Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-58

Advertisement

praveenraj

Well-known member
Member
யாழ் சற்று தூரம் செல்ல, அவளை அழைத்த ரேஷா துஷியுடன் பேசவேண்டும் என்றதும் சிரித்து விட்டுச் சென்றாள். யாழ் சிரித்ததைப் பார்த்த துஷி,"ஏ வெற்றி வாகை சூடிட்டு வராப் பாரு சிங்கக்குட்டி" என்று அவளை வரவேற்றான் துஷி.

"என்ன யாழ் சொல்லிட்டியா?" என்று சிரித்தபடியே திவே வினவ,"ஓ எஸ். ஆல் பக்கா. எல்லாத்தையும் சொல்லிட்டேன்" என்றவள்,"டேய் அந்தக் குட்டச்சி உன்கிட்ட என்னமோ பேசணுமாம், என்னனு கேட்டுட்டு வா" என்றதும்,"அடிப்பாவி இதை தானே நீ முதல சொல்லியிருக்கனும்? வாடி வாடி திருமகளே என் அம்மாவோட மருமகளே" என்று கூவிக்கொண்டே சென்றான் துஷி. இதையெல்லாம் கவனித்தபடியே இருந்த அனேஷியா,"யாழ் எல்லாம் சொல்லிட்டியா? அவனுக்கு பொண்ணுங்க கிட்டப் பேச வராதுன்னு..." என்று முடிப்பதற்குள்,"அதெல்லாம் விடுவேனா| நாட் டை கட்டத் தெரியாத வரைக்கும் எல்லாமும் சொல்லிட்டேன்" என்றதும் அதுவரை உதட்டில் இருந்த சிரிப்பு வெளியே வர திவேஸும் அவளுடன் சேர்ந்து சிரிக்க, இருவரும் புரிந்தவர்களாக ஹைபை கொடுத்துக்கொண்டனர். இவர்களின் சிரிப்பு சப்தம் கேட்டு விவான் எழுந்து இவர்களை நோக்கி வந்தான். அவனைக் கண்ட அனி,"டேய் இளாவைத் தூக்கிட்டு வா" என்றதும் துவாராவின் மடியில் இருந்தவளைத் தூக்கி வந்தான். பின்பு அவர்கள் எதற்காகச் சிரித்தார்கள் என்று அறிந்தவன் அவனும் சேர்ந்து சிரித்து இப்போது துஷியைப் பார்த்தனர்.

துஷி ரேஷாவை நோக்கிச் செல்ல, அதற்குள் பெனாசிர் மற்றும் லோகேஷ் இருவரும் ரேஷா சிரித்ததற்காக மகிழ்ந்து சிரித்து,"கொஞ்சம் பார்த்துப் பேசு" என்று அறிவுரையும் வழங்கினார்கள்.

தன்னை நோக்கி வந்த துஷியைப் பார்த்ததும் ஏனோ யாழ் சொன்னதெல்லாம் மீண்டும் நினைவுக்கு வர, அவனைப் பார்த்து மீண்டும் சிரித்துவைத்தாள். அதை தவறாகப் புரிந்தவன்,"ஆஹா யாழ் நீ வாழ்க்கையிலே எனக்கு பண்ண ஒரே உருப்படியான காரியம் இதான்டி" என்று அவளை மெச்சிவிட்டு ரேஷாவின் அருகில் வந்தவன்,"சொன்னாளா? டோட்டலா சொன்னாளா?" என்று வடிவேல் போல் கேட்க அதில் சிரிப்பை அடக்கிக்கொண்டு நின்றவள்,"வயசு பெண்ணையும் வாழைத்தாரையும் எவ்வளவு நாள் வெச்சியிருக்கலாம்?" என்றதும் திருதிருவென்று விழித்தான் துஷி."என்ன கேட்கறேன் இல்ல? எங்க பதிலைக் காணோம்?" என்று குரலை உயர்த்தி மிரட்ட உண்மையில் அதில் அரண்டவன் விழித்து திரும்பி யாழைப் பார்த்தான்.'அடிப்பாவி கொஞ்சுவானு வந்தா இப்படி மிரட்டுறா?' என்று விழிக்க அதைக் கண்டு ரசித்தவள்,"அப்போ யாழ் சொன்னதெல்லாம் கரெக்ட் தான் போல?" என்றாள் ரேஷா.

"என்ன சொன்னா அவ? சொல்லு" என்றதும் யாழ் தன்னிடம் சொன்னதை எல்லாம் ஒன்றுவிடாமல் சொன்னதும் திரும்பி யாழைப் பார்க்க அங்கே யாழ், அனி, திவே, விவா நால்வரும் அவனைப் பார்த்து கிண்டல் செய்து சிரிக்க,"யூ ஆல் ப்ருட்டஸ்?" என்று முணுமுணுத்து அவளைப் பார்த்தான்.

