Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 16 1

Advertisement

Admin

Admin
Member
டியர் பிரண்ட்ஸ், இந்த எபியோட இந்த கதை முடியுது அதுக்கு பிறகு எபிலோக் தான் ஆனா இந்த எபியே ரெண்டு இல்லைன்னா மூணு பார்ட் வரும், முடிஞ்சா இன்னைக்கு நைட் ஒரு பார்ட் குடுக்கறேன் இல்லை நாளைக்கு தான்..

அத்தியாயம் பதினாறு :

ராஜலக்ஷ்மி ராஜராஜன் வருவதை பார்த்ததும் “வாங்க, எப்போ வந்தீங்க? கூட யார் வந்திருக்கா?” என்று கேள்விகளை அடுக்க,

மகளோ சலுகையாய் அவனின் தோள் சாய்ந்திருந்தாள். அதனை அன்பழகனோ இல்லை ராஜலக்ஷ்மியோ இல்லை அங்கையின் தோழனோ இல்லை அங்கிருந்த காவலாளியோ கண்டு கொண்டதாக தெரியவேயில்லை

“என்னடா இது?” என்று ராஜராஜனுக்கு தான் சங்கடமாக இருந்தது. அங்கே ஊரில் யார் முன்னும் பக்கம் பக்கம் உட்கார கூட முடியாது. அப்படி அருகில் உட்காருவது என்பது டூ வீலரில் போகும் போது தான். இப்படி கை பிடித்து தோள் சாய்ந்து.. எல்லோர் முன்னும் நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை.

ராஜராஜன் மெதுவாய் நகர நினைக்க, அங்கையின் பிடி இறுகியது. “என்ன?” என்ற பாவனையை கண்களில் தேக்கி அவனை பார்க்க, “எல்லோரும் பார்க்கறாங்க, கை விடு, நகர்ந்து நில்லு” என்று மெல்லிய குரலில் ரகசியம் பேசினான்.

அங்கை இன்னும் அவனை ஒட்டி நின்று கொண்டாள். “அங்கை என்ன இது கலாட்டா?” என்றவனை அவள் கண்டு கொள்ளவே இல்லை. அவனை விடுத்து அம்மாவை பார்த்து, “மா, பேசிட்டே நிப்பீங்களா? ஆரத்தி எல்லாம் எடுக்க மாட்டீங்களா? இப்போ தான் உங்க மாப்பிள்ளை முதல் முதல்ல உங்க வீட்டுக்கு வர்றார்” என்று எடுத்து கொடுத்தாள். ஆம்! ஊர் பழக்கம் அவளுக்கு இதையெல்லாம் கற்று கொடுத்திருந்தது.

அன்பழகன் அதுதானே உனக்கு தெரியாதா என்ற முறைப்பு பார்வையை ராஜலக்ஷ்மியிடம் கொடுக்க, “எனக்கு இவரை பார்த்ததும் ஒன்னும் ஓடலை, இதோ போறேன்” என்று உள்ளே சென்று ஆரத்தி கலக்கி வந்து இருவருக்கும் எடுத்து உள்ளே அழைத்து சென்றார்.

ராஜராஜனை “வாங்க, போங்க, அவர், இவர்” என்றே பேசினார். மாப்பிள்ளை தான், அண்ணன் மகன் என்ற உரிமையான பேச்சு வரவில்லை. உள்ளே நுழைந்ததுமே அவன் சென்று சோஃபாவில் அமர, “வாங்க ஃபிரெஷ் ஆகிட்டு வருவீங்களாம்” என்று அவளின் அறைக்கு அழைத்து சென்றாள்.

அவனும் உள்ளே சென்று முகம் கை கால் கழுவி வர, அவனை பார்த்ததும் “இந்த ட்ரெஸ்ல எல்லோரும் நான் நல்லா இருக்கேன் சொன்னாங்க, அப்போ நீங்க இங்க இல்லைன்னு நினைச்சேன், வந்துட்டீங்க” என்று சொல்ல, இன்னும் ராஜராஜன் நல்ல மனநிலைக்கு வரவில்லை.

“நீ நினைக்கறது எல்லாம் எனக்கு எப்படி தெரியும், சொன்னா தானே தெரியும்” என்றான் ஒட்டாத குரலில்.

“ஏன் இப்படி பேசறீங்க?”

“ப்ச், விடு” என்றவன் ரூமின் வெளியே போக முயல,

அவனை பிடித்து நிறுத்தியவள் “ஏன் இப்படி பேசறீங்க?” என்று வெகு அருகில் நின்று மீண்டும் கேட்டாள்.

