Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 57 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 57 ❤️‍🔥


"நீயின்றி போனால்
யாதாவேன் உயிரே.....!?"



தன் நிறைமாத வயிற்றை ஒரு கையிலும், மகனை ஒரு கையிலும் பிடித்துக் கொண்டு
அந்த தோப்பிற்குள் வியர்வை ஆறாக வழிய ஓட்டமெடுத்தாள்.


"பிழைப்போமா!?"

மனதின் ஓரம் சந்தேகம் வந்தாலும் பிள்ளைகளை 'காத்தே ஆகவேண்டும்!' எனும் வைராக்கியம் பிறக்க தலை தெறிக்க ஓடினாள்.


ஓடும் போது தென்னை மர மட்டைக்கு இடையே பிள்ளையின் கால் சிக்கி அகரன் கீழே விழ.

"ஐயோ அகரா....!"என்ற கர்ப்பிணியின் கதறலும்

"ம்ம்மா...!" என்ற பிள்ளையின் அலறலும் அந்த தோப்பை நிறைத்தது.


மகனை தூக்கிக் கொண்டாள் பிற சிந்தை ஏதுமின்றி.

அன்னையின் கழுத்தில் முகம் புதைத்த புதல்வன் அவளை கழுத்தோடு இறுக்கிக் கொள்ள.

மகனின் கண்ணீர் தாயின் தோளை நினைத்தது.


வயிற்றில் ஒரு பிள்ளையும் தோளில் பிள்ளையை சுமந்து முன்பு போல ஓட முடியாது நடப்பதும் கூட ரிதத்திற்கு வெகு சிரமமாக இருந்தாலும் ஓட முடியாது போனாலும்; வேகமாக நடக்க முயன்றாள்.


இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் இந்த இடத்தை விட்டு செல்ல வேண்டும்.


'ஏனென்றால்!?'


அவள் அடித்த அடிக்கு சௌந்தர் சில மணி நேரத்தில் கண்விழித்து விடுவான். அதனால் இங்கிருந்து விரைந்து செல்ல வேண்டிய கட்டாயம் அவளுக்கு.


"பயப்படாத ஜாமுன் ஒன்னும் இல்ல.அம்மா இருக்கேன் சரியா!
நம்ம கண்டிப்பா இங்க இருந்து சேஃப்பா அப்பாகிட்ட போய்டலாம் கண்ணா.
நீதானே அம்மாவையும்,தம்பியையும் பார்த்துக்கணும்.
பீ அ பிரேவ் ஜாமுன். அழுகாதீங்க அழகு பையா அம்மாக்கு கவலையா இருக்கு இல்ல தம்பி அழுகாதடா!" என்றவள் தொண்டையில் தான் கமறல் எடுக்க குரலில் கரகரப்பு.


மனதில் ஆயிரம் கவலைகள்,கேள்விகள், சூழ்ந்தாலும்;மகனின் பிடரிக் கோதலையும் தைரியம் கொடுக்கும் வார்த்தையும் நிறுத்தாது மகனுக்கு தைரியமூட்டினாள் ரிதம்.


அவளின் வேக நடையில் சிறு மாற்றம்... உடலின் அசௌகரியம் நேர்வதை நன்றாக உணர்ந்தாள்.


ஏதோ ஒன்று அவளை நடக்கவிடாது பாதகங்களை பின்னச் செய்தது.முதுகு தண்டின் அடிப்பகுதியில் தோன்றிய வலி உச்சந்தலையில் பாய்ந்து அதிர்வை உண்டாக்கியதோ.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க....மகனை கீழே இறக்கியவள் அவனிடம் கூறத் தொடங்கினாள்.....

"அகரா அம்மாக்கு கொஞ்சம் கால் வலிக்குது கண்ணா நடக்க முடியலை.நீ என்ன பண்ற இதோ தெரியுது பாரு வழி அதுவழியா நடந்து போய் மெய்ன் ரோடு போய்டு அங்க யாருகிட்டயாச்சும் ஹெல்ப் கேட்டு அப்பாக்கு கால் பண்ணிடு கண்ணா...! சௌந்தர் வர்றதுக்குள்ள இங்க இருந்து போய்டணும்.அப்பா நம்பர் உனக்கு ஞாபகம் இருக்கு இல்லையா ஜாமுன் !?"


அன்னை அறிவுரை வழங்க,பொங்கி பெருகிய அம்பக நீரை புறங்கையால் துடைத்துக் கொண்டே தலையாட்டினான் அகரன்.


