Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குவியமுடன் ஒரு காதல் 3 2

Advertisement

Admin

Admin
Member


சே, நன்றி கூற முடியவில்லையே என விநாயகம் வருந்திய வேளையில், கூடவே அவளை கண்டவுடன் தான் உணர்ந்த ஜெர்க் அவனுக்கு, ஏன் தன்னால் நன்றி கூற முடியவில்லை என்று புரியவைத்தது.

பெருமூச்சடன் வீடு போய் சேர்ந்தால் அவன் அன்னை காசு எடுக்காமல் போனதிற்கு திட்டினார். கடைசியில் தன்னை காப்பாற்றிய மாயாவை பற்றி கூறினான். “அந்த பொண்ண காலேஜுல பார்த்தினா காசை திருப்பி கொடுத்திருடா தம்பி” என அவன் அம்மா அறிவுறுத்த மண்டையை ஆட்டினான் மகன்.

அடுத்த் நாள், கார்த்திக்கும் கதிரும் இவன் அசிங்கப்பட்டதை கேட்டு சிரிக்க ஆரம்பித்தனர். “என்னடா சிரிக்கறீங்க? நேத்து அந்த கடைக்காரர் எப்படி பார்த்தாரு தெரியுமா? சுத்தி வேற ரெண்டு மூணு பேரு இருந்தாங்க… மாயா மட்டும் இல்லைனா, இனிமே அந்த கடை பக்கமே போக முடியாத மாதிரி ஆகிருக்கும்.”

“ஏன் இப்போ மட்டும் பயமா இல்லையா மாயாவ பார்த்தா?” கதிரின் கேள்விக்கு கார்த்திக் பதில் அளித்தான். “நீ வேறடா… பயத்துல இந்த லூசு அவகிட்ட தாங்க்ஸ் கூட சொல்லிருப்பானோ இல்லையோ. என்னடா சொன்னியா இல்லையா??”

“இல்லைடா சொல்லைல… அவ அதுக்குள்ள ஸ்கூட்டிய கிளப்பிட்டு போயிட்டா.”

“இல்லைனா மட்டும் இவரு நாலு பக்கத்துக்கு நன்றி உரை ஆறிற்று தான் வந்திருப்பாரு. அவ அண்ணானு கூப்பட்டதுக்கே பேச்சு வராம நின்னுருப்ப… முதல்ல, அந்த பொண்ணுக்கு காசை திருப்பி குடுக்கற வழிய பாரு.”

கார்த்திக்கின் கிண்டலுக்கு முறைத்தாலும், விநாயகமும் மனதில் காசை எப்படி திருப்பிக் கொடுப்பது என்றே யோசித்தான். கார்த்திக்கின் மனதில், மாயசித்ராவின் மேல் ஒரு நல்லெண்ணம் பிறந்தது அப்போது தான். ‘கொஞ்சம் நல்லவ தான் போல’ என்று நினைத்தான் மனதுக்குள் தான். வெளியே ஒன்றும் சொல்லவில்லை!

விநாயகமும் காசை திருப்பிக் கொடுக்கும் நாள் விரைவிலேயே வந்தது. அதே வாரம், வெள்ளிக்கிழமை திரும்ப மாயசித்ராவை பார்த்தான்.

அன்றைய நாளின் கடைசி ஹவரில், கார்த்திக்கும் அவனும் பேசிக் கொண்டே இருக்க, அதை பொறுக்காத பேராசிரியர் விநாயகத்தை வகுப்பில் இருந்து வெளியேற சொன்னார். “மச்சான் ஹெட்செட் குடுடா. கேன்டீன்ல இருக்கேன். வந்து சேரு இவரு ஆத்தி முடிச்சதும்.”

