Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-23

Advertisement

praveenraj

Well-known member
Member
குஷா மொட்டுவின் கழுத்திலும் லவா அனுவின் கழுத்திலும் அடுத்தடுத்து தாலி கட்டிவிட சுற்றியிருந்தவர்களோ மணமக்களுக்கு அட்சதையைத் தூவ ஜானகியோ நடக்கும் இந்நிகழ்வுகளால் பிபி ஏறி மயக்கமடைந்தார். தாமதமாகவே இதைக் கவனித்த ரகு,"ஜானு..." என்ற குரலுடன் அவரைத் தாங்கிப்பிடிக்க அதற்குள் வைத்தி, கனகா நந்தா என்று எல்லோரும் ஜானகியை ஒரு அறையில் படுக்கவைக்க லவாவும் குஷாவும் அதிர்ந்து நோக்க அவர்களைக் கடந்த ரகு ஒரு கணம் நின்று,"ஏன்டா இப்படிப் பண்ணீங்க? அனு கழுத்துல நீ ஏன் தாலி கட்டுன லவா?" என்றவர் மேற்கொண்டு நிற்காமல் உள்ளே விரைய அனுவோ நிமிர்ந்து தனக்கு தாலி கட்டிய லவாவைப் பார்க்க அவனோ தங்களுக்கு எதிரில் அதே அதிர்ச்சியுடன் குஷாவைப் பார்க்கும் மொட்டுவையே கண்டான்.
நேற்று முந்தின இரவு:
சூரக்கோட்டையில் வைத்தியின் இல்லமே விழாக்கோலம் கொண்டு காட்சியளித்தது. வீடு முழுக்க சீரியல் விளக்குகள் எரிய சொந்த பந்தங்கள் அனைவரும் ஒன்றுகூடி கூச்சலும் சிரிப்புமாக இருந்தது. பாரி மற்றும் இசை ஆகியோர் இன்று தான் வந்திறங்கினார்கள். மணவாளன், அபி ஆகியோர் தங்கள் அன்னையர்களின் ஆணைக்கிணங்கி பரணில் இருக்கும் சில பொருட்களை எல்லாம் எடுத்துக் கொடுத்தனர். என்ன தான் திருமணம் வீட்டில் என்று முடிவானாலும் தட்டு வரிசை குத்துவிளக்கு முதலியவை இல்லாமல் எவ்வாறு திருமணம் செய்வதென்று அதற்கான ஏற்பாடுகள் களைகட்டியது.
இரவு பதினொன்றைக் கடந்தும் யாரும் உறங்காமல் இருக்க கனகா தான் எல்லாவற்றையும் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று அனைவரையும் உறங்குமாறு அவரவர் அறைக்கு அனுப்பிவைத்தார். இதுபோல விழாக்களின் வேளையில் அது வெற்றிகரமாக முடியும் வரை பெரும்பாலும் அதை நடத்துபவர்களுக்கு நிம்மதியாக உறக்கம் வராது அல்லவே? அதுபோல் தான் வைத்தியின் நிலையும் இருந்தது. வீடே சிரிப்பொலியிலும் பேச்சுச் சப்தத்திலும் இருக்க சம்மந்தப்பட்ட நால்வருடைய உள்ளம் மட்டும் அலைகளாக எழுந்து அடங்கியது.
வீடு அமைதியாக இருக்கே வெளியே நீண்ட நேரமாக குரைத்த நாயின் ஒலியில் அதைக் கவனிக்க வந்த வைத்திக்கு மாடியில் யாரோ நடப்பதைப்போல் நிழலாடியது. உபயம் வீட்டைச் சுற்றி எரிந்த விளக்குகள். மேலே பார்த்தவருக்கு அது அனு என்றதும் ஒருகணம் திடுக்கிட்டது. பிறகு மேலே ஏறியவர் ஒரு மூலையில் நின்று எதையோ வெறித்தபடி இருந்த அனுவை நெருங்கி,"அனுமா..." என்றதும் அக்குரலில் அதிர்ந்து திரும்பியவளின் கண்கள் கலங்கியிருந்தது. ஏனோ அதைப் பார்த்த கணமே வைத்திக்கு சொல்லிலடங்காத் துக்கம் தொண்டையை அடைக்க,
"என்ன டா பண்ற இங்க?" என்றவர் இடைவெளி விட்டு,"அதும் இந்நேரத்துல?" என்றார்.
ஏனோ அவருக்கு பதிலளிக்க முடியாமல் திண்டாடிய அனுவின் கன்னங்களில் இருந்து கண்ணீர் உருண்டோட சுற்றிவளைக்காமல் நேரகா,"உனக்கு இந்தக் கல்யாணத்துல முழு சம்மதம் தானே..." என்று இழுக்க,
அவரையே ஒருகணம் உற்று நோக்கியவள் இல்லை என்பதைப் போல் தலையசைத்தாள். ஏனோ வைத்திக்குத் தான் உயிரே இல்லாமல் போனது. பின்னே அனைத்தையும் பார்த்து எல்லோருடைய விருப்பத்தையும் கேட்டு தானே இத்திருமணத்தை அவர் நடத்துகிறார். அவரைப் பொறுத்தவரை எல்லோருக்கும் இந்தத் திருமணத்தில் சம்மதம் என்று எண்ணியவருக்கு அனுவின் இந்த பதில் அதிர்ச்சியைத் தர மேற்கொண்டு சுற்றி வளைக்காமல்,"யாரையாச்சும் விரும்புறையா அனு? உங்க அப்பா இதுக்கு சம்மதிக்கச் சொல்லி கட்டாயப் படுத்தினானா?" என்று இறுதியில் சுசியின் மீது தன் கோபத்தைக் காட்ட,
"இல்லை தாத்தா. அப்பா மட்டும் இதுக்குக் காரணமில்லை... நீங்க தான் காரணம். நீங்க மட்டுமில்ல, ரகு மாமா, ஜானு அத்தை, மொட்டு, லவா, குஷா எல்லோரும் தான். ஏன் நானுட்பட..." என்றதும் புரியாமல் விழித்தவருக்கு தன்னுடைய வாழ்வின் ரகசியப் பக்கங்களைச் சொல்ல ஆரமித்தாள்.
"நான் சின்ன வயசுல இருந்து லவா குஷா ரெண்டு பேர் கூடவும் ஒரு ஃப்ரண்டா ஜாலியா தான் பழகுனேன் தாத்தா. எங்களுக்குள்ள சாரி மத்தவங்களுக்குப் எப்படினு தெரியில எனக்குள்ள இருந்ததெல்லாம் கசின்ஸ் லவ் அண்ட் பாண்டிங் மட்டும் தான். ஒரு நல்ல புரிதல் இருந்தது. அதும்போக நான் எப்பயும் குஷா கூடவே தான் சுத்திட்டு இருப்பேன். அது உங்களுக்குள்ள நல்லாவே தெரியும். ஆனா போன முறை உங்க வெட்டிங் அன்னிவெர்சரிக்கு வந்த போது தான் முதல் முதலா லவாகூட நெருங்கி பழக ஆரமிச்சேன். அதுவரை நான் பார்த்து பழைய லவா அவனில்லை. எனக்குள்ள அவ வேரோரு ஃபீல் கொடுத்தான். எனக்குத் தெரிஞ்சு நான் லவா கூட அவ்வளவு நெருக்கமா பழகியதே இல்ல. முதல்ல அவன் நடிக்கிறான் இல்ல என்னை கலாய்க்கிறானு தான் நெனச்சேன். ஆனா பழக பழக எனக்குள்ள பல மாற்றங்களை அவன் கொடுத்தான். அந்த இருபத்தியொரு நாள்ல டெய்லி சுமார் எட்டுல இருந்து பத்து மணிநேரம் அவன் கூடவே ஸ்பென்ட் பண்ணேன். அப்போ தான் நான் லைஃப்ல முதல் முதலா காதல்ங்கற ஒன்னை உணர ஆரமிச்சேன். அவன் கூட பைக்ல போறது அவனை வம்பிழுப்பதுனு எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சது. அப்போ தான் அவங்க ரெண்டு பேரும் கோச்சிட்டுப் போயிட்டாங்க..." என்று தன்னுடைய ப்ளோவில் நடந்ததை உளறிவிட,
"ஏன் என்னாச்சு?" என்றவருக்கு மொட்டுவுக்கும் குஷாவுக்கும் நடத்த நடக்கும் சண்டையிலிருந்து இறுதியில் லவாவுக்கும் மொட்டுவுக்கும் நடந்தது வரை அனைத்தையும் சொல்லிவிட்டாள். இந்தக் கதையெல்லாம் வைத்திக்கு புதியதாவே இருந்தது. அதேநேரம் பெரியவர்களின் சண்டையை சிறுவர்கள் இந்த அளவிற்கு தொடர்ந்து எடுத்துச் செல்லுவார்கள் என்று எதிர்பார்க்காத வைத்தி உண்மையிலே இப்போது மனமுடைந்து போனார்.
