Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் - 05

Advertisement

Supe
*5*

உன்னால் காதலிக்கப்படும், அந்த நொடிக்காகவே நான்!!

அன்று காலை தரகர் வந்து, “உங்களுக்கு பேரங்க மட்டும்தானா? பேத்தி இல்லையா?” என கேட்டதில் இருந்தே சிவகாமி சற்று உணர்ச்சிவசப்பட்டே இருந்தார். தங்கத்தின் திருமணத்தன்று செல்லம் மணமகனோடு சென்றுவிட்டதாய் பிறர் சொல்லிய போது நம்பாதவர், செல்லம் கழுத்தில் மாலையும் தாலியும் தொங்க ஷங்கரோடு வந்து நின்றபோது கட்டுக்கடங்காத ஆத்திரம் கொண்டார். ஊரார் முன்னும் சொந்தபந்தம் முன்னும் பெரிய தலைகுனிவு என்பதை விட, மணமேடையில் கண்ணீர் ததும்ப நின்றுக்கொண்டிருக்கும் மூத்த மகளை பார்த்தபோது, வருத்தமும் அழுகையும் ஒரு ஆவேசத்தை கொடுக்க, செல்லத்தை அடித்து தள்ளிவிட்டார் சிவகாமி.



ஷங்கரை அடிக்க சத்தியராஜன் கை ஓங்கிக்கொண்டு போக, ஒண்டிவீரர் “அவங்களை இங்கிருந்து போக சொல்லு சத்தியா! இனி நம்ம கண்ணுல அவங்க படவே கூடாது! என் கடைசி பொண்ணு செத்துட்டா! இனி அவங்களுக்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்ல! பெத்த கடமைக்கு அவ பங்கு சொத்தை பிரிச்சு குடுத்துடலாம்” என அப்போது பிரிவினை நடத்தி விட்டார்.



வீட்டிற்க்கு கடைக்குட்டியாய் பிறந்த செல்லம், பெயருக்கு ஏற்றதை போல எல்லோருக்குமே ரொம்ப செல்லமான பிள்ளையாய் இருந்தார். அதிக செல்லத்தால், எதிலும் பிடிவாதம் அதிகம். சின்னவள் தானே வளர்ந்தால் சரியாகிவிடுவாள் என கண்டுக்கொள்ளாது விட, அதுதான் தங்கத்தின் வாழ்வை சூன்யமாக்கியது.



தாய்தந்தையற்ற ஷங்கரை தனக்கு நம்பிக்கையானவனாய் வைத்துக்கொண்டார் ஒண்டிவீரர். அப்போதிருந்தே சத்தியராஜுக்கு குடும்பத்தில் பெரிதாய் ஒட்டுதல் இருந்ததில்லை. எனவே அவ்வீட்டின் தேவைகள் பெரும்பாலும் ஷங்கரின் வழியே நடக்கும். பதினேழே வயதான செல்லத்திற்கு ஷங்கரின் மீது ஈர்ப்பு இருந்ததை ஒருவரும் உணரவில்லை, ஷங்கர் உட்பட!

இந்நிலையில் தனது மூத்த மகள் தங்கத்தை ஷங்கருக்கு கொடுக்க ஒன்டிவீரர் முடிவு செய்ய, அதுவே எல்லோர் முடிவாகவும் போய்விட, ஆசையாசையாய் நடந்தேறியது தங்கத்தின் திருமண வேலைகள். தான் ஆசைப்பட்ட ஒருவன் தனக்கு கிடைக்காமல் போவதா? என பிடிவாதம் கொண்ட செல்லம் நினைக்க, அது அவரை தவறான வழியில் இட்டு சென்றது.



திருமணத்தின் முதல் நாள், ஷங்கரை தனித்து சந்தித்து தனக்கு அவர் மீது விருப்பம் இருப்பதை தெரிவித்தார் செல்லம். அவர் எதிர்ப்பார்த்ததை போலவே ஷங்கர் அவரை மறுக்க, ‘நீங்க இல்லன்னா நான் செத்துடுவேன்’ என்று மிரட்டினார் செல்லம்.

