Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மஞ்சள் வெயில் மாலையிலே!-2

Advertisement

praveenraj

Well-known member
Member

அன்று காலை முதல் பரபரப்பாகவே இருந்தான் ஜெய் எனப்படும் அரிஞ்சயன். காலை எழுந்தது முதல் தன்னுடைய சகாக்களிடம் இருந்து ஏதேனும் அழைப்பு வருமா என்று காத்திருக்க அது வரவில்லை என்றதும் தன்னுடைய வழக்கமான ஜாகிங் முடித்து வியர்வை சொட்ட சொட்ட தனக்கு வழங்கப்பட்டிருக்கும் பங்களாவிற்கு வந்தான். இது அவனது அன்றாட நடைமுறை தான். தன்னுடைய இருபத்தி இரண்டாவது வயதில் தனக்கிருந்த தொப்பையைக் குறைக்க ஓடத் தொடங்கியவன் கடந்த ஏழு வருடங்களாக இதை கைவிடாமல் கடைபிடிக்கிறான். அப்போது முதல்வர் ப்ரித்விராஜின் தனி அலுவலர் நிதிஷிடமிருந்து அழைப்பு வர அதுவரை இருந்த இலகுவான மனநிலை விலகி சற்று பரபரப்புடன் அதை ஏற்க முதல்வர் அவனிடம் பேச வேண்டும் என்று சொன்னதும் பிரித்விராஜ் அவனுடன் உரையாடினார்.

"சார், குட் மார்னிங் சார்..." என்ற ஜெய்க்கு,

"குட் மார்னிங்கா இல்ல பேட் மார்னிங்கானு இன்னைக்கு மதியத்துக்குள்ள தெரிஞ்சிடும் ஜெய்" என்றவர் ஒரு புன்னகை சிந்த அதில் தெரிந்த இயலாமை ஜெய்யை வாட்ட,

"சார், மக்களோட அபிமானம் உங்களுக்கு எப்பயுமே இருக்கு சார். இல்லைனா இவ்வளவு பெரிய ஸ்டேட்ல பாஸ்ட் இருபத்தி இரண்டு வருஷமா முதல்வரா இருக்க முடியுமா சார்? அது அவ்வளவு ஈஸியும் இல்ல. நீங்க மக்களோட மனங்களை எல்லாம் கொள்ளையடிச்சு இருக்கீங்க சார்..." என்று சாதரணமாகவே உரையாடினான். என்ன தான் அவர் இந்த மாநிலத்தின் முதல்வராக இருந்தாலும் அவருடன் உரிமையாக உரையாடும் இடத்தை கடந்த சில மாதங்களாகவே ஜெய் பெற்றிருந்தான்.

"ஜெய், யாரையும் அப்படி டேக் இட் பார் க்ரண்ட்டடா எடுத்துக்கவே கூடாது. நாங்க எல்லாம் ஆப்டர் ஆல் பொலிடீஷியன்ஸ். எங்களை எவ்வளவு வேகமா உயரத்துல தூக்கி வெக்கறாங்களோ அதே வேகத்துல தூக்கி கீழ வீசி மிதிச்சிடுவாங்க. பிகாஸ் இது ஜனநாயக நாடு. மக்கள் தான் இங்க நிலையான அரசன், நீதிபதி எல்லாம். ஆனா நீங்க அப்படி இல்ல. நீங்க கவர்மெண்ட் சர்வெண்ட்ஸ். நீங்க ரிட்டையர் ஆகுற வரை உங்களோட பதவியும் அதிகாரமும் மாறவே மாறாது. நான் இன்னைக்கு சி.எம் நாளைக்கு எம். எல்.ஏ ஏன் நாளை மறுநாள் எக்ஸ் சி.எம் கூட ஆகலாம்..." என்று சிரித்தார்.

