டுக்கு இந்த சாப்பாடு போதாதோ? உப்புமா வேகலைன்னு புகார் பண்ணியிருக்காங்க! இருக்கட்டும் இருக்கட்டும் ! இன்னிக்குக் காப்பியில உப்பை அள்ளிப் போடறேன்"

அதைக் கேட்டவாறு நின்றிருந்தாள் சாந்தா மாமி. நேரே ஆனந்திடம் விரைந்தாள்.

"தம்பி! இங்க பாருங்கோ! நீ ஏதோ நல்லதா வயதான ஆதரவில்லாத பெண்களுக்கு முதியோர் இல்லம் நடத்திண்டு வரே! ஆனா இந்த ராமு ! எங்களை எல்லாம் மதிக்காம கன்னாபின்னான்னு பேசறான். இங்க இருக்கறவாளுக்கு சமைச்சுப் போட ஆள் எதுக்கு? நாங்க பண்ண மாட்டோமா?"

"இல்லை மாமி! நீங்க காசு குடுத்துத்தான் சேரறீங்க! நான் எப்படி உங்களை சமைக்கச் சொல்றது? அது நல்லாயிருக்காது."

"போனாப்போறது ஏதாவது பொம்பளையை சமைக்கப் போடப்படாதோ? உனக்கு இந்த ராமு தான் கெடச்சானா? நான் ஒண்ணு சொல்றேன் கேக்கறியா?"

"சொல்லுங்க மாமி! "

"எனக்கு ஒரு தங்கை இருக்கா! அவ பாவம் பிள்ளையாத்துல கஷ்டப்பட்டுண்டு இருக்கா. கையில காசும் இல்ல! அதனால அவளை இங்க வரச் சொல்றேன். அவ சமைக்கட்டும் . நானும் கூட மாட ஒத்தாசை பண்றேன். அவ பாக்கற வேலைக்கு சம்பளமா சோறு போட்டு தங்கறதுக்கு எடமும் குடு. சரிதானா?"

யோசித்தான்.

"என்ன யோசிக்கற? என் தங்கை பத்மா நன்னாவே சமைப்பா! சுத்தமாவும் செய்வா! என்ன சொல்ற?"

முடிவெடுத்தான் அவன்.

"சரி மாமி! நீங்க அவங்களை வரச் சொல்லுங்க! நாம சேர்த்துப்போம்" என்றான். அவனுக்கு நன்றி கூறி விட்டு அகன்றாள் சாந்தா மாமி.

ஆனால் ஆனந்த் ராமுவை உடனடியாக வேலையிலிருந்து விலக்கவில்லை. அவனை கடைகளுக்குப் போய்வர இருக்கட்டும் என்று விட்டு விட்டான். சமைக்கும் வேலையிலிருந்து விடுதலை கிடைத்தவுடன் சந்தோஷமானான் ராமு.

"எனக்கென்ன இவங்க மேல பகையா? தினமும் அடுப்படியில வேக எனக்கு முடியல்ல! இந்த வேலையெல்லாம் பொம்பளைங்களுக்குத்தான் சரி. நீ வேற என்ன வேலை சொன்னாலும் செய்யறேன் தம்பி"

"கல்யாண வீடுகளுக்கு சமைக்கிறது ஆம்பிளைங்க தான் ராமு! அதை மறக்காத! பாபு தான் கடைக்குப் போயி காய் வாங்கிட்டு வரான். அந்தக் கணக்கை சரி பார்த்து வாராவாரம் எங்கிட்ட ஒப்படைக்கணும். தோட்டத்தை சரியாப் பராமரிக்கணும். இங்க தங்கியிருக்கறவங்களுக்கு உடம்பு சரியில்லைன்னா போயி டாக்டரை அழைச்சுக்கிட்டு வரணும்"

"ஏன் தம்பி இதையெல்லாம் நீங்க தானே செய்துக்கிட்டு இருந்தீங்க?"

"ஆமா! ஆனா நான் திங்கட்கிழமையிலிருந்து வேலைக்குப் போகப் போறேன். ஆபீஸ் விட்டு வந்ததும் எல்லாத்தையும் கவனிக்க முடியாது. அதான் சனி ஞாயிறுல உன்னைக் கேட்டுத் தெரிஞ்சிப்பேன்."

