Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் அத்தியாயம் 21

Advertisement

parvathi

Active member
Member
Thanks to all readers for ur genuine support. Pls give ur feedbacks.

என் கதைகள் ஆடியோவில் கேட்க விருப்பப்பட்டால்@ BalaThiagarajanTamil Novels. utube. Com என்ற சேனலுக்கு வருகை தாருங்கள். Last BUT NOT THE LEAST PLS LIKE COMMENT SHARE N SUBSCRIBE


அத்தியாயம் 21

சாணி தெளித்த மண்தரையில் விழுந்திருந்த வெள்ளைப்புள்ளிகளை அழகான தாமரைப்பூவாக இணைத்த ராதா தன் கைவண்ணத்தை தானே ரசித்தபடி சற்று நேரம் நின்றாள்.



"ஹாய்! ட்ரீம் கர்ல் குட்மார்னிங்"



வெகு ஸ்வாதீனமாக பின்னாலிருந்து குரல் கேட்க, சட்டென்று திரும்பிப் பார்த்தவளின் விழிகள் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் அகல விரிந்தன.



"ஸ்ரீ ராம்! வாட் எ சர்ப்ரைஸ் எப்ப வந்திங்க?"



"இப்பத்தான். ட்ரெய்ன்லருந்து இறங்கி நேரா இங்கே தான் வர்றேன்.இன்னும் ஜானா வீட்டுக்குக்கூட போகல.வந்தவுடன் கிடைத்த முதல் தரிசனமே தேவி தரிசனமாயிடுச்சு. காட் ப்ளேஸ் மீ…"



கையில் பெட்டியுடன் ஏர்இந்தியா மகாராஜா பாணியில் சிரம் தாழ்த்தி வணங்கியவனைப் பார்த்து சிரித்தாள் ராதா.



"நீங்க மாறவே இல்லை ராம். அதே குறும்பு அதே கேலி..ஆமா நீங்க வரப்போறதா இந்த ஜானா சொல்லவேயில்லையே.சே! இந்த ஜானா ஆனாலும் ரொம்ப மோசம்.."



செல்லமாகச் சிணுங்கியவளை ரசித்துப் பார்த்தவன் மெதுவாக குரல் தழைய கேட்டான்



"ஆமா, விஸ்வாமித்திரி வீட்ல தானே இருக்காங்க? எங்கே காலை நேர பூபாளத்தைக் கேட்க முடியலே?"



அவன் பாட்டிக்கு வைத்திருக்கும் பெயர் தான் விஸ்வாமித்திரி.ராதா சிரித்துக் கொண்டே உள்ளே இருப்பதாக கை காட்ட, முகத்தில் போலியான பயத்துடன் நகர்ந்தான் ஸ்ரீராம்.



"நான் வர்றேன் ராதா.வந்ததும் வராததுமா அர்ச்சனை வாங்கி கட்டிக்க நம்மால முடியாது..ஸீ யூ லேட்டர் ஒகே…"



ராதாவிடம் விடைபெற்றுக் கொண்டு ஜானகியின் வீட்டிற்குள் நுழைந்தவனை ராமசந்திரன் வரவேற்றார்.



"வாங்க மாப்பிள்ளை..என்ன வர்றதா தகவல் கூட சொல்லாமல் திடீர்னு புறப்பட்டு வந்து நிக்கறிங்க.போன்ல ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நான் ஸ்டேஷனுக்கு அழைக்க வந்திருப்பேன்ல. அப்புறம் மாப்பிள்ளை ஊர்ல எல்லாரும் சௌக்கியம் தானே?"



நல்ல சௌக்கியம்….ஸ்ரீராம் புன்சிரிப்புடன் தலையசைத்தான்.



"சீதா இங்கே வந்து பாரு யார் வந்திருக்கானு…."



சமையலறையிலிருந்த சீதாலட்சுமி கணவரின் குரல் கேட்டு ஹாலுக்கு வந்தவள் ஸ்ரீராமைக் கண்டு ஆச்சரியப்பட்டாள்.



"அடடே ! நம்ம ஸ்ரீராம்.வாப்பா. அண்ணா மன்னியெல்லாம் சௌக்கியமா? உனக்கு அமேரிக்காவில் போஸ்டிங் கிடைச்சிருக்கறதா அண்ணா சொன்னாரே. அது நிஜம் தானா?.



விடாமல் கேள்விகளை அடுக்கினாள் சீதாலெட்சுமி.



"மாப்பிள்ளை இங்கே நம்மாத்துல தாண்டி இருக்கப் போறார்.உன் கேள்விகளெல்லாம் நீ அப்புறமாய் கேட்டுக்கோ.இப்போ போய் முதல்ல அவருக்கு காபி கொண்டு வா. அப்படியே ஜானகியையும் எழுப்பி மாப்பிள்ளை வந்திருக்கிற விஷயத்தை சொல்லிடு."