“எனக்கு தெரியலை” என்று முடித்துக் கொண்டான். நிஜாமாயும் அவனுக்கு தெரியவில்லை,

“எனக்கு நீங்க பதில் சொல்லணும்?” என்று பிடிவாதமாய் நிற்க, அவனும் சொல்ல முடியாது என்று பிடிவாதமாய் நின்றான்.

வெகு அருகில் நின்றவள், அவன் மேல் வயிறு இடிக்காமல் ஒரு புறமாய் சாய்ந்து நின்றாள். அதில் “நீ என்னை அணைக்க வேண்டும்” என்ற உடல் மொழி இருந்ததோ.

இதமாய் அவளை இடையோடு அணைத்தான், அவளின் மேடிட்ட வயிற்றில் உள்ளங்கை இருக்குமாறு. ஆம்! குழந்தையின் அசைவை உணர ஆசைப்படுவான் என்று தான் அவள் சாய்ந்து நிற்க அவனும் இடையோடு சுற்றி கை போட்டுக் கொண்டான்.

ஒருவரின் தேவை அடுத்தவருக்கு வார்த்தைகள் இல்லாமேலேயே உணரப்பட்டது பகிரப்பட்டது இயல்பாய். இது தான் கெமிஸ்ட்ரி என்பதோ? இந்த கெமிஸ்ட்ரி அவர்கள் இருவரிடமும் உன்னதம் தான்.

“சாரி! ரொம்ப நேரம் வெயிட் பண்ண வெச்சிட்டேனா, அங்க நிஜமா ரொம்ப சத்தம். நீங்க நேத்து பேசும் போது வர்றதை ஏன் என்கிட்டே சொல்லலை” என்றவளிடம் பதில் எதுவும் பேசவில்லை.

“அவன் என் ஃபிரண்ட், அவன் முன்னாடி என்ன பேச? அவனை அனுப்பிட்டு பேசலாம்னு தான் வீட்டுக்கு வந்துட்டு பேசறேன் சொன்னேன்” என்று அவளின் செய்கைகள் அத்தனைக்கும் விளக்கம் சொன்னாள்.

“ஏன்? நீ உன் ஃபிரண்டோட பேசி நடந்தா, நான் சந்தேகப்படுவேன்னு நினைச்சு என்னை பார்த்தவுடனே அப்படி சொன்னியா” என்றான் ஆதங்கமாக.

“பின்ன, என்னை பார்த்துட்டு நீங்க அப்படியே போனா நான் என்ன நினைப்பேன்?”

அவ்வளவு தான் உனக்கு என் மேல நம்பிக்கையா?”

“நம்பிக்கை எல்லாம் பேச்சு கிடையாது, அப்போ அந்த சமயம் அப்படி போனா என்ன தோணும், அதை சந்தேகம்னு சொல்லலை, ஒரு பொசசிவ் நெஸ்ன்னு தோணினது” என்று சொல்லவும் சற்று சமாதானமானவன் பதில் சொன்னான்.

“ம்ம், உன்னோட சிரிப்பை பார்த்துட்டு தான் போகணும்னு நினைச்சேன். நீ என்கூட அப்படி சிரிச்சதா எனக்கு ஞாபகமில்லை. ஏன் நீ அப்படி சிரிச்சு பார்ததாவே எனக்கு ஞாபகமில்லை. அந்த ஒரு கோபம், அதுல நீ என்னை வான்னு கூப்பிடாம, நானா வந்தது, ரெண்டு மணி நேரம் சுத்தினது, இப்படி சிலதும் என்னை ஊருக்கே போக சொன்னது” என்று உள்ளத்தை உடைத்து சொல்லிவிட்டான்.

அணைப்பில் இருந்த படியே தலை உயர்த்தி அவனை சில நொடிகள் ஊன்றி பார்த்து நின்றாள். அவனின் முகத்தில் இருந்த பாவனை ஏதோ செய்ய, “ப்ச், ஊர்ல இப்படி சிரிக்க முடியுமா? அவ்வளவு தான் உங்க கிழவி பேசமாட்டாங்களா, எப்போவும் நீங்க வீட்ல இருக்குற சமயம் மாமாவும் பெரிய மாமாவும் வீட்ல இருப்பாங்க. ரூம்ல கூட சிரிக்க முடியாது. ஒரு நாள் நைட் நான் அழுததுக்கே வீடு மொத்தமும் ரூம்க்கு படைஎடுத்தாங்க, அப்போ சிரிச்சா மட்டும் சத்தம் கேட்காதா? எப்படி சிரிப்பேன்?”

