Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-63(2)

Advertisement

praveenraj

Well-known member
Member
யாழை அழைத்துக்கொண்டு துஷி உள்ளே போக அங்கே துஷியின் தந்தையோ ரேஷாவின் தந்தையிடம் பேசிக்கொண்டிருந்தார். ரேஷா ஊருக்கு வந்ததும் இந்த வாரம் இருவீட்டாரும் பேசி திருமணத்தை உறுதிப்படுத்திக் கொண்டு திருமண தேதியை குறிக்கவும் முடிவெடுத்திருந்தனர். முதலில் ஒடிஷாவில் தான் திருமணம் நடத்தலாம் என்று எண்ணியிருந்தனர். ஆனால் சொந்தங்கள் அனைவரும் சென்னையில் இருப்பதாலும் ரேஷாவின் ஊரும் சென்னை என்பதாலும் திருமணத்தை சென்னையிலே நடத்த முடிவெடுத்திருந்தனர். இந்த விஷயம் ரேஷாவுக்குத் தெரியப்படுத்தியவுடன் பெனாசிர், ஜெஸ்ஸி, லோகேஷ் மூவரும் அவளை கலாய்த்து ஒரு வழி படுத்திவிட்டனர். யாழின் காதலைப் பற்றிப் பேசலாம் என்று எண்ணும் போது தன்னுடைய திருமணத்திற்காகப் பேச்சு நடைபெற்றுக்கொண்டிருக்க சற்று அமைதி காத்தான்.

"என்ன துஷி சந்தோஷமா? மாப்பிள்ளைக் களை வந்திடுச்சுப் போல?" என்று அவனை யாழின் அன்னை கலாய்க்க,"அப்படி ஒன்னும் தெரியலையே?" என்ற யாழை முறைத்தார். அதற்கு துஷி சிரிக்க யாழ் சீண்டப்பட்டாள்.

ரேஷாவின் வீட்டில் பேசியவுடன் துஷியின் தந்தை எல்லாவற்றையும் தெரிவிக்க யாழ் துஷிக்கு சிக்னல் செய்ய துஷி அதற்கு ஆமோதிக்க அந்த சமிக்ஞை பாஷை அனைத்தையும் கண்டுக்கொண்ட துஷியின் அன்னை,"என்னடா திருட்டுத் தனம் செஞ்சீங்க?" என்று எப்போதும் போல் சந்தேகமாய்க் கேட்டார். பின்னே இவர்கள் இதுபோல் பம்பினால் நிச்சயம் விஷயம் பெருசு என்று அவர்கள் அனுபவத்தில் அறிந்திருந்தனரே.

"அம்மா அது... ஆக்சுவல்லி யாழுக்கும் கல்யாண வயசு தானே நடக்குது? அவளுக்கு ஏன் நீங்க மாப்பிள்ளைப் பார்க்கல?" என்றதும் அவனின் காலை மிதித்திருந்தாள் யாழ். இதைப் பார்த்தும் பெரியவர்களுக்கு நிச்சயம் ஏதோ பெரிய விஷயம் தான் என்று உணர்ந்து துஷியை குறுக்கு விசாரணைச் செய்ய ஆயத்தமானார்கள்.

"யாழ்மா இங்க வாடா" என்றார் துஷியின் தந்தை. தந்தை இல்லாமல் வளர்ந்ததால் அவளை தன் மகள் போல் தான் பாவித்தார் அவர். யாழ் சென்று அமர்ந்ததும்,"யாரந்த அதிர்ஷ்டசாலி?" என்றதும் "அப்பா துர்திருஷ்டசாலினு கேளுங்க" என்றான் துஷி.

