Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Un Sari Paathi

Un Sari Paathi 22

அத்தியாயம்       22

கனிக்கு இவனின் பேச்சு… நிம்மதியைதான் கொடுத்தது… கண்             மூடி அமர்ந்து கொண்டாள்… சதாவும் அவளின் நிலை பார்த்து           ஏதும் சொல்லலாமல் அமர்ந்து கொண்டான்…

மெல்ல மெல்ல இயல்பாகினான் சதா… “போலாமா.. பெப்பி”         என்றவன், பிடித்திருந்த அவள் கைகளில் முத்தமிட்டு அவளையே    பார்க்க…



Advertisement

கனி “ம்.. வீட்டுக்கு போலாம்ங்க..” என்றாள்.. சிரித்தபடியே…

சதா “இல்ல, உனக்கு வளையல் வாங்கிட்டுதான் போறோம்…”        என்றவன் சொன்னபடி செய்தே… வீட்டிற்கு கூட்டி வந்தான்.

நாட்கள் நகர தொடங்கியது.

Advertisement

வாளைகப்பு முடிந்து அவளை இரண்டு நாள் தாய் வீட்டிற்கு          அனுப்பி வைத்தவன்… தானே போய் அழைத்தும் வந்துவிட்டான்.       யாரும் எதுவும் சொல்வதிற்கில்லை. அவன் விருப்படியே            நடக்கடும் என அமைதியாகினர்.

Advertisement

நாட்கள் நெருங்க நெருங்க… கனி சோர்ந்து போனாள்… வயிறு…       பெரிதாக தொடங்கியது. மூச்சு வாங்க தொடங்கியது… அத்தோடு..     இரண்டு பிள்ளைகள்… வயிறு முழுக்க… அசைய… படக், படக் என       இந்த பக்கமும் அந்த பக்கமும் அசைய.. கனி… சோர்வு அதிகமாக    தெரிந்தது.

சதா, இப்போது மாதத்திற்கு ஒரு தரம் டெல்லி செல்லுவதை நிறுத்தியிருந்தான்… கால்ஸை சற்று நேரம் சென்று, கனி             உறங்கிய பின் பேச சென்றான்.

கனி உறங்கும் வரை அவளின் வயிற்று பகுதியில் அதற்கான           கிரீம் கொண்டு மென்மையாய் வருடி விடுவான்… தந்தையின்            கை பட்டதும்… இன்னும் பிள்ளைகள் துள்ளியது. கனி சிரித்தபடி        “ப்ளீஸ் சிவா… நான் தூங்கனும் நீங்க கால் மட்டும் பிடிச்சி          விடுங்க…” என்பாள்.

Advertisement

சதா, சற்று நேரம் பிள்ளைகளுடன் பேசிய பிறகுதான் கையை       எடுப்பான். அவளை சற்று சீராட்டி, தலை கோதி… தூங்க வைத்தே..     கால்ஸ் செல்லுவான்.

நாட்கள் செல்ல செல்ல… கனிக்கு இரவு உறக்கம் என்பதே குறைய தொடங்கியது. அப்போதெல்லாம் கால்ஸ் விட்டு வந்து, அவளுடன் பேசியபடியே அமர்ந்து கொள்வான்.

அப்படிதான் அன்று… இருவரும்… ஏதோ பேசிக் கொண்டிருக்க…         கனிக்கு வலி வர தொடங்கியது… மணி இரவு இரண்டு… சதா,     பொறுமையாக அவளை குளிக்க செய்து… வலி வருகிறதா என       பார்த்து… ஐந்து மணிக்குதான் மருத்துவ மனை அழைத்து          சென்றான்.

மனைவியின் அருகிலேயே இருந்தான்… வலி கொஞ்ச கொஞ்சமாக   குறைந்து ஐந்து நிடத்திற்கு ஒருதரம் என வர… சதாவும் லேபர்       ரூமினுள் நின்று கொண்டான்… அவளின் கைகளை பிடித்தபடியே.

அழகான இரண்டு ஆண் குழந்தைகள் நிமிட இடைவெளியில்,        மண்ணை தொட… சதாக்கு, அப்போதும் பொறுமையாக இருந்தான்… கனியிடமே.