"சாரி துஷி. உண்மையிலே நான் சாரி யாழ் கிட்டத் தான் சொல்லியிருக்கனும். உங்க நட்பை தப்பா புரிஞ்சிக்கிட்டேன். அண்ட் யாழ் பேசுன ஒவ்வொன்றிலும் உன் மேல அவளுக்கு இருந்த அந்த அன்பு தெரிஞ்சது. யா நான் பொதுவாவே முன்கோபக்காரி தான். எதையும் முழுசா புரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி ரியாக்ட் பண்ணிடுவேன். அண்ட் நீ வேற யார் கூட பைக்ல போனா எனக்கேன் கோவம் வரணும்? இத்தனை நாள் கடந்தும் நான் ஏன் உன்னை மறக்காம இருக்கனும்? யா உன்மேல கோவமா இருந்தாலும் நான் உன்னை மறக்கவில்லை. திடீர்னு அன்னைக்கு கல்யாணத்துல உன்னைப் பார்த்ததும் ஒரு கோவம். மூணு நாளுக்கு முன்னாடி அன்னைக்கு ட்ரைன்ல எனக்கு உன் போட்டோ அனுப்பி பிடிச்சிருக்கானு கேட்டாங்க, என்ன சொல்ல? எனக்கு எதுவும் புரியல. ஆனா இன்னைக்கு என் வீட்ல இருந்து போன் பண்ணி,"உனக்குப் பிடிக்கலைன்னா ஜாதகம் சரியில்லைன்னு சொல்லிடலாம்"னு அம்மா கேட்டதும் என்னவோ ஒரு ஃபீல். என்னனு எனக்கு கன்வே பண்ணத் தெரியல. நான் அன்னைக்கு கோவில்ல உன் அம்மாவும் யாழும் பேசுறதைக் கேட்டிருக்கக் கூடாது" என்று அன்று நடந்ததைச் சொல்ல, துஷிக்கு யாழ் மீது அளவுகடந்த கோவம் வந்தது."அடி க்ரதாகி உண்மையிலே நீ தான் சகுனி ஆட்டம் ஆடியிருக்கியா?" என்று முணுமுணுத்தான்."ஆனா தப்பெல்லாம் என் மேல தான் துஷி. இந்த காதல் வந்தாலே மூளை வேலை செய்யாது போல. அதும் காதல் கூடவே பொசெசிவ், பொறாமை ரெண்டு வந்தா சொல்லவே தேவையில்லை போல. எனக்கு உன்னைப் பிடிச்சது, ஆனா நீ மத்த பெண்களோடச் சுத்துறதை நினைக்கும் போது கோவம். அதுக்கும் மேல நீ அந்த மேம் (அவளோட ப்ராஜெக்ட் கைட்) கிட்ட ஆண்ட்டி ஆண்ட்டினு சொல்லி என்னமா பொய்ச் சொல்லுவா பாரு? எனக்கு அப்படியே பத்திகிட்டு வரும். இவ்வளவு க்ளோசா இருக்கும் ஆள் கிட்டயே நீ இப்படி பிராடு தனம் செஞ்சா அப்போ மத்தவங்ககிட்ட என்னவெல்லாம் செய்வனு எனக்குக் கோவம். எல்லாத்துக்கும் மேல அன்னைக்கு நான் உனக்கு போன் பண்ணும் போது நீயும் யாழும் பேசுனது எனக்கு வேற மாதிரி கன்வே ஆகிடுச்சு..." என்று இழுக்க, அவள் சொல்ல வருவது அவனுக்கு நன்கு புரிந்தது.

