Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-48

Advertisement

praveenraj

Well-known member
Member
"என்ன சார் ஒரே நாள்ல என்னை அடியோடு மறந்துடீங்கப் போல? போன் கூட பண்ணல? எங்க இருக்கா என்ன பண்றானு கூட விசாரிக்கல" என்றவளைப் பார்த்து முறைத்தபடி,

"நான் ஈவினிங் போன் பண்ணேன் தானே? எப்படியும் ரீச் ஆகிட்டு நீ கூப்பிடுவேனு நெனச்சேன். மோரேவேர் நான் இப்போ கொஞ்சம் பிசி" என்றான் மெல்லிய புன்னகையோடு.

"அப்படி என்ன பிசி?"

"நான் என் மருமகளுக்கு கதை சொல்லிட்டு இருந்தேன்" என்றான் துவாரா.

"ஓ" என்றதும், யாரிடம் இவன் வீடியோ கால் பேசுறான் என்று அறிய இளா எட்டி தலை காட்டினாள். ஏனோ ஸ்க்ரீனில் சரித்திராவைப் பார்த்ததும் அவள் உதடு தானாக விரிந்து,"ஐ" என்று ஆர்ப்பரிக்க

"இளவேனில் குட்டிப் பாப்பா எப்படி இருக்கீங்க?" என்றாள் சரு.

"நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? எங்க இருக்கீங்க? நீங்க ஏன் எங்க கூட வரல?" என்றதும் அவளின் அன்பில் நெகிழ்ந்தவள்,"நான் நீ இருக்கும் இடத்தில இருந்து கொஞ்சம் தூரமா இருக்கேன். எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்குடா பாப்பு. டூ டேஸ்ல நான் அங்கே வந்திடுவேன். சரியா?"

ஓகே என்றதும், துவாரா அவளிடம் பேச நினைக்க இளாவோ,"தூ மாமா எனக்கு தூக்கம் வருது. நீங்க என் முதுகை தட்டிக் கொடுங்க" என்றாள். எப்போதும் போல் ஒருக்களித்து ஒரு காலைத் தூக்கி துவாராவின் மீது போட்டபடி கண்களை மூட அவளுக்காக சரித்திராவை லைனில் காத்திருக்கச் சொல்லி விட்டு அவள் முதுகை தட்டிக்கொடுக்க இன்று முழுக்க ஓடியாடிய களைப்பால் அடுத்த ஐந்து நிமிடங்களில் தூங்கினாள் இளா.

அவள் உறங்கிவிட்டதை ஊர்ஜிதப் படுத்திக் கொண்டவன் மறுபுறமும் தலையணை வைத்து விட்டு அங்கிருந்து எழுந்து ஜன்னல் ஓரம் வந்தான்.

அவள் தாத்தாவைப் பற்றி விசாரிக்க அவர் சாப்பிட்டு படுத்துவிட்டதைச் சொல்ல, "பாவம் இந்த வயசுல அவருக்கு இவ்வளவு சிரமம்" என்றான் அவன்.

"ஹ்ம்ம்"

"ஏன் சரு உனக்கு இதுல விருப்பமே இல்லையா? அவரைப் பார்க்கப்போற ஆவல் கொஞ்சம் கூட உனக்கு இல்லையா?"

கொஞ்சம் மௌனம். அவள் முகம் மாறுவதைக் கண்டு,"சாரி உன்னை கஷ்ட படுத்தறேனா?"

"ச்சே சே. சாரி எல்லாம் வேண்டாம். எனக்கு மூணு வயசு இருக்கும். எங்க வீட்டு பக்கத்து அக்கா அவங்க அப்பா கூட விளையாடுனதைப் பார்த்து என் அம்மா கிட்ட "என் அப்பா எங்கம்மானு?" முதன்முதலாக் கேட்டேன்.நாலு வயசுல ஸ்கூல் அட்மிசன் போடும் போதுதான் என் அப்பா பேரே எனக்குத் தெரியும். எட்டு வயசுல நான் ஸ்கூல்ல பர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கும் போது ரெண்டாவது முறை அவரைக் கேட்டேன். அதற்கப்புறோம் நிறைய ஸ்கூல் மாறி போற எடத்துல எங்கயாவது,"உங்க அப்பா என்ன பண்றார்? எங்க ?" இப்படி நிறையக் கேள்வி. ஒரு விழா, நல்லது கெட்டது எங்கேயும் என் அம்மா நிம்மதியா போயிட்டு வர முடியாது. என் திரட்டி, என் பேட்மிட்டன் டிஸ்ட்ரிக்ட், ஜோனல், ஸ்டேட் மேட்ச் வின் பண்ணும் போது இப்படி நிறைய இடங்கள்ல பதில் சொல்லத் தெரியாம, முடியாம... பதிமூணு வயது வரை அவரை எப்போடா பார்ப்போம் பேசுவோம்னு தோணும். அதற்கப்புறோம் அந்த ஆள் மட்டும் என் கண்ல மாட்டுனான் அன்னைக்கு இருக்கு அந்த ஆளுக்குனு நெனச்சேன். டேடிஸ் லிட்டில் பிரின்சஸ் போஸ்ட் பார்க்கும் போதெல்லாம் மனசு என்னமோ செய்யும். அம்மா இதனால் எவ்வளவு அவமானம், அசிங்கம், கஷ்டப் பட்டிருக்காங்கனு கண்கூட பார்த்திருக்கேன்"

