Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-53

Advertisement

praveenraj

Well-known member
Member
"நாங்க எல்லோரும், அதாவது நான், அனி, விவா, துஷி, திவே எல்லோரும் ஃபர்ஸ்ட் ஸ்டேண்டர்டுல இருந்து ஒரே ஸ்கூல் கேம்பஸ். உங்களுக்கே தெரியும் எங்க எல்லோருடைய பேரெண்ட்சும் கொஞ்சம் வசதியானவங்க. சோ எங்களுக்கு நல்ல எதிர்காலம் வேண்டும்னு எல்லோரும் ஊட்டில இருக்க புகழ்பெற்ற #$%^&* கான்வென்ட்ல அதும் ரெசிடென்ஷியல் ஸ்கூல்ல சேர்த்து விட்டுட்டாங்க. நாங்க எல்லோரும் ஒவ்வொரு ஊரைச் சேர்ந்தவங்க. விவான் மட்டும் தான் ஊட்டியைச் சேர்ந்தவன். இருந்தும் அது ரெசிடென்ஷியல் ஸ்கூல் அப்படிங்கறதுனால கண்டிப்பா எல்லோரும் ஹாஸ்டல்ல தான் இருக்கனும். ஃபர்ஸ்ட் டே எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு எங்களை எல்லாம் ஒருநாள் முன்னாடியே ஹாஸ்டல்ல விட்டுட்டு பேரெண்ட்ஸ் கிளம்பிட்டாங்க. நானும் துஷியும் மட்டும் பிறந்ததுல இருந்தே தெரிஞ்சவங்க.எங்க ரெண்டு குடும்பமும் பிசினெஸ் பார்ட்னர்ஸ் பேமிலி ஃப்ரெண்ட்ஸ்.இவன் அப்போல்லாம் எதுக்கெடுத்தாலும் சிணுங்குவான். ஒரே அழுகை. நான் எவ்வளவு சொல்லியும் சமாதானம் ஆகல அப்போ தேம்ப ஆரமிச்சுட்டான். அந்த சமயத்துல இவன் முகத்துக்கு நேரா கை நிறைய சாக்லேட்ஸ் ஓட ஒருத்தன் நின்னான். அந்த சாக்லேட்ஸ் எல்லாம் பார்த்ததும் உடனே துஷி அழுகையை நிறுத்திட்டான்."டேக் இட். எடுத்துக்கோங்க" என்ற குரல் கேட்டு நிமிர்ந்தா அந்தப் பையன் தான் விவான். யூ நோ வாட் இப்போ இளா எப்படி இருக்காளோ டிட்டோ அப்படியே இருப்பான். அதான் நேத்து உமாநந்தா (இரவு பொழுது புலர்ந்தது) தீவுல இளாவை நான் கையில வெச்சியிருக்கும் போது நாங்க எல்லோரும் பேசிக்கிட்டோம். என்ன அவன் பையன் இவ பொண்ணு. மத்தபடி பேஸ் கட், கண், மூக்கு எல்லாம் விவானே."உனக்கு எதாவது வேணும்னா சொல்லு என் அப்பா அம்மா என்னைப் பார்க்க வருவாங்க. அப்போ வாங்கிட்டு வரச்சொல்றேன்" என்றான் விவான். ஹ்ம்ம் அங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட். பேரெண்ட்ஸ் கூட டூ மண்ந்ஸ் ஒன்ஸ் தான் பார்க்க முடியும். ஆனா விவானோட அப்பாக்கு இந்த ஸ்கூல் மேனேஜ்மேண்ட் ரொம்ப க்ளோஸ். அவன் பேரண்ட்ஸ் மட்டும் மந்திலி ஒன்ஸ் இல்லை வீக்லி கூட வருவாங்க. உண்மையிலே எங்க மூணு பேரோட நட்பு அங்க தான் ஆரமிச்சது. யாரு? என்ன பேருனு? கூடத் தெரியாம உண்டான எங்க ஃப்ரண்ட் தான் விவான்.

"நல்லா இருக்கா ? எல்லாம் எங்க வீட்டுலயே செஞ்சது "என்றான் விவான், அந்த மழலையில்.

"சூப்பரா இருக்கு" என்றாள் யாழ். "என்னது எல்லாம் வீட்டுலையே செஞ்சதா அப்போ உன் வீடு புல்லா சாக்லேட்ஸ் தான் இருக்குமா?" என்று இன்னும் ஆவலாகக் கேட்டான் துஷி.

"என் வீட்டுல தான் சாக்லேட் செய்வாங்க" என்றதும்,"அப்போ என்னை உன் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறியா?" என்றதும் வேகமாக தலையாட்டினான் விவான்.

"உன் பேரு என்ன?"

"துஷ்யந்த். நான் யாழினி
"என்று அவர்கள் அறிமுகம் செய்துகொள்ள பின்பு அறிமுகமானான் விவான்.