"ரேஷா ஒன்னு ரெண்டு விஷயத்தை வெச்சு எப்போவும் ஒருத்தரை எடை போடக் கூடாது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதங்கறது சோறுக்கு வேணுனா செட் ஆகலாம் ஆனா மனுஷனுக்கு?" என்று உதடு சுளித்தான்."நான் பெரும்பாலும் பயந்த சுபாவம் தான். ஆனா எனக்கு யாழ் தான் இதுவரை கூட இருந்து எல்லாமும் கைட் பண்ணியிருக்கா. என் அப்பா அம்மா சொல்றதைக்காட்டிலும் யாழ் சொன்னா ஏன் எதுக்குன்னு யோசிக்காம செய்வேன். யா சில நேரங்களில் அவ என்னை சிக்கலில் மாட்டியும் விட்டுடுவா தான். ஆனாலும் அவ மேல எனக்கிருக்கும் அந்த நம்பிக்கை அதிகம். என் வயசு தான் அவளுக்கும், ஆனா என் அம்மா என்னை ஸ்கூல் சேர்த்தும் போது அவகிட்ட என்னை பத்திரமாப் பார்த்துக்கச் சொன்னாங்க. அதனாலோ என்னவோ இப்போ வரை என்னை அவ தான் பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறாள். இதுவரை எங்க ஃப்ரெண்ட்ஷிப் பெருசா எந்த பிரச்சனையும் இல்லாம போய்ட்டு இருக்கு. ஆனா இனிமேல் அது தொடர்வது கண்டிப்பா நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறவங்க கையில தான் இருக்கு. உண்மையிலே அவளுக்கு ஒடிஷால இருக்கிறதே பிடிக்காது. அவளுக்கு எல்லா ஊரும் சுத்தணும் . அவ கேரளாவிலோ இல்லை சென்னையிலோ தான் செட்டில் ஆக நினைத்தா. ஆனா அவ அம்மாக்கு அவ இப்படிப் பண்றதெல்லாம் பிடிக்காது. ஆனா நான் ஒடிஷாவுல தான் இருக்கப் போறேன்னு சொன்னதும் எனக்காக அவளும் அங்க இருக்கா. சோ நாளைக்கு உனக்காக அவளை காம்ப்ரமைஸ் பண்ணிக்க முடியமானு தெரியில. கண்டிப்பா உன்கூட நான் டைம் ஸ்பென்ட் பண்ணுவேன். ஆனா..." என்று இழுத்தான் துஷி.

"என்னால என்னைக்கும் உங்க ஃப்ரண்ட்ஷிப்புக்கு எந்த பங்கமும் ஆகாது" என்றாள்.

"நான் என்னதான் படிச்சிருந்தாலும் எங்க பேமிலி பிசினெஸை தான் பார்த்துக்கணும். சோ அதான் இப்போவும் செய்கிறேன். கூடவே யாழ் அதுல பார்ட்னரா இருந்தாலும் நான் தான் மொத்தமா அதைப் பார்த்துக்கறது .இப்போதைக்கு ஒடிஷால தான் செட்டில் ஆகணும். சோ நீயும் ஒடிஷாவுக்கு வரதுல ஒன்னும் பிரச்சனை இல்லையே? அப்புறோம் உனக்கும் இந்த கல்யாணத்துல சம்மதம் தானே?" என்று இழுத்தான்.

"இது எப்படி? பேசுற வரைக்கும் எல்லாம் பேசிட்டு கடைசியில தான் சம்மதம் கேட்பார்களா?" என்று இழுத்தாள் ரேஷா,

"அது..." என்று வழக்கம் போல் தடுமாறினான் துஷி. அதை ரசித்தவள்,"ஆமா யாழ் உன்னைப்பற்றிச் சொன்னதெல்லாம் உண்மை தானே?"

"என்ன சொன்னா? இன்னும் என்னவெல்லாம் சொன்னா?"

"உன்னை ரொம்ப நல்லவன்னு ஒரு வார்த்தை சொன்னா..."

"அப்போ டெபெனெட்ல்லி"

அப்போது அங்கிருந்தவர்கள் எல்லோரையும் அழைத்த திவே,"கைஸ் கைன்ட் அட்டேன்ஷன் ப்ளீஸ். எல்லோரும் நம்ம துஷி - ரேஷாக்கு ஒரு ஓ போடுங்க" என்றதும் துவாரா விவான் தவிர்த்து 'பயணங்கள் முடிவதில்லை' குழுவுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது."இதெப்போ நடந்தது?" என்று நித்யா வாய்திறந்தே கேட்டுவிட அவர்களின் கதை சுருக்கமாகச் சொல்லப்பட்டு எல்லோரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

