Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 9 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 9 ❤️‍🔥


"நீயோ கட்டளையிடும் கந்தர்வனாய்
நானோ சுயமரியாதை சுந்தரியாய்.....!!"



"ஐ'ம் ஏகன் சிதம்பரம்!"

நன்முறையில் தன்னை புதிதாக அறிமுகம் செய்தான் ஏகன்.

காரணம் அவன் அடுத்து அவளிடம் வைக்கப்போகும் கட்டளையும் கூட 'புதுமையானதே!'

என்னதான் அவன் நல்லவனாக அறிமுகம் செய்தாலும்;முன் அனுபவங்களை கொண்டு அவனை நம்பாத பார்வையோடு முறைத்து நின்றாள் ரிதம்.

'இவன் எதுக்கு இப்போ நல்லவன் வேசம் போடுறான்!? திடீர் நல்லவன் அவதாரம் எடுக்க காரணம் என்னவா இருக்கும்!?கழுத கத்தரிக்கா முத்துனா கடைத் தெருவுக்கு வந்துதான ஆகனும்!' என நினைக்க

மூளையோ,'அடி ரிதம் அவன் உன்னை அவன் உட் பீன்னு சொன்னான் இல்ல தாத்தா முன்னாடி அதை மறந்துட்டியா!'
சரியான நேரம் பார்த்து மறந்ததை நினைவு படுத்த.

பார்வையில் பற்றவைக்கும் எரிதழலாய் நின்றாள்.

'உன் பார்வை என்னைக் கொள்ள சாய்ந்தேனே நானும் மெல்ல'

என பாட அவன் என்ன காதல் புரியவா வெண்புறாவை அழைத்து வந்துள்ளான்.

கழுதை மீது பொதியை சுமத்துவது போல தன் எண்ணங்களை, தன் கட்டளைகளை, தனக்கு 'சரி' என்று தோன்றுவதை அவளை செய்ய வைக்கவே அவளை அழைத்து வந்துள்ளான்.


அவளின் முறைப்புக்கு மிதப்பாய் ஒரு பதில் பார்வை பார்த்தவன் "இப்போ நம்ம
பேசலாமா ரிதம்!?" அவன் குரலில் திமிர் உறைந்து இருந்ததோ

'சரி' எனும் தலையசைப்பை வழங்கி அமைதி காத்தாள் என்பதை விட; பொறுமையை இழுத்து எருமை மீது கட்டி இருந்தாள் என்றே சொல்ல வேண்டும்.

தோட்டத்து கல் இருக்கையில் தான் அமர்ந்து அருகே இருந்த இருக்கையை கண்களால் காண்பித்து அமருமாரு விழிவீச.

இவன் கட்டளைக்கு நான்,அதுவும் வார்த்தையாக அல்லாது இவன் கண்களால் இடும் வேலையை நான் 'செயலால் செய்வதா!?' என்று அமராது நிற்பதே தனக்கு வசதி என்று நின்றுகொண்டாள்.

அவன் மீண்டும் அவளை வற்புத்தவில்லை. சிறு தோள் குலுக்களுடன் தான் சொல்ல வந்ததை சொல்லத் தொடங்கினான்.

எப்படியும் அவன் பேச்சு 'அகரனை நெருங்காதே!' என்பதாய் தான் இருக்கும் என்று நம்பித்தான் அங்கே ஆட்டுவிக்கும் குளிரிலும் அசையாது நிலைமரமாக நின்றிருந்தாள் அவள்.

அவன் மௌனம் காக்க தானே முதலில் தொடங்கினாள்

"சொல்லுங்க என்ன பேசணும்!?" வெடுக்கென்ற பேச்சு தான் இப்போதும்.

"நான் ஏகன்!"
'இவன் என்ன லூசா சொன்னதே சொல்றான்!' என தோன்ற அவனை சந்தேகமாக பார்க்க அவனே மீண்டும் தொடர்ந்தான்.

"நான் ஒரு டிவோர்சி, சிங்கில் பேரண்ட். என் பையனுக்கு உன்னை பிடிச்சிருக்கு நாம கல்யாணம் பண்ணிக்கலாமா ரிதம்!?" என்க.

பிள்ளையை முன்னிறுத்திய பேச்சு என்று நம்பி இங்கே அமர்ந்தது எத்தகைய சூழலுக்கு தன்னை சிக்க வைத்துள்ளது
'பிற்பாடு ஞானம் கண்டு யாருக்கு என்ன பயன்!?'

அவன் தடாலடி கேள்வி எருமை மீது கட்டி இருந்த பொறுமையை கட்டவிழ்க்க பொங்கிவிட்டாள் பெருநகை.

"என்ன நினச்சுட்டு இருக்கீங்க? அப்பவும் சிதம்பரம் தாத்தா முன்னாடி உங்க லவ்வர்னு சொல்றீங்க!"