"அதுல இருந்து நாங்க ரெண்டு பேர் இப்போ மூணு பேர் கொண்ட கேங் ஆனோம். ஒன்னாவே ஸ்கூலுக்கு போய் ஒன்னா ஈவினிங் வந்து விளையாடி ஹோம் ஒர்க் பண்ணி அப்படியே ஒரு மாசம் போனதும் அவன் சொன்ன மாதிரியே அவன் பேரன்ட்ஸ் வந்தாங்க. அதே சமயம் எங்க க்ளாஸ்ல இருந்த மத்தவங்க தான் அனேஷியாவும் திவேஸும். ஆனா எங்களுக்குள்ள பெரிய அளவுக்கு ஃப்ரண்ட்ஷிப் எல்லாம் இல்ல அப்படியே நாட்கள் போச்சு"

"அப்போ துவாரா?" என்றாள் ஜெஸ்ஸி,

"அவன் அடுத்த வருஷம் தான் எங்க ஸ்கூல்ல சேர்ந்தான்.அவன் அம்மா இறந்ததும் தான் அவன் அங்க படிக்க பிடிக்காம அவனை இங்க சேர்த்தார் அவன் அப்பா"

"அப்பப்போ எங்க கேங்ல திவே வருவான். அனியும் அப்படித் தான் வருவா.பட் அவங்க எல்லாம் வேற கேங்ல தான் இருந்தாங்க. எங்க மூணு பேரோட ப்ரெண்ட்ஷிப்னால் எங்க பேரெண்ட்ஸ் ஃப்ரெண்ட்ஸ் ஆனாங்க. எதாவது வெகேஷன் வந்தா நாங்க ரெண்டு பேரும் விவான் வீட்டுக்குத் தான் போவோம்"

"இவன் கொண்டுவர சாக்லேட்ஸ் எல்லாம் நாங்க மூணு பேர் தான் சாப்பிடுவோம். எனக்கு சின்ன வயசுல இருந்தே டேன்ஸ் க்ளாஸ் மேல அதிக ஆர்வம். அங்க ஸ்கூல் கேம்பஸ்லயே எல்லாம் இருக்கும். பிடிச்சா போய் ஜாயின் பண்ணிக்கலாம். நான் டேன்ஸ் க்ளாஸ் போகும் போதெல்லாம் எனக்கு அங்க கிடைச்ச ஃப்ரெண்ட் தான் அனி. யா அனேஷியாவும் நல்ல ட்ரைன்ட் டேன்செர் தான். இன்பேக்ட் எங்க ஸ்கூல்ல எந்த பங்க்சன் என்றாலும் ஸ்டேஜில் டேன்ஸ் பெர்பார்மென்ஸ் இருக்கும். நாங்க ரெண்டு பேரும் தான் அதுல செய்வோம். நான் இல்லாத நேரத்துல எல்லாம் இவங்க ரெண்டு பேரும் தான் ஒன்னா இருப்பாங்க. சோ அவங்க அதுல நல்ல க்ளோஸ் ஆகிட்டாங்க. அதே போல் நானும் அனியும் ஒருத்தருக்கொருத்தர் காம்ப்ளிமெண்ட்ஸ் கொடுத்து நாங்க ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். எந்த க்ளஸும் இல்லாத அப்போ நாங்க நாலு பேரும் ஒன்னா சுத்துவோம். அப்போ அப்போ எங்க கூட வந்த திவேஷ் ரெண்டு மூணு கேங் சேர்ந்து எதுவும் அவனுக்கு செட் ஆகாம கடைசியா எங்க கூடவே சேர்ந்துட்டான்."

"இப்படியே போயிட்டு இருந்த எங்க கேங் அந்த வருஷம் சம்மர் (annuval) லீவ் முடிச்சு திரும்ப வந்து சேர்ந்துட்டோம். அப்போ தான் எங்க ஸ்கூல்ல நியூ அட்மிஷனா வந்து சேர்ந்தான் துவாரா. எங்களை மாதிரி அவன் பெரிய வசதியான குடும்பத்து பையனில்ல. அவன் யாரு கூடவும் பேசவே மாட்டான். நாங்களும் சரி வந்த புதுசுனு சொல்லி விட்டுட்டோம். சரியா சாப்பிட மாட்டான் எந்த விளையாட்டுலையும் சேர மாட்டான். எங்க கேங்குனு இல்ல எந்த கேங்குளையும் சேரவே மாட்டான். நாங்கல்லாம் ஓரளவுக்கு பெரிய பேமிலில இருந்து வந்ததால அவனை எங்ககூடச் சேர்த்துக்கவே மாட்டோம். எஸ் இன்னைக்கு யோசிச்சா நாங்க பண்ணது ரொம்ப பெரிய பாவம். ஆனா அன்னைக்கு எங்களுக்கு அது எல்லாம் தெரியல. அதுமில்லாம அடிக்கடி தனியா போய் அழுவான்."