திட்டமிட்டப்படியே எல்லோரும் மதிய உணவை முடித்துவிட்டு, கப்பலில் பயணிக்கத் தயாராகி கப்பலில் ஏறினார்கள். சில நபர்கள் இப்போது தான் முதன்முதலாக கப்பலில் பயணிக்கிறார்கள். கோவா டூர் போனபோதே கப்பலில் மற்றவர்கள் பயணித்திருக்க இருந்தும் இந்த அனுபவம் புதுமையாக இருந்தது. மூன்று மணிநேரங்கள் எப்படிப் போனதென்றே யாருக்கும் தெரியவில்லை. கப்பலில் சில மேஜிக் ஷோ நடக்க அதையும் சேர்த்து கவனித்தனர்.மீண்டும் எல்லோரும் கரையை அடைந்ததும் இரவு இங்கிருந்து எல்லோரும் 'டெஸ்ப்பூர்' செல்ல முடிவெடுக்க அனேஷியா இப்போது யாழைப் பார்த்தாள். அவள் பார்த்ததை விவா, துஷி, திவே உட்பட எல்லோரும் பார்த்தனர்."ரூம் போனதும் பத்து நிமிஷம் தான் டைம். அதுக்குள்ள ப்ரெஷ் ஆகிட்டு வர. நான் அவன்கிட்டப் பேசுறேன்" என்றவள் துவாராவை நோக்கி வந்தாள். இதற்கு மேல் சரித்திராவும் இங்கே தங்க முடியாதென்றும் அவள் தாத்தாவின் உடல் அதிக சோர்வடைந்துள்ளது என்றதும் அவளும் அவள் தாத்தாவும் ஊருக்குக் கிளம்பத் தயாராகினர். அவளின் தாத்தாவுடன் துவாரா எல்லாமும் முறைப்படி பேசியும் இருந்தான். அவருக்குத் தான் அன்றே சம்மதமே. இருந்தும் தன் மகன் செய்ததைப் போல் துவாராவும் என்ற பயம் அவருக்கு இருக்க அதைப் புரிந்தவன் அவருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாய் எல்லாம் சொன்னான். ஊருக்கு வந்ததும் அவன் தந்தையுடன் வந்து பேசுவதாகவும் சொன்னான். இன்னும் மூன்று மணி நேரத்தில் அவர்கள் இங்கிருந்து புறப்பட வேண்டும். எல்லோரும் ஒரு குட்டி தூக்கம் போட துவாரா உடனே ரெப்ரெஷ் ஆகிவிட்டு அனேஷியாவைச் சந்திக்கச் சென்றான்.

பேசியபடியே அனேஷியா விரைவாகவே தன் அறைக்குச் சென்று தயாராகி அவர்கள் காலையில் உணவு உண்ட இடத்திற்கு வந்தாள். யாருக்கும் தர்மசங்கடமான சூழ்நிலையை உருவாக்க வேண்டாது எல்லோரையும் சிறிது நேரம் அவரவர் அறையிலே இருக்கும் படியும் உத்தரவிட்டிருந்தாள். அங்கே யாழ் மற்றும் திவே மட்டும் காத்திருக்க, துவாரா வெளியே வந்தான். அவன் அங்கே வருவதற்கு முன்பே சரித்திரா அவனிடம் இரண்டு வேண்டுகோளை வைத்திருந்தாள். முதலில் அவன் இந்த கௌஹாத்தியை விட்டு கிளம்பும் போது பழைய வருத்தம், கவலை, வலி, அவமானம் ஆகியவற்றை எல்லாம் இங்கேயே புதைத்துவிட்டு பழைய துவாராவாகத் தான் ஊருக்கு வர வேண்டும் என்றாள். இரண்டாவதாக அனேஷியாவை அவன் மன்னித்து விடவேண்டும் அல்லது அவள் செய்ததை மறந்துவிட வேண்டும். இனி ஒரு போதும் அதைப் பற்றி அவன் சிந்திக்கவே கூடாது என்றும் அவள் அவனை முதல் முதலில் பார்த்த அந்த துவாராவாகவே இருக்க வேண்டும் என்றும் கேட்டாள். அவள் கேட்ட இரண்டிற்கும் சம்மதமாகவே தலையசைத்துவிட்டு தான் அனேஷியாவைப் பார்க்க வந்தான்.

யாழ் மற்றும் திவே இருவருக்கும் இப்போது இங்கே அவர்கள் இருக்க வேண்டுமா அல்லது இங்கிருந்து செல்ல வேண்டுமா என்று புரியாமல் குழம்பினார்கள். பின்னே இவர்கள் இருவரை மட்டும் எப்படித் தனியாக விட்டுச் செல்வது? வேறேதாவது நிகழ்ந்து விட்டால் என்ன செய்வது என்ற அச்சம் தான் காரணம். அனேஷியாவுக்கு அவனோடு கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும் என்று எண்ணம். ஆனால் எப்படிக் கேட்பது என்று யோசிக்க, வந்தவன் யாழ் மற்றும் திவே இருவரையும் பார்த்து,"நீங்க இங்க இருங்க, நாங்க அங்க தூரமா போய்ப் பேசிட்டு வரோம்" என்று நகர்ந்தான். துவாரா முன்னே செல்ல பின்னாலே அனேஷியாவும் சென்றாள். கொஞ்ச தூரத்தில் இருவரும் நிற்க அவர்கள் யாழ் மற்றும் திவேவின் பார்வை படும் தொலைவில் இருந்தாலும் அவர்கள் போசுவதைக் கேட்காத் தூரத்தில் தான் இருந்தனர்.

அறைக்குச் சென்றிருந்தாலும், விவான் யாழுக்கு குறுந்செய்தி அனுப்பிக்கொண்டே தான் இருந்தான்.

