Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 18 2

Advertisement

Admin

Admin
Member
“என்ன இப்போ அதனால பேட்டி?” என்று ஹிந்தியில் கரிஷ்மாவின் தந்தை சொல்லி, “எனக்கு ஒரு பையன் இருந்தா உன்னையே என் மருமகளாக்கி இருப்பேன், எனக்கு இல்லை, இப்போ உன் பொண்ணை என் பேரனுக்கு சொல்றோம்” என்று சொல்ல,

அப்படி ஒரு கோபம் ராஜராஜனுக்கு பொங்கி விட்டது.

“அது அப்புறம் பார்க்கலாம் மாமா” என்று சொன்னவள், “உனக்கு யார் சொல்லிக் கொடுத்தா?” என்று அதிலேயே நின்றாள்.

விகாசோ மனோவின் மகன் என்று நிருபித்தான் , “யார் சொல்லிக் கொடுத்தா என்ன? இதுல என்ன தப்பு” என்றான்.

“நீ சின்ன பையன், இப்படி எல்லாம் பேசக் கூடாது” என்று அங்கையற்கண்ணி பொறுமையாய் விளக்கம் கூற,

“ஏன் பேசக் கூடாது?” என்றான் பிடிவாதமாய். எல்லாம் மௌனமாய் தான் ராஜராஜன் பார்த்திருந்தான். இன்னும் விகாஸ் அவனின் அருகில் தான், ஆனால் ராஜராஜன் கையில் கட்டு இருந்த போதும் மகளை தூக்கிக் கொண்டான்.

“அது பெரியவங்க ஆனா உங்களுக்கு பிடிக்குமோ இல்லையோ. அதனால் இப்போ இருந்தே இப்படி பேசக் கூடாது” என்று விளக்கம் கொடுத்தாள்.

அதற்குள் பூஜைக்குரிய நேரமாகி விட, எல்லோரும் பூஜைக்கு நிற்க, அங்கை ரதி பூர்ணிமாவை அனிச்சையாய் அவனின் கையினில் கட்டு இருப்பதினால் உடனே வாங்கிக் கொண்டு பூஜையில் நிற்க, ராஜராஜன் அவளின் பக்கம் கூட திரும்பவில்லை.

ஊர் மக்களின் முன் அன்பழகனுக்கும் ராஜலக்ஷ்மிக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை கொடுக்கப் பட, என்னவோ இத்தனை வருடங்கள் இருந்த சில சஞ்சலங்கள் இருவர் மனதிலுமே மட்டு பட்டது.

ராஜலக்ஷ்மியின் மனதில் ஒரு புது நிம்மதியும் உவகையும் பொங்க, அந்த வயதிலும் அவரை பேரழகியாய் காண்பித்தது. அப்படி ஒரு தேஜஸ் அவரிடம்.

முதல்ல இவளுக்கு சுத்தி போடணும் என்று நினைத்தார் நாச்சி, அவரின் கண் முழுவதும் மகள் மேல் தான், அருமை பெருமையாய் வளர்த்த மகள் எல்லாம் சரியில்லாமல் போக, திரும்ப பார்த்த பிறகு அப்படி ஒன்றும் ஒட்டுதல் இல்லை கோபமே இருந்தது, ராஜலக்ஷ்மியும் தள்ளியே நிற்பார். நாச்சி “அன்பு” என்று மருமகனிடம் உரிமையாய் பேசுவதை போல கூட ராஜலக்ஷ்மியிடம் பேச மாட்டார்.

ஈசன் அந்த திரையை விலக்கினாரோ என்னவோ?

அங்கையிடம் ராஜலக்ஷ்மி ஏதோ கேட்க, அவள் இன்னும் கோபத்தை தான் காண்பித்தாள். அவருக்கு ஏன் கோபம் என்று புரியவேயில்லை.

பின்னே அங்கிருப்பவர்கள் அவளுக்கு மட்டும் உறவுகள் கிடையாது, ராஜலக்ஷ்மிக்கும் தானே. ஆனாலும் இந்த மரியாதைக்கு அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை என்பது கோபத்தை கொடுத்திருக்க அதனை அம்மாவிடமே காண்பித்தாள். ஆனாலும் தன் கணவன் பிடிவாதமாய் இதனை நடத்திக் காண்பித்து விட்டான் என்பது கர்வமாய் உணரச் செய்தது.