"எதுக்கு திடீர்னு வேலைக்குப் போறீங்க?"

"ரொம்ப நாளாகவே எனக்கு இந்த எண்ணம் இருந்தது ராமு! நான் என்ன தான் முதியோர் இல்லம் நடத்துனாலும் காசு வாங்கிக்கிட்டு தானே அவங்களுக்கு இடம் கொடுக்கறேன். அப்ப ஓரளவு வசதி உள்ளவங்க தான் இங்க வர முடியும். முடியாமக் கஷ்டப்படுறவங்க என்ன பாவம் செஞ்சாங்க? அவங்கள்ல இரண்டொரு பேருக்காவது இடம் கொடுக்கணும்னு எனக்கு ஆசை."

"ரொம்ப உயர்ந்த மனசு தம்பி உங்களுக்கு"

"ஹூம்! அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல! நான் வேலைக்குப் போனா வர வருமானத்துல யாரையாவது காசில்லாம மகனால கைவிடப்பட்டவங்களை சேர்த்துக்கலாம் இல்ல? அதான் இந்த முடிவு" என்றான்.

அவனை மரியாதையோடு கும்பிட்டது ராமுவின் மனம்.

எண்ணெயிட்ட சக்கரமாக கனவுகள் முதியோர் இல்லம் சீராக நடந்தது. சாந்தா மாமியின் தங்கை பத்மாவின் கைமணத்தை அனைவரும் பாராட்டினர். ராமுவும் பொறுப்பு உணர்ந்து செயல்பட ஆரம்பித்தான்.

அன்று வெள்ளிக்கிழமை மாலை ஆனந்த் அலுவலகம் விட்டு வரும் போது ஒரே சத்தமாக இருந்தது. யாரோ ஒரு இளம் பெண்ணின் குரலும் , ராமுவின் குரலும் ஓங்கி ஒலித்தது. இளம் பெண் இங்கு எங்கே வந்தாள் என நினைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தான்.

சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியும் , 22 வயது இருக்கலாம் ஒரு இளம் பெண்ணும் மூட்டை முடிச்சுகளுடன் நின்றிருந்தார்கள். அந்தப் பெண் தான் கத்திக் கொண்டிருந்தாள்.

"சார்! நான் லெட்டர் போட்டதுக்கு கொண்டு வந்து சேருங்கன்னு பதில் போட்டுட்டு இப்ப வந்து முடியாதுன்னா நான் என்ன சார் செய்வேன்?"

"மேடம்! நீங்க கடிதத்துல எதுவுமே விவரமா எழுதல்ல! நாங்களும் தெரியாம அனுமதிக்கிறோம்னு பதில் போட்டுட்டோம். இப்ப இடம் இல்லை! போங்க வெளிய" என்றான் ராமு.

"ராமு! என்ன ஆச்சு? ஏன் இப்படிக் கத்துறீங்க? சத்தம் வெளிய வரைக்கும் கேக்குது" என்றான் ஆனந்த் நுழைந்து கொண்டே.

அந்தப் பெண் சடாரென திரும்பிப் பார்த்தாள்.

அவளைப் பார்த்த அந்த நிமிடம் தன்னை இழந்தான் ஆனந்த். பெண்ணென்றால் எப்படிக் கற்பனை செய்து வைத்திருந்தானோ அப்படி இருந்தாள். மாநிறம் , மெல்லிய உருவம் நிறத்திற்கேற்ற உடை அவளது பண வசதி சுமார் தான் எனச் சொல்லியது. ஆனால் அவள் கண்கள் அவனைக் காந்தம் என ஈர்த்தன. ஒரு நிமிடம் மெய் மறந்து அவளையே பார்த்தவாறு நின்று விட்டான் ஆனந்த்.

"சார்! நீங்க தான் இதுக்கு ஓனரா? நீங்களே கேளுங்க சார் அநியாயத்தை ! எங்கம்மாவை இங்க சேர்த்துக்கறேன்னு சொல்லி எனக்குக் கடிதம் வந்திருக்கு. அதை நம்பித்தான் நான் திருநெல்வேலியிலிருந்து கிளம்பி வந்திருக்கேன். இப்ப இவரு இடம் இல்லைன்னு சொன்னா நான் எங்கே சார் போவேன்?" என்றாள்.