"துவாரா ஒன்னு சொல்லட்டா?" என்றதும் அவன் தலையசைத்தான்.

"எல்லாப் பொண்ணுக்கும் அவங்க அப்பா கூட ஒரு சேஃப்ட்டி செகுருட்டியா பீல் பண்ணுவாங்க இல்ல? ஆனா நான் அந்த மாதிரி ஒரு செகுரூட்டியை முதல முழுசா அனுபவிச்சது உன்கிட்ட தான். கண்களை மூடியவள் இப்போ நெனச்சாலும் அந்த பீல் அப்படியே இருக்கு"

கொஞ்சம் அமைதி காத்தவன்,"அப்போ நாளைக்கு உன் அப்பாவை ஒரு வழி பண்ணப் போற ரைட்?"

"இல்ல. மெட்சூரிட்டினா என்னனு புரிஞ்சிடுச்சி. அந்த ஆளை பார்த்து "சீ போனு" ஒரு பார்வை அதுவே அவரை நான் செருப்பால அடிச்சதுக்கு சமம்"

"செம்ம சரித்திரா. உன் அட்டிடூட்! என்ன சொல்ல?" என்று உதடு சுளித்தான்.

"இதுக்கு நீங்களும் ஒரு காரணம். நமக்குப் பிடிக்காதவங்களைப் பார்த்தும் ரியாக்ட் பண்ணாம இருக்க அதிகப்படியான சகிப்புத் தன்மை வேண்டும். அது எனக்கில்லை..."

"அப்படியா?"

"ஆமா" சிறிது இடைவெளி விட்டு,"அப்போ உங்க அப்பாவை உங்களுக்குப் பிடிக்கும் ரைட்?"

அவன் திணற,

"இல்லைனா எப்படி அவர்கூட இத்தனை வருஷம் பேசாம இருக்க முடியும்? ஐ மீன் சகிச்சிட்டு..."

"அது? எல்லாத்துலயும் ஓர் எக்ஸ்செப்சன் இருக்கில்ல?"

"ரொம்ப சமாளிக்க வேண்டாம். போய்த் தூங்குங்க. குட் நைட்"

"சரு என்னை எப்படி உன்னால நம்ப முடியுது?"

"ஏன்னா எது நீங்கன்னு இவ்வளவு நாள் நீங்க நெனச்சிட்டு இருக்கீங்களோ அதில்லை நீங்க. உண்மையிலே நீங்க எதெல்லாம் இல்லைனு நெனைக்கறீங்களோ அது தான் நீங்க. நீங்க வேணுனா உங்களை உணராம இருக்கலாம், ஆனா உங்களைச் சுற்றி இருக்க எல்லோரும் உங்களை நல்லா உணர்ந்துட்டாங்க. சோ உங்களை நீங்க நம்பறீங்களோ இல்லையோ உங்களை உண்மையா புரிந்த எல்லோரும் உங்களை ரொம்ப நம்பறாங்க. உங்க அப்பா, கீர்த்தி, விவான், நித்யா, மிரு, நான் ஏன் இளா உட்பட"

அவன் 'ங்கே' என்று விழிக்க,

"நான் சொன்னது உங்களுக்குப் புரியல இல்ல? பட் நோ ப்ராப்ளேம். ஏன்னா உங்களைச் சுற்றி இருக்க எங்க எல்லோருக்கும் நல்லாப் புரியும். போய்த் தூங்கற வழியைப் பாருங்க. குட் நைட்" என்று அழைப்பை துண்டித்தாள்.

அவனோ குழப்பமாக வந்து படுத்தான். இளா தூக்கத்திலே "யூரின் யூரின்" என்று சொல்ல அவளைத் தூக்கி ரெஸ்ட் ரூம் சென்றான். கண்களைத் திறக்காமலே இருந்தவள் மீண்டும் அப்படியே உறங்கியபடியே வந்தாள். இளாவின் இந்த குணத்தைப் பற்றி நிறைய முறை நித்யா லலிதா அம்மாவிடம் கேள்விப்பட்டுள்ளான். இன்று தான் நேரில் பார்க்கிறான்.

