HERE WE GO WITH THE 7TH EPISODE HAPPY READING IN LEISURE FRIENDS
அத்தியாயம் 7
சந்தியாவை அரவிந்தனின் வார்த்தைகள் தென்றலாய் தீண்டின. தேவாம்ருதமாய் இனித்தன. இனிய சங்கீதமாய் செவியை வருடின.
மொத்தத்தில் அடுத்து வந்த நாட்களில் சந்தியா கால்கள் தரையில் பதியாமல், ஆகாயத்தில் சஞ்சரிக்காத குறையாய் சிறகடித்துப் பறந்தாள்.
"லொள்ளு சந்தியா இப்ப ஜொள்ளு சந்தியா ஆயிட்டியே......என்னம்மிணி
அந்த அரவிந்தன் பரிசு தானே கொடுத்தார். என்னவோ பரிசமே போட்டுட்ட
மாதிரில்ல பறக்கறே? ".
தோழிகளின் கேலி சந்தியாவை நிஜ உலகிற்கு இழுத்து வந்தது.
'தப்பு இது ரொம்பத் தப்பு. ஏற்கெனவே மாமனுடன் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டவள் ஒரு அந்நிய ஆணிற்காக இப்படி ஆலாய் பறப்பதென்றால் நிச்சயம் இது நல்லதற்கில்லை.
மறந்து விடு மனமே மறந்து விடு. அரவிந்தனை நினைப்பது உன் மாமனுக்கு நீ செய்யும் பச்சை துரோகம். படித்த நன்கு பக்குவப்பட்ட பெண்ணிற்கு இது அழகல்ல'
படித்த மூளை என்ன தான் பக்குவத்தை அறிவுறுத்தினாலும், மனசு சண்டிக்குதிரையாய் அரவிந்தனையே நினைவுபடுத்தி அவள் மூளையுடன் மல்லுக்கட்டியது.
சந்தியாவின் பதிலற்ற மௌனமே தோழிகளுக்குப் பலவிதமான ஊகங்களைக் கொடுக்க, அவர்களும் இஷ்டத்திற்குக் கற்பனைச் சிறகைப் பறக்கவிட்டு, அவளைக் கிண்டல் செய்ய, பதிலுக்குப் பதிலாய் வாயடிக்கும் சந்தியா அன்று மட்டும் ஏனோ வாய் மூடித் தான் நின்றாள்
'தோழிகளிடம் மட்டுமா? அடுத்த நாள் செல்லில் தொடர்பு கொண்ட அரவிந்தனிடம் கூட அவளால் மனசு விட்டுப் பேச முடியவில்லையே......'
"என்ன சந்தியா வார்த்தைக்கு வார்த்தை ஊசிப் பட்டாசாய் பொரிந்து தள்ளுவாய். இப்போ என்னடான்னா ஒரு வார்த்தைக்குக் கூட பஞ்சமாயிருக்கு. ஏன் சந்தியா ஏதும் மௌனவிரதமா?
சந்தியா பதிலே சொல்லவில்லை அதனால் அரவிந்தனே மறுமுனையில் தொடர்ந்தான்.
அன்னிக்கு நிகழ்ச்சியில் உன் நாட்டியம் பிரமாதம் சந்தியா. உன்னுடைய பாவனைகளில் கண்ணனாய் நீ நினைத்துக் கொண்டது என்னைத் தானே? என்னை மறக்க முடியலே தானே? அதனால என்னையே கல்யாணம் பண்ணிகிட்டா என்னன்னு கூட மனசுல ஒரு எண்ணம் தோன்றியிருக்கனுமே இத்தனை நாளில்......"
வழக்கமான கிண்டல் கேலியுடனேயே அவன் பேச, இங்கே சந்தியா பல்லைக் கடித்தாள்.
'இந்த ஆளுக்கு ஆனாலும் லொள்ளு ஜாஸதி தான். நானே அலை பாயற மனசை அடக்க முடியாமல் அவஸ்தைப்பட்டுட்டிருக்கேன். இதிலே இவன் வேறு சீண்டி விடுகிறானா?'
"எனக்கு ஏற்கெனவே வேறொருவருடன் நிச்சயிக்கப் பட்டுவிட்டதென்பது உங்களுக்கும் தெரியும் மிஸ்டர் அரவிந்தன்....."
முயன்று வரவழைத்த கம்பீரத்துடன் சந்தியா பேச, மறுமுனையில் அவன் சிரித்தான்.
"அப்பப்போ இதைச் சொல்லி உன்னைப் பெரிய பெண்ணாய் காட்டிக்க நீ பண்ற முயற்சியிலேயே நீ இன்னும் சிறுமி தான் என்று மிகச் சரியாய் நிரூபிக்கிறாய் சந்தியா......."
