Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 51 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 51 ❤️‍🔥


"புதுமை செய்யும்-என்
அழகியல் நீயடி...........!!!"


"ஏகா!" என்றார் சிதம்பரம் தாத்தா.

"சொல்லுங்க தாத்தா என்ன சொல்லணும்!?"
பேரன் பணிவாக கேட்க

"இல்லைடா கண்ணா நீ ஏன் உங்க மேரேஜ் அன்னோன்ஸ்மெண்ட்டை கொடுக்ககூடாது!?" என்றார் அவர்.

இதை முன்பே யோசித்துக் கொண்டிருந்தவன் அவர் கேட்ட உடன் "சரி" என்று தலையசைத்து ஒப்புக்கொண்டான்.


வரும் வெள்ளிக் கிழமை காலை செய்தியாளர் சந்திப்பில் இதனை அறிவிக்க போவதாக கூறி தன் விருப்பத்தையும் எடுத்துக் கூறினான் ஏகன்.

பெரியவரும் 'நல்ல முடிவு' என்று பேரனை பெருமை பொங்க பார்த்தவர் வீட்டிற்குள் செல்ல.

செய்தியாளர்கள் கூட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட இக்னேஷிடம் கூறி இருந்தான்.

அதை தொடர்ந்து ஞாயிறு அன்று ஒரு விழாவையும் ஏற்பாடு செய்தான் ஏகன் மனைவிக்கு தெரியாது.



தீக்ஷி ஏகன் கண்களில் படக்கூடாது என்று இரவோடு இரவாக மதுரை வந்து சேர்ந்தாள்.


'காரணம்!'


மதுரையில் அவளுக்கு ஒரு விளம்பர வாய்ப்பு வந்திருந்தது.அதை நடித்துக் கொடுக்க மட்டுமல்லாது; ஏகன் கரங்களில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பும் கிடைக்கும் அல்லவா

"ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!" கணக்கில் அகரன் தரையில் சரிந்த கணமே ஓட்டம் எடுத்தவள்... எப்பொழுதும் ரசிகர்கள் தன்னை நடுவிலோ அல்லது படப்பிடிப்பில் இருக்குமாறோ தன் நிலையை வைத்துக் கொண்டாள்.


மும்பையில் இது போல் சூழலை கண்ட பிறகு தன்னை காத்துக் கொள்ள அவள் கற்றுக் கொண்ட யுக்தி இது.ஆதலால் ஏகன் ஆட்களால் அவளை எதுவும் செய்ய முடியாத நிலை.


ரிதம் மற்றும் ஏகன் இருவரின் திருமண வரவேற்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்போகும் செய்தி அறிந்த தீக்ஷி அதனை கெடுக்க வழிகளை தேடத் தொடங்கினாள்.

"வயிற்று பிள்ளை உடன் எங்கோ மரங்கள் அடர்ந்த பகுதிக்குள் இரத்த வெள்ளத்தில் கிடந்தாள் ரிதம்!"

அகரனை பார்த்து 'ஓடு கண்ணா!' என்று கட்டளை விதிக்க பிள்ளை 'செல்லமாட்டேன்!' என்று நிற்க.


அவனை பேசி சரிகட்டி ஓட செய்தவள் மரத்தடியில் மயங்கி சரிந்தாள்.

"அகரா....!" என்ற அலறலுடன் எழுந்த மனைவியின் கத்தலில் விழித்த ஏகன்

"என்ன ரிதம்!?"என்று கேட்க


தான் கண்ட கொடும் 'கனவு!' பற்றி கூறினாள் ரிதம்.

"என்னங்க எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க.என் புள்ளைக்கு ஒன்னும் ஆகாது இல்ல!? கேள்வியும் அவளே கேட்டு பின் 'அவனுக்கு ஒன்னும் ஆகாது!' என்று தானே பதிலும் சொல்லி தனக்கு தானே புலம்பி பைத்தியம் போல் சொன்னதையே சொல்ல!"


"கண்டிப்பா கனவு தான்டி.நான் இருக்கேன் இல்ல கண்டிப்பா உங்களை விடமாட்டேன்!" என்று நம்பிக்கை கூறி ஆறுதல் அடைய செய்தான் அவன்.