"லவ்வர் சொல்லல வுட் பீன்னு சொன்னேன்!" என்று திருத்த

'ஆமாம் இப்போ இந்த பிழை திருத்தம் ரொம்ப முக்கியம்!' மனதில் பேசிக் கொண்டு வெளியே

"இப்போ இது முக்கியமா? சரி வேல் தாத்தா முன்னாடி ஒன்னும் பேச முடியாம அமைதியா இருந்துட்டேன்.இப்பவும் பையனை பத்தி தான் பேசப்போறீங்கன்னு நம்பி வந்தா என்ன கேள்வி கேட்கறீங்க
உங்களுக்கு என்னைப் பார்த்தா எப்படி இருக்கு!?" பேச்சில் ஆக்ரோஷம் வழிந்தது.

"பார்க்க பொண்ணு மாதிரி தான் இருக்கு.ஆனா பேச்சு தான் பொண்ணு மாதிரி இல்ல ரிதம் மேட... டம்...! இப்பவும் கூட நான் என் பையனுக்காக தான் கேட்கறேன் இதுல உங்களுக்கு கூட லாபம் இருக்குங்க மே..டம்....!"

வார்த்தைக்கு வார்த்தை இழுவையாக ஒரு மேடமை குறிப்பிட்டு எரிச்சலை கிளப்ப.

"உங்களை நான் கல்யாணம் பண்றதுக்கும் பையனுக்கும் என்ன சம்பந்தம்?" ஒன்றும் புரியாது வினவியவள்.

"அது என்னவா வேணா இருக்கட்டும் ஆனா நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்!" என்றாள் உறுதியாக.

"ஹோ...! முடியாதா சரி அப்போ உன் தாத்தாவுக்கு ஆப்ரேசன் பண்றதை நீ எப்படி பண்ணுறன்னு நானும் பார்க்கறேன்!?" மிரட்டலில் இறங்க.

உன் மிரட்டல் எல்லாம் உப்புக்கல்லுக்கு 'பெறுமானம் பெறாது' என தூசி தட்டியவள்

"நீங்க யாரு அதை சொல்ல? நீங்க இதுல தலையிட்டா நான் நேரா சிதம்பரம் தாத்தாகிட்ட போய் சொல்லுவேன் இங்க நடந்ததை" இவளும் பதிலுக்கு பதில் கூற.


"என் தாத்தா நான் சொல்றதை கேட்பாரா!? இல்லைன்னா நீ சொல்றதை கேட்பாரா!?"

கண்டிப்பாக ரிதம் சென்று நின்றால் தாத்தா இவளின் பேச்சை தான் நம்புவார்.

'ஏனென்றால்!?'

"பேரன் வீட்டிற்கும்,குடும்பத்திற்கும் மட்டுமே நல்லவன் வேறு யாரேனும் அவன் விருப்பத்திற்கு எதிராக நின்றால் அவன் எப்படிப்பட்டவன் என்பதை அறிந்தவர் அல்லவா!"அவர்.

ஆதலால் கண்டிப்பாக ரிதம் சென்று கூறினாள் என்றால் கட்டாயம் நம்புவார் அதில் ஐயமில்லை.

'ஆனால் அந்த உண்மை ரிதம் எனும் பேதைக்கு தெரியாதே!'

ஒரு நொடி அமைதியானவள் மீண்டும் வாதம் செய்தாள்.

"தாத்தா யார் சொல்றதை நம்புறாங்கன்னு நாளைக்கு அவர்கிட்ட சொல்லும் போது தெரியும்...!" என்றதோடு

"எனக்கு ஒரு சந்தேகம்?" வினவ.

"என்ன சந்தேகம் மே... டம்...!"

"இல்லை! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் என்னையும் என் தாத்தவையும் பார்த்து நீங்க அன்பா பேசி நாடகம் ஆடி எங்களுக்கு சம்பந்தமே இல்லாத உங்ககிட்ட நடிச்சு பணம் பறிக்கவந்தோமன்னு குறை சொன்னீங்க.
அதுக்குள்ள இப்போ எந்த நல்ல ஆவி உங்களுக்குள்ள புகுந்துச்சுனு என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்கறீங்க!?இது உங்களுக்கே கொஞ்சம் அதிகமா இல்ல.உங்க ஆட்டியுட் உங்க அடமென்ட் உங்க ஈகோ எல்லாத்தையும் உங்கக்கூடவே வச்சுக்கோங்க!" பொரிந்துவிட்டு நகர.