சற்றே ஆடிப்போன ஷங்கர், ‘நான் ஐயா கிட்ட சொல்லிடுவேன் செல்லம், ஒழுங்கா மனச மாத்திக்கோ!’ என்றார்.

‘நீங்க என் அக்காவை விரும்புறீங்களா?’

‘விருப்பம்ன்னு எனக்கு எதுவும் இல்ல! எங்க ஐயா யாரை சொல்றாங்களோ அவங்களை தான் கட்டுவேன்! அவர் உன் அக்காவை காட்டுறாரு! எனக்கு அதுல சம்மதம்’ என்று சொல்ல, கோவமாய் அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டார் செல்லம். மறுநாள் காலை விடிந்தபோது அவர் முன்னே வந்து நின்ற செல்லம், ‘என் கையில இருக்க தாலியை என் கழுத்துல கட்டுங்க, இல்லன்னா இந்த கத்தியால என் கழுத்தை நானே அறுத்துப்பேன்! சத்தம் போட்டு யாரையும் கூப்பிட நினைச்சாலும் என் கழுத்தை அறுத்துப்பேன்!’ என்றார் தடாலடியாய்.



எவ்வளவோ பேசியும் கெஞ்சியும் மசியாத செல்லத்தின் பிடிவாதத்தின் முன்னே ஷங்கரின் திடம் உடைந்துபோக, அவர் கழுத்தில் தாலியை கட்டினார். அதன்பின்னே நடந்தது எதுவும் அவருக்கு நினைவில் இல்லை. தன்னை மகனை விட பாசமாய் பார்த்துக்கொண்ட ஐயாவை ஏமாற்றிவிட்ட குற்றவுணர்வே அவரை நிமிர்ந்து கூட பார்க்க விடாமல் செய்தது.

‘உண்மையை வெளியே சொல்லக்கூடாது’ என்று வேறு தனி மிரட்டல் செல்லத்திடம் இருந்து. சிவாகாமி செல்லத்தை அடிக்கும்போதும் ஷங்கர் சென்று தடுக்கவில்லை. அங்கிருந்து போக சொன்னதும், தன்போக்கில் பஸ் ஸ்டேன்ட் வந்தவர் சென்னை பஸ் ஏற, இதோ வாழ்க்கை எப்படி எப்படியோ சென்று நேராகிவிட்டது.

செல்லம் அவர் வாழ்வில் வந்த முறை தவறென்றாலும், ஒரு மனைவியாய், அன்பான தாயாய் அவர் எந்த குறையும் வைக்கவில்லை. ஆரம்பித்தில் விருப்பமின்றி ஆரம்பித்த அவர் வாழ்வு, செல்லத்தின் உண்மையான பாசத்தால் செம்மையுற்றது.

தன் மகளே தன்னை ஏமாற்றியதை தாங்க முடியாத ஒண்டிவீரர், ராணுவத்தில் இருந்து ஒரு மாத விடுப்பில் வந்திருந்த தனது அக்காள் மகனுக்கு அப்போதே தங்கத்தை தாரைவார்த்துகொடுத்தார். விடுப்பு முடிந்தது சென்றவர் எல்லையோர காவல்படையினர் மீது நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரை விட்டார். தங்கத்தின் வாழ்வு ஆரம்பிக்கும் முன்னே கருகியது.



எத்தனையோ முறை பெற்றவர்களை தொடர்பு கொண்டு சமாதானம் செய்ய முயன்ற செல்லத்தின் முயற்சிகள் எல்லாம் வீணாகின. ஒண்டிவீரரும் சிவகாமியும் பிடிவாதமாய் இருந்தனர். அதிலும் தங்கம் கைம்பெண்னான பின்னே அவர்கள் பிடிவாதமும் செல்லத்தின் மீதான வெறுப்பும் கூடியது.



கடைசியாய் என் பெண் பெரியவளாகிவிட்டாள், குடிசை கட்ட மாமன் வேண்டும் என படியேறி வந்த செல்லத்தை யாரையும் பார்க்க விடாமல், சுடும் சொற்களால் விரட்டிவிட்டிருந்தான் பேரின்பன். அதன் பின்னே செல்லம் ஒருமுறையும் அவர்களை தொடர்புகொள்ளவில்லை.



