Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் அத்தியாயம் 20

Advertisement

parvathi

Active member
Member
Thanks to all readers for ur genuine support. Pls give ur feedbacks.

என் கதைகள் ஆடியோவில் கேட்க விருப்பப்பட்டால்@ BalaThiagarajanTamil Novels. utube. Com என்ற சேனலுக்கு வருகை தாருங்கள். Last BUT NOT THE LEAST PLS LIKE COMMENT SHARE N SUBSCRIBE


அத்தியாயம் 20

கல்லூரியின் கடைசி நாள்.

அந்தக் கலைக் கல்லூரியின் மூன்றாம் வருட மாணவிகள் அனைவரும் இறுதிப் பரீட்சையை முடித்துவிட்ட மகிழ்ச்சியில், காண்டீனிலும், வெளிவராண்டாவிலும், படிக்கட்டிலும், மூலைக்கொரு குழுவாக அமர்ந்து எதிர்காலம் பற்றிய விவாதங்களில் ஈடுபட்டிருந்தனர்.

"ஹேய் சுமதி அடுத்து என்ன பண்ணப் போறே?"

"தெரியல அப்பா என்ன ஐடியா வெச்சிருக்காரோ,? அவர் ஜாதகத்தை தூக்கறாரோ இல்ல வேலைக்கு அனுப்ப. விண்ணப்பத்தை எடுக்கறாரோ யாருக்குத் தெரியும்? ஆனால் எனக்கென்னவோ வேலைக்குப் போகத் தான் ஆசை."

"ஆமாம் இப்பல்லாம் வேலைக்கு போற பெண்களுக்கு தான் கல்யாண மார்க்கெட்ல டிமாண்ட் அதிகம்"

"ப்சு நான் ஒண்ணும் கல்யாணம் பண்ணிக்கறதுக்காக வேலைக்குப் போகல. வேலைங்கறது என்னோட பாஸன் நாட் புரபெசன். ஆனால் நான் வேலைக்கு போகனும்னு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கண்டிசன் போட்டால் நீங்க உங்களுக்கு மனைவி தேடறிங்களா இல்ல வருமானத்துக்கு வழி தேடறிங்களானு மூஞ்சிக்கு நேரா கேட்ருவேன்."

"நீ நிச்சயம் கேட்ப.கேட்கக்கூடிய ஆள் தான்."

"ப்சு…அப்படித்தாண்டி கேட்கனும்.கேட்டா என்ன தப்பு? இந்த காலத்து பசங்களுக்கு ஹாயா சுத்தி வர்றதுக்கு பெண் சிநேகிதிகள் வேணும்.ஆனால் கல்யாணம்னு வந்துட்டால் மட்டும் ஹோம்லியா பொண்ணு வேணும்.அன்னிக்கு என் அக்காவைப் பெண் பார்க்க வந்தவன் கலகலப்பாய் தான் பேசினான்.ஆனால் வரதட்சணை பேச்சு வந்ததுமே சரியான அம்மாகோண்டு ஆயிட்டான். அம்மாகாரி நீளமாய் லிஸ்ட் கொடுக்கறா.இவன் வாயே திறக்கலையே. இவனெல்லாம் ஒரு மாப்பிள்ளை இவனுக்கு கல்யாணம் வேற ஒரு கேடு…"

"நல்லா சொன்னே நிர்மலா..நான் என் அனுபவத்தை சொன்னால் நிச்சயம் நீங்கல்லாம் விழுந்து விழுந்து சிரிப்பிங்க. என்னயப் பார்க்க வந்தவன் ஹைலி குவாலிபைட்.. ஐ ஐ டில படிச்சவன் போல. ரொம்ப படிச்சாலே மூளை குழம்பிடும் போல. நான் ரொம்ப சோசியல் டைப். வெரைட்டி இஸ் தி ஸ்பைஸ் ஆஃப் லைஃப்னு நெனக்கிறவன். புதுசுபுதுசா கத்துக்கனும்னு ஆசைப்படறவன்.சோ பார்த்த முகத்தையே பார்க்க எனக்குப் பிடிக்காதுனு பெரிசா கமெண்ட் அடிச்சான். எனக்கு பக்குனு போயிடுச்சு. ஏங்க கல்யாணம் ஆகி கொஞ்ச நாள்ல என் முகம் சலிச்சுப் போய் பார்க்க பிடிக்கலேன்னா என்னை விவாகரத்து பண்ணிட்டு புதுசா வேற பெண்ணை கல்யாணம் பண்ணிப்பிங்களானு பட்டுனு கேட்டேன். அசடு வழிஞ்சுண்டு போனவன் தான் திரும்பி வரல."