"போடா டேய்... உன்னை கல்யாணம் பண்ணிக்கும் பொண்ணை வேணுனா துர்திருஷ்டசாலினு சொல்லலாம். யாழை கல்யாணம் செஞ்சிக்கப் போறவன் அப்படி இல்லை" என்றார் அவர். பின்னே சின்ன வயதிலிருந்து யாழைப் பார்க்கிறாரே. அவருக்கு யாழ் மீது எப்போதும் ஒரு அசைக்க முடியாத கர்வம் இருக்கிறது."அது வந்து பையன் சென்னை தான். ரைட்டரா இருக்கான். ஒரு அக்கா கல்யாணம் ஆகிடுச்சு.ஒரு நாவலுக்காக என்னை மீட் பண்ண வந்தான். நம்ம கனிகா ஆண்ட்டி இருக்காங்க இல்ல? அவங்க தான் என்னை ரெபர் பண்ணாங்க. இவ்வளவு நாள் பார்த்துப் பேசிப் பழகினோம். போன மாசம் தான் ஊருக்குப் போனான். ஒரு நாள் திடீர்னு என்கிட்ட, "நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு?" கேட்டான். எனக்கு ரெண்டு நாளா ஒரு மாதிரியே இருந்தது. நான் தான் பெரும்பாலும் எல்லோருக்கும் ஷாக் தருவேன். ஆனா அவன் எனக்கு ஷாக் தந்தான். துஷி கூட அவனை மீட் பண்ணிட்டான்" என்று நேக்காக துஷியை கோர்த்து விட்டாள் யாழ்.

"ஓ பெரிய மனுஷரே போய்ப் பார்த்துட்டு வந்துட்டாரா?" என்று துஷியை கிண்டல் செய்தார் அவன் தந்தை.

அங்கே யாழின் அன்னைக்கு தான் வயிற்றில் புளியைக் கரைத்தது. இருந்தும் துஷ்யந்தின் தந்தை மீது அவருக்கு அலாதி நம்பிக்கை.

"யாழ் வெட்கமெல்லாம் படுறாடா" என்று துஷியின் அன்னை ஆச்சரியமாகப் பார்க்க துஷி அவரை முறைத்துப்பார்த்தான். யாழ் மீது சிறுவயது முதலே அவருக்கு அசாத்திய நம்பிக்கை. எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் அவ்வளவு தெளிவாக இருக்கும். உண்மையில் அவளைத் தான் தங்களுடைய பிசினஸை மேற்கொண்டு கவனிக்க வைக்க நினைத்தார். ஆனால் அவளுக்கு டேன்ஸ் மீது தான் விருப்பம் என்று அறிந்ததும் அவளைத் தொந்தரவு செய்யவில்லை.

"யாழ்மா நான் அவரை மீட் பண்ணனும். அவங்க பேமிலி பற்றி நான் எல்லாம் தெரிஞ்சிக்கணும். எனக்கு எப்பயும் நீ ஸ்பெஷல். உன் அப்பா இருந்து என்னவெல்லாம் செய்யணுமோ அதை நான் செய்யணும்னு ஆசைப்பட்டார் உன் அப்பா. சோ நான் நல்லா விசாரித்து விட்டுச் சொல்றேன். துஷி என்கேஜ் மென்டுக்கு சென்னை போறோமில்லை அப்போ நான் பார்த்துப் பேசுறேன். நாளைக்கு அவரை நம்ம ஆபிஸ்க்கு வரச் சொல்லு. நான் அவர்கிட்டயும் பேசணும். நான் சேட்டிஸ்பை ஆனா உடனே பேசி முடிச்சிடலாம்." என்று பேச்சில் நம்பிக்கையும் அதே நேரம் கண்டிப்பும் கலந்து பேசினார்.

யாழின் அன்னைக்கு இருந்த பயமும் துஷியின் தந்தை பேச்சில் விலகியிருந்தது.

................................

ஊரிலிருந்து வந்த மகளின் மன நிலையை அவள் முகமே சொன்னது. தன்னோடு இருந்த கவலை, துக்கம், குற்றயுணர்ச்சி அனைத்தும் விலகி புதிய அனேஷியாவாகவே வந்திருந்தாள். அங்கே நடந்ததை எல்லாம் தந்தையிடம் ஒப்புவித்தவள் விரைவில் துவாராவின் வீட்டிற்குச் சென்று அவன் தந்தையுடன் பேச வேண்டும் என்றும் முடிவெடுத்தாள்.