"ஆயிரம் தான் நாங்க நிரந்தர பதவியில் இருந்தாலும் கூண்டுக்கிளிகள் தானே நாங்க? எங்களால எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்க முடியாதே. அப்படியே எடுத்தாலும் அம்பலம் ஏறுமான்னு தெரியலையே?" என்று நிறுத்த,

"ஏதோ பேச வந்து என்னவோ பேசிட்டேன் பாரு. ஜெய் நான் இப்போ கூப்பிட்டது முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேச தான். அநேகமா நாளை மறுநாளோட ஆட்சி கவுந்துடும். ஜனாதிபதி ஆட்சி வந்தாலும் வரலாம். உடனே எலெக்சன்ஸ் வராது. சோ என்னால எந்த ஹெல்பும் பண்ண முடியாது. அவன் ரொம்ப மோசமானவன். எதுக்கும் அந்தப் பொண்ணை ஜாக்கிரதையா இருக்கச்சொல்லு. அரசியலுக்கு வந்து ரௌடி ஆகுறது ஒரு வகை. ரௌடியாவே இருந்து அரசியலுக்கு வரது இன்னொரு ரகம். அவன் ரெண்டாவது. அதான் சொல்றேன் ஜாக்கிரதை. என் கெஸ் சரினா இந்நேரம் நீ உன் டீம் கூட அவனோட பார்வை வட்டத்துல வந்து இருக்கலாம். நான் சி.எம்மா இருந்த வரை என்னால உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடிஞ்சது. இப்போ கஷ்டம். சோ டேக் கேர்..."

"கண்டிப்பா சார். தேங்க்ஸ்" என்று அவன் சொல்லி அழைப்பை வைத்ததும் அவனுக்கு மற்றொரு அழைப்பு காத்திருந்திருந்து. அந்த எண்ணைப் பார்த்தவன்,

"சொல்லு டா ஆதித்யா"

"அண்ணா, குட் மார்னிங். எப்போ ஊருக்கு வரீங்க?"

"அன்னைக்கே சொன்னேனே? இந்த வீக் எண்ட் தான்"

"அப்படியா..." என்று இழுத்த தன் தம்பியிடம்,

"என்ன விஷயம் ஆதி?"

"அண்ணா... அது வந்து... உங்களுக்கு"

"இழுக்காம சட்டுனு சொல்லு"

"வர சனிக்கிழமை உங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிவு பண்ணி இருக்காங்க"

"ஓ!"

"என்னண்ணா இவ்வளவு தான் உங்க ரியாக்சனா?"

"கடந்த பத்து வருஷத்துல என் வாழ்க்கையில எல்லாமே என் விருப்பப்படி தான் நடந்திருக்கு. அதை யாராலும்... நல்லாக் கேட்டுக்கோ யாராலும் இன்க்ளூடிங் உன் பெரியப்பா நெனச்சா கூட அதை மாத்தி எழுத முடியாது. அண்ட் தேங்க்ஸ் ஃபார் தி இன்பர்மேஷன். பை"

"அண்ணா... ஜெய்ணா?"

"சொல்லு டா டைம் ஆச்சு நான் குளிக்கணும்"

"இங்க வீட்ல ஏற்பாடெல்லாம் தடபுடலா நடக்குது. எதுனாலும் இப்போவே சொல்லிடுங்க ப்ளீஸ். அப்பறோம் தேவையில்லாத மனவருத்தம் வந்திடப்போகுது"

"சின்ன பையன் உனக்கிருக்க இந்த அறிவு கூட அங்க யாருக்கும் இல்லல?"

"அண்ணா பிடிக்கலைனா இப்போவே பேசிடுங்க. ஏன்னா தாம்பூலமே மாத்த போறாங்களாம்"

"மாத்தட்டும். ஒருவேளை கல்யாணத்து அன்னைக்கு அண்ணன் எஸ்கேப் ஆகிட்டா நம்ம ஊர்ல தம்பியை திடீர் மாப்பிள்ளை ஆக்கிடுவாங்க டா. சோ பொண்ணை நீ நல்லாப் பார்த்துக்கோ. ஏன்னா நாள பின்ன நீ தானே அவ கூட வாழனும்" என்று ஜெய் சிரிக்க,

"அண்ணா! உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணுற பாத்தியா?"

"ஏன் டா உனக்கே பொண்ணு பிடிக்கலைன்னா நான் எப்படி அதைக் கட்டிப்பேனு நினைக்குற?"

"அண்ணா விளையாடாதீங்க ப்ளீஸ். சீக்கிரம் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைங்க"

"தம்பி, இதுவரை எனக்கு இதைப்பத்தி எந்தத் தகவலும் வரல. சோ ஊருக்கு வந்து வெச்சுக்குறேன்..."