"அவன் பேக்ல ஒரு போட்டோ இருக்கும். எப்பயும் அதை அவன் கையில வெச்சி பார்த்துட்டே இருப்பான். ஒரு நாள் நாங்க எல்லோரும் அப்படி அதுல என்ன தான் இருக்குனு பார்க்க அதை எடுத்து பார்த்துட்டு..." என்றவள் அதன் பின் பேச வார்த்தை வராமல் திவேஷைப் பார்த்தாள்."அந்த பேகை ஒளித்து வைத்துட்டோம். திரும்ப வந்தவன் அதைத் தேடி கிடைக்கலன்னு அழுதான். அப்போ தான் எங்க தப்பு புரிஞ்சு எடுத்துக் கொடுத்தோம். ஸ்கூல் லீவ் பங்க்சன் எப்போதும் ஊருக்குப் போக மாட்டான். அவனைப் பார்க்க அவன் அப்பா வந்தா அவரையும் பார்க்க மாட்டான். கீர்த்தியைக் கூட கூட்டிட்டு வந்தா அவகிட்ட மட்டும் பேசுவான். ஆனா சூப்பரா படிப்பான்."

"அதுவரை எங்க கேங்ல அனியோ இல்லை துஷியோ தான் ஃபர்ஸ்ட் வருவாங்க. நான் திவே, விவான் மூணு பேரும் முதல வர மாட்டோம் ஆனா நல்லா தான் படிப்போம். அந்த டேர்ம் ரிசல்ட் வர எங்க எல்லோருடைய சர்ப்ரைஸுக்கு துவா முதல வந்தான். எங்களுக்கு ஆச்சரியம். அப்பயும் யார்கூடவும் சேர மாட்டான். பேட்மிட்டன் மட்டும் அவனுக்குப் பிடிக்கும் ஆனா அதையும் பார்க்க மட்டும் தான் செய்வான். அப்புறோம் எங்க பிஇடி மாஸ்டர் பார்த்து அவனுக்கு ப்ராக்டிஸ் கொடுத்தார். அப்பப்போ விவான் எங்களுக்கு அவனைப் பற்றிச் சொல்லுவான். நல்லா விளையாடுவான் ஆனா அங்கேயும் யார்கிட்டயும் பேச மாட்டான்னு தெரிஞ்சிக்கிட்டோம்"

"ஒருமுறை சைன்ஸ் எக்ஸ்ஹிபிஷன் நடந்தது. நாங்க எல்லோரும் சேர்ந்து ட்ராயிங் செஞ்சோம். ஆனா அவன் மட்டும் தனியா ஒன்னு செஞ்சான். அதைப் பார்க்கவே நல்லா இருந்தது. ஆனா அது பிடிக்காம நாங்க, நாங்க..." என்றவள் அனியைப் பார்த்தாள். "அவன் தூரமா போனதும் அதைக் கிழிச்சிட்டோம். நான் கிழிச்சதை அவன் பார்த்துட்டான். எங்களுக்கோ எங்க எங்களை மாட்டி விட்டுடுவானோனு ஒரே பயம். ஆனா சார் கேட்கும் போது எப்படி கிழிஞ்சதுன்னு தெரியல்னு சொல்லி எங்களைக் காப்பாற்றிட்டான். எங்களுக்கெல்லாம் ஒரு மாதிரி ஆகிடுச்சு. மறுநாள் எங்களைப் பார்க்க வந்த விவான் அப்பா அம்மா கிட்டச் சொன்னோம். அவர் அவனைப் பார்க்கணும்னு சொன்னார்"

"ஏன் நேத்து இவங்களை நீ மாட்டிவிடலைனு கேட்டார்? நான் மாட்டிவிட்டிருந்தா எல்லோருக்கும் அடி விழுந்திருக்கும்னு சொல்லிட்டு அவன் போயிட்டான். அந்த மொமெண்ட் எனக்கும் விவானுக்கும் ஒன்னு புரிஞ்சது. நாங்க தப்பு பண்ணிட்டோம்னு. விவான் அப்பா எங்க எல்லோருக்கும் சாக்லேட் கொடுத்து அவன் கிட்டக் கொடுத்து சாரி சொல்லச் சொன்னார். இனிமே நாம எல்லோரும் ஃப்ரெண்ட்ஸுன்னு சொல்லணும்னு சொன்னார். அனேஷியா நான் வரலன்னு சொல்லிட்டா. அதனால திவே கூட வரலன்னு சொல்ல நானும் விவானும் மட்டும் அவன் கிட்ட பேசி சாரி சொன்னோம். அவன் கையில இருந்த போட்டோ பார்த்து கேட்டதுக்கு அவன் அம்மானும் அவங்க இறந்துட்டாங்கனும் சொன்னான். எங்களுக்கு ஒரு மாதிரி இருந்தது"