இதற்கிடையில் இந்த வாரம் நடக்கும் தன்னுடைய என்கேஜ்மென்டுக்கு ரேஷா அனியை அழைத்திருக்க அவளைச் செல்லமாக முறைத்தவள், அவளுக்கு முன்பே துஷி தன்னை இன்வைட் செய்துவிட்டதாகச் சொன்னாள். சென்னையிலிருந்த அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அன்றே தான் தியா மிருவின் வீட்டிற்கு சென்று பேசுவதாக முடிவெடுத்திருந்தனர்.

துவாராவைப் பற்றி விசாரிக்க சரித்திராவின் அன்னை முடிவெடுத்து அவன் வீட்டின் அக்கம் பக்கம் அவன் பணிபுரியும் கல்லூரி என்று ஒன்றையும் விடவில்லை. எல்லாம் விசாரித்த வரையில் அவன் அன்னையுடைய மரணம் மட்டும் சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் மற்றப்படி பெரிய குறை என்று ஏதுமில்லாமல் இருந்தது. இரண்டு பேரும் வேறுவேறு வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது அவருக்கும் சிறிது நெருடலாகத் தான் இருந்தது. துவாராவிற்கும் அவன் தந்தைக்கும் இடையில் இருக்கும் பிணக்கு கீர்த்தி மற்றும் அவனின் நண்பர்கள் தவிர்த்து வெளியாட்கள் யாருக்கும் தெரியாது என்பதால் அதைப் பற்றி அவர் கவலை ஏதும் கொள்ளவில்லை.

அடுத்த சில நாட்களில் துவாராவைத் தனியாகச் சந்திக்கவேண்டி சரித்திராவின் அன்னை அவனிடம் கேட்டிருந்தார். அவனும் அதற்குச் சம்மதம் தந்திருந்தான். அதற்குள் ஊருக்குச் சென்று தந்தையுடன் பேச வேண்டும் என்று முடிவெடுத்தான் துவாரகேஷ்.

ஊருக்குச் சென்ற சித்தாராவை அவள் பெற்றோர்களும் மாமா அத்தையும் சற்று வருத்தத்துடன் பார்க்க அவளோ ராஜீவின் நினைவுகளில் இருந்து முற்றிலும் வெளியே வந்திருந்தாள். தற்போது அவள் மனமெல்லாம் விவியனைச் சுற்றியே வந்தது. அவனுடைய போன் நம்பரை தவிர வேறெதுவும் அவளுக்குத் தெரியாது. அதாவது அவனது வீட்டு முகவரி அவன் பணிபுரியும் கல்லூரி என்று ஏதும் தெரியாது.

அங்கே திவேஷ் அதற்கடுத்த சில நாட்களை வழக்கம் போல் ஓட்ட திடீரென்று அவனை அழைத்த அவன் அன்னை அவன் கொடுத்த பத்து நாள் கெடுவைப் பற்றிப் பேச அனேஷியாவின் பெயரைக் குறிப்பிடாமல் அவளிடம் பேசிவிட்டதாகவும் அவள் சிறிது நாட்கள் அவகாசம் கேட்டுள்ளதாகவும் சொன்னான். யாரந்த பெண் என்று துருவித் துருவி கேட்டும் அனி தான் அவளென்று திவேஷ் சொல்லவில்லை. பின்னே அனேஷியா தான் அவளென்று சொல்லிவிட்டால் தன் அன்னை நேராக அவளிடமே பேசிவிடுவாரே? அதனால் அவளுக்குத் தான் சங்கடம் என்று உணர்ந்து அவளைப் பற்றித் தெரிவிக்காமல் இருந்தான்.

அந்த வெள்ளிக்கிழமை துவாரா, விவி, செபா, ஜெஸ்ஸி, மௌனி, இளங்கோ அனேஷியா என்று அனைவரும் துஷியின் எங்கேஜ்மென்டுக்குச் சென்றிருந்தனர். நாளை தந்தையுடன் வந்து துவாராவின் தந்தையைச் சந்திப்பதாக அனேஷியா தெரியப்படுத்த அவனோ ஞாயிறு அன்று வரும்படிச் சொன்னான்.

..................................