"இவ்வளவு அபத்தமா பேசியவன் படிச்ச முட்டாளாக்கும்.ஏய் ! எனக்கொரு சந்தேகம்ப்பா. தினம் கண்ணாடியில் இவன் மூஞ்சியப் பார்த்துப்பான் தானே? இன்னும் சலிச்சுப் போகலையாமா?."



சுமதி கிண்டலாக கேட்க,சுற்றியிருந்த தோழிகள் அனைவரும் சிரித்து விட்டனர்.

திடீரென்று அனு கூவினாள்.



:"ஏய்! நம்ம கல்லூரி அழகுராணி அடுத்து என்ன பண்ணப் போறாள்னு கேளுங்கப்பா."



அதுவரை அவர்கள் பேச்சில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருந்த ராதா சிரித்தாள்.



"என்னை ஏம்ப்பா வீணா வம்பிழுக்கறிங்க,?"



ராதாவின் பேச்சை லட்சியம் செய்யாமல் கமலி தொடர்ந்து அவளைச் சீண்டினாள்.



"ஏய் ! உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? புரொபஸர் வெங்கட்ராமனுக்கு ராதாவை ரொம்ப பிடிச்சுப் போய் நம்ம பிரின்ஸி கிட்ட அவளைப் பற்றி ரொம்ப விசாரிச்சாராம். மனுஷர் கல்யாணத்திற்கு தான் விசாரிச்சிருப்பார் போல."



"இந்த வயசுல இன்னொரு கல்யாணமா? என்னடி கமலி உளர்றே?"



"நா ஒண்ணும் உளறல. நீ தான் இப்போ உளர்றே. கல்யாணம்னா உடனே அவருக்குத்தான்னு நீ எப்படி முடிவு பண்ணலாம்? ஏன் அவர் தன் மகனுக்காக விசாரிச்சிருக்க கூடாதா?"



கமலி அலட்சியமாக பதில் சொல்ல. ராதா கலகலவென்று சிரித்து விட்டாள்.



"ஏன் கமலி, உன் கற்பனைக்கெல்லாம் ஒரு அளவேயில்லையா? திஸ் இஸ் டூ மச்."



"மை டியர் ப்ரெண்ட்! இப்போ வேணா நான் சொல்றதை நீ நம்பாமலிருக்கலாம். ஆனால் புரொபஸர் எதிர்காலத்தில் உன் மாமனார் ஆனதும் தான் தெரியும் கமலி எவ்வளவு பெரிய தீர்க்கதரிசினு…"



"அவ தெரிஞ்சுக்கிறாளோ இல்லையோ நான் தெரிஞ்சுகிட்டேன்ப்பா நீஒரு நல்ல மாரேஜ் புரோக்கர்னு…"

கலீரென்ற சிரிப்பில் அந்த இடமே கலகலத்தது.



"ஏய் ! இன்னும் எத்தனை நாழி தான் பேசியே பொழுதைக் கழிப்பிங்க? சினிமா போய்ட்டு ஹோட்டல்ல டின்னர் சாப்பிடலாம்னு போட்ட ப்ளானெல்லாம் என்னாகறது? நேரமாச்சு. கிளம்புங்கப்பா.."



சுஜாதா சொன்ன அடுத்த நிமிடம், ராதா சட்டென்று எழுந்து கொண்டாள்.



"ஏய்! எங்கடீ கிளம்பிட்ட?"



"ஏன் வீட்டுக்குத்தான்…"



"வீட்டுக்கா? அப்போ நீ சினிமாவுக்கு வரலையா?"



"ஊகூம்…"தலையசைத்தாள் ராதா.



"ஏன் அம்மிணிக்கு ஆத்துல அவசர வேலை எதுவும் இருக்கோ? என்ன விளையாடறியா? இன்னிக்கு உன்னை நான் விடப் போறதில்ல.நிச்சயமா நீ எங்களோட சினிமாவுக்கு வரப் போற."