செல்லவிடாது தடுத்தது அவன் பேச்சு
"என் பையனுக்கு உன்னை பிடிச்சிருக்கு இந்த ஒன்னு போதும் நீ எவ்வளவு பெரிய கோல்ட் டிக்கரா இருந்தாலும் என்கிட்ட பணம் இருக்கு!" தலைகணமாக பேச


பெண்ணரசிக்கு கடுப்பு மூல ஏதோ பேச வர கையமர்த்தி தடுத்த தாருகன் அவனோ,
"பொறுமையா கேளுங்க மேடம்.. ஏன் இவ்வளவு அவசரம்? எனக்கு என் பையன் ஹேப்பி முக்கியம்... உனக்கு உன் தாத்தா முக்கியம்....உன் தாத்தா ஆபரேஷனுக்கு தேவையான எல்லா செலவும் என் பொறுப்பு. இதுக்கு உனக்கு ஓகேன்னா சொல்லு இன்னும் நாளே நாள்ல நாம கல்யாணம் பண்ணிக்கலாம்!" என்றான்.


"நான் நாளைக்கு சிதம்பரம் தாத்தா கிட்ட ஹெல்ப் கேட்டுப்பேன்.அதுக்கு எதுக்கு உங்களை நான் கல்யாணம் பண்ணனும்!?
காசு எவ்வளவு செலவு ஆனாலும் நான் கஷ்டபட்டு சம்பாதிச்சு தாத்தகிட்ட வாங்கிய கடனை அடச்சுப்பேன்.இதுக்காக எல்லாம் உங்களை கல்யாணம் பண்ணனுமா என்ன!?" வீராப்பாய் கேட்டு நின்றாள் வீரமங்கை.

அவளின் துணிச்சல் அவனை கவர்ந்தது. ஆனால் அதெல்லாம் இமைபொழுதில் மறைந்தது.

"ஓ.. அப்பவும் கூட அது இந்த வீட்டு காசு தானே.நீ அதுக்கு என்னை கல்யாணம் பண்ணினா எனக்கு பணத்தை திருப்பி தரவேண்டாம்!"என்று பேரம் பேசினான் அவன்.

'மாட்டேன்!' என்று அவள் பிடிவாதம் பிடிக்க

'உன்னை ஒப்புக்கொள்ள வைத்தே தீருவேன்!' என்று அவன் தீர்மானமாக இருக்க.

"உனக்கு நாளைக்கு ஈவ்னிங் வரை டைம் தர்றேன் அதுக்குள்ள உன் முடிவை சொல்லு!"

பாரத்தை அவள் புறம் ஏற்றிவிட்டு சாதுவாக வீட்டிற்குள் சென்றான் ஏகன்.


அவன் தன் மீது வைத்தது எத்தனை பெரிய பாரம் என்பதை அவள் அப்போது உணரவில்லை.

காலை எட்டு மணிக்குத்தான் விழித்தாள் ரிதம்.புது இடம் என்பது மட்டுமல்லாது 'மனதின் உளைச்சல்' அவளை உறங்கவிடாது படுத்தி எடுக்க.

குளித்து தனக்கு என்று மாடியில் ஒதுக்கப்பட்ட அறையில் இருந்து வெளியே வந்தவள் நேரே வேல் தாத்தாவின் அறைக்கு சென்று பார்க்க அங்கே வெறும் அறை தான் காட்சி தந்தது.

'தாத்தா எங்கே?' என அவரைத் தேடி கீழே சென்றால் உணவு மேசையில் நல்ல பிள்ளையாக அமர்ந்து உணவு உண்டிருந்தார்.

'தாத்தா' என்ற அவள் அழைப்பில் சிதம்பரம் தாத்தா மட்டும் திரும்ப புரிந்து கொண்டாள் அவள்.வேல் தாத்தா தன் நிலையில் இல்லாது உள்ளார் என்பதை.


"என்ன தங்கம் இப்ப தான் சாப்பிட வர்றதா!? பாரு மாப்பிள்ளை உனக்காக எவ்வளவு நேரமா காத்திருக்காருன்னு.
அதும் நீ பெத்த பிள்ளை உன் மகன் இருக்கதையே மறந்துட்டு பொறுமையா வரலாமா தங்கம்!? ஆமாம் பாப்பு எங்க இன்னும் எழுந்துக்கலையா!?உடம்புக்கு சுகமில்ல்லையா தங்கம்!?" என்று தான் பெற்ற மகள் ஜானகியாக ரிதமை எண்ணி பேசினார் தாத்தா.

அவர் கூறிய மாப்பிள்ளை சாட்சாத் நம் 'ஏகன்' தான்.நீ பெற்ற மகன் என்று அவர் குறிப்பிட்டது 'அகரனை'த் தான்.

கோபம் ஒரு புறம் என்றால்; அடுத்தவர் முன்பு இவ்வாறு இணைகூட்டி பேசியது வேறு பெண்ணவளுக்கு சற்று சங்கடமாக இருக்க.