தீக்ஷிதா மீண்டும் ராபினை தொடர்பு கொண்டு தான் சென்னை சென்ற பிறகு "ஏகன் வாழ்வில் நடந்தது என்ன!?" என்பதை அறிந்துவர கூற.அவன் இம்முறை 'முழுத் தொகையும்' கேட்டு நின்றான்.


கையிருப்பில் பணம் இருக்க அவன் கேட்ட தொகையை உடனே கொடுக்க ராபின் தான் சேகரித்த தகவலை அவளுக்கு அனுப்பி இருந்தான்.


அதன் மூலம் அவளுக்கு,"மதிவாணன் உடன் ரிதமின் தோழி நிவேதாவின் திருமணம் நின்ற தகவல் கிடைத்தது!"
அவன் சிறையில் கைதியாக இருக்கும் தகவலும் கிடைக்க.மிகவும் நல்லதாகி போனது.


அவனை நேரடியாக காண தானே சென்றுவிட்டாள் தீக்ஷி...

தன்னை சந்திக்க ஒரு பெண் வந்திருப்பதை கேட்டு பார்க்க வந்த மதிவாணன் முகத்தை மறைத்து நின்ற பெண்ணைக் கண்டு "நீங்க யாரு!?" என்றவன்

அவள் முககவசம் விளக்கியதும் "தீக்ஷிதா!" என்றான்.

அவளுக்கு 'பெருமை' தான் பட்டிதொட்டி எங்கும் தன் முகம் பரவி இருப்பதை நினைத்து.

"ஆமாம் மதிவாணன்! உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும்" என்றவள் ஏகன் மீதான தன் நிலைப்பாட்டை கூறி

"உங்களை நான் ஜாமின்ல வெளிய கொண்டுவர்றேன் மதி.ஆனா அதுக்கு பதிலா...!" என்றவள் நிறுத்த.

"சொல்லுங்க மேடம் நான் என்ன செய்யனும்!?" என்க

"ரிதமை என்ன செய்ய வேண்டும்!?" என்று தீக்ஷி கூற.அவனும் ஒப்புக்கொண்டான் ரிதம் மீதுதான் அவன் முழு வெறியும்.


"அவள் மட்டும் தன்னை பற்றி விசாரிக்காமல் இருந்திருந்தால் தன்னிலை இப்படி ஆகியிருக்காது!" எனும் கோபம் நெருப்பை வாரி இறைக்க அவளை அழிக்க அவன் திட்டம் தீட்டினான்.



ரிதம் வேலை செய்யும் குழந்தைகள் நல பகுதியில் ஒரு செவிலியரின் பணி ஓய்விற்காக சிறப்பு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.


அதற்காக மாலை நேரம் ஒரு விடுதியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க. விழா தொடங்கிய சிறிது நேரத்திற்கு மேல் அங்கே இருக்க முடியாது ரிதம் கிளம்பி விட.


விழா நடைபெறுவதால் அன்றைக்கு அனைவரும் ஒன்று கூடிட தானே வந்துவிடுவதாக கூறி தன்னை அழைக்க வந்த காரை மறுத்து அனுப்பி இருந்தாள்.


அவளை பின் தொடர்ந்து வரும் இரட்டை ஆபத்தை அறியாது போனாள் மாது.


சில நாட்களாய் ரிதம் செல்லும் பாதை அறிந்து அவளை தூக்க நேரம் பார்த்திருந்தான் மதி.


அதே போல இரண்டு நாட்களுக்கு முன்பு வேல் தாத்தா உடன் மருத்துவமனை பரிசோதனைக்கு வந்த ரிதமை கண்டுகொண்டனர் மாயன் ஆட்கள்.
அவர்கள் மருத்துவமனை அருகிலே அவளை தூக்க காத்திருந்தனர்.


அவளின் இல்லம் அறிய வேண்டிய தேவை இல்லாது அவள் மருத்துவமனை வரும் நேரம் அறிந்து அவளை தூக்க காத்திருந்தனர்.