"அந்தச் சமயத்துல தான் ஜானு அத்தை லவாவுக்கும் குஷாவுக்கும் எங்களைக் கேட்டாங்க. அப்போ தான் நீங்க அன்னைக்கு அம்மாச்சிகிட்ட எனக்கும் லவாவுக்கும் மேரேஜ்ன்னும் அதே போல குஷாவுக்கும் மொட்டுவுக்கும் மேரேஜ் செய்யணும்னு நீங்க பேசுனதைக் கேட்ட நான் எல்லாம் எனக்கு ஆசைப்பட்ட மாதிரியே நடக்குதேன்னு ஹேப்பியா இருந்தேன். அப்போ தான் இடையில ஒருநாள் லவாகிட்ட நான் என் காதலையும் சொன்னேன். அவனுக்கு இது ஷாக்கா இருந்தாலும் யோசிச்சு சொல்றேன்னு சொன்னான். ஆனா அவன் பேச்சுல எதோ ஒன்னு எனக்கு நம்பிக்கை கொடுத்தது. அவன் இதுவரை வெளிப்படையா எனக்கு ஓகே சொல்லலைனாலும் என் மேல அவனுக்கு ஒரு க்ரஷ் இருந்ததை நான் உணர்ந்தேன். அப்போ தான் திடீர்னு ஜோடி மாறிடுச்சு. அதாவது பெரியவங்களான நீங்க ஜோடியை மாத்திட்டீங்க. சரி இதைப் பத்தி உங்ககிட்ட அன்னைக்கு சொல்லலாம்னு தான் நடுவுல நான் ஊருக்கு வந்தேன்.(திருமணப் பேச்சை எடுத்து நிச்சயத்திற்கு முன்பு அனு மட்டும் இங்கே வந்தாள்) அப்போ தான் நீங்க,'மொட்டுக்கு லவா தான் சரியான ஜோடி. நான் தான் அன்னைக்கு தப்புனு...' அப்பத்தா கிட்டச் சொல்லிட்டு இருந்திங்க. அதும் போக ரகு மாமா இறங்கி வந்ததே பெருசு அதனால் இந்தக் கல்யாணம் எந்தச் சிக்கலும் இல்லாம நடக்கும்னு பேசுனது என்னை ரொம்ப பாதிச்சது. இதே மாதிரி லவாவும் என்கிட்ட அன்னைக்கு ஒன்னு சொன்னான். இருக்குற நிலையில குஷாவுக்கும் மொட்டுவுக்கும் மேரேஜ் சுத்தமா செட் ஆகாது அதனால் பேசுன படியே மேரேஜ் நடக்கட்டும்னு சொல்லிட்டான். சம்மந்தப்பட்ட அவனுக்கே இதுல விருப்பமில்லைனு தெரிஞ்சதும் நான் குஷாவை மேரேஜ் பண்ண ஒத்துக்கிட்டேன். ஆனா..." என்று அவள் நிறுத்த,
"என்னமா எல்லாத்தையும் மறைக்காம சொல்லு..."
"என்னதான் அவங்க ரெண்டு பேரும் உருவத்துல ஒரேமாதிரி இருந்தாலும் பழக்க வழக்கம் குணாதிசயம்னு எல்லாம் வேற வேற தானே? என்னால எவ்வளவு முயன்றும் குஷா கிட்ட அந்த ஸ்பார்க்கை பார்க்கவே முடியல. எப்படிச் சொல்ல? இவரைத் தான் நாம் மேரேஜ் செய்யப்போறோம்னு தெரிஞ்சதும் அவங்க மேல நமக்கு ஒரு ஈர்ப்பு வரணுமில்ல? அதை நான் இந்த நிமிஷம் வரை உணரவேயில்ல தாத்தா... அதுவே அந்த இடத்துல லவாவை நினைச்சா எனக்கு இந்தப் பிரச்சனை இல்ல... இப்போ மேரேஜுக்கு நாள் நெருங்க நெருங்க எனக்குள்ள நிறைய குழப்பம். என்னால குஷாவை என் ஹஸ்பண்டா நினைக்கவே முடியல... அவன் எனக்கொரு பெஸ்ட் ஃப்ரண்ட், வெல் விஷேர் கைட் பார்ட்னர் இன் க்ரைம்... ஆனா அதுக்கு மேல எதுவும் இல்ல தாத்தா... இப்போ நான் என்ன பண்றது?" என்று கேட்டு நிமிர்ந்தவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் யோசித்தவர்,"எனக்கு காலை வரை கொஞ்சம் அவகாசம் கொடுமா... நிச்சயம் இதுக்கொரு நல்ல முடிவை நான் சொல்றேன். லவாவுக்கு இதுல விருப்பம் இருந்ததுனா கட்டாயம் அவன் தான் உன் கழுத்துல தாலி கட்டுவான். அதே மாதிரி அவனுக்கு இதுல சம்மதம் இல்லைனா நிச்சயம் இந்தக் கல்யாணம் நடக்காது. இது தாத்தா உனக்குச் செய்யுற ப்ராமிஸ்... நீ எதையும் போட்டுக் குழப்பிக்காத..." என்றவர் அவளுக்கு ஆறுதல் அளித்தாலும் அடுத்து என்னவெல்லாம் நடக்குமோ என்று எண்ணிக் கலங்கினார்.
வைத்தி மாடியேறிச் சென்றதைக் கண்ட குஷா பின்னாலே வந்து இவர்களின் உரையாடல்கள் அனைத்தையும் கேட்டவனுக்கு அனுவோட நிலை நன்றாகவே விளங்கியது. பின்னே இதில் அவனுடைய நிலையும் கிட்டத்தட்ட இதே தான். மேலும் அவள் தன்னைத் திருமணம் செய்ய அவள் விரும்பவில்லை என்றதைக் கேட்டவனுக்கு இயல்பாக வரவேண்டிய கோவம் வராமல் இதை வெளியில் சொல்லமுடியாமல் அவள் எவ்வளவு திண்டாடியிருப்பாள் என்று எண்ணி அவளுக்காகவே தான் கலங்கியது. உடனடியாக கீழே சென்றவன் லவாவிடம் இதைப்பற்றிக் கேட்க அவனோ எல்லாம் உண்மை என்றான்.
"அப்பறோம் ஏன்டா இந்த மேரேஜுக்கு ஓகே சொன்ன? நீ என்ன பைத்தியமா?" என்றான் குஷா.
"அதான் சொன்னேனே அம்மா..." என்று முடிக்கும் முன்னே எரிச்சலடைந்த குஷா,
"சும்மா சும்மா அம்மாவையே காரணம் சொல்லாத... ஓகே பாஸ்ட் இஸ் பாஸ்ட்... நாளை கழிச்சு அனு கழுத்துல நீ தாலி கட்டுற... ஓகே?" என்றதும்,
"அப்போ மொட்டு வாழ்க்கை என்ன ஆகுறது?" என்றவனை ஒரு பார்வைப் பார்த்தான் குஷா. அப்பார்வையின் அர்த்தம் விளங்கியவன்,
"உன் லைஃபும் தான் என்ன ஆகுறது?" என்று நிறுத்த,
"என் வாழ்க்கையை நான் பார்த்துக்கறேன். அதைப்பற்றி நீ கவலைப்பட வேண்டாம். புரியுதா?" என்றான் குஷா.
"சரி அப்போ மொட்டு வாழ்க்கை?"
"ஏன் இதுக்கு மேல அவளுக்கு கல்யாணமே நடக்காதா என்ன?" என்ற குஷாவின் பதிலில் அதுவரை அடங்கியிருந்த கோவத்தையெல்லாம் ஒன்று திரட்டி,
"உன்னால எப்படி குஷா இப்படியெல்லாம் பேச முடியுது? உனக்கு கஷ்டமா இல்ல? ஒரு பொண்ணை இப்படி கல்யாணம் வரை கூட்டிட்டு வந்து ஏமாத்துறது துரோகம் இல்லையா?"
"அதே மாதிரி இன்னொரு பொண்ணைக் காதலிச்சிட்டு அவளைக் கஷ்டப்படுத்துறதும் துரோகம் தான்..." என்று குஷா முடிக்க இதற்காகவே காத்திருந்த லவா,
"பின்ன எப்படி உன்னால மட்டும் அதைச் செய்ய முடியுது குஷா?" என்ற லவாவின் கேள்வியில் ஒருகணம் அதிர்ந்தவன் அதை மறைத்து,"என்ன உளற?"
"அதெப்படி குஷா நாம நேசிக்குற ஒருத்தவங்கள அதே அளவுக்கு கஷ்டப்படுத்தி வெறுக்கவும் முடியுது?" என்று தீர்க்கமானப் பார்வை ஒன்றை அவன் மீது லவா செலுத்த,
"யாரு யாரை நேசிக்குறது? நான் மொட்டுவை விரும்புறேன்னு உன்கிட்டச் சொன்னேனா?" என்று குஷா சொன்னது தான் தாமதம்,
"நான் மொட்டுவை ஸ்பெசிஃபை பண்ணவே இல்லையே?"
"இப்போ டாபிக் அவளைப் பத்தி தானே பேசுறோம்..." என்ற குஷாவிற்கு,
"ரொம்ப அழகா ரெட்டை வேஷம் போடுற குஷா... ஆனா இதை நீ வேற யார் கிட்டயாவது முயற்சி பண்ணலாம். ஆனா என்கிட்ட இது செல்லுபடி ஆகாது..."
"இப்போ எதுக்கு தேவையில்லாததைப் பத்திப் பேசுற? அனுவுக்கும் உனக்கும் தான் கல்யாணம் சரியா?"
"அப்போ இதுக்கென்ன பதில்?" என்றவன் தன்னுடைய ட்ராலி பேகில் இருந்து ஒரு டைரியை எடுக்க குஷாவின் முகம் வெளிறியது.
