Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 36 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 36 ❤️‍🔥

"பந்தல் காணுமோ
பாவை கனவுகள்......!?"



இக்னேஷை கண்ட ரிதம் அவனை நோக்கி விரைய,

"வாங்க அண்ணா என்ன ஆச்சு!?" பரபரப்பாக வந்தது அவள் குரல்.

"ரிதம் இன்னும் கொஞ்சம் தகவல் வரவேண்டியது இருக்கு.அதுமட்டும் வந்துட்டா ஓகே. நீ லாஸ்ட் மினிட்ல கேட்டதுனால தான் இந்த டிலே இல்லைன்னா எப்பவோ கிடைச்சிருக்கும்!" என்றான் அவன் பதட்டமாய்..

மனைவியின் பின்னே வந்த ஏகன் "என்ன!?" என்று கேட்க இக்னேஷ் தான் கூறத் தொடங்கினான்.

நலங்கு வைத்த அன்று இரவு.....


"நிவே நீ இன்னும் உன் உட்பீ ஃபோட்டோ எனக்கு சென்ட் பண்ணலடி!?" ரிதம் நிவேதாவிடம் வினவினாள்.

"இருடி!"

அறையின் மூலை முடுக்கெல்லாம் தேட எங்கும் இல்லாமல் போனது அந்த மாப்பிள்ளை புகைப்படம்.

"அடி ரிதம்! எங்கையுமே இல்லடி அவன் ஃபோட்டோ.மாமாகிட்ட போய் வாங்குடி நான் கேட்டா எதும் நினைச்சுப்பாங்க" நிவே தயங்க

நேரே நிவேதாவின் மாமாவிடம் போய் நின்றாள் அவள்.

"என்னம்மா ரிதம் எதும் வேணுமாம்மா நான் வேணா போய் வாங்கிட்டு வரவா!?" என்று சிறுவனாய் மாறி கேட்டு நின்றார் அவர்.

"இல்லங்க பெரியப்பா எனக்கு மாப்பிள்ளை ஃபோட்டோ வேணும்.நான் இன்னும் பார்க்கலையே அதுதான்!" என இவளும் அவரிடம் தயக்கத்துடன் தான் கேட்டாள்.

அவரோ,"என்னம்மா இப்படி சொல்ற நான் ஒரு மடையன் உனக்கு ஒன்னு அனுப்பணும்னு யோசிக்கலை பாரு!" என்றவாறு மனைவியிடம் சென்றவர் அவர் பொறுப்பில் கொடுத்திருந்த புகைப்படத்துடன் வந்து நின்றார்.

வம்பு பேச்சு பெரியம்மா அந்த நல்ல மனிதரையும் விடவில்லை... கூடத்தில் அமர்ந்து அவரைத்தான் ஊற்றி இறைத்துக் கொண்டிருந்தார்.


"என்னைக்கோ என் தங்கச்சி பண்ணின உதவிக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன்.. கல்யாணம் வைக்கிறேன்னு.... வந்திருக்கியே மாப்பிள்ளை நல்லவனா!?" எனத் தொடங்கிவிட்டார் அவர்.


"அதெல்லாம் நல்ல பையன் தாங்க அக்கா அதுதான் சொன்னேன் இல்லையா அக்கா... உங்களுக்கு போட்டோ கூட அனுப்பினேன் இல்ல... நீங்களும் அவங்க அப்பா அம்மாவை எல்லா பார்த்தீங்க இல்லையா அக்கா...அதுவும் மாப்பிள்ளை போலீஸ் ஆஃபீசர்!" என்றார் அவர் பணிவாக.


"என்னவோ சொல்ற!" என்றவாறு ரிதம் கரத்தில் இருந்த புகைப்படத்தில் இருந்த மாப்பிள்ளையானவனை எட்டிப்பார்த்து மீண்டும் ஒரு முறை கண்டவர்.

காவல் துறை அதிகாரியாக மிடுக்கு தோரணையில் இருந்தவனை கண்டு புகைந்தாலும்;

"நல்லாத்தான் இருக்கான்.....!"
மீண்டும் அவளிடமே கொடுத்துவிட்டு முகத்தை வெடுக்கென்று சிலுப்பிக்கொண்டு சென்றார் அந்த பெரியம்மா.