ஒரு புறம் மாயன் தன் ஆட்களுடன் அவளை தூக்க நேரம் பார்த்திருக்க; மறுபுறம் மதி தன் ஆட்களுடன் நின்றிருந்தான்.

ஓரிடத்தில் நடக்கவே முடியாது தள்ளாடிய நடையுடன் கால்கள் நடுங்க இரண்டு பாதங்களும் பிண்ணிக் கொள்ள அடுத்த அடி எடுத்து வைப்பதே கடினமாக ரிதம் நடக்க.

அவளை பின் தொடர்ந்த கூட்டம் 'திடீரென்று' வெளிப்பட்டு அவளை துரத்த தொடங்கியது.

"யார் இவர்கள்!?"

"எதற்காக தன்னை துரத்துகின்றனர்!?"

ஒரு புரிதலே இல்லாது ஓட்டம் எடுத்தாள் ரிதம்.

அவளின் கண்முன் வந்தது எல்லாம் அவள் குடும்பமும்,தோழியரும் மட்டுமே.

"எங்கே தலை சுற்றி விழுவோம்!?"

தன்னிலை அறியாது தலையை தாங்கிக் கொண்டு தள்ளாடி தள்ளாடி ஓடிக் கொண்டிருந்தாள்.

பெண்ணோ அரிமாவின் கூட்டத்தில் இருந்து உயிரை காத்துக் கொள்ள முயலும் ஒற்றை மானாய் பயத்தில் இதயம் துடிப்பை நிறுத்துமோ எனும் அளவிற்கு நெஞ்சு துடிக்க.

"கணவன் முகம் காணாது போவோமோ!? என்ற வேதனை ஒரு புறம் என்றால்; பிள்ளை தான் இல்லாது என் செய்வான்!?" எனும் வருத்தம் ஒருபுறம் என்று பல கவலைகள் சூழ ஓட்டத்தை மட்டும் நிறுத்தாது தொடர்ந்திருந்தாள்.


ரிதம் விழாவிற்கு சென்றுள்ளதால் அவளுக்கு அழைப்பு விடுத்து தொல்லை செய்ய விரும்பாத ஏகன் வீடு நோக்கி செல்லலாம் என்று இக்னேஷிடம் கூற.


அவனும் தன் பாஸின் அறிவுரைப்படி இல்லம் நோக்கி வாகனத்தை செலுத்தினான்.


"என்ன இக்னேஷ் இன்னைக்கி எதுக்கு இந்த ரூட்ல போற!?"


தங்கள் வீட்டிற்கு செல்லும் பாதையை விட்டு மாற்று பாதையில் செல்லும் இக்னேஷிடம் கேள்வி எழுப்ப.


"பாஸ் காலைல நம்ம வந்தப்போ அங்க பள்ளம் தோண்டி இருந்தது அதுதான் பாஸ் இந்த வழியா போய்ட்டு இருக்கேன்!" என்றான் அவன்.

"ஆமாம் இவனுங்க தொல்லை பெரிய தொல்லையா இருக்கு.பள்ளம் தோண்டினா ப்ரிகாஷன்னா எதுவும் பண்ணமாட்டானுங்க!" என்று திட்டிக் கொண்டான் ஏகன்.

இரண்டு பக்கமும் துரத்தியவர்கள் ஓரிடத்தில் ஒன்றாக கலக்க... தங்களை போலவே ரிதமின் உயிரை பறிக்க முயலும் மற்றொரு குழுவை கண்டுகொண்டான் மதி.


ஆனால் அவனுக்கு தான் நியமித்த ஆட்களுடன் சேர்ந்து அவளை துரத்திய ஆட்கள் "யாரென்று தான் புரியவில்லை!?"


கும்பலாக ஒரு பெண்ணை துரத்திய கும்பல் வழியில் ஒரு வாகனம் வர அதைக்கண்டு வேகத்தை குறைக்க.


ரிதம் அப்பொழுதும் வேகம் குறைக்காது ஓடி இருந்தாள்.


வாகனத்தின் வருகை புரிந்தும் ஒரு பெண் எதிரில் வருவது புரிந்த வாகன ஓட்டி வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி வந்து பார்க்க ரிதம் மயங்கி சரிந்தாள்.