ரத்தம் சூடாய் இருக்கும்போது இருக்கும் பிடிவாதமும், திடமும் தோள் சுருங்கும்போது காணாமல் போகும் போல!! சிவகாமியின் பிடிவாதம் சில மாதங்களாய் குறைந்துக்கொண்ட்டே வந்தது. சரியாய் சொல்ல வேண்டுமானால் பேரின்பனின் திருமண பேச்சு தொடங்கியதில் இருந்து ‘தன் பேத்தியே இருக்கையில் வேறொத்தி இந்த வீட்டிற்க்கு எதற்கு?’ என்ற எண்ணம் தோன்றி, அது ஆசையாய் மாறி, நடக்காது என்று தெரிந்ததும் பேத்தியின் முகத்தையாவது பார்க்கலாமே என்ற ஆவலில் வந்து நின்றது.



தரகர் கேட்டதும் பேத்தியை காண வேண்டிய ஆவல் பிரவாகமெடுக்க, மகளை கண்டும் இத்தனை ஆண்டுகள் ஆனதால் பழைய ஆல்பத்தை கண்ணீரோடு எடுத்து வைத்து பார்த்துக்கொண்டிருந்த சிவகாமியை காண்டீபன் உலுக்கினான். அவனிடம் தன் விருப்பத்தை சொன்னதும், ‘உங்களால எப்படி எல்லாத்தையும் மன்னிச்சு மறக்க முடியுது!?’ என ஆரம்பித்தவன் பேரின்பன் வரும் வரை விடவில்லை. அதன்பின்னே நடந்ததெல்லாம் நாம் அறிந்ததே!!



சோளக்காட்டு வீட்டில் முற்றத்தின் நடுவே கையை தலைக்கு கொடுத்து படுத்திருந்தான் பேரின்பன். அவன் மனமும் பழையதை எல்லாம் எண்ணி பார்த்துக்கொண்டிருந்தது. நேற்றிரவு காண்டீபன், “நீ செஞ்ச தப்பால அம்மா இல்லாம நான் தவிக்குற என் நிலைமை தான் உன்கிட்ட என்னை நெருங்க விடாம தடுக்குது’ என்று கண்களில் நீர்படலம் படர சொன்னது அவனை வெகுவாய் வாட்டினாலும், மறுபக்கம் சிறு மகிழ்வையும் கொடுத்தது.

‘அவனுக்கு என்னை நெருங்கனும்ன்னு ஏதோ ஒரு மூலைல எண்ணம் இருக்கே! அதுவே போதும்!’ என்ற நிறைவு. வேலைக்கு செல்ல தோன்றாமல் அப்படியே படுத்துக்கிடந்தான். ராத்திரி கோவத்தில் சாப்பிடாமல் வந்துவிட்டான். இப்போது காலை வேளையும் கடக்க பசி ஏற ஆரம்பித்தது.



“சும்மா சும்மா ஆயிரத்தெட்டு முறை வருவானுங்க, அண்ணே நொன்னேன்னு! வேனுங்குறப்போ ஒருத்தனும் வரமாட்டான்!” வாய்விட்டே சொன்னவன், எழுந்து சென்று தண்ணீரை மடக் மடக்கென குடித்தான். வாசலில் யாரோ வரும் அரவம் தெரிய, “வாங்கடா கிளிங்களா! அண்ணனை காணோம்ன்னு இவ்ளோ சீக்கிரமா தேடி......” பேசிக்கொண்டே வந்தவன் பேச்சு அப்படியே நின்றது எதிரில் நிற்பவனை கண்டு.



வாசலில் கைகளை பின்னுக்கு கட்டி எங்கோ பார்த்தபடி நின்றிருந்தான் காண்டீபன். அவனை அந்த வீட்டில் இன்பன் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. ‘வா’ என அழைக்க கூட தோன்றாது அதிசயத்தை கண்டவன் போல நின்றுவிட்டான் பேரின்பன்.