மனைவிக்கு வேலை கொடுத்து அனுப்பி விட்டு ஸ்ரீராமிடம் திரும்பிய ராமச்சந்திரன் முறுவலித்தார்.



"ஜானகி நேத்து நைட் ட்யூட்டி பார்த்ததால இன்னிக்கு இன்னும் தூங்கறா.அப்புறம் மாப்பிள்ளை நீங்க என்ன முடிவு பண்ணியிருக்கிங்க? அமேரிக்கா போறது நிச்சயமாயிடுச்சா? அங்கேயே செட்டில் ஆகறதா ப்ளானா இல்ல.."



அவர் முடிக்கும்முன் இடைமறித்தான் ஸ்ரீராம்.



"சே !சே ! அப்படியெல்லாம் எந்தப் ப்ளானும் இல்ல மாமா. இங்கே நவீன வசதிகளோட ஒரு நர்ஸிங்ஹோம் கட்டனும்னு ஆசை. அதற்கான வசதியும் அனுபவமும் கிடைக்கனும்றதுக்காகத் தான் இந்த அமேரிக்கா பயணம்.மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு வருசமோ இரண்டு வருசமோ கையில் கணிசமாய் ஒரு அமௌண்ட் சேர்ந்ததும் இந்தியா திரும்பிடுவேன்..ஜானா தான் கோர்ஸ் முடிக்கப் போறாளே.அவளும் கூட வந்தால் உதவியாக இருக்கும்.அதனால…"



முழுவதுமாக முடிக்காமல் இழுத்தவனைப் பார்த்து சிரித்தார் ராமசந்திரன்



"ஹனிமூனும் சம்பாத்தியமும் சேர்ந்தே வந்தால் திவ்யமாயிருக்கும்னு நினைக்கறிங்க.சபாஷ். ஜமாயுங்கோ மாப்பிள்ளை. நான் உங்க கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை சீக்கிரமே பண்ணிடறேன்."



"தாங்க்ஸ் மாமா.."



"யாருக்கப்பா கல்யாணம்?"



கேட்டுக் கொண்டே வந்த ஜானகி ஸ்ரீராமைப் பார்த்து வரவேற்கும் பாவனையில் சிரித்தாள்.



"என்னம்மா நீ தெரியாத மாதிரி கேட்கறே? கல்யாணம் உங்க ரெண்டு பேருக்கும் தான் வேற யாருக்கு நாங்க பண்ணுவோம்? சரி மாப்பிள்ளை நீங்க பேசிட்டிருங்க.நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வர்றேன்.."



"அப்புறம் டாக்டர் மேடம் ப்ராக்டிஸ் எல்லாம் எப்படி போய்ட்டிருக்கு?"



ராமசந்திரன் வெளியேறியவுடன் கேட்டான் ஸ்ரீராம்.



"ம் நாட் பேட்…" என்று மெதுவாய் முணுமுணுத்தாள் ஜானகி



"என்ன ஜானா வழக்கமா வளவளன்னு பேசறவ, இன்னிக்கென்ன ரொம்ப அளந்து பேசறே? நானும் வந்ததிலிருந்து பார்க்கறேன்.எண்ணி நாலே வார்த்தைகளை தான் பேசியிருக்க.என்ன விஷயம்? மாமா கல்யாணம்னு சொன்னவுடனே வெட்கமா?"



ஸ்ரீராம் குறும்பாய் கண்சிமிட்ட ஜானகியோ வெட்கத்துத்துடன் தலை குனிந்தாள்



"உனக்கு இந்த ஏற்பாட்டில் ஆட்சேபணையில்லயே ஜானா? "



"இது என்ன அசட்டுக் கேள்வி? "

என்று சிரித்தாள் ஜானகி.



"ஆமா என்னையும் எதற்காக. அமெரிக்காவிற்கு இழுக்கறிங்க? ரெண்டு பேரா சம்பாதிச்சா வேலை சுலபமா முடிஞ்சுடும்னா?"



"ம். அப்படியும் வெச்சுக்கலாம். ஆனால் முக்கியமான காரணம் மாமா சொன்னது தான். ஹனிமூனுக்கு ஹனிமூன் சம்பாத்யத்துக்கு சம்பாத்யம். எப்படி ஐடியா?"



"சீ…! ஜானகிக்கு வெட்கத்தில் முகம் சிவந்து போனது.



"என்ன சீ? அங்கே அமேரிக்காவில் குளிர் ஜாஸ்தி தெரியுமா? அந்தக் குளிருக்கு கம்பெனி கொடுக்க மாட்டியா?"

"ஐயோ!.. "

ஜானகி காதுகளைப் பொத்திக் கொண்டாள்.