அவர் மேலும் தொடர்ந்தார்," பாரு மாப்பிள்ளை தட்டுல எதுவுமே இல்ல தங்கம் என்ன வேணும்னு கேட்டு பரிமாறு ஆத்தா!" என்றாரே பார்க்கலாம்.


ஏகன் முட்டிக் கொண்டு வந்த சிரிப்பை இதழ் கடைக்குள் ஒதுக்க பார்க்க அதுவோ எட்டபனாக மாறி போட்டுக் கொடுத்தது.

'நேற்று என்னிடம் உன்னை நான் திருமணம் செய்யமாட்டேன்!'என்று வெடுக்கெடுத்தாய்...


இப்போது,'என்னை உன் கணவன் என்ற உன் தாத்தாவிடம் அந்த மறுப்பை கூறு பார்க்கலாம்!?' எனும் சவால் மறைந்த கேலி புன்னகை தவழ.

அவளோ,"அப்பா எனக்கு உடம்பு சரியில்லை.அதுதான் கொஞ்சம் தூங்கிட்டேன்பா இனி சரியா எழுந்துப்பேன்!" என்று வாக்கு கொடுக்க.

"ஐயோ! நான் ஒரு மடையன் எப்பவும் விடியல்ல எழுந்து வர்ற பிள்ள இன்னும் வராம இருக்கும் போதே என்ன ஆச்சுன்னு பார்க்காம உன்னை போட்டு திட்டிட்டேன்.
அப்பாவை மன்னிச்சிடு தங்கம் சரியாமா!"

மகளாக எண்ணிய பேத்தி முன் அடிபணிந்தார்.

அவரின் இந்த அன்பு ஒன்று தானே ஏகன் நேற்று பேசிய பேச்சிற்கு இந்த வீட்டை விட்டு செல்லாது இங்கேயே நிறுத்தி உள்ளது.அவர் முகத்தில் தெரியும் புன்னகை சொன்னது அவர் சிதம்பரம் தாத்தாவின் மீது கொண்ட நட்பு எத்தகையது எத்தனை ஆழமானது என்பதை.


அவரின் மனம் மகிழ எதையும் செய்யலாம். ஆனால் அது பணத்தால் வாங்க கூடியதாக இல்லாத வரை அவளுக்கு மகிழ்ச்சி.

'ஏனென்றால்?'

"இப்பொழுது கை இருப்பு எல்லாம் அவரின் உயிரை காக்கும் மாமருந்து அல்லவா!"

அதனால் பண
த்தை தவிர அவரின் சிறுசிறு இன்பங்களை தடுக்க அவள் விரும்பவில்லை.

ஒரு வேளை கைவசம் 'வேலை' என ஒன்று இருந்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் அதுவும் அல்லவா அவளிடம் இல்லாது போனது.
 
"என் பையனுக்கு உன்னை பிடிச்சிருக்கு இந்த ஒன்னு போதும் நீ எவ்வளவு பெரிய கோல்ட் டிக்கரா இருந்தாலும் என்கிட்ட பணம் இருக்கு!"

ப்பாஹ்..... வரலாற்றுமயமான ஓர் proposal.


Just like his character.... 🫡 🫡 🫡
 
ப்பாஹ்..... வரலாற்றுமயமான ஓர் proposal.

Just like his character....
🫡 🫡 🫡
அதேதான் தான் திருடன் போல பேசுறான் பேக்கு பாய்... உள்ளார்ந்த நன்றிகள் 💐
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.இவுரு பெரிய ராச ராச சோழ வம்சம்.😬😬😬😬😬😬 பண்டமாற்று முறைல கண்ணாலம் பேசறான் 😤😤😤😤.
அதுவும் வேலு தாத்தாவோட நிலைமைய சாதகமா எடுத்து கிட்டு.
இன்னிக்கு பையனுக்கு ரிதமை புடிச்சிருக்கு ன்னு கண்ணால முடிவுக்கு போறான் நாளைக்கே வேண்டாம்னு சொன்னா தொரத்திடுவானோ?🫤🫤🫤🫤 மண்டைக்கனம் புடிச்சவன்.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.இவுரு பெரிய ராச ராச சோழ வம்சம்.😬😬😬😬😬😬 பண்டமாற்று முறைல கண்ணாலம் பேசறான் 😤😤😤😤.
அதுவும் வேலு தாத்தாவோட நிலைமைய சாதகமா எடுத்து கிட்டு.
இன்னிக்கு பையனுக்கு ரிதமை புடிச்சிருக்கு ன்னு கண்ணால முடிவுக்கு போறான் நாளைக்கே வேண்டாம்னு சொன்னா தொரத்திடுவானோ?🫤🫤🫤🫤 மண்டைக்கனம் புடிச்சவன்.
அதேதான் மண்டக்காசாயம்...🤓🤓🤓
 
Top