கார்த்திக்கும் எடுத்து குடுக்க, சந்தோஷமாக வெளியேறினான் விநாயகம். கேன்டீன் செல்லும் வழியில் தான் மாயாவை கண்டான். அவளும் அப்போது கேன்டீன் பக்கம் தான் சென்றுக் கொண்டிருந்தாள். பர்ஸில் காசு இருப்பது ஞாபகத்திற்கு வர, வேகமாக அவளிடம் ஓடினான். ஏதோ நினைவில் இருந்த மாயா மூச்சு வாங்க தன்னிடம் வந்து நிற்கும் விநாயகத்தை பார்த்து, திடுக்கிட்டாள்.

“சிஸ்டர் ஒரு நிமிஷம்…” என கூறியபடியே தன் பாக்கேட்டிலிருந்து காசை எடுத்து அவளிடம் நீட்டினான். ரொம்ப பெரிய காசு எல்லாம் இல்லை. நூறு ரூபாய் தான். ஆனால், அதை வாங்காமல் அவனையே பார்த்திருந்தாள் மாயா. “பரவாயில்ல வேண்டாம்னா… நீங்க திருப்பி குடுக்கனும்னு நான் இதை குடுக்கல.”

மென்மையான புன்னகையுடன் கூறிவிட்டு, கேன்டீன் உள்ளே சென்றாள். அவள் கேன்டீனில் ஆர்டர் கொடுத்து காசை கொடுப்பதற்குள் விநாயகம் நீட்டினான். “ஏன்னா??” மாயாவின் சலிப்பான குரலை கண்டுக்காமல், அவனுக்கும் சேர்த்து ஆர்டர் செய்தவைகளை வாங்கி வந்தான்.

இப்போது கொஞ்சம் பயம் போய், தெம்பு வந்திருந்தது அவனிடம். “என்னோட பேர் விநாயகம்”. எதிரில் இருந்தவளிடம் கூறிவிட்டு கைகளை நீட்டினான் குலுக்க. அவனின் பெயரை கேட்டு, முதலில் அதிர்ச்சி அடைந்த மாயா, பின் நீட்டிய கைகளை குலுக்கிவிட்டு, “நான் மாயசித்ரா.” என்றாள் சிரித்த முகமாக.

“ஏம்மா பெயரை கேட்டு ஷாக் ஆயிட்ட?”

“என்னோட அப்பாவோட பேர் கூட விநாயகம் தான். அது மட்டும் இல்லாம, எனக்கு ரொம்ப பிடிச்ச சாமியும் பிள்ளையார் தான்!”

“ஹோ அப்படியா… அப்பா என்ன பண்றாரு?”

ஒரு நிமிடம் மௌனம் அந்த இடத்தை சூழ, மாயாவின் குரல் அதை உடைத்தேறிந்தது. “அப்பா ஏழு வருஷம் முன்னாடியே இறந்துட்டாருனா… ஒரு ஆக்ஸிடன்டுல.”

கேட்ட விநாயகத்துக்கு மிகவும் பாவமாக தோன்றியது. “சாரிமா…” அவனின் அசவுகரியமான நிலையை உணர்ந்து அதை மாற்றவென பேச்சை திசை திருப்பினாள். “எனக்கு உங்கள பார்த்தா என்னோட அப்பாவோட ஞாபகம் தான் வருது. உங்கள அண்ணானே கூப்பிடட்டுமா??”

“அதுக்கேன்ன தங்கச்சி தாராளமா கூப்பிட்டுக்கோ. ‘அப்பா’ன்னு மட்டும் கூப்பிடாதமா. எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகலை! ஏற்கனவே ஒரு பொண்ணும் திரும்பிப் பார்க்க மாட்டேங்குது.”

அவன் சொல்வதை கேட்டு வந்த சிரிப்பை அடக்காமல், பொங்கி சிரித்தாள் மாயா. கருப்பாக கொஞ்சம் குள்ளமாக இருக்கும் விநாயகத்தை பார்த்தால், இவளுக்கும் எந்த பெண்ணும் பார்ப்பாள் என தோணவில்லை… ஆனால், அதை கூறாமல், புதிதாக முளைத்த உரிமையுணர்வுடன் அவனிடம் தன் வீட்டினரை பற்றி கூறினாள்.

