Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் அத்தியாயம் 18

Advertisement

parvathi

Active member
Member

Thanks to all readers for ur genuine support. Pls give ur feedbacks.

என் கதைகள் ஆடியோவில் கேட்க விருப்பப்பட்டால்@ BalaThiagarajanTamil Novels. utube. Com என்ற சேனலுக்கு வருகை தாருங்கள். Last BUT NOT THE LEAST PLS LIKE COMMENT SHARE N SUBSCRIBE

அத்தியாயம் 18

அன்று காலையில் சுள்ளென்று தெறித்த காலை கதிர்களின் வருடலில் தான் கண்விழித்தான் நந்தகுமாரன்.தற்செயலாக ஜன்னலைத் தாண்டிச்சென்ற பார்வை தோட்டத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்த ராதாவைக் கண்டவுடன் மலர்ந்தது.​

"ஸ்….ராதா…லுக் ஹியர்…."​

சின்னக்குரலில் கூவியவனை நிமிர்ந்து பார்த்த ராதா பயத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தாள். யாரும் அருகில் இல்லை என்று நிச்சயம் செய்து கொண்டபின் என்ன என்று சைகையில் வினவியவளைப் பார்த்து குறும்பாகச் சிரித்த நந்தகுமார் விழிகளில் கிறக்கத்துடன் முத்தமிடும் பாவனையில் உதடுகளைக் குவிக்க, ராதாவின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்தன.​

ஒரே இரவில் எவ்வளவு தூரம் உரிமை எடுத்துக் கொண்டு விட்டார்? ரொம்ப தைரியம் தான். கொஞ்சம் கூட வெட்கமோ பயமோ இல்லாமல் சிரிக்கறதைப் பாரேன்​

மனதிற்குள் செல்லமாய் நந்தகுமாரனைக் கண்டித்துக் கொண்டிருக்கும் பொழுதே, அவனுடைய சிரிப்பு சட்டென்று நின்றது. தேவகி அவன் அறைக்குள் வந்துவிட்டது தான்காரணம்.​

"என்னடா யாரைப் பார்த்து சிரிச்சுண்டிருக்கே? ஹாஸ்பிட்டலுக்கு நாழியாகலையா?"​

கேட்டுக் கொண்டே ஜன்னலருகே வந்து நின்ற தேவகியின் பார்வை சென்ற திசையில் திகிலடைந்தான் நந்தகுமாரன்.​

அவன் ராதாவை பார்த்து சிரித்ததை அம்மா கண்டுகொண்டால்? ….தவித்துப் போனான்.​

"என்னடா மீனுவோட விளையாட இதுவா நேரம்? எழுந்து குளிச்சு ஹாஸ்பிட்டல் கிளம்பற வழியைப்பாரு."​

தேவகி போய்விட்டார்.​

'மீனுவா?....'​

ஆச்சரியத்துடன் ஜன்னலுக்கு வெளியே பார்வையைச் செலுத்தியவனைப்பார்த்து உற்சாகமாய் கையசைத்துச் சிரித்தாள் மீனு. நிம்மதி அடைந்தவனாக ராதாவின் சமயோசிதப்புத்தியை மனதிற்குள் மெச்சிக் கொண்டு குளிக்க கிளம்பினான் நந்தகுமாரன் .ஆனால் குளித்தபொழுதும், அம்மா பரிமாறிய உணவை சாப்பிட்டபொழுதும், அவனுடைய உடல் தான் அங்கிருந்ததே தவிர மனம் என்னவோ முந்தைய இரவின் மகிழ்ச்சியான நினைவில் முத்துக் குளித்துக் கொண்டிருந்தது.​

தேவகியின் குரல் கேட்டு இரவு ராதா தான் எவ்வளவு பயந்து விட்டாள் என்னவோ தேவகியே மாடியேறி வந்து நடந்தது அனைத்தையும் பார்த்து விட்டாற் போல் வெடுக்கென்று கையை உதறி தன்னை விடுவித்துக் கொண்டாளே.​

அவள் உதறிய வேகத்தில் கை இன்னுமே வலித்தாலும் அந்த இளந்தளிர் மேனி அவன் மீது மென்மையாய் அழுந்தியிருப்பது போல் ஒரு பிரமை அவனுக்கு.​

"சுத்த விவரம் புரியாத அம்மா …"​

ஏமாற்றத்துடன் நந்தகுமார் முணுமுணுத்த பொழுது,​

"மாமி சரியான சமயத்தில் தான் கூப்பிட்டிருக்காங்க.தாங்க் காட் "என்று ராதா சந்தோசப்பட்டதும்,​