அவன் வாயில் "அம்மா" எனும் மந்திரமே ஓயாது ஒலித்தது.


வலியின் முதல் மருந்து அம்மா,பயத்தின் முதல் தெளிவு அம்மா,இருளின் வெளிச்சம் அம்மா.


அவளையன்றி பிள்ளையின் அழுகைக்கு யாரால் பதில் கூற இயலும்.


"புழுவே ஆனாலும் பிள்ளையின் அழுகுரல் கேட்டால் புலியாய் மாறும்! பிள்ளைகளை பருந்திடம் காக்க உயர பறந்து தாக்கும் தாய் கோழி!! செட்டைக்கு அடியே தன் பிள்ளைகளை பொதித்துக் காக்கும் அன்னையின் அன்பிற்கு இவையே சான்றல்லவா!!!"


"தெய்வமும் கூட அன்னையின் அன்பில் அடங்கி போகவே ஆசை கொள்ளும் அல்லவா!?"


"பாராளும் பரமேசனே ஆனாலும் அன்னை அன்பிற்கு ஏங்கி காரைக்கால் அம்மையாரை தன் நாவால் 'அம்மையே!' என்று அழைக்கவில்லையா!?"

"அம்மையாகி,அப்பனாகி அம்மையப்பனாகிய இறைவனே அம்மை என்ற சொல்லுக்கு மதிப்பினை வழங்கி அழைத்த போற்றுதல் 'அம்மா' எனும் தாய்மைக்கு மட்டுமே உரித்தானது அன்றோ!?"


இதோ பனிக்குடம் உடைபெடுக்க தொடையின் தசைகள் முறுக்கி, வலியில் குடைய.அடுத்த அடி எடுத்து வைக்க முடியாது கால்கள் பின்னத் தொடங்க.


சௌந்தரின் தோப்பைக் கடந்து ஓங்கி உயர்ந்து, தன் கிளைகளை பரப்பி பரவி நின்ற வேப்பமரத்தின் அடியில் அமர்ந்தேவிட்டாள் ரிதம்.


"எங்கே அதிகமாக மூச்சு வாங்கினால் வயிற்றில் இருக்கும் பிள்ளை பயம் கொள்ளுமோ.... எங்கே தன் வலியை காட்டினால் கண்முன்னே நின்றிருக்கும் மகவு பயம் கொள்ளுமோ...!?" என்று மூச்சை அடக்கி மெதுவாக வெளியிட்டு மகனிடம் பேச ஆரம்பித்தாள் மீண்டும்...

"அகரா அம்மா சொன்னது ஞாபகம் இருக்கு இல்ல ஜாமுன்.அப்பாகிட்ட மட்டும் பேசி அவர் கூட போயிடணும் சரியா கண்ணா!?"
பொறுமையாக உள்ளே சென்ற குரலில் கூற.


"அடுத்த வார்த்தை பேச முடியாது மயங்கி விடுவோமோ!?" என்ற பயம் மயக்கம் வேறு கண்களை மூட செய்திட....


மூச்சிற்கு ஏங்கியவள் மனம் மகனின் நலனே பிரதானமாக எண்ணி செயல்பட்டாள்.


"அம்மா நான் உங்க கூடவே இருக்கவா!? எனக்கு உங்களை விட்டுட்டு போக பயமா இருக்கு! லிட்டில் ஜாமுன் பயந்துப்பான் இல்லையா!?உங்களுக்கும் கூட உடம்பு சரி இல்லையேம்மா!ஜாமுன் உங்க கூட இருக்கேன்மா பிளீஸ்மா!" கண்கள் நீரை சுரந்தது இளையானுக்கு.


"அம்மாக்கு ஒன்னும் இல்ல ஜாமுன் நீ சீக்கிரம் போய்ட்டு யாரையாவது ஹெல்ப் கேட்டு அப்பாக்கு கால் பண்ணி அவர் கூட வா கண்ணா.அம்மா உனக்காக இங்க லிட்டில் ஜாமுன் கூட வெய்ட் பண்றேன்!"

ஊக்கம் கொடுத்து அவ்விடம் விட்டு மகனை நகர்த்த முயன்றாள் அன்னை.

அவனோ "பிராமிஸாவா... மா..!?" சத்தியம் கேட்டு நின்றான் தாயிடம்.


"உண்மையா ஜாமுன்! அம்மா உனக்காக இங்க காத்துட்டு இருப்பேன்" என்றவள்.