தியா தன் குடும்பத்தோடு மிருவின் வீட்டிற்குச் சென்றிருந்தான்.மகன்கள் இருவரும் போட்ட கண்டிஷனில் கதிகலங்கிய அவர்கள் தாய் பிரச்சனை ஏதும் செய்யாமல் மிருவின் பெற்றோரிடம் அன்று அவ்வாறு நடந்துகொண்டதற்கு வருத்தம் கூடவே மன்னிப்பும் வேண்டிவிட பெருந்தன்மையோடு அவரை மன்னித்து தியா மிருவின் திருமணத்திற்கு பச்சைக் கொடி காட்டினார்கள்.

பெரியவர்கள் அனைவரும் கலந்தாலோசித்து ஒரு நல்ல நாளில் நிச்சயதார்த்தம் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுக்க மிருவிடம் தனியாகப் பேசச் சென்றான் தியா.

அங்கே நடந்த நிகழ்வுகள் அனைத்தும் கனவா நினைவா என்று புரியாமல் இருந்தாள் மிருதுளா. சொன்னபடியே சொன்ன தேதியில் வந்து பேசி சம்மதமும் பெற்றுவிட்டானே என்று உள்ளுக்குள் கர்வமும் கொண்டிருந்தாள் பெண்ணவள். அவளின் தயக்கங்களை எல்லாம் புரிந்தவனாக,

"மிரு அன்னைக்கு நீ எனக்கிட்டப் போட்ட கண்டிஷன்ஸ் எல்லாத்தையும் நான் நிறைவேற்றி விட்டேன். இப்போவாது என்னை முழுமனசா மன்னித்து ஏற்றுக்கொள்" என்றான் தியானேஷ்.

"இதுவரை நமக்குள்ள நடந்த அனைத்தையும் நான் அழிச்சிட்டு புதுசா ஒன்னை உருவாக்க ஆசைப்படுறேன் தியா. ஒரே ஒரு வேண்டுக்கோள் தான் என்கிட்ட இருக்கு. நான் உன்னை விரும்புறேன். அதுல எந்த சந்தேகமும் எப்பயும் உனக்கு வரக்கூடாது. அவ்வளவு தான்" என்று சுருக்கமாக முடிக்க அவளுக்கு தன் சம்மதத்ததைச் சொன்னான் தியானேஷ்.

அன்று மாலை அனைவரும் துஷி-ரேஷா எங்கேஜ்மென்ட் பற்றி குரூப்பில் பேசிக்கொண்டிருக்க சப்தமே இல்லாமல் நிகழ்ந்த தங்கள் பெண் பார்க்கும் படலத்தை மிரு மற்றும் தியா அறிவித்தனர். அதில் எல்லோரும் உண்மையில் ஷாக் ஆக பிறகு நார்மல் ஆகி வாழ்த்துக்களைப் பரிமாறினர். அந்தப் பதிவில் வேண்டுமென்றே தியா ஜிட்டுவை ஸ்பெஷல் மென்ஷன் செய்து கலாய்க்க, ஜிட்டு கடுப்பானான்.

"மச்சி எப்போவுமே முதல யாரு ஃபர்ஸ்ட் ஓடுறாங்கனு முக்கியமில்லை லாஸ்ட்ல யாரு ஃபர்ஸ்ட் வராங்கனு தான் முக்கியம்" என்று டைப் செய்து ஜிட்டுவுக்கு வேட்டு வைத்தான் தியா.

"டேய் டேய் நாங்களும் கல்யாணம் பண்ணுவோம். கல்யாணத்துக்கு முன்னாடி என்கேஜ்மெண்டும் வைப்போம். அப்போ உங்களை மாதிரி நாங்களும் செல்ஃபி எடுத்து இதே குரூப்ல போடல நான் ஜிட்டு இல்லை" என்று அந்த கெத்து குறையாமலே ஸீன் போட்டான் ஜிட்டேந்திரன்.

"முதல நடக்கட்டும் அப்புறோம் பேசலாம் போடா" என்று ஹேமா, இளங்கோ, தியா மூவரும் அவனை ரௌண்ட் கட்டி கலாய்த்தனர்.

இதையெல்லாம் சிரித்து ரசித்துகொண்டிருந்தாள் நித்யா. சரித்திராவின் அன்னையின் வேண்டுகோளை விவான் மற்றும் நித்யாவிடம் சொல்லியிருந்தான் துவாரா. இருவரும் அவனை தைரியமாகப் பேசச் சொன்னார்கள் .