சுதாரித்துக் கொண்டான் ஆனந்த்.

"மேடம்! உங்க பேர் என்ன?"

"அகிலா! இதோ நிக்கறாங்களே இவங்க என் அம்மா! இவங்களைத்தான் சேர்த்துக்க மாட்டேங்கறாரு உங்க செக்கரட்டரி" என்றபடி அவன் அருகில் வந்தாள். படபடக்கும் இதயத்தை கட்டுப்படுத்தியபடி ராமுவை முறைத்தான்.

"என்ன ராமு? இவங்க என்ன சொல்றாங்க? ஏன் இந்தம்மாவை சேர்த்துக்க முடியாதுன்னு சொல்ற?"

"சார் ! இந்தப் பொண்ணு பொய் சொல்லுது சார்! நமக்கு போட்ட லெட்டர்ல எங்கம்மாவை சேர்த்துக்க முடியுமா? உண்டான பணத்தைக் கட்டிடறோம்னு எழுதியிருந்தாங்க. ஆனா இப்ப வந்து நானும் கூடத்தான் தங்குவேன்னு சொல்றாங்க சார்" என்றான்.

திகைத்துப் போனான் ஆனந்த்.

"மிஸ் அகிலா! இது முதியோருக்கான இல்லம் தான். இதுல நீங்க தங்கறதை நாங்க அனுமதிக்க முடியாது. "

"நீங்க எவ்வளவு சொல்றீங்களோ அவ்வளவு பணம் கட்டத் தயாரா இருக்கேன் சார்"

"பணம் பிரச்சனை இல்ல மேடம்! இன்னைக்கு நான் உங்களைத் தங்க சொல்லிட்டா நாளைக்கு இன்னொரு பொண்ணு தன்னோட அம்மாவோட தங்கறேன்னு சொல்லுவாங்க! அப்புறம் இப்பிடியே போச்சுன்னா லேடீஸ் ஹாஸ்டல் தான் நான் நடத்தணும். அது என்னால முடியாது. நீங்க வேற எடம் பாருங்க" என்றான் மனதைக் கல்லாக்கிக் கொண்டு

"சார்! எங்க நிலையைக் கொஞ்சம் நினைச்சுப் பாருங்க சார்! எங்களுக்கு இந்த ஊர்ல யாரையும் தெரியாது. எனக்கு வேலை கிடைக்கிற வரை நான் எங்க சார் இருக்க? பாதுக்காப்பா இருக்க இந்த இடம் தான் சார் பெஸ்ட். கொஞ்சம் தயவு பண்ணுங்க சார்" அவள் கெஞ்சவும் இவன் நிலை பரிதாபமானது.

சுற்றுமுற்றும் பார்த்தான். யாராவது இந்தப் பெண்ணை சேர்த்துக்கொள் என்று சிபாரிசு செய்ய மாட்டார்களா என்ற நப்பாசை மனதுள்.

அகிலாவின் அம்மா மெதுவாக நடந்து வந்தாள்.

"தம்பி! உங்க நிலைமை எனக்குப் புரியுதுப்பா! எனக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை! ராத்திரி ரெண்டு மணிக்கு ஒரு மாத்திரை சாப்பிடணும். அது தான் அகிலாவுக்குக் கவலையா இருக்கு. ஒரே ஒரு வாரம் தங்க இடம் கொடுப்பா போதும். அப்புறம் அவ வேலை கெடச்சு நாங்க ஒரு வீடு பாத்துக்கிட்டுப் போயிடறோம்" என்றாள் தணிந்த குரலில்.

"அதை இப்பவே செஞ்சா என்ன?" என்றான் ராமு.

"சும்மாரு ! " என்றவன் அம்மையார் பக்கம் திரும்பி "எனக்கும் என்ன செய்யறதுன்னே தெரியலையேம்மா! நானும் இந்த இல்லத்தை எட்டு வருஷமா நடத்திக்கிட்டு வரேன். வயசானவங்களை கொண்டு தள்ளிட்டு காசைக் குடுத்துட்டு ஓடறவங்களை தான் நான் பாத்துருக்கேன். ஆனா இவங்க கூட தங்கறேன்னு சொல்றாங்க! அதான் பிரச்சினை" என்றான்.

சாந்தா மாமியும் பத்மா மாமியும் வந்தார்கள்.