"ஏன் எனக்கு வேற சான்ஸ் கிடைக்காதா? நீ எங்கே போகப் போகிறாய் இல்லை நான் தான் எங்கே ஓடப் போகிறேன்….ம்…"​

என்று அவன் விஷமமாக கண்சிமிட்டி சிரித்ததும் இப்பொழுது நினைவிற்கு வர எந்த தைரியத்தில் அப்படியெல்லாம் பேசினோம் என்று இப்பொழுது ஆச்சரியப்பட்டான் நந்தகுமாரன்.​

"என்னடா நானும் கார்த்தாலருந்து பார்க்கிறேன். என்னவோ பிரமை பிடிச்ச மாதிரி ஏதோ யோசனையாகவே இருக்கே. என்ன விஷயம்?"​

தேவகி சற்றே கவலையுடன் கேட்கவும் நந்தகுமார் சுய நினைவிற்கு வந்தவனாக சிரித்தான்.​

"ஒண்ணுமில்லம்மா.."​

ஒற்றை வார்த்தையில் பதிலளித்து விட்டு ஹாஸ்பிட்டல் செல்வதற்காக கீழே இறங்கி வந்தபொழுது மீனு அந்த வெள்ளைப்பூனையை கையில் ஏந்தியபடி அவனிடம் ஓடி வந்தாள்.​

"அங்கிள் இந்தப் பூனை நல்லாயிருக்குல்ல ஹௌ ஸ்வீட்? இதை நான் வளர்க்கப்போறேன். ராதாக்கா வளர்க்கக்கூடாதுனு திட்டறா. நான் அவ பேச்சு கா டூ விட்டுட்டேன்.அங்கிள் நான் இதுக்கு என்ன பேர் வெச்சிருக்கேன் தெரியுமோ? ஸ்வீட்டி…ஸ்வீட்டா இருக்குல்ல அதான் அந்த பெயர் வெச்சேன்.அங்கிள் உங்களுக்கு ஸ்வீட்டியைப் பிடிச்சிருக்கா?"​

மீனு மழலையாக கேட்க நந்தகுமார் குனிந்து ஸ்வீட்டியின் பஞ்சு மேனியை விரல்களால் வருடினான்.​

"உன் ஸ்வீட்டியைப் பிடிக்காமல் போகுமா மீனு? இன்பாக்ட் நான் உன் ஸ்வீட்டிக்கு நன்றி சொல்லனும் தெரியுமோ? உன் ஸ்வீட்டியால நேற்று இராத்திரி எனக்கொரு ஸ்வீட் எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்சுது தெரியுமோ?"​

தான் பேசிக் கொண்டிருப்பது ஒரு சின்னஞ்சிறுமியிடம் என்ற உணர்வேயில்லாமல் நந்தகுமார் பேசிக் கொண்டே போக, அதுவரை வீட்டினுள் கல்லூரிக்குப் போக புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டே அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ராதா, எங்கே வாய் தவறி நந்தகுமார் எதாவது உளறிவிடப் போகிறானோ என்ற பயத்தில் அவசரமாக வெளியே வந்தாள்.​

"மீனு, காலங்கார்த்தால பூனையை வெச்சுண்டு என்ன விளையாட்டு? அதை விட்டுட்டு ஆத்துக்குள்ள வா. விளையாடினதும் இல்லாமல் தத்து பித்துன்னு வேற. உளறிண்டு…"​

கோபத்துடன் முணுமுணுத்தவளின் கடைசி வார்த்தைகள் தன்னை நோக்கிச் சொல்லப்பட்டவை என்பதை நந்தகுமார் புரிந்து கொள்ள அதிக நேரமாகவில்லை. அவன் அதற்கு பதில் சொல்லும் முன், மீனு பூனையைக் காட்டி ராதாவை பயமுறுத்தினாள்.​

"இனிமேல் என்னை திட்டினே,ஸ்வீட்டியை விட்டு உன்னை கடிக்கச் சொல்லிடுவேன்"​

"ஏன் மீனு, உங்கக்காவுக்கு பூனைன்னா என்ன பயமா?"​

சிரித்துக் கொண்டே கேட்ட நந்தகுமாரனுக்கு ஆமாம் என்று தலையசைத்தாள் மீனு​

"அக்காவுக்கு பூனைன்னா ரொம்ப பயம் அங்கிள். அவ கிட்ட ஏதாவது காரியமாகனும்னா இந்தப் பூனையைக் காட்டி பயமுறுத்தினாலே போதும். அக்கா உடனே சரினு சொல்லிடுவா. அக்காவை சரிக்கட்ட இந்த ஸ்வீட்டி தான் லாயக்கு."​