“அப்போ உனக்கு சிரிப்பு வந்தது, ஆனா நீ சிரிக்கலை” என்று சொன்னவனின் குரல், “நீ சொன்னதை நான் நம்பமாட்டேன்” என்று சொல்ல

“என்னது எங்கம்மா சொன்னா நீ நம்ப மாட்டியா தகப்பா?” என்று அவனின் மகனோ மகளோ அவனின் கைகளில் ஒரு உதை விட..

“அசையறா” என்று கிசுகிசுப்பாய் அவனின் குரல் கேட்க, “ம்ம்” என்றவளின் குரலும் கிசுகிசுப்பாய் ஒலிக்க,

சில அனுபவிக்கும் நிமிடங்கள்!

“நமக்கு ரூம்குள்ள வந்தாலே கட்டிப் பிடிக்க, கட்டிப் புரளன்னு நேரம் ஓடிப் போச்சு, இதுல நாம எங்க பேசி சிரிக்க” என்ற சொல்லியவளின் குரலில் நடந்ததை உரைக்கும் பாவனை மட்டுமே, கொஞ்சல் எல்லாம் இல்லை.

பின் மெதுவாய் விலகியவள் “கோபம் போச்சா?” என்று அவனின் முகம் பார்த்து கேட்க..

“போகாது” என்றான் இலகுவாகவே.

“ம்ம், சரி, போக வேண்டாம்” என்று அவனை போலவே சொன்னவள், “இப்போ வெளில போகலாம்’ என்றாள்.

“போகலாம் போகலாம்” என்று சொன்னவன், “நான் யோசிச்சு யோசிச்சு பார்த்தேன், ஆனா ஞாபகமே வரலை” என்றான் சம்மந்தமேயில்லாமல்.

“என்னது?” என்று அவள் ஏதோ பெரிய விஷயம் போல என்று நினைத்துக் கேட்க,

“நாம கிஸ் பண்ணிக்கிட்டதை”

இந்த பதிலில் அங்கையின் முகம் செல்லச் சிரிப்பில் மலர்ந்து “என்னது நாம பண்ணலையா?” என்று கொஞ்சலாய் முறைக்க செய்தாள்.

“நின்னுகிட்டு பண்ணவேயில்லை” என்று அவன் அலட்டாமல் சொன்ன விதத்தில்,

“அப்போ படுத்திக்கிட்டு பண்ணினது” என்று அவனை போலவே கேட்க,

“அதெல்லாம் கணக்குல வராது” என்றான் இன்னும் அசால்டாய்.

“அப்போ கண்டிப்பா ஞாபகத்துல வராது, ஏன்னா நாம பண்ணவேயில்லை, அது எனக்கு நல்லா தெரியும்” என்று திரும்பவும் அவனை போலவே சொன்ன விதத்தில் சத்தமாய் சிரித்து விட்டான்.

இப்படிப்பட்ட பேச்சுக்களே அவர்களிடம் முதல் முறை.

“சரி, வரலாறை மாத்துவோம்” என்று அவன் சிரிப்பினூடே சொல்ல,

“ம்ம்” என்று எப்போதும் போல மெல்லிய முனகல் பதிலாய் கொடுத்தாலும், ஒப்புதலாய் கண் மூடி முகம் தூக்கி நின்றாள்.

முகத்தின் அருகில் அவன் வருவது உணர்ந்ததும் கண் திறந்தவள், “என்னை பார்த்துட்டு உடனே ஊருக்கு கிளம்பினவங்களுக்கு எல்லாம் கிஸ் பண்ண பெர்மிஷன் கிடையாது” என்று விலகி நிற்க,

“என்ன இது மோசம்”

“அப்படித்தான் வாங்க” என அறைக்கு வெளியே அழைத்து செல்ல முயல,

“இதெல்லாம் ஆகாது” என்றவன், அவளை இடையோடு அணைத்து, “உன் பேச்சை மீற மாட்டேன். நீ எனக்கு பெர்மிஷன் கொடுக்க வேண்டாம். நான் உனக்கு குடுக்கலை, நீ எனக்கு குடு” என்று நின்றான்.

“ஆங், இதெல்லாம் இன்னும் மோசம்”

“மோசமோ, மோசமில்லையோ, எனக்கு இப்போ கிஸ் வேணும்” என்று பிடிவாதமான முகத்தோடு நிற்க,

“சரி, பெர்மிஷன் கொடுக்கறேன், நீங்களே குடுத்துக்கங்க” என்று பெரிய மனதாய் சொல்பவள் போலச் சொல்ல,

மேலும் அங்கே பேச்சுக்களே இல்லை.. உடல் சிலிர்த்த நிமிடங்கள். போதும் என்ற எண்ணம் இருவருக்குமே இல்லை.