"அப்புறோம் ஏதாவது வேணும்னா மட்டும் எங்களிடம் கேட்பான். பேட்மிட்டன் நல்லா ப்ராக்டிஸ் பண்ணுவான். சூப்பரா படிப்பான். எங்க ஃப்ரெண்ட்ஷிப் அப்படியே போச்சு. எங்க கூடப் பேசுவான் பழகுவான் ஆனா நாங்க எங்கேயாவது கூப்பிட்டா வர மாட்டான். அந்த முறை நாங்க எல்லோரும் விவான் வீட்டுக்குப் போகும் போது அவனைப் பற்றி சொல்ல ஏனோ லலிதாம்மா அவனை இனிமேல் கிண்டல் பண்ணக் கூடாதுனும் அவனையும் எங்க கூட சேர்த்துக்கணும்னு சொன்னாங்க."

"அந்த வருஷம் அப்படியே போச்சு. அடுத்த வருஷம் க்ளாஸ் ரெப் செலெக்ட் பண்ணாங்க. எப்பயும் போன வருஷம் யார் நல்ல மார்க் வாங்குனாங்களோ அவங்க தான் இந்த வருஷம் ரெப்.துவாரா நின்னான். எனக்கும் ரெப் ஆகணும்னு ஆசை. ரெண்டு பேர் நின்னதுல எல்லோருக்கும் வருத்தம். அது ஒருமனதாகத்தான் தேர்ந்தெடுக்கனும். எங்க ரெண்டு பேரையும் கலந்து பேசி யாராச்சும் ஒருத்தர் பேரைச் சொல்லுங்கன்னு சொன்னாங்க. நான் அவனிடம் பேசறதுக்கு முன்னாடியே, "சார் யாழினியே இருக்கட்டும் நான் விலகிக்கறேன்னு" சொன்னான். அப்போ தான் எனக்கும் விவானுக்கும் துஷிக்கும் அவனைப் பத்தி ஒன்னு புரிஞ்சது."ஏன் எனக்காக விட்டுக் கொடுத்தனு" கேட்டேன்,"நீங்க தான் அன்னைக்கு எனக்கு சாக்லேட் தந்து ஃப்ரெண்ட்ஸ்னு சொன்னீங்க தானே? அதனால நமக்குள்ள எதுக்கு போட்டின்னு நான் விலகிட்டேனு" சொன்னான். அன்னைக்கு அவனிடம் ஃப்ரெண்ட்ஸ்னு நாங்க பேசும் போது கூட விவான் அப்பா சொன்னாரேன்னு தான் பேசுனோம். ஆனா அந்த மொமெண்ட் நாங்க ரெண்டு பேரும் அவனுக்கு மனசார ஃப்ரெண்ட் ரெக்குஸ்ட் தந்தோம். இன்னைக்கு வரை அதாவது இருபத்தி இரண்டு வருஷமா தொடருது."

"அவன் கூட நானும் விவானும் ஃப்ரெண்ட்ஸ் ஆனதுல அனி, திவே ஏன் துஷிக்கும் பெரிய விருப்பம் இல்லை."

"ஏன் அனி, திவேஷ், துஷி மூணு பேருக்கும் பிடிக்கல?"-நித்யா,

"எல்லாம் குழந்தைங்களுக்கு இருக்கும் அந்த இன்செக்குரிட்டி பொறாமை தான். அவங்க வட்டத்துக்குள்ள வெளி ஆள் யாரையும் சேர்த்துக்க மாட்டாங்க தானே? மேலும் அனேஷியா துஷி ரெண்டு பேருக்கும் அவங்களை விட இவன் நல்லா படிக்கறது கூடப் பிடிக்காம இருந்திருக்கலாம். இட்ஸ் காமன்."

"அப்புறோம் என்ன ஆச்சு?"

"அப்புறோம் என்ன? துஷியை அவங்க தூண்டி விட நேரா என்கிட்ட வந்தவன்,"நீ யாரு பக்கம்? என் பக்கமா இல்லை அவன் பக்கமான்னு" கேட்டான். அவள் சொன்னதில் அங்கிருந்த பெரும்பாலானவர்களுக்கு சிரிப்பு தான் வந்தது. "பின்னே அடிக்கடி அக்னி நட்சத்திரம் பிரபு, கார்த்திக் மாதிரி அடிச்சிக்க ஸ்கூல்ல எப்பயுமே ரெண்டு கேங் இருக்குமே. அதுக்கொரு கேங் லீடரும் இருப்பாங்க. எலெக்சனுக்கு ஓட்டு கேட்டு போற மாதிரி கேங்குக்கு ஆள் சேர்ப்பாங்க ரைட்?"

"எஸ் எஸ்" என்று ஆமோதித்தனர்.

"நீ என்ன சொன்ன?"