ராஜராஜனை பார்வையால் தேட அவன் தென் படவேயில்லை. மனது சஞ்சலமாக உணர துவங்கியது. அத்தனை பேரை வைத்துக் கொண்டு கணவன் எங்கே என்று பின் செல்லவும் முடியவில்லை. வீட்டின் மருமகளாய் அங்கே தான் நின்றாள்.

இப்படியாக பூஜைகள் எல்லாம் சிறப்பாய் முடிந்து இவர்கள் எல்லோரும் கூட கோவிலில் உண்டு விட்டு தான் வீடு திரும்பினர். அப்போதும் ராஜராஜன் வரவில்லை. அன்னதானம் பார்க்க என்று கோவிலில் இருந்து கொண்டான்.

வீடு வந்ததில் இருந்து விக்கியை தாஜா செய்து, யார் அவனுக்கு சொல்லிக் கொடுத்தார் என்று தெரிந்து கொள்ள அவனின் பின் அங்கை சுற்றிக் கொண்டிருந்தாள். கூடவே இப்படி இனிமேல் சொல்லக் கூடாது என்றும்.

விக்கியின் ஒரே கேள்வி “ஏன் சொல்லக் கூடாது?”. அத்தை எத்தனை முறை சொன்னாலும் அத்தனை முறையும் அவன் பதில் இதுவாகத் தான் இருந்தது.

அன்பழகனே “விடு அம்மு, அவனை ஏன் டார்ச்சர் பண்ற, கல்யாணம் எல்லாம் கடவுள் போடற முடிச்சு. நடக்கறது தான் நடக்கும். அவன் சாதாரணமா சொன்ன ஒரு விஷயத்தை, ஏன் சொன்ன, சொல்லாத, இப்படி நீ அழுத்திச் சொன்னா, அவன் திரும்ப திரும்ப அதை தான் சொல்வான்” என்றார்.

அதிலிருந்த உண்மை புரிந்தவளாக அமைதியாகி விட்டாள்.

வீடு முழுவதும் உறவுகள், ராஜலக்ஷ்மி இன்னும் எல்லோருடனும் சற்று தள்ளி தான் நின்றார்.

ஆனால் அன்பழகனோ மனோவோ கரிஷ்மாவோ அப்படி கிடையாது, எல்லோருடனும் நன்றாய் பழக, அவர்களுமே நன்றாய் பழகினர். பின்னே உயர் பதவி , வசதி வாய்ப்பு இருந்தும் அவர்கள் நன்றாய் பழக, அதனைக் கொண்டே மற்றவர்களும்.

“பாபி” என்ற அங்கையின் அழைப்பையே எல்லோரும் பின் பற்றினர். அந்த வீட்டின் ஆண்மக்கள், பெண்மக்கள், மருமகள், மருமகன்கள் என்று எல்லோரும் நன்றாய் அவர்களிடம் பேசிக் கொண்டனர்.

ராஜலக்ஷ்மி யார் பேசினாலும் பேசினார், அவராய் பேசுவதில்லை.

அதை அங்கிருந்த எல்லோருமே உணர்ந்தாலும் யாரும் பெரிதாய் எடுக்கவில்லை. அவர் நன்றாய் உரிமையாய் ஒருவரிடம் பேசினார் அந்த வீட்டினில் என்றால் அது ராஜராஜனிடம் மட்டுமே.

“எங்கே ராஜனை இன்னும் காணோம்?” என்று அவர் கேட்ட பிறகே எல்லோரும் கவனித்தனர். அங்கைக்கு முன்பே அவன் வராதது புரிந்தது. கைபேசியில் அழைத்துப் பார்த்தாள். அவன் எடுக்கவில்லை.

தில்லை அழைத்ததும் எடுத்தவன் “என்ன உன் புருஷன் ஓவரா பேசறார் எல்லார் முன்னையும். எப்படியோ போங்கன்னு விடாம எல்லாம் எடுத்து கட்டி செய்யறேன் தானே அந்த ஏத்தம் தான் அவருக்கு” என்று அவரை வாங்க,

சத்தமில்லாமல் ஃபோனை அணைத்து விட்டார்.