குழந்தையை வாங்கி சோதனை செய்து மருத்தவர்கள்… இவனிடம்       தரும் வரை… கனியிடமிருந்து நகரவில்லை சதா.

அந்த பெண் மருத்துவர் “சதா சார்.. இந்தாங்க… உங்க பசங்க… நீங்க    போங்க… இனி கனிய, நாங்க பார்த்துக்கிறோம்” என சொல்லவும்தான்  அவளின் கண்ணசைவில் குழந்தைகளை அழகாக தன்னிரு           கைகளில் ஏந்தி… கனியிடம் காண்பிக்க…

அன்னையாக நெற்றியில் முதல் முத்தம் தந்தாள் கனி….             தங்களது சின்ன சின்ன கண்களை இன்னும் திறக்காமல்…           வெளியே வந்தது முதல்… நெற்றியை சுருக்கி சுருக்கி…                  சிப்பி இமையை… மெல்ல மெல்ல அசைத்து… அந்த இரண்டு      நிமிஷத்தில்… எத்தனை பாவம்… சதா, சொக்கித்தான் போனான்        அதில்…

வெளியே வந்து… தன் அன்னையின் கையில் ஒன்றும், தன்        அப்பாவிடம் போக… அவர்.. பயந்தார் பிள்ளையை வாங்க,              எனவே தன் தம்பியிடம் ஒன்றும் கொடுத்தான் சதா.

ஷண்முகம் பேச்சு கொடுக்க… மெதுவாக தனது ஒற்றை கண்ணை      திறந்து பார்த்தது அந்த ரோஜா மொட்டு… பின் மெல்ல இரண்டாவது     கண்… சொந்தம்தான் என புரிந்தது போல… தன் மணி விழியாள்…        பார்க்க தொடங்கியது…

ஷண்முகம்… “சதா… ண்ணா… இங்க பாரேன்… எவ்வளோ விவரமா பார்க்கிறான் பாரேன்” என தன் அண்ணனை அழைக்க… அந்த இடமே… குதுக்கலாமானது.

ஏழு வருடம் சென்று…

மாலை மணி ஏழு… கனி, பசங்க ஹோம் வொர்க் செய்ய செய்ய…      உள்ளே சென்று, டிபன்னுக்கு… ரெடி செய்துக் கொண்டிருந்தாள்…

பெரியவன் ப்ரணவ் “ம்மா… என்னோட… ஸ்பைடர் மேன்… வாட்ச…       தூக்கி போட்டு உடைச்சிட்டான் ம்மா..” என்றான்.

கனி “ஹோம் வொர்க் செய்யும் போது… பேச கூடாது…” என்றாள் அமைதியான குரலில்..

எங்கே அதெல்லாம் அவர்களின் காதில் விழுந்தது… ப்ரனேஷ்…           ”ஏன்,… நீ என்னோட… போகி மேன் கத்திய உடைச்சல்ல…” என்றான்      இவன் பதிலுக்கு..

பெருசு “நான் எங்க டா, உடைச்சேன்.. நீதான் கைலிருந்து பிடிங்கின…    அதான் உடைஞ்சி போச்சு… என்ன சொல்ற” என்றான் அவன் வரிந்து கட்டிக்கொண்டு….

சின்னது “இல்ல, நீதான் உடைச்ச…” என்றான் மீண்டும்

கனி திரும்பவும் “வேலைய முடி…” என அதட்டி எழுந்து கொண்டாள்    உள்ளே செல்ல..
இப்போது என்ன ஆனது என தெரியவில்லை… “ஏண்டா என்னோடத    எடுத்த” என்று சொல்லியபடியே யாரின் பாகோ.. பறந்தது…

கனி, திரும்பி வந்து “யாரோடது” என தொடங்கினாள். ரெண்டும்        வாயே திறக்கல…

“எடுங்க…” என்றாள் இருவரையும் பார்த்து…

பெரியவன் “அவன் தாம்மா… தூக்கி போட்டான்…” என ப்ரனேஷ்சை     காட்ட…

சின்னவன் மறுத்தான் “இல்ல ம்மா…” என்றான். கனிக்கு பொறுமை   பறந்தது… என்னமோ பண்ணுங்கடா… என நினைத்து… “இப்போ நான் வரதுக்குள்ள… எல்லாம், பினிஷ் பண்ணி இருக்கணும்” என திரும்பி நடந்தாள், அந்த குரலில் என்ன கண்டான்களோ… இருவரும் முனகிய    படியே, ஏதோ செய்து கொண்டிருந்தனர் சத்தமில்லாமல்.