அவளை தட்டிக்கொடுத்தவாறே தூங்கிப் போனான்.

......................................................................................

"சொல்லு சொல்லு ப்ளீஸ் விவான். நீ என்னை எங்க எப்ப பார்த்த?"

ஏனோ நித்யா இப்படி ஆவல் மிகுதியில் கெஞ்சிக் கேட்க அவன் மனமோ அவளின் இந்த திடீர் பரிணாமத்தை ரசிக்கத் தொடங்கியது. "சொல்லுப்பா ப்ளீஸ்..."

"நாங்க எங்க இனாகுரேஷன் (கல்லூரி துவக்க விழா) முடிச்சிட்டு நேரா வெளிய வந்தேன். உனக்கு ஞாபகமிருக்கும்னு நெனைக்கிறேன் நம்ம கேம்பஸ்ல எந்த டிகிரி இனாகுரேஷனாலும் அது மெடிக்கல் காலேஜ் ஆடிட்டோரியத்துல தான் நடக்கும். அன்னைக்கு இன்ஜினியரிங் காலேஜ் இனாகுரேஷன் கூட அங்க தான் நடந்தது. நான் என் அப்பா அம்மாவோட அங்க வந்தேன். பங்க்சன் முடிஞ்சதும் வெளிய வர அப்பா போன் பேலன்ஸ் தீர்ந்திடுச்சி. டாப் அப் பண்ண அங்க மெடிக்கல் காலேஜ் கேன்டீன் வந்தேன். அப்போ அங்க வந்த நான் டாப் அப் பண்ணிட்டு ஜூஸ் வாங்கிட்டு வரப்போ ஒரு பொண்ணை ரெண்டு மூணு பொண்ணுங்க சேர்ந்து துரத்திட்டு வந்தாங்க. அது ப்ரேன்ட்லியான விளையாட்டுனு எனக்கு அவங்க மூஞ்சைப் பார்த்ததுமே தெரிந்தது. என்னடான்னு பார்த்தா அந்தப் பொண்ணுக்கு பர்த் டே போல. அதுக்கு கேக் வெட்டி அவ மூஞ்சில தடவ வந்தாங்க. என்ன நாள் ஞாபகம் வந்ததா?" என்றான் விவான் புன்னகையோடு.

"ஹே நித்யா நில்லுடி நீ இன்னைக்கு எஸ் ஆகவே முடியாது என்று அவர்கள் அழைக்க அவளோ எஸ் ஆவதில் குறியாக இருந்தாள். நீ சொன்னா நம்ப மாட்ட இளையராஜா ரஹ்மான் ரெண்டு பேரும் ஒரேநேரத்தில் வயலின் வாசிச்ச மாதிரி இருந்தது..."

"அப்புறோம்?"

"அப்புறோம் என்ன? என் அப்பாவே என்னைத் தேடி வந்தவர் என் முதுகுலையே ஒன்ன வெச்சி, முதல் நாளேவானு? கிண்டல் பண்ணார்"

"அப்பா ஏதும் சொல்லலையா?"

"இல்ல. ஆனா என்னனு சொல்ல சில பேரைப் பார்த்த மாத்திரமே ஒரு ஃபீல், ஒரு கனெக்சன் வரும் தெரியுமா? அப்படி இருந்தது. அதே நேரம் வழக்கமா அந்த ஏஜ்ல வர ஈர்ப்புனு சாதரணமா விட்டுட்டேன். பட் இது வெறும் ஈர்ப்பில்லை உன்ன ஜஸ்ட் லைக் தட்னு கடந்திட முடியாதுனு எனக்கு அப்போ தெரியில நித்யா"

"அப்புறோம் தான் ஹாஸ்ப்பிடல என்னைப் பார்த்தியா?"

"இல்ல"

"இல்லையா?"

"உன்ன நான் ஹாஸ்பிடல்ல பார்த்தது என்னோட நாலாவது மீட்டிங்"

"நாலாவதா?"

"அப்புறோம் காலேஜ் ஆரமித்தது. ஜாலி கலகலப்புனு அப்படியே முதல் செம் போனது. செகண்ட் செம் ஸ்டார்டிங்க்ல நம்ம காலேஜ் கேம்பஸ் வெளிய ஒரு பைக் ஆக்சிடென்ட் அதாவது பஸ் பைக்ல ஏறி ரெண்டு சீனியர் இறந்தாங்க தெரியுமா? உடனே நம்ம கேம்பஸ் ஹாஸ்பிடல்ல தான் கொண்டு வந்தாங்க. அவர் எங்க டிபார்ட்மென்ட் சீனியர். ஷெட்டில் பிளேயர் கூட. எனக்கும் துவாராவுக்கும் நல்ல பழக்கம். அவரைப் பார்க்க ஹாஸ்பிடல் வந்தோம்"

"அடப்பாவி! சொல்லுடா"