இப்படியாக ஒரு வழியாக வெளியே வந்து, டைனிங் ஹாலில் அம்மாவும் அப்பாவும் இருப்பது புரிந்து அங்கே சென்றாள்.

அங்கே ஊர்வன, பறப்பன, மிதப்பன, நடப்பன என்று வரிசை கட்டி நின்றது.

“பா என்ன இது?” என்று அவள் கொடுத்த சத்தத்தில் ராஜராஜனும் அவள் பின்னே வந்து விட்டான்.

“அவருக்கு என்ன பிடிக்கும்னு எங்களுக்கு தெரியலை, அதனால எல்லாம் ஆர்டர் சொல்லிட்டேன். இப்ப வீட்ல சமைச்சா லேட் ஆகும்னு”

“பா, நாங்க உள்ள போய் ஒரு பதினஞ்சு நிமிஷம் கூட இருக்காது அதுக்குள்ள இவ்வளவா?”

அன்பழகனும் ராஜலக்ஷ்மியும் ஒன்றும் சொல்லாமல் போனாலும், “நாம உள்ள போய் நாற்பத்தி அஞ்சு நிமிஷம் ஆச்சு, மானத்தை வாங்காத நீ” என்றான் அவளுக்கு மட்டும் கேட்குமாறு.

“அப்படியா?” என்று அவனை பார்த்து அசடு வழிய, ராஜராஜனின் முகத்தில் எந்த பாவனையும் இல்லை.

“அப்பாடா, இவன் செம டா” என்று பார்த்திருக்க,

ராஜராஜனுக்கோ உணவு மேஜையில் பரப்பி இருந்ததை பார்த்து கவலையாகிப் போனது. வேறொன்றுமில்லை இவ்வளவு சாப்பிட்டால் அவ்வளவு தான், அவனுக்கு உண்ட களைப்பு பின்னே தூக்கம் தான் வரும், முத்தம் மட்டும் அவனுக்கு போதாதே, பசிக்காவிட்டாலாவது பரவாயில்லை, அவனுக்கு நல்ல பசியும் கூட. கண்டிப்பாய் அவனால் குறைவாய் உண்ண முடியாது.

கவலையாய் உணவை பார்த்திருந்தான். அவனின் பார்வையை பார்த்த ராஜலக்ஷ்மி, “இதெல்லாம் பிடிக்காதா உங்களுக்கு? அப்போ வேற என்ன பிடிக்கும் சொல்லுங்க?” என்று சொன்னார்.

“அச்சோ, அத்தை வேண்டாம், என்னால இவ்வளவு சாப்பிட முடியாது” என்று சொல்ல..

“அதெல்லாம் சாப்பிடலாம்” என்று அவனுக்கு சேரை அன்பழகன் நகர்த்தி போட, “உட்காருங்க” என்று ராஜலக்ஷ்மி சொல்ல,

திரும்பி அங்கையை பார்த்தான்.

அந்த பார்வையில் என்ன உணர்ந்தாளோ, “மா, நான் பரிமாறுரேன்” என்று விட்டாள். பின்னே புது இடம் என்று அவன் குறைவாய் உண்டு விட்டால், அந்த கவலை அங்கைக்கு.

அவள் வீட்டினில் ராஜராஜனுக்கு பரிமாறியது கிடையாது. உண்மையில் அவளுக்கு அதற்கான தனிமை கிட்டியதில்லை. ஆனால் அவன் உண்ணும் அளவு அவளுக்கு தெரியும்.

அவன் அமரவும் “இந்த ஷர்ட் புதுசா? நான் உங்ககிட்ட பார்த்ததேயில்லை” என்றாள் இலகுவான குரலிலேயே.

“என் ஷர்ட்லாம் உனக்கு தெரியுமா?” என்றான் ஆச்சரியமாக.

“ஷர்ட்லாம் தெரியாது, ஆனா நீங்க போடறது எனக்கு தெரியும்” என்று முறைப்பாய் சொல்ல,

“ஈசி” என்றவன் “நீ இதெல்லாம் கவனிப்பேன்னு நான் நினைக்கலை” என்றவனிடம்,

“நான் இதெல்லாம் கவனிச்சு பார்த்ததை நீங்க கவனிச்சு பார்க்கலைன்னு சொல்லுங்க” என்று அவனிடமே அவனின் குற்றச்சாட்டை திருப்ப,

“அம்மாடி, எனக்கு உன்னை பத்தி ஒன்னுமே தெரியலை நிஜம்மா” என்று ஒப்புக் கொடுத்தான்.

