Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் கண்ட கணமே- பாகம் 16

Advertisement

பிரேமாமகள்

Well-known member
Member
பாகம் – 16

இடம்: அமுதினி & அர்ஜூன் வீடு

நேரம்: அதுபாட்டுக்கு போய்ட்டு இருக்கு.

காலையில், நான் ஹாலுக்கு வரும் போது, அர்ஜூனும் எழுந்துவிட்டான். வீட்டிலிருந்த புது பிரஸை தந்து பல் விளக்கி, முகம் கழுவச் சொல்லிவிட்டு காப்பி போட்டுத் தந்தேன். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அர்ஜூன் ஹாஸ்பிட்டல் போக வேண்டியது இல்லை. எனக்கும் கடையில் வேலையில்லாததால், நிதானமாய் சமையல் செய்ய ஆரம்பித்தேன். பூனைக்குட்டி போல என்பின்னாடியே சுத்தி வந்தான் அவன்.

‘’கொஞ்சம் தள்ளிதான் நில்லுங்களேன்’’ என்று நான் சொல்லும் போது, போலியாகக் கோபித்துக் கொண்டு செல்பவன், அடுத்த நிமிடமே எதாவது கேட்டு, மறுபடியும் என்னருகில் வருவான்.

நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாகச் சொல்லிக் கொள்ளவில்லை. ஏன் என்றால், காதல் என்பது சொல்லிப் புரியவைப்பதில்லை. செயலில் உணர்த்துவது.

இந்த வயதில், நம்மை ஒருவர் நேசிப்பது கூடவா நமக்குப் புரியாது?

காலை உணவை இருவரும் சாப்பிட்டுவிட்டு, முடிக்கும் சமயம், என் அக்காவின் எண்ணில் இருந்து வீடியோ கால் வந்தது.

‘’ஹா அம்மா, ஆவ் சாப்பிட்டியா’’’’ என்றான் என்செல்ல மகன் கிஷான்.

‘’சாப்பிட்டேன் செல்லக்குட்டி, நீ புவ்வா சாப்பிட்டியா? ‘’ என்றேன்.

‘’ ஆ’’ என்றவனை அதற்குள் என் அம்மா அழைக்க, போனை என் அக்காவிடம் தந்துவிட்டு ஓடிவிட்டான். அவளிடம் சிறிது நேரம் பேசி, முடித்துவிட்டு, நிமிர்ந்து அர்ஜீனைப் பார்த்தேன்.

எந்த உணர்ச்சியும் இல்லாமல் முகம் தெளிவாக இருந்தது. நானும் எதுவும் பேசாமல் விட்டுவிட்டேன்.

சோபாவில் அமர்ந்து இருவரும் நெட்பிலீக்ஸில் படம் பார்க்கையில், தீடிரென என கைபிடித்து, ‘’அந்த பையன் யாரு?’’ என்றான் அர்ஜீன்.

‘’ இதைக் கேட்கத்தான் இவ்வளவு யோசிச்சீங்களா’ என்றேன்.

அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவும்,

‘ஏன் எனக்கொரு குழந்தை இருந்தா, உங்களுக்கு என்ன பிரச்சனை’’ என்றேன்.

நிதானமாக என் கைவிரல்களோடு தன் விரல்களை கோர்த்துக் கொண்டபடி,

‘’நான் எடுத்த முடிவில் இருந்து பின் வாங்க மாட்டேன், இப்ப என்னன்னா, அவனையும் நான் கரைக்ட் பண்ணனும்ல்ல அதான்’’ என்றான் அர்ஜீன்

‘’அதுக்கு அவனோட அப்பாஅம்மா ஒத்துக்கனுமே’’, என்றேன் பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி.

‘’என்னடி சொல்ற’’ என்றபடி ஒரு பார்வை பார்த்தான்.

‘’கிஷான், எங்கக்கா பையன், இப்பத்தான் பேசக்கத்துக்கறான். எங்க வீட்டிலிருக்கவங்க மாதிரியே அவனும், என்னை அம்முன்னு கூப்பிடுவான். ஆனா ‘உ’ சரியா சொல்லத் தெரியாததால், அவன் சொல்றது அம்மான்னு கேட்கும். ‘’ என்று சிரித்தபடியே சொன்னேன்.

‘’அடிப்பாவி, அவனுக்கு என்னைப் புடிக்கறதுக்கு என்னென்ன செய்யனும்ன்னு , ஒரு நிமிசம் யோசிக்க ஆரம்பிச்சிட்டேன். முதல்லயே உங்கக்கா பையன்னு சொல்றதுக்கு என்ன? என்றான்.

நான் விட்டாமல் சிரித்துக் கொண்டிருக்கவும் கடுப்பானவன், உன்னை என்ன செய்யறேன்னு பாரு’ என்றபடி என் கன்னத்தைக் கடித்து வைத்தான்.

அவன் பல்தடம் பதிந்து சிவந்திருந்த கன்னத்தைக் கண்டதும் பதறியவன், மிக மிருதுவாக என் கன்னத்தைக் தடவிக் குடுத்தான். என்னுள் ஏதோ கரைவது போலிருந்தது.

கன்னத்தைக் தடவியவன், அப்படியே என் முகம் முழுக்க வருடி, என் உதட்டில் வந்து நின்றான். என் இதயம் படபடவென துடிப்பது எனக்கே கேட்டது.

