Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் கண்ட கணமே- பாகம் 12

Advertisement

பிரேமாமகள்

Well-known member
Member
பாகம் – 12


இடம்: எங்க வீடு

நேரம்: ஆஹா! அருமையான நேரம்

போன் பண்ணும் போதெல்லாம், எங்கம்மா என்னை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி நச்சரிப்பாங்க. உங்களுக்கு வேற வேலை இல்லையா? ரொம்ப ஆசையா இருந்தா அப்பாவுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வையுங்கன்னு கிண்டலடிப்பேன்.

ஆனா இப்பத்தான் அதன் அர்த்தம் புரியுது. வீட்டுக்கு வந்தால் சாப்பிடறீங்களான்னு அக்கறையாய் கேட்க ஒரு பொண்ணு, சின்னப்புன்னகையால் அத்தனை அலுப்புகளையும் துடைத்து எறியும் குட்டிக்குழந்தை என்று அன்பால் அழகாகிறது எங்க வீடு.

ஆல்பர்ட் டாஷா தம்பதிகள் போன் பண்ணும் போது, ‘’எங்களுக்கு ஒரு சிரமமும் இல்லை. நீங்க பொறுமையா வாங்க’’ என்று சொல்வேன். இத்தனை அருமையான தருணத்தை இழக்க எனக்கு மனமில்லை.

ஆரம்பத்தில் என் வீட்டில் சகஜமாகயிருக்க அமுதினி மிகச்சிரமப்பட்டாள். சற்று பெரிய ஒற்றை அறையில்தான் நாங்கள் மூவரும் பொழுதைக் கழிக்க வேண்டும். என் கண் பார்வையிலேயே இருப்பதால், உட்காரும் போது, நிமிரும் போது என எப்பவும் தன் உடைகள் மீது கவனமாக இருப்பாள்.

கடைக்குச் செல்லும்முன் உடை மாற்றத் தடுமாறுவாள். நான் முதலில் ரெடி ஆகி காருக்குச் சென்று காத்திருப்பேன். அவள் உடைமாற்றி தயாராகி வருவாள். அதே போல் நான் புருவம் சுளித்தாலேப் போதும். என் தலைவலியை உணர்ந்து ‘தேநீர்’ போட்டுத் தருவாள்.

இப்படி சொல்லாமலேயே ஒருவருக்கொருவர் புரிந்து நடந்துகொள்ளும் அளவுக்கு அன்னியோன்யம் ஆகிவிட்டோம்.

ஒரு வாரம் கழித்து

லயாவுக்கு உடல் லேசாக சூடாக இருந்தது. காய்ச்சல் அடிக்கிறதோ என அமுதினி பயந்துவிட்டாள். ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிச் செல்லலாம் என்றால், நாங்கள் பெற்றோர்களாக இல்லாத பட்சத்தில் ஆயிரம் கேள்வி கேட்பார்கள் என்பதால் புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.

‘’பிசியோதெரபிஸ்ட்டா இருக்கீங்க, பாப்பாவுக்கு காய்ச்சல் அடிச்சா என்ன பண்றதுன்னு தெரியாதா’’ என என்னிடம் சண்டை போடுகிறாள்.

‘’கடுப்படிக்காம இரு. ஹாஸ்பிட்டலில் தெரிஞ்ச டாக்டர் இருக்காங்க. போன் பண்ணி கேட்கறேன்’ என்றபடி அவங்களுக்கு போன் செய்து, நிலைமையை விளக்கி பதில் தெரிந்துகொண்டு,

‘’அம்மு, குட்டிக்கு டெம்ப்ரெச்சர் பார்க்க சொல்றாங்க, 35c வரைக்கும் இருந்தா பயப்பட தேவையில்லையாம். அதுக்கு மேல இருந்தா பேரசெட்டமால் மருந்து குடுக்கச் சொன்னாங்க’’ என்றேன்.

‘’சரிவருமா? ‘’ என்றாள்.

ஏய்… அவங்களும் தமிழ் டாக்டர்தான். பேரு கூட தென்றல். நல்லாயிருக்கில்ல’’ என்றேன்.

‘’பொம்பள டாக்டரா, அதான் சிரிச்சு சிரிச்சு பேசுனீங்களா? என்ன வயசு அவங்களுக்கு?’’ என்றாள்.

‘’ச்சீ… அக்கா மாதிரி அவங்க. கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு’’ என்றேன்.

எதோ முணுமுணுத்தாள்.

‘ஏய் என்ன? எதோ சொல்ல வர்ற, சொல்லு’’ என்றேன்.

