Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை!-12

Advertisement

praveenraj

Well-known member
Member
இந்திரன் தீவிர யோசனையில் இருந்தான். அப்போது அவனுக்கு கதிரவனிடமிருந்து அழைப்பு வந்தது. எடுத்தவன் எதுவும் பேசாமல் மௌனமாய் இருக்க,
"ஹலோ... ஹலோ... இந்திரா? இந்திரா? ஆர் யூ தேர் இன் தி லைன்?"
அவன் எதுவும் பேசாமல் மௌனமாவே மூச்சை விட,
"இந்திரா, டேய் நீ தானே லைன்ல இருக்க?"
"ஹ்ம்ம்..."
"ஏன்டா எதுவுமே சொல்லல? நான் என்னமோ ஏதோனு பயந்துட்டேன் தெரியுமா?"
"என்ன விஷயம்?"
"எப்படி டா இருக்க? அம்மா வேற என்னென்னமோ சொல்றாங்க... என்ன ஆச்சு? யாரு அவங்க எதாவது தெரியுமா?"
"..........."
"இப்போ பதில் பேசப் போறியா இல்லையா டா?"
"என்னடா பேசணும்? என்ன பேசணும்? நான் பிழைச்சிட்டேன்னு வீட்டுல எல்லோரும் சந்தோசப்படுறாங்க, நானோ நான் பிழைக்க ஒரு உயிரை காவுவாங்கிட்டேன்னு குற்றயுணர்ச்சியில இருக்கேன். இன்னும் எத்தனை பேரை தான் நான் கொல்லப் போறேனோ? இல்ல இன்னும் யாருடைய சாவையெல்லாம் கண்கூடப் பார்த்து இப்படி அழுது அழுது வெதும்பி வெதும்பி சாகப் போறேனோ தெரியில? சத்தியமா சொல்றேன் இவ்வளவு நாளா ஏன்டா பிழைச்சேனு இருந்தேன். நேத்து அம்மா அழுததும் தான் சரி யாருக்காக இல்லைனாலும் அம்மாக்காகவாவது வாழணும்னு நெனச்சன். ஆனால் திரும்ப..."
"டேய் இந்திரா விடுடா. அதுதான் உனக்கு ஒன்னும் ஆகலை தானே? நல்லா தானே இருக்க. அப்றோமென்ன?"
"அதுதான்டா இங்க பிரச்சனை. இன்னும் எத்தனை பேரைக் கொன்னுட்டு நான் மட்டும் வாழப் போறேனோ தெரியில? சிந்து, ஸ்ரீ, இப்போ அந்தப் பெரியவர், ராஜேந்திரன் அண்ணன்..."
"டேய் ராஜேந்திர அண்ணனுக்கு ஒன்னுமில்ல. ஹாஸ்பிடல்ல தான் இருக்காரு..."
"தெரியும். ஆனாலும் பயமா இருக்கு டா..."
"இந்திரா நீயாடா இப்படிப் பேசுறது? பயங்கற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாதவன் டா நீ?"
"உயிருக்கு உயிரான ரெண்டுப் பேரு என்னால என் கண்ணு முன்னாடியே, கடைசியா ஒரு முறைக் கூட அவங்கள நான் நேர்ல..." என்னும் போதே அவன் கேவினான்.
"டேய் இந்திரா... " என்ற கதிரவனும் ஏனோ கலங்கித் தான் போனான். பின்னே இந்திரனுக்கு ஸ்ரீ எப்படியோ அப்படித் தானே அவனுக்கு சிந்து?
என்ன பேசுவதென்று இப்போது இருவருக்குமே தெரியவில்லை. மௌனம் மட்டுமே ஆட்சி செய்தது.
"சரிடா நீ திரும்ப பிஸினஸுக்கு வரது ரொம்ப சந்தோசமா இருக்கு டா. கவலைப் படாதா காலம் மாறும்..." என்றவன் ஏனோ அதைத் தனக்கும் சேர்த்தே சொல்லிக்கொண்டான் கதிரவன்.