"இதெப்படி உன்கிட்ட வந்தது? கொடு அதை..." என்று அதைப் பிடுங்கச் சென்றவனிடம் அதை நீட்டியவன்,
"நீ டைரி எழுதுவன்னு தெரியும். அதுலயும் சூரக்கோட்டை டைரிஸ்ன்னு ஒரு சேப்டரே இருக்கு. அது கூட ஓகே... ஆனா இதுல அடிக்கடி திமிரழகி திமிரழகினு ஒரு பேர் வந்துட்டே இருக்கு. அது யாருனு தான் நானும் யோசிச்சு யோசிச்சு பார்க்குறேன் ஆனா பதில் கிடைக்கவே மாட்டேங்குது. அனு, அபி, பாரி, இசை, இனி, ரித்து, ஆனந்தி ஏன் லவா கூட இருக்கான். ஆனா இதுல இல்லாத ஒரு பேர்னா அது மொட்டு. அதே மாதிரி திமிரழகினு ஒரு புதிய ஆள் இருக்காங்க. சோ..." என்று லவா இழுக்க,
"அடுத்தவங்க டைரி படிக்கறது அநாகரிகம் இல்ல?" என்று எரிந்து விழுந்தவனிடம்,
"ஒரு மூன்றாவது நபர் டைரியை படிக்கறது தான் தப்பு. நீ அப்படியில்லை. நானும் நீயும் பிறக்கும் போதே ஒட்டிப் பிறந்தவங்க. ஐ மீன் ஓருடலா இருந்து இரண்டு நபர்களோ மாறினோம். சோ நீயும் நாளும் தனியாள் இல்ல... சில ட்வின்சுக்கு டி.என்.ஏ கூட ஒன்னாவே ஐ மீன் நூறு சதவீதம் மேட்ச் ஆகுமாம். யாரு கண்டா நாம கூட அப்படியிருக்கலாம். அதை விடு, இதுக்கென்ன பதில் சொல்லுவ?" என்ற லவாவிற்கு ஏனோ அதைப் படித்த நாளிலிருந்து தன் ரெட்டைச் சகோதரனிடம் இதைப் பற்றிக் கேட்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. இருந்தும் இவன் எவ்வளவு தூரம் செல்லுகிறான் என்பதைப் பார்க்கவே அவன் இதுநாள் வரை காத்திருந்தான். ஒரு வேளை இன்றிரவு இதைப் பற்றி அவன் கேட்காமல் இருந்தால் நாளை லவாவே இதைப்பற்றிப் பேசியிருப்பான். மேலும் தங்களுக்கு திருமணம் முடிவாகி ஹைதராபாத் செல்வதற்காக சென்னையில் தங்கியவனின் கண்களில் தான் இந்த டைரி தென்பட்டது. அதையும் கூட அவன் அப்போதே படிக்கவில்லை. ஆனால் தன்னிடம் அனு ப்ரபோஸ் செய்த பிறகு தான் அதிகம் குழப்பமடைந்தவன் இதைப் படிக்க ஆரமிக்க அதிலும் குஷாவின் பெர்சனல் பக்கங்களை அவன் அடைவதற்கு காலத் தாமதம் ஏற்பட்டு விட்டது. ஆனால் இதைப் படித்தவனின் மனம் தான் இத்தனை நாட்கள் இதை தன்னிடமிருந்து கூட மறைத்த தன் தம்பியை எண்ணி கடும் கோவம் கொண்டான். அதே வேளையில் அனுவை அவன் நேசிக்கவும் நேர்ந்தது. ஆனால் இதைப்பற்றி அவனாக வாயைத் திறப்பான் என்று காத்திருந்தவனுக்கு குஷாவின் மெத்தனப்போக்கு அதிக குழப்பத்தைக் கொடுக்க இதில் எது உண்மை என்ற குழப்பத்தில் உழன்றான்.
"இப்பயும் என்னால இதைப் புரிஞ்சிக்கவே முடியல... இதுல எது தான் உண்மை? நேர்ல பார்க்குற நீயா இல்ல டைரியில் இருக்குற உன் மனசா? இல்ல இப்படித் தான் ரெட்டை வாழ்க்கை வாழ்ந்திட்டே இருக்கப்போறயா?" என்று வேதனை நிரம்பிய குரலில் லவா கேட்க,
"ரெண்டுமே உண்மை தான் லவா. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல... என்ன மொமெண்ட்ல இருந்து நான் அவளை ரசிக்க ஆரமிச்சேன்னு எனக்கே தெரியல. சின்ன வயசுல நாமெல்லாம் ஒரு விஷயத்தை பெர்பெக்ட்டா செஞ்சு அதுக்கு பேர் வாங்குவோம் ஆனா அவ மட்டும் இம்பெர்பெக்ட்டா செஞ்சு அதே பேர் வாங்குவா... நாமெல்லாம் படிச்சு நல்ல மார்க் வாங்குனதால வீட்ல நம்மைப் புகழ்வாங்க. ஆனா அவளை மார்க் வாங்காமலே எல்லோரும் புகழ்வாங்க... பல நாள் கூப்பிட்டு அவளைத் தனியா திட்டியிருக்கேன். சண்டை போட்டிருக்கேன். ஆனா அவளை விட்டு ஒதுங்கியது மட்டும் இல்ல. நமக்கு ஒருத்தங்களைப் பிடிக்கலைனா ஒதுங்கிப் போவோம் தான். ஆனா அது நாம மெட்சூர் ஆனப்பிறகு தான் செய்வோம். அதுவே அந்த மெட்சூரிட்டி இல்லைனா நாம நம்ம செல்ப் டப்பாவை அவங்க முன்னாடி சொல்லி அவங்களை மட்டம் தட்டுவோம். அதே தான் நானும் செஞ்சேன். அதும் போக அவளை நாம எதாவது சொன்னா பயந்தோ இல்லை வேற காராணத்துக்காகவோ எல்லாம் ஒதுங்கிப்போக மாட்டா. ஏட்டிக்குப் போட்டியா நம்ம கிட்ட வரிஞ்சுக்கட்டிட்டு நிப்பா. இன்னும் தெளிவாச் சொல்லனும்னா என் ஈகோவை டச் பண்ணிப்பார்ப்பா... அப்படி ஒரு முறை அவ நம்ம அப்பாவையும் அம்மாவையும் தப்பாப் பேசின அப்போ அவகூட சண்டை போட ஆரமிச்சேன். அது இப்போ வரை தொடருது. ஆனால் இதுக்கெல்லாம் பின்னாடி அவளை எப்படியாவது என் முன்னாடி தோற்கடிச்சுப் பார்க்கணும்னு தான் நெனச்சேன். ஆனா இதுல நான் எப்போ தோத்தேன்னு எனக்குத் தெரியில லவா. அவ எப்போப்பாரு உன்கூடவே பேசி சிரிச்சு ஜாலியா இருக்கும் போதெல்லாம் எனக்கு ஒரே எரிச்சலா இருக்கும். ஆனா அதுக்கு காரணம் என்னனு பிறகு யோசிச்சா நான் உன்மேல பொறாமை பட்டிருக்கேன்னு பதில் கிடைக்கும். இன்னும் தெளிவாச் சொல்லனும்னா உன் இடத்துல நான் இருக்கணும்னு நெனச்சிருக்கேன். நானும் நீயும் ஒரே உருவத்துல தான் இருக்கோம் ஆனா உன்கிட்ட மட்டும் சிரிச்சு சிரிச்சு பேசும் அவ என்கிட்ட மட்டும் ஏன் எப்பயுமே முறைச்சிட்டே இருக்கானு எனக்குத் தெரியாது. சமயங்கள்ல அவகிட்டப் பேசனுங்கறதுக்காகவே அவளை நான் சண்டைக்கு இழுப்பேன். இது ஏன் எதுக்குன்னு எனக்கு இப்போ வரை புரியல லவா. இதுக்கு நடுவுல அவ நம்ம அப்பாவைப் பத்திப் பேசும் போதெல்லாம் நம்ம அப்பாவை அவளுக்குப் புரியவெக்க தான் நான் நெனப்பேன். அதாவது தப்பு அவர் மேல இல்லனு காட்டி ஒருவேளை அதால அவகூட ஒரு சுமுகமான ரிலேஷன் ஷிப் ஏற்படுத்த நெனச்சிருக்கேன். ஆனா அவளோ வழக்கம் போல அதைப் புரிஞ்சிக்காம தாத்தாவுக்கு வரிஞ்சிக்கட்டிட்டு வந்திடுவா. அவ ஏன் படிக்கவே மாட்டேங்குறானு நினைக்கும் போதெல்லாம் ஒரு எரிச்சல் வரும். அதன் வெளிப்பாடாவே தான் அவளை எப்பயும் மட்டம் தட்டுவேன். அட்லீஸ்ட் அப்பயாவது அவ ஒழுங்காப் படிப்பாளான்னு ஒரு எண்ணம். இன்னைக்கு யோசிச்சா நான் அவ மேல காட்டுன எல்லா வெறுப்புக்கும் பின்னாடி அவ பார்வை என் மேல விழனுன்னு தான் நெனச்சிருக்கேன். இது எவ்வளவு பெரிய அபத்தமில்ல? என்னால முடியில லவா... எனக்குப் புரியல. நமக்குப் பிடிச்சவங்க நமக்குப் பிடிச்ச மாதிரியே இருக்கணும்னு நாம ஆசைப்படுவோமில்ல? அது தான் இது. ஒருநாளாச்சும் ஒரு பொண்ணு மாதிரி டிரஸ் பண்ணியிருக்களா? அதை நான் அவகிட்ட எதிர்பார்த்திருக்கேன். எனக்கு ஏன்னு தான் புரியல. அவ நம்ம எல்லோர மாதிரி நல்லாப் படிக்கணும்னு நான் ஆசைப்பட்டேன்... இப்படியே எங்க லைஃப் போயிட்டு இருந்தது. அன்னைக்கு அவ சாப்பிடுற விஷயத்துல கணக்கு பார்த்ததும் நான் பணம் கொடுத்தேன் இல்ல அப்போ என் மனசு என்ன ஆசைப்பட்டது தெரியுமா? அவ ஒரே ஒரு முறை என்கிட்ட வந்து உரிமையா இங்க சாப்பிடு குஷானு அவ சொல்லுவானு எதிர்பார்த்தேன். ஆனா அவளோ நான் பணம் கொடுத்ததும் அதை மறுபேச்சுப் பேசாம வாங்கிட்டா. அதுவே அன்னைக்கு அவளை நான் அடிச்சதும் நான் உள்ள எவ்வளவு கஷ்டப்பட்டேனு உனக்குத் தெரியுமா? இந்த ரிலேஷன்ஷிப்புக்கு என்ன பேர் என்ன அர்த்தம் எதுவும் புரியல... ஆனா ஒன்னு மட்டும் நல்லாப் புரியுது... நான் அவளை எவ்வளவு விரும்பறேனோ அதே அளவுக்கு அவளை நான் வெறுக்குறேன்... அவளை நான் வெறுக்க ஒரே காரணம், அவ இப்போ வரை நம்ம அப்பாவைத் தப்பா தான் புரிஞ்சிட்டு இருக்கா... ஏன் நம்ம அம்மாமேலயும் அவளுக்கு அபிப்ராயம் இல்ல. இந்த காம்ப்ளிகேட்டட் ரிலேஷன்ஷிப்ன்னு ஒன்னு இருக்கும் தானே? அது தான் எங்களோட உறவு..."
"டேய் இதைப் பத்தி ஏன்டா என்கிட்ட ஒரு முறை கூட நீ சொல்லவேயில்லை?"
"எப்படிச் சொல்லுவேன் லவா? இந்த உறவுக்கு என்ன பேருனு எனக்கே இப்போ வரை புரியல... அதும் போக அவளுக்கு என்னை எப்பயுமே பிடிக்காதுடா..." என்ற கூற்றில் ஒலித்த அந்த இயலாமையை லவாவால் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது.
யோசித்தவன்,"ஒரே ஒரு பதில் மட்டும் சொல்லு குஷா... எனக்கும் அவளுக்கும் கல்யாணம்னு நினைக்கும் போது நீ என்ன உணருற?"