‘’ஒன்னுமில்ல’’ என்று தலைகுனிந்தபடியே சொன்னாள்.

‘’அம்மு’

……………………….

‘’ஏய் அம்மு’’

…………………………………..

‘’என்னை சந்தேகப்படுகிறாயா?’ என்றேன்.

‘’நான் ஏன் உங்களைச் சந்தேகப்படனும், நீங்க யார்கிட்ட பேசினால் எனக்கென்ன?’’ என்றாள்.

‘’அப்ப நான் யார்கிட்ட பேசினாலும் உனக்கு பிரச்சனை இல்லைதான’’

‘’நீங்க, எவகிட்ட, எவ்வளவு மணி நேரம் பேசினாலும் எனக்கென்ன வந்தது’’ என்று முறுக்கிக்கொண்டாள்.

‘’அப்படியா சரி, நான் எனக்கு ரொம்ப புடிச்ச ஒரு பொண்ணுக்கு போன் பண்ணி பேசப்போறேன்’’ என்று வம்புக்கு இழுத்தேன்.

அவள் ஏதும் பேசாமல் இருக்கவே, என் போனிலிருந்த ஒரு எண்ணிக்கு அழைத்தேன்.

‘சும்மாதான் கூப்பிட்டேன், என்ன செய்ற, சாப்டாச்சா?’ போன்ற வழக்கமான கேள்விகளை, அம்முவைப் பார்த்துக்கொண்டே கேட்டுவைத்தேன்.

போன் பேசி முடித்ததும், ‘’என்னாவாம் சாந்தா டீச்சருக்கு’ என்றாள்.

‘’அடிப்பாவி எங்கம்மாவைப் பேரு வைச்சு கூப்பிடற, என்ன தைரியம் உனக்கு, சரி எங்கம்மாக்கிட்டத்தான் பேசினேன்ன்னு எப்படி தெரியும்?’’ என்றேன்

‘’முசப்புடிக்கிற நாயை மூஞ்சியைப் பார்த்தலே தெரியாதாக்கும்! என்ன, நேத்து மாடு கன்னுகுட்டி போட்டிருக்குன்னு சொன்னாங்களா? ‘’ என்றாள்.

‘’உனக்கு எப்படி தெரியும்?’’ என் ஆச்சர்யம் அதிகமானது.

‘’எமக்கு எல்லாம் தெரியும்’’ என்று ஆசிர்வதிப்பதுபோலக் கையசைத்தாள்.

‘’ஹேய், ஒழுங்கா கேட்டதுக்கு பதில் சொல்லு. போனில் கூட எங்கம்மாக்கிட்ட நீ பேசியதில்லையே? என்றேன்.

‘’இதென்ன பெரிய விசயம், அவங்க வேலைப் பார்க்கிற ஸ்கூல் தெரியும், உங்க மாடு எத்தனை மணிக்கு கன்னுக்குட்டி போட்டது, அப்ப உங்கம்மா என்ன கலர் புடவை கட்டிருந்தாங்க, போன வாரம் உங்க அத்தை கூட சேர்ந்து எந்த கோயிலுக்குப் போனாங்க, உங்க வீட்டில் எத்தனை ரோஜா செடி இருக்குன்னு இப்படி பல விசயங்கள் யாம் அறிவோம் மகனே’’ என்றாள்.

‘’ இதெல்லாம் உனக்கு எப்படிடி தெரியும்? எங்கம்மாவை ஏற்கனவே தெரியுமா? ‘’

‘’நேரில் பார்த்ததில்லை. ஆனா அவங்களைப் பத்தி நல்லாத்தெரியும்’’ என்று மறுபடியும் கடுப்படித்தாள்.

‘’போடீங், சுத்த விடாம பதில் சொல்லு’’ என்று நான் கத்தியதை, கண்டுகொள்ளாமல் சமயலறைக்குச் சென்றாள்.

‘அலைய விடுறாளே’ என்று போலியாக கோபித்தாலும் உண்மையில் அநியாயத்துக்கு அலைய விட்டாள். எவ்வளவு நேரத்துக்குத்தான் நானும் கெஞ்ச முடியும்?

எதற்கோ, பிரிட்ஜ் திறந்தவளை அப்படியே, சுவற்றோடு சேர்த்து நிற்க வைத்து, நகர முடியாமல், இருபக்கமும் என் கைகளை ஊன்றிக்கொண்டேன்.

படபடப்பில் அவள் கண்கள், இடமும் வலமுமாய் அலைப்பாய்ந்தது. முதல் முறை கோயிலில் அந்த கண்களை உற்றுக் கவனித்ததற்குப் பிறகு, இப்போதுதான் ஆழமாய் பார்க்கிறேன். கத்தி மாதிரி குத்திக் கிழிக்கிறது அவள் பார்வை.