உற்சாகமாய் சொன்ன மீனுவை ராதா முறைக்க, நந்தகுமாரனோ குறும்பாய் கண் சிமிட்டினான்.​

"அப்போ உன் ஸ்வீட்டியை எனக்குத் தாயேன் மீனும்மா. உங்கக்கா கிட்ட எனக்குக் கூட ஒரு காரியம் ஆகனும்".​

ராதாவிற்கு வந்த கோபத்திற்கு மீனுவை இழுத்து வைத்து முதுகில் நாலு போடு போட்டாலென்ன என்று வெறியே வந்தது. ஆனால் பாழாய் போன பூனை பயம் காலை கட்டிப் போட்டது.​

ராதாவின் முகம் கோபத்திலும் வெட்கத்திலும் சிவந்து போக, நந்தகுமாரனின் உற்சாகமோ கரைபுரண்டு ஓடியது.​

"நேத்திக்கு உன் ஸ்வீட்டியால எனக்கொரு பரிசு கிடைச்சது தெரியுமா மீனு?."​

"என்ன பரிசு அங்கிள்?"​

மீனு ஆர்வத்துடன் கேட்க, நந்தகுமார் ராதாவைப் பார்த்தான்.​

என்ன பரிசுனு சொல்லிடவா …..அவன் விழிகள் பேசிய மொழி புரிந்து ராதா உதட்டை பற்களால் அழுத்திக் கடிக்க,ரசனையுடன் அவளைப்பார்த்தவன் அப்படியே திரும்பி மீனுவின் மீது மிருதுவாய் இதழ் பதித்து" இது தான் மீனும்மா "என்றான்.​

"ஹய்! முத்தமா? யார் கொடுத்தா அங்கிள்? ஸ்வீட்டியா?"​

" எஸ் ஸ்வீட்டி தான். என்னோட ஸ்வீட்டி…?""​

குறும்பாய் கண் சிமிட்டி ராதாவிற்கு மட்டும் கேட்கும் மெல்லிய குரலில் சொல்லிவிட்டு காரை கிளப்பிக் கொண்டு சென்றான் நந்தகுமாரன்.​

"பாருக்கா இந்த ஸ்வீட்டியை அங்கிளுக்கு மட்டும் முத்தா குடுத்திருக்கு. எனக்குக் குடுக்க மாட்டேன்றது…."​

சிணுங்கிய மீனுவைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை ராதாவிற்கு.​

"மை டியர் ப்ரெண்ட் பஸ் வீட்டுக்கு வந்து நம்மை அழைச்சுண்டு போகாது.நாம தான் அதைத் தேடிப் போகனும்.கிளம்பலாமா? இப்படி மீனு வாயைப் பார்த்து நின்னுண்டிருக்கறதுக்கெல்லாம் பஸ் வெயிட் பண்ணாதும்மா. அதும் பாட்டுக்கு போயிண்டேயிருக்கும். என்னடி நான் சொல்றதை காதுலயே வாங்காமல் அப்படியென்ன யோசனை?"​

அருகில் வந்து ஜானகி உலுக்கியதில் ராதா சட்டென்று சுயநினைவிற்கு வந்து நிமிர்ந்தாள்.​

"சாரிடி நாழியாயிடுச்சா? இதோ ஒரே நிமிசம் அம்மாட்ட சொல்லிட்டு வந்துடறேன்"​

காயத்ரியிடம் விடைபெற்றுக் கொண்டு ராதா வெளியே வர, இருவருமாக பஸ் ஸ்டாப் நோக்கி நடந்தார்கள்.​

"ஜானா இன்னிக்கு ஈவ்னிங் எங்க காலேஜ்க்கு வர்றியா?"​

"ஏன் இன்னிக்கு என்ன விசேஷம்?"​

"இன்னிக்கு காலேஜ் கல்ச்சுரல்ஸ் டே. லயோலா காலேஜ் ப்ரின்சிபல் வெங்கட்ராமன் தான் சீஃப் கெஸ்ட்."​

"ஓ! புரபஸர் வெங்கட்ராமனா? வெரி இன்ட்ரெஸ்டிங் பர்சனாலிட்டி. ரொம்ப நன்னா பேசுவார். யூ நோ சம்திங். ஸ்ரீராமும் நந்தகுமாரும் பர்சனலா அவர் கிட்ட நீட் கோச்சிங் எடுத்துகிட்டாங்க. அவர் வகுப்பெடுத்தார்னா ஸ்டூடண்ட்ஸ் அப்படியே பாடத்தில் மூழ்கிப் போயிடுவாங்களாம். ஸ்ரீ ராம் சொல்லியிருக்கார்..ஆமா கல்ச்சுரலஸ்னு சொல்றே .உன் ப்ரோக்ராம் இல்லையா?"​