"என்ன சொல்கிறீர்கள்?.........."சீறினாள் சந்தியா.
' இவன் அவளை சிறுமியாய் பாவித்து கேலி பேசுவதை விடவே மாட்டானா?'
மனசு பொருமினாலும் முயன்று சமாளித்தாள் சந்தியா.
யாரோ என்னை வனதேவதையாய்க் கொண்டாடியதாக ஞாபகம்..........."
"யாரோ என்ன? நான் தான் அப்படிச் சொன்னேன்.... பள்ளிச் சிறுமிகளுக்குத் தான் வெள்ளை கவுனில் ரெண்டு பக்கமும் இறக்கை வைத்து தேவதை வேஷம் போடுவார்கள். உனக்குக் கூட போட்டிருப்பார்களே சந்தியா?"
சந்தியா பதிலே சொல்ல முடியாமல் மலைத்துப் போனாள்.
ஆனால் அடுத்த நிமிடமே பொரிந்து கொட்டினாள்.
"ரொம்ப நல்லது .இந்த சிறுமியிடம் உங்களுக்கென்ன பேச்சு வேண்டியிருக்கிறது? உங்கள் வயதுக்கேற்ற பெண்ணாய் பார்த்துப் பேசுங்கள்....... வேண்டுமானால் எங்க கல்லூரி ஆயாம்மாவைப் பேசச் சொல்லட்டுமா? "
அவனை நன்றாய் மட்டம் தட்டி மூக்கறுத்து விட்டதாய் இவள் பெருமைப்பட வழியின்றி "அப்பா.........என்ன கோபம்?......."என்று மறுமுனையில் அவன் மீண்டும் சிரித்தான்
"சந்தியா நான் உன்னைச் சந்திக்க வேண்டுமே......."
"இந்தச் சிறுமியைச் சந்தித்து உங்களுக்கு என்ன ஆகப் போகிறது?"
" ஓ....கமான் சந்தியா........நான் வேடிக்கைக்குச் சொன்னேன் என்று உனக்கும் தெரியும். அது தெரிந்தும் ஏன் இந்தப் பாசாங்கு? இப்போ சொல்லு. உன்னை எங்கு பார்க்கலாம்? ஹோட்டல் க்ரீன் பார்க்கில் சந்திக்கலாமா?"
"ஹோட்டலிலா?.........."சந்தியா தயங்கினாள்.
"ஓ....கமான் சந்தியா. வேறொருவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை ஹோட்டலுக்கு வரவழைத்து நான் ஒன்றும் கற்பழித்து விட மாட்டேன்..........."
"என்னைப் பாதுகாத்துக் கொள்ள எனக்கும் தெரியும்......."
சந்தியாவும் பதிலுக்கு எகிறினாள்.
"ரொம்ப சந்தோஷம் சந்தியா அப்போ நாளை மாலை ஆறு மணிக்கு க்ரீன்பார்க். ஹோட்டல் லாபியில் நீ என்னை தைரியமாய் சந்திக்கிறாய் சரியா?"
பரிகாசம் இழையோடும் குரலில் சொல்லிவிட்டு அவன் தொலைபேசி இணைப்பைத் துண்டிக்க. சந்தியா பிரமை பிடித்தவள் போல் தன் செல்லை வெறித்துக் கொண்டிருந்தாள்.
ஹோட்டல் க்ரீன்பார்க் மின்விளக்குகள் அலங்காரத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது. ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கே உள்ள சிறப்புத் தகுதிகளுடன் பிரமாண்டமாய் நின்ற அந்த ஜந்து மாடிக் கட்டிடத்தின் லாபியில் நீச்சலகுளத்தின் அருகில் வண்ணக்குடைகளின் கீழே ரிஸர்வ் செய்யப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள் அரவிந்தனும் சந்தியாவும்.
சன்னமாய் ஒலித்துக் கொண்டிருந்த பாப் மெல்லிசை சூழ்நிலையை
ரம்மியமாக்கியிருந்தாலும் சந்தியாவின் மனதில் சின்னதாய் அதிர்வுகள்.
இது சரியில்லை. ஒரு அன்னிய ஆணுடன் ஹோட்டலில் மகள் இருக்கிறாள் என்று கேள்விப்பட்டாலே அம்மா உயிரை விட்டுவிடுவாள். அப்படியிருக்கும் பொழுது எந்த தைரியத்தில் அரவிந்தனைச் சந்திக்க இங்கே வந்தோம் என்று சந்தியா வியந்து கொண்டிருக்கையில், அரவிந்தனே பேசினான்.