இப்போதும் துவாராவால் அவளை நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை தான். பின்னே அந்த அவமானம் அப்படியாச்சே? இருந்தும் அவளைப் பார்க்காமல் சுற்றி வேடிக்கை பார்த்தவனாக இருந்தான். அனேஷியாவுக்கும் அதே நிலை தான். எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவன் கண்களைப் பார்த்துப் பேச முடியும்? தலைகுனிந்த படியே நின்றாள். "என்ன பேசணுமோ சீக்கிரம் பேசு" என்ற குரல் வந்த திசையை ஆச்சரியமாகப் பார்த்தாள் அனேஷியா. பின்னே அந்தக் குரலில் கோவமும் இல்லை வெறுப்பும் இல்லை. சொல்லப்போனால் எவ்வித உணர்வும் இல்லாதது போல் தான் அனேஷியாவுக்குப் பட்டது.

"துவாரா, நான் உனக்குச் செஞ்சதுக்கெல்லாம் 'மன்னிப்பு' அப்படிங்கறது ரொம்ப ரொம்ப சின்ன வார்த்தை. உண்மையிலே அதை நான் சொல்லலாமா? எனக்கந்த தகுதி இருக்கானு கூடத் தெரியல. தெரியாம செஞ்ச ஒரு தவறுக்குத் தான் மன்னிப்பு கேட்பாங்க. ஆனா நான் அப்படித் தெரியாம செய்யலையே? ஒவ்வொரு முறையும் உன்னைத் தெரிஞ்சே தான் ஹர்ட் பண்ணியிருக்கேன்.நான் பேசுறதால நீ காயப்பட்டு மனமுடைந்து அழுவதைப் பார்க்கணும்னு தான் நான் செஞ்சேன். அப்போ நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கவும் தகுதி இல்லாதவ தான் துவாரா. எனக்கு உன் மேல தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இருந்தது. நல்லா கேளு 'இருந்தது'. இப்போ இல்ல. நீ என்னை விட நல்லாப் படிச்சது, அதுவரை என் ஃப்ரண்ட்ஸா இருந்தவங்க நீ வந்ததும் உன் ஃப்ரண்ட்ஸா ஆனது இதெல்லாம் தான் உன்மேல என் தனிப்பட்ட வெறுப்பு ஏற்படுத்தியது. அப்போ தான் உன் அம்மா போட்டோவை நான் பார்த்தேன். என் அப்பாக்கு அவங்க தங்கைனா அவ்வளவு பிடிக்குமாம். சின்ன வயசுல மற்ற அண்ணன் தம்பிகளோட என் அப்பாவைத் தான் உன் அம்மாக்கும் ரொம்ப பிடிக்குமாம். இதெல்லாம் நான் சொல்றது இல்ல. என் அப்பா என் கிட்டச் சொன்னது. கொஞ்ச காலத்துக்குப் பிறகு ஏதோ சண்டை என் அப்பா தனியா வந்துட்டார். அந்தச் சமயம் அவர் விருப்பமில்லாம உங்க அப்பாவை அவர் தங்கைக்கு கல்யாணம் செஞ்சு வெச்சுட்டாங்களாம். உண்மையிலே இதெல்லாம் இப்போவும் என்னால் உணர முடியல. ஏன்னா நான் ஒரே குழந்தையா வளர்ந்தவ. அதும் முழுக்க முழுக்க ஹாஸ்டெல்ல வளர்ந்தவ. நீ நம்புவியோ மாட்டியோ என் அம்மாவை நான் மனசார நேசிச்சதே அவங்க உடம்பு முடியாம போனதுக்குப் பிறகு தான். காலேஜ் படிக்கும் போது தான் அந்த பாண்டிங்கே எனக்குப் புரிஞ்சது. அதுக்குள்ள நான் வேலை விஷயமாய்த் திரும்ப வெளிய போயிட்டேன். எப்போ அம்மாக்கு முடியலைன்னு தெரிஞ்சதோ அப்போ தான் துவாரா அவங்களை நான் அதிகம் நேசிச்சேன்."

