Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே 14

Advertisement

lekha_1

Active member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

இதோ கதையின் அடுத்த பதிவு... இந்த கண்டெண்ட் எத்தனை பேருக்கு பிடிக்கும்னு தெரியல. அப்படியே பிடித்தாலும், நான் சொல்லப்போகும் சில விடயங்களை எப்படி எடுத்துப்போறீங்கன்னும் தெரியல. பட், எதுவாக இருந்தாலும், முடிவு வரை படித்துவிட்டு சொல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

சென்ற பதிவிற்கு ஆதரவளித்தவர்கள் அனைவருக்கும் நன்றி!!!


காதல் 14

1259

அவள் கூறியதை கவனமில்லாமல் கேட்டிருந்தவனோ, “சோ வாட்…?” என்றுவிட்டு, பின் அவள் கூறியது மூளையை எட்ட, “வெய்ட்… வாட்?” என கூவியிருந்தான்.

“ஆமாம் முகி… நாங்க ஓவர்ஸீஸ் பாகிஸ்தானி. என்னோட தாத்தா காலத்தில் நாங்க அந்த நாட்ட விட்டு வந்தோம். அதனால தான் கேட்கறேன், நமக்குள்ள எப்படி ஒத்துவரும்?” என்று அவள் கேட்க, சிறிதுநேரம் அமைதியாக இருந்தான் முகில்.

பின்பு, “நீ எந்த நாட்டை சேர்ந்தவளாக இருந்திருந்தாலும், உனக்கும் என்மேல காதல் இருந்திருந்தால், கண்டிப்பா உன்ன விட்டிருக்க மாட்டேன். நானும் உன்னை காதலிக்கிறேன், நீயும் என்னை காதலிக்கறே. காதலிக்கற தான?” என்று அவன் கேட்க, அவன் முதல் வாக்கியத்திலேயே சந்தோஷக் கண்ணீரை சிந்திக்கொண்டிருந்தவளோ, அந்த கண்ணீர் புன்னகைப் பூக்களை விளையச் செய்ய, “ம்ம்ம்ம்” என்றாள்.

“பின்ன எப்படி விடுவேன் நிலா?” என்றான். அவளை அவன் விளித்த விதம் அவளுக்கு உவகையளித்தது.

“லுக்… நான் உங்கிட்ட என் காதல சொல்றதுக்கு முன்னாடியே நாம சேருவதற்கு என்னென்ன தடையா இருக்கும்னு ஒரு சின்ன லிஸ்ட் எடுத்து வெச்சுருக்கேன். அதுல இன்னொன்னு ஆட் ஆகப்போகுது. அவ்வளவுதான?” என்று அவன் கூலாக கேட்க,

“உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது முகில்? இதுவே பெரிய ப்ராப்லமாகும். நீ கிரிக்கெட்டராக இல்லாத பட்சத்தில் நம்ம காதலுக்கு சம்மதம் வாங்கறது ரெண்டு குடும்பத்தோட முடிஞ்சுடும். ஆனால், இப்போ நம்ம காதல் வெளிய தெரிஞ்சா, அதுவே மத்தவங்க வாய்க்கு அவலாக போயிடும்” என்றாள்.

அவள் கூறுவதும் உண்மை தான். சாதாரணமானவர்களாக இருவரும் இருந்திருந்தால் அவர்கள் காதலை ‘வாவ்’ என்று வாழ்த்திவிட்டு சென்றுவிடுவார்கள் அனேகர். ஆனால், இப்போது முகிலும் சரி, அனிலாவும் சரி எத்தனை பேச்சுகளை சந்திக்கவேண்டுமோ? ஒருவர் பிரபலமாக இருக்கும் பட்சத்தில் அவரின் ஒவ்வொரு செய்கையும் உற்றுநோக்கப்படுகிறது. அதற்கு யாரையும் பிழை கூறவும் முடியாது. நம் நாட்டில் அவ்வாறு மனதிற்கு நெருக்கமான இந்த பிரபலங்களை தங்களுள் ஒருவராகவே பார்க்கிறார்கள். ஆனால், அவர்களுக்கும் தனித்தொரு வாழ்வு இருக்கிறதல்லவா? மற்றவர்கள் சொல்வதற்காக தங்கள் காதலை விட்டுவிட்டு எவ்வாறு இருவரும் மகிழ்ச்சியாக இருக்கமுடியும்?