"ப்ளீஸ் கமலி என்னய விட்டுரும்மா. வீட்டுக்கு நேரத்தோட போகலேன்னா பாட்டி திட்டுவா.உனக்கு பாட்டியைப் பற்றி தெரியும் தானே?"



"உங்க பாட்டி என்னிக்கு தான் திட்டாமல் இருந்தா இன்னிக்கு புதுசா திட்றதுக்கு? சும்மா பஃஸ் பண்ணாமல் வா ராதா.இன்னிக்கு ஒரு நாள் வீட்டுக்கு லேட்டா போனால் ஒண்ணும் குடி முழுகிப் போயிடாது."



சுஜாதாவும் சேர்ந்து வற்புறுத்த, ராதா தயக்கத்துடன் மறுத்தாள்.



"ப்ளீஸ் சுஜா! உனக்குக் கூடவா என் நிலைமை தெரியாது? இன்னிக்கு உங்களோட நான் சினிமாவுக்கு வந்தேன்னா, அப்புறம் பாட்டி வீட்டு வாசல்ல துடைப்பக்கட்டைய வெச்சுண்டு தான் காத்திருப்பா..அம்மா வேற வீணா கவலைப்படுவா.நான் வரலைனா என்ன? நீங்க எல்லாரும் போய்ட்டு வாங்க. என்ஜாய் த டே…"



கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பிய ராதாவை தடுத்தாள் அனு.



"பெரிய்ய பாட்டி! லோகத்துல இல்லாத பாட்டி .இங்கே பார் நீ வரலேன்னா நாங்களும் யாரும் போகல. சும்மா கம்பெனி கொடுக்கறதுக்கு என்னடி? காசா பணமா? இது சுஜியோட ட்ரீட்.அவ தான் இன்னிக்கு செலவு பண்ணப் போறா. என்னவோ உன் கைகாசு செலவாகப் போற மாதிரி சீன் போடறே?"



"அதுக்கில்ல அனு.நான் அம்மாட்ட கூட சொல்லிட்டு வரல."



"அம்மாட்ட தானே எல்லாம் செல்போனில் தகவல் சொல்லிக்கலாம்.இங்கே பார் ராதா சும்மா அம்மா பாட்டினு சாக்கு சொன்னால் உன்னை குண்டுகட்டா தூக்கி சாக்கு மூட்டையில் கட்டி காரில் போட்டு போய்கிட்டே இருப்போம். சின்னப்பப்பா..அம்மாவுக்கு தெரியாமல் ஒரு காரியமும் பண்ணமாட்டியோ? சரிதான் வாடி…."



அனு கைகளை விடாமல் பற்றி இழுக்க, சுஜாதாவும் கெஞ்சினாள்.



"ப்ளீஸ் ராதா! நானே உன்னை வீட்டில் ட்ராப் பண்ணிடறேன். மாட்னி ஸோ தானே? அஸ் யூஸ்வல் காலேஜ் முடிஞ்சு போற மாதிரி அஞ்சரைக்கெல்லாம் வீட்டுக்குப் போய்டலாம்.சரினு சொல்லுடி ப்ளீஸ்."



"சரி. அஞ்சரைக்குள்ள என்னை வீட்ல கொண்டு விட்டுடனும்.."



ராதா அரை மனதாய் சம்மதிக்க,சுஜாதா கிண்டலடித்தாள்.



"ஏய்! சீக்கிரமாய் காரில் ஏத்துங்கப்பா இவளை. இல்லேன்னா வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்துல ஏறிடப் போகுது.."



ராதா சம்மதித்து விட்டாலும், பாட்டிக்கு விஷயம் தெரிந்தால் கண்டபடி பேசுவாளே என்ற பயம் உள்ளுக்குள் உதைத்தது.அந்த பயம் தியேட்டரில் பக்கத்து சீட்டில் வந்து அமர்ந்தவனைக் கண்டவுடன் விஸ்வரூபமெடுத்தது.

முரளி….

அந்த அரைகுறை இருட்டிலும் அவனை அவளால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.



அவனோ அவளை வியப்புடன் பார்த்து விட்டு விசிலடித்தான்.