"இருக்கே.என் ப்ரோக்ராம் கேட்கத் தான் உன்னைக் கூப்பிட்டேன். வர்றியா?""​

நிச்சயமா..எப்படியாவது எங்க சீ்ஃப் டாக்டர் கிட்டருந்து எஸ்கேப் ஆகி உன் ப்ரோக்ராம் பார்க்க ஓடோடி வந்துடறேன் சரியா?"​

ஜானகி ஸ்டான்லிக்கு செல்லும் தன் பஸ்ஸில் ஏறிச் சென்றவுடன் ராதா தன் கல்லூரிக்கு சென்றாள்.​

மாலையில் அந்த மகளிர் கல்லூரி விழாக் கோலம் பூண்டிருந்தது. பட்டாம்பூச்சிகளாய் இளம் பெண்கள் பல வண்ண உடைகளில் சிறகில்லா தேவதைகளாய் பறந்து திரிந்தனர்.​

நிகழ்ச்சிகளின் இறுதியில் கல்லூரியின் அழகு ராணியை வேறு தேர்ந்தெடுப்பதாக இருந்ததால் அனைவருமே விசேஷமாக அலங்கரித்துக் கொண்டு வந்திருந்தனர்.​

"காலேஜ் க்வீன் யாராயிருக்கும்ப்பா?"​

"யாருக்குத் தெரியும்? புரபஸர் வெங்கட்ராமனைத் தான் கேட்க வேண்டும்"​

:ஹேய்! அவரா தேர்ந்தெடுக்கப் போகிறார்? ரிடிகுலஸ். அந்தக் கிழவருக்கு என்ன தெரியும்? பார்த்துட்டே இரு.நம்ம ப்ரின்ஸியைத் தான் அழகுராணியாய் அறிவிக்கப் போகிறார்.."​

ஒருத்தி கிண்டலாகச சொல்ல, இன்னொருத்தியோ நக்கலாக வழிமொழிந்தாள்.​

அப்படி அவர் அறிவித்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை.நம்ம ப்ரின்ஸி இன்னிக்கு புஃ ல் மேக்கப்ல இருபது வயசு இளமையா இருக்காங்க.அலங்காரத்த பார்க்கனுமே. சினிஸ்டார் எல்லாம் கூட தோத்துப் போய்டுவாங்க."௦​

டீன் ஏஜ் பெண்களின் குறும்பும் கிண்டலும் கேலியும் அங்கே களை கட்டியது.​

என்ன வயசு இது? எதற்கெடுத்தாலும் சிரிக்கும், காரணமேயில்லாமல் கலகலக்கும் வயசு.வயசு வித்தியாசம் பாராமல் அத்தனை பேரையும் கலாய்க்கும் வயசு​

ராதா இந்த கலகலப்பில் எல்லாம் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நின்று ஜானகிக்காக காத்திருந்தாள். ஜானகியும் அவளை அதிகம் காக்க வைக்காமல் விரைவிலேயே வந்து சேர்ந்தாள்.​

"நீ வர மாட்டாயோன்னு நெனச்சேன்உன் ப்ரோக்ராமை மிஸ் பண்ணுவேனாடி? அதோட புரபஸர் வெங்கட்ராமன் வேறு பேசப் போறாரனு சொன்னே.மிஸ் பண்ண எனக்கென்ன பைத்தியமா?"​

"அப்படி என்ன இருக்கோ அவர்கிட்ட எனக்குப் புரியல.."​

"இன்னிக்குப் புரிஞ்சுப்பே டோன்ட் வொரி."​

உண்மை தான். ப்ரபஸர் வெங்கட்ராமன் பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே அவரைப் புரிந்து கொண்டாள் ராதா. சரளமாக, தெளிவாக, ஆங்கிலத்தில் உரையாடிய அழகு, பேச்சின் ஊடே நகைச்சுவை கலந்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்திய திறமை, அருமையான மேற்கோள்களுடன் மாணவியருக்கு அறிவுரை கூறிய விதம் எல்லாமாகச் சேர்ந்து ராதாவின் மதிப்பில் வெங்கட்ராமன் உயர்ந்து விட்டார்.​

