Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 27

Advertisement

இந்த சரண்‍ அம்மா வீட்டில்
இத்தனை நாள் இருந்தும்
பிள்ளைகள் ஒட்டவே இல்லை
இப்ப பொங்கல் வைக்க
பிறந்த வீட்டு ஆட்களா
கூடவும் யாரும் நிக்கல
பேச்சு பாரு அக்காக்காரிக்கு

எப்படியோ மாமியாரு வந்து
உதவியாச்சு

அருமையான பதிவு
 
Saran porandha veedu onnukum proyojanamilla. Priya sutha waste. Poramaila pongite iru. Dhanam oru vishayathula correct. Seriya thappo pillainga 3 perum othumaiya daan irukaanga. Mathapdi idhellam ennikume thirunthada caseu. Vetri 😂😂😂. Munnadi seidha vishayangal apdi. Romance ah kooda bayandhutu serious tone laye solla vendiruku. Saran enna seyya pora
 
வெற்றி என்னடா இப்படி மாறிட்ட....🤭 ஒரேயடியா சகலமும் சரண்யா ன்னு சரணடைஞ்சுட்டான்... 🤗🤗🤗🤗🤗🥰🥰🥰🥰🥰

தனம் இந்தளவுக்கு இருந்தாலே போதும் நீயெல்லாம் மருமகளே ன்னு கொஞ்சுனா பார்க்குறவங்களுக்கு தான் நெஞ்சு வலி வந்துடும்...🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 எப்படியோ இத்தனை நாள் ஆராய்ச்சி பண்ணி பட்டு குட்டியையும் உங்க குடும்ப வாரிசுன்னு பெரிய மனசு பண்ணி ஒத்துக்கிட்டீங்களே... 😏

சுகந்தி, பிரியா எல்லாம் திருந்தாத ஜென்மங்கள்.... 🥶🥶🥶🥶🥶🥶🥶
 
பொண்ணோட பிறந்த வீட்டு ஆளுங்க அவங்களுக்கு துணையாக இல்லைனாலும் வினையாக இருக்கக்கூடாது. சரண்யா வீடு மாதிரி. அப்படி இருந்தா அவங்க பொண்ணு மனசுல மட்டும் இல்லை வீட்டுலையும் தள்ளி தான் நிக்கணும்.

ஆனால் மருமகளுக்கு மாமியாரா ஆண்பிள்ளையை பெத்தவங்க கொலையே செய்ய துணிஞ்சுருந்தாலும், இப்ப உசுரோட இருக்கா தானே, புருஷனோடவும் சேர்ந்து வாழறா அப்புறம் என்னன்னு தான் இந்த சமூகம் நினைக்குது. முக்கியமா அந்த மாமியாராகப்பட்டவங்க என் பையன் என் வீடு எனக்கு தான் எல்லாம் செய்ய உரிமைன்னு மார்தட்டி பெருமையாவும் உரிமையாவும் பேசறது இருக்கே, என்ன சொல்லறது ஆண் வழி சமூகத்தோட அவலம் அது.

நியாயமா பொங்கல் வைக்க கூடவே இருந்து சரியான முறையில் எல்லாம் நடக்குதான்னு பார்க்க கடமை பட்டவங்க தான் தனம். (உரிமை பேசினா அதுக்கு முன்ன அவங்க கடமையை செய்யணும் )
அதை விட்டுட்டு கடைசியில் வந்து சரி படுத்திட்டு அப்ப கூட சரண்யாவை -அவ வளர்ப்பை திட்டிட்டு போறாங்க. இவங்களுக்கு எது கொடுக்குது அந்த உரிமையை?

Sivakumar-சுகந்தி எதுல தவறி இருந்தாலும் சரண்யாவை வளர்த்ததுல தவறலை. வேல்முருகன்-தனம் தான் வெற்றி என்னும் வெட்டியை பெத்து, துணிவு, மனவுறுதி நிலை புத்தி போன்ற குணங்கள் இல்லாமல் வளர்த்து வெச்சுருந்தாங்க.

தனக்கு மனசுல உடனே தோண வேண்டிய நியாயம் கூட தோணாமல் தன்னை குழப்பி மனைவியையும் வருத்திய அருமையான ஆம்பளை தான் அவன்.

சரண்யா புருஷன் தான், தன்னோட பிள்ளைகளுக்கு அப்பாவா தன் குழந்தைகளுக்கு அம்மாவான பின், தன் மனைவியை மதிக்கறான் மத்தவங்களும் மதிக்கணும்ன்னு நினைக்கிறான். அதற்கு தக்க நடக்கறான் பேசறான். அவ்வளவு தான். So Credits சரண்யாக்கு தான்.

பிரியாவெல்லாம் உடன்பிறப்பு list-லயே சேர்த்தி கிடையாது. அம்மாவா பொண்ணுக்கு உதவி செய்ய சுகந்தி தான் போய் இருக்கணும். ஆனால் அவங்க போய் இருந்தாலும் எங்க வீட்டு வழக்கத்தை என் மருமகளுக்கு சொல்லி கொடுக்க எனக்கு தான் உரிமைன்னு பேசி மட்டம் தான் தட்டி இருப்பாங்க தனம்.