"எதுவும் மாறாது கதிரா... சரி நான் வெக்கறேன். பாரு..."
"டேய் இந்திரா?"
"சொல்லு?"
"நீ எதுவுமே கேட்கலையே டா?"
"எதைப் பற்றி?"
"அது வர்மா இண்டஸ்ட்ரீஸ் இப்போ வர்மா இண்டஸ்ட்ரீஸ் அண்ட் சர்விசெஸ்னு மாறப் போகுதாமே? இங்க மும்பை புல்லா அதே பேச்சு தான் ஓடுது..."
"நீ என்ன சொல்ற? எனக்கு ஒன்னும் புரியில..."
"இனி மேல் வர்மா இண்டஸ்ட்ரீஸ் புரொடக்சன் மேனுபேக்சர் மட்டுமில்லாம சர்வீஸ் தொழிலும் செய்யப்போகுதாம். நாளைக்கு அங்கிள் கிட்ட இருந்து அறிவிப்பு வருமாமே?"
"என்னடா சொல்ற? நாங்க சர்விஸ் சார்ந்ததா? என்ன குடிச்சியிருக்கியா?"
"ஹலோ பாஸ்! நீங்க விளையாடுறீங்களா? நாளைக்கே ரெண்டு அறிவிப்பு வருதாம். முதல்ல தி கிரேட் இந்திரன் என்னும் இந்திரஜித் வர்மன் திரும்ப வர்மா இண்டஸ்ட்ரீஸ் எம்.டி ஆகப் போறீங்க. செகண்ட் தான் புது வென்சூர்ஸ் (ventures - துணிகர முடிவு) ஆரமிக்கப் போறீங்க எம்.டி சார்ர்ர்ர்ர்..." என்று சந்தானம் அழைப்பதைப்போல் ரகமாய் இழுத்தான்.
ஏனோ அவன் சொன்ன தொனி இந்திரனை கொஞ்சமே கொஞ்சம் புன்முறுவலிட செய்தது. அவன் இப்படித்தான் அடிக்கடி இந்திரனை கலாய்ப்பான். அதும் சந்தானம் கார்த்தியை md சார்ர்ர் என்று அழைப்பதைப் போலே இவனும் ராகமாய் இழுத்து அழைப்பான். அப்படிச் சொல்லும் போதெல்லாம் அவனுக்கு அவனையும் அறியாமல் சிரிப்பு தான் வரும்.
"நீ இன்னும் மாறவேயில்லைடா கதிரா..."
"என்ன பண்ண? தொட்டில் பழக்கம் சுடுகாடு வரையாம். என்ன கூட பல வருசமா பிடிச்ச தொல்லை விட்டுச்சேனு நெனச்சேன். திரும்ப அது வந்திடுச்சே?" என்று அவன் போலியாய்(?) கவலைப் பட,
"மச்சான் அவ்வளவு சீக்கிரம் நான் உன்னை நிம்மதியா இருக்க விட மாட்டேன் டா. வரேன் வந்து உன்னை டார்ச்சர் பண்ணல நான் இந்திரன் இல்ல..."
"டேய் வா டா வாடா. தில்லிருந்தா வா டா. வந்து நேர்ல பேசுடா. ஐ அம் வெயிட்டிங்..." என்று அவனும் வடிவேல் போல் ஒரண்டை இழுத்து விஜய் போல் பஞ்சில் முடித்தான்.
"வரேன் வரேன். வந்து டீல் பண்ணிக்குறேன் உன்ன..."
ஏனோ அப்போது தான் இந்திரனுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு உள்ளே வந்த சகுந்தலா, சுமதியம்மா இருவரும் இவன் இப்படிச் சிரித்துப் பேசுவதைப் பார்த்து உள்ளே வராமல் அப்படியே வெளியவே நின்றனர். பின்னே இனி இவன் முகத்தில் சிரிப்பு வருமா என்று நினைத்தவர்களுக்கு இது ஆச்சரியம் தான்?