சிறிது நேரம் சென்று…

சின்னவன் பிரனேஷ்…. “ம்மா… இன்னிக்கு மட்டும் சொல்லும்மா…         இந்த எய்த் டேபிள் சொல்லும்மா… ப்ரனா… டிடின்ட் ஷோ ம்மா…”     என்றான்.

கனி “நீ படிச்சு எழுது… போ…” என்றாள்…

ப்ரனேஷ் “ம்மா… மணியாச்சி… நாளைக்கு படிக்கிறேன்… ப்ளீஸ்….        ப்ளீஸ்… ..” என்றான் அலட்டாமல்.

கனி முமுரமாய் தாளித்து கொண்டிருந்தாள்… இவன் மீண்டும்         மீண்டும் நச்ச தொடங்கினான்.. வெங்கட்டும், கல்யாணியும்            வாக்கிங் சென்றிருந்தனர்… சதா அப்போதுதான் உள்ளே வந்தான்…

வந்தவுடன் அமைதியாக தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்த      ப்ரணவ் “ஹாய் ப்பா… என்ன சீக்கிரம் வந்துட்டீங்க” என்றான்.

சதா “ம்… இரு… குளிச்சிட்டு வரேன் டா” என உள்ளே நகர…

தந்தை குரல் கேட்டு கிட்செனில் இருந்து வந்தான் ப்ரனேஷ்…             “ப்பா… ப்பா” என மாடியேறும் போது, பின்னாடியே சென்றான்…

சதா “என்ன பா..” என்றான் வாஞ்சையாய்.

“ப்பா.. நோ யூ… எய்த் டேபிள்” என்றான்.

சதா, தன் மகனை ஏற இறங்க பார்த்தான்… ‘இவனுங்களுக்கு… தன்    அம்மாவ தவிர யாருக்கும் எதுவும் தெரியாதுன்னு ஒரு நினைப்பு’          என எண்ணியபடியே, வந்த களைப்பில் ஏதும் சொல்லாமல்          “என்னடா வேணும்…” என்றான் காரமாக.

”ப்பா… எய்த் டேபிள் வேணும்” என்றான்…

சதா “போன்ல பாருடா…” என்றான் பொறுப்பாய்.

“ப்பா அம்மா… தரல, என்னைய எழுத சொல்லிட்டா” என்றான்           வெடு வெடுவென…

சதா சிரித்தபடியே… “ம்… டூ இட்..” என்றான்.

“ப்பா… டைம் ஆச்சு… ப்ரணா… பேட் எடுத்துப்பான்… ப்ளீஸ்..         சொல்லுங்க” என்றான்.

சதாவும் அறையில் சென்றபடியே… “ஒன் எய்ட்ஸ் ஆர் எயிட்.. “ என தொடங்க..

மகன் “ப்பா… ஒன் எய்ட் இஸ் எய்ட்” என திருத்தினான்.

சதா “ம்கூம்… “ என்க..

“ம்…. சொல்லுங்க” என்றான்.

சதா “டூ எய்ட் ஆர் சிச்டீன்” என தொடர்ந்து சொல்லிக் கொண்டே… குளிப்பதற்கு தயாராகி, பாத்ரூம் வாசலில் நின்றபடி முடித்து,          உள்ளே சென்றான்.

மகனும் முடித்து கீழே சென்று, தன் அம்மாவிடம் காண்பிக்க… கனி     “வரேன் அங்க வை” என்றவள் உள்ளேயே இருந்தாள்.