"அண்ணா வேண்டாம் ப்ளீஸ். நம்ம குடும்பத்து மானம் கப்பலேறிடும்"

"அது உன் பெரியப்பாவோட விதி. காது வரைக்கும் மீசை வெச்சி இருந்தா என்ன வேணுனாலும் செய்யலாம்னு உன் பெரியப்பாவுக்கு நெனப்பா? இல்லை அவர் என்ன அய்யனாரா? அண்ட் பை தி வே சொல்ல மறந்துட்டேன், சனிக்கிழமை நானும் உன் அண்ணியும் ஊருக்கு வரோம்"

"என்னது அண்ணியா?"

"யூ ஹியர்ட் இட் ரைட். எனக்கு டைம் ஆகுது. பை"

"அண்ணாஆ..."

****************

மும்பை கமிஷ்னர் அலுவலகம்

காலையிலிருந்து கமிஷ்னரின் வரவுக்காக அங்கே காத்திருந்த ரோஷன் நேரம் கூடவும் தன்னிச்சையாக கடிகாரத்தில் நேரம் பார்த்தான். அவனையே சிறிது நேரம் கவனித்த ஆய்வாளர் மாயந்தி தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து அவனிடம் நெருங்கி,

"சார் நீங்க யூ டியூப் பேம் ஸ்மைல் ப்ளீஸ் ரோஷன் தானே?" என்றதும் கலங்கரை விளக்கம் கண்ட கப்பல் போல் எழுந்தவன்,

"எஸ் மேம். நானே தான் அது. அண்ட் என் பாதர் மிஸ்டர் அஜய் ரத்தோர்" என்று முடிக்கும் முன்னே,

"சார், நீங்க ரத்தோர் சாரோட சன்னா? இதுவரை சொன்னதே இல்லையே?" என்று ஒருகணம் ஆச்சர்யத்தில் கத்திவிட சுற்றியிருந்தவர்களின் கவனம் முழுவதும் தன் மீது விழுந்ததும் சுற்றம் கருதியவள்,

"சாரி சார். ஒரு நிமிஷம் எக்ஸைட் ஆகிட்டேன். ரத்தோர் சார் தான் என் தம்பிக்கு ரோல் மாடல். அவரைப் பார்த்து தானும் ஒரு வைல்ட் லைஃப் போட்டோ கிராபர் ஆகணும்னு வீடு முழுக்க அவரோட போட்டோஷா தான் ஒட்டி வெச்சியிருப்பான். எனக்கு போட்டோ க்ராப்பி பத்தி ஒன்னும் தெரியாது தான். இருந்தாலும் சொல்றேன் ரத்தோர் சார் மட்டும் எப்படித்தான் லென்சும் ப்ரேமும் அப்படி வெக்குறாரோ? சான்ஸ் லெஸ்" என்றவள் ரோஷனின் அசௌகரியம் சூழ்ந்த முகத்தைக் கண்டு,

"எக்ஸ்ட்ரீமிலி சாரி சார். என்ன தான் போலீசா இருந்தாலும் இந்த செலிபிரிட்டியை பார்த்தா உடனே எக்ஸைட் ஆகிடுறேன். ரியலி சாரி மிஸ்டர் ரோஷன். சொல்லுங்க என்ன இந்தப்பக்கம்?"

"அது..." என்று அவன் இழுக்க,

"தைரியமாச் சொல்லுங்க மிஸ்டர். என்ன ப்ராப்லம்?"

"அது வந்து... அப்பா ரெண்டு நாளா மிஸ்ஸிங்"

"வாட்? என்ன சொல்றிங்க?"

"ஆமா மேடம். வழக்கமான ஷூட்டிங்குக்கு தான் போறேன்னு சொன்னார். நானும் என்னோட வேலை விஷயமா பூனே வரை போயிருந்தேன். ரெண்டு நாளா அவர் நாட் ரீச்சபிள். அம்மா வேற ரொம்ப பயப்படுறாங்க. நானும் தான்" என்று சொல்லும் வேளையில் கமிஷ்னர் உள்ளே நுழைய அங்கிருந்தவர்கள் அவருக்கு மரியாதை நிமித்தமாய் சல்யூட் வைத்தனர். அவருக்குப் பின்னாலே நுழைந்தான் அசிஸ்டன்ட் கமிஷ்னர் இதயன். இருவரும் உள்ளே சென்று பேசிக்கொண்டிருக்க மாயந்தி உள்ளே சென்று ரோஷனைப் பற்றித் தெரிவிக்கவும் அவன் உள்ளே அழைக்கப்பட்டான்.