ஏகன் நினைவு எல்லாம் காலை தன் மதியை மயக்கி சென்ற மனைவியின் 'எழில் வதனம்' தான் முன்னின்றது.


"வீட்டிற்கு சென்று அவளின் வருகைக்காக கத்திருக்காது; வழியில் செல்லும் போதே அவளை அழைத்துக் கொண்டு சென்றால் என்ன!? விழா எல்லாம் கொண்டாடிய வரை போதும்!" என்று எண்ணினாலும்.

"அவளுக்கும் சில விருப்பு வெறுப்புகள் இருக்கும்!" என்று மனதை அடக்க வழி அறியாது மதில் மேல் பூனையாய் தள்ளாட.

"சரி அவள் வரும் வரை விழா நடக்கும் இடத்தில் காத்திருந்து அழைத்து செல்லலாம்!" எனும் எண்ணம் தோன்றிய பின் தடை ஏது.

"இக்னேஷ் காரை ஃபங்ஷன் ஸ்பாட்க்கு விடு!" என்றான் ஏகன்.

அவன் அவசரத்தில் புன்னகை வந்தது நிவேயின் குடுமிக்கு.அவனுக்கும் கூட நினைவெல்லாம் நிவேதா தான்.


"இந்நேரம் என்ன செய்வாள்!? உணவை உண்டாளா!? பழரசம் அருந்தினாளா!? மருத்துவர் கொடுத்த மருந்தினை நேரத்திற்கு எடுத்துக் கொண்டாளா!?" என உடல் எங்கு சுற்றினாலும்.

சிந்தனை மட்டும் அவளே என்றான "மாயம் யார் அறிவார்!?"

"காதல் ஓர் மாயக் கண்ணாடி. அதனை அணிந்து கொண்டு பார்ப்பவன் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கின்றானோ!? அதே பிம்பத்தை அவன் முன் நிறுத்தும்!"


கார் சாலையில் செல்லும் போதே அங்கே ஒரு வாகனம் நிற்பதும் அதன் முன் நின்று ஒருவன் சண்டை இடுவதும் புரிய.


"என்ன!?" என்று பார்க்குமாறு ஏகன் கூற.


இறங்கி சென்று பார்த்த இக்னேஷ் "பாஸ்!" என்று கத்தினான்.


"ஏதோ விபரீதம்!" என்று புரிந்தவன் வாகனத்தில் இருந்து இறங்கி பார்க்க.


முன்னால் நின்ற வாகனத்தின் முன்பாக ரிதம் சாய்ந்து அமர்த்தபட்டிருக்க அவளை காக்கவே முன்னால் நின்றவன் சண்டை இட்டிருந்தான்.

இவர்கள் செல்வதற்கு முன்பே வேறு வாகனம் வருவதை உணர்ந்து ரிதமை துரத்தியவர்கள் பின்வாங்கி ஓடி இருக்க.

ஏகன்," ரிதம் இங்க பாருடி!"என்று பதறியதை பார்த்து தான் வரும் போது நடந்ததைக் கூறி.

"இந்த பொண்ணு உங்களுக்கு என்ன வேணும் சார்!?" என்க.

"இவ என்னோட லைஃப்!" என்றான் ஏகன்.

ஏகன் பதிலில் மூரல் கொண்டு அங்கிருந்து சென்றான் ரிதமை காப்பாற்றியவன்.

"வந்தவர்கள் யாரென்று தெரியவில்லை!? காத்தவன் யாரென்று கேட்கவில்லை!?
மனைவியை காக்க வேண்டும்!" அது ஒன்று தான் அவன் மனதில் இருந்த தாரக மந்திரம்.

சாலையின் தரையை தேய்த்துக் கொண்டு கிளம்பியது ஏகனின் வாகனம்... இரவு நேரம் அன்றைக்கு டியூட்டி டாக்டராக கதிர் இருக்க.

அண்ணன் கைகளில் மயங்கி இருக்கும் அண்ணியை கண்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க.

பரிசோதனை முடிவுகள் வர காத்திருக்க வேண்டும் என்று கூறிவிட.

