Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீராப் பகை, தீராக் காதல் - அவிரா (பகுதி 3)

Advertisement

Aviraa

Well-known member
Member
Part 3

வானதியின் மூளை படு வேகமாக எதிரே நின்றிருந்தவனையும், எப்படி அனைத்து சொத்துகளும், பாண்டியன் பேருக்கு ..... யாரின் மூலம் .....மாற்றப்பட்டு இருக்க கூடும் என்ற சிக்கலை தீர்த்து வைக்க ... அதன் விளைவாக தோன்றிய கோபவெறி;பெண்ணவளின் கைகள் மூலம், எதிரே இருந்தவனின் கன்னத்தில... இடியென.... வரிசையாக இறக்கப்பட
அவள் கைகளைப் பற்றி தடுத்த பாண்டியன் ...
இவ்வளவு அடிக்கும் அசையாது
நின்றிருந்தவனை.. முறைத்து விட்டு ....

"உங்க கம்பெனிக்கு ....ஒரு காரியம் ஆகும்னா.... எத்தனை பேரை வேணாம்னாலும் ., கை, காலை உடைக்கிற உன்னையே, என் முன்னாடி பேசாத நிலையில் வைச்சுருக்கேன்.. உங்கிட்ட வேலை பார்த்த இவனை .. என் சொல் பேச்சுக்கு ஆட வைக்கிறது பெரிய காரியமா என்ன?...

பாண்டியன் கூற்றில் தன்னைப் போல், அவனையும்.... ஏதோ சொல்லி ....கார்னர் படுத்தியுள்ளான். என்பதை பாண்டியன் பேச்சில், . அறிந்தவள்... அதை நம்பியும், நம்பாமலும், இடைப்பட்ட பார்வையை தன் எதிரே நின்றிருந்தவனிடம், வீசியவள் ....." இவன் சொல்வது உண்மையா?... என கண்களால் வினவ...

எதிரேயிருந்தவன்...பாண்டியனையும், வானதியையுமே மாறி, மாறிப் பார்த்தானே தவிர, பெண்ணவளுக்கு, விழி வழி விடை தரவேயில்லை..

"மிஸ். வானதி எனக்கு நேரமாகுது, ஒண்ணு சைன் பண்ணு, இல்ல வெளியே போ?.. என் பேபி கருப்பியை.... பார்க்க போகணும்....பாண்டியன் இதை மட்டும்குழைவாக சொல்லினான்...

"அடேய் கிராதகா., நான் வரும் போது 3 பிகரு , அப்புறம் ரோஸ், இப்ப கருப்பியா .. ஒரு நாளைக்கு எத்தனை தடவாடா... " காதல் அரசன்" .. மன்மதனே?.. உன்கிட்ட தோத்து போயிடுவாருப்போல, இவன் பெரிய "லோலாயியா" இருப்பான் போல... பேசாம போயிடலாமா...

இவன் கிட்ட சிக்கி, சின்ன பின்னமா
அவறதுக்கு .... என ஒரு மனம் இப்படி நினைக்க .. மறுமனமோ?... இல்ல இங்க இருந்து நேரம் கிடைக்கும் போது இவனைப் போட்டுத் தள்ளிடலாம் ... அதுதான் புதுசா கூட இவன் இருக்கானே' ... எனப் புதியவனைப் பார்த்தவள் ....முடிவாக .... என் பிரச்சனைக்கு இதுதான் தீர்வு. ..என முடிவெடுத்தவள்... பேனாவை எடுக்க ...

"வேண்டாம்" என புதியவன் ....விழி வழி செய்கை செய்ய, அவளோ ..கண்களை மூடித் திறந்து . . "நான் பார்த்துகிறேன்" என மறுமொழி பகன்றாள் .....