"அப்போ ஒரு லேடி அட்மிட் ஆனாங்க போல. அவங்கப் பொண்ணு ரெண்டு வயசுக்கு உள்ள தான் இருக்கும். அந்த நிசப்தமான ஹாஸ்பிடல்ல செம அழுகை. அந்தப் பொண்ணோட பாட்டியால சமாதானம் செய்ய முடியல. அப்போ அந்தப் பக்கம் கேசுவலா போன ஒரு பொண்ணு அந்த குழந்தையை வாங்கி உடனே சமாதானம் செஞ்சா" என்றதும் ஏனோ முதல் சம்பவம் அவளுக்கு நினைவில்லை என்றாலும் இது அவளுக்கு நினைவு இருந்தது."அப்போ அங்க தான் இருந்தியா?"

"பிளாக் காமெடி கேள்வி பட்டிருக்கியா? சில ட்ராஜிக் இன்சிடென்ட்ல லயிட் மொமெண்ட்ஸ் நடக்குமே? அப்படித் தான் அந்த டே எனக்கு. ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆனவரைப் பார்க்க வந்த போது திரும்ப பார்க்க நெனச்சப் பொண்ணைப் பார்த்தா எப்படி இருக்கும்?"

"பிராட் பையா!"

"கையில குழந்தையோட உன்னைப் பார்க்கும் போது எனக்குத் தோணுனதைச் சொல்லவா?"

நித்யா ஆவலாய்ப் பார்க்க,

"என் குழந்தைக்கு இந்தப் பொண்ணு அம்மாவா இருந்தா எப்படி இருக்கும்? நெனச்சேன்"

அவள் முறைக்க,

"சீரியசுலி எனக்கு ஏன் அப்படி தோணுனதுனு தெரியில. ஆனா ஒன்னு அந்த மாதிரி ஒரு தாட் என் லைப்லேயே ஒரே தடவை தான் வந்தது. அதும் அன்னைக்கு தான்"

"மூணாவது?"

"ரோட்டரி க்ளப்ல இருந்து நம்ம காலேஜ்ல பிளட் கேம்ப் நடந்தது. நான் ரேர் பிளட் குரூப்ங்கறதால அந்த மாதிரி கேம்ப்ல எப்பயும் தருவேன். ஸ்கூல்ல இருந்து பழக்கம். அப்போ அந்த கேம்ப்ல நீ வாலண்டீரா (தன்னார்வலர்) இருந்த. பிளட் எடுக்க இன்ஜெக்சன் போட்டுட்டு இருந்த"

"நானா உனக்குப் போட்டேன்?"

"இல்ல. நீ இல்ல. பட் நீயா இருந்தா நல்லா இருக்கும்னு எனக்குத் தோணுச்சு. அப்புறோம் தான் ரொம்ப நாள் உன்னைத் தேடி வந்தா உன்னைப் பார்க்கவே முடியல. பட் அன்னைக்கு ஜிட்டன் ரூபத்துல எனக்கு அடிச்சது லக். உன்ன இதுவரை தூரத்துல பார்த்த எனக்கு கிட்ட தனியாப் பார்க்க சான்ஸ் கிடைச்சது. இந்த சான்ஸ எப்படியாவது யூஸ் பண்ண நெனச்சேன்.அப்போ உன் போன் என் கைல வந்தது. உன் பர்த் டேனு தெரியவும் ஒரு பர்த் டேல உன்னைப் பார்த்தேன். அடுத்த பர்த் டேல தான் உன்ன க்ளோஸ் அப்ல பார்த்தேனா சோ உடனே அந்த வாய்ப்பை யூஸ் பண்ணிட்டேன். ஏன்னா அந்த ஒரு வருஷத்துல எந்த லவ் சாங் கேட்டாலும் யார் லவ் ஸ்டோரி கேட்டாலும் எனக்கு நீ தான் ஞாபகம் வருவ அப் கோர்ஸ் இப்பயும்..."

"பட் எப்படி லவ்?"

"உலகத்துல எத்தனை பொண்ணு இருந்தும் நான் ஏன் நித்யாவை லவ் பண்ணேனு எனக்குத் தெரியல..."

"டேய்? இதை ஏன் என்கிட்ட சொல்லல?"

"இதை நீ நம்புவியான்னு எனக்கு டவுட். உன்னைப் பார்த்தது எல்லாம் தற்செயல் தான் பட் ஐ க்ராபட் தி ஆப்பர்சூனிட்டி (வாய்ப்பை வசப்படுத்திக்கொண்டேன்)"

"ஆனா என்னால இதை நம்பவே முடியல?"