பெரியவன் ப்ரணவ் பேட் எடுத்து வெளியே நின்றான் விளையாட…   இருவரும் விளையாட தொடங்கினர்.

பத்து நிமிடம் சென்று… வந்த கனி “எங்க எடு..”  என ஹோம் வொர்க் நோட்டை செக் செய்ய… டேபிள்ஸ் தப்பாக இருந்தது…

கனி “படின்னு சொன்னேன் தானேடா.. படிச்சியா…” என்றாள்.

தலையை  தலையை ஆட்டினான் ப்ரனேஷ்… கனி “சொல்லு..”          என்க… பே பே… என விழிக்க… கனி சோபாவிலிருந்து எழுந்து        நின்றாள்… “படிச்சில்ல… சொல்லுடா..” என்க…

அப்படியே நின்றான்… பேசவேயில்லை… கனிக்கு பொறுமை பறந்தது “சொல்லுடா “ என கை ஓங்க… “ம்மா… நானில்ல… ப்பா தான்” என சொல்லியபடியே ஓடினான்.

சதா, அப்போதுதான் இறங்கி வந்தான். கனியின் காளி அவதாரம்     பார்த்து… ஒன்றும் சொல்லாமல் அமர்ந்து கொண்டான்…

கனி “ஓடாத ப்ரனேஷ்.. நில்லு” என கத்த…

ப்ரணவ் “ம்மா.. அவன் எழுதல… அப்பாதான் சொல்லிக் கொடுத்தார்,        டேய்  நீ வாடா… இந்தா… பால் போடு” என சொல்லி தன் தம்பியை அழைத்து சென்றான் பெரியவன் கூலாக…

கனிக்கு இருந்த ரணகளத்தில்… சிரிப்பு வந்தது… அடக்கி கொண்டு…       “நில்லு டா… போ… படிச்சு எழுதிட்டு… போ” என மிரட்ட… சற்று     அசைந்தான் சின்னவன்.

தன் அப்பாவை முறைத்தபடியே… சென்று… ப்ர்ணவின் டேபிள்             புக் எடுத்து படிக்க தொடங்கினான்….

பெரியவன் “ப்பா… அவன் வர வரைக்கும் நீங்க பால்.. போடுங்க”      என்றான்.

கனி, தன் கணவன் முகத்தை பார்த்து வரும் சிரிப்பை அடக்கி       கொண்டு… உள்ளே சென்றாள்.

சதா “என்ன சிரிப்பு…” என்றான் மெல்ல… கனி உள்ளே        சென்றுவிட்டாள்.

ப்ரணவ்  “வாங்கப்பா….” என கை பிடித்து இழுத்து சென்றான்.

சதாக்கு கிரீன் டீ எடுத்து வந்து கொடுத்து சென்றாள் கனி.         அப்போதும் மெல்லிய சிரிப்பு ஒன்று அவள் முகத்தில் கண்டான்         சதா.

இப்படியே பசங்க இருவரும் கனியை காளியாகவும்…. தேவியாகவும்     மாற்றி மாற்றி செய்து, உண்டு படுக்க சென்றனர்…

அப்பாடா… என அந்த வீடே இப்போதுதான் பெருமூச்சு விட்டது…       எப்போ எங்க முட்டிகொள்வான்கள் என தெரியாது… எப்போதும் இருவருக்கும்… வாய்க்கு வாய், கைக்கு கை, சண்டைதான்.

கல்யாணிதான் பாதி கெடுப்பது பிள்ளைகளை… தன் மகனையே          விட்டு தராதவர்… தன் பேரன்கலையா விட்டு கொடுப்பார்….           ப்ரனேஷ்.. பிரணவ்வின்… அடிமை அவர்களின் கல்யாணி பாட்டி.