வேறு என்ன செய்வார் எல்லோர் முன்னும் அவர்களின் சண்டை தெரியக் கூடாதே!

அவரின் முகம் பார்த்தே அருகில் வந்த அங்கை, “என்னவாம் அவருக்கு?” எனக் கேட்க,

“விடு அங்கை, எல்லோரும் போற வரைக்கும் வாயே திறக்கக் கூடாது, அவன் எது பேசினாலும் பதில் பேசாதே” என்று அவர் சொல்ல,

“இப்படி தான் அத்தை நீங்க அவரை ஏத்தி விடறீங்க, அவர் பேசினா தானே பதில் பேச. அவர் பேசவே மாட்டாரே, அவரை மலை இறக்கவே என்ன பாடு படணுமோ?” என்று சலித்தபடி நடந்தாள்.

“அவனுக்கு ரொம்ப வேலை அங்கை”

“அவரை யாரு இழுத்து விட்டுக்க சொன்னா? என்கிட்டே பேசவேயில்லை , இப்போ வந்து திட்டுவார்” என்ற அங்கையின் குரலில் கலக்கம். ஆம்! சில சமயம் ராஜராஜனுக்கு கோபம் வந்தால் சாமான்யத்தில் இறங்காது. தனியாய் இருக்கும் போது அவள் அடித்தால் கூட வாங்கிக் கொள்வான், அவளின் காலை கூடப் பிடிப்பான் ஆனால் எல்லோர் முன்னும் ஒரு சொல் தாங்க மாட்டான்.

விகாஸ் அப்படி சொன்ன பதட்டத்தில் கூடவே ராஜனிடம் போய் நின்றதில் அவனிடம் கேட்டு விட்டாள், அந்த நிமிட சறுக்கல். அவனின் கோபத்தில் அவள் மனம் படும் பாடு அவளுக்கு தானே தெரியும்!

அதை யார் முன்பும் காண்பிக்காமல் முகத்தை சிரித்த மாதிரி வைத்துக் கொண்டு வேலைகள் செய்வது இன்னும் கொடுமை. ராஜராஜன் முகம் பார்த்து கோபம் காண்பித்து இருந்தால் கூட சமாதானம் ஆகியிருப்பாள். எப்போதும் அவனின் பாராமுகம் அவளை ஏதோ செய்யும். இப்போதும் ஏதோ செய்தது.

“உன்னாலேயே அவனை சமாளிக்க முடியலைன்னா நான் என்ன பண்ண?” என்று தில்லையும் பேச, இப்படியாக இவர்கள் பேசிக் கொண்டாலும் வந்திருந்த விருந்தினர்களை கவனிப்பதில் நேரம் ஓடியது.

வாசுகியும் தில்லையும் அங்கையுமே ஓரியாடுவதை பார்த்த நாச்சி, மற்ற மருமகள்களையும் மகள்களையும் பிடி பிடித்தார்.

“என்னங்கடா இங்க ரெஸ்ட் எடுக்க வர்றாங்களா? வீட்டு ஆளுங்களா வந்து வேலையைப் பார்க்க சொல்லு, அவங்க அப்பமூடு வந்தாலும் இங்க இருக்குறவங்க வேலையை பார்ப்பாங்களா? என்று சத்தமிட,

எல்லோரும் அதன் பிறகே ஆளுக்கு ஒரு வேலையாய் செய்ய, “காலையில இருந்து செய்யறீங்க. நீங்க மூணு பேரும் போய் உட்காருங்க” என்றார் இவர்கள் மூவரிடமும்.

இப்படியாக அவர்களுக்கு ஒய்வு கொடுத்து, “சீக்கிரம் வேலை முடிங்க, அங்க பாட்டு கச்சேரி ஆரம்பமாகிடும், நாம போகணும், எட்டு மணிக்கு அங்க இருக்கணும், இப்போவே ஏழு மணி” என்றார்.

“நான் கோவிலுக்கு போய் அவரை பார்த்துட்டு வர்றேன்” என்று ரதி பூர்ணிமாவை தில்லையிடம் விட்டு கிளம்பிவிட்டாள்.