மகன் முகம் நிமிர்த்தி தன் முந்தானையால் அவன் கண்களையும் முகத்தையும் துடைத்து.கன்னம்,மூக்கு நெற்றி,நாடி என்று ஆசையாய் தொட்டு தடவி "இதுவே இனி கடைசியாகக் கூட இருக்கலாம்!" என்பதை போல் முத்தங்களை இறைத்து மகனை வழி அனுப்பிட.


மகனோ அன்னையை காக்கும் உத்வேகத்தில் அவள் காட்டிய பாதையில் ஓடத் தொடங்கினான்.


மகன் செல்லும் வரை வலியின் வேதனையை சேலையை இரு கைகளுக்குள் அழுத்தி அடக்கி இறுக்கி மூடி மறைத்தவள்.அதற்கு மேல் முடியாது போக குறுக்கை இறுக்கிப் பிடித்துக் கொண்டு வேப்பமரத்தின் அடிப்புறம் சரிந்தாள்.

"அம்ம்.......மா........!"அவளின் கதறல் ஒளி அவ்விடம் எங்கும் எதிரொலிக்க.உயிர் வேதனையில் கால்களை உதறத் தொடங்கினாள்.

முதுகுப் புறம் வேப்ப மரத்தில் சாய்ந்து இருக்க கால்களை உதறியவள் கரமோ வயிற்றின் இருமருங்கிலும் தாங்கி பிடித்துக் கொண்டது.


"அம்மா"என்ற அவளின் ஓலம் கேட்டு உதவிடத் தான் யாருமில்லை.



மாயன் தங்கள் திட்டத்தில் எந்த இடையூறும் வரக்கூடாது என்பதால் தான் இங்கே யாரும் வரவிடாது முன்பே சரியாக காய் நகர்த்தி இருந்தான்.


ஏகன் தன் ஆட்களை திரட்டி சல்லடை இட்டுத் தேடியும் ஒரு சிறு துரும்பும் கிடைக்கவில்லை.


"வேறு யாரும் கடத்தி இருப்பரோ!?" என்ற சந்தேகம் தோன்ற வேல் தாத்தாவை நாட.


அவரோ,"சித்தம் குழம்பி சிறுவனாய் மாறி சிதம்பரம் தாத்தா உடன் பேசிக் கொண்டிருந்தார்!"


"பேத்திக்கு எதுவோ!?"என்று அவரின் உறுத்தல் அவரை அதிகமாக யோசிக்க செய்ய அதிக யோசனை அவரின் சித்தத்தை பாதித்து இருந்தது.


"எதற்கும் அஞ்சா நெஞ்சன்! தன்னை மீறி என்ன நடந்துவிடும்!?" என்ற ஏக தலைகணத்தில் அலைந்தவன்.


"யாராய் இருந்தாலும் என்ன!? எனக்கு இணையாக முடியாது!" என திமிருக்கும் திமிராக திரிந்தவன்.



"இன்று பெற்ற பிள்ளை,காதல் மனைவி.
'காதல் மனைவியா!?' 'ஆம்' அவன் மனதிற்கு அவன் எப்படி ஒருவனோ;அதே போல் அவனுக்கு ஏற்ற ஒருத்தி அவள் தான்!"


"மகன்,மனைவியோடு அவளின் மணிவயிறு தொட்டாடும் பிள்ளை செல்வம் என தன் எதிர்காலமே கேள்விக்குறியாகி சூனியமாக!"



"முதன்முறை வாழ்வில் எதையும் பணம் வெல்லும்! எங்கும் பணம் பேசும்! எதற்குள்ளும் பணம் பாயும்! வியாக்யானம் பேசிய உள்ளம்"

இன்று......

"பணமிருந்து என் செய்தாய்!?"

"புகழிருந்தும் பெயரிருந்தும் என் செய்தாய்!?"

"இத்தனை படைகள் இருந்தும் தான் உன்னால் என்ன செய்ய முடிந்தது!?"


"அனைத்தும் இருந்தும் அனாதை போல்... மனைவி மக்கள் இல்லாது உன் எதிர்காலம் இழந்தாயே!"

விதி அவனை பார்த்து 'எள்ளி' நகையாடியது.


