அய்யோ இது பிழையான புரிதல் மா. என் கமெண்டை நல்லா படிங்க நான் காமெடியா போட்ட கமெண்ட். என்னயே சொல்லிக் கொண்டது. நான் ரொம்ப ஜாலியான டைப் நீங்க வருத்தப்பட ஒண்ணுமே இல்லை. தவறை யார் சுட்டி காட்டினாலும் ஏற்றுக் கொள்வேன். யாஷிகா என்ற பெயர் விளக்கம் கூட கடந்த மாதம் ஒரு தோழி சொன்னாங்க. CBSC Syllabus KV syllabus இரண்டும் ஒன்று. இங்கே எங்க செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில் அப்படி தான். தமிழ் மட்டுமே பொதுவான புத்தகம். மற்றபடி எல்லாமே வேறு தான். மெட்ரிக் தான் தமிழ் நாடு அரசின் பாடதிட்டத்தை பின்பற்றுகிறார்கள். CBSC பாடத்தில் வரலாறு பாடம் பார்த்தால் முற்றிலும் வேறாக இருக்கும். ஆங்கிலமே வித்தியாசமாக இருக்கும் It is purely based on british english its vocabulary is too hard to understand. பொதுவாக CBSC பாடத்திட்டத்தில் அறிதல் புரிதல், செய்து பார்த்தல் என்பது வரையறை. நிறைய Assignment, projects இருக்கும். இது மாணவர்கள் செய்ய கூட்டியாதாக இருக்காது. பெற்றோர் செய்ய வேண்டி வரும் அல்லது பணம் கொடுத்து வாங்க வேண்டி வரும். இதற்கே CBSC வேண்டாம் அதிகசுமை என்று சொல்பவர்கள் உண்டு. இன்னொன்று மெட்ரிக் பாடதிட்டத்தை சுலபமாக கற்பிக்க முடியும். CBSC பாடத்தை கற்பிக்க ஆசிரியர்களுக்கே நிறைய முன் தயாரிப்பு வேண்டும். தரமான திறமையான ஆசிரியர்கள் அமைய வேண்டும் இல்லாத பட்சத்தில் CBSC ல் மதிப்பெண் அதிகம் பெற மிகவும் போராட வேண்டும். இதற்காகவே CBSC ஐ தவிர்ப்பவர்கள் அதிகம். எங்க ஏரியாவில் தரமான பள்ளி இல்லை. என் பிள்ளைகள் மெட்ரிக்கில் தான் படிக்கிறார்கள். என்னுடன் பணிபுரியம் ஆசிரியகளின் பிள்ளைகள் CBSC ல் படிக்கிறார்கள். அவர்கள் புலம்ப கேட்ட அனுபவம் உண்டு.