Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கவிப்ரீத்தாவின் உன் சரிபாதி - 22

Advertisement

பெரிய டாக்டர்ன்னா டேபிள்ஸ் கரெக்ட்டா இருக்கனுமா என்ன ?

கதை அருமை மா. ரசித்து ரசித்து எழுதிய வார்த்தைகளை ரசித்து, ரசித்து வாசிக்க கொடுத்ததற்கு நன்றி.
 
பொறுமையான காதலுக்கு கிடைத்த பரிசு அந்த லூசு டாக்டரும் ரெண்டு நல்ல முத்துக்களும் அருமையான கதை 😀
 
Kavi pritha சிஸ்டர் எழுதிய
"உன் சரி பாதி"
கன்யா சதாசிவம்
பெயரோடு ஒட்டி இருக்கும் கணவனோடு ஒட்டி வாழ்வதற்கு இவளுக்கு நீண்ட நெடிய ஐந்து ஆண்டுகள் தேவைப்பட்டது.. வலியோடு ஏன் எதற்கு என்று தெரியாமலேயே காத்திருக்கிறாள் தன்னவனுக்காக...அவனுக்கு இவளின் ஞாபகம் ஏதேனும் இருக்குமா என்ற அச்ச பாட்டுடன்..
அவனின் முகமும் இவளுக்கு அவ்வளவாக பரிச்சியமும் இல்லை.. இவளின் முகமும் அவனுக்கு ஞாபகம் இருக்குமா என்பதும் சந்தேகமே..😔
சதாசிவம்.. இருதய மருத்துவன்.. படிப்பின் மீதும் மருத்துவத்தின் மீதும் அலாதி பிரியம் இவனுக்கு.. இக்கட்டான சூழ்நிலையில் நிறுத்திய பெற்றோர் மீதும் தமக்கையின் மீதும் கோபம் கொண்டு தாலி கட்டியவளை மறந்து செல்கிறான் நாடு கடந்து..
கோபம் மறந்து திரும்பி வந்தானா விட்டு சென்ற மனைவியின் துயர் துடைத்தானா என்பது கதையில்..
ப்ரோக்ராம் செய்யப்பட்டது போல நேர்கோட்டில் பயணிக்கும் இவன் தன் உணர்வுகளை மெல்ல மெல்ல மீட்டெடுத்து தன்னை மாற்றிக் கொள்கிறான் தன் மனம் கவர்ந்தவளுக்காக மட்டுமே 🥰
வந்த சில நேரங்களிலேயே பெப்பி என செல்ல பெயரும் வைத்து விடுகிறான் தன் மனையாளுக்கு 😀
கன்யா.. தைரியமான பெண் அதே நேரம் கணவனின் அனுசரனைக்கு ஏங்கும் சராசரியான மனைவி 😔 யேஸ்வந்துடன் இவளின் நட்பு அழகு 🥰 கல்யாணி வெங்கட் அருமையான மாமியார் மாமனார் 👏👏 மகன் செய்யும் தவறுகளுக்கு மருமகளை தாங்கும் இவர்களின் செயல் அருமை
அண்ணன் கார்த்தியுடன் இவளின் பாண்டிங்கும் அழகு 🥰 அருமையான கதாபாத்திரங்களுடன் சுவாரசியமாகும் விறுவிறுப்பாகவும் நகர்ந்தது கதை 👏 வாழ்த்துக்கள் ரைட்டர்ஜி 🥰👏👏
Good luck dear 🥰❤️💐
Keep rocking 🌹🥰💐
 
Top