'துளி நீர்' கீழ் இமைக்கும் விழிக்கும் நடுவே சிறிதாய் திரண்டு பெரும் முத்தாய் பெருக்கெடுக்க தயாரான நேரம்

தன் கைபேசி அழைக்கும் ஓசை கேட்டு "தன்னவர்கள் பற்றிய தகவல் தான் வருகிறதோ!?" என்று ஆர்வமாக பார்த்திட

தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வரவும் "யாரோ!? எவரோ!?" வேண்டா வெறுப்பாய் காதில் வைக்க தேனாய் பாய்ந்தது அகரனின் "அப்பா...!!!" எனும் குரல்.


"அப்பா நான் அகரன்!" என்றவன் இருக்கும் இடம் எங்கே என்று அறியாததால்; அன்னையின் நிலையைக்கூறியவன் அருகில் நின்ற நபரிடம் இருக்குமிடம் பற்றி கூறுமாறு உதவி கேட்க.


அவரும் இருக்கும் இடம் கூறி அகரன் உடன் தானும் சென்று "அந்த பெண்ணிற்கு என்னானது!?" என்று பார்ப்பதாக கூறி அழைப்பை துண்டித்தார்.


சிதம்பரம் தாத்தாவிடம் குடும்பத்தோடு திரும்பி வருவதாக கூறி நிம்மதி வழங்பியவன் உயிரைக் கையில் ஏந்தி பயணம் தொடங்கினான்.


தான் வளர்த்த பிள்ளையின் நிலை அறியா வேல் தாத்தா பிள்ளையாய் மாறி இருக்க.
ரேணு,நிவேதா இருவரும் லதா உடன் இருந்தனர்.


இக்னேஷ்,கதிர்,நவநீ உடன் பிரபாவும் கூட தேடுதல் வேட்டையில் தான் இருந்தான்.


பாலுவோ தன் காவல் துறை நண்பர்கள் மூலம் தேடுதலை முடுக்கியவாரு இருந்தார்.



பெண்கள் மூவரும் அழுது கரைய அகிலாண்டம் அமைதியாக மாறி ஏகன் வீட்டின் சாமி அறை வாயிலில் சேலை தலைப்பை வாயில் அடைத்து சத்தம் வராது மௌனமாக கண்ணீர் சிந்தி இருந்தார்.


ஆடிய பாதம் பிரபா உடன் சென்றுவிட்டார்.


ரேணு நிவேதா இருவருக்கும் தோழி நிலை கண்டு அழுகை வெடிக்க வெடித்து அழுதனர்.


நிவேதாவோ பசிக்கு அழுகும் மகளுக்கு அமுது கொடுத்துக் கொண்டே கண்ணீர் சிந்தியவாரு பொட்டு தண்ணீர் கூட அருந்தாது கிடந்தாள்.


இக்னேஷ் மனதில் தான் சொல்ல ஒன்னா வலி மின்னி மறைந்தது.


"தன் ராசியே அதுதானோ!?"

உள்ளத்தின் பயம் மனதின் ஆழம் சென்று ஆணிவேரை பரப்புவதற்கு முன்பே ஏகன் அழைப்பு விடுத்தான் தேடி அழைந்த உள்ளங்களுக்கு.

இப்பொழுது ஆண்கள் கூட்டம் அகரன், ரிதம் இருக்குமிடம் நோக்கி கிளம்ப.

தோப்பில் இருந்து வெளியில் சென்ற மாயன் மீண்டும் தோப்பு வீட்டிற்குள் நுழைந்தான்.


உள்ளே வந்த மாயன் அங்கே மயங்கிக் கிடந்த சௌந்தரைக் கண்டு முதலில் அதிர்ந்து பிறகு

"ஐயா....!" என்று பதறி அவனை எழுப்ப முயல.


அவன் முயற்சி எல்லாம் வீணாய் போக. கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடு
த்து சிறிது நீரை கையில் ஊற்றி சௌந்தர் முகத்தில் தெளிக்க....மெதுவாக இமை தட்டி கண்களைத் திறந்தான் அவன்.


தன்னை எழுப்பிய மாயனை தள்ளிக் கொண்டு ரிதமை தேடி ஓடினான் சௌந்தர்.


"அவள் எங்கே? அவளை கண்டே ஆகவேண்டும் எனும் கட்டாயம்!" அவனுக்கு.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
இவ்வளவு இக்கட்டான நிலையிலும் ரிதமோட செயல்பாடு அருமை. அகரனை தேத்தி தகிரியம் குடுத்து ஏகனை அகரன் மூலமா வரவச்சு வாவ் வாவ்.🤩🤩🤩🤩
ரிதமோட நிலைமை தான் என்னாச்சோ???🥺🥺
 
Top