அப்போது சரியாக மேலே வந்த இமையவர்மன் அவர்கள் இருவரும் வெளியே நிற்பதைக் கண்டு அவர்களும் பின்னாலே நின்றார். அவரும் இந்திரனைக் கண்டு சிரித்து உளம் மகிழ்ந்தார்.அவன் பேசிக்கொண்டிருப்பது கதிரவனுடன் தான் என்று அவன் பேசுவதிலே தெரிந்தது. அவன் பேசிவிட்டு,"சரி டா நான் வெக்கறேன், பை..." என்னும் போது தான் மூவரும் உள்ளே செல்வதைப் போல் சென்றனர். அவர்களைப் பார்த்ததும் ஏனோ நீண்ட நாட்கள் கழித்து சிரித்தபடியே அவர்களை அழைத்தான். இது சகுந்தலா இமையவர்மன் இருவருக்கும் இன்னும் சந்தோசம் தந்தது.
ஏனோ கொண்டுவந்த சாப்பாட்டை சகுந்தலா அவனுக்கு ஊட்ட அவனும் அமைதியாகவே சாப்பிட்டான். நீண்ட நாட்கள் கழித்து அந்தக் குடும்பத்தில் கொஞ்சம் மகிழ்ச்சியானச் சூழல் நிலவியது. அப்போது தான் கமலேஷ் அழைத்தான்.
"யாரு?"
"கமலா தான் கூப்பிடுறான்..." என்றவர் வீடியோ காலை ஆன் செய்ய இப்படி பெற்றோர்கள் இருவருனும் தன் தமையனும் சந்தோசமாக இருப்பதைப் பார்த்து அவனுக்கு சந்தோசம் வந்தது. கூடவே இந்தக் கூட்டத்தில் மிக முக்கியமான அந்த இரண்டு ரோஜாக்கள் இல்லையே என்று நினைக்கையில் அவனுக்கும் கசந்தது. அவன் முகம் மாற உடனே அதைச் சரிசெய்து சிரித்தான்.
"என்னைய மட்டும் விட்டுட்டு நீங்க மட்டும் நல்லா சாப்பிடுறீங்க... போங்க?" என்று அவன் பொய்யாய்க் கோவப்பட,
ஏனோ இதில் சகுந்தலா உண்மையில் வருந்தினார்.
"ஐயோ அம்மா, நான் சும்மா சொன்னேன். எனக்கு இப்போதான் சந்தோசமா இருக்கு..." என்று அவன் சொல்ல, அவன் என்ன சொல்ல வருகிறான் என்று உணர்ந்த மூவரும் அதைப் பற்றி பேச விரும்பாது வலுக்கட்டாயமாகவே தவிர்த்தனர்.
இப்போதும் கமகேஷுக்கு தான் ஏன் தந்தை இப்போது போய் இந்த பிசினெஸ் விரிவாக்கம் செய்ய வேண்டும்? என்ற அக்குழப்பம் எழுந்தும் ஏனோ அவனுக்கு அதைக் கேட்க தான் தைரியமில்லை.
சகுந்தலாவிற்கும் அதே கவலை தான். 'அவர்கள் சகவாசமே வேண்டாம் என்று தானே ஒதுங்கி வந்துவிட்டோம். மீண்டும் எதற்கு மூக்கை நுழைக்கவேண்டும்?' என்று எண்ணம் அவருக்கு. தன் மனைவி மற்றும் இளைய மகனின் எண்ண ஓட்டத்தை உணர்ந்தவர் எதையும் சொல்லாமல் அப்படியே இந்திரனைப் பார்த்தார். எப்படியும் இந்நேரம் அந்த விஷயம் இவன் காதிற்கும் வந்திருக்கும் என்று அவருக்கும் தெரியும். அதும் எப்போது கதிரவன் பேசினான் என்று தெரிந்ததோ அப்போதே அவருக்கு கன்பார்ம் ஆகிவிட்டது. இருந்தும் அவனாகவே எதையாவது கேட்பான் என்று அவர் அமைதியாக இருக்க, அதை உணர்த்துக்கொண்ட இந்திரனோ எதையும் கேட்காமல் அமைதியாகவே இருக்க இருவரின் எண்ணத்தையும் அறிந்த சகுந்தலாவோ இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று புரியாமல் விழித்தார்.
