Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே 13

Advertisement

lekha_1

Active member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

இதோ அடுத்த அத்தியாயம் பதிவிட்டுவிட்டேன். படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும். இனி அடுத்து கொண்டுபோகலாமா வேண்டாமா என்பதை நீங்கதான் சொல்லனும்!


காதல் 13

1246

சாளரத்தின் வழியே வெளியே தெரிந்த மழைத்துளிகளை பார்த்தவாறு நின்றிருந்தாள் அனிலா. அந்த வீடியோவைக் கண்டதும் அவனை அனைத்து வழிகளிலும் ஏதோ ஒரு கோபத்தில் ப்ளாக் செய்துவிட்டாள் தான். ஆனாலும், அவனிடம் பேசவேண்டும் என்று மனம் தவியாய் தவித்தது. அதில் முகிலின் தரப்பில் எந்த தவறும் இல்லை என்றாலும், அவன் ஏதோ செய்திடவேண்டும், கடைசிக்கு, இது ஒன்றுமே இல்லை என்று அவன் கூறிட வேண்டும் என அவள் எதிர்பார்த்தாள்.

அந்த மூன்று வார்த்தைகளையும் அவனுக்கு கூறும் உரிமை தனக்கு மட்டுமே வேண்டும் என்று அடம்பிடித்தது அவள் மனது. அதனை வேறு ஒருவர், என்னதான் அது விளையாட்டாக என்றாலும், கூறுவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

‘நான் உனக்கு முக்கியமா இல்லையா?’ என்று அவனிடம் கேட்டுவிட துடித்தாலும், அதனை செயல்படுத்த தயக்கம் தடுத்தது. இந்த யோசனையோடே சாளரத்தின் கண்ணாடியில் ஓடும் மழைத்துளிகளை பார்த்திருந்தாள். சிறிதுநேரம் அதன் ஓட்டத்தை தொடர்ந்தவளுக்கு மனதில் ஓடியது முழுவதும் அவன் நினைவுகளே!

அதனோடு எப்போது அவள் கையை உயர்த்தி அந்த மழைத்துளிகளின் மேல் அவன் பெயர் எழுதினாள் என்பதை அவளே அறியவில்லை. எழுதியதும் உணர்வுக்கு வந்தவள் அதனை அழிக்க மீண்டும் தன் விரல்களை அங்கே கொண்டுபோக, அது முடியாமல், அவன் பெயரையே ஸ்ரீராமஜெயமாக கொண்டு ஜெபித்தன அவள் விரல்கள். ஒரு கட்டத்தில், இதற்குமேல் எழுதுவதற்கு எங்களிடம் இடமில்லை என அந்த ஜன்னலே ஹவுஸ்ஃபுல் போர்டை மாட்டிவிட, அதனை கேட்காமல், முதலில் எழுதிய இடங்களில் எல்லாம் மீண்டும் ஒருமுறை எழுதிவிட்டே ஓய்ந்தாள்.

அதனை திருப்தியாக பார்த்திருந்தவளை கலைத்தது அவள் கைப்பேசியின் ஒலி. என்னவாக இருக்கும் என்று பார்த்தவளுக்கு மெயில் அனுப்பியிருந்தான் முகில்.

“உன்னை எந்த வகையிலும் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. தயவு செய்து என் அழைப்பை எடு. உனக்கு என்ன ஆயிற்று என்று தெரியாமல் இங்கே தவிக்கிறேன்” என்று சுருக்கமாக முடித்திருந்தான்.

அதனை படித்ததும் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது அவள் முகத்தில். அவன் நினைத்திருந்தால், போனால் போகட்டும் என்று நினைத்திருக்கலாம், அல்லது வேறு யாரிடமாவது இருந்து அழைத்திருக்கலாம். அவள் கூட அப்படி எதுவும் செய்வான், அப்போது திட்டலாம் என்று தான் நினைத்திருந்தாள். ஆனால், அவ்வாறு செய்யாது அவள் மெயில் ஐடியை கண்டுபிடித்து செய்தி அனுப்பியது ஏதோ ஒரு வகையில் ஆறுதலளித்தது. அவர்களின் நடுவே நடக்கும் விடயம் வெளியில் இருப்பவர்களுக்கு தெரியக்கூடாது என்று எண்ணுகிறானே!

அதில் சிறிதே அளவு கோபம் குறைய, வாட்ஸ்ஆப்பில் இருந்து மட்டும் ப்ளாக்கை எடுத்துவிட்டாள். அதற்காகவே காத்திருந்தாற்போல் அவன் அழைத்தான். ஆனாலும் அவளுக்கு உடனே அழைப்பை எடுக்க விருப்பமில்லை. ‘போடா… நீ கூப்பிட்டா, நான் எடுக்கனுமா?’ என்று ஃபோனை முறைத்தவாறே அமர்ந்திருக்க, அதுவும் அமைதியானது. மீண்டும் ஒருமுறை. இப்போதும் அவள் அவ்வாறே அமர்ந்திருக்க, அடுத்த பத்து பதினைந்து நிமிடங்களுக்கு அவனிடம் இருந்து அழைப்பே வரவில்லை.