"அவங்க அடிக்கடி என்கிட்டச் சொல்லிட்டே இருப்பாங்க,"உன் அப்பா சொல்றதையெல்லாம் காதுல வாங்காத. துவாரா ரொம்ப நல்ல பையன்னு" நான் தான் எதையுமே கேட்கல. காலேஜ் படிக்கும் போது தான் ஒருமுறை யாழ் கிட்டப் பேசும் போது, உனக்கு உன் அப்பாவைப் பிடிக்காது அவர்கிட்ட நீ பேசுறதில்லை கேள்விப்பட்டேன். என்னால தான் அதுனு எனக்கு அப்போவே புரிஞ்சது. என் அம்மாவோட கடைசி நாட்கள்ல தான் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சது. உன் அப்பாவும் அம்மாவும் எல்லா புருஷன் பொண்டாட்டி போல தான் இருந்திருக்காங்க. சண்டைகள் ரொம்ப சாதாரணம்னும் இதெல்லாம் சேர்ந்தது தான் வாழ்க்கைனும் புரிஞ்சது. ஏன்னா என் அப்பாவும் என் அம்மா உடம்பு முடியாம போனதுக்கு அப்புறோம் தான் அவங்களை அப்படிப் பார்த்துக்கிட்டார். அப்போதான் புரிஞ்சது சண்டைகள் தாண்டி நிறைய அவங்களுக்குள்ள இருந்திருக்குனு. அப்போ கண்டிப்பா உன் அப்பா அம்மாக்கு இடையில் கூட இந்த அன்பு இருந்திருக்கும் தானே? அதோட சாட்சி தானே நீயும் கீர்த்தியும். அப்போ ஒரு பிரச்சனை வந்தப்போ அதைச் சரிபண்ண தானே உன் அம்மா முயற்சி செஞ்சியிருக்கணும்? இல்லை சண்டையாவது போட்டிருக்கனும். ரெண்டும் பண்ணாம அவங்களா ஒரு முடிவைத் தேடிகிட்டா அதுக்கு உன் அப்பா எந்த விதத்துல காரணமாக முடியும்? இதைப் புரிஞ்சிக்கவே எனக்கு இருபத்தி நாலு வருஷம் ஆகியிருக்கு. என் அம்மாவோட சாவுக்கு உன் அப்பா வந்திருந்தார். என் அப்பாவும் அவரைத் தடுக்கவில்லை. அப்போ இத்தனை நாள் என் அப்பாக்கு இருந்த கோவம் ஆத்திரம் வன்மம் எல்லாம் எங்கப் போச்சு? எனக்குத் தெரியல"

"என் அம்மா உடம்பு சரியில்லாம போன அப்போ கொஞ்ச நாள்ல என்னைக் கூப்பிட்டு, உனக்கும் எனக்கும் கல்யாணம் செய்யணும்னு ஆசை பட்டதாச் சொன்னாங்க. அதுக்குக் கொஞ்சம் முன்னாடி தான்..." என்றவள் பேச முடியாமல் திணறி,"நான் அந்த பெரிய தப்பைப் பண்ணியிருக்கேன்" என்றதும் துவாராவிற்கும் புரிந்தது."நானும் எவ்வளவோ முறை என் அம்மாளோட ஆசையை மாற்ற முயற்சித்தேன் ஆனா அவங்க விடாம அதுலேயே இருந்தாங்க. ஒருநாள் என் அப்பாவும் அம்மாவும் சேர்த்து இதைப்பற்றிப் பேசி என்னைக் கூப்பிட்டுக் கேட்டாங்க. அப்போ தான் நான் நடந்ததை எல்லாம் சொன்னேன்..." என்று நிறுத்தி நிறுத்தி அனேஷியா முடிக்க, அவள் கண்களில் இருந்து கண்ணீராகக் கொட்டியது. துவாரா என்ன செய்யவேண்டும் என்று புரியாமல் நிற்க,"அன்றோடு என் அம்மா என்கிட்டப் பேசுறதையே நிறுத்திட்டாங்க. நான் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன், அவங்க மனசே மாறல. யூ நோ வாட்? என் அம்மா அவ்வளவு அழுத்தமானவங்கனு எனக்கு அப்போ தெரியல. கிட்டத்தட்ட மூணு நாலு மாசம் என்கூடப் பேசாமலே இருந்தவங்க அதற்கப்புறோமும் கூட என் அம்மா என்கிட்டப் பேசாமலே என்னை விட்டுப் போயிட்டாங்க..." என்று சொல்லி தேம்பி அழுதாள். நீண்ட மௌனம் நீடித்தது. "நான் நிறைய பாவம் பண்ணியிருக்கேன் துவாரா. அதான் எனக்கு இப்படி ஒரு தண்டனை கிடைச்சியிருக்கு. இந்த ரெண்டு வருஷம் என் வாழ்க்கை முழுக்க முழுக்க நரகம் தான் துவாரா. ஒருபக்கம் உனக்கு நான் செஞ்சத நினைத்து குற்றயுணர்ச்சி மறுபக்கம் என் அம்மா எனக்குக் கொடுத்த தண்டனையோட வலி ரெண்டுமே சாவை விட கொடுமையானது தெரியுமா? ப்ளீஸ் துவாரா உன் வாயால் என்னை மன்னிச்சிட்டேன்னு ஒரே ஒரு முறை சொல்லு துவாரா. நீ கொடுக்கும் அந்த மன்னிப்பு தான் என் அம்மாவும் என்னை மன்னிச்சதுக்கு சமமாகும் துவாரா. ப்ளீஸ் துவாரா" என்றவள் அங்கேயே மண்டியிட்டுவிட உண்மையில் துவாராவின் மனமும் அவளின் வேதனைகளை உணர்ந்து கலங்கியது. அதன் வெளிப்பாடாக அவன் கண்களும் நீர்துளிகளைச் சிந்த, இன்னமும் அவள் தரையில் இருப்பதைக் கண்டவன் அவள் மீதிருந்த கோவம், வெறுப்பு, வன்மம், அவளால் அவன் அனுபவித்த வலிகள் அனைத்தையும் அங்கேயே இறக்கி வைத்துவிட்டு அவளைத் தூக்கியவன் ஆறுதலாக அவள் அவளை அணைக்க அவளோ மொத்தமாகக் கரைந்தாள். அவன் அணைப்பில் காதல் இல்லை காமம் இல்லை வெறுப்பு இல்லை குரோதம் இல்லை வஞ்சம் இல்லை. மாறாக ஒரு இரக்கம் இருந்தது. ஒரு கருணை இருந்தது. ஒரு அன்பு இருந்தது. அவனின் மன்னிப்பு இருந்தது. அவளின் தவறுகள் அனைத்தும் மன்னிக்கப்பட்டிருந்தது. ஆறுதலாய் அவளை அவன் தோளிலே சாய்த்துக்கொண்டான். ஏனோ அவளுக்காக அவன் கண்களும் கண்ணீரைச் சிந்திக்கொண்டு இருக்க, முதலில் சுயம் பெற்றவன் "அனி காம் டௌன். நீ இனி கஷ்டப்படவேண்டாம். நான் உன்னை மன்னிச்சிட்டேன். சும்மா வாயால் சொல்லல என் மனசார சொல்றேன். ஆல் யுவர் மிஸ்டேக்ஸ் ஆர் பர்கிவ்வன் (உன் எல்லா தவறுகளும் மன்னிக்கப்பட்டது). கண்டிப்பா. அத்தைக்கு உன் மேல எந்த கோவமும் வருத்தமும் இருந்திருக்காது. அவங்க உன்னை மனசார மன்னித்து இருப்பாங்க. அப்படியே அவங்க மன்னிக்கவில்லை என்றாலும் இப்போ நான் உன்னை மன்னித்ததால் அவங்களும் மன்னித்திருப்பார்கள்" சிறிது நேரம் அப்படியே இருந்தவள் தற்போது தேம்ப, யாழை பார்த்து தண்ணீர் கொண்டு வரும்படி சமிக்ஞை செய்ய அங்கே யாழ் மற்றும் திவே இருவரும் கூட துவாராவின் செயலில் மனம் உருகிப்போனார்கள்.

