Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குவியமுடன் ஒரு காதல் 19 2

Admin

Admin
Member


ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்பவள், தன் காதலை ஒருவனிடம் கூறிவிட்டதால் கடைசி வரை தனியாக தான் இருக்க வேண்டும் என உறுதியுடன் இருப்பவள் இதை எப்படி எடுத்துக் கொள்வாளோ?? தப்பான முடிவை அவள் எடுத்தால்??? நினைக்கவே இதயம் பதறியது. கூடாது…. எக்காரணம் கொண்டும் யாருக்கும் இந்த விஷயம் தெரியக் கூடாது!!அதற்கு தான் ஏதாவது செய்தாக வேண்டும் என முடிவெடுத்து, கைத்தாங்கலாக அவளை சாய்த்து அழைத்துச் சென்று, காரின் பின் இருக்கையில் படுக்க வைத்தான். காரை ஆள் நட மாட்டம் இல்லாத இடமாக பார்த்து நிறுத்திவிட்டு, பின் இருக்கையில் இருந்தவளிடம் வந்தான் கார்த்திக். நடந்தது எதுவும் அறியாத மாயாவை காணக் காண நெஞ்சம் அடைத்தது கார்த்திக்கிற்கு.தன் கண்மணம்மாவை மட்டும் ஏன் எல்லா பிரச்சனைகள் தேடி வர வேண்டும்??? அவள் என்ன பாவம் செய்தாள்?? விடையற்ற கேள்விகளுடன் இருந்தவன், அப்போது தான் தன் வாழ்வின் மிகப்பெரிய முடிவை எடுத்தான். தனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, அவளை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்ற எண்ணம் அவன் உடம்பின் ஒவ்வொரு செல்லிலும் துடிக்க, அதற்கு முதலில் அவள் உன் சொந்தம் ஆக வேண்டும் என மூளை அறிவுறுத்த, சற்றும் தயக்கமில்லாமல் தாலியை மாயாவின் கழுத்தில் அணிவித்தான். பின், காரில் இருந்த ஃபர்ஸ்ட் எயிட் பாக்ஸை திறந்து மாயாவின் காயங்களுக்கு மருந்தளித்தான்.அந்த நல்லவனின் கண்களுக்கு அவளின் கலங்கமோ, அவள் அசிங்கப்பட்டுவிட்டாள் என்ற எண்ணமோ சிறிதும் தோன்றவில்லை. அவன் மனதில் இருந்ததெல்லாம் மாயாவுக்கு இது தெரியாமல் எப்படியாவது காக்க வேண்டும். அதற்காக அவன் எல்லோரின் மனதில் தரம் இறங்குவதை பற்றி துளிக் கூட வருத்தப்படவில்லை. போதும் மாயா கஷ்டப்பட்டதெல்லாம் போதும்! இனிமேலும் அவள் வருத்தப்படுவதையோ பாதிக்கப்படுவதையோ அவன் காண தயாராக இல்லை.அதனால் தான் சிறிதும் யோசிக்காமல் அவளுக்கு தாலியை அணிவித்தான் கார்த்திக். தான் அவளை அடைந்துவிட்டோம் என கூறினால், அவளை தன்னிடம் இருந்து யாரும் பிரிக்க முடியாது என தப்பு கணக்கு போட்டான் கார்த்திக். அதுமட்டுமில்லாமல், தான் செய்தோம் என கூறினால் மாயாவுக்கு அவன் மேல் மட்டும் தான் கோபம் வரும்! வெறுப்பை கக்குவாள். அதே நடந்ததை கூறினால், அவளுக்கு பையித்தியம் பிடித்தாலும் ஒன்றும் செய்வதற்கு இல்லை. மேலும், அபிராமி இப்போது தான் ஹார்ட் அட்டாக்கில் இருந்து தப்பித்து வந்திருக்கிறார். இப்படி எல்லோருக்காகவும் யோசித்தே இந்த முடிவை எடுத்தான் கார்த்திக். கடைசி வரை இந்த விஷயம் தன்னோடே இருந்து போகட்டும் என எண்ணியவன் தன்னை விட யாரும் அவளை நன்றாக கவனித்துக் கொள்ள முடியாது என நினைத்து அவளை யாரும் இல்லாமல் திருமணம் செய்து தன்னுடையவள் ஆக்கிக் கொண்டான்.