மாமாவின் மனைவி தான் மனவேதனை கொண்டு "இது நமக்கு தேவையா!?" பார்வையால் வினவினார்.

"பார்த்துக்கொள்ளலாம்!" என்று இவரும் கண்களை மூடி மனைவிக்கு ஆறுதல் உரைத்தவர் வேறு வேலை இருப்பதாக கூறி செல்ல....

"பெரியம்மா நீங்க கவலை படாதீங்க. அவங்க எப்பவுமே அப்படின்னு நமக்கு தெரிஞ்சது தானே அதனால வெசன படாதீங்க பெரியம்மா!" ஆறுதல் மொழிந்து அவரை ரேணுவுடன் விட்டு சென்றாள் ரிதம்.

அவரும் வந்ததில் இருந்து பலரின் எள்ளல் பேச்சுக்கு ஆளாகும் கணவரை பார்க்கத் தான் செய்கிறார் நிவேதாவின் அத்தை.

சொந்த அண்ணன், தம்பி,அக்கா என்று உறவுகள் இருக்கையில் நிவேதாவின் அன்னை மகளின் திருமணத்தை இவரின் பொறுப்பிலும்.அவளின் நகை,பணம் சேமிப்பு போன்ற மற்ற பொறுப்புக்களை வேல் தாத்தவிடமும் ஒப்படைத்து விட்டு சென்றிருக்க காரணம் அவர் இவர்கள் இருவரை மட்டுமே நம்பியது தான்.

"இறக்கும் தருவாயில் கடைசியாக ஒரு ஆன்மா வேண்டிய கடமையை நிறைவேற்ற வேண்டும்!" என்ற வைராக்கியத்தில் தான் கணவன் மனைவி இருவரும் எந்த பேச்சு வாங்கினும் பொறுத்து போகின்றனர்.

'ஆனால்!'

சில இடங்களில் எல்லையை கடக்கும் போது தான் நிவேதாவின் அத்தை மனம் வேதனையானது.

அதையும் கூட வாய்விட்டு கேட்காது பார்வையால் கணவனுக்கு கடத்தும் அந்த தம்பதியரின் நல்ல உள்ளத்தை ரிதம் பெரிதும் மதித்தாள்.

அதனால் தான் அவரை ரேணுவின் பொறுப்பில் விட்டு சென்றாள்.இனி ரேணு பொறுமையாக அனைத்தையும் பார்த்து சாமர்த்தியமாக பேசி அனைவரையும் வேலைக்குள் இழுத்து மிரள செய்திடுவாள்.

ரிதம் வருவோருக்கு என்ன தேவை அனைத்தும் தயாரா என்பது தொடங்கி அனைத்தும் தன் பொறுப்பில் வைத்திருக்க...

ரேணுவோ வீட்டிற்குள் அமர்ந்து அடாது புறம் பேசும் பெண்மணிகளை எல்லாம் உரிமையாய் அழைத்து முன்னால் நிற்க செய்து வரவேற்பு, தாம்பூலம் வைப்பது என சிறு சிறு வேலைகள் வாங்கிட இருந்தாள்.

மாப்பிள்ளையின் புகைப்படத்தை பார்க்கையில் ஒன்றும் தவறாக தோன்றவில்லை தான்.

'இருந்தும்'

உடனே மாப்பிள்ளையின் புகைப்படத்தை புகைப்படம் எடுத்து இக்னேஷ் எண்ணிற்கு அனுப்பிய கையோடு அழைப்பு விடுத்து காத்திருந்தாள் ரிதம்.


"ஹலோ..."

அழைப்பை ஏற்றவன் பேசிட..

"ஹ.. ஹலோ அண்ணா நான் ரிதம் பேசறேன் அண்ணா!"

"சொல்லுமா ரிதம் என்ன இந்த நேரத்தில பாஸ் ஃபோன் நாட் ரீச்சபிளா!?"