தன் ஆட்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு ஓடிய மதி "எதிரில் வந்தவர்கள் யாராக இருப்பர்!?" என்று யோசித்து தீக்ஷிக்கு தகவல் கூற.

இங்கோ,"ரிதமை காப்பாற்றியது யாராக இருக்கும்!?" என்று சிந்தனை வயப்பட்டனர் மாயனின் ஆட்கள்.

"தன் ஆட்கள் ரிதமை தேடி சென்றனரே அந்த செய்தி என்ன ஆனது!?" என்பதை அறிய அவன் எஜமானி மாயனுக்கு முயன்றிட.

மாயனோ,"இங்கு நடந்ததை கூற....!"

அறைக்குள் அமர்ந்து குடும்ப படத்தில் இருந்த ரிதமை பார்த்திருந்தான் சௌந்தர்.

ரிதமின் விபத்து தகவல் அறிந்து அனைவரும் வந்திருக்க
பிரபா வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளதால்.ரேணு மட்டும் வரமுடியாது இருந்தாள்.

ஏகன்,"தன் மனைவி வாழ்வில் என்ன ஆனது!?"என்பதை அறிய வேல் தாத்தாவை அணுக.

அவரோ பேத்தி நிலையை கண்டு மீண்டும் பிள்ளையாக மாறி இருந்தார்.

"என்ன தான் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தாலும் அவர் வாழும் சூழல் பொறுத்து முன்னேற்றம் ஏற்படும்!" என்று மருத்துவர் கூறி இருக்க.

பேத்தியின் நிலையை கேட்டது முதல் பிள்ளை போல மாறி இருந்தார் அவர்.

சிதம்பரம் தாத்தா உடன் வேல் தாத்தா வீட்டில் இருக்க.அவரிடம் இருந்து எந்த செய்தியும் வாங்கமுடியாது போனது.

ஏகன் கேள்விக்கான பதில்,"அவனே எதிர்பாரா வேறு ஒரு நபரிடம் இருந்து அவனுக்கு கிடைத்தது!"


"ஏன் இத்தனை நாட்கள் த
ன்னிடம் கூறவில்லை!?" என்று அவன் பொங்கி எழ.

தகவல் கூறிய நபரோ,"அவரவர் வாழ்வில் ஒவ்வொரு ரகசியம் இருக்கத்தானே செய்திடும்! ரகசியம் இல்லா மனிதர் ஏது!?" என்று கூறி நடந்த சம்பவங்களை கூறத் தொடங்கினார் அந்நபர்.

"யாரப்பா நீயி புதுசா...!?"


"இல்ல பழசா!?"
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
இத்தனை குரூப்பு ரிதமை தொரத்தறாங்களே🙄🙄🙄🙄🙄🙄என்னவா இருக்கும்.
யாருப்பா புது என்ட்ரி??
ரிதம் லைப்புல என்ன மர்மம்???
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
இத்தனை குரூப்பு ரிதமை தொரத்தறாங்களே🙄🙄🙄🙄🙄🙄என்னவா இருக்கும்.
யாருப்பா புது என்ட்ரி??
ரிதம் லைப்புல என்ன மர்மம்???
அதுதானே என்னவோ இருக்கும் 🤔🤔🤔
 
இருக்குறவங்களையே கட்டி மேய்க்க முடியலை இதுல புது கேரக்டரா???? வந்தது யாராக இருக்கும் 🤷
இருந்தாலும் இவ்வளவு வேகமாக சாணியை உருட்டி அடித்திருக்க வேண்டாம்.... அதனை வழிப்பதற்கு கைகளுக்கு தெம்பில்லை😂😂🤣🤣
 
இருந்தாலும் இவ்வளவு வேகமாக சாணியை உருட்டி அடித்திருக்க வேண்டாம்.... அதனை வழிப்பதற்கு கைகளுக்கு தெம்பில்லை😂😂🤣🤣
சும்மா தான் சொன்னேன் ரைட்டர் ஜி 😜கோவிக்காதீங்க........ எத்தனை பேரை வேணா கூட்டிட்டு வாங்க எல்லாரையும் ஒரு கை பார்த்துக்கலாம்🤣🤣🤣🤣🤣
 
Top