அருகே இருந்த மரத்தடியில் அவளை அமரவைக்கவும் யாழ், திவே இருவரும் அங்கே வரவும் சரியாக இருந்தது. தண்ணீர் பருகியவள் ஆசுவாசம் அடைந்து துவாராவைப் பார்க்க, ஒன்றுமில்லை என்பது போல் அவளுக்கு கண்களை மூடித் திறந்தான். அதற்குள் விஷயம் தெரிந்து விவான், துஷி இருவரும் வந்துவிட அங்கேயே அனைவரும் ஒன்றாக அமர்ந்தனர்.

இப்போது எல்லோரிடமும் மன்னிப்பு வேண்டினாள் அனேஷியா. விவான் அவளைத் தடுத்து,"நாங்க உன்னை மன்னிக்க வேண்டிய அவசியமே இல்லை அனி. எப்போ துவாரா உன்னை மன்னித்தானோ அப்போவே எல்லாம் சால்வ்ட்"

"என்னையும் திரும்ப உங்க கூட ஃப்ரெண்ட்ஸா கேங்ல சேர்த்துக்கொள்வீர்கள் தானே?" என்றாள். சிரித்தவர்கள் அவள் அருகில் அமர்ந்துக் கொள்ள அனைவருக்கும் இப்போது தான் உண்மையில் மனம் லேசாக இருந்தது. அப்போது அனேஷியாவின் தந்தை அழைக்க அவரிடம் துவாராவே பேசினான். அது அவருக்கு மிகுந்த மன நிம்மதியைத் தந்தது. கொஞ்சம் ஃப்ரீயாக இருவரும் பேசினார்கள். தங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்ததென்றும் விரைவிலே அனேஷியாவுக்கு ஒரு மாப்பிள்ளை பார்க்கலாம் என்றும் துவாரா சொன்னான். அது அவருக்கு சற்று மனம் வருந்தினாலும் இது தான் நடக்கும் என்று முன்பே அவர் யூகித்திருந்ததால் அதை மனமார ஏற்றுக்கொண்டார். (அதாவது அனேஷியாவுக்கும் துவாரகேஷுக்கும் தன் மனைவியின் ஆசைப்படி திருமணம் நடக்க வேண்டும் என்று அவரும் விரும்பினார் தான். ஆனால் என்று உண்மையெல்லாம் தெரிந்ததோ இனி அதற்கு சாத்தியமே இல்லை என்றும் புரிந்தது. இருந்தும் மனம் ஒரு நப்பாசை கொண்டது. அதன் வெளிப்பாடு தான் அவருடைய வருத்தம்) இதை துவாரா சொல்லச் சொல்ல திவே மனம் மகிழ்ச்சி சோகம் இரண்டும் ஒருசேரக் கொண்டது. அது துஷி, விவான், யாழ் மூவருக்கும் நன்கு புரிந்தாலும் 'என்ன செய்ய முடியும்?' என்று அமைதி காத்தனர்.