விநாயகமும் பதிலுக்கு தன் குடும்பத்தை பற்றி அவளுக்கு கதையளந்தான். “சொந்த ஊர் ஈரோடு. சின்ன வயசுலையே இங்க வந்திட்டோம். ஒரு அக்கா மட்டும் தான் எனக்கு. சென்னையில இருக்கா கல்யாணம் பண்ணிட்டு. மாமாக்கு அங்க தான் வேலை. அப்பா பேங்க்ல வேலை பார்க்குறாரு. காலேஜ் பி.இ. இங்க தான் பண்ணேன். இப்போ எம்.பி.ஏ. பண்றேன்.”

“ஹ்ம்ம்ம் தெரியும்! உங்கள பத்தி கேள்விப்பட்டேன்.” நமுட்டு சிரிப்புடன் மாயா கூற, திருதிருவென முழித்தான் விநாயகம். “யார் சொன்னா? என்ன சொன்னாங்க??”

“சும்மா சொன்னேன்ணா. என்னோட கிளாஸ்மேட்ஸ் தான் சொன்னாங்க. பட், உங்கள பத்தி இல்ல, உங்க பிரெண்டு கார்த்திக் பத்தி தான் சொன்னாங்க.”

”உன் கிளாஸ் பொண்ணுங்க…? ஹோ அந்த காயத்ரி கேங்கா…. ஓவரா புகழ்ந்திருப்பாங்களே அவனை பத்தி.”

“ஹ்ம்ம்ம் ஆமா, ஓவர் புக்ழ்ஸ் இல்ல… ஓவர் கொஞ்சல்ஸா இருந்துச்சு!”

வெறுப்பாக மாயா கூறவும், கவனமுடன் பேச ஆரம்பித்தான் விநாயகம். ஏன்னென்றால் பேசப் போறது அவளுக்கு பிடிக்காத கார்த்திக்கை பற்றி ஆயிற்றே! “அவன் மேல தப்பு இல்லமா… இந்த பொண்ணுங்க தான் அவன் மேல வந்து விழுவாங்க, பாரு! ஷப்பா… பக்கத்துல நான் நிக்கறது எல்லாம் அவங்க கண்ணுக்கு தெரியவே இல்லையோன்னு யோசிப்பேன் நானு.”

“ஹ்ம்ம்ம்…”

“உனக்கு அவன் மேல கோவம் இருக்கும். எனக்கு புரியுது… பட், அவனுக்கு கதிர் புரிய வைச்சுட்டான். அது மட்டும் இல்லாம, நீ ராகேஷ அடிக்கப் போறத பார்த்து, அவனும் நீ கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கேன்னு புரிஞ்சுக்கிட்டான். இனிமே, எதுவும் லொள்ளு பண்ண மாட்டான்மா…. அதுக்கு நான் கேரன்டி!”

விநாயகத்தின் பேச்சில் இருந்த உண்மையை கண்டு பேசாமல், சில நொடிகள் இருந்தாள் மாயா. பின் அவளே தன்னுடைய வழக்கமான உற்சாகத்துடன் பேசினாள். “அண்ணா நான் ராகேஷை அடிக்கப் போறத பார்த்து நீங்க பயந்துட்டிங்க தான?? நான் அன்னிக்கு பார்த்தேன் உங்கள. ஷாக்காகி அப்படியே நின்னுட்டு இருந்தீங்க….”

“அட அதை ஏன்மா கேக்கற?? அன்னிக்கு உன்னை பார்த்ததுலந்து உன்னை பார்த்தாலே பயம் தான். பட், கடையில நீ ஹெல்ப் பண்ணப்போ தான் கொஞ்சம் நம்பிக்கை வந்துச்சு. இந்த புள்ள நம்மள அண்ணாவா நினைக்குது. அடிக்க எல்லாம் செய்யாதுனு…”

“ஹா ஹா அடிக்க மாட்டேன் நம்பலாம் என்னை….”