"நான் ஏன் உன் இடத்துல இல்லைனு நினைக்குறேன்..." என்று உடனடியாகவே பதில் வந்தது.
"இப்போ நீ சொன்னதுல பொய் இல்லையே?"
"கடுப்பைக் கிளப்பாத லவா... ஒரு பக்கம் அனுவை என் வைஃப்பா நினைக்க முடியல மறுபக்கம் பனித்துளியை உன் வைஃப்பா நினைக்க முடியல... அன்னைக்கு அப்பா அவளைப் பத்தி விசாரிக்கும் போது நான் சொன்ன பதிலால தான் இன்னைக்கு அவ இங்க இருக்கா. ஆனா ட்விஸ்ட் என்னன்னா அவ உனக்கு ஜோடியா நிக்குறா..." என்றவனுடைய கூற்றில் அவ்வளவு பொறாமை தென்பட்டது.
"அப்போ இதுக்கு ஒரே வழி தான் இருக்கு. ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு சில விஷயங்கள் தெளிவாகனும்..." என்றதும் ஒருகணம் குஷாவின் மனம் குதூகலித்தது.
"உனக்கெப்படி அனு உன் பெஸ்டியோ அது போல தான் மொட்டு எனக்கு. நான் தான் அவளோட மோட்டிவேட்டர், வெல் விஷ்ஷெர் எல்லாம். எனக்கு இந்த விஷயம் தெரிஞ்ச அப்போயிருந்து உன்கிட்ட இதைப்பற்றிப் பேச எனக்கு இருந்த தயக்கமே இது தான்... ஒரு வேளை நீ மொட்டுவைக் கல்யாணம் பண்ணா அப்பயும் அவளை இப்படி மட்டம் தட்டி வெறுப்பேத்தி கஷ்டப்படுத்த மாட்டேன்னு என்ன நிச்சயம்? ஏன்னா உனக்கு அவ மேல இருப்பது ஒரு லவ் ஹேட் ரிலேஷன்ஷிப் தானே?" என்று லவா புருவம் உயர்த்த,
"அந்த லவ் ஹேட் ரிலேஷன்ஷிப்ல ஹேட் வந்ததுக்கு நீ தான் முக்கியக் காரணம்..."
"பார்ரா விட்டா என்னை வில்லனாகி ஹீரோவான நீ என்னை வீழ்த்திட்டு அவ கூட டூயட்டே பாடுவ போல?" என்று லவா வினவ, குஷா சிரித்தான்.
"எனக்கு நீ மூணு ப்ராமிஸ் பண்ணனும். முதல்ல, அப்பாவுக்கு சப்போர்ட் பண்றேங்கற பேர்ல தாத்தாவையோ திட்டக்கூடாது. ரெண்டாவது, அவளை எந்த இடத்துலயும் நீ மட்டம் தட்டி ஹியூமிலேட் செய்யவே கூடாது. மூணாவது தான் ரொம்ப முக்கியம்...." என்று லவா நிறுத்த,
"என்னடா?" என்று ஆவேசப்பட்ட குஷாவிடம்,
"இப்படி ஆவேசப்படக்கூடாது..."
"உன்னை..." என்று பல்லைக்கடித்தவனிடம்,
"இப்படிக் கோவப்படக்கூடாது..." என்றதும் தான் லவா சொல்ல வருவது புரிந்து அமைதிகாத்த குஷாவிடம்,
"குட். இப்போ எப்படி அமைதியா இருக்கியோ அப்படியே இருக்கனும்... ஒரு பொண்ணு மனசுல நல்லவன்னு பேர் வாங்குறது ரொம்ப கஷ்டம். அதிலும் நல்ல ஹஸ்பண்ட் ஆகுறது ரொம்ப ரொம்ப கஷ்டம்... நீ முதல் நல்ல மனுஷா அவ மனசுல இடம் பிடிக்கணும். அப்பறோம் நல்ல ஹஸ்பண்ட் ஆகணும்..." என்ற லவா இவையாவும் தற்போதிருக்கும் நிலையில் தனக்கும் அவசியம் என்று புரிந்துகொண்டான்.
"ஓகே என் மேல ப்ராமிஸ் பண்ணு..." என்று லவா கேட்க அப்போது பார்த்து உள்ளே நுழைந்தார் வைத்தி. அவரைக் கண்டு இருவரும் அதிர,
"நல்ல முடிவெடுத்திருக்கிங்க... கடைசி நேரத்துல இது தான் ஒரே வழி. நான் கூட இருக்கேன்... அன்னைக்கு மட்டும் நீ அவசரப்பட்டு மொட்டுவை கைநீட்டாம இருந்திருந்தா நானே உங்க கல்யாணத்தை நல்லபடியா நடத்தியிருப்பேன். இப்போ பாருங்க தேவையில்லாத குழப்பம் பிரச்சனை எல்லாம் வரும். ஆனா நானும் உங்க கூட இருக்கேன்..." என்றவர் சிறிது பேசி அங்கிருந்து சென்றார்.
இன்று:
பெண்கள் இருவரும் அதிர்ந்து நோக்க அவர்களின் கணவன்மார்களோ தங்கள் அன்னையைப் பார்க்கச் சென்றனர்.(நேரம் கைகூடும்...)
 
Last edited:
ppaaaaaaaaaa boss intha epi kaga evlo naal wait pannitu iruntha theriyuma. ivlo naal illama ippo kusha yenakku romba azhaga therriyurane ennava irukum. avan pesa pesa epdi oru siripu yenaku , na romba rasichi padiccha innaiku. nalla vela anu vaaya thiranthu sonna. illanna enna aagi irukumo. vittaaaaa lavaa va nejamave villanaakki irupa pola kusha. kd kd sariyana kd. thimirazhagiya iru raasa unaku iruku. munnadiye unnaiya tension pannite irupa ippo pondaatti vera ........
ithe mathiri mottu side luv story ya keka romba aarvama iruka. kandipa ava side oru fb irukum. kusha silent killer .. enna nadippu sami... bt i luv kusha character . ennamo paiya innaiku score pannitan. pavam janagi than pasanga thantha shock la mayakame vanthuduchi.
ethu epdiyo thaatha aasa patta mathiriye kusha mottu, lavaa anu jodi kalyanam panniyachi.

onnuku 2 kalyanam pannitu soru podama irukingale genius ....... manasaatchi iruka. thodarnthu kalyanama nadanthu nammala verupethuranga pa.
 
வாவ் குஷா செம்ம இப்படி நினைச்சுட்டு இருந்துருக்கானே. டெரர் பாயா இருந்தவன் இப்படி லவ்வர் பாயா மாறிட்டான் ??????. குஷா?????????? . மொட்டு அண்ட் குஷா லைஃப் டிராவல் செமையா இருக்கும் போல. லவா போட்ற கண்டிசன்ஸ் பார்த்தா லவ்வர் பாய் காமெடி பாயா மாறிருவான் போலயே. அனு???????????. இந்த எபி ?????? ஓ ??????. ரெம்ப நாளா வெய்ட் பண்ணது, வெய்ட் பண்ணதுக்கு நல்லா தரமா இருக்கு எபி . அல்ரெடி குஷா பிடிக்கும் பட் இப்ப ரெம்ப பிடிக்குது??????. நான் சொன்ன ஹிடன்மெமரீஸ் இருக்கு. வாய்ப்பே இல்லைனு பார்த்தா கமுக்கமா கள்ளுளி மங்கனாட்டம் எல்லா வேலையும் பாத்துருக்கான்.
 
Last edited:
Fantastic epi, so Anu naala thaan ellam therinchathaa thaathakku, ovvoru epilayum avaloda different dimensions kaatureenga, superb, adapaavi Lava Anu propose pannatha hide panni iyalbaa eppadi irunthaan,
poanga ji... Lavakum Anu mela crush irunthrukku, Mottuva nenachi avala marriage panna decide pannatha ennala accept panna mudiyala, ithu nadanthruntha 4paer lifeum tragedy thaan,
Acho..Mudiyala..... rendum orutharukoruthar yemathittu irunthrukaanga,naa appave Kushava oralavu guess panni avan mela doubt irukku, act panraannu sonnen,but " thimirazhahi ' levelkku yosikkala, chance ye illa evvalavu rasichrukaan manasukullaye,
Twinskku DNA match aa irukumaa, new information aa irukke,
Lava mattum ozhungu, ivaru mattum Kushta kovapadalaam, ivanumthaan propose pannatha hide pannirukaan,
ha..ha.. mothathula Mottu kitta thobukadeernu vizhunthutaennu sollu Kusha, atha vittutu polished aa pesaraaramaam, very funny Kusha feel panrathu Mottu Rahupava misunderstand panrathuthaan, ennala antha feelings accept panna mudiyum, parraa... Over possessivela ponguratha, sonnaalum sollatiyum Kushakku villain Lava thaan,
Naa Kusha fan ahitaen, Lava bestie lifekaha Kushata promise vaangrathu ava life mela ulla carenaala,aha...Ipa crime partner Vaithi thathaavumaa, poachu po... Rahupakku theriyanum ithu... Choli mudinchirum,
Marriage nadanthathuula Anu no problem,but Mottu? Kusha un pakkam sethaaram athihamaa irukkum polaye,or ji... Yethaavathu hidden twist irukaa Mottu pakkam
Romba rasichu padicha epi
 
அதுக்காக தான் நானும் லேட்டா போட்டேன்? அட இது நல்லா இருக்கே? பேசாம உங்களை கதையில கொண்டு வந்து மொட்டு பொசெசிவ தூண்டலாமா?? எஸ் அனு தன் வாழ்க்கைக்காகப் பேசிவிட்டாள். எஸ் எஸ் திமிரழகி அவனை வெச்சு செய்வா இவனும் பதிலுக்கு செய்வான்... இல்ல மொட்டுக்கு எந்த பிளாஷ்பேக்கும் இல்ல... அது மாதிரி நான் யோசிக்கல... ஆனா நிறைய லவ்லி சீன்ஸ் இருக்கு... எஸ்... பண்ணியாச்சு?இது கொரோனா கல்யாணம் அதான் யாரையும் இன்வைட் பண்ணல? பேசாம நீங்களும் கல்யாணம் பண்ணிடுங்க? நன்றி
 
வாவ் குஷா செம்ம இப்படி நினைச்சுட்டு இருந்துருக்கானே. டெரர் பாயா இருந்தவன் இப்படி லவ்வர் பாயா மாறிட்டான் ??????. குஷா?????????? . மொட்டு அண்ட் குஷா லைஃப் டிராவல் செமையா இருக்கும் போல. லவா போட்ற கண்டிசன்ஸ் பார்த்தா லவ்வர் பாய் காமெடி பாயா மாறிருவான் போலயே. அனு???????????. இந்த எபி ?????? ஓ ??????. ரெம்ப நாளா வெய்ட் பண்ணது, வெய்ட் பண்ணதுக்கு நல்லா தரமா இருக்கு எபி . அல்ரெடி குஷா பிடிக்கும் பட் இப்ப ரெம்ப பிடிக்குது??????. நான் சொன்ன ஹிடன்மெமரீஸ் இருக்கு. வாய்ப்பே இல்லைனு பார்த்தா கமுக்கமா கள்ளுளி மங்கனாட்டம் எல்லா வேலையும் பாத்துருக்கான்.