"இல்ல..இல்ல அண்ணா நான் உங்ககிட்ட பேசத்தான் கூப்பிட்டேன்!"

"சொல்லுமா என்ன செய்யனும்!?"

"எனக்கு ஒரு உதவி வேணும்னா செய்யமுடியுமா!?"

"சொல்லுமா செஞ்சுடலாம்!"

ஊக்கம் ஊட்டினான் இக்னேஷ்.

இவளும்,"இல்ல அண்ணா நிவேக்கு பார்த்திருக்க மாப்பிள்ளை ஃபோட்டோ உங்களுக்கு அனுப்பி இருக்கேன்.அவரு பேரும்,சென்னைல போலீஸ் ஆபீசரா இருக்காருன்னு மட்டும் தான் தெரியும் அவரை பத்தி வேற எந்த விஷயமும் டீட்டைலா தெரியலை.கொஞ்சம் அதை மட்டும் விசாரிக்க முடியுமா!?" என தயக்கமாக கேட்க.

"ஏம்மா இதெல்லாம் முன்னாடியே சொல்லி இருந்தா பார்த்திருக்கலாம் இல்லையா!?" என்று அவன் கொஞ்சம் கண்டிப்புடன் தான் கேட்டான்.

"இல்லங்க அண்ணா! இப்போ தான் அந்த மாப்பிள்ளை ஃபோட்டோ கைல கிடைச்சது கிடைச்ச உடனே உங்களுக்கு அனுப்பிட்டேன் அண்ணா!" என்று தன்னிலை விளக்கம் கொடுக்க.

"அண்ணா இது எதுவும் உங்க பாஸ்க்கு தெரிய வேண்டாம்.நான் இதை அவரு மனைவியா கேட்கலை,உங்க தங்கச்சியா கேட்கிறேன்.அதனால் அவர்கிட்ட இதை சொல்லவேண்டாம்!" என்க

"சரிம்மா! நான் பாஸ்கிட்ட சொல்லாமல் என் பவரை வச்சு பார்க்கிறேன்மா.ஆனா எனக்கு கொஞ்சம் டைம் வேணும் ரிதம்.இன்னைக்கே தகவல் கிடைக்கும் தான்.ஆனா தனிப்பட்ட சில தகவல் கிடைக்க இரண்டு நாள் ஆகும்மா!" உண்மை நிலவரம் உரைத்தான்.


"அண்ணா பரவாயில்லண்ணா, கல்யாணத்துக்கு ஒரு மணி நேரம் முன்னாடி தகவல் கிடைச்சாலும் சரி.
இல்லை பத்து நிமிஷம் முன்னாடி கிடைச்சாலும் சரி.நல்லவனா இருந்தா நம்ம கல்யாணத்தை கண்டின்யூ பண்ணலாம் அண்ணா.இல்லைன்னா என்ன பண்றதுன்னு அப்ப பார்த்துக்கலாம்!"

எதையும் விரிவாய் கூறாது கூறி அழைப்பை துண்டித்த பிறகு தான் அவள் மனதில் ஒரு நிம்மதி.

இந்த திருமணப் பேச்சு தொடங்கிய நாள் முதல் 'ஒரு உறுத்தல்' நெஞ்சில் கிடந்து அடித்துக் கொண்டே இருக்க.பொறுப்பை இக்னேஷிடம் ஒப்படைத்த பிறகு தான் பாதி அமைதி கிடைத்தது.

"நல்ல முறையில் திருமணம் நிகழ்ந்தால் மீதி அமைதியும், மகிழ்ச்சியும் தானாக வந்துவிடும்!" என்று தனக்குள் கூறிக் கொண்டு மற்ற வேலைகளை காண செல்ல.

நேற்று மாலை மீண்டும் இக்னேஷ் அழைத்து முடிந்தவரை முகூர்த்த நேரத்தை நீட்டிக்க கோர

"சரி"

என்று சொன்னாலும் 'எப்படி நீட்டிக்க முடியும்!?' என்று பயத்தில் சுற்றியவள் இப்பொழுது இக்னேஷ் வந்து இன்னும் சிறிது நேரத்தில் விடை கிடைக்கும் என்றதில் தான் மூச்சே விட்டாள்.