“நீ சொல்றது எல்லாம் எனக்கும் புரியுது. ஆனால், அதற்காக நம்ம வாழ்க்கைய பணயம் வைக்க முடியாது. இப்போ எல்லாம் நூறு பேர் ஒரு விஷயத்த பத்தி பேசினா, அதுக்கு எதிரா பேசவே ஒரு பத்து பேர் கிளம்புவாங்க. எத்தனை நாளுக்கு பேச முடியும்? மிஞ்சி மிஞ்சிப் போனா ஒரு வாரம்? அதற்கடுத்து மற்றொரு ஹாட் நியூஸ் கிடைக்கவும், நம்மை விட்டிருவாங்க. இதற்கெல்லாம் பயப்படாத…” என்றான் அவன்.

“தேங்க்ஸ் முகி! உன்னிடம் இதைதான் எதிர்பார்த்தேன். ஆனால், உன் வீட்டுல முதலில் நம்மை ஏத்துப்பாங்களா? உன் அப்பா ஆர்மில இருந்தவர்ன்னு சொன்ன தான? அப்படி பார்த்தா, அவர் எந்த நாட்டை எதிர்த்து களத்தில் இருந்தாரோ, அந்த நாட்டு பொண்ணு நான். என்னதான் இங்கே வளர்ந்திருந்தாலும், என் வேர் அங்கே தான இருக்கு?” என்று அவள் கேட்க,

“உங்க வீட்டில் என்னை ஏத்துப்பாங்களா?” என்று மறுகேள்வி கேட்டான். “கண்டிப்பாக இல்ல” என உடனே பதில் வந்தது அவளிடமிருந்து. ஆனால், காதலித்தபின் அதனை யோசித்து ஆகப்போவது என்ன?

ஒரு நீள் மூச்செடுத்தவன், “எதையுமே ஆரம்பிக்கும் முன்னே இப்படி தான் முடியும்னு சொல்லக்கூடாது. நாம முயற்சி செய்து பார்க்கலாமே!” என்றான்.

“ஒருவேளை ஒத்துக்கலைன்னா?”

“கண்டிப்பா ஒத்துப்பாங்க. ஒத்துக்க வைக்கலாம். அப்படி இல்லைன்னா, வெய்ட் பண்ணுவோம். ஏதாவது ஒரு கட்டத்துல ஒத்துக்கனும் தான?” என்று அவன் கேட்க,

“எத்தனை வருஷம் ஆகுமோ?”

“ஆகட்டும்… பிற்காலத்துல நாம சந்தோஷமா வாழனும்னா இப்போ கொஞ்சம் கஷ்டப்படுவதில் தவறில்லை” என்றான்.

சில நொடிகள் அமைதிக்குப்பின், மெதுவே கேட்டாள்.

“முகி… அப்பாகிட்ட மட்டும் சொல்லிடறேனே? அவரிடம் சொல்லாமல் என்னால இருக்க முடியாது.”

“சொன்னா உனக்கு பிரச்சனை வரலாம். At present, I am not ready for a marriage.” என்று அவன் தெளிவாக உரைக்க,

“எந்த பிரச்சினையும் வராது. இன் ஃபேக்ட், அவருக்கு ஆல்ரெடி டவுட். நம்ம ஃபோட்டோ வந்தப்போவே கேட்டாரு. நான் தான், அப்படி எதுவுமே இல்ல, ஏதாவது இருந்தாலும் உங்களிடம் வந்து சொல்வேன்னு சொல்லிருக்கேன். என்னை ரொம்ப நம்பறாரு முகி! அவர்கிட்ட சொல்லாம, என்னால முடியாது!” என அவள் கூறுவது அவனுக்கும் தெளிவாக புரிந்தது.