மேலே என்ன செய்வது என சிந்தனை ஓட்டம் கொள்ள, ஒரு திட்டம் உருவாகியது அவன் மனதில். அதன்படி முதலில் ஒரு துணிகடையில் நிறுத்தி அவளுக்கு மாற்றுடை வாங்கி, ஒரு பொது தொலைப்பேசிக்கு சென்று தன் ஸ்கூல் நண்பன் ஒருவனுக்கு அழைத்தான். அவனின் மனைவி ஒரு மகப்பேறு மருத்துவர்…. அவரிடம் யாரோ ஒருவன் போல் பேசி கற்பழிக்க பட்ட பெண்ணிற்கு கொடுக்க வேண்டிய மருந்துகளை பற்றி கேட்டறிந்தான்.முதலில் அவர் கூறவே யோசித்தார்! “யார் நீங்க?? எப்படி இந்த நம்பர் கிடைச்சுது?? முதல்ல அந்த பொண்ண பக்கத்துல இருக்குற ஹாஸ்பெட்டலுக்கு கூட்டிட்டு போங்க.”“மேடம் நான் இருக்குற இடத்திலிருந்து ஹாஸ்பெட்டல் ரொம்ப தூரம். ப்ளீஸ் அந்த பொண்ணுக்கு என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லுங்க. நான் ஹெல்ப் பண்றேன்.”கார்த்திக்கின் கெஞ்சலான குரலில், மாயாவுக்கு கொடுக்கப்பட வேண்டிய மருந்துகளின் பெயர்களை கூறினார். அவர் கூறக் கூற தன் செல்போனில் அவைகளை ஏற்றிக் கொண்டு நன்றியுரைத்துவிட்டு, மெடிகல் ஷாப் நோக்கி ஓடினான். அங்கே சென்றால் டாக்டரின் பரிந்துரையின் பெயரில் தான் மருந்துகளை அளிப்போம் என கூறினர். பெரும்பாடு பட்டு ஒரு பெண்ணுடைய வாழ்க்கை பிரச்சனை என அவர்களை சமாளித்து, மருந்துகளை வாங்கி மீண்டும் காருக்கு ஓடினான்.அதன் பிறகு தான் அவன் பெருந்துரையில் ஹோட்டல் அறை எடுத்தது. ஆனால், அங்கே அவன் கூறிய காரணம் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள் என்பதே. கர்ப்பமான பெண் என்பதால் உடனே அறையும் ஒதுக்கினர். அங்கே சென்றதும், மாயாவுக்கு மருந்து, மாத்திரைகளை அளித்து, அவள் உடம்பு கழுவி அவளை கட்டிலில் படுக்க வைத்தான் அவளின் கணவன்!கண்களில் வழிந்தோடும் கண்ணீரை ஒரு பக்கம் துடைத்துக் கொண்டே தான் இதையெல்லாம் செய்தான். கடவுளை தன் மனக்குமுறலால் சபிக்கவும் மறக்கவில்லை அவன். எல்லாம் முடித்துவிட்டு, நிமிர்ந்ததும் மிகவும் வேதனைக்குள்ளாகியது மனது. ஒரு பக்கம் தன் மேல் பழியை போட்டுக் கொண்டாலும், மாயா எப்படி ரியாக்ட் செய்வாள் என பயம் ஒருப்புறம்! இதை எல்லாம் மனதில் போட்டுக் கொண்டு குழப்பிக் கொண்ட போது, மாயா விழித்தாள்.“அதுக்கப்புறம் நடந்தது உனக்கே தெரியும்….” கார்த்திக் தன் கணமான குரலில் அனைத்தையும் கூறி முடித்து, மாயாவை பார்த்தால் அவளோ செத்துப் போனது போல் அசைவற்று கிடந்தாள். அவளிடம் உடனே ஓடி, “மாயுமா இங்க பாருடா! மாயு மாயு….” என்று அவளை உலுக்கவும், மாயா அப்படியே மயங்கிச் சரிந்தாள்.பதறியபடி தண்ணீர் எடுத்து வந்து அவள் முகத்தில் சுளீரென்று தெளிக்கவும், மாயா கஷ்டப்பட்டு கண்களை திறந்தாள்! “மாயா” என அவளை எழுப்பி உட்கார வைக்கவும், ஓவென பொங்கிய அழுகையுடன் அவன் சட்டையை பிடித்து உலுக்க ஆரம்பித்தாள்.“ஏன்டா ஏன் எல்லாதையும் நீ தான் பண்ணேன்னு சொன்ன?? பையித்தமாடா நீ?? என்னை அங்கயே ஏதாவது செஞ்சு கொன்றுருக்க வேண்டியது தான?? ஏன் என்னை பொழக்க வைச்ச….”