உதட்டை வருடியபடி மிக நெருக்கமாய் என்னருகில் வந்தவன், மற்றோரு கையால் என் இடையைப் பற்றி இழுக்கும் நேரம் என் போன் அடித்தது. மலரக்காவிடம் இருந்து வந்த போன் என்பதால் உடனே அழைப்பை ஏற்றபடி, அர்ஜூனிடமிருந்து விலகிச் சென்று பேசினேன்.

‘கோபத்தில் அவன் முணுமுணுப்பது நன்றாக தெரிந்தது. நிச்சயம் எதாவது கெட்ட வார்த்தை சொல்லித்தான் புலம்பியிருப்பான்.

பேசி முடித்ததும், சோபாவில் தன்னருகில் வந்து அமரும்படி சைகை செய்தான் அர்ஜூன்.

இது சரிவராது. சார் செம குஷியா இருக்கார், ‘’ என்று எண்ணியபடி

‘’அதான் சாப்பிட்டிங்க இல்ல, உங்க வீட்டுக்கு கிளம்புங்க,’’ என்று அவனை கைப்பிடித்து எழுப்பினேன். இதான் சாக்கென, எழுந்த வேகத்தில் மேலே விழுவது போல், என் மீது சாய்ந்தான்.

‘‘வர்ற வர்ற நீங்க ரொம்ப சேட்டை பண்றீங்க, கிளம்புங்க, வீட்டுப் போய் குளிச்சிட்டு ரெஸ்ட் எடுங்க, மலரக்காவோட பிரெண்ட் இங்க வர்றாங்களாம், இடத்தை முதலில் காலிபண்ணுங்க’’ என்றபடி அவன் முதுகில் கைவைத்து தள்ளினாலும், விலகாமல் என்னை உரசிக்கொண்டே நின்றான்.

‘’இன்னும் கொஞ்ச நேரம்டி’’ என்று கொஞ்சியவனை, பெரும் பாடுபட்டு அனுப்பி வைத்தேன்.

அதன் பிறகு நாங்கள், போனில் பேசியது எல்லாமே ஸ்வீட் நத்திங்ஸ் தான்.

அர்ஜூனைப் பார்த்து 5 நாளைக்கு மேல் ஆகிவிட்டதால், வீட்டிற்கு வரச் சொல்லி போன் பண்ணினேன். அழைப்பை ஏற்காதவன், வேலை இருப்பதாக மெசேஜ் அனுப்பினான். சரியென்று சிறிது நேரம் கழித்து அழைத்தால், அப்போதும் எடுக்கவில்லை.

மெசேஜ் மட்டும் அனுப்பிக் கொண்டிருந்தான். கடுப்பில் நானும் திரும்ப அழைக்கவில்லை.

அதன் பிறகு நான் போன் பண்ணினாலும், மெசேஜ் அனுப்பினாலும் ‘வேலை இருக்கு, உடன் பணிபுரிபவர்களுடன் வெளியே வந்திருக்கேன், பிறகு கூப்பிடறேன்’ என்று சமாளிப்பானே தவிர, ஒருமுறை கூட திருப்பி போனில் அழைத்ததில்லை.

நானாக மெசெஜ் அனுப்பினாலும், ‘சரி, ம்ம்’’ என்ற வார்த்தைகளைத் தவிர வேறெந்த பதிலும் இருக்காது. ஆரம்பத்தில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. ஆனால் போக போக ஏதோ ஒரு காரணத்தால் என்னைத் தவிர்க்கிறான் என்று புரிந்தது.

‘ஏன் போன் எடுக்க மாட்டீங்கறீங்க, என்னாச்சு’ என்று கேட்டு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினாலும் , ‘சாரி வேலையா இருக்கேன்’ என்ற மெசேஜ் மட்டும் அனுப்புவான்.

என்ன? எங்கே தப்பு செய்தேன்? என் தரப்பு நியாயத்தைக் கேட்காமல் எப்படி தண்டனை தரலாம்?

அர்ஜூனைப் பார்க்காமல், அவன் குரலைக் கேட்காமல் , நரகத்திலிருப்பது போல துடித்தேன்.

வைரம் என்று நான் கொண்டாடிய ஒன்று நீர்க்குமிழியாய் உடைந்தது போல் தவித்தேன்.

‘யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ

உன் கனவினில் நிறைவது யாரோ

என் சலனங்கள் தீர்த்திட வாராயோ

ஏன்னோ என் இரவுகள் நீள்வது ஏனோ

ஒரு பகல் என சுடுவது ஏனோ

என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ

காதல் தர நெஞ்சம் காத்துக்கிடக்கு

காதலிக்க அங்கு நேரம் இல்லையா

ஒரு இலையைப் போல என் இதயம் தவறி விழுதே!’


என் போனில் ரிங்க் டோன் அலறிய சமயம், என் கண்ணிர் அதிகமானது.



காதல் வளரும்
 
arjun kutty paiyanai eppadi correct pannurathunu yosichiya ha ha sema po nee..... enna aachu arjun oru velai antha kalyanam seenai kandu pidichiteeya... nee athai patthi yosikkave illa naan thaan athai yosichite iruken pa unakaka
 
Top