"பார்த்தியா? சொன்னேனில்லை. பட் ஒன் திங் இளா பிறந்ததும் நீ அவளை உன் கையில வெச்சியிருந்தப் பாரு, அப்போ அந்த மொமெண்ட் என் லைப்ல செம ஃபீல். ட்ரீம் கம் ட்ரு மொமெண்ட். பாரு கையெல்லாம் சிலிர்த்திடுச்சி" என்று அவன் கையைக் காட்டினான் விவான்.

"எப்படி விவான்?"

"தெரியில" என்னும் போது அவர்கள் நடந்தே அந்த ரிஸார்ட்டின் மறுபக்கம் வந்திருக்க தூரம் அனேஷியா தனது அறையிலிருந்து சாளரம் வழியே அவர்களைப் பார்த்தாள். ஒரு ஏக்கம், கவலை அவளிடம் அப்பட்டமாகத் தெரிந்தது.

களைப்பின் காரணமாகவும் இன்றைய வேலையின் காரணமாகவும் அனேஷியாவின் குழுவினர் எல்லோரும் தூங்கிவிட அனேஷியா மட்டும் தூங்காமல் தவித்தாள். இறுதி நாட்களில் அவள் அன்னை அவளிடம் கேட்டது ஒன்று தான். அதை எப்பாடு பட்டாவது நிறைவேற்ற அவளோ துடியாகத் துடித்துக்கொண்டிருக்கிறாள். சில சமயம் நாம் செய்த சில செயல்களை எண்ணி நாமே அசிங்கப்படுவோம் தானே? நம் மனசாட்சியே நம்மை மன்னிக்க யோசிக்கும். அந்த மாதிரியான சூழலில் எப்படி சம்மந்தப்பட்ட நபரிடம் நாம் சென்று மன்னிப்பைக் கேட்க முடியும்? மன்னிப்பை மட்டும் வேண்டினால் கூடப் பரவாயில்லையே? இன்னொன்றும் வேண்டுமே?

ஆம் அவள் தேடி வந்த நபர் துவாரகேஷ் தான். அவள் வேண்டும் மன்னிப்பு துவாரகேஷிடம் இருந்து தான். (அநேக நபர்களுக்கு இது தெரிந்திருக்கும். நீங்கள் யூகித்திருப்பீர்கள். அப்படி யாரேனும் இன்னும் தெரியாமல் இருந்தால் ப்ளீஸ் கமெண்ட் செய்யவும். நான் அவர்களை அறிய விரும்புகிறேன்) துவாரகேஷ் வாழ்வில் வந்த அந்த 'அவள்' அனேஷியா தான். துவாராவிற்கும் அனேஷியாவுக்கும் என்ன சம்மந்தம்? 'அந்த' விஷயம் என்ன? எல்லாம் பிறகொரு எபியில்.

அவள் தவிப்பின் காரணம் இது தான். துவாராவை கல்யாணம் செய்ய வேண்டியே காத்திருக்கிறாள். அதற்குத் தான் இந்தப் பயணம். எனக்குப் பிடித்த ஒரு பாடல் வரி,தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை தேடிப் பார்ப்பதென்று உயிர் தேடல் துவங்கியதே... அது போலொரு தேடல் தான் அனேஷியாவுக்கு. வெளிப்படையாக அவளது இந்தப் பயணத்தின் நோக்கம் ஒரு ப்ராஜெக்ட் ஹெட்டாக இங்கே மேற்கொண்ட ஆபிஸியல் பயணமாகத் தெரிந்தாலும், இது முற்றிலும் ஓர் பெர்சனல் பயணம். வாழ்வில் எப்போதும் எந்தவொரு விஷயமும் நாம் தேடிச் சென்றால் வசப்படாது. அதுவே அதை விட்டு விலகிச் சென்றால் அது நம்மைத் தேடி வரும். இது துவாராவிற்கும் பொருந்தும் .சில சமயங்களில் நம்மைத் தேடி வந்த வாய்ப்புகளை நாம் 'ஜஸ்ட் லைக் தட்' உதறி உதாசீனப் படுத்திவிடுவோம். ஆனால் அதன் மதிப்புணர்ந்து நாம் செல்கையில் அது நம்மை உதாசீனம் செய்யும். இது வேண்டுமானால் அனேஷியாவுக்குப் பொருந்தும்.

ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மூன்று நாட்கள் ரயில் பயணம், இன்றைய ரிசார்ட் ஓய்வு நேரம் வரை கிட்டத்தட்ட எழுவது மணிநேரம் அவனோடு ஒரு கண்ணாமூச்சி ஆடிவிட்டாள். இன்னும் இருபத்தி நான்கு மணிநேரம் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தொடர வேண்டும். நாளைய இரவு மிக நீண்ட இரவாகப் போகிறது. மீதியை அந்த நீண்ட இரவில் பார்ப்போம்.