"சரிப்பா நாளைக்கு கிளம்பனும் தானே?" என்று இந்திரனே கேள்வி கேட்டான்.
"ஆமாப்பா. காலையிலே கிளம்பிடலாம்..."
"எங்க போறோம்? ஐ மீன் சென்னையா இல்ல மும்பையா?" என்று இந்திரன் கேட்டதும்,
"இதென்ன கேள்வி? சென்னைக்குத் தானே?" என்று சகுந்தலா முடிக்கும் முன்னே, "இல்ல மும்பைக்கு..." என்றார் இமையவர்மன்.
இப்போது புரியாமல் சகுந்தலா தான் அவரைப் பார்க்க, இந்திரனோ மறுப்பேதும் சொல்லாமல்,"சரிப்பா நான் தூங்குறேன். பை குட் நைட் அம்மா..." என்று அவன் படுக்க இவர்கள் இருவரும் வெளியே வந்தனர்.
"இப்போ எதுக்கு மும்பை போறோம்னு சொன்னீங்க?" என்றார் சகுந்தலா.
"சென்னை போக வேணாம் அதுக்கு தான்..."
"அதுதான் ஏன்?"
"சென்னை போனா அவனுக்கு கண்டிப்பா ஸ்ரீ, சிந்து ரெண்டுபேரோட ஞாபகம் வரும். ரொம்ப நாள் கழித்து இப்போதான் அவன் முகத்தில வாழணும்னு எண்ணமே தெரியுது. திரும்ப அவனைக் குழப்ப நான் விரும்பல. சோ நாம மும்பை தான் போறோம்..."
"அது மட்டும் தான் காரணமா?"
"எப்படியும் உன் சின்ன பையன் எல்லாமும் உன்கிட்டச் சொல்லியிருப்பானு எனக்குத் தெரியும். அதுக்கும் தான்..."
"இல்ல நான்..." என்று சகுந்தலா முடிக்கும் முன்னே,
"தயவு செய்து இந்த ஒரு விஷயத்துல எதுவும் சொல்லாத சகு. அப்றோம் நமக்குள்ள வீணா சண்டை தான் வரும்..." என்றவர் சென்றுவிட அங்கே தனியே வீட்டில் திருதிருவென விழித்து கொஞ்சம் அழுது சோகமாய் இருந்த மாதுளை அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருந்தாள்.
அங்கே சென்றவர் அவளைப் பார்த்ததும் அவள் இவரைக் கண்டு எழ," உட்காரும்மா. நீ உன் வீடு மாதிரி நெனச்சிக்கோ. புரியுதா? சாப்பிட்டியா?" என்று வாஞ்சையுடனே வினவினார்.
அவள் மறுப்பாக தலையை அசைக்க அவரோ சுமதியை அழைத்தும்,"எவ்வளவோ சொல்லிட்டேன்ம்மா மாட்டேன்னு சொல்லிட்டா..." என்றார் சுமதி.