"என்ன சொல்றது? இப்போதான் விவாவும் நானும் துவாரா கூட ஃப்ரெண்ட்ஸ் ஆனோம் உடனே எப்படி அவனை விட்டு பிரியறது? அதே நேரம் துஷியும் திவே, அனியுடன் சேர்ந்து தனி கேங் ஆரமிச்சுட்டான்" என்றாள்.

"ஆமா பெரிய கேங் என்னமோ புதுப்பேட்டை, வடசென்னை படம் மாதிரி பீலா விடுற பாரு?" என்றான் ஜிட்டு.

"நீ ஒரு இருபத்தி ஆறு வயசு பையனா இந்த கதையைக் கேட்குற, ஆனா எட்டு வயசு பையனா யோசிச்சா இது உனக்கு நல்லாவே புரியும்"

"அவன் கிடக்குறான் நீங்க சொல்லுங்க?" என்றான் இளங்கோ.

"ரெண்டு நாள் துஷி என்கிட்ட பேசவே இல்லை. எனக்கும் கோவம். இது ஒரு மாதிரி பிளாக் மெயில். அன்னைக்கு மூணாவது நாள் காலையிலே வந்து சாரி கேட்டான் துஷி. துஷி எங்க கூட சேர்ந்ததும் அந்த கேங்குக்கு அர்த்தமே இல்லாம போச்சு. ஆனா இவளும் சரி இவனும் சரி என்று அனி மட்டும் திவேஷை சுட்டியவள், கொஞ்ச நாள் முறுக்கிட்டே இருந்தாங்க. அப்புறோம் எல்லோரும் ஒழுங்கா தான் பேசுவோம். ஆனா முந்தி மாதிரி இல்லாம இப்போ எங்க கேங்கோட பர்மனெண்ட் மெம்பெர்ஸ்னா துஷி, விவான், துவாரா,நான்னு ஆச்சு. விவானும் துவாராவும் ஷெட்டில் பிளேயர்ஸ்ங்கறதுனால் இன்னும் க்ளோஸ் ஆனாங்க. அப்படியே அந்த வருஷமும் போச்சு. எல்லோரும் பிப்த் போனோம். ஓரளவுக்கு எல்லோருக்கும் மெட்சூரிட்டி ஆனோம்."

"அப்போ போர்த் ஸ்டேண்டர்டு?"

"அவ்வளவு தெளிவா எல்லாம் ஞாபகம் இல்ல. சில முக்கியமான இன்சிடெண்ட்ஸ் மட்டும் தான் ஞாபகம் இருக்கு. ஆம் போர்த் படிக்கும் போதெல்லாம் துவாராவும் விவான் அப்பா அம்மாக்கு பேவோரைட் ஆகிட்டான். சொல்லப்போனா துவாராவோட அந்த பொறுப்பு அவங்களுக்கு அவனை ரொம்ப பிடிச்சது. இன் பேக்ட் அப்போ தான் அவன் அவனோட அப்பாவிடம் பேசுறததில்லைனு தெரிஞ்சு லலிதாமாவும் சேகர் அப்பாவும் அவன் அப்பாவிடம் பேசுனாங்க. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனுக்கு அட்வைஸ் பண்ணுவாங்க. அப்படியே போச்சு. பிப்த் படிக்கும் போது திவேஷும் கொஞ்சம் எங்க கூட சேர ஆரமித்தான். அனேஷியா அவளோட கேங்கோட சுத்துவா. அப்போ அப்போ எங்க கூடலாம் பேசுவா. ஆனா அனேஷியா, துஷி, துவாரா மூணு பேருக்குள்ளயும் ரேங்க் போட்டி எப்பயும் இருக்கும். மூணு பேரும் தான் மாத்தி மாத்தி டாப் த்ரீல வருவாங்க. அதே மாதிரி துவாரா, விவான் ஷெட்டில் ப்ராக்டிஸ் மேட்ச்னு இப்படியே போகும். அனியும் நானும் டேன்ஸ் ப்ராக்டிஸ்னு போச்சு."

"பிப்த் அன்னுவல் டே (annuval) அப்போ அனியும் நானும் சேர்ந்து ஸ்டேஜ் பெர்பார்மென்ஸ் பண்ணோம். பிப்த் வரை பெருசா இவளுக்கு துவாரா மேல எந்த வெறுப்பும் இருந்ததா எனக்கு ஞாபகமில்லை. ஆனா சிக்ஸ்த்ல இருந்து அனேஷியாவுக்கு துவாரவைக் கண்டாலே ஆகாது. அவனோ அடிக்கடி இவ முன்னாடி வந்து நிப்பான். சண்டை, கோவம்னு அப்படியே போகும். அவ துவாராவை மதிக்கவே மாட்டா. அப்போ இருந்து அவங்களுக்குள்ள போட்டியும் இருக்கும். நான் இன்டெர் ஸ்கூல் காம்பிடிசன் கல்சுரல்ஸ் எல்லாம் பார்ட்டிசிபேட் பண்ணுவோம். கூடவே nss கேம்ப், ட்ரெக்கிங் அப்படினு நிறைய இருக்கும். எங்களுக்குள்ள அந்த ஃப்ரெண்ட்ஷிப் மட்டும் ரொம்ப ஸ்ட்ராங் ஆச்சு."