"வாங்க மிஸ்டர். காலையில தான் மிஸ்டர் கபூர் விஷயத்தைச் சொன்னார். நானும் சில டென்ஷன்ல எல்லாம் மறந்துட்டேன். சொல்லுங்க எப்போ மிஸ்டர் ரத்தோர் வீட்டை விட்டு வெளிய போனார்? அவர் கூட யாரெல்லாம் போனாங்க?"

"சார் அப்பா வழக்கமா வைல்ட் லைஃப் போட்டோ எடுக்க அங்கங்க போறது வழக்கம். போன வாரம் தான் பேங்காங் போயிட்டு அங்க இருக்குற வைல்ட் லைஃப் போட்டோஸ பிரபல என்விரான்மெண்ட் ஜர்னல் நேச்சருக்காக எடுத்துட்டு மூணு நாளுக்கு முன்னாடி தான் இந்தியா வந்தார். அவர் வந்த நேரம் நான் என் வொர்க் விஷயமா பூனே வரை போயிட்டு நேத்து தான் ரிட்டர்ன் ஆனேன். எங்கேயோ ஷூட்டுக்கு போறேன்னு அம்மாகிட்டச் சொல்லியிருக்கார். வழக்கமா அவர் கூடப் போகும் ஜூனியர்ஸ் யாரும் அவர் கூடப் போகல. சோ எங்க போனார்னு தெரியில. இந்த மாதிரி அவசர வேலை இருந்தா எங்களுக்கு இன்டிமேட் செஞ்சிடுவார். இல்லைனா குறைஞ்சது மெசேஜ் ஆச்சும் போட்டுடுவார். ஆனா இந்த முறை எதுவும் இல்ல. அவர் நம்பரும் நாட் ரீச்சபிள். அதான் கபூர் சார் கிட்டச் சொன்னேன். அவர் இங்க வந்து உங்கள மீட் செய்யச் சொன்னார்..." என்றவன் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் நிறுத்த,

"உங்க வீடு எந்த ஸ்டேஷன் கண்ட்ரோல்ல வருது?"

"அந்தேரி"

"ஓகே நான் அந்த ஸ்டேஷன் எஸ் ஐ கிட்டச் சொல்லி விசாரிக்கச் சொல்றேன்"

"சார் தப்பா எடுத்துக்காதீங்க... கொஞ்சம் சீக்கிரம் விசாரிச்சுச் சொல்லுங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு"

சிறிது யோசித்த டி.ஜி.பி அருகே இருந்த ஜாயிண்ட் கமிஷ்னர் ருத்ரனைப் பார்க்க அவரோ ஏ.சி.பி இதயனைப் பார்க்க அவர் பார்வையின் பொருள் உணர்ந்தவன் தலையசைக்க ரோஷனிடம் பேசி விரைவில் கண்டுபிடிப்பதாக உறுதியளித்தார் டிஜிபி.

ரோஷன் சென்றதும் இதயனைத் தனியே அழைத்த ஜாயிண்ட் கமிஷ்னர்,"மிஸ்டர் இதயன் கொஞ்சம் இந்த கேஸை என்னனு பாருங்க. ஏன்னா மிஸ்ஸிங் பெர்சன் சாதாரண ஆள் இல்ல. இந்தியாவிலே ரொம்ப முக்கியமான வைல்ட் லைஃப் போட்டோக்ராபர். அண்ட் அவர் ஒரு பத்மஸ்ரீ அவார்டியும் கூட. இன்னொன்னு தெரியுமா அவர் நம்ம வி பிக்கு சொந்தமும் ஆகணும்..."

"வி பி?"