காபியை அருந்திய விநாயகத்தின் மனதில் திடீரென எழுந்தது சந்தேகம். “ஆமா தங்கச்சி உனக்கு ஈவ்னிங் கிளாஸ் தான? இங்க இருக்க கிளாஸுக்கு போகல??”

“கிளாஸ்ல தூக்கம் வந்துச்சு, தூங்கினேன். மேடம் வெளிய அனுப்பிட்டாங்க! இங்க வந்துட்டேன்.”

தோள்களை குலுக்கியபடி மாயசித்ரா வினவ, அவளுக்கு ஹை-பை கொடுத்தான் விநாயகம். அப்படி ஒரு சந்தோஷம் அவன் முகத்தில்! “சூப்பர்மா என் இனம்மா நீ! நானும் கார்த்திக்கும் பேசிட்டு இருந்தோம்னு, அந்த கொசு மண்டையன் என்னை மட்டும் வெளியே அனுப்பிட்டான். நானும் சரிதான் போடான்னு கிளம்பி வந்துட்டேன்.”

“ஹோ செமையா என்ஜாய் பண்றீங்கனு சொல்லுங்க!”

“ஹ்ம்ம்ம் ஆமாடா… ஏன் உனக்கு காலேஜ் பிடிக்கலையா??”

“ப்ச்ச்ச்…” ஒரு நெடிய பெருமூச்சை விட்டபடி உதட்டை பிதுக்கினாள் மாயா. “ஏன்?” விநாயகத்தின் ஒற்றை வார்த்தை கேள்விக்கு பதிலாக, “என்னோட இன்டிரஸ்ட்டே வேறனா! சும்மா டிகிரி முடிக்கனும்னு இங்க வந்துட்டு இருக்கேன்.” என்று கூறினாள்.

விநாயகம் மேலும் கேட்பதற்குள் அவனின் மொபைல் அடித்து, அவனின் திசையை மாற்றியது. யார் என பார்த்தால், கார்த்திக்! எடுத்து காதில் வைத்த நொடி, “சார் கொஞ்சம் எழுந்து பக்கத்து டேபிளுக்கு வரிங்களா?” என கார்த்திக் வார்த்தைகளை கடித்துத் துப்ப, சுற்றும் முற்றும் பார்த்தான் விநாயகம்.

பக்கத்து மேசையிலேயே கார்த்திக்கும் கதிரும் அமர்ந்திருப்பதை கண்டு, ‘ஐய்யோ இவன் எப்போ வந்தான்னு தெரியலையே??’ மனதுக்குள் அபாய மணி அடிக்க, மாயசித்ராவிடம் நாளை பார்ப்பதாக கூறி, விடைபெற்றான். ஆடு கசாப்பு கடைக்கு போவது போல, விநாயகம் பம்ம, மாயா குழம்பிப் போனாள்.

அவன் பார்வை சென்ற இடத்தில் திரும்பி பார்த்த மாயாவும், கார்த்திக்கை பார்த்து யார் விநாயகத்தை அழைத்திருப்பார்கள் என புரிந்துக் கொண்டாள்.

எதுவும் பேசாமல் எழுந்துச் சென்றாள். அடுத்த நாள் மீண்டும் இருவரும் சந்தித்தனர். மாயசித்ராவின் கனவுகளை கேட்டு விநாயகம் திகைத்து நின்றான்!
 
:love: :love: :love:

அடடா அண்ணனும் தங்கையும் செம மேட்ச் போல.......
கார்த்திக்கு ஏன் fire ஆகுது???
சந்தடி சாக்குல கார்த்திக் பற்றியும் தங்கைக்கு சொல்லியாச்சு.......

அண்ணன் பாடு என்னவாகப் போகிறதோ இப்போ???
 
Last edited:
உன்னைய மாதிரியே உன்னோட திடீர் தங்கச்சியும் இருக்காளே, விநாயகம்
கிளாஸ்ஸை கட் அடிப்பதில் நீங்க இரண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கீங்களே
 
Last edited:
Top