எஸ் எல்லோருக்கும் ஒரு secret crush கண்டிப்பா இருக்கும் தானே? இருக்கு நிறைய ஜாலியான சம்பவங்கள் இருக்கு சொல்றேன்... கண்டிப்பா வெச்சு செய்வா?? அனு வாழ்விலும் மகிழ்ச்சி இருக்கு ஆனா அதுக்கு அவ கொஞ்சம் கஷ்டப்படணும்... சொல்றேன். நன்றி?? எஸ் ஒருத்தரை காரணம் இல்லாம வெறுக்க முடியாது அண்ட் நம்முடைய இயலாமை ஏமாற்றம் தான் கோவமா மாறும் இல்ல அப்படிதான் குஷாவும்... நன்றி?
 
Fantastic epi, so Anu naala thaan ellam therinchathaa thaathakku, ovvoru epilayum avaloda different dimensions kaatureenga, superb, adapaavi Lava Anu propose pannatha hide panni iyalbaa eppadi irunthaan,
poanga ji... Lavakum Anu mela crush irunthrukku, Mottuva nenachi avala marriage panna decide pannatha ennala accept panna mudiyala, ithu nadanthruntha 4paer lifeum tragedy thaan,
Acho..Mudiyala..... rendum orutharukoruthar yemathittu irunthrukaanga,naa appave Kushava oralavu guess panni avan mela doubt irukku, act panraannu sonnen,but " thimirazhahi ' levelkku yosikkala, chance ye illa evvalavu rasichrukaan manasukullaye,
Twinskku DNA match aa irukumaa, new information aa irukke,
Lava mattum ozhungu, ivaru mattum Kushta kovapadalaam, ivanumthaan propose pannatha hide pannirukaan,
ha..ha.. mothathula Mottu kitta thobukadeernu vizhunthutaennu sollu Kusha, atha vittutu polished aa pesaraaramaam, very funny Kusha feel panrathu Mottu Rahupava misunderstand panrathuthaan, ennala antha feelings accept panna mudiyum, parraa... Over possessivela ponguratha, sonnaalum sollatiyum Kushakku villain Lava thaan,
Naa Kusha fan ahitaen, Lava bestie lifekaha Kushata promise vaangrathu ava life mela ulla carenaala,aha...Ipa crime partner Vaithi thathaavumaa, poachu po... Rahupakku theriyanum ithu... Choli mudinchirum,
Marriage nadanthathuula Anu no problem,but Mottu? Kusha un pakkam sethaaram athihamaa irukkum polaye,or ji... Yethaavathu hidden twist irukaa Mottu pakkam
Romba rasichu padicha epi
நன்றி? எஸ் இந்தக் கதையில் வரும் ஹீரோயின்ஸ் அனு அண்ட் மொட்டு ரெண்டும் ரெண்டு விதம். இனி அவன் போர்சன் தான் கொஞ்சம் சீரியஸா போகும்... நடக்க விட்டிருக்க மாட்டான் லவா. அவனாவே பேசுவதற்குள் குஷா முந்திக்கொண்டான். எஸ் குஷா மொட்டு ரிலேஷன் ஷிப் உண்மையிலே ஒரு காம்ப்ளிகேட்ட் ரிலேஷன்ஷிப். நானும் இது மாதிரி ரொம்ப பிடிச்சவங்கள கட்டுபடிச்சிருக்கேன்... எல்லோரும் யாராவது ஒருத்தர்கிட்ட இப்படி பழகியிருப்போம் இல்ல? எல்லா ட்வின்சுக்கும் இல்ல பட் சிலருக்கு இருக்கு... இப்பயும் அவனுக்கு உண்மையை ஒப்புக்கொள்ள ஈகோ தான். எஸ் ?? அதெல்லாம் சிறப்பான சம்பவங்கள் இருக்கு சொல்றேன் வெய்ட் பண்ணுங்க... இல்ல மொட்டு இனிமேல் தான் அவனைப் புரிஞ்சிக்கணும். சொல்றேன். நன்றி?
 
குஷா மொட்டுவின் கழுத்திலும் லவா அனுவின் கழுத்திலும் அடுத்தடுத்து தாலி கட்டிவிட சுற்றியிருந்தவர்களோ மணமக்களுக்கு அட்சதையைத் தூவ ஜானகியோ நடக்கும் இந்நிகழ்வுகளால் பிபி ஏறி மயக்கமடைந்தார். தாமதமாகவே இதைக் கவனித்த ரகு,"ஜானு..." என்ற குரலுடன் அவரைத் தாங்கிப்பிடிக்க அதற்குள் வைத்தி, கனகா நந்தா என்று எல்லோரும் ஜானகியை ஒரு அறையில் படுக்கவைக்க லவாவும் குஷாவும் அதிர்ந்து நோக்க அவர்களைக் கடந்த ரகு ஒரு கணம் நின்று,"ஏன்டா இப்படிப் பண்ணீங்க? அனு கழுத்துல நீ ஏன் தாலி கட்டுன லவா?" என்றவர் மேற்கொண்டு நிற்காமல் உள்ளே விரைய அனுவோ நிமிர்ந்து தனக்கு தாலி கட்டிய லவாவைப் பார்க்க அவனோ தங்களுக்கு எதிரில் அதே அதிர்ச்சியுடன் குஷாவைப் பார்க்கும் மொட்டுவையே கண்டான்.
நேற்று முந்தின இரவு:
சூரக்கோட்டையில் வைத்தியின் இல்லமே விழாக்கோலம் கொண்டு காட்சியளித்தது. வீடு முழுக்க சீரியல் விளக்குகள் எரிய சொந்த பந்தங்கள் அனைவரும் ஒன்றுகூடி கூச்சலும் சிரிப்புமாக இருந்தது. பாரி மற்றும் இசை ஆகியோர் இன்று தான் வந்திறங்கினார்கள். மணவாளன், அபி ஆகியோர் தங்கள் அன்னையர்களின் ஆணைக்கிணங்கி பரணில் இருக்கும் சில பொருட்களை எல்லாம் எடுத்துக் கொடுத்தனர். என்ன தான் திருமணம் வீட்டில் என்று முடிவானாலும் தட்டு வரிசை குத்துவிளக்கு முதலியவை இல்லாமல் எவ்வாறு திருமணம் செய்வதென்று அதற்கான ஏற்பாடுகள் களைகட்டியது.
இரவு பதினொன்றைக் கடந்தும் யாரும் உறங்காமல் இருக்க கனகா தான் எல்லாவற்றையும் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று அனைவரையும் உறங்குமாறு அவரவர் அறைக்கு அனுப்பிவைத்தார். இதுபோல விழாக்களின் வேளையில் அது வெற்றிகரமாக முடியும் வரை பெரும்பாலும் அதை நடத்துபவர்களுக்கு நிம்மதியாக உறக்கம் வராது அல்லவே? அதுபோல் தான் வைத்தியின் நிலையும் இருந்தது. வீடே சிரிப்பொலியிலும் பேச்சுச் சப்தத்திலும் இருக்க சம்மந்தப்பட்ட நால்வருடைய உள்ளம் மட்டும் அலைகளாக எழுந்து அடங்கியது.
வீடு அமைதியாக இருக்கே வெளியே நீண்ட நேரமாக குரைத்த நாயின் ஒலியில் அதைக் கவனிக்க வந்த வைத்திக்கு மாடியில் யாரோ நடப்பதைப்போல் நிழலாடியது. உபயம் வீட்டைச் சுற்றி எரிந்த விளக்குகள். மேலே பார்த்தவருக்கு அது அனு என்றதும் ஒருகணம் திடுக்கிட்டது. பிறகு மேலே ஏறியவர் ஒரு மூலையில் நின்று எதையோ வெறித்தபடி இருந்த அனுவை நெருங்கி,"அனுமா..." என்றதும் அக்குரலில் அதிர்ந்து திரும்பியவளின் கண்கள் கலங்கியிருந்தது. ஏனோ அதைப் பார்த்த கணமே வைத்திக்கு சொல்லிலடங்காத் துக்கம் தொண்டையை அடைக்க,
"என்ன டா பண்ற இங்க?" என்றவர் இடைவெளி விட்டு,"அதும் இந்நேரத்துல?" என்றார்.
ஏனோ அவருக்கு பதிலளிக்க முடியாமல் திண்டாடிய அனுவின் கன்னங்களில் இருந்து கண்ணீர் உருண்டோட சுற்றிவளைக்காமல் நேரகா,"உனக்கு இந்தக் கல்யாணத்துல முழு சம்மதம் தானே..." என்று இழுக்க,
அவரையே ஒருகணம் உற்று நோக்கியவள் இல்லை என்பதைப் போல் தலையசைத்தாள். ஏனோ வைத்திக்குத் தான் உயிரே இல்லாமல் போனது. பின்னே அனைத்தையும் பார்த்து எல்லோருடைய விருப்பத்தையும் கேட்டு தானே இத்திருமணத்தை அவர் நடத்துகிறார். அவரைப் பொறுத்தவரை எல்லோருக்கும் இந்தத் திருமணத்தில் சம்மதம் என்று எண்ணியவருக்கு அனுவின் இந்த பதில் அதிர்ச்சியைத் தர மேற்கொண்டு சுற்றி வளைக்காமல்,"யாரையாச்சும் விரும்புறையா அனு? உங்க அப்பா இதுக்கு சம்மதிக்கச் சொல்லி கட்டாயப் படுத்தினானா?" என்று இறுதியில் சுசியின் மீது தன் கோபத்தைக் காட்ட,
"இல்லை தாத்தா. அப்பா மட்டும் இதுக்குக் காரணமில்லை... நீங்க தான் காரணம். நீங்க மட்டுமில்ல, ரகு மாமா, ஜானு அத்தை, மொட்டு, லவா, குஷா எல்லோரும் தான். ஏன் நானுட்பட..." என்றதும் புரியாமல் விழித்தவருக்கு தன்னுடைய வாழ்வின் ரகசியப் பக்கங்களைச் சொல்ல ஆரமித்தாள்.