‘ஹக்கும்’ என தொண்டையை செருமிய காண்டீபன், “நம்ம நகைக்கடை ஆடிட்டிங் நடக்குது இன்னைக்கு” என்றிட, ‘நம்ம கடையா?’ என வாயை பிளந்தான் இன்பன்.



“நான் அங்க இருக்கணும்! அப்பாக்கும் வேலை இருக்கு! ஆள் இல்லன்னா மில்லுல வேலையே நடக்காது, ஏச்சு புடுவானுங்க! அதனால....” என்று நிறுத்திய காண்டீபன் மீண்டும் தொண்டையை செருமிக்கொண்டு, “அதனால இன்னைக்கு நீ மில்லுக்கு போய் வேலை நடக்குதான்னு பார்த்துக்கோ! இது பீரோ சாவி, பத்திரம்” என்று அவன் முகம் பார்க்காது சொன்ன காண்டீபன் விறுவிறுவென வாசலுக்கு சென்று காரில் ஏறிவிட்டான்.



வந்தது தனது தம்பிதானா? அவன் பேசியது தன்னிடம் தானா? என அதிசயித்து போய் மலைத்து நின்றிருந்தான் பேரின்பன். அசந்து போய் நின்றவனை காணாது காரை கிளப்பிக்கொண்டே, “திண்ணையில சாப்பாடு இருக்கு, சாப்பிட்டுட்டு கிளம்பு” என்றவன் அங்கிருந்து மறைந்துவிட்டான். அவன் சொன்ன பின்பே திண்ணையை பார்த்தவன், அங்கே ஹோட்டலில் இருந்து வாங்கிய பார்சல் கவர் இருக்க, சூடான ஐந்து இட்லி கூட அவன் வயிற்றுக்குள் தேவாமிர்தமாய் இறங்கியது.



உண்டு முடித்ததும் புது தெம்பு வந்ததை போல உணர்ந்தான் இன்பன். அது இட்லியின் வருகையாலா, காண்டீபனின் வருகையாலா என்றால் கண்டிப்பாக காண்டீபனை தான் சொல்லுவான் இன்பன். அவன் இயல்பில் மிக நல்லவன், தன் மீது கோவம் மட்டும் குறைந்துவிட்டால் எவ்வளவு நன்றாய் இருக்கும் என எண்ணிக்கொண்டே தங்கள் மில்லுக்கு கிளம்பினான். மாத்து உடுப்பு ஒன்றும் கொண்டு வராததால் முதல் நாள் போட்டிருந்த அதே வேட்டி சட்டையை குளித்துவிட்டு உடுத்திக்கொண்டு தன் சுசுக்கியை எடுக்க, அதுவும் இன்று விளையாடாமல் கிக்கரை உதைத்ததும் கிளம்பியது.



மில்லுக்கு சென்றதும் அவன் ஒருவித நிமிர்வோடு அலுவலக அறையை நோக்கி செல்ல, அவனை கண்ட கிளிகள் வேலையை நிறுத்திவிட்டு, “ண்ணே! என்னா கள்ளாப்பெட்டில உட்காரா போற மாறி வீர நடைபோட்டு போய்கிட்டு இருக்க? மூட்டைங்க எல்லாம் இங்கன இருக்கு, வா!!” என்றான்.



நடையை நிறுத்தாமல், “மூட்டை தூக்குறதை எல்லாம் நீ பண்ணு! நான் ஆபிஸ் ரூம் போறேன்!” என்றான் சத்தமாய்.



“அட, காண்டீபண்ணே இன்னும் வரலை, நீ அப்பறமா போய் திட்டு வாங்கு, இப்போ வந்து வேலையை பாரு” என கலாய்க்க, சட்டென நின்றவன் திரும்பி அவர்களை முறைத்து, “இன்னிக்கு உன் சம்பளத்துல பத்து ரூவா புடிக்குறேன் இரு!!” என மிரட்டினான்.

“லேட்டா வந்ததுக்கு உனக்கே அம்பது ரோவா சம்பளம் கட்டு! இதுல நீ எங்களுக்கு புடிக்குரியா? வர வர தமாசா பேசுறண்ணே!!” அவர்கள் விடாது கிண்டலடித்தனர்.