"என்ன சந்தியா ஒண்ணு விடாமல் எஃப் எம் மாதிரி பேசிகிட்டேயிருக்கே.
இல்லேன்னா அப்பப்போ இப்படி ஆஃப் ஆயிடுறே........என்னாச்சு? மூளைக்கு ஜாஸ்தி வேலை கொடுக்காதேம்மா. பாவம் ஏற்கெனவே அங்கே பவர் அதிகமில்லே......."
"யூ.............".சந்தியா அடிக்கத் துறுதுறுத்த கைகளை அடக்கிக் கொண்டாள்.
"மூளையில்லாத மக்குப் பெண்ணை சந்திக்க வேண்டும் என்று அழைத்தது யார்? நீங்க தானே?"
"அஃப் கோர்ஸ்... நான் தான் அழைத்தேன். என்ன பண்றது? அந்த மக்குப் பெண் அழகாகவும் இருக்கிறாளே........"
அலட்டிக் கொள்ளாமல் அவன் பதில் சொல்ல, சந்தியாவிற்குத் தான் நிதானம் தப்பிப் போனது.
"என்ன விஷயமாய் என்னை சந்திக்க விரும்பினீர்கள் என்று சொன்னால் கேட்டு விட்டு நான் போய் கொண்டேயிருப்பேன்....உங்கள் கேலி கிண்டல்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை......."
"கூல் கூல்......சந்தியா. முதலில் இந்த பழ சாலட்டை சாப்பிட்டு விட்டு அப்புறமா பேசலாமா?"
சந்தியா பதிலே சொல்லாமல் முறைக்கவும் அரவிந்தன் சிரித்தான்
"கமான் சந்தியா.......நானே எடுத்து உனக்கு ஊட்டி விடுவதென்றாலும் எனக்கு எந்தவிதமான ஆட்சேபணையுமில்லை. மே ஐ ஹெல்ப் யூ?"
சிரித்துக் கொண்டே அவன் கைகளை அவள் புறமாய் நீட்ட, சந்தியா அவசரமாய் தானே எடுத்து சாப்பிடத் தொடங்கினாள்.
"மாலதி உன் செட் தானே சந்தியா?"
சம்பந்தமின்றி வந்த இந்தக் கேள்வியில் சந்தியா சட்டென்று நிமிர்ந்து பார்க்க, அரவிந்தன் நிதானமாய் பழ சாலடை ஸ்பூனால் கலந்து கொண்டிருந்தான்.
"மாலதி என் சினேகிதி தான். அவளுக்கென்ன? அவளைப் பற்றிப் பேசவா என்னை அழைத்தீர்கள்?"
"வேறு எதற்காக அழைத்தேன் என்று நினைத்தாய் சந்தியா?"
அரவிந்தனின் பார்வை இப்போழுது ஒரு கூர்மையான தேடலுடன் அவள் மீது நிலைக்க, சந்தியாவிற்கு முகம் மாறாமல் காப்பது பகீரத ப்ரயத்தனமாயிருந்தது.
'பின்னே அவன் தன்னைக் காதலிப்பதாய் சொல்வான் என்று எதிர்பார்த்து ஓடி வந்ததாய் உண்மையை நேரிடையாய் அவனிடமே சொல்லமுடியுமா என்ன?'
"உன் தோழி எனக்கு எஸ் எம் எஸ் அனுப்பியிருக்கிறாள் சந்தியா. என்னைக் காதலிக்கிறாளாம்"
அரவிந்தன் சொன்ன மறு நிமிடம். சந்தியா சட்டென்று இருக்கையை விட்டு எழுந்து விட்டாள்.
"ஏய் என்னாச்சு?"
" உங்க காதல் பிரதாபங்களைக் கேட்க நான் இங்கு வரவில்லை..."
"வேறு எதற்காக வந்தாயாம்?"
அரவிந்தனின் பார்வையில் தெரிந்த குறும்பு சந்தியாவின் கோபத்தை இன்னும் அதிகமாக்கியது அவனை முறைத்துப் பார்த்து விட்டு விறுவிறுவென்று நடக்கத் தொடங்கியவளைப் பின் தொடர்ந்தான் அரவிந்தன்.
"நான் சொல்ல நினைத்ததை இன்னும் சொல்லவேயில்லை. அதற்குள் நீ புறப்பட்டா எப்படி சந்தியா?"
"வேண்டாம் நீங்க சொல்லி நான் எதையும் கேட்கத் தயாராயில்லை......"
"என்னை மணக்கச் சொல்லிக் கேட்டால் கூடவா?"
அவ்வளவு தான். மின்சாரம் பாய்ந்தது போல் அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டாள் சந்தியா.