"நான் சின்ன வயசுல இருந்து லவா குஷா ரெண்டு பேர் கூடவும் ஒரு ஃப்ரண்டா ஜாலியா தான் பழகுனேன் தாத்தா. எங்களுக்குள்ள சாரி மத்தவங்களுக்குப் எப்படினு தெரியில எனக்குள்ள இருந்ததெல்லாம் கசின்ஸ் லவ் அண்ட் பாண்டிங் மட்டும் தான். ஒரு நல்ல புரிதல் இருந்தது. அதும்போக நான் எப்பயும் குஷா கூடவே தான் சுத்திட்டு இருப்பேன். அது உங்களுக்குள்ள நல்லாவே தெரியும். ஆனா போன முறை உங்க வெட்டிங் அன்னிவெர்சரிக்கு வந்த போது தான் முதல் முதலா லவாகூட நெருங்கி பழக ஆரமிச்சேன். அதுவரை நான் பார்த்து பழைய லவா அவனில்லை. எனக்குள்ள அவ வேரோரு ஃபீல் கொடுத்தான். எனக்குத் தெரிஞ்சு நான் லவா கூட அவ்வளவு நெருக்கமா பழகியதே இல்ல. முதல்ல அவன் நடிக்கிறான் இல்ல என்னை கலாய்க்கிறானு தான் நெனச்சேன். ஆனா பழக பழக எனக்குள்ள பல மாற்றங்களை அவன் கொடுத்தான். அந்த இருபத்தியொரு நாள்ல டெய்லி சுமார் எட்டுல இருந்து பத்து மணிநேரம் அவன் கூடவே ஸ்பென்ட் பண்ணேன். அப்போ தான் நான் லைஃப்ல முதல் முதலா காதல்ங்கற ஒன்னை உணர ஆரமிச்சேன். அவன் கூட பைக்ல போறது அவனை வம்பிழுப்பதுனு எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சது. அப்போ தான் அவங்க ரெண்டு பேரும் கோச்சிட்டுப் போயிட்டாங்க..." என்று தன்னுடைய ப்ளோவில் நடந்ததை உளறிவிட,
"ஏன் என்னாச்சு?" என்றவருக்கு மொட்டுவுக்கும் குஷாவுக்கும் நடத்த நடக்கும் சண்டையிலிருந்து இறுதியில் லவாவுக்கும் மொட்டுவுக்கும் நடந்தது வரை அனைத்தையும் சொல்லிவிட்டாள். இந்தக் கதையெல்லாம் வைத்திக்கு புதியதாவே இருந்தது. அதேநேரம் பெரியவர்களின் சண்டையை சிறுவர்கள் இந்த அளவிற்கு தொடர்ந்து எடுத்துச் செல்லுவார்கள் என்று எதிர்பார்க்காத வைத்தி உண்மையிலே இப்போது மனமுடைந்து போனார்.
"அந்தச் சமயத்துல தான் ஜானு அத்தை லவாவுக்கும் குஷாவுக்கும் எங்களைக் கேட்டாங்க. அப்போ தான் நீங்க அன்னைக்கு அம்மாச்சிகிட்ட எனக்கும் லவாவுக்கும் மேரேஜ்ன்னும் அதே போல குஷாவுக்கும் மொட்டுவுக்கும் மேரேஜ் செய்யணும்னு நீங்க பேசுனதைக் கேட்ட நான் எல்லாம் எனக்கு ஆசைப்பட்ட மாதிரியே நடக்குதேன்னு ஹேப்பியா இருந்தேன். அப்போ தான் இடையில ஒருநாள் லவாகிட்ட நான் என் காதலையும் சொன்னேன். அவனுக்கு இது ஷாக்கா இருந்தாலும் யோசிச்சு சொல்றேன்னு சொன்னான். ஆனா அவன் பேச்சுல எதோ ஒன்னு எனக்கு நம்பிக்கை கொடுத்தது. அவன் இதுவரை வெளிப்படையா எனக்கு ஓகே சொல்லலைனாலும் என் மேல அவனுக்கு ஒரு க்ரஷ் இருந்ததை நான் உணர்ந்தேன். அப்போ தான் திடீர்னு ஜோடி மாறிடுச்சு. அதாவது பெரியவங்களான நீங்க ஜோடியை மாத்திட்டீங்க. சரி இதைப் பத்தி உங்ககிட்ட அன்னைக்கு சொல்லலாம்னு தான் நடுவுல நான் ஊருக்கு வந்தேன்.(திருமணப் பேச்சை எடுத்து நிச்சயத்திற்கு முன்பு அனு மட்டும் இங்கே வந்தாள்) அப்போ தான் நீங்க,'மொட்டுக்கு லவா தான் சரியான ஜோடி. நான் தான் அன்னைக்கு தப்புனு...' அப்பத்தா கிட்டச் சொல்லிட்டு இருந்திங்க. அதும் போக ரகு மாமா இறங்கி வந்ததே பெருசு அதனால் இந்தக் கல்யாணம் எந்தச் சிக்கலும் இல்லாம நடக்கும்னு பேசுனது என்னை ரொம்ப பாதிச்சது. இதே மாதிரி லவாவும் என்கிட்ட அன்னைக்கு ஒன்னு சொன்னான். இருக்குற நிலையில குஷாவுக்கும் மொட்டுவுக்கும் மேரேஜ் சுத்தமா செட் ஆகாது அதனால் பேசுன படியே மேரேஜ் நடக்கட்டும்னு சொல்லிட்டான். சம்மந்தப்பட்ட அவனுக்கே இதுல விருப்பமில்லைனு தெரிஞ்சதும் நான் குஷாவை மேரேஜ் பண்ண ஒத்துக்கிட்டேன். ஆனா..." என்று அவள் நிறுத்த,
"என்னமா எல்லாத்தையும் மறைக்காம சொல்லு..."
"என்னதான் அவங்க ரெண்டு பேரும் உருவத்துல ஒரேமாதிரி இருந்தாலும் பழக்க வழக்கம் குணாதிசயம்னு எல்லாம் வேற வேற தானே? என்னால எவ்வளவு முயன்றும் குஷா கிட்ட அந்த ஸ்பார்க்கை பார்க்கவே முடியல. எப்படிச் சொல்ல? இவரைத் தான் நாம் மேரேஜ் செய்யப்போறோம்னு தெரிஞ்சதும் அவங்க மேல நமக்கு ஒரு ஈர்ப்பு வரணுமில்ல? அதை நான் இந்த நிமிஷம் வரை உணரவேயில்ல தாத்தா... அதுவே அந்த இடத்துல லவாவை நினைச்சா எனக்கு இந்தப் பிரச்சனை இல்ல... இப்போ மேரேஜுக்கு நாள் நெருங்க நெருங்க எனக்குள்ள நிறைய குழப்பம். என்னால குஷாவை என் ஹஸ்பண்டா நினைக்கவே முடியல... அவன் எனக்கொரு பெஸ்ட் ஃப்ரண்ட், வெல் விஷேர் கைட் பார்ட்னர் இன் க்ரைம்... ஆனா அதுக்கு மேல எதுவும் இல்ல தாத்தா... இப்போ நான் என்ன பண்றது?" என்று கேட்டு நிமிர்ந்தவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் யோசித்தவர்,"எனக்கு காலை வரை கொஞ்சம் அவகாசம் கொடுமா... நிச்சயம் இதுக்கொரு நல்ல முடிவை நான் சொல்றேன். லவாவுக்கு இதுல விருப்பம் இருந்ததுனா கட்டாயம் அவன் தான் உன் கழுத்துல தாலி கட்டுவான். அதே மாதிரி அவனுக்கு இதுல சம்மதம் இல்லைனா நிச்சயம் இந்தக் கல்யாணம் நடக்காது. இது தாத்தா உனக்குச் செய்யுற ப்ராமிஸ்... நீ எதையும் போட்டுக் குழப்பிக்காத..." என்றவர் அவளுக்கு ஆறுதல் அளித்தாலும் அடுத்து என்னவெல்லாம் நடக்குமோ என்று எண்ணிக் கலங்கினார்.
வைத்தி மாடியேறிச் சென்றதைக் கண்ட குஷா பின்னாலே வந்து இவர்களின் உரையாடல்கள் அனைத்தையும் கேட்டவனுக்கு அனுவோட நிலை நன்றாகவே விளங்கியது. பின்னே இதில் அவனுடைய நிலையும் கிட்டத்தட்ட இதே தான். மேலும் அவள் தன்னைத் திருமணம் செய்ய அவள் விரும்பவில்லை என்றதைக் கேட்டவனுக்கு இயல்பாக வரவேண்டிய கோவம் வராமல் இதை வெளியில் சொல்லமுடியாமல் அவள் எவ்வளவு திண்டாடியிருப்பாள் என்று எண்ணி அவளுக்காகவே தான் கலங்கியது. உடனடியாக கீழே சென்றவன் லவாவிடம் இதைப்பற்றிக் கேட்க அவனோ எல்லாம் உண்மை என்றான்.
"அப்பறோம் ஏன்டா இந்த மேரேஜுக்கு ஓகே சொன்ன? நீ என்ன பைத்தியமா?" என்றான் குஷா.