இதற்க்கு மேல் பேசி பலனில்லை என நடந்தவன், கொண்டு வந்த சாவிக்கொண்டு அலுவலக அறையை திறக்க, தூக்கிய மூட்டையை இறக்காமல், அள்ளிய அரிசியை கொட்டாமல், சாக்குப்பை தைக்கும் ஊசியில் கோர்க்க எடுத்த நூலை விடாமல், ஓடும் மெஷின்களை தவிர அங்கே இருந்த ஒருவரும் அசையவில்லை.

‘நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே!’

இன்பன் எதேச்சையாய் திரும்ப, ஸ்தம்பித்து நின்ற மக்கள் கூட்டமாய் அவனை நெருங்கி, “நான் காண்பது என்ன கனவா இல்லை நினைவா!?” எனும் அளவுக்கு அவனை கேள்விகளால் துளைத்தனர்.



“ஆடிட்டிங் இருக்குன்னு போயிருக்கான்! இன்னைக்கு ஒருநாள் என்னை பார்த்துக்க சொன்னான்!” என்று இன்பன் சொல்ல, அவனை தூக்கி சுற்றாத குறையாய், “சீக்கிரமா ராம லட்சுமனனா மாறுங்க பசங்களா! அதை பார்க்க தான் நாங்க எல்லாரும் காத்துருக்கோம்!!” என்று ஒருவர சொல்ல, “என்னையா இப்போவே கதைக்கு எண்டு கார்டு போடுற? போ போ போய் பொழப்பா பாரு!!” என விரட்டிவிட்டான் வெட்டுக்கிளி.



பச்சைக்கிளி எல்லோரும் நகர்ந்ததும், “அண்ணே! ஓனர் சீட்ல உன்னை பார்க்கவே குஜாலா இருக்கு! இரு, ஒரு போட்டா எடுத்துக்குறேன்!” என்று அவனை ஸ்டைலாய் உட்காரவைத்து தன் மொபைலில் போட்டோ எடுத்துக்கொண்டான்.



இன்பனோ, “இப்படியே ஓபி அடிக்காத, கிளம்பு கிளம்பு, லோட் எல்லாம் இன்னும் அரைமணில குடோனுக்கு வந்துருக்கணும்!” என்று முதலாளியாய் ஆர்டர் போட, “சரிண்ணே சரிண்ணே!” என சந்தோசமாய் ஓடினர் கிளிகள். முதன்முதலாய் தனக்கு உரிமையான நாற்காலியில் சந்தோசமாய் அமர்ந்திருந்தான் இன்பன். நேற்றிரவு நடந்த கசப்பான வாக்குவாதங்கள் அவன் மனதை விட்டு மறைந்திருந்தன.



இன்பனை சந்தித்துவிட்டு திரும்பிய காண்டீபன், மனதில் எண்ணங்கள் அலையடிக்க சாலையில் காரை செலுத்திக்கொண்டிருந்தான். காலை எழுந்ததும் அவன் கண்கள் இன்பனை தான் தேடியது. அவன் மனம் காயப்படும்படி பேசிவிட்டோம் என்ற உணர்வே அவன் வீட்டிக்கு திரும்ப வந்துவிட்டானா என்று பார்க்க சொல்ல, அவன் இல்லாமல் போகவும் அதற்க்கு மேல் வேலை ஓடவில்லை. எப்படியும் வருத்ததிலும் கோவத்திலும் பசியோடு தான் இருப்பான் என எண்ணி வீட்டில் உணவு கேட்காமல் ஹோட்டலில் வாங்கிவிட்டான். ஆனால் இப்போது வாங்கிய உணவு எப்படி அவனிடம் கொடுப்பது என தெரியவில்லை. வெகு நேரம் யோசித்தவன் வேறு வழியின்றி தானே செல்ல முடிவெடுத்து என்ன காரணம் சொல்லி பார்க்க செல்லலாம் என சிந்திக்க, கண நேரத்தில் அவன் சிந்தையில் உதயமானது நகைக்கடை ஆடிட்டிங் ஐடியா.