ஏனோ அவளின் நிலையை உணர்ந்த சகுந்தலா தானே அவளுக்கு சாப்பாடும் ஊட்டினார். ஊட்டும் போதே அவருக்கு ஏதேதோ எண்ணங்கள் எழுந்தது. சிந்துவும் இப்படித் தான் அடிக்கடி சாப்பிட மாட்டேன் என்று சொல்லிவிடுவாள். அவளுக்கும் இப்படித் தான் ஊட்டுவார். அதைப் பார்த்து கமகேஷும் ஸ்ரீயும் அவரை ஊட்டச் சொல்ல தப்பித் தவறி இந்திரன் அதைப் பார்த்து விட்டான் என்றாள் அவ்வளவு தான். அவனுக்கு அவன் தாய் மீது அதிக பொசெசிவ்நெஸ். சிந்து காமலேஷிடமே அவன் அந்தக் கோவத்தைக் காட்டுவான். இதில் ஸ்ரீயை வேறு பார்த்துவிட்டால் அவ்வளவு தான். ஏனோ அதெல்லாம் அவருக்கு நினைவு வந்தது. என்னமோ இரண்டு பெண்பிள்ளைகள் இருந்தும் இப்பொது யாருமே இல்லை என்ற ஏக்கம் வர அதன் தீர்வாய் இப்போது மாதுளைக்கு அவரே ஊட்டினார்.
அவளுக்கும் கண்ணீர் வந்தது. அவரின் மடியிலே படுத்தும் விட்டாள். சகுந்தலாவிற்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒருபுறம் இந்திரன் மீண்டதே பெரிய விஷயம் என்று அவருக்கும் தெரியும். இதில் அவனை ஸ்ரீயை மறக்கச் சொல்லி இன்னொரு பெண்ணை அவன் விரும்ப வைப்பதோ இல்லை திருமணம் செய்வது என்பதோ இந்த ஜென்மத்தில் வாய்ப்பில்லை என்று நன்கு உணர்ந்தார் அவர். அதற்காக அப்படியே விட முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது.
இதற்கிடையில் இந்தப் பெண்ணிற்கு வேறு நிறைய நிறைய கடமை பட்டிருப்பதாய் அவர் நினைக்கிறார். அப்போது இவளின் வாழ்க்கையும் அவர் பொறுப்பு தானே? அப்படிச் சொல்லித்தானே ஊர்மக்கள் முன்பு வாக்கு கொடுத்து அழைத்தார்? ஏனோ இவளின் விஷயத்தில் வேறு தான் செய்வது தன் கணவருக்கு பெரிய உடன்பாடு இல்லை என்றும் அறிந்துகொண்டார்.
காலம் தான் இதற்கெல்லாம் ஒரு பதில் சொல்லணும் என்று நினைத்து அவரும் தூங்கச் சென்றார்.
************************
ஐராவதி மறுபுறம் இருந்த தன் காதலனான ஜோன்ஸிடம் திருக்குமரன் சொன்னத்தையெல்லாம் சொல்லிப் புலம்பினாள்.
"எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஜோன்ஸ். அப்பா இருந்திருந்தா அவர் கிட்ட நம்ம காதலைச் சொல்லி சீக்கிரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யலாம்னு இருந்தேன். ஆனா அப்பா வேற இறந்துட்டார். எல்லாத்துக்கும் காரணமானவன் யாருனு எனக்குத் தெரிந்தும் அவனை ஒன்னுமே பண்ண முடியாத நிலையில நான் இருக்கேன். முதல அவனைக் கொல்லனும். நீ சொல்லு ஜோன்ஸ் நான் அழகா இருக்கேன் தானே?"
"என்ன ஆச்சு ஐரா? நீ ஏன் இப்படியெல்லாம் கேள்வி கேட்கற? நீ அழகு தான்..."