ராதாவின் வீணைக் கச்சேரியை ரசித்துக் கேட்டவர், ஜடியல் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் என்ற பட்டத்திற்கான பரிசை வாங்க அவள் மேடையேறிய பொழுது,அவள் கையில் வெள்ளிக்கோப்பையைக் கொடுத்து மனமார பாராட்டினார்​

"அந்த சரஸ்வதி தேவியே வீணை வாசிச்ச மாதிரி இருந்தது. மேடை கச்சேரி பண்ற அளவுக்கு உங்களிடம் திறமை இருக்கு. வாழ்த்துக்கள்."​

அடுத்து பேச்சுப் போட்டி பாடல் நாட்டியம் என்று அத்தனை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெறஹற ராதா, விழா இறுதியில் நடைபெற்ற கல்லூரி அழகு ராணி போட்டியில் மட்டும் கலந்து கொள்ளாமல் இருந்தது வெங்கட்ராமனின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும்.​

யாருமே எதிர்பார்க்காத வேளையில் திடீரென்று அவரே ராதாவை மேடைக்கழைத்து,​

"டோன்ட் யூ நோ யூ ஹாவ் மோர் ரைட் டு பார்டிசிப்பேட் இன் திஸ்…"​

என்றவர் பார்வையாளர்களின் புறமாகத் திரும்பி​

"ஐ விஸ் டு க்ரௌன் திஸ் யங் கர்ல் எஸ் தி ப்யூட்டி க்வீன் ஆஃப் யுவர் காலேஜ். வாட் டூ யூ ஸே கர்ல்ஸ்? எனி அப்ஜெக்சன்?"​

என்று அவர் கேட்க, மாணவிகள் கோரஸாக "ஆட்சேபணையில்லை "என்று கத்த, வெங்கட்ராமன் புன்னகையுடன் ராதாவின் தலையில் கிரீடத்தைச் சூட்டினார்.​

"ஒரெ பெண்ணுக்கு பலமுறை பரிசுகள் கொடுக்க நேர்ந்த இந்த அனுபவம் என்னால் மறக்க முடியாதது மட்டுமின்றி மகிழ்ச்சியான நிகழ்ச்சியும் தான். ஆல் த பெஸ்ட் மிஸ் ராதா…"​

இந்த மனிதருக்கு அப்படியென்ன ப்ரியம் என் மீது?​

ஆச்சரியத்தில் நன்றி சொல்லக் கூட தோன்றாமல் திகைத்துப் போய் நின்றாள் ராதா.​

 
Last edited by a moderator:
சிறு பிள்ளை முன் நந்தாவின்
சில்மிஷ பேச்சு _ ராதை முகம்
சுருக்கினாலும் நாணத்தில்
சிவந்திட....
சுவீட்டி என் சுவீட்டி...... 🤩🤩🤩🤩
சோ ஸ்வீட் சம்பாஷனை....

கல்லூரி ராணி மட்டும் அல்ல
கண்ணன் மனதை
களவாடிய ராணி இந்த ராதா....

அருமை 💐💐💐💐💐
 
நந்து! ரொம்ப அடாவடியா இருக்கு, உன் பேச்சும் பார்வையும். பாவம் ராதா.🤭🤭🤭🤭

வெங்கட்ராமன் தானே சுஜாவோட அப்பா🧐🧐🧐🧐
இல்லை முரளி அப்பா....ராதாவுக்கு துரோகம் செய்த மாமனார்....
எந்த தைரியத்தில் கட்டி கொடுக்க கேட்டு இருப்பார்???
Professor வேற இதுல....I hate u sir.....
 
சிறு பிள்ளை முன் நந்தாவின்
சில்மிஷ பேச்சு _ ராதை முகம்
சுருக்கினாலும் நாணத்தில்
சிவந்திட....
சுவீட்டி என் சுவீட்டி...... 🤩🤩🤩🤩
சோ ஸ்வீட் சம்பாஷனை....

கல்லூரி ராணி மட்டும் அல்ல
கண்ணன் மனதை
களவாடிய ராணி இந்த ராதா....

அருமை 💐💐💐💐💐
காதல் கொண்ட ராதா கண்ணனை மட்டுமா மயக்கினாள்.கவிக்குயிலும் மயங்கி விட்டதே!
 
இல்லை முரளி அப்பா....ராதாவுக்கு துரோகம் செய்த மாமனார்....
எந்த தைரியத்தில் கட்டி கொடுக்க கேட்டு இருப்பார்???
Professor வேற இதுல....I hate u sir.....
புரொபசரே உங்களுக்கு இது தேவையா? 😀
 
Top