வெங்கட்டும் சற்று பொறுமையாய் பதில் சொல்லுவார்…        முடியவில்லை என்றால், என்னமோ பண்ணுங்கடா என             வேடிக்கை பார்க்க தொடங்கி விடுவார், அவங்களின்              ரகளையை…

ஷண்முகத்திற்கு ஒரு பெண்… மூன்று வயதாகிறது பவித்ரா…             தன் அண்ணன்கள் இருவரையும் கண்டுவிட்டால்… கையில்             பிடிக்க முடியாது அவளை…

இவங்களும்… என்னோட தங்கச்சி டா… என்னோட தங்கச்சிடா…            என பிய்த்து எடுத்துவிடுவாங்கள் அவளை… அதுவும் வீரிட்டு          அழும்… எல்லாம், அந்த பத்து நிமிடத்திற்குத்தான். அதன் பிறகு      எப்போதும் அவளுடன் பொறுமையாகத்தான் விளையாடுவார்கள்.

பெரியவர்கள் அனைவரும் உண்டு முடித்து… படுக்க செல்ல…          கனியும் மேலே வந்தாள்… இப்போது சதா அர்த்தராத்ரி கால்ஸ் பேசுவதில்லை… நிம்மதி என்னவோ கனிக்குதான்.

தனி தனி கட்டில் பசங்களுக்கு… ஒரே கட்டிலில் படுப்பதில்லை     இருவரும் சண்டைதான்… மேலும் தூக்கத்தில் இவர்கள் சுற்றும்      சுற்றுக்கு ஒரே கட்டில் போதவில்லை…

அடுத்த அறையில் பொற்றோர்..
கனி உள்ளே வரவும் சதா ஏதோ தேடியபடியே…                   எப்போதும் போல் லேப்பில், முகத்தை புதைத்திருந்தான்.

கனி வரும் சப்தம் கேட்டு நிமிர… இன்னும் மெருகேறி…            உழைப்பின் சாயலுடன்.. அந்த தியானத்தின் ஒளி, அவன்          முகத்திற்கு அவ்வளவு தேஜஸ் கொடுக்க… ப்பா… கண் கூசியது       அவனின் புன்னகையில் கனிக்கு.

இன்னமும் அதே வாஞ்ச்சைதான் அவளிடம் “வா டா” என்றவன்      தன்போல் வேலையை பார்க்க தொடங்கினான். கனி உடைமாற்றி…       படுக்க தொடங்க, கவனித்திருந்தவன் “என்ன சிரிப்பு உனக்கு” என்றான்     அந்த லேப்பிலிருந்து பார்வையை எடுக்காமல்…

கனிக்கு, தெரியும் அவன் கேட்பான் என இப்போது கேட்கவும் அந்த நினைவில் சிரிப்பு வந்தது… மீண்டும் சின்னதாக சிரித்துவிட்டு…       படுத்துக் கொண்டாள்.

சதா “என்ன… சொல்லு” என்றான் தலையை நிமிர்த்தாமல்.

கனி “உங்களுக்கு கணக்கே தெரியலை… ப்ரனேஷ்க்கு டேபிள்ஸ்         தப்பா சொல்லிக் கொடுத்திருக்கீங்க… பைவ் எய்ட் ஆர் போர்ட்டி      எய்ட்ன்னு சொல்லி தந்திருக்கீங்க… என்ன டாக்டர் டேபிள்ஸ்           மறந்து போச்சா… இல்ல தெரியாதா….” என சிரித்தாள்…

சதாவின் முகம் அஷ்ட்ட கோணலானது…. “அப்படியா சொன்னேன்…      ஐயோ அதுக்கு அவன, அடிச்சியா” என்றான்… பொறுமையாக…

கனி படுத்தபடியே “ம்கூம்…” என்றாள் இப்போதுதான் நிமிர்ந்து       பார்த்தான் அவளை… இன்னும் மாறாத காதல்தான் அவள்         கண்ணில்… அது இப்போது பேரன்பாக… நிலை பெற்று.. கண்           வழியே சுடர்விட்டது.

சதா எப்போதும் போல அதில் நெகிழ்ந்தான்… “வேலைய கெடுக்காத      டா… தூங்கு, எனக்கு வேலையிருக்கு… குட் நைட்” என்றான். அவளை பாராமல் கனியும், அவன் பேச்சை தட்டாமல் செய்ய தொடங்கினாள்.

அவனின் சரிபாதி அவளே…

(சுபம்)

#########

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!