‘ரெண்டு தடம் அழைத்து பார்த்துட்டு எடுக்கலைன்னா, அவ்வளவு தான்னு போய்டுவியா? நான் மூனாவது வாட்டி அழைத்தா எடுக்க நினைச்சேன்’ என்று மனதிற்குள்ளே அவனை திட்டிக்கொண்டு இருந்தவள் காதில் ஒலித்தது இசை.

அவன்தான்!

இந்த முறை சீனாவது ஒன்னாவது! உடனே எடுத்து காதுக்கு கொடுத்தவள், வார்த்தை வராமல் இருந்தாள்.

‘அவனே சொல்லட்டும்!’

“அனிலா… என்ன ஆச்சு? ஏன் பேசமாட்டேங்கற? என் நம்பர் ஏன் ப்ளாக் பண்ணி வெச்சிருந்த?” என்று அவன் அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்க, அவள் மௌனமாகவே இருந்தாள்.

இப்படியே இரண்டு நிமிடங்களாக அவன் கேட்டுக்கொண்டிருக்க, பதிலில்லை.

“ஏதாவது சண்டையா?”

“….”

“என் மேல கோபமா?”

இப்போது மட்டும் இறங்கிவந்து “ம்ம்ம்” என்றாள்.

“நான் என்ன செய்தேன்?”

கோபமாக ஒரு “ம்ம்ம்ம்”

“எனக்கு சத்தியமா எதுக்கு நீ கோபப்படறேன்னே தெரியல… நான் ஏதாவது நீ கோபப்படுவது போல் நடந்துக்கிட்டேனா?”

“ம்ம்ம்…” என்று அவள் அழுத்திக்கூற, அவளோடு அவன் பேசியவை அனைத்தையும் ஓட்டிப் பார்த்தவனுக்கு எதனால் இந்த மௌனப்போராட்டம் என்று புரியவே இல்லை. நான் செய்ததற்காக இல்லையென்றால், என்னைக்கொண்டு நடந்த எதற்காகவா? அதையே அவளிடமும் கேட்க, அதற்கும் ம்ம்ம் மட்டுமே பதிலாக வந்தது. என்னவாக இருக்கும் என யோசித்தவனுக்கு மின்னலென வெட்டியது அந்த நிகழ்வு.

“அவங்க ஏதோ ஃபேன்ம்மா… இது எல்லாம் ஒன்னுமே இல்ல” என்று அவன் கூற, மனமோ குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தது.

“என்ன… ஒன்னுமே இல்லையா? ஆமா… உனக்கு ஒன்னுமே இல்லாம தான் இருக்கும்”

“என்ன சொல்ற?”

“இதெல்லாம் உனக்கு சாதாரணம் இல்ல?”

“அனிலா…” என்று சீறியவன், “நான் ஏதாவது தவறு செய்வேன்னு நீ நினைக்கிறியா?” என்று கேட்டான்.

அதற்கு மறுபுறம் பதிலில்லை எனவும், “உனக்கு ஏதாவது என்மேல் சந்தேகம் இருந்திருந்தா அன்னைக்கே கேட்டிருக்கலாமே?” என்றும் கேட்க,

“உனக்கு அது என் மனச பாதிக்கும்னு தெரிந்திருக்கனும் முகில். அப்போவே ஒரு ஃபோன் செய்து சொல்லிருக்கனும், Clarify செய்துருக்கனும்”

“Clarify பண்ணிருக்கனுமா? இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் Clarify செய்துட்டே இருக்கனும்னா, அந்த இடத்தில் அந்த உறவுக்கு அர்த்தம் தான் என்ன? உறவுக்கு அடிப்படையே நம்பிக்கை தான?”

“கண்டிப்பா… நம்பிக்கை தான்… ஆனா, அந்த நம்பிக்கையே எனக்கு உன்மேல வரலியே!” என்று அவள் கூற, அவன் கோபமுற்றான். அவனுக்கு அவள்மேல் விருப்பம் என்று மட்டுமே கூறியிருக்கிறான். அவனைப் பொறுத்தவரை அதற்கு ஒரே அர்த்தம்தான். ஆனால், அவன் சொன்ன விதத்தில் அவளுக்கு பல அர்த்தங்கள் தோன்றியதை என்னவென்று சொல்ல?