"நிஜமா தானே சொல்ற? அப்பாடா..." என்று அவள் பெருமூச்சை விட்டாள். இது தான் ஐராவதி. அவளுக்கு சட்டுனு கோவம் வந்திடும். அந்தக் கோவத்தை அப்படியே காட்டியும் விடுவாள். சிந்தித்து எது சரி எது தவறு என்றெல்லாம் அவளுக்கு ஆராய தெரியாது. எடுப்பார் கைப்பிள்ளை. வயதளவில் வளர்ந்தும் மனதளவில் அந்த வயதை இன்னும் அடையாத பேதை. மற்றப்படி படிப்பில் சுட்டி. ஆனால் அவளின் இந்தப் பிடிவாதக்குணம், சட்டென்று எவரையும் எடுத்தெறிந்து பேசுவது, யாரையும் நம்பாத இல்லை நம்ப தயாரில்லாதவள் போல் எப்போதும் கொஞ்சம் பதட்டத்துடனே இருக்கும் பெண்ணிவள். தாய் இருந்தும் அவரின் அருகாமை உணராமல் வளர்ந்தவள் என்பதாலோ இல்லை தந்தை தன் தொழிலில் (மருத்துவம்) ரொம்ப பிசியாக இருந்தாலோ என்னவோ யாரையும் எளிதில் நம்பாமல் அதேநேரம் அவளை ஐஸ் வைத்தாள் அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்யும் குணம் உடையவள். ஆனால் இவளின் குணம் தெரியாமலே இருந்து விட்டார் சந்தான பாரதி. மிக காலத் தாமதமாகவே பெற்றோர்களாகிய அவர்களின் தவறு அவர்களுக்குப் புரிந்தது . உடனே அவளை ஹாஸ்டெலில் இருந்து வீட்டிற்கே அழைத்து வந்து படிக்கவைக்க முயல படித்தால் அங்கே தான் படிப்பேன் இல்லையேல் படிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் மகளை அதும் டீனேஜில் இருந்தவளை கொஞ்சம் விட்டுத் தான் பிடிக்க வேண்டும் என்று முயற்சித்த எல்லாப் பலனும் தோல்வியில் தான் முடிந்தது.
எந்தக் குழந்தைக்கும் தன் பெற்றோர்கள் தங்களுக்குத் தான் சப்போர்ட் செய்ய வேண்டும், தன்னை தான் பாராட்ட வேண்டும் என்று இருப்பார்கள். அது நியாயமும் கூட. ஆனால் அது கிடைக்காத போது இன்னும் அவளின் பிடிவாதம் வளர்ந்தது. முதலில் அவளை மெடிசின் தான் படிக்கவைக்க நினைத்தார் பாரதி. ஆனால் மகளின் குணம் அறிந்ததாலும் மேலும் மருத்துவ துறைக்கு பொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம் என்பதை உணர்ந்ததாலும் அதே நேரம் அவை எதுவும் தங்கள் மகளுக்கு இல்லை என்பதாலும் அவளை bba சேர்த்து mba படிக்க வைத்து அட்லீஸ்ட் ஒரு மேலாளர் பதவியிலாவது அமரவைக்க முடிவு எடுத்தார் சந்தான பாரதி. அந்தச் சமையத்தில் தான் கண்டெடுத்து ஸ்பான்ஸர் செய்யும் மாணவர்களில் மகேந்திரன் மற்றும் திருக்குமரன் இருவரையும் தன் விருப்பப்படி மெடிசின் படிக்க வைத்து அழகு பார்த்தார் அவர். அன்று ஒரு நாள் திருக்குமரனிடம் அதைச் சொல்லி வருத்தமும் கொண்டார். இருந்தும் அவருக்கு ஒரு எண்ணம் இருந்தது உண்மை. தன் மகளை நல்வழிப்படுத்தவும் மேலும் அவளுக்கு உறுதுணையாக இருக்கவும் திருக்குமரன் தான் சரியான நபர் என்பதையும் கணக்கில் கொண்டு தான் அன்று,"என் பொண்ணை உன்னை மாதிரி ஒரு நல்லவனுக்குத் தான் கல்யாணம் செய்து கொடுக்கணும் குமரா..." என்று சொன்னார்.