இன்பன் முகத்தில் தன்னை கண்டதும் தென்பட்ட பிரம்பிப்பே அவனுக்கு போதுமானதாக இருந்தது. இதே சிந்தனையில் காரை செலுத்துக்கொண்டிருன்தவன் சாலையின் நடுவே திடீரென வந்து நின்ற உருவத்தை கண்டு சடன் ப்ரேக் போட்டு நிறுத்தினான். நடு ரோட்டில் நின்ற அந்த உருவமோ கையசைவிலேயே அவனை காரை ஓரம் கட்ட சொல்ல, மறுக்காமல் செய்தான் காண்டீபன். சாலையோரம் நின்ற காரில் உரிமையாய் ஏறி அமர்ந்தான் சுசீலா. காண்டீபனுக்கு பேச்சே எழவில்லை. மூச்சுமுட்ட ஏசியை இயக்கி சற்று ஆறுதல் அடைந்தான்.



வந்தவளோ அவனுக்கு ஏசியிலும் வியர்த்து கொட்டுவதை கண்டுக்கொள்ளாது, ‘ஹாய் அத்தான்!’ என சிரித்து, அவனை மயங்கி விழவே செய்ததாள், மானசீகமாய்.



அவன் சுதாரிப்பதற்க்குள், “நான் சுசீலா! என்னை தெரியும் தானே?” என்றாள் சிரிப்பை குறைக்காமல்.

‘உன்னை தவிர யாரையும் தெரியாது!’ என அவன் மனம் சத்தமின்றி சொன்னது. அவன் பதிலை எதிர்ப்பாராதவள், “இன்னைக்கு நீங்க மில்லுக்கு போலையா? உங்க காரை இங்க பார்த்ததும் வேகமாக வந்து முன்னாடி நின்னுட்டேன்! சாரி!!” என்று தலை சரித்து கூற, “பரவால பரவால!! அதனால என்னங்க?” என்றான் காண்டீபன்.



அவன் பேசியதும் கலகலவென சிரித்த சுசீலா, “உங்களுக்கு அமைதியா கூட பேச வருமா? நான் இன்னைக்கு தான் பார்க்குறேன்!” என்றாள் பரிகாசமாய். அவன் பதிலின்றி மெலிதாய் சிரித்தான். அதற்க்கும் மோவாயில் கைவைத்து ஊர்கிழவி போல ஆச்சர்யம் காட்டியவள், “அட, சிரிக்க கூட வருமா? உண்மையிலேயே இது எட்டாவது அதிசயம் தான்!!” என்றாள் மெய்யான வியப்போடு.

அவனுக்கே அப்போது தான் தோணியது, தான் கடைசியாக எப்போது சிரித்தோம் என்று!!



“உங்ககிட்ட இதுவரை நான் பேசுனதே இல்லையா, கொஞ்சம் பயத்தோட தான் வந்தேன்! ஆனா நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க!!” என்று சுசீலா சொல்ல வெண்ணையாய் உருகினான் காண்டீபன். இன்னும் அவன் சிரிப்பு விரிந்தது.



அடுத்த பேச சில நொடி தயங்கியவள், “எனக்கு.. எனக்கு ஒரு உதவி பண்ணனும்.. செய்வீங்களா அத்தான்?” என்றாள்.



நொடியும் தாமதிக்காது, “கண்டிப்பா! என்னனு சொல்லுங்க” என்றான்.



“அது... அது வந்து....”

“அதான் இவ்ளோ தூரம் வந்துட்டீங்களே! சொல்லுங்க!!” என அவன் இயல்பாய் கேட்டதில் தைரியமாய், “எங்கப்பா ஐயாகிட்ட கேட்க தயங்குறாரு!! நாளும் இழுத்துகிட்டே போகுதில்லையா!? அதான்!!” என சொல்லிட, “என்ன விஷயம்ன்னு புரியல எனக்கு” என்றான் காண்டீபன்.