சற்று நேரம் உரையாடியவர்கள் பின்பு நேரமானதால் அங்கிருந்து கலைந்தனர். செல்லும் போது அனேஷியாவை அழைத்த துவாரா திவேஷிற்கு அவள் மீதிருக்கும் காதலைச் சொல்லிவிட்டுத் தான் சென்றான். பின்னே பள்ளியில் படிக்கும் போதே துவாராவுக்கு அது நன்கு தெரியுமே? மேலும் இவ்வளவு நாட்கள் ஆகியும் அவன் இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பதும் சற்று முன்னர் துவாராவும் அனேஷியாவும் பேசச் செல்லும் போது பயத்தைக் கடந்து ஒரு இயலாமை அவனிடம் தோன்றியதை துவாரா நன்கு கண்டுகொண்டான். இது அனேஷியாவுக்கு அதிர்ச்சியாகவும் புதியதாகவும் தெரிய மற்ற அனைவர்க்கும் இது ஏற்கனவே விளங்கியிருந்ததால் அமைதி காத்தனர்.

அங்கிருந்து சென்ற துவாரா சரித்திராவிடம் நடந்ததைச் சொல்லி அவளை அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டவன் டூர் முடிந்ததும் தந்தையிடம் சென்று பேசிவிட்டு முறைப்படி அவள் அன்னையிடம் பேசுவதாக வாக்குறுதி கொடுத்து அங்கிருந்து கிளம்பத் தயாரானான். மேலும் திவேஷிடம் ஏற்கனவே சரித்திராவையும் அவள் தாத்தாவையும் பத்திரமாக மறுநாள் வழியனுப்பி வைக்கச் சொல்லியிருந்தான். அதை அவளிடமும் தெரியப்படுத்திவிட்டான்.

துவாரா எப்படி இத்தனை எளிதில் மன்னித்தான்? தனக்காக தன் அத்தை அவளுக்குக் கொடுத்த தண்டனையை எண்ணிப்பார்த்தவன் தன் மீது அவருக்கு இருந்த அன்பில் நெகிழ்ந்து உருகி அவளை மன்னித்தான். கூடவே தாய் தன்னுடைய இறுதிநாட்களில் இருந்தும் தன்னிடம் பேசாமல் இருந்த நிலையை அவனால் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. ஒரு தவறுக்கான உச்சபட்ச தண்டனையே மன்னிப்பு தான். தவறுகள் குற்றமில்லை!அவளை தண்டிக்க வேண்டுமென்று நினைத்திருந்தால் அவளோடு பேச சம்மதித்திருக்கவே மாட்டான்.

(பயணங்கள் முடிவதில்லை...)
 
துவா உதட்டளவில் மன்னிப்பான்னு நினைச்சேன், ஆனால் அனு அவளின் நிலை சொல்லி மன்னிப்பு கேட்ட விதம் துவாவோடு சேர்த்து என்னையும் நெகிழ்த்தியது..?? nice update.
 
துவாவும், அனியும் சந்திக்க , விவான் போட்ட பிளான்..
வீணாப்போகலை....
அப்போதுதான், தன் தாயிடம் நெருங்கிய அனிக்கு...அவரே தண்டனை கொடுத்துவிட்டார்.
அவள் செய்த தவறுக்கு, அதிகப்படியான தண்டனை...
ஸோ, துவாவும் பெரிதுப் படுத்தாமல்...அவள் நிலைக் கண்டு இரங்கி,
அவளை மன்னிக்கிறான்...
போற போக்கில, திவே மனதையும் சொல்லிவிடுகிறான்....
feel good episode...
 
இவ்வளவு நீள பயணத்தில் மனம் கனமான பதிவு இதுதான்...... last notes super...... So இதை மாற்ற அடுத்த எபி உடனே கொடுக்கவும் :p :p :D :D :D
tq?
 
துவா உதட்டளவில் மன்னிப்பான்னு நினைச்சேன், ஆனால் அனு அவளின் நிலை சொல்லி மன்னிப்பு கேட்ட விதம் துவாவோடு சேர்த்து என்னையும் நெகிழ்த்தியது..?? nice update.
thank you... that is his nature?
 
Top