"ஒரு டாக்டரா நான் ஜெயிச்சி இருக்கலாம் குமரா. ஏன் ஒரு மனுஷனா கூட நான் ஜெயிச்சி இருக்கலாம். ஆனா ஒரு அப்பாவா நான் என் கடமையைச் சரியா செய்யலைங்கற வருத்தம் எனக்கு இருக்கு குமரா. என்ன பண்ண நான் வீட்டினரோடு நேரம் செலவழிச்சதைக் காட்டிலும் இந்த ஹாஸ்பிடல் இதைத் தேடி வர மக்கள்னு இவங்க கூடத் தான் அதிக நேரம் ஸ்பென்ட் பண்ணியிருக்கேன். யூ நோ வாட் ஐராவதி எங்களுக்கு கிடைச்சதே காட்ஸ் கிரேஸ் தான். என்னடா ஒரு டாக்டரா இருந்திட்டு இப்படிப் பேசுறானேன்னு யோசிக்கிறியா? ரெண்டு மிஸ்கரேஜ் ஆகி என் வைப்க்கு கர்ப்பப்பை ரொம்ப வீக் ஆகிடுச்சு. அந்தச் சமயத்துல சம் மேஜிக் ஹாட் ஹெப்பெண்ட். அதுல வந்தவ தான் ஐராவதி. ஒரே பொண்ணுனும் நானும் ரொம்ப கொஞ்ச நேரம் தான் அவ கூட ஸ்பென்ட் பண்ணுறதுங்கற காரணத்துல ரொம்ப செல்லம். அது போக ஹாஸ்டெல் வாழ்க்கை, அவ கேட்டதை உடனே வாங்கித் தந்துனு இப்படி நிறைய காரணம் சொல்லலாம். ஆனா நான் அடுத்தவங்க மேல பிங்கர் பாய்ண்ட் பண்ண விரும்பல. என் பொண்ணு பொறுப்பில்லாம இருப்பதற்கு நானே பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். சாரி குமரா... நிறைய எமோஷன் ஆகிட்டேன்" என்று அவர் சொல்லவும் உண்மையில் எல்லா மனிதர்களுக்கும் ஒரு சோகம் இல்லை ஆற்றாமை பக்கங்கள் இருக்கும் என்பதை அன்று திருக்குமரன் உணர்ந்துக் கொண்டான். மகேந்திரனும் சந்தான பாரதிக்குப் பிடித்தவன் தான். இருந்தும் திருக்குமரனின் பொறுப்பு பொறுமை ஆகியவை அவருக்கு மகேந்திரனை விட இவன் தான் தனக்கு பின் இந்த மருத்துவமனையை நடத்த வேண்டும் என்றும் தன் மகளுக்கும் ஏற்றவன் என்றும் தோன்றியது. இந்த விஷயத்தில் மகேந்திரனுக்கு சற்று அதிருப்தி இருந்தாலும் எதையும் அவன் காட்டிக்கொள்ளவில்லை. பின்னே எடுத்து வளர்த்து படிக்கவும் வைத்து இன்று ஒரு டாக்டராக உருவாக்கி இருக்கிறாரே என்ற விசுவாசம் இருவருக்கும் உண்டு. இவ்விருவர் போக நிறைய நபர்களை அவர் ஸ்பென்சர் செய்துள்ளார்.