"தம்பி! நீ படிச்சவன்! உலகத்தோட நல்லது கெட்டது தெரிஞ்சவன்! பாவம் இவ வயசுப் பொண்ணு! தாயாரைக் கூட்டிண்டு எங்க போவா? அப்படியே போனாலும் யாராவது இவாளை ஏமாத்திட்டா? பாவம் இல்லையா இவா?"

"எனக்குத் தெரியுது மாமி! ஆனா வேற வழியில்லையே?"

"எனக்கு ஒரு வழி தொண்றது. சொல்லட்டுமா?" என்றாள் பத்மா மாமி.

"சொல்லுங்க மாமி! நல்ல வழியா இருந்தா செஞ்சு பாக்கலாமே?"

"நம்ம தோட்டத்துல ஒரு கட்டடம் இருக்கே? அது சும்மாத்தானே கெடக்கு? அதுல இவாளைத் தங்க வையேன். வேணும்னா வாடகையும் வாங்கிக்கோ! என்ன சரிதானா?"

"ஐயோ மாமி அங்கயா? அதுல குப்பையா இருக்கே? சுத்தம் பண்ணி ரெண்டு வருசம் ஆச்சே? " என்றான் ஆனந்த்.

"பரவாயில்லை சார்! அதை நாங்களே சுத்தம் பண்ணிக்கறோம். எவ்வளவு வாடகைன்னு மட்டும் சொல்லுங்க! இப்பவே குடிவந்துடறோம்." என்றாள் அகிலா.

இதில் ஆனந்துக்கு முழு சம்மதம் தான். எந்நேரமும் அகிலாவைப் பார்த்தபடி இருக்கலாமே?

"சரி சரி! இதுவும் நல்ல யோசனை தான். ஒரு ஆளால தனியா சுத்தம் செய்ய முடியாது. எல்லாரும் சேர்ந்து செஞ்சா சீக்கிரம் முடிஞ்சிடும். இன்னிக்கு ராத்திரி நீங்க இங்க தங்கிக்குங்க! நாளைக்கு காலையில சுத்தம் செஞ்சி குடி போகலாம். ஒரு நாள்ல ஒண்ணும் ஆயிடாது." என்றான்.

அதன் படி அவர்கள் அன்று இரவு தங்கிவிட்டு மறு நாள் விடியற்காலையில் வேலையை ஆரம்பித்து பிற்பகலுக்குள் முடித்து விட்டார்கள். ஆனந்தும் கூடவே இருந்து எல்லா உதவியும் செய்தான். சமையலுக்கு சில பாத்திரங்கள் , அடுப்பு முதலியவை தேவைப்பட்டன. அவற்றை இருவருமாக வாங்கி வந்தனர். மதியத்துக்குள் வீட்டை அழகாக செட் செய்து விட்டாள் அகிலா.

பால் காய்ச்சி அனைவருக்கும் கொடுத்தாள். அன்று ஆனந்த் அங்கேயே சாப்பிட்டான். அகிலாவின் சமையல் சுமார் என்றாலும் பாராட்டித் தள்ளி விட்டான். உள்ளூர சிரித்துக் கொண்டாள் சாந்தா மாமி.

அன்று இரவு படுக்கும் போது அகிலாவின் வீடு இருக்கும் திசையில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான்.

"அகிலா! நீ யாரு? எதுக்கு இந்த ஊருக்கு வந்திருக்க? எதுவுமே எனக்குத் தெரியாது. இன்னைக்கு நீ வீட்டுல மட்டும் குடியேறல்ல! என் மனசுலயும் நீ குடியேறிட்ட! எனக்குள்ள நீ அதிர்வுகளை ஏற்படுத்தினா மாதிரி நான் உனக்குள்ள ஏற்படுத்தியிருக்கேனா? உனக்கு என்னைப் பிடிக்குதா?" என்றெல்லாம் யோசித்தபடி உறங்கினான்.

அங்கே அகிலாவோ எப்போது வேலை கிடைக்கும்? அது வரை இந்தப் பணம் போதுமா? இல்லையென்றால் என்ன செய்ய? என்று கவலையில் ஆழ்ந்து தூங்காமல் விழித்திருந்தாள்.
 
Nirmala vandhachu ???
Best wishes for your new story pa
 
Top