“எனக்கும் இன்பா மாமாக்கும் பரிசம் போட ஒரு நாள் பார்த்து சொன்னா வேலைய ஆரம்பிக்கலாம்ன்னு வீட்ல சொல்றாங்க! இன்பா மாமாகிட்ட கேட்டா ஐயாகிட்ட பேச சொல்றாங்க! எங்கப்பா ஐயாகிட்ட கேட்க தயங்குறாரு! அதான் நான் உங்ககிட்ட உதவி கேட்கலாம்ன்னு!!!!”

அதுவரை இருந்த மாயவலை கணத்தில் அறுபட, ஸ்டியரிங்கை இருக்க பிடித்து தன் உணர்வுகளை அடக்கினான் காண்டீபன். அவன் முகம் இளக்கம் தொலைத்து இறுகியதை போல் தோன்றவுமே அச்சமுற்ற சுசீலா, “உங்களுக்கு என் மாமாவ பிடிக்காதுன்னு தெரியும்! ஆனாலும் இந்த ஒரு உதவி மட்டும் எனக்காக செய்யுங்களேன் அத்தான்!” அவன் காதில் தேனாய் பாய்ந்த ‘அத்தான்’ இப்போது காய்ச்சிய இரும்பாய் காந்தியது. புதிய உறவை வலுப்படுத்ததான் இந்த ‘அத்தானா?’ என தோன்ற, சில நிமிடங்கள் மௌனம் சாதித்தான்.



“எனக்கு காலேஜுக்கு நேரமாச்சு! பிரண்ட்ஸ் எல்லாம் நிக்குறாங்க!!!!” ‘பதில் சொன்னால் கிளம்பிவிடுவேன்’ என்ற ரீதியில் அவள் கேட்க, “செய்யுறேன்” என ஒரே வார்த்தையில் வாக்கு கொடுத்தான் காண்டீபன். பெருத்த மகிழ்வோடு அவள் “தேங்க்ஸ் அத்தான்” என காரை விட்டு இறங்க, காண்டீபனுள் காலை முதல் இறங்கியிருந்த வேதாளம் மீண்டும் மரமேறியது.



மில்லுக்கு வந்ததில் இருந்து ஒவ்வொருவரிடமும் சிரித்து பேசி வேலை வாங்கி, மாலை பணம் பட்டுவாடா செய்து பேரின்பன் சோளக்காட்டு வீட்டிற்கு வரும்போது இருட்டியே விட்டது. மனம் மகிழ்வாய் இருந்ததால் பசிக்கூட எடுக்கவில்லை. அக்கடாவென படுத்துவிட்டான்.



சுவரில் தொங்கிக்கொண்டிருந்த சட்டைக்கு பக்கமாய் ஆணியில் மாட்டியிருந்த அலுவலக சாவிகொத்து அவன் கண்ணை உறுத்த, “இதை நம்ம வச்சுருந்தா சரிவராதே! காண்டு கிட்ட குடுக்கணுமே!?” என யோசித்தான்.



“இந்நேரம் அந்த பிராடு கோஷ்டி வீட்டுக்கு வந்தாலும் வந்துருக்கும். எப்படி நம்ம வீட்டுக்கு போறது?”

“சாவியை எவனை நம்பியும் குடுத்து விட முடியாது! அப்டியே செஞ்சாலும் அது மரியதையா இருக்காது! தம்பியே நேர்ல வந்து குடுத்துருக்கப்போ நம்ம எப்படி ஆள் விட்டு குடுத்தனுப்ப முடியும்!!?” அவனே அவனுக்குள் பலவித கேள்விகள் கேட்டு பதில் சொல்லிக்கொண்டான்.



“இந்த தங்கத்தையாவது கோச்சுட்டு போறவனை ‘வாடா’ ன்னு கூப்பிட்டுச்சா? மதிக்காதவங்க வீட்டுக்கு நம்ம எதுக்கு போனும்?”



அடுத்த நொடியே, “அதுவும் பாவம்! அதுக்குன்னு தனியா போன் கூட இல்ல!” என்று மனம் வக்காலத்து வாங்கியது.