அவனின் சட்டையை பிடித்து உலுக்கியவள் தன் உடம்பே பாரமானது போல் மடிந்து அழுவ தொடங்கினாள். அவன் மேல் சாய்ந்தபடி அழுகையுடன் குலுங்கியவள், மீண்டும் கண்களில் கேள்வியுடன் அவனை அண்ணாந்து பார்த்து, “உன்னை பத்தி யோசிக்கவே இல்லையா?? முதல்ல கதிருக்காக, இப்போ எனக்காக, என்னோட அம்மாவுக்காக!!” என்று வலியுடன் வினவவும், கார்த்திக் விளக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டான்.“யோசிச்சேன்… கார்ல திரும்ப கோயம்பத்தூர் வரும் போது யோசிச்சேன்டா! ஊருக்கு போனா உன்னோட வீட்டுலயும் சரி, என்னோட வீட்டுலயும் சரி என்னை மதிக்கவே மாட்டாங்கன்னு தெரியும்! ஆனா, எனக்கு அப்போவும் உன்னை காப்பாத்தனும்னு தான் தோணுச்சு. தப்பே செய்யாம நீ கொஞ்ச நாளா படுற கஷ்டம் தான் எனக்கு மனசுல நின்னுச்சு!யார்கிட்டயும் சொல்லாம நீ ஊரவிட்டு வந்தது தான் ஓரே தப்பா எனக்கு தெரிஞ்சுது. அதுக்கு கூட நான் கல்யாணம் பேச வந்து ஒரு வகையில காரணமா இருந்தேன். ஆனா, என்ன தான் சொன்னாலும் கதிர் செத்தது என்னால தான்னு ஒரு நினைப்பு என் மனசுக்குள்ள. தப்பே செய்யாத நீ கஷ்டப்படுறத விட, தப்பு செஞ்ச நான் கஷ்டத்த அனுபவிச்சுட்டு போலாம்னு தோணுச்சு. அதான், எல்லார்கிட்டயும் அப்படி சொன்னேன். பட் நானே எதிர்பார்க்காதது அப்பா….”‘அப்பா’ என சொல்லும் போதே தொண்டை அடைத்தது அழுகையில், கார்த்திக்கிற்கு. “அப்பா என்மேல கோவமா இருப்பாரு. கொஞ்ச நாள் பேசாம இருப்பாருன்னு தான் நினைச்சேன். ஆனா அவர் இப்படி ஓரேடியா வீட்டை விட்டு போகச் சொல்வார்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல….”இதை கேட்டு மாயாவுக்கு உள்ளமேல்லாம் அப்படி ஒரு கதறல்…. கதறலின் ஊடே, “அப்பாகிட்டயாவது உண்மைய சொல்லிருக்கலாம்ல??” என்று கேட்டாள். “சொல்லிருக்கலாம்… ஆனா எந்த அப்பாக்கு தன்னோட பையன் இப்படி செய்யாத தப்புக்கு பேச்சு வாங்குனா பிடிக்கும் சொல்லு? உங்க வீட்டுலயும், விநாயகமும் என்னை நடந்ததை வைச்சு திட்டுனாங்கனா அவருக்கு தாங்குமா??அதுமட்டும் இல்லாம, முன்னாடி என்னோட லவ்வ அவர் கிட்ட தான் நான் சொன்னேன். பட், அவர் அதையே கதிர், விநா முன்னாடி உளற பார்த்தாரு ஒரு தடவ. நான் தான் கரக்டா தடுத்திட்டேன். இந்த விஷயம் அவருக்கு தெரிஞ்சா கண்டிப்பா மனசுல அடக்கி வைக்க முடியாமா யார்கிட்டயாவது சொல்லிடுவாரு. எனக்கு அது பிடிக்கலை. இந்த விஷயம் என்னோடவே புதைஞ்சு போயிடனும்னு தான் ஆசைப்பட்டேன்!!!”கார்த்திக் பேசப் பேச அவன் மேல் கிளம்பிய நன்றியுணர்ச்சியால், மாயாவின் மனது பேராச்சரியம் கொண்டது. பிடித்தவர்களுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள் என சிலரை குறிப்பிடுவோம். அந்த வகையையும் தாண்டியவனாக கார்த்திக் உள்ளானே??!! அழுகையுடனும் தேம்பலுடனும் அவனிடம் அடைக்கலமானவள், சட்டென்று விளங்கினாள்.“வேணாம்டா நான் அசிங்கம்…. நீ ரொம்ப நல்லவன்… நான் உனக்கு சரியில்லை…. நான் அசிங்கம்….”மாயா தன்னை தானே குறுகிக் கொண்டு, தன் மேல படிந்த காழ்ப்புணர்ச்சியுடன் அவனிடம் இருந்து விலக, கார்த்திக் அப்படியே திகைத்து நின்றான். எது நடக்கக் கூடாது என்று இவ்வளவு பாடுப் பட்டானோ அது இப்போது அவன் கண் முன்னால் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது!!!!
 
Top