“சரி… நானும் வரேன். அது வரைக்கும், காத்திரு. உன்னை என்ன சொல்வாங்கன்னு தெரியாம இங்க இருந்து தவிக்கறதுக்கு, அங்கே வரேன். நாம ரெண்டு பேருமே சொல்லலாம்” என்று அவன் கூற, தன்னை அவன் எக்காரணம் கொண்டும் தனியாக விடமாட்டான் என்னும் நம்பிக்கை பிறந்தது அவளுக்கு.


******

சில நாட்களுக்குப் பிறகு,

“ஹாய்…” என்று முகிலை நடுக்கத்துடன் வரவேற்றாள் அனிலா.

இன்று அவள் வீட்டில் பெற்றோரை சந்திக்க வந்திருந்தான் முகில்.

“ஏன் இவ்வளவு பயப்படறே? நான் பாத்துக்கறேன். என்ன பத்தி ஏதாவது சொன்னியா?” என்று அவன் கேட்டதற்கு இருபக்கமும் பலமாக தலையாட்டினாள் அவள்.

“ஏதாவது ஒரு பக்கம் தலையாட்டு” என்று அவன் கூற,

“நேத்தே சொல்லிட்டேண்டா” என்று திக்கித் தினறி கூறினாள் அவள். அவ்வளவு தைரியம் எவ்வாறு வந்தது அவளுக்கு என்று இப்போது வரை அவள் அறியவில்லை.

நேற்றிரவு உணவு முடிந்ததும் தாயையும் தந்தையையும் அமரவைத்து முகிலைப் பற்றி அனைத்தையும் சொன்னவள்,

“அவரோட தான் என் வாழ்க்கை இருக்கனும்னு நினைக்கிறேன். அவருக்கு என்ன பிடிச்சிருக்கு. எனக்கும் அவர ரொம்ப பிடிச்சிருக்கு. அவர கூப்பிட்டு வரேன். ஒரு தரம் பேசிப்பாருங்க” என்றிருந்தாள்.

அதனை அவனிடம் சொன்னவள், “நீ இன்னைக்கே வருவன்னு சொல்லலை. அப்பாவும் அம்மாவும் உள்ள தான் இருக்காங்க. வா” என்று அவனை அழைத்துச் சென்றாள்.

பாட்டி கண்டிப்பாக இந்த செய்தியறிந்தால் சண்டை போடுவார்கள் என்பதால், முதலில் தாய்-தந்தையை சமாளிப்போம் என்று நினைத்து, அவரை சிட்னிக்கு அனுப்பியபின்பு தான் அவள் காதலைப் பற்றியே கூறினாள் அனிலா.

“அம்மா… அப்பா… யாரு வந்திருக்கான்னு பாருங்க” என்று உள் நோக்கி கத்தியவள், “உட்காரு!” என்று அவனுக்கு இடத்தைக் காட்டினாள்.

உள்ளிருந்து அவள் பெற்றோர் வர, தந்தையின் முகம் ‘இதை நான் எதிர்பார்த்தேன்’ என்பதைப் போன்றதொரு பாவத்தைக் காட்டியதென்றால், அவள் தாயோ அதிர்ச்சியாய் கணவன் முகம் நோக்கினார். ‘நேத்து தானங்க சொன்னா? இன்னைக்கே கூட்டிட்டு வந்துட்டா?’

ஏதோ சொல்ல வாய் திறந்த மனைவியை அடக்கி குடிக்க ஏதேனும் எடுத்து வர சொன்னவர், முகிலை வரவேற்று அவனெதிரே அமர்ந்தார்.

“சோ… மிஸ்டர். முகில், உங்கள பத்தி என் பொண்ணு சொல்லிருக்கா. எப்போல இருந்து கிரிக்கெட் விளையாடனும்னு ஆர்வம் ஏற்பட்டது?” என்று ஆரம்பித்து, வழக்கமான தந்தை என்னும் டெம்ப்ளேட் கொண்ட கேள்விகளை அவனை நோக்கி வீசினார்.