பின்னே, “வீட்டை விட்டு துரத்திவிட்டும் வெட்கமே இல்லாம அவங்களே வராங்க! என் வீட்டுக்கு நான் ஏன் போக கூடாது?” என ரோஷமாய் மனம் கேட்டதில், ‘இப்ப என்ன, நீ உன் வீட்டுக்கு போணுமா? கிளம்பி போய் தொல’ என மூளை உத்தரவிட்டு அவனை கிளப்பியது.

எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டவன் கதவை பூட்டிவிட்டு தங்கள் வீடு நோக்கி பயணித்தான். பத்தே நிமிடத்தில் வீடு வந்துவிட, பைக்கை நிறுத்திவிட்டு மெதுவாய் எட்டிப்பார்த்தான். வாசலில் வழக்கத்திற்கு மாறாய் நிறைய செருப்புகள் கடந்தது அவர்கள் வந்துவிட்டதை உணர்த்த, “இப்படியே போனா அதுங்களை பார்க்க வேண்டி வரும், நம்ம அப்டியே கொல்ல பக்கமா போலாம்!!” என்று வீட்டின் பின்பக்கம் நடையை போட்டான்.

அடுக்களையில் இருந்து சிரிப்பு சத்தம் நாராசமாய் அவன் காதில் ஒலித்தது. அவன் சின்னத்தை தான் சிரித்துக்கொண்டிருந்தார்.

கடுப்புடனே பின்பக்கம் சென்றவன், வீட்டினுள் செல்ல எத்தனிக்க, மேலிருந்து திடீரென வந்த ஏதோ ஒன்று அவன் தலையில் ‘பொத்’ தென் விழ, அதிலிருந்து சிதறிய தண்ணீர் அவனை தொப்பலாக அணைத்தது. எதிர்பாராத நிகழ்வில் சமைந்து நின்றவனை, “சாரி......” என்ற குரல் மேல்நோக்கி பார்க்க வைக்க, தண்ணீர் பலூன்களை கையில் வைத்துக்கொண்டு எட்டிப்பார்த்தாள் கோகிலா.



அவள் யாரென்று தெரியாவிடினும், அவளை திட்டவிடாமல் அவனை ஏதோ ஒன்று வசியம் செய்ய அவள் முகத்தை பார்த்துபடி அண்ணாந்து நின்றிருந்தான் இன்பன். தான் கேட்ட ‘மன்னிப்பு’ அவன் காதில் விழ வில்லையோ? இப்படி முறைக்கிறானே? என எண்ணிய கோகிலா சற்று சத்தமாக, “நீங்க வந்ததை கவனிக்கல, சோ சாரி அங்கிள்” என சொல்ல,

‘எது அங்கிளா?’ வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு கோவத்தில் திமுறினான் இன்பன். ‘நான் என்ன அங்கிள் மாறியா இருக்கேன்?’ அவன் மனமும் மூளையும் ஒரு சேர குமுற, அழகான பெண் ‘மாமா’ என்று அழைத்தால் மகிழலாம்; ‘அங்கிள்’ என்று சொன்னால் கோவம் வரத்தானே செய்யும்!!!!

-தொடரும்...
Super episode sis
 
மாமா க்கு english ல uncle தானே அதை சொல்லுது புள்ள.. அதுக்கு போய் இப்படி கோப படலாமா1இன்பா...
காண்டீபன் சுசிலா உனக்கு தான்...
பிரியா sis so so sweet girl... good good good girl..
நிறைய இங்க புகழ்ந்து விட்டேன்... so நாளைக்கு ud... ஹா ஹா ஹா2
 
Gandiban susila va love panrano avanai partha appadi dan teriudu, gandiban annanuku idli vangi kuduthiye nee konjam nallavan Dan da, uncle na mama danda inba, en ma kokila avanai partha uncle pola va erukan, nice update Priya dear thanks.
 
அடியேய் சின்னத்தை பெத்த
சிங்காரவல்லி
கோடம்பாக்கம் பக்கமிருக்கும் கோமளவள்ளி கோகிலா
ஆரப் பார்த்து அங்கிள்-ன்னு
சொன்னே?
 
Last edited:
Top