மறுநாளே ஊருக்குச் சென்ற துவாரா கீர்த்தியிடம் நீண்ட நாட்கள் கழித்து சகஜமாய்ப் பேசினான். பிறகு தந்தையின் அறைக்குச் சென்றவன் அவர் அருகில் அமர,"துவாரா அப்பாவை இப்போவாது மன்னிப்பாயா? இப்படி அடிக்கடி என் முன்னால் வர ஆனா உன்னைத் தொட்டாலே கனவாக கரைந்து போயிடுற?" என்று அவனைத் தொட இம்முறை அந்த பிம்பம் மறையாமல் இருக்க ஆச்சரியம் கொண்டார் அவன் தந்தை.

"அப்பா நான் எந்த எக்ஸ்கியூஸும் கேட்க விரும்பல. என்னை, நான் செஞ்ச தப்பை எல்லாம் மன்னிப்பிங்களா ப்ளீஸ்?" என்று கேட்ட மகனை ஆரத்தழுவி அவன் தவறுகளை எல்லாம் நொடியில் மன்னித்தார் அவர். இந்தக் காட்சி இனி எப்போதும் நடக்கவே நடக்காதா என்று எண்ணி வருந்திய கீர்த்தி இன்று ஆனந்தத்தின் எல்லைக்கே சென்றாள்.

சற்று நேரம் தந்தையும் மகனும் தனியாகப் பேசியவர்கள் பிறகு ஒன்றாக வெளியே வந்தனர். அதற்குள் நாளை அனேஷியாவும் அவள் தந்தையும் வரவிருப்பதை தந்தையிடம் சொல்லியிருந்தான் துவாரா. நிச்சயம் இதில் கீர்த்திக்கு உடன்பாடு இல்லை என்று அறிந்துவர் தான் பார்த்துக்கொள்வதாய்ச் சொல்லிவிட்டார். கீர்த்தியின் மைந்தன் சித்தார்த் தன் மாமாவுடன் விளையாடி தனி உலகத்தில் சஞ்சரித்தான்.

அங்கே வந்த கீர்த்தி மகனை உள்ளே செல்லச் சொல்லிவிட்டு துவாராவுடன் மனம் விட்டுப் பேசினாள். அவளிடம் இருந்த கவலைகள் அனைத்தும் அகன்றதாய்த் தோன்றியது அவனுக்கு. "ரொம்ப தேங்க்ஸ் துவா என் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றியதற்கு" என்று சொன்ன கீர்த்தியை ஆறுதலாய்க் கரம் பற்றினான். அண்ணனும் தங்கையும் நீண்ட நாட்கள் கழித்து மனம் விட்டுப் பேசினார்கள். 'அந்த' சம்பவத்திற்குப் பிறகு துவாரா கீர்த்தியிடம் பேசுவதைக் கூடக் குறைத்திருந்தான். இப்போது தான் இத்தனை நேரம் அவளோடு உரையாடினான்.

'நீ அப்பா கிட்டப் பேசியதை ஸ்டில் என்னால நம்ப முடியல துவாரா" என்றவளை அணைத்தவன்,"என்னால கூட இதை நம்ப முடியல கீர்த்திமா" என்றான். அவனின் கீர்த்திமா என்ற அழைப்பைக் கேட்டும் எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது? பிறகு சரித்திராவின் அன்னையிடம் பேசியதைப் பற்றிச் சொன்னவன் நாளை அனேஷியா மற்றும் அவள் தந்தை இங்கு வரவிருப்பதையும் பொறுமையாகச் சொல்ல உண்மையில் அவளுக்கு அது பிடிக்கவில்லை என்றாலும் இன்று நடந்த நிகழ்வுகள் அவளைக் கோவப்படுத்தாமல் இருந்தது. மேலும் தந்தையும் அவர்களைப் பார்க்க விரும்புகிறார் என்று அவரின் முகத்திலே உணர்ந்தவளுக்கு அதைத் தடுக்க மனம் வரவில்லை.