அதற்கெல்லாம் அவன் பதிலளித்தான். என்றுமே உண்மையினை சொல்லிவிடுவதே சிறந்தது. அதுவும், இதுபோன்ற தருணங்களில் உண்மையாக இருப்பது மிகவும் முக்கியம். அதுவே நம்மீது நல்லதொரு அபிப்பிராயத்தை உருவாக்கிவிடும். எனவே, அவர்கள் கேட்டதனைத்திற்கும் அவனும் உண்மையே உரைத்தான்.

கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் நீடித்த அந்த நேர்க்காணலில் முடிவில், அனிலாவின் பெற்றோர் இருவரின் மனதையும் வென்றிருந்தான் முகில்.

அவர்கள் இருவருமே ஒன்று போல சொன்னது, அனிலாவின் பாட்டியும் இதற்கு ஒத்துக்கொண்டால் மட்டுமே தங்களால் ஏற்றுக்கொள்ள முடியும் என. அவரையும் கையோடு தான் பார்ப்பதாக முகில் கூற, அதற்கு சரியான காலம் வரும்போது அழைத்துச் செல்வதாக கூறி அவனை பொறுத்திருக்க சொன்னார்கள்.

அன்றைய மதிய உணவை அவர்களுடனே உண்டுவிட்டு கிளம்பிய முகிலை வாயில் வரை வந்து வழியனுப்பினர் மூவரும்.

அனைவருக்குள்ளும் மகிழ்ச்சி இருந்தாலும், சிறிது கலக்கம் சேர்ந்தே இருந்தது. பழமையில் ஊறியவராயிற்றே!


******

“முகி… உனக்கு அக்டோபர்ல மேட்ச் இருக்கா?” என்று கேட்டாள் அனிலா.

“அக்டோபர்ல எதுவும் இல்லையே! ஏன்?”

“அப்பா உன்ன சிட்னிக்கு வரமுடியுமான்னு கேட்க சொன்னார். 17-ல நவராத்திரி ஆரம்பிக்குது. நாங்க எப்பவும் நவராத்திரி க்ரேண்டா கொண்டாடுவது வழக்கம். இந்த முறை மாமா வீட்டுல தான் கொண்டாடபோறோம். வேறு சில உறவினர்கள் கூட வராங்க. நீயும் வரியா?” என கேட்டாள். அவள் குரலிலேயே, வந்துவிடு என்னும் கெஞ்சல் இருக்க, சரியென்றுவிட்டு அழைப்பை துண்டித்தான் அவன்.

‘நீ ஆஸ்திரேலியாக்கும் இந்தியாக்கும் போய்வரவே தனியா சம்பாதிக்கனும் போலவே முகில்!’ என்று எண்ணியவன், அன்றைய தினத்திற்கு விமானம் இருக்கிறதா என்று பார்க்கலானான்.


******

அனிலாவின் மாமா வீட்டிற்கு வந்தவனை அவன் மாமாவே எதிரில் வந்து வரவேற்றார்.

“வாப்பா…” என்று அவனை அணைத்தவர், “எங்க வீட்டு மாப்பிள்ளையாகப் போற. ஆரத்தி எடுத்து வரவேற்க முடியாத நிலைமை. கண்டிப்பா அடுத்த முறை எடுத்தர்றோம்” என்க, அதில் இருந்தே தெரிந்துவிட்டது, அவருக்கு அனைத்தும் தெரியும் என்பது.

அங்கே வந்த சிறிது நேரத்திலேயே அவன் அறிந்துகொண்டான், அனிலாவின் பாட்டி மட்டுமே இன்னும் அவர்களைப் பற்றி அறியாதவர் என்று.

அனைவருக்கும் அனிலா செல்லப்பிள்ளையாக இருக்க, அவள் காதலிப்பவன் என்பதிலேயே அவன் அதிகம் ஈர்த்திருந்தான். அதுபோக, அனிலாவின் பெற்றோரும் அவனைப் பற்றிய பெருமைகளை கூறிவிட, ஆடாமலேயே ஜெயித்துவிட்டான் அனேக மனங்களை.

ஆனால், அவன் யாரின் மனதை முக்கியமாக வீழ்த்தவேண்டுமோ அவரால் அவன் அறியப்போகும் உண்மைகள் அவனை எங்கே இட்டுச் செல்லும்?
 
Top