இருவரையுமே பார்த்து, இருவரின் விழிப்பாைஷயைப் படித்தவன் ....முன்னவனை முன்னை விட முறைத்து விட்டு, .... பத்திரத்தை இட கையால் பற்றி, வலக்கரத்தால் வானதியின் கரம் பற்றி, ஹாலின் கடைசி அறைக்கு இழுத்துச் சென்றான் அவளை ...

தன் கையிலிருந்த பத்திரத்தை.... வானதியிடம் கொடுத்து விட்டு ...
எப்போதும் தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருக்கும்.... அறை சாவியை... எடுத்து, அறையை திறந்தவன். அறையை மிதமான வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து விட்டு., அறையின் நடு மையத்தில் இருந்த டேபிளை நோக்கிச் சென்று, வானதியின் கரத்தில் இருந்த பத்திரத்தை வாங்கி அதன் மீது, வைத்து விட்டு, வானதியைப் பார்க்க... அப்பார்வை, தன்னை கையெழுத்து இடச் சொல்கிறான் எனப் புரிந்தவள்..

கண் மூடி, தன் பெற்றோரை நினைத்தவள்.. கண் திறந்த அடுத்த நொடி, ஏதோ உத்வேகத்துடன் .. அனைத்து பக்கங்களிலும் கையெழுத்து இட்டிருந்தாள் ...

சபாஷ், கண்ணுல சொன்னாலே புரிஞ்சுக்குறா இவ கிட்ட ரொம்ப கஷ்டப்பட வேண்டாம் போல என சிரித்தவன்... அதே மனநிலையில்

" நானும் கையெழுத்து போடுறேன், இல்லனா இது செல்லாது என்ற பாண்டியன் .. இடதுபுற சுவரை ஒரு நொடிப் பார்த்து விட்டு ..
அவளை விட வேகமாக கையெழுத்து இட்டு.. இவ்வளவு நேரமாக பதற்றத்துடன் நின்றிருந்த புதியவனிடம், கொடுத்து இதை, முறைப்படி பைல், பண்ணு... என்றவன், அவளின், கைப்பற்றி வெளியே இழுத்துச் செல்ல ...

அவனின் பின்னே, ஒடி வந்தவன் "வீர், ப்ளிஸ் .... இவ..." என முழுதாக அவன் முடிப்பதற்குள் ... அனல் பார்வையை அவனின் முகத்தில் வீசியவன் ... ஒன்றும் சொல்லாமல், அறையை பூட்டி விட்டு ...

"இங்க பாரு சத்யா..இனி இவ என் ஆசை வப்பாட்டி டி டி ..

காட் இட்மேன்.. என்னைக்கு இவளை விட பெட்டரா ஒருத்திய வப்பாட்டியா பார்க்கிறனோ.. அப்போ .. இவளை உன் கூட அனுப்புறேன்.. நீ கூட்டிட்டு போ.. என நக்கலாக கூற...

அவனின் ஆசைவப்பாட்டி என்ற பதத்தில் தன்னை மீறி ..."ச்சீ" எனப் பதறியிருந்தாள் வானதி ...

பாண்டியன் கண்களையே அவன் பேசும் போது.....ஆழப் பார்த்துக் கொண்டிருந்த சத்யாவின் ..இதழ்கடையில் இகழ்ச்சி சிரிப்பை சிந்தியவன். பாண்டியனை கூர்மையாகப் பார்த்து விட்டு, வீட்டை விட்டுவெளியேறியிருந்தான்.

வானதி அந்த அறையை நன்றாகப் பார்த்திருந்தால் ... நடந்துக் கொண்டிருக்கும் திரெளபத யுத்ததிற்கு காரணம் தெரிந்திருக்கும் ..அந்தோ விதியின் .. சதியால் .. மதி குழப்பத்தில் இருந்த வானதி .. அவ்அறையை சரியாக .. கவனிக்கவில்லை... .யோசித்து மீள்வாளா ?.,,, இல்லை மூழ்குவாளோ?...
_ பகை தொடரும் ...
 
Nirmala vandhachu ???
Twist pa
 
Last edited:
Top