***************

கீர்த்திக்கு அங்கே மனமெல்லாம் திக் திக்கென்று அடித்துக்கொண்டு இருந்தது. அவளுக்கு விவான் மீது அதிக பாசம் உண்டு தான். ஆனால் கடந்த இருவது நாட்களாய் விவான் மீது அதிக கோவத்தில் இருக்கிறாள். காரணம் அனேஷியா தான். எதேர்சையாக அவளுக்கு இதைப்பற்றித் தெரிய உடனே சரித்திராவைக் கிளம்பச் சொன்னாள். அவள் செய்த ராஜ தந்திரங்களின் வெளிப்பாடு தான் சரித்திரா துவாரா மீட்டிங். என்ன தான் கதை எழுதுபவர் நாமாக இருந்தாலும் திடீரென்று கதையில் நடக்கும் சில டிவிஸ்ட்களை நாமே எதிர்பார்த்திருக்க மாட்டோம். அந்த வகையில் இந்த டூர் ப்ரோக்ராம்மரான விவானுக்கு அப்படியொரு ட்விஸ்ட் தான் கொடுத்தாள் கீர்த்தி.

முதலில் துவாராவின் கல்யாணம் சம்மந்தமாகப் பேசவே கீர்த்தி இட்ட கட்டளையில் விவானால் உருவானது இந்தப் பயணம். ஆனால் இடையில் அனேஷியாவின் வலியுறுத்தலில் சில மாற்றங்கள் நிகழ அதை அறிந்த கீர்த்தி வைத்த டிவிஸ்ட் தான் சரித்திரா. அனேஷியா அண்ட் கோவை விவான் அன்று ரயில் நிலையத்தில் எதிர்பார்க்கவில்லை. அன்று இரவு சென்னை எக்மோர் ரயில்நிலையத்தில் அங்கே சாப்பிடும் போது விவான் பாதியில் கிளம்பக் காரணம் அனேஷியாவும் அதே ரயிலில் வருவது தான். (எபிசொட் மூன்றை ஒருமுறை பார்க்கவும்) அதன் பின் அந்த ரயிலில் இருக்கைகளை ஒதுக்குவதில் இருந்து எல்லாம் மாறியது. துவாரா இருக்கும் போது அவனை விட்டு மற்றவர்களுடன் கூபே ஷேர் செய்ய விவான் ஒன்றும் துவாராவுக்கு அந்நியம் இல்லை. இருந்தும் துவாராவுக்கும் அனேஷியாவுக்கும் ஒரு பஃப்ர் (buffer - இடையகம். இரண்டு வேறுபட்ட இடத்திற்கு நடுவில் இருப்பது) ஜோன் உருவாக்கவே துவாராவைத் தனியே அனுப்பினான். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல் அன்று துவாரா கீர்த்தியிடம் பேசியது உண்மையில் அவன் கோவத்தைக் கிளப்ப அவனை அடித்தும் விட்டான். கெட்டதிலும் ஒரு நல்லதாக துவாராவின் அந்த சென்சிடிவ்நெஸ் அவனுக்கு உதவியது.

விவானுக்கு தனியே ட்ரெயினில் அழைத்த அந்த நபர் அனேஷியா தான். இடையில் கீர்த்தி பயந்தது அனேஷியாவைப் பற்றித் தான். பயணத்தில் அனேஷியா பேசியது திவேஷிடம் தான்.

விவான் ஏன் அதிக பதற்றமாக இருக்கிறான்? முதல் காரணம், அனேஷியாவும் துவாராவும் அசாம் சென்று சேரும் வரை மீட் செய்யக்கூடாது. இரண்டாவது காரணம் அவனால் துவாரா பக்கமும் பேச முடியாமல் அனேஷியா பக்கமும் நிற்க முடியாமல் கீர்த்தி பேச்சையும் கேட்க முடியாமல் சொல்லப்போனால் ஒரு ட்ரிபிள் கேம் ஆடிக்கொண்டிருப்பதாய் அவனுக்குள்ளே ஒரு பயம், குற்றயுணர்ச்சி. இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்களில் யார் தோற்றாலும் அவனுக்கு வலிக்கும். கீர்த்தி அவன் பாசத்துக்குரியவள். அனேஷியா, துவாரா இருவரும் அவன் நட்புக்குரியவர்கள். சொல்லப் போனால் துவாராவிற்கு முன்பே அவனுக்கு அனேஷியாவைத் தெரியும். ஆனால் துவாரா அவன் பெஸ்டி. ஏன் திவேஸும் அவன் நெருங்கிய நண்பன் தான். விவான் எந்தப் பக்கத்திற்கும் சாதகமாக நிற்கவில்லை. எந்தப் பக்கத்துக்கும் பாதகம் வராமல் இருக்கத் தான் முயற்சிக்கிறான்.