"விவானும் அனேஷியாவும் ஃப்ரெண்ட்ஸா?"

"ஆமா. ஆனா அவளுக்கு விவான், துவாரா கூடவே சுத்துறது பிடிக்காது. ஆனா அவன் இல்லாதப்போ அவங்க நல்லா தான் பேசுவாங்க, பழகுவாங்க"

"ஏன் அனேஷியாவுக்கு துவாராவைப் பிடிக்காது?" என்றாள் நித்யா.

அதுவரை அமைதியாக பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த அனேஷியா அந்தச் சம்பவத்தை நினைத்தாள்.

அன்று பிப்த் படிக்கும் போது அவளை அவ்வருட விடுமுறைக்கு ஊருக்கு அழைத்துச் செல்ல வந்த அவள் பெற்றோர் துவாராவை அழைக்க வந்த அவன் தந்தையைக் கண்டனர். "அவரைக் கண்டதும் என் அம்மா அவரிடம் பேச அங்கேயே என் அப்பாக்கும் அம்மாக்கும் வாக்குவாதம் வந்தது. ஒருவழியாக வீட்டிற்கு வந்ததும் தான் எனக்கு உண்மை தெரிஞ்சது. அவன் அம்மா என்னோட அத்தைனு. எங்க அப்பாகூட பிறந்தது நாலு பசங்க ஒரே பொண்ணு. என் அத்தை. அவங்க தான் எங்க குடும்பத்துக்கு ரொம்ப செல்லமாம். முதல என் அப்பாக்கும் அம்மாக்கும் கல்யாணம் ஆக அவன் அப்பாக்கு ரொம்ப நாளா பெண் பார்த்திருக்காங்க. ஏதும் அமையில. அவங்க கொஞ்சம் வசதி கம்மியான பேமிலி. என் அப்பாவோட பேமிலி கொஞ்சம் வசதி படைத்தவங்க. என் அம்மா கூட அவன் அப்பாவோட சித்தப்பா பொண்ணு தானாம். இருந்தும் எங்க தாத்தா அவரோட குணத்தைப் பார்த்து நல்ல பையன்னு சொல்லி என் அத்தையை கல்யாணம் செஞ்சு கொடுத்திருக்காங்க. இதுல என் அப்பாக்கு துளியும் விருப்பம் இல்லையாம்."

"என் அப்பாவோட மற்ற அண்ணன்களும் தம்பியும் ஒன்னா இருந்திருக்காங்க. என் அப்பா மட்டும் படிச்சிட்டு அப்போவே ஏதோ கோவத்துல தனியா வந்திருக்க அந்த சமயம் இவன் அப்பாக்கு என் அத்தையை கல்யாணம் செஞ்சது பிடிக்காம ஒதுங்கிட்டாரு. அவன் பிறந்ததும் தான் நானும் பிறந்தேன். கொஞ்ச வருஷம் கழிச்சு ரெண்டு குடும்பமும் திரும்ப ஒன்னு சேர்ந்தாங்க. என் அப்பாவும் அவரோட கோவத்தையெல்லாம் விட்டுட்டு இவங்க அப்பாவை ஏத்துக்கிட்டு இருந்திருக்காரு. குழந்தையில நாங்க ஒன்னா தான் இருந்திருக்கோமாம். எனக்கு நினைவில்லை. இவங்க அப்பாவை ஏதோ பிசினஸ் பண்ணக் கூப்பிட்டு அவர் மறுத்துட்டு போயிட்டாராம். சில சண்டைகள் மனஸ்தாபங்கள். இதனால அவனோட அப்பா அம்மாக்கும் நடுவுல அடிக்கடி சண்டை வந்திருக்கு. திரும்ப நல்லா தான் போயிட்டு இருந்திருக்கு, கீர்த்தியும் கூட பிறந்திருக்கா. திரும்ப என் அப்பாக்கு ஏதோ கோவம் யாரோடவும் பேசாம சென்னை வந்துட்டோம். கொஞ்ச நாள் கழித்து திடீர்னு ஒரு நியூஸ். அவன் அம்மா அதாவது என் அத்தை ஏதோ கோவத்துல சூசைட் பண்ணிகிட்டாங்கனு வந்திடுச்சு. என் அப்பா பெரியப்பாங்க சித்தப்பா எல்லோரும் போய் இறுதி காரியம் எல்லாம் செஞ்சு நிறைய சண்டை அடிதடினு எங்கெங்கோ போயிடுச்சி. பணத்துக்காக இல்லை பணம் கேட்டு டார்ச்சர் பண்ணி எங்க வீட்டு பெண் சாவுக்கு காரணம்னு பேச அது எங்கெங்கோ போய் கடைசியில எங்க குடும்பத்து ஆட்கள்,"எங்க பெண்ணே இல்லைனு ஆயிடுச்சி அப்புறோம் எதுக்கு நாங்க அவருக்கு செஞ்ச நகை பணம் சீர்வரிசைனு?" பேசி சண்டைப் போட அவர் எல்லாத்தையும் திருப்பிக் கொடுத்திட்டாரு. ஆனா சொத்து, பணம், நகை இதெல்லாம் திரும்ப வாங்குனவங்க யாரும் என் அத்தையோட பசங்களை எங்க கிட்ட தந்திடுங்கனு கேட்கவே இல்லை. அதுக்கு முன்னாடியே என் மாமாவும் துவாராவையும் கீர்த்தியையும் தர மாட்டேன்னு சொல்லிட்டார்." என்று தன்னுடைய நீண்ட உரையை முடித்தாள் அனேஷியா.