இவ்வளவு நெருக்கமாய் நாங்கள் நிற்பது இதுவே முதல் முறை. அவளின் சூடான மூச்சுக்காற்று என் நெஞ்சில் முட்டி மோதியது. இப்போது எனக்கு அம்முவின் பதில் வேண்டாம், இப்படியே அவளருகில் நின்றுகொண்டிருந்தால் போதும். முடிந்தால் இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டும்.

மெளனமாய் நாங்கள் இருவரும் நடத்திக்கொண்டிருந்த யுத்தத்தை தடை செய்யும் வண்ணம் போன் அடித்தது.

‘’ஷிட், இப்ப போன் வரலைன்னு யார் அழுதா?’’ கோபத்தில் பிரிட்ஜை எட்டி உதைத்தேன்.

என் ஆத்திரத்தை ரசித்தபடியே, அவள் போனில் பேசி முடித்தாள்.

‘’அம்மு, தயவு செஞ்சு எங்கம்மாவை எப்படி தெரியும்ன்னு சொல்லு’’ என்று பிடிவாதமாய் நின்றேன்.

நிதானமாய் என் அருகில் வந்தவள், என் நெஞ்சில் கைவைத்து தள்ளி, அதே மாதிரியே சுவற்றோடு சாய்த்து வைத்து, நெருங்கி நின்றாள். அவள் உச்சந்தலையில் தெரிந்த ரெட்டைச் சுழியில் என் இதயம் தாறுமாறாகத் துடித்தது.

என் கழுத்தருகே நெருங்கிவந்தவள், ‘’எல்லாத்தையும் பட்டுன்னு சொல்லிட்டா, சுவாரஸ்யம் போய்டும், இதோ இந்த குட்டியூண்டு மூளையை கொஞ்சமாவது யூஸ் பண்ணுங்க’’ என்று காதுக்குள் சொன்னாள்

அம்முவின் இந்த குறும்புத்தனம் என்னைத் தடுமாறவைத்தது, அவள் இடையைப் பற்றி இழுக்க நினைத்த நேரம், மின்னலாய் பாத்ரூமுக்குள் ஓடி கதவைச் சாத்திக்கொண்டாள்.

‘’ராட்சசி, அங்கியே இரு. இப்போதைக்கு வெளியில் வந்திடாதே. அப்புறம் என் கற்பு என்னைவிட்டுப் போய்டும்’’ என்று கத்தினேன்.

அவளின் வெடிச்சிரிப்பு இன்னும் என்னைக் கடுப்பேற்றியது.

அடுத்த 2 நாட்களில் ஆல்பர்ட் டாஷா தம்பதிகள், ஸ்வீடனனிலிருந்து வந்துவிட்டனர். நாங்கள் இருவரும் ஆறுதல் சொல்லச் சென்றோம். குட்டியை அங்கேவிட மனசே இல்லை.

தற்காலிகம் என்றாலும், ஒரு குடும்பமா, சந்தோஷமா இருந்தோம். அதை இழக்கறது கஷ்டமா இருந்தது. ‘’நீங்க வேண்ணா, ரெஸ்ட் எடுங்க., இன்னும் 2 நாளைக்கு லயா எங்ககூட இருக்கட்டும்’’ என்று கேட்டே விட்டேன்.

‘’நோ அர்ஜூன், இதுவரைக்கும் நீங்க செஞ்ச உதவிகளுக்கு மிக்க நன்றி’’ என்றார்கள் இருவரும்.

திரும்ப வரும் வழியில், ‘ உங்களுக்கு ஹாஸ்பிட்டலுக்கு நேரமாகுது, நீங்க கிளம்புங்க. நான் உங்க வீட்டுக்குப் போய் என் திங்க்ஸ் எல்லாம் எடுத்திட்டு அப்படியே கடைக்குப் போறேன்’’ என்றபடி அம்மு, அங்கிருந்தே கிளம்பிவிட்டாள்.

ஷிப்ட் முடித்து, வீட்டுக்கு வந்தால், மெளனம் சூழ்ந்து அத்தனை வெறுப்பாய் இருந்தது என் அறை. உடை மாற்றக் கூட தோன்றாமல் அப்படியே சோபாவில் சரிந்தேன். எததனையோ நாட்கள் தனிமையில் இருந்திருக்கிறேன். ஆனா இந்த தனிமை துயர் தந்தது. பல வருடங்களுக்குப் பிறகு எனக்கு கண்ணீர் வந்தது.

காதல் வளரும்
 
Top