திருக்குமரன் தான் தன் நண்பன் ஒருவனை அழைத்து ஐராவதியைப் பற்றிய அனைத்தும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தான். அவளை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை என்றாலும் அவளை நல்வழிப்படுத்தவும் தனக்கு எல்லாமும் தந்த அந்தப் பெரிய மனிதரின் ஆசையை நிறைவேற்றவும் முடிவெடுத்தான். அன்று மகேந்திரனைத் தொடர்ப்பு கொண்டு விசாரிக்க அவனோ வெளியே இருப்பதால்,"நீயே பார்த்து பண்ணு. அந்தப் பொண்ண பத்தி நீ தான் அதிகம் தெரிந்து வைத்திருக்க. ஒருநாள் அவகிட்ட தெரியாத்தனமா எப்படிப் படிக்கறீங்கன்னு ஒரு கேள்வி கேட்டுட்டேன் குமரா. என் அப்பா கிட்ட வேலை செஞ்சு அவரு காசுல படிக்கற நீ என்ன கேள்வி கேட்கறதானு காச்சு மூச்சுனு கத்திட்டா. அன்னையோட அவ சகவாசமே வெச்சிக்கறதில்லை. அதும் நம்ம சாருக்கு அவ போன் பண்ணி இருந்தா. அவரு மீட்டிங்கில் இருந்தாரேனு அட்டென்ட் பண்ணேன்..." என்று சொல்லவும் தான் ஏன் அவள் விஷயத்தில் இவன் தலையிட மறுக்கிறான் என்று குமரனுக்கும் புரிந்தது. மரியாதையைக் கொடுத்து மரியாதையை எதிர்பார்ப்பவன் மகேந்திரன். கொஞ்சம் சுய கௌரவம் பார்ப்பவன். அது பாரதி சாரின் மகள் என்றதால் அன்று அவள் தப்பித்தாள் என்று மனதில் நினைத்துக் கொண்டான் குமரன். உண்மையில் குமரனை விட்டால் மகேந்திரன் போல் எங்கேனும் ஒரு ஹாஸ்பிடலில் சென்று பணிக்குச் சேர்ந்துவிட தயாராகவும் இருக்கிறான். என்ன செய்ய அந்தப் பெரிய மனிதரின் சொல்லுக்காக தம்கட்டிக்கொண்டு இருக்கிறான். இதில் தன்னுடன் ஒன்றாக வளர்ந்த மற்றவர்களுக்கும் தன்னுடைய இன்றைய நிலையை எண்ணிப் பொறாமையும் வன்மமும் இருக்கிறதென்று குமரனும் நன்கு அறிவானே! (வானிலை மாறும்!)
 
அப்போ நாளைக்கு மும்பை போய்டுவாங்களா ???

குமரனுக்கும் இந்திரனுக்கும் எது இணைப்புப் புள்ளியா இருக்கும்னு நானும் கதைய உத்து உத்து பாக்கறேன் ஒன்னும் தெரியமாட்டேங்குது ???நம்ம ரைட்டர் சொல்ற மாதிரி இன்னும் கொஞ்சம் கூட போகட்டும் பார்ப்போம் ???
 
மும்,பை பயணம்,...எத்தனை கேள்விகளுக்கு விடை அளிக்கப் போகிறதோ...?
குமரன் இருப்பதும் மும்பையில் தானோ...?
 
அப்போ நாளைக்கு மும்பை போய்டுவாங்களா ???

குமரனுக்கும் இந்திரனுக்கும் எது இணைப்புப் புள்ளியா இருக்கும்னு நானும் கதைய உத்து உத்து பாக்கறேன் ஒன்னும் தெரியமாட்டேங்குது ???நம்ம ரைட்டர் சொல்ற மாதிரி இன்னும் கொஞ்சம் கூட போகட்டும் பார்ப்போம் ???
எஸ் மும்பைக்குப் போயிடுவாங்க. கண்டிப்பா ரெண்டு கதையும் ஒரு புள்ளியில் இணைந்தே தீரும்... அந்தப் புள்ளியை நெருங்க இன்னும் பல எபிஸோட்ஸ் கடக்கணும். கொஞ்சம் பொறுமையா இருங்க எல்லாமே புரியும்... நான் அந்தப் புள்ளியை பற்றிய ஹிண்ட் எதையும் இன்னும் கொடுக்கவே இல்லை. அது தான் இந்தக் கதையின் சாராம்சம். சொல்றேன்... அண்ட் இதெல்லாம் கண்டுபிடிக்கப்போகும் டிடெக்டிவ் இனிமேல் தான் கதையில் அறிமுகமாவான்... நன்றி??��
 
Top