அனைத்தும் தன் பார்வ்வையில் இருந்து இக்னேஷ் கூறிட.

"ஏன்டி என்கிட்ட சொல்ல உனக்கு என்ன கஷ்டம்!?"

கோபம் கொப்பளிக்க கேட்டு நின்ற கணவனை பார்த்து

"ஹா பிள்ளைக்கே... 'அவன் என் பிள்ளை'ன்னு சொல்லி விரட்டுனீங்க உங்ககிட்ட எப்படி என் ப்ரெண்ட்க்கு ஒரு உதவின்னு நான் வந்து நிற்பேன்!?" என்று கூறி


'மனதின் நம்பிக்கையை நீ தானே உடைத்தாய் மீண்டும் உன்னை எப்படி என் மனம் நம்பும்!?'

கேட்காமல் கேட்டு அவனை வார்த்தை எனும் சாட்டையால் அடித்துவிட்டு இக்னேஷ் புறம் திரும்பினாள் மீண்டும்.

"நீ கொஞ்சம் நிவேதாவை எந்த முடிவுக்கும் தயாரா இருக்க சொல்லுமா ரிதம்!" என்றான் அவன்.


அவன் பதிலே அவளுக்கு முடிவை சொல்லிவிட மகனை கணவன் அருகில் இருக்கும் நாற்காலியில் துண்டு விரித்து அமர வைத்துவிட்டு முதலில் ரேணுவை காண சென்றாள்.

அவள் தான் அடுத்தவர் 'என்ன நினைப்பார்!?' என்பதை முன்பே கணித்து காய் நகர்த்தும் வித்தகி என்பதால் ரேணுவை நாடினால் ரிதம்.


"ரேணு இங்க கொஞ்சம் வாயேன்!"

"ரிதம் நீ இங்க கொஞ்சம் வாயேன்!"

ரேணுவும், ரிதமும் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் அழைக்க ரிதம் ரேணு அருகே சென்றாள்.

"என்னடி ரேணு நீ ஏதோ சொல்ல வந்த என்னது!?"

"அடி ரிதம்!" எனத் தொடங்கி தான் அறிந்தது வரை கூற கேட்ட ரிதமின் மனமே விட்டுபோனது.

"என்னடி சொல்ற உண்மை தானா!?"

"ஆமாம்டி ரிதம் உண்மை தான்.இதோ உங்க அண்ணனும் கூட கேட்டுட்டு தான் இருந்தாரு நீவேணா அவர்கிட்ட கேளுடி!"

"ஆமா ரிதம் ரேணு சொல்றது உண்மைதான் இப்போ என்ன செய்றதுன்னு தெரியாம தான் உன்னை கூப்பிட்டோம்!?" என்றிட.

கணவனின் காரில் அனைவரையும் கூட்டினாள் ரிதம்.

கோவில் முழுவதும் சொந்தங்கள் நிரம்பி வழிய அங்கு வைத்து பேச முடியாது என்பதால் இந்த முடிவு.

நல்ல வேளையாக நெடுந்தூர பயணம் என்பதால் அதற்கு தோதான பெரிய காரில் தான் வந்திருந்தான் என்பதால் முன்னிருக்கையில் இக்னேஷ் மற்றும் ரேணுவின் கணவன் அமர்ந்து கொள்ள.

நடு இருக்கையில் ஏகன் ஒருவனாய் அமர்ந்து கொள்ள பின்னிருக்கையில் தன் தோழியுடன் அமர்ந்து கொண்டாள் ரிதம்.

"இப்ப எதுக்கு இந்த கூட்டம்!?" என்ற ஏகனுக்கு விளக்க தொடங்கினாள் ரேணு.

"அது சார்!" என தொடங்க

"சார் எல்லாம் வேண்டாம் நீ என்னை அண்ணான்னு வேணா கூப்பிட்டுக்கோ!" என்றான் பெருந்தன்மையாக..

எல்லாம் கோபமாய் இருக்கும் மனைவியின் மனதை குளிர்விக்கும் முயற்சி தான்.