“நானும் வர்றேன்” என்ற மனோவிடம் “வேண்டாம் ண்ணா” என,

“அப்போ டூ வீலர் போகாத, கார்ல போ” என அவன் பேசியது காற்றினுடன் தான், அவள் தான் விரைந்திருந்தாளே.

வேகமாய் கோவில் சென்று பார்க்க, ஒரு புறம் இரவுக்கான உணவு பந்தி நடந்து கொண்டிருக்க, மறு புறம் பாட்டு கச்சேரிக்காக மேடையில் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு “மைக் டெஸ்டிங்” என்று சரி பார்த்துக் கொண்டிருந்தனர்.

அங்கையின் கண்கள் ராஜனை தேட, யாரோ அவனிடம் வந்து சொன்னார் “அண்ணி, உங்களை தேடுறாங்க” என்று.

“நான் பார்த்துக்கறேன்” என்று வந்து அவன் அங்கையை பார்த்த நேரம், மனோ அழைத்தான். “அங்கை உங்களை பார்க்க வந்தா பார்த்துட்டீங்களா”

“ம்ம், பார்த்துட்டேன்” என்றவன் “தனியா எதுக்கு அனுப்புனீங்க?” என்று அவனை கடிக்க,

“நான் கேட்கறதுக்குள்ள அவ பறந்துட்டா, நீங்க வீட்டுக்கு வராம எதுக்கு அவளை அலைய விடறீங்க” என்று மனோவும் கடிக்க,

“ஏன்? ஏன் பேச மாட்டீங்க நீங்க? என்ன சொன்னாலும் கேட்கற கரிஷ்மா அண்ணி மாதிரியா அங்கை? இல்லைல்ல, அப்போ இப்படி தான்” என்று இவனும் எகிற,

அதற்குள் இவனை பார்த்திருந்தவள் அருகில் வர, “நாம அப்புறம் சண்டை போடலாம்” என்று வைத்தான்.

அது அங்கைக்கு நன்கு கேட்க “யார் கூட சண்டை போடப் போறீங்க, அதுக்கு தான் நான் இருக்கேனே” என்றாள்.

அதற்கு பதில் சொல்லாமல் ராஜராஜன் அவளை கோபமாய் பார்த்து நின்றான்.

“என்ன?”

“எதுக்கு தனியா வந்த? இது என்ன சிட்டியா எங்கயும் ஆளுங்க இருப்பாங்கன்னு சொல்றதுக்கு. வழில ஆளே இருக்க மாட்டாங்க. அதுவும் நீ சீக்கிரம் வரணும்னு குறுக்கு வழில வந்திருப்ப, உனக்கு உலகத்திலேயே நீதான் புத்திசாலின்னு நினைப்பு” என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்.

காலையில் தப்பாய் பேசியது ஒரு குற்றவுணர்சியை கொடுத்திருக்க, இப்போது திட்டவும் செய்ய கண்களில் மழுக்கென்று நீர் இறங்கியது.

“சாரி” என்று நின்றாள்.

“ப்ச், அழாத, கண்ணை துடை. யாராவது பார்க்க போறாங்க” என்றவன் அப்போதும் அருகில் வந்தான் இல்லை. யாரும் அவர்களை பார்ப்பார்கள் என்று அத்தனை விழிப்பாய் இருப்பான். யாரும் இருக்கும் போது பக்கத்தில் சாமான்யமாய் வர மாட்டான்.

அங்கை கண்ணை துடைக்கவும், “நீ இப்படி பேசுவன்னு நான் எதிர்ப்பார்க்கலை” என்றான்.

தலை குனிந்து தான் நின்றாள். “உன் சம்மதம் இல்லாம உன் கல்யாணம் நடந்த மாதிரி, உன் பொண்ணு கல்யாணமும் நடந்துடுமோன்னு பயம் இல்லையா?” என்றான்.

அதை கேட்டு அமைதியாய் தான் நின்றாள். அவளுக்கே அந்த நேரம் அப்படி தான் மனதினில் தோன்றியது.