அனேஷியா துவாரா இருவரும் சந்திக்கும் வரை அவன் தெளிய மாட்டான். அந்த பதற்றம் குறையாது. நாடகம் முடியும் நேரம் வந்துவிட்டது. அவரவர் தரித்த வேடங்களை கலைக்க வேண்டும். அது எவ்வித களேபரங்களையும் உண்டு செய்யாமல் இருக்க வேண்டும். எத்தரப்பிற்கும் பெரிய சேதாரம் இல்லை என்று அறியும் வரை அவன் பதற்றம் தொடரும். ஆனால் விவான் ஒன்றை அறியவில்லை, எப்போதெல்லாம் போரில் ஒருவர் ஜெயிக்கிறாரோ நிச்சயம் மற்றொருவர் தோற்கத் தான் வேண்டும். ஸ்கூலில் துவாரா அனேஷியாவைத் தேடி அவள் பக்கம் சென்றான். அவளோ அவனை துளியும் மதிக்கவில்லை. இப்போதோ அனேஷியா துவாராவைத் தேடி அசாம் வரை வந்திருக்கிறாள். ஆனால் அவனோ சரித்திராவை விரும்புகிறான். ஒருவேளை சரித்திரா அவன் வாழ்வில் வராமல் இருந்திருந்தாலும் அனேஷியாவை அவன் ஏற்றிருப்பானா என்பது ஐயமே. இடையில் துவாராவின் பழக்க வழக்கங்களில் பெரிய மாற்றம். எவருடனும் அண்ட மறுக்கிறான். உண்மையில் இப்போதெல்லாம் அவனோடு நெருங்குவது குழந்தைகள் மட்டுமே. ஒன்று கீர்த்தியின் பையன் இல்லை இளவேனில்.

******************

அதன் பின் விவானையே கண் கொட்டாமல் பார்த்தாள் நித்யா. ஏனோ தங்களின் காதல் கதையில் இப்படி ஒரு அன்டோல்ட் ஸ்டோரி இருக்குமென நித்யா துளியும் எதிர்பார்க்கவில்லை. ஆனால்,"அதெப்படி பார்த்ததும் ப்ரபோஸ் பண்ண?" என்று பலமுறை விவானிடம் கேட்டிருக்கிறாள். அவனோ எதையும் பேசாமல் சிரித்தோ இல்லை அவளை மேலும் கேள்விகள் கேட்க விடாமல் அணைத்தோ சமாளித்து விடுவான். அதன் பின் இந்தக் கேள்வி கேட்பதையே விட்டு விட்டாள் அவள்.

"சரி ரூம் போலாம் வா" என்றாள்.

"ஏன் இன்னும் கொஞ்சம் நடக்கலாமே?"

"நான் சம்மதிச்சா என் கலோரிஸ் பர்ன் பண்ணி காட்டுறேன்னு யாரோ சொன்னாங்க. ஒரு வேளை சின்ன பையனுக்கு அதெல்லாம் தெரியாதோ?" என்று கண்களை உருட்ட,

விவான் அவளைத் துரத்த ஏனோ அவன் கையில் சிக்காமல் அங்கிருந்து துள்ளி ஓடினாள் நித்யா. அவள் முன்னே ஓட பின்னால் வந்த விவானைப் பார்த்தவாறு ஜெஸ்ஸியும் செபாவும் கிண்டல் செய்தனர்.

அவள் அறையில் நுழைந்ததும் பின்னே வந்து தாளிட்டவன்," எங்க இப்போ சொல்லு பார்ப்போம்? நான் வெறும் வாய்ச்சொல் வீரன் இல்ல" என்றவன் செயலில் தன் திறமையைக் காட்டத் துவங்கினான்.

********************

மறுநாள் போட்ட திட்டத்தின் படி எல்லோரும் காலையே ரெடி ஆகிக்கொண்டு இருந்தனர். விழித்த இளாவை மிருவுடன் ஒப்படைத்து ரெடி செய்யச் சொன்னான் துவாரா. இளங்கோ-பார்வதி, யாழ்-துஷி, ஜிட்டு-இதித்ரி என்று அனைவரும் ஆஜரானார்கள். செபா-ஜெஸ்ஸி வர ஏனோ அவர்களை வார எண்ணி,"என்ன மச்சான் ஆட்டுக்கால் சூப்பு வேணுமா?" என்றான் இளங்கோ. அதைக் கேட்டதும் ஜெஸ்ஸியின் முகம் நாணத்தில் சிவக்க பின்னாடியே செபா அவர்களிடம் வாயை மூடுமாறு சிக்னல் செய்தான்.

"ஏன் மச்சான் வெட்கப் படுற? சில்" என்று அவன் காதைக் கடித்தான் இளங்கோ. "ஆனாலும் இளங்கோ உனக்கு இவ்வளவு இருக்கக் கூடாது. நீ செபாவை மட்டும் கிண்டல் பண்ற, சத்தமே இல்லாம சம்பவம் செஞ்ச எங்க தல ஜிட்டுவைக் கண்டுக்காம இருக்கியே?" என்றான் ஜிட்டுவை வெறுப்பேத்தினான் துஷி.