“சோ, நமக்கு நடுவுல இருக்க உறவுல நம்பிக்கை இல்லாததற்கும் நான் தான் காரணம், காதல் இருக்கிறதுக்கும் நான் தான் காரணம் இல்ல? உனக்கு என் மேல காதல், நம்பிக்கை ரெண்டுமே இல்லை தான?” என்று அவன் கூர்மையாக கேட்க,

மறுமுனையில் பதிலே இல்லை. இங்கே பொறுமையை இழுத்துப்பிடித்து வைத்திருந்தவனோ, “சொல்லு அனிலா…” என்று கத்தியிருந்தான்.

அதில் திடுக்கிட்டவள், மென்மையாக கேட்டிருந்தாள், “நீ… நீ என்னை காதலிக்கிறாயா?”

“எனக்கு உன்மேல எந்த ஃபீலிங்கும் இல்ல. அதனால தான் இப்போ சக்ஸஸ் பார்ட்டியை விட்டுட்டு உங்கூட பேசிட்டு இருக்கேன்” என்று அவன் கூற, அவளிடம் பதிலில்லை.

“நீ எனக்கு ஸ்பெஷல்ன்னு உனக்கு புரியலையா? நான் உன்மேல காட்டுற அக்கறையும் நீ உணரவே இல்லையா?” என்றவன் சிறிது இடைவெளிவிட்டு, “அனி, ஐ லவ் யூ” என்றிருந்தான்.

அவன் வார்த்தைகளைக் கேட்டவளுக்கு தேவர்களுக்கு மட்டுமே கிட்டும் அமிர்தம் அவள் இரத்த நாளங்களில் இடம்பெயர்ந்தாற்போன்றதொரு உணர்வு. ஓடிச் சென்று அவனை கட்டிக்கொள்ள வேண்டும், அவன் நெஞ்சில் சாய்ந்து அழ வேண்டும் போன்று தோன்றியது. அக்கணம் அவர்களை பிரித்து வைத்திருந்த பல்லாயிரம் மைல்களை மனமார வெறுத்தாள் அவள்.

மறுபுறம் இருந்து எந்த சத்தமும் இல்லை என்பதை உணர்ந்தவன், “அனிலா…” என்று அழைத்துவிட்டு, அவள் “ம்ம்ம்…” என்றதும், “இதுவரைக்கும் இது புரியலையா லூசு…” எனக் கேட்டான்.

அதில் தொலைந்திருந்த தன் குரலை தேடிக்கண்டுபிடித்தவள், “என்ன, லூசா? நானா? இந்த விஷயத்த நீ முன்னாடியே சொல்லியிருக்ககூடாதா? தலைய சுத்திதா மூக்க தொடுவியா?” என்று எகிற,

“நீ லூசு இல்லாம வேற என்ன? I just proposed you. உனக்கு ஐ லவ் யூ சொன்னேன். அண்ட், நீ என்ன செய்யற? என்கிட்ட சண்டை போடற. நானா சண்டை போட்டுட்டு இருக்கேன்?” என்று உல்லாசக்குரலில் கேட்டான் அவன். அதில், ‘உன்னை கண்டுகொண்டேன்’ என்ற பாவனையும், ‘இப்போவாவது என்னிடம் சொல்லிவிடேன்?’ என்ற கெஞ்சுதலும் சரிவிகிதத்தில் இருந்தது.

அதில் நிதானித்தவள், “முகில்… ஐ டூ லவ் யூ… ஆனா…” என்று இழுத்தாள்.

“ஆனா, என்ன?” என்று கேட்டான்.

“பயமாக இருக்கு. நமக்கு செட்டாகுமா?”

“எதுக்கு பயம்? கண்டிப்பா செட்டாகும்” என்று அவன் உறுதியளித்தான்.

“இல்ல முகில். இது எந்த அளவுக்கு ஒத்துவரும்னு எனக்கு சத்தியமா தெரியல. பிகாஸ், நான் உங்கிட்ட ஒரு விஷயத்த இதுவரைக்கும் சொன்னதில்ல” என்று நிறுத்தினாள்.

“எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்” என்று அவன் ஆறுதலளிக்க,

“இல்ல முகி… நான் சொல்லிடறேன்… இப்போவே உனக்கு தெரியறது தான் நல்லது. அதை கேட்டதுக்கு பிறகு நீ முடிவு செய்துக்கோ” என்றவள், ஒரு ஆழ்ந்த மூச்செடுத்து, சொல்லியேவிட்டிருந்தாள்,

“I am a Non-Residential Pakistani!”

அவள் கூறியதை கவனமில்லாமல் கேட்டிருந்தவனோ, "சோ வாட்...?" என்றுவிட்டு, பின் அவள் கூறியது மூளையை எட்ட, "வெய்ட்... வாட்?" என கூவியிருந்தான்.
 
Last edited:
Top