"அதான் சொன்னேனே அம்மா..." என்று முடிக்கும் முன்னே எரிச்சலடைந்த குஷா,
"சும்மா சும்மா அம்மாவையே காரணம் சொல்லாத... ஓகே பாஸ்ட் இஸ் பாஸ்ட்... நாளை கழிச்சு அனு கழுத்துல நீ தாலி கட்டுற... ஓகே?" என்றதும்,
"அப்போ மொட்டு வாழ்க்கை என்ன ஆகுறது?" என்றவனை ஒரு பார்வைப் பார்த்தான் குஷா. அப்பார்வையின் அர்த்தம் விளங்கியவன்,
"உன் லைஃபும் தான் என்ன ஆகுறது?" என்று நிறுத்த,
"என் வாழ்க்கையை நான் பார்த்துக்கறேன். அதைப்பற்றி நீ கவலைப்பட வேண்டாம். புரியுதா?" என்றான் குஷா.
"சரி அப்போ மொட்டு வாழ்க்கை?"
"ஏன் இதுக்கு மேல அவளுக்கு கல்யாணமே நடக்காதா என்ன?" என்ற குஷாவின் பதிலில் அதுவரை அடங்கியிருந்த கோவத்தையெல்லாம் ஒன்று திரட்டி,
"உன்னால எப்படி குஷா இப்படியெல்லாம் பேச முடியுது? உனக்கு கஷ்டமா இல்ல? ஒரு பொண்ணை இப்படி கல்யாணம் வரை கூட்டிட்டு வந்து ஏமாத்துறது துரோகம் இல்லையா?"
"அதே மாதிரி இன்னொரு பொண்ணைக் காதலிச்சிட்டு அவளைக் கஷ்டப்படுத்துறதும் துரோகம் தான்..." என்று குஷா முடிக்க இதற்காகவே காத்திருந்த லவா,
"பின்ன எப்படி உன்னால மட்டும் அதைச் செய்ய முடியுது குஷா?" என்ற லவாவின் கேள்வியில் ஒருகணம் அதிர்ந்தவன் அதை மறைத்து,"என்ன உளற?"
"அதெப்படி குஷா நாம நேசிக்குற ஒருத்தவங்கள அதே அளவுக்கு கஷ்டப்படுத்தி வெறுக்கவும் முடியுது?" என்று தீர்க்கமானப் பார்வை ஒன்றை அவன் மீது லவா செலுத்த,
"யாரு யாரை நேசிக்குறது? நான் மொட்டுவை விரும்புறேன்னு உன்கிட்டச் சொன்னேனா?" என்று குஷா சொன்னது தான் தாமதம்,
"நான் மொட்டுவை ஸ்பெசிஃபை பண்ணவே இல்லையே?"
"இப்போ டாபிக் அவளைப் பத்தி தானே பேசுறோம்..." என்ற குஷாவிற்கு,
"ரொம்ப அழகா ரெட்டை வேஷம் போடுற குஷா... ஆனா இதை நீ வேற யார் கிட்டயாவது முயற்சி பண்ணலாம். ஆனா என்கிட்ட இது செல்லுபடி ஆகாது..."
"இப்போ எதுக்கு தேவையில்லாததைப் பத்திப் பேசுற? அனுவுக்கும் உனக்கும் தான் கல்யாணம் சரியா?"
"அப்போ இதுக்கென்ன பதில்?" என்றவன் தன்னுடைய ட்ராலி பேகில் இருந்து ஒரு டைரியை எடுக்க குஷாவின் முகம் வெளிறியது.
"இதெப்படி உன்கிட்ட வந்தது? கொடு அதை..." என்று அதைப் பிடுங்கச் சென்றவனிடம் அதை நீட்டியவன்,
"நீ டைரி எழுதுவன்னு தெரியும். அதுலயும் சூரக்கோட்டை டைரிஸ்ன்னு ஒரு சேப்டரே இருக்கு. அது கூட ஓகே... ஆனா இதுல அடிக்கடி திமிரழகி திமிரழகினு ஒரு பேர் வந்துட்டே இருக்கு. அது யாருனு தான் நானும் யோசிச்சு யோசிச்சு பார்க்குறேன் ஆனா பதில் கிடைக்கவே மாட்டேங்குது. அனு, அபி, பாரி, இசை, இனி, ரித்து, ஆனந்தி ஏன் லவா கூட இருக்கான். ஆனா இதுல இல்லாத ஒரு பேர்னா அது மொட்டு. அதே மாதிரி திமிரழகினு ஒரு புதிய ஆள் இருக்காங்க. சோ..." என்று லவா இழுக்க,
"அடுத்தவங்க டைரி படிக்கறது அநாகரிகம் இல்ல?" என்று எரிந்து விழுந்தவனிடம்,
"ஒரு மூன்றாவது நபர் டைரியை படிக்கறது தான் தப்பு. நீ அப்படியில்லை. நானும் நீயும் பிறக்கும் போதே ஒட்டிப் பிறந்தவங்க. ஐ மீன் ஓருடலா இருந்து இரண்டு நபர்களோ மாறினோம். சோ நீயும் நாளும் தனியாள் இல்ல... சில ட்வின்சுக்கு டி.என்.ஏ கூட ஒன்னாவே ஐ மீன் நூறு சதவீதம் மேட்ச் ஆகுமாம். யாரு கண்டா நாம கூட அப்படியிருக்கலாம். அதை விடு, இதுக்கென்ன பதில் சொல்லுவ?" என்ற லவாவிற்கு ஏனோ அதைப் படித்த நாளிலிருந்து தன் ரெட்டைச் சகோதரனிடம் இதைப் பற்றிக் கேட்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. இருந்தும் இவன் எவ்வளவு தூரம் செல்லுகிறான் என்பதைப் பார்க்கவே அவன் இதுநாள் வரை காத்திருந்தான். ஒரு வேளை இன்றிரவு இதைப் பற்றி அவன் கேட்காமல் இருந்தால் நாளை லவாவே இதைப்பற்றிப் பேசியிருப்பான். மேலும் தங்களுக்கு திருமணம் முடிவாகி ஹைதராபாத் செல்வதற்காக சென்னையில் தங்கியவனின் கண்களில் தான் இந்த டைரி தென்பட்டது. அதையும் கூட அவன் அப்போதே படிக்கவில்லை. ஆனால் தன்னிடம் அனு ப்ரபோஸ் செய்த பிறகு தான் அதிகம் குழப்பமடைந்தவன் இதைப் படிக்க ஆரமிக்க அதிலும் குஷாவின் பெர்சனல் பக்கங்களை அவன் அடைவதற்கு காலத் தாமதம் ஏற்பட்டு விட்டது. ஆனால் இதைப் படித்தவனின் மனம் தான் இத்தனை நாட்கள் இதை தன்னிடமிருந்து கூட மறைத்த தன் தம்பியை எண்ணி கடும் கோவம் கொண்டான். அதே வேளையில் அனுவை அவன் நேசிக்கவும் நேர்ந்தது. ஆனால் இதைப்பற்றி அவனாக வாயைத் திறப்பான் என்று காத்திருந்தவனுக்கு குஷாவின் மெத்தனப்போக்கு அதிக குழப்பத்தைக் கொடுக்க இதில் எது உண்மை என்ற குழப்பத்தில் உழன்றான்.
"இப்பயும் என்னால இதைப் புரிஞ்சிக்கவே முடியல... இதுல எது தான் உண்மை? நேர்ல பார்க்குற நீயா இல்ல டைரியில் இருக்குற உன் மனசா? இல்ல இப்படித் தான் ரெட்டை வாழ்க்கை வாழ்ந்திட்டே இருக்கப்போறயா?" என்று வேதனை நிரம்பிய குரலில் லவா கேட்க,
"ரெண்டுமே உண்மை தான் லவா. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல... என்ன மொமெண்ட்ல இருந்து நான் அவளை ரசிக்க ஆரமிச்சேன்னு எனக்கே தெரியல. சின்ன வயசுல நாமெல்லாம் ஒரு விஷயத்தை பெர்பெக்ட்டா செஞ்சு அதுக்கு பேர் வாங்குவோம் ஆனா அவ மட்டும் இம்பெர்பெக்ட்டா செஞ்சு அதே பேர் வாங்குவா... நாமெல்லாம் படிச்சு நல்ல மார்க் வாங்குனதால வீட்ல நம்மைப் புகழ்வாங்க. ஆனா அவளை மார்க் வாங்காமலே எல்லோரும் புகழ்வாங்க... பல நாள் கூப்பிட்டு அவளைத் தனியா திட்டியிருக்கேன். சண்டை போட்டிருக்கேன். ஆனா அவளை விட்டு ஒதுங்கியது மட்டும் இல்ல. நமக்கு ஒருத்தங்களைப் பிடிக்கலைனா ஒதுங்கிப் போவோம் தான். ஆனா அது நாம மெட்சூர் ஆனப்பிறகு தான் செய்வோம். அதுவே அந்த மெட்சூரிட்டி இல்லைனா நாம நம்ம செல்ப் டப்பாவை அவங்க முன்னாடி சொல்லி அவங்களை மட்டம் தட்டுவோம். அதே தான் நானும் செஞ்சேன். அதும் போக அவளை நாம எதாவது சொன்னா பயந்தோ இல்லை வேற காராணத்துக்காகவோ எல்லாம் ஒதுங்கிப்போக மாட்டா. ஏட்டிக்குப் போட்டியா நம்ம கிட்ட வரிஞ்சுக்கட்டிட்டு நிப்பா. இன்னும் தெளிவாச் சொல்லனும்னா என் ஈகோவை டச் பண்ணிப்பார்ப்பா... அப்படி ஒரு முறை அவ நம்ம அப்பாவையும் அம்மாவையும் தப்பாப் பேசின அப்போ அவகூட சண்டை போட ஆரமிச்சேன். அது இப்போ வரை தொடருது. ஆனால் இதுக்கெல்லாம் பின்னாடி அவளை எப்படியாவது என் முன்னாடி தோற்கடிச்சுப் பார்க்கணும்னு தான் நெனச்சேன். ஆனா இதுல நான் எப்போ தோத்தேன்னு எனக்குத் தெரியில லவா. அவ எப்போப்பாரு உன்கூடவே பேசி சிரிச்சு ஜாலியா இருக்கும் போதெல்லாம் எனக்கு ஒரே எரிச்சலா இருக்கும். ஆனா அதுக்கு காரணம் என்னனு பிறகு யோசிச்சா