"அண்ணா" என்று ரேணு ஆரம்பித்து நடப்பதை கூறட்டும்.

நாம் அனைவரும் நடந்ததை நேரிடையாக கண்டு வரலாம் வாருங்கள் மக்களே!!!


மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என்று இருபுறமும் பரபரப்பாய் இருக்க.

நிவேதாவின் பெரியம்மா மட்டும்,"தைக்க மறந்த அரிசி சாக்கு காற்றில் அசைவதை போல திறந்த வாயை மூடாது தொணதொணக்க!"

சிலர் 'சிவனே!' என்று அவர் பேசுவதை கேட்டிருக்க....பலர் நேரம் போக்க கேட்டிருக்க....

"சப்பா....பச்ச தண்ணி பல்லுல படாம சோர்ந்து போச்சு செத்த இந்த காப்பி தண்ணிய ஊத்தி தொண்டைய நினைச்சுட்டு வந்துடுறேன்...!"

பேசி பேசி அனைவரையும் சோர்வாக்கியவர் தான் சோர்ந்து போனதாக பெயர் பண்ணி அவ்விடம் விட்டு நகர்ந்து சென்றார்.


திருமணம் அம்மன் சன்னதி அருகே என்பதால் மக்கள் கூட்டம் அங்கே அதிகமாக இருக்க.

பைரவர் சன்னதி புறம் யாரும் இல்லாது போக.மெதுவாய் அவ்விடம் சென்று தூணுக்கு பின் மறைந்தவர் அலை
பேசியில் அழைப்பை தொடுக்க.

அந்த புறம் எடுத்த உடன்,"என்ன அத்தை எல்லாம் தயாரா!?"

"எல்லாம் தயாரா இருக்கு மாப்பிள்ளை நீ மட்டும் அவளை கல்யாணம் பண்ணினா மட்டும் போதும்.அப்பறம் இருக்கு அவளுக்கு.என்னையே எதிர்த்து பேசுறா!?"
பொங்கினார் பெரியம்மா.


"அத்தை விடுங்க அப்பறம் ஆகறதை நான் பார்த்துக்கறேன்.இப்போ நீங்க ஒன்னும் தெரியாத மாதிரி போய் கூட்டத்தோட இருங்க!" என்றான் நிவேதாவிற்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை மதிவாணன்.

"மாப்பிள்ளை வீட்டாருக்கும் பெரியம்மாவிற்கும் என்ன தொடர்பு!?"

"எப்படி நேர்ந்தது இந்த அனர்த்தம்!?"

பாவம் இருவரின் 'கபட நாடகம்' ஏதும் அறியாது அங்கே மணபெண்ணாய் சர்வ அலங்கார நிமலிகையாய் தயாராகி இருந்தாள் நிவேதா.
 
இதென்ன டா நிவேதாவுக்கு வந்த சோதனை 🙄🙄🙄
சோதனை எல்லாம் நம்ம நிவே பிள்ளை சாப்பிட்டு ஏப்பம் விட்டுடும் மக்கா😂😂😂😂😂
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடப்பாவிகளா கூட்டுக்களவானிகளா நீங்க.😤😤😤😤😤😤😤😤😤
ஓய் பெரியம்மா உனக்கு ஆப்பு பெரிசா வக்கிறோம். கண்ணாலத்துக்கு வந்ததுல இருந்து நொட்டை பேசிகிட்டே இருக்குறே.
images-113.jpeg
அடேய் போலீஸ் காரா உன்னைய 😬😬😬😬😬😬😬😬
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடப்பாவிகளா கூட்டுக்களவானிகளா நீங்க.😤😤😤😤😤😤😤😤😤
ஓய் பெரியம்மா உனக்கு ஆப்பு பெரிசா வக்கிறோம். கண்ணாலத்துக்கு வந்ததுல இருந்து நொட்டை பேசிகிட்டே இருக்குறே.
View attachment 8895
அடேய் போலீஸ் காரா உன்னைய 😬😬😬😬😬😬😬😬
பெரியம்மா... அதுக்கு போடணும் பெரிய பாம்மா💣💣💣
 
Top