நிழலாடும் நின் நினைவில் 28 (Epilogue)

Advertisement

உத்ராக்கு இரட்டையர்கள் என படிக்கும் போது மகிழ்ச்சியா இருந்தது ,ரம்யாவின் செல்வங்கள் தான் திரும்ப வந்து விட்டார்கள் என தோன்றியது ,சூப்பர்❤️
பெற்றால் தான் பிள்ளையா ,ரம்யா,ஷ்ரவனை சுற்றி அவ்வளவு பிள்ளைகள் இருக்காங்க அவங்களும் இவங்க பிள்ளைகள் தான் .
லேட்டா வந்தால் ,பிள்ளைகளுக்கு மட்டுமல்ல அவங்களை கூட்டிட்டு வந்தவங்களுக்கும் தண்டனை வழங்குவது செம ஐடியா😀நிஐமா சூப்பர்😍 இதனால் பாதிக்கப்படுவது ரம்யாவின் நண்பன் தான் 😀
அழகான கதை ❤️நிறைவான முடிவு❤️
லேட்டா வந்தாலும் சீக்கிரமா கதையை முடித்து விடடீங்க ஆத்தர் ஜீ❤️🥰
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜி❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நன்றிகள் பல பல நட்பே! அழைத்ததும் ஓடி வந்து படித்து, உடனுக்குடன் கருத்துகள் பரிமாறி ஊக்குவித்த உங்கள் அளவுகடந்த அன்பில்தான் இத்தனை விரைவாக எழுதிமுடித்தேன்.

நிறைவுப்பகுதி உங்களுக்குப் பிடித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் நட்பே. ‘தனி’ஜியின் ரசனையான பதில்களே தனி அழகுதான்.

Thank you so much for your unconditional love and encouragement.
 
கடைசி இரண்டு அத்தியாயங்களில் நிறைய நல்ல விஷயங்கள் சொல்லி இருக்கீங்க. அருமை.

உத்ரா மூலமாக அந்த ட்வின்ஸ் திரும்ப கொண்டு வந்தது மிகப் பிடித்தது. கதை மாந்தர்கள் அத்தனை பேரும் நல்லவர்களாக இருந்தது மனதை கொள்ளை அடித்தது.

ஒரு எமோஷனல் ரோலர் கோஸ்டர் போல ரம்யா ஷ்ரவன் இவார்கள் இருவரின் உணர்வுகளின் ஏற்ற இறக்கங்கள் எல்லாவற்றையும் ரொம்பவே ரசிச்சு பார்த்து பார்த்து செதுக்கி இருக்கீங்க எழுத்தாளரே.

கொஞ்சம் கூட முகம் சுளிக்க வைக்காத எழுத்து. தொய்வு இல்லாத நடை. கொஞ்சம் அழுத்தம் இருக்கும் கதைக் களம் என்றாலும் அந்த அழுத்தம் நம்மை பாதிக்காமல் இருக்க செய்ததில் முக்கிய பங்கு தருண், உத்ரா வருபா என மூவருக்குமே உண்டு.

கடைசியில் இவர்கள் எல்லாரும் ஒஎ குடும்பமாக வாழ்வது பார்க்க மிக நிறைவாக இருந்தது. அழகான கதை தந்தமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் எழுத்தாளரே.

ப்ரியங்களுடன
வத்சலா ராகவன்
உங்களின் இந்த தார்மீக ஆதரவு எனக்குப் பெரிய பலமாக இருந்தது முகிலன் ஆத்தரே.

கதையின் ஒவ்வொரு காட்சியையும் குறிப்பிட்டு கருத்துகள் பகிர்ந்த உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கதையை நல்லபடியாக நகர்த்த வேண்டும் என்ற உந்துதலை அளித்தது.

100% நேர்மறையா கதை எழுத வேண்டும் என்ற என் மனத்தின் ஆசையை நீங்கள் உங்கள் கருத்தில் பகிர்ந்திருப்பதைக் கண்டதும் பிறிவிப்பயன் அடைந்த உணர்வில் மிதக்கிறேன்.

Thank you so much for your unconditional love and support throughout this story.
 
அழுத்தமான கதையை கூட கலகலப்பாக கொடுக்க முடியும் என்று அற்புதமாக சொன்ன கதை 🤩 🤩 🤩

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

எதிர்மறை கதாபாத்திரங்களை பூதக் கண்ணாடி வைத்து தேடினாலும் கிடைக்காத கதை 🤩🤩🤩

💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

கூட்டு குடும்பத்தின் மேன்மையை 😊😊😊 அதன் முக்கியத்துவத்தை😊😊😊 மாமியார் மருமகள் ஒற்றுமையை 😊😊 வீட்டுக்கு வரும் மருமகள்களை எப்படி மரியாதையாக நடத்த வேண்டும் என்ற பாங்கினை அருமையாக விளக்கிய கதை 🤩 🤩 🤩

💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

ஆண், பெண் நட்பு அரிதல்ல... அந்த நட்பு இறுதி வரை உறுதியாக இருப்பதும் 🥰🥰 அந்த நட்புக்கு களங்கம் விளைவிக்காத துணைகள் கிடைப்பது அரிதிலும் அரிது அப்படி ஒரு நட்பின் புனிதத்தை மிக அழகாக எடுத்துக்கூறிய கதை 🤩 🤩 🤩
அவர்களின் இணைகளின் பிணைப்பை பிரமிக்கும் வகையில் விவரித்த கதை 🤩 🤩 🤩

🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡

கணவன் மனைவி ஊடலை உணர்வு பூர்வமாக உணரத்திய கதை 🤩 🤩 🤩 🤩
இருவரின் காரசாரமான வாக்கு வாதங்களை கேலிக் கிண்டல், சிரிப்பில் முடித்து வைத்த கதை 🤩 🤩 🤩
இருவருக்கு இடையேயான புரிதலை படிப்போர் பெரிதும் வியக்கும் அளவுக்கு சொன்ன கதை 🤩 🤩 🤩

💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

அருமையான கதை 🤩 🤩 🤩
நிறைவான முடிவு 😍 😍 😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா ❤️ ❤️ ❤️
Colorful and lively விமர்சனம் பகிர்ந்திருக்கும் உங்கள் அன்பிற்கு நன்றிகள் பல பல நட்பே.

கதையின் முதல் சில அத்தியாயங்கள் மட்டும் படித்து, நீங்கள் அப்படியே விட்டுவிட்டிருக்க, கதை உங்களுக்குப் பிடிக்கவில்லையோ எனக் கவலைக்கொண்டேன்.

மறுபடியும் நீங்கள் இணைந்த பிறகுதான் நிம்மதியே வந்தது.

கதையின் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ரசனை நிரம்பிய கருத்துகள் பகிர்ந்ததற்கும், உங்களின் தனித்துவமான விமர்சனத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் நட்பே.

Thank you so much for your unconditional love and encouragement.
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top