ஏனோ இத்தனை வருடங்கள் அவன் மனதில் இருந்த சுமையெல்லாம் இறங்கியதாய் ஒரு எண்ணம். அப்போது விவானுக்கு அழைத்தவள் நடந்ததைத் தெரிவிக்க அவனும் மனதார மகிழ்ந்தான்.அதை லலிதாம்மாவிடமும் சொல்லி மகிழ்ந்தாள் கீர்த்தி.

பிறகு சரித்திராவின் அன்னையைப் பற்றியும் அவர் தன்னை சந்திக்க சம்மதம் கேட்டதையும் கீர்த்தியிடம் தெரிவிக்க,"அண்ணா கண்டிப்பா அவங்க இதுக்குச் சம்மதிப்பாங்க. என் மனசு சொல்லுது. நீ தைரியமாப் பேசு. சரித்திரா உனக்கு வேணுனா நீ தானே ரிஸ்க் எடுக்கணும்? இதுவும் நானே உனக்காகச் செஞ்சுக் கொடுப்பேனா?" என்று சொல்லிச் சிரிக்க, தனக்காக இவள் எவ்வளவு செய்திருக்கிறாள் என்று எண்ணி மகிழ்ந்தான் துவாரா. பிறகு சரித்திரா - கீர்த்தியின் நட்பைப் பற்றிக் கொஞ்சம் கதைக்க அப்போது அங்கே வந்த தந்தையிடம் அண்ணனும் தங்கையும் சரித்திராவைப் பற்றிச் மெல்லச் சொன்னார்கள் . தன் மகன் தன்னிடம் பேசிவிட்டான் என்ற ஆனந்தம் அடங்குவதற்குள் அவன் திருமணத்திற்கும் சம்மதித்து விட்டான் என்று அறிந்தவர் இன்னும் மகிழ்ந்தார். (பயணங்கள் முடிவதில்லை)
 
எல்லா புள்ளிகளும், தங்களுக்கான புள்ளிகளுடன் இணைந்துவிட்டன.
2-3 ஜோடிகளைத் தவிர...
அவைகளும் சீக்கிரம் இணைந்துவிடும் என நம்புகிறேன்...
 
எல்லா புள்ளிகளும், தங்களுக்கான புள்ளிகளுடன் இணைந்துவிட்டன.
2-3 ஜோடிகளைத் தவிர...
அவைகளும் சீக்கிரம் இணைந்துவிடும் என நம்புகிறேன்...
more or less correct! thank you??
 
கேட்டீங்களா ஜானவி sis, யாழை கல்யாணம் செய்துக்க போறவர் அதிர்ஷ்டசாலியாம் ? இவங்க ரூட்டை மட்டும் ஈஸியா கிளியர் செய்துட்டார் writter..?
ஜிட்டு உங்க நல்ல மனசுக்கு உனக்குத்தான் first கல்யாணம் நடக்கும்.???
ம்ம் என்னதான் மகன் தப்பு செய்தாலும்,, தாய் தந்தையால் மட்டுமே மறக்கவும் மன்னிக்கவும் முடியும் ??
துவா.. கீர்த்தி..பாசம்?? துவா அப்பாவோடு பேசியது சூப்பர் ?? nice update.
 
கேட்டீங்களா ஜானவி sis, யாழை கல்யாணம் செய்துக்க போறவர் அதிர்ஷ்டசாலியாம் ? இவங்க ரூட்டை மட்டும் ஈஸியா கிளியர் செய்துட்டார் writter..?
ஜிட்டு உங்க நல்ல மனசுக்கு உனக்குத்தான் first கல்யாணம் நடக்கும்.???
ம்ம் என்னதான் மகன் தப்பு செய்தாலும்,, தாய் தந்தையால் மட்டுமே மறக்கவும் மன்னிக்கவும் முடியும் ??
துவா.. கீர்த்தி..பாசம்?? துவா அப்பாவோடு பேசியது சூப்பர் ?? nice update.
ஏங்க அது சும்மா கதைக்காகச் சொன்னது. அண்ட் உண்மையிலே யாழினி மாதிரி ஒரு கிடைச்சா லக்கி தான்... இல்லையே ஜிட்டுக்கு தான் லாஸ்ட் மேரேஜ்? எஸ் பெற்றோர்கள் போல் யாராலும் இருக்க முடியாது... நன்றி??
 
Top