“புத்து” என்றாள் சலுகையாய்.

“அப்படின்னா”

“ம்ம்ம், முட்டாள்ன்னு சொன்னேன்”

“ம்ம், முட்டாள் தான் போல” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான். பின்னே அவன் அங்கையிடம் நினைத்ததைவிட அங்கைக்கு அவனிடம் குறைகள் அதிகம் இருக்கும் போலவே.

“கடைக்கு போய் உங்களுக்கு மட்டும் எடுத்தீங்களா? எனக்கு என்ன வாங்குனீங்க?” என்று சரியாய் அவள் கேட்க,

“நிஜமாகவே தான் முட்டாள் தான்” என்று முடிவெடுத்துக் கொண்டான், பின்னே அவன் எதுவும் வாங்கிவரவில்லை. அதையும் விட அவளுக்கு எதுவும் வாங்கிக் கொடுத்ததாக ஞாபகமேயில்லை.

ஒரு நாணயத்திற்கு இரு பக்கம் உண்டு தானே!

“நான் கடைக்கு போகலை, அக்கா எங்க மூணு பேருக்கும் அவ பொறந்த நாளைக்கு எடுத்துட்டு வந்தா”

“ஓஹ், தினமும் பேசறேன் நீங்க என்கிட்டே இதை சொல்லவேயில்லை”

“அம்மாடி, இதுக்கு நாங்க பேசிக்காமலேயே இருந்திருக்கலாம் போலவே” என்று நொந்து விட்டான்.

“பதில் சொல்லிட்டே இருந்தா, எனக்கு சரியா சாப்பிட முடியலை” என்று அவன் சொனது தான் தாமதம் அவளின் வாய் சிப் போட்டது போல மூடி கொண்டது.



ஆக்கமும் எழுத்தும்

மல்லிகா மணிவண்ணன்
 
:love::love::love:

அசையுறா??? அப்போ பொண்ணா???

கெமிஸ்ட்ரி டாப் கியர் ல போகுது போல ராஜராஜா :LOL::LOL::LOL:
ஆஹா நின்னுகிட்டு படுத்துகிட்டு ? எண்ணி கிட்டே இருந்தானா இவன்???
அவ சட்டை முதல் எல்லாமே கணக்கு வச்சிருக்கா...... இவன் தான் சொதப்பிட்டான் போல........
சிரிக்காம இருக்கிறதுக்கு அவளுக்கு ஒரு ரீசன் :p :p :p
சாப்பாடு பார்த்ததும் அவனுக்கு ஒரு ரீசன் :p:p:p

மாமியார் இன்னும் அத்தையா வரலையே......
 
Last edited:
ஏன்டா ராஜா புள்ளதாச்சி பொண்ண பாக்க போற ஏதாவது வாங்கிட்டு போகனும்னு தெரியாது...

அங்கை உன்ன கவனிச்சு பாத்திருக்கிற அளவு ராஜா நீஅவள கவனிக்கலை...

சாப்பிட்டா தூக்கம்தான் வரும்... :p :p

ரெண்டு பேருக்கும் chemistry.. :unsure: :unsure:

கதையே முடிய போகுது...
அங்கை என்ன படிச்சிருக்கானு
மல்லி இன்னும் சொல்லல...
 
Last edited:
அங்கைக்காக ஒரு பாடல்...

வான்சுமந்த வான்சுமந்த
வெண்ணிலவ வெண்ணிலவ
தான்சுமந்த தான்சுமந்த
பெண்நிலவே பெண்நிலவே
மூணு மாசம் ஆன பின்னே
முத்துவரும் முத்துவரும்
பூர்வஜென்மம் சேர்த்து வச்ச
சொத்துவரும் சொத்துவரும்

வெள்ளிமணி தொட்டில் ஒண்ணு
விட்டத்தின் மேலே மாட்டிடனும்
தங்கமணி கண்ணுறங்க
தாலேலோ பாடி ஆட்டிடனும்

அடி வாடி ரங்கம்மா தெரு
கோடி அங்கம்மா
ராஜராஜனுக்கும் அங்கைக்கும்
வாரிசு வந்தாச்சு...
 
Last edited:
Ha ha ராஜராஜா.. எதை ஒழுங்கா கத்துக்கிட்டியோ இல்லையோ அங்கைய ஒரு வழியா சமாளிக்க கத்துக்கிட்டியே.அது எப்டி? பதில் சொன்னா சாப்பிட முடியலையா?? நீ பொழச்சுப்ப. Nice epi mallika sis
 
Top