நான் உன்மேல பொறாமை பட்டிருக்கேன்னு பதில் கிடைக்கும். இன்னும் தெளிவாச் சொல்லனும்னா உன் இடத்துல நான் இருக்கணும்னு நெனச்சிருக்கேன். நானும் நீயும் ஒரே உருவத்துல தான் இருக்கோம் ஆனா உன்கிட்ட மட்டும் சிரிச்சு சிரிச்சு பேசும் அவ என்கிட்ட மட்டும் ஏன் எப்பயுமே முறைச்சிட்டே இருக்கானு எனக்குத் தெரியாது. சமயங்கள்ல அவகிட்டப் பேசனுங்கறதுக்காகவே அவளை நான் சண்டைக்கு இழுப்பேன். இது ஏன் எதுக்குன்னு எனக்கு இப்போ வரை புரியல லவா. இதுக்கு நடுவுல அவ நம்ம அப்பாவைப் பத்திப் பேசும் போதெல்லாம் நம்ம அப்பாவை அவளுக்குப் புரியவெக்க தான் நான் நெனப்பேன். அதாவது தப்பு அவர் மேல இல்லனு காட்டி ஒருவேளை அதால அவகூட ஒரு சுமுகமான ரிலேஷன் ஷிப் ஏற்படுத்த நெனச்சிருக்கேன். ஆனா அவளோ வழக்கம் போல அதைப் புரிஞ்சிக்காம தாத்தாவுக்கு வரிஞ்சிக்கட்டிட்டு வந்திடுவா. அவ ஏன் படிக்கவே மாட்டேங்குறானு நினைக்கும் போதெல்லாம் ஒரு எரிச்சல் வரும். அதன் வெளிப்பாடாவே தான் அவளை எப்பயும் மட்டம் தட்டுவேன். அட்லீஸ்ட் அப்பயாவது அவ ஒழுங்காப் படிப்பாளான்னு ஒரு எண்ணம். இன்னைக்கு யோசிச்சா நான் அவ மேல காட்டுன எல்லா வெறுப்புக்கும் பின்னாடி அவ பார்வை என் மேல விழனுன்னு தான் நெனச்சிருக்கேன். இது எவ்வளவு பெரிய அபத்தமில்ல? என்னால முடியில லவா... எனக்குப் புரியல. நமக்குப் பிடிச்சவங்க நமக்குப் பிடிச்ச மாதிரியே இருக்கணும்னு நாம ஆசைப்படுவோமில்ல? அது தான் இது. ஒருநாளாச்சும் ஒரு பொண்ணு மாதிரி டிரஸ் பண்ணியிருக்களா? அதை நான் அவகிட்ட எதிர்பார்த்திருக்கேன். எனக்கு ஏன்னு தான் புரியல. அவ நம்ம எல்லோர மாதிரி நல்லாப் படிக்கணும்னு நான் ஆசைப்பட்டேன்... இப்படியே எங்க லைஃப் போயிட்டு இருந்தது. அன்னைக்கு அவ சாப்பிடுற விஷயத்துல கணக்கு பார்த்ததும் நான் பணம் கொடுத்தேன் இல்ல அப்போ என் மனசு என்ன ஆசைப்பட்டது தெரியுமா? அவ ஒரே ஒரு முறை என்கிட்ட வந்து உரிமையா இங்க சாப்பிடு குஷானு அவ சொல்லுவானு எதிர்பார்த்தேன். ஆனா அவளோ நான் பணம் கொடுத்ததும் அதை மறுபேச்சுப் பேசாம வாங்கிட்டா. அதுவே அன்னைக்கு அவளை நான் அடிச்சதும் நான் உள்ள எவ்வளவு கஷ்டப்பட்டேனு உனக்குத் தெரியுமா? இந்த ரிலேஷன்ஷிப்புக்கு என்ன பேர் என்ன அர்த்தம் எதுவும் புரியல... ஆனா ஒன்னு மட்டும் நல்லாப் புரியுது... நான் அவளை எவ்வளவு விரும்பறேனோ அதே அளவுக்கு அவளை நான் வெறுக்குறேன்... அவளை நான் வெறுக்க ஒரே காரணம், அவ இப்போ வரை நம்ம அப்பாவைத் தப்பா தான் புரிஞ்சிட்டு இருக்கா... ஏன் நம்ம அம்மாமேலயும் அவளுக்கு அபிப்ராயம் இல்ல. இந்த காம்ப்ளிகேட்டட் ரிலேஷன்ஷிப்ன்னு ஒன்னு இருக்கும் தானே? அது தான் எங்களோட உறவு..."
"டேய் இதைப் பத்தி ஏன்டா என்கிட்ட ஒரு முறை கூட நீ சொல்லவேயில்லை?"
"எப்படிச் சொல்லுவேன் லவா? இந்த உறவுக்கு என்ன பேருனு எனக்கே இப்போ வரை புரியல... அதும் போக அவளுக்கு என்னை எப்பயுமே பிடிக்காதுடா..." என்ற கூற்றில் ஒலித்த அந்த இயலாமையை லவாவால் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது.
யோசித்தவன்,"ஒரே ஒரு பதில் மட்டும் சொல்லு குஷா... எனக்கும் அவளுக்கும் கல்யாணம்னு நினைக்கும் போது நீ என்ன உணருற?"
"நான் ஏன் உன் இடத்துல இல்லைனு நினைக்குறேன்..." என்று உடனடியாகவே பதில் வந்தது.
"இப்போ நீ சொன்னதுல பொய் இல்லையே?"
"கடுப்பைக் கிளப்பாத லவா... ஒரு பக்கம் அனுவை என் வைஃப்பா நினைக்க முடியல மறுபக்கம் பனித்துளியை உன் வைஃப்பா நினைக்க முடியல... அன்னைக்கு அப்பா அவளைப் பத்தி விசாரிக்கும் போது நான் சொன்ன பதிலால தான் இன்னைக்கு அவ இங்க இருக்கா. ஆனா ட்விஸ்ட் என்னன்னா அவ உனக்கு ஜோடியா நிக்குறா..." என்றவனுடைய கூற்றில் அவ்வளவு பொறாமை தென்பட்டது.
"அப்போ இதுக்கு ஒரே வழி தான் இருக்கு. ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு சில விஷயங்கள் தெளிவாகனும்..." என்றதும் ஒருகணம் குஷாவின் மனம் குதூகலித்தது.
"உனக்கெப்படி அனு உன் பெஸ்டியோ அது போல தான் மொட்டு எனக்கு. நான் தான் அவளோட மோட்டிவேட்டர், வெல் விஷ்ஷெர் எல்லாம். எனக்கு இந்த விஷயம் தெரிஞ்ச அப்போயிருந்து உன்கிட்ட இதைப்பற்றிப் பேச எனக்கு இருந்த தயக்கமே இது தான்... ஒரு வேளை நீ மொட்டுவைக் கல்யாணம் பண்ணா அப்பயும் அவளை இப்படி மட்டம் தட்டி வெறுப்பேத்தி கஷ்டப்படுத்த மாட்டேன்னு என்ன நிச்சயம்? ஏன்னா உனக்கு அவ மேல இருப்பது ஒரு லவ் ஹேட் ரிலேஷன்ஷிப் தானே?" என்று லவா புருவம் உயர்த்த,
"அந்த லவ் ஹேட் ரிலேஷன்ஷிப்ல ஹேட் வந்ததுக்கு நீ தான் முக்கியக் காரணம்..."
"பார்ரா விட்டா என்னை வில்லனாகி ஹீரோவான நீ என்னை வீழ்த்திட்டு அவ கூட டூயட்டே பாடுவ போல?" என்று லவா வினவ, குஷா சிரித்தான்.
"எனக்கு நீ மூணு ப்ராமிஸ் பண்ணனும். முதல்ல, அப்பாவுக்கு சப்போர்ட் பண்றேங்கற பேர்ல தாத்தாவையோ திட்டக்கூடாது. ரெண்டாவது, அவளை எந்த இடத்துலயும் நீ மட்டம் தட்டி ஹியூமிலேட் செய்யவே கூடாது. மூணாவது தான் ரொம்ப முக்கியம்...." என்று லவா நிறுத்த,
"என்னடா?" என்று ஆவேசப்பட்ட குஷாவிடம்,
"இப்படி ஆவேசப்படக்கூடாது..."
"உன்னை..." என்று பல்லைக்கடித்தவனிடம்,
"இப்படிக் கோவப்படக்கூடாது..." என்றதும் தான் லவா சொல்ல வருவது புரிந்து அமைதிகாத்த குஷாவிடம்,
"குட். இப்போ எப்படி அமைதியா இருக்கியோ அப்படியே இருக்கனும்... ஒரு பொண்ணு மனசுல நல்லவன்னு பேர் வாங்குறது ரொம்ப கஷ்டம். அதிலும் நல்ல ஹஸ்பண்ட் ஆகுறது ரொம்ப ரொம்ப கஷ்டம்... நீ முதல் நல்ல மனுஷா அவ மனசுல இடம் பிடிக்கணும். அப்பறோம் நல்ல ஹஸ்பண்ட் ஆகணும்..." என்ற லவா இவையாவும் தற்போதிருக்கும் நிலையில் தனக்கும் அவசியம் என்று புரிந்துகொண்டான்.
"ஓகே என் மேல ப்ராமிஸ் பண்ணு..." என்று லவா கேட்க அப்போது பார்த்து உள்ளே நுழைந்தார் வைத்தி. அவரைக் கண்டு இருவரும் அதிர,
"நல்ல முடிவெடுத்திருக்கிங்க... கடைசி நேரத்துல இது தான் ஒரே வழி. நான் கூட இருக்கேன்... அன்னைக்கு மட்டும் நீ அவசரப்பட்டு மொட்டுவை கைநீட்டாம இருந்திருந்தா நானே உங்க கல்யாணத்தை நல்லபடியா நடத்தியிருப்பேன். இப்போ பாருங்க தேவையில்லாத குழப்பம் பிரச்சனை எல்லாம் வரும். ஆனா நானும் உங்க கூட இருக்கேன்..." என்றவர் சிறிது பேசி அங்கிருந்து சென்றார்.
இன்று:
பெண்கள் இருவரும் அதிர்ந்து நோக்க அவர்களின் கணவன்மார்களோ தங்கள் அன்னையைப் பார்க்கச் சென்றனர்.(நேரம் கைகூடும்...)
Semmmma Semmma Ini thn twist Epo mottu kusha VA understand panika poraalo
 
Top