"யூ ஹேவ் பிகம் ஸோ வல்கர். ஒரு கண்ணியமான டாக்டர் பேசற பேச்சா இது?"

"டாக்டர்னா இப்படியெல்லாம் ரோமேண்டிக்கா பேசக்கூடாதுனு இருக்கா என்ன? நான் ஒண்ணும் தப்பா பேசிடலையே.ஐ ஜஸ்ட் டோல்ட் யூ த பஃக்ட். அமேரிக்காவில் ரொம்பக் குளிரும்.."



ஸ்ரீராம் முடிக்கும் முன் அவசரமாய் அவன் வாயைப் பொத்தினாள் ஜானகி.

"ப்ளீஸ் ராம் போறும். ஸ்டாப் டாக்கிங் திஸ் நான்சென்ஸ்."

"ஒகே.ஒகே . கையை எடு.இல்லன்னா கிஸ் பண்ணிடுவேன்."

மூடிய கையில் அவன் உதடுகள் குவியவும் சட்டென்று தன் கையை எடுத்துக் கொண்டாள் ஜானகி.



சூட்கேஸைத் திறந்து உள்ளிருந்து டூத்பிரஸை எடுத்துக் கொண்டு ஸ்ரீராம் குளிக்கக் கிளம்பியதும் ஜானகி கேட்டாள்.



"குளிச்சுட்டு எங்கே போறதா உத்தேசம்?"



"வேற எங்கே? இந்த நந்துவைத் தான் போய் பார்க்கனும் ஜானா. செல்லுல பத்து தரம் கூப்பிட்டால் தான் ஒரு முறையாவது பேசறான். மெசேஜ் பண்ணினாலும் பதிலே இல்லை. இவன்லாம் ஒரு ப்ரெண்டுன்னு வந்து வாய்ச்சிருக்கான் எனக்கு. அதான் நேரிலேயே போய் செம்மையா ஒரு டோஸ் குடுத்துட்டு வரலாம்னு இருக்கேன்.

அவர் வீடு எங்கேனு தெரியுமா"



"ஓ நல்லா தெரியுமே.ஒரு வருஷம் முன்னால தானே அடையாறுல புது வீடு கட்டி கிரகபிரவேசம் பண்ணினான்.

அங்கே தானே இருப்பான்."



"ம்ஹூம்..உங்க ப்ரெண்ட் இப்போ

அங்கே இல்லை. வீடு மாறிட்டார்."



"வீடு மாறிட்டானா? என்ன சொல்றே நீ? அவன் என்கிட்ட எதுவும் சொல்லலெ. சேஞ்ச் ஆஃப் அட்ரஸ் கூட குடுக்கல. ஆமா ,உனக்கு எப்படி அவன் வீடு மாறியது தெரியும்?.



"அது சரி அக்கம்பக்கத்தில் யாராவது புதுசா குடி வந்தால் தெரியாமல் போகுமா?"



"வாட்?.... "ஸ்ரீராம் வியப்பில் புருவங்களை உயர்த்தினான்.



"நந்தகுமார் இங்கேயா குடி வந்திருக்கான்? எங்கே? எந்த வீடு? சீக்கிரம் சொல்லு ஜானா. அந்த மடையனை நான் இப்பவே பார்க்கனும். "



"ரொம்ப ஓவரா துடிக்காதிங்க.உங்க ப்ரெண்ட் எங்கேயும் ஓடிப் போய்ட மாட்டார். ஒன்பது மணிக்கு தான் ஹாஸ்பிட்டலுக்கு கிளம்புவார்.அதனால் நீங்களும் குளிச்சு டிபன் சாப்பிட்டு நிதானமாய் போய் பார்க்கலாம்.ஒண்ணும் அவசரமில்லே."



"ப்ளீஸ்! டோன்ட் பீட் அபவுட் த புஸ் ஜானா சீக்கிரம் விஷயத்துக்கு வா.நந்து இப்போ எங்கேயிருக்கான்? அதை முதலில் சொல்லு."



"அப்பா! காதலியைப் பிரிஞ்ச காதலனை போல் துடிப்பைப் பாரேன். ராதா ஆத்து மாடியில தான் குடியிருக்கார் உங்க ப்ரெண்ட்."



"தாங்க் யூ பார் த இன்பர்மேசன் டியர்"

கொஞ்சலாகச் சொல்லி விட்டு குளிக்கச் சென்றான் ஸ்ரீராம்.



ஸ்ரீராம் நந்தகுமாரனைப் பார்க்கச் சென்றபொழுது, அவன் தன் ஹாஸ்பிட்டலுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தான்.

நண்பனைக் கண்டவுடன் ஆச்சரியத்துடன் வரவேற்றான்.