“இன்னும் என்னோட உன் கல்யாணம் எங்கயோ உனக்கு உதைச்சிட்டே இருக்கு” என்று சொல்ல,

அதுவரை கண்ணீர் வந்த கண்களில் இப்போது ஆவேசம் பொங்கியது, வேகமாய் திரும்பி நடந்தாள்.

“நில்லு அங்கை” என்று அவன் சொல்லவும்,

“வேண்டாம், இப்போ நம்ம பேச வேண்டாம். பேசினா பிரச்சனை பெருசாகும், எஸ், உன்னை கல்யாணம் பண்ணினது எனக்கு உதைச்சிட்டே இருக்கு, அப்படியே நீ வெச்சிக்கோ” என்றவள் அவளின் டூ வீலர் அருகில் சென்று விட,

ஜகதீஷ் அங்கே தான் சற்று தூரத்தில் ஏதோ வேலையாய் இருக்க, “அங்கை வீடு போற வரைக்கும் கூடப் போங்கடா” என்று விட்டான்.

அவர்கள் அவள் செல்ல, பின்னோடு சென்றனர்.

அப்போதும் அவன் செல்லவில்லை! அங்கையின் மனம் ஏகத்திற்கும் அடி வாங்கியது.



ஆக்கமும் எழுத்தும்
மல்லிகா மணிவண்ணன்
 
:love::love::love:

ஏண்டா ஏன்??? எப்போ பாரு அவளை டென்ஷன் ஆக்குற???

உங்கம்மா அவன் எது பேசினாலும் பதில் பேசாதேன்னு இப்போவே சொல்றாங்க........ இப்படியே விட்டுட்டாங்க போல........
கோபம் எல்லாமே உங்களுக்கு மட்டுமே patented போல.......

யாரும் இருக்கும்போது தானே பக்கத்தில் வரமாட்டான்........
வரும்போது போட்டுத் தாக்கிடு.......
எல்லார் கிட்டேயும் கோபம்....... இவனுக்கு ஏதோ inferiority complex இருக்குதோ???
கல்யாணம் இன்னமும் உனக்கு உதைக்குதுனு வேற சொல்றானே???
அப்படி இருந்தால் இப்படி பின்னாடியே உன்னை தேடி வருவாளா???

முதலில் இவன் கிட்ட தான் பேசணும் மனசுல என்ன இருக்குனு சொல்ல சொல்லி........ அப்புறம் அவளை பார்க்கலாம்.......
படிப்பு வளர்ப்பு வசதின்னு ஒரு பெரிய லிஸ்ட் முன்னாடி போட்டான்...... இப்போ என்னவாம்??? அங்கை படிப்பு இடிக்குதா???

விகாஸ் நீ சொன்னதையே சொல்றியேடா :love::love::love:

கரிஷ்மா உனக்கு அண்ணியாப்ப ராஜராஜா??? அப்போ நங்கை :unsure:
 
Last edited:
:love: :love: :love:

என்ன ராஜன் மீண்டும் முருங்கை மரம் ஏறியாச்சா...
இனி அங்கை அவன மலை இறக்கணும்...

விகாஸ் ஆனாலும் நீ சூப்பர்டா...
அத்தை எவ்வளவு கேட்டாலும் சொல்ல மாட்டேங்குற...

ராஜன் ஓடு சண்டை போட All rights reserved to அங்கை... :p:p:p

 
Last edited:
ராஜராஜனை மல்லியாலேயே
சமாளிக்க முடியல...
இதுல தில்லையும் அங்கையுமா
சமாளிக்க போறாங்க...

கரிஷ்மா பாபி சூப்பர்...
 
Last edited:
கோவம் சண்டை இருந்தாலும் முகத்துல காட்டாஆஆம functionல விருந்தினர்களை கவணிப்பது பெரியயயயயய குடும்பத்து மருமகள் வெல் ட்ரெய்ண்ட்க்கு அடையாளம்...

கோவில் கச்சேரிக்கு மட்டும் ஏற்பாடு பண்ணாம...
அங்கை கச்சேரிக்கு ஏற்பாடு பண்ணிட்டியே ராஜா.....


பாபி...
உனக்கு மட்டும் டைலாக் இல்லாம மல்லி வெயிடேத்துறாங்க
 
Last edited:
Top