எல்லோரும் அமைதியாக இருந்தனர். என்ன பேசுவதென்று யாருக்கும் தெரியவில்லை. "அப்போ பணம், காசு தான் உன் வீட்டு ஆளுங்களுக்கு முக்கியம். அப்படித்தானே? பாசமே இல்லை அவங்களுக்கு?" என்றாள் மௌனி. பின்னே யாருமில்லாமல் இருக்கும் கஷ்டம் அவளுக்குத்தானே புரியும்?

"அப்படி இல்ல மௌனி. இதும் ஒருவகையில் பாசம் தான். என்ன பாசத்தின் உச்சமாக விரக்தியும் கூடச் சேர்ந்திடுச்சி. அவ்வளவு பாசம், செல்லம் கொடுத்து இருபத்தி ஐஞ்சு வருஷம் வசதியா வளர்த்தப் பொண்ணு அது இன்னைக்கு கரிக்கட்டையா இருக்கும் போது ஒரு கோவம், வன்மம். போதும் டா இனிமேல் உங்க சங்காத்தமே வேண்டாம்னு சொல்லி ஒதுங்குவோம் பாரு அதுபோல் ஒரு நிலை தான் அது. இனி என்ன பண்ணாலும் போன உயிர் திரும்ப வரப் போறதில்லைனு ஒரு நிலை. அது தான். அண்ட் இதெதுவும் யோசிச்சு பொறுமையா எடுத்த முடிவில்லை. அவசரத்துல சோகத்துல, கோவத்துல எடுத்த முடிவு. அதே நேரம் யாரும் தங்கச்சி பசங்களைப் பொறுப்பெடுத்துக்கவும் முன் வரல அதும் உண்மை. வார்த்தைக்காகக் கேட்டாங்க அவன் அப்பா கொடுக்க மாட்டேன்னு சொன்னதும் சரினு ஒதுங்கி வந்துட்டாங்க. எப்படி புரியவெக்க? அதொரு விரக்தி நிலை." என்றாள் அனி.

"உன் அத்தை ஏன் இறந்தாங்க?"

நிமிர்ந்து பார்த்தவள்,"உண்மையிலே இதுக்கான பதில் அவங்க மட்டும் தான் சொல்லணும். ஏன்னா அவங்க கூட இருந்த கீர்த்தியை பத்திரமா பக்கத்துக்கு வீட்டுல கொடுத்துட்டு அவங்க தற்கொலை பண்ணிகிட்டாங்க. சோ பின்விளைவுகளை யோசிச்சு, தெரிஞ்சும் அதே முடிவை எடுத்திருக்காங்க. அவங்க பண்ண ஒரு தப்பு எத்தனை பேரை இன்னைக்கு வரை நிம்மதியில்லாமல் பண்ணிட்டு இருக்கு பாரேன்?"

மௌனம் நீடித்தது."அப்புறோம் என்ன ஆச்சு? அதாவது உங்க ஸ்கூல் பிளாஷ் பேக்?"