மாயாவாகட்டும் சக்தி ஆகட்டும் ஒத்துமையா அண்ணனோட இருக்காங்க என்றால் அதுக்கு பின்னாடி இருக்கறது வெற்றி செஞ்ச தியாகம். பணம் காய்ச்சி மரமா அவன் உழைச்சு இவங்களை முன்னேத்தி இருக்கான். இனிமேலும் வீசி சீர் செய்ய அண்ணன் வேணும் மாயாக்கு. கிட்டத்திட்ட பிரியாக்கும் சுரேந்திரனுக்கும் இருக்கும் பாசம் போல தான் இதுவும். சக்திக்கும் தெரியும் எது ஒன்னுனாலும் அண்ணன் தனக்கு துணையாக இருப்பான் என்று. சரண்யாவோட பெருந்தன்மை தான் இவங்க ரெண்டு பேரும் இப்ப வெற்றியோட ஒத்து நிக்க காரணம். அப்படி பார்த்தால் அது சரண்யாவை பெத்தவங்க அவளுக்கு கொடுத்த வளர்ப்பாலும் அனுபவப்
பாடத்தாலும்தான்னு தான் சொல்லணும்.

இதே மாதிரி சரண்யாவும் தன் பிறந்த வீட்டுக்கு பணத்தால செய்ய தொடங்கினா அவங்களும் பாசமா (?) தான் இருப்பாங்க அவளோட. ஆனால் அவ அதை செய்ய மாட்டா. ஏன்னா அவ புத்திசாலி. அதே சமயம். புருஷன் அப்படி தன் குடும்பத்தை, அவங்க என்ன தான் மனைவிக்கு பெருங்கேடு செஞ்சுருந்தாலும் விட்டுட முடியாது முக்கியமா பணம் உணவு என்னும் தேவைகளில் பெத்தவங்களை ஒரு மகனா வஞ்சிக்க முடியாதுன்னு உணர்ந்து அவனுக்கு நிம்மதியை கொடுக்க தான் அவ தன் புகுந்த வீட்டோட அனுசரிச்சு போறா. குழந்தைகளுக்கு உறவும் வேணும். எல்லாம் யோசித்து செயல்படறா சரண்யா. அவ்வளவு தான்.

வெற்றி தன் உறவுகளை அரவணைப்பது போல இவளும் செய்தால் குழந்தைகள் இரண்டு பக்கமும் ஒட்டுதலா இருக்கும். ஆனால் அவ அப்படி செய்யாதது தப்பில்லை. பிறந்த வீட்டை நம்பி வந்து மிக மோசமா தோத்துப்போன நிலையை அவளால் எளிதில் மறக்க முடியலை.

அதனால் வெற்றி siblings better என்றும் சரண்யாவோட siblings worst என்றும் சொல்ல முடியாது. ரெண்டு பக்கமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.
அவரவர் அடையும் ஆதாயம் அவரவர் நிலையை தீர்மானிச்சு இருக்கு. அவ்வளவு தான்.

தனத்தோட வாயை, வீட்டை விட்டு வெளிய அனுப்பிய பேத்திகளுக்கு தன் வீட்டு ஜாடை சொல்லி சந்தோஷப் படற அந்த கேவலமான வாயை தச்சு தான் விடணும். சே! காலங்காலமா ஒரு பெண்ணோட புகுந்த வீட்டாளுங்க பொண்ணுங்க ஏதோ வெறும் பிள்ளை பெத்து தரும் machine மாதிரியும் அதிலிருந்து வரும் product-க்கு இவங்களும் இவங்க வீட்டு பையனும் மட்டுமே முதலீடு செய்யற மாதிரியும் பேசறதெல்லாம் என்னைக்கு தான் ஒழியுமோ. இவங்க வீட்டு மூணாம் சுத்து உறவோட சாயல் கூட தெரியும் ஆனால் பிள்ளையை பெத்த அம்மா சாயல் தெரியாது -இருக்கக்கூடாது. இது என்ன ஓட்டை நியாயம் என்று புரியலை.

டேய் வெற்றி என்னடா இப்படி ஒரு நூதன வழியில் நூலு விடற உன் பொண்டாட்டிக்கு. ஏது அவ கைக்குள்ள இருக்க பழகிட்டியா -இதெல்லாம் என்னடா வசனம். முடியலை. மாசத்துல மூணு நாள் கூட அவளுக்கு rest இல்லைங்கிறதை இப்படி ஒரு
dimension-ல புகழா படிக்கிறானே வெற்றி. ஏம்மா சரண்யா இதுக்கு என்னமா உன் reaction? கதை முடியப்போறதால அநேகமா வெற்றி எதிர்பார்க்கும்
reaction-ஐ தான் தருவன்னு நினைக்கிறன். பார்ப்போம்.
 
Last edited:
தனம்மா க்கு மருமகள் சொன்னதுல இருக்க உண்மையை மாமனார் விருந்து, சாணம்னு பேசி புரிய வச்சிட்டார்... இனி அவங்கவங்க எல்லைன்னு இருக்கனும்னு கூட இல்ல, சரண்யா வ நோண்டாம mega series villain மாதிரி irritating dialogues அடிக்காம இருந்தா சரி. அப்டி தான் இருப்பாங்க ன்னு நம்புவோம். பொங்கல் வைக்க கூட வந்து நின்னதுலேயே தெரியுது.

பல் 🤣 சித்தப்பா மாதிரி ன்னு சொல்லி விஜி குட்டியவும் இழுத்துகிட்டாங்க, அது வரைக்கும் சரி தான்.


குழந்தைகள் கொண்டாடும் இடத்துல தான. அன்பு எங்க கிடைக்குமோ அங்க தான் ஒட்டுவாங்க சுகந்திம்மா.

பிரியா பொறாமைல பொங்கறா.


திவ்யா செய்ற முறை திருப்பி வந்தா சரின்ற அளவுல இருக்கா, பரவால்ல..

ஆனா வெற்றி கடைசியா நீ பேசினதெல்லாம், நீயாப்பா பேசினன்ற(உளறினன்ற) range ல சரண்யா பார்க்குறா (முழிக்கறா)...
 
Last edited:
Top