"ஹாய் பேபி…சினிமாவெல்லாம் கூட நீ பார்க்கறதுண்டா?"

விஷமமாய் விசாரித்தவனை முறைத்துப் பார்த்தவள் அருகில் அமர்ந்திருந்த சுஜாதாவை நெருங்கி அமர்ந்து கொண்டாள்.



"ஏண்டி என்னாச்சு?"

சுஜாதா புரியாமல் கேட்க, ராதா கோபமாக பதில் சொன்னாள்.



"தியேட்டருக்குள்ளே மனுஷங்க மட்டும் வரலே கண்ட நாய்களும் அதுவும் தெருப் பொறுக்கி நாய்களும் வந்திருக்கு…"



முரளியின் முகம் கோபத்தில் சிவந்தது.



'என்ன திமிர் இவளுக்கு? நாய்ன்னா சொன்னே? இருடி நான் யாருன்னு காட்டறேன்…'

மனதிற்குள் கருவினான் முரளி.



படம் ஆரம்பித்த சில வினாடிகளிலேயே அவன் யாரென்று ராதாவிற்கு தெரிந்து விட்டது.



வேண்டுமென்றே அவள் சீட்டில் கை வைப்பதும், தற்செயலாய் தொடுவது போல் கைகள் அவள் மேல் படுவதும், அசிங்கமாய் கமெண்ட் அடிப்பதும், என்று முரளி பொறுக்கித்தனத்தின் உச்சம் தொட, பொறுத்துப் பொறுத்து பார்த்த ராதா இறுதியில் பொங்கி எழுந்து விட்டாள்.



"சே! நீயெல்லாம் ஒரு மனுசன்? அக்கா தங்கச்சிகளோட பிறக்கலையா நீ? ஒரு தரம் சொன்னால் புரியாதா? அறிவில்லை?

நாகரீகமா டிரஸ் பண்ணிகிட்டா மட்டும் போதாது.அந்த நாகரீகம் நடத்தையிலும் இருக்கனும்.நான் எட்டிப் போகப் போக குட்டி போட்ட பூனை மாதிரி என்னையே சுத்தி சுத்தி வர்றியே இப்படியே தொடர்ந்து பண்ணிட்டிருந்த நான் வாயால பேசமாட்டேன்.என் கை தான் பேசும்..ஜாக்கிரதை…"



தியேட்டர் என்றும் பாராமல், அத்தனை பேர் எதிரில், ராதா பத்ரகாளியாய் வெடிக்க அவமானத்தில் ஆறடி உயரமும் குறுகிப் போய் தலைகுனிந்த முரளியின் பார்வையில் மட்டும் ஏனோ வன்மம் கொடி கட்டிப் பறந்தது.
 
துஷ்டனை கண்டால் தூர விலகுன்னு சொல்லுவாளே! அந்தப் பழமொழி உனக்கு ஞாபகம் வரலையா ராதாமா…அவனைப் பார்த்ததும் ஏன் ரியாக்ட் பண்ண. அட்லீஸ்ட் உடனே வீட்டுக்காவது கிளம்பி போயிருக்கலாம்ல…🙄🙄🙄

நந்து பார்த்தா மட்டும் நாலுமைல் தூரம் தள்ளி ஓடுற. இவன் ஒரு ஆளுன்னு மல்லுக்கு நிக்குற. எனக்கு உன்மேல தான் கோபம் போ🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️
 
துஷ்டனை கண்டால் தூர விலகுன்னு சொல்லுவாளே! அந்தப் பழமொழி உனக்கு ஞாபகம் வரலையா ராதாமா…அவனைப் பார்த்ததும் ஏன் ரியாக்ட் பண்ண. அட்லீஸ்ட் உடனே வீட்டுக்காவது கிளம்பி போயிருக்கலாம்ல…🙄🙄🙄

நந்து பார்த்தா மட்டும் நாலுமைல் தூரம் தள்ளி ஓடுற. இவன் ஒரு ஆளுன்னு மல்லுக்கு நிக்குற. எனக்கு உன்மேல தான் கோபம் போ🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️
கவிக்குயிலுக்கு கோபம்.ஞான் எந்து செய்யும்?😳
 
Top