"வாட் எ ப்ளசென்ட் சர்ப்ரைஸ்? என்னடா இது திடீர் விஜயம்? இங்கே வரப் போறதா ஒரு மெசேஜ் கூட பண்ணல."



"ஆஹா!! அப்படியே நான் மெசேஜ் பண்ணிட்டாலும் ஐயா என்னை வரவேற்க ஸ்டேஷனுக்கு வந்துடுவிங்களோ? சும்மா பேசாதடா. நீ வீடு மாறின விஷயம் கூட தெரியப்படுத்தலனு செம காண்டுல இருக்கேன். பெரிசா பேச வந்துட்டான்."



"சாரிடா ராம்.உன்னிடம் சொல்லியிருக்கனும் தான். ஆனால் வேலை பிஸியில மறந்துட்டேன்.சாரி அகெய்ன்.கோவிச்சுக்காதடா ப்ளீஸ்."



"மறப்படா ஏன் மறக்க மாட்டே?அட்லீஸ்ட் இந்த ஸ்ரீராம் யாருன்னாவது ஞாபகம் இருக்கா?"



"ஹேய் டோன்ட் பீ சில்லி ரொம்ப ஓட்டாதடா…".என்று நந்தகுமார் சிரித்துக் கொண்டிருந்தபொழுது, பேச்சுக்குரல் கேட்டு ஹாலுக்கு வந்த தேவகி ஸ்ரீராமை வரவேற்றாள்.



"அடடா! ஸ்ரீராமா! வாப்பா இப்பத்தான் எங்க ஆத்துக்கு வர வழி தெரிஞ்சுதா?"



"தாங்க் காட்! நீ மறந்துட்டாலும் அம்மா என்னை மறந்துடல. என்னம்மா எப்படியிருக்கிங்க? இந்த நந்துப்பயல் உங்களை நன்னா கவனிச்சுக்கறானா?"



"எனக்கென்னப்பா? நன்னாத்தானிருக்கேன் ஆமா நீ எப்படியிருக்க? ஜானகியைப் பார்த்தாயா? என்னவோ நீயாவது ஜானகியை சீக்கிரமாய் கல்யாணம் பண்ணிண்டு சந்தோஷமாய் இருந்தால் சரி.ஏண்டாப்பா நீயும் இவனை மாதிரியே கல்யாணத்தைத் தள்ளிப் போட்டுண்டே போறியே. இது சரியா?



"போச்சு வந்ததும் வராததுமா அவன் கிட்ட உன் கல்யாணபுராணத்தை ஆரம்பிச்சுட்டியா? கொஞ்சம் சும்மா தான் இரேன்…"



"ஓய்! அம்மா சொல்றதில் என்னடா தப்பிருக்கு? அம்மா நீஙக கவலையேபடாதிங்க. நான் கூட இப்போ கலயாணம் பண்ணிக்கற உத்தேசத்தில் தான் வந்திருக்கேன். அமேரிக்காவில் போஸ்டிங் கிடைச்சிருக்கு. அங்கே போறதுக்கு முன்னால கல்யாணத்தை முடிச்சுடலாம்னு பெரியவங்க 18அபிப்ராயப்படறாங்க. நானும் ஒத்துகிட்டேன். அப்படியே இவனுக்கும் ஒரு கால்கட்டு போட்டுடலாம். பொண்ணு பார்த்து வெச்சிருக்கேளா சொல்லுங்க இவனை நான் சம்மதிக்க வைக்கறேன்."



"உனக்கு என்மேல என்னடா கோபம்?"



நந்தகுமாரன் சிரித்தான்.



"ஜானகி கிட்ட நீ சீக்கிரம் மாட்டிகிட்டா அதுக்காக நானும் ஒரு பெண்ணிடம் சீக்கிரமா மாட்டிக்கனுமா?"



"இந்தக் கதையெல்லாம் வேணாம் அப்பனே .அம்மா! நீங்க தைரியமாய் பொண்ணு பாருங்க.இவனை சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு."



"பொண்ணுக்கென்னப்பா குறைச்சல்? இண்டஸ்ட்ரியலிஸ்ட் ராஜசேகரன் அவர் பொண்ணு சுஜாதாவை இவனுக்கு கட்டிக் கொடுக்க பாவம் நடையா நடக்கறார்.ஆனால் இவன் பிடி கொடுத்தாவது பேசினால் தானே? என்னவோ நீயாவது இவனை சம்மதிக்க வை. உனக்கு புண்ணியமாய் போகும்."



"அதுக்கென்னம்மா? நானா இவனானு பார்த்துடறேன்.நீங்க கவலையேபடாதிங்க"



ஸ்ரீராம் அபயம் அளித்தவுடன் தேவகி நிம்மதியாய் தன் அடுக்களை வேலையை கவனிக்கச் சென்றாள்.
 
Top