துஷியை கோவமாக முறைத்தான் ஜிட்டன்.

"ஏன்டா அவனை அப்படிப் பார்க்குற?" என்ற படி அங்கே வந்தான் ஹேமா.

"டேய் ஜிட்டு பார்க்கலடா அவன் முறைக்கிறான்டா" என்றான் இளங்கோ

"அச்சச்சோ ஜிட்டு இப்போ கோவத்துல பல்கலைக் கடிப்பான் பாரேன். கையை முறுக்குவான் பாரேன்" என்றான் தியா.

"அப்புறோம்?" என்ற ஹேமாவுக்கு,

"அவன் குள்ளமா இருக்கறதுனால யாரையும் அடிக்க முடியலைன்னு சொல்லிட்டு அவன் தலையையே அவன் குட்டிப்பான் பாரேன்..." என்று தியா சொல்ல கொலைவெறியில் எழுந்த ஜிட்டன் அவனை வெறிக்கொண்டு துரத்த மற்ற அனைவரும் அதை ஆரவாரமிட்டு ரசித்தனர்.

மிருவிடன் ரெடி ஆனா இளா அப்போது தான் அங்கே வந்தாள். பாருவும் மிருவும் அவளுக்கு சாப்பாடு எடுத்து ஊட்டினார்கள். அனைவரும் கூடிவிட்டாலும் இன்னும் வராத நித்யா விவானைப் பற்றிக் கேட்க அப்போது தான் அவர்களும் வெளியே வந்தனர்.

"மச்சான் ராத்திரி ரெண்டு மணிக்கு ஒரு காதல் ஜோடிங்க இந்த ரிஸார்ட்டை வலம் வந்தது. உங்களுக்குத் தெரியுமா?" என்றான் விவாவை வாரினான் செபா.

"அடப்பாவி அப்போ அவ்வளவு கஷ்டப்பட்டு நேற்று உனக்காகப் பண்ண ஏற்பாடெல்லாம் வேஸ்ட்டா?" என்ற படி வந்தான் விவான்.

"சபாஷ் சரியான கேள்வி. இதை நான் ஆமோதிக்கிறேன் மச்சான்" என்றான் ஹேமா.

இப்படியே ஒருவர் மற்றவர்களை கலாய்த்தபடிச் சாப்பிடவும் அப்போது திவேஷ் அங்கே வரவும் சரியாக இருந்தது. (பயணங்கள் முடிவதில்லை...)
 
துவா, அனு வாழ்வில் நடந்ததை 4 வரிகளில்
ஒரு டீஸர் போல சொல்லியிருக்கீங்க...
அவர்கள் சந்திப்புக்கு வெயிட்டீங்...

விவான் தான் central பாயிண்ட, , இந்த கதையில்
ஆனா, அது துவாவை சுற்றி வருகிறது...
கதையின் முடிவில், காயப்படப்போகும் நபர் அனு..?
 
இப்போவும் துவாராகிட்ட மன்னிப்பு கேட்கத்தானே அனு வந்திருக்கா? ?
விவான் நடு நிலைமையாக இருப்பது சூப்பர். ?
மத்தவங்க தலையில கொட்ட முடியாத அளவுக்கு உயரம் கம்மின்னாலும், தனக்கு தானே கொட்டிக்கிட்டாலும் எனக்கு ஜிட்டு தான் பிடிச்சிருக்கு. ??nice update.
 
அப்போ துவாரா வேண்டாம்னு சொன்னாதான் கலெக்டர்க்கு ஜோடி.அந்த ஜோடி அனேசியா.இதைத்தானே கலெக்டர் பத்தி சொல்லும்போது சொன்னீங்க :unsure: :unsure: :unsure:
 
Again little bit confusing.....வவான் school friend Anosuya , வேறே மற்றவர்க்கு தெரியல...... Interesting
சொல்றேன் கொஞ்சம் பொறுங்க. நன்றி
 
துவா, அனு வாழ்வில் நடந்ததை 4 வரிகளில்
ஒரு டீஸர் போல சொல்லியிருக்கீங்க...
அவர்கள் சந்திப்புக்கு வெயிட்டீங்...

விவான் தான் central பாயிண்ட, , இந்த கதையில்
ஆனா, அது துவாவை சுற்றி வருகிறது...
கதையின் முடிவில், காயப்படப்போகும் நபர் அனு..?
சொல்றேன். கரெக்ட் துவா ஹீரோ ஆனா விவான் தான் சென்ட்ரல் கேரக்டர். நன்றி?�
 
Top