"என் அப்பாக்கு இன்னைக்கு வரை கோவம், ஆத்திரம். இப்போ பரவாயில்லை ஆனா அப்போல்லாம் அடிக்கடி கோவப் படுவார். ஒரே பொண்ணு நாலு பசங்க . நல்ல வசதியான குடும்பம். அந்த வலி அவருக்கு இருந்துட்டு தான் இருக்கும். அந்தச் சமயத்துல துவாராவையும் அவன் அப்பாவையும் ஸ்கூல்ல பார்த்த என் அப்பா அவன் கூடச் சேரக் கூடாது, பேசக் கூடாது அது இதுனு நிறைய சொன்னார். என்ன சொல்ல என் அப்பா எனக்கு சொன்னதை எல்லாம் யோசிக்கும் போது எனக்குத் தோணுனது ஒன்னே ஒன்னு தான். அவங்க எங்க எதிரிங்கனு மட்டும் புரிஞ்சது. அதுல இருந்து அவனை ஹர்ட் பண்ண ஆரமிச்சேன். அவன் ஏதாவது பேச வந்தா,"என் அத்தையைக் கொலை பண்ணவங்க தானே நீங்கனு?" கேட்பேன். ஏற்கனவே எனக்கு அவன் மேல இருந்த பொறாமை, கோவம் இப்போ அதிகமாச்சு. அவனை எல்லாவற்றிலும் வீழ்த்தணும்னு ஒரு வெறி. நான் அவனை இப்படி இன்சல்ட் பண்ணியும் தோற்கடிச்சும் பழிவாங்க முயற்சி பண்ணேன்" என்றாள் அனேஷியா. ஏனோ இப்போது நினைக்கையில் அவளுக்கே அவள் மீது கோவம் வந்தது. நமக்கு பிடிக்காதவர்களைக் காயப்படுத்தி அதில் அவர்கள் மனம் உடைவதைப் பார்த்து மகிழ்வதினால் அந்தக் கோவம் மட்டுப்படாது என்றும் மாறாக பழிவாங்கும் அந்த உணர்ச்சி இன்னும் அதிகம் தான் ஆகும் என்று பாவம் அந்த பதினோரு வயது சிறுமி அனேஷியாவுக்குத் தெரியவில்லை. நமக்கு பிடிக்காதவர்களை விட்டு விலகி செல்வதே சாலச் சிறந்தது என்றும் அவள் அறியவில்லை. வன்மம் என்பது நெருப்பில் ஊற்றும் எண்ணெய்ப் போன்றது என்று அவள் அறியவில்லை. அது வளர்ந்துக்கொண்டே தான் இருக்கும்.

மாறாக அங்கே துவாராவுக்கு இது தான் தன் அம்மாவின் குடும்பம் என்று தெரிந்ததும் அவர்களோடு மீண்டும் உறவு பாராட்ட வேண்டும் என்று அவன் மனம் விரும்பியது. அதற்கு அவனுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு அனேஷியா. முதலில் அவளிடம் ஒரு நல்ல புரிதலை உருவாக்கி அதன் மூலம் தன் அன்னையின் குடும்பத்தினர்களை நெருங்க முயன்றான். இருவரும் இருவேறு எண்ணங்களின் மீண்டும் பள்ளிக்குத் திரும்பினார்கள். அது வரைக்கூட அவனுக்கு அனேஷியா மீது காதலெல்லாம் கிடையாது. உண்மையில் அவனுக்கு அவள் மீது காதல் வந்ததே நான்கைந்து ஆண்டுகளுக்குப் பின் தான். அவன் நோக்கம், லட்சியம் அனைத்தும் எப்படியாவது மீண்டும் அவன் அன்னையின் குடும்பத்தினரிடம் ஒன்ற வேண்டும் என்பதே தான். அதற்காக அவன் கொடுத்த விலை? (பயணங்கள் முடிவதில்லை )
 
அனி வீடு சரியில்லை.....கோபம், வெறுப்பில் கூட ,பசங்க வேண்டாம்னு சொத்து,நகை எடுத்துப்பங்களா..... துவா அன்பை தானே எதிர்பார்க்கிறார்...... ? ? (y) (y)
 
புவர் துவா,,,,அவன் வாழ்வில் சொல்லப்படாத பகுதி
உறவோடு சேர நினைக்க...
பகையென விலக்குகிறாள், அனி..
 
Last edited:
துவாவோட அம்மா இறப்பிலும் ஏதாவது உள்குத்து இருக்குமோ??
இந்த எபியும் சஸ்பென்ஸ்சோடா முடிச்சிட்டிங்க ?
Nice update.
 
அனி வீடு சரியில்லை.....கோபம், வெறுப்பில் கூட ,பசங்க வேண்டாம்னு சொத்து,நகை எடுத்துப்பங்களா..... துவா அன்பை தானே எதிர்பார்க்கிறார்...... ? ? (y) (y)
yes. all duva want is love... thank you!
 
புவர் துவா,,,,அவன் வாழ்வில் சொல்லப்படாத பகுதி
உறவோடு சேர நினைக்க...
பகையென விலக்குகிறாள், அனி..
that's his fate... thank you?
 
துவாவோட அம்மா இறப்பிலும் ஏதாவது உள்குத்து இருக்குமோ??
இந்த எபியும் சஸ்பென்ஸ்சோடா முடிச்சிட்டிங்க ?
Nice update.
அவங்க அம்மாவோட சாவுக்குள்ள போக நான் விரும்பல. நன்றி?
 
Top