"ஹானரபில் வைஸ் ப்ரெசிடெண்ட் ஆப் இந்தியா..." என்றதும்,

"சூர் சார். ரெண்டு நாள் டைம் கொடுங்க. ஐ வில் கிவ் எ ரிப்போர்ட்"

"எனக்கு ரிப்போர்ட் வேணாம் இதயன். ரத்தோர் தான் வேணும்"

"எஸ் சார்..." என்றவன் அந்த வழக்கில் தீவிரமாக இறங்கினான்.

*****************

மஹாராஷ்டிரா சட்டமன்றத்தை விட்டு வெளியேறிய யாக்நியா கோஷ் தன்னுடைய உதவியாளர் விநாயகத்திடம் தன் பேட்டியைப் பற்றி விசாரித்தவாறே செல்ல அப்போது அவர்களைக் கடந்த சில வண்டிகள் தங்களைச் சுற்றி வளைப்பதை உணர்ந்தவள் தன்னுடைய கேமெராவை ஆன் செய்வதற்குள் அந்த வண்டியின் கண்ணாடியில் முட்டைகளை வீசியெறிய அதற்குள் பின்னாலே வந்த நடாஷா இவற்றை படம்பிடிக்க அந்த வாகனங்கள் வேகமெடுத்து மறைந்தது.

"என்ன ஆச்சு யாக்? யாரவங்க?"

"வேற யாரா இருக்கும் நடாஷா? எல்லாம் அதுல் கட்சிகாரங்களா தான் இருக்கும்..."

"நானே சொல்லணும்னு நெனச்சேன். பொதுவா நம்ம ஜர்னலிசத்துல ஸ்டிங் ஆப்ரேசன் செய்யுறது வழமை தான் என்றாலும் இதுல எப்பயும் நாம சார்ந்த பத்திரிக்கை பேர் தான் வெளிய வரணுமே தவிர தனிப்பட்ட நபர் வெளிய அடையாளப்படக்கூடாது. இப்போ பாரு அந்த பூட்டேஜ் லீக் ஆனதுல தெய் ஆர் டார்கெட்டிங் யூ. அதுல் கொஞ்சம் மோசமான பொலிடீஷியன். நீ செஞ்ச வேலையால பாரு ஆட்சியே கவுரப்போகுது. பார்த்து பத்திரமா இரு"

"ஓகே தேங்க்ஸ் நடாஷா. அந்த பூட்டேஜ் கொடு. இன்னைக்கு அவங்களை விடறதில்ல" என்றவளுக்கு,

"மேடம் உங்களால ரெண்டு நாளா எங்க சேனல் காத்து வாங்குது. இப்போ இதை டெலிகேஸ்ட் செஞ்சு தான் எங்க டி.ஆர்.பி ரேட்டை உயர்த்தனும். டேக் கேர்..." என்று நடாஷா சென்றுவிட யாக்நியா தங்கள் 'இந்தியன் வாய்ஸ்' அலுவலகத்தை அடைந்தாள்.

"ஊடகத் துறையைத் தாக்கும் முனைப்போடு செயல் படும் மஹாராஷ்டிரா லோக் சமிதி கட்சியினர். ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் ஊடகத்தின் மீது அதிகரிக்கும் தாக்குதல்கள். ஊடகச் சுதந்திரம் அச்சுறுத்தப்படுகிறதா?" என்ற வாசகத்தோடு யாக்நியா கோஷ் சென்ற வாகனம் தாக்கப்படுவதோடு அதைத் தாக்கிய வாகனத்திலும் தாக்கியவர்களின் உடையிலும் இருந்த மகாராஷ்டிரா லோக் சமிதியின் சின்னத்தை மார்க் செய்து மீண்டும் மீண்டும் காட்டப்பட அடுத்த அரைமணி நேரத்தில் அக்கட்சியின் சார்பில் இருந்து ஒரு மறுப்பு அறிக்கையும் தொண்டர்கள் அமைதி காக்குமாறு இன்னொரு அறிக்கையும் வந்துவிட தன்னுடைய வீட்டில் எரிமலையென கொதித்துக்கொண்டிருந்தார் அதுல் ஜைஷ்வால்.

அவருடைய எண்ணமெல்லாம் கடந்த மூன்று நாட்களாக அவருக்கு தலைவலியும் கொடச்சலும் கொடுத்துக்கொண்டிருக்கும் அந்த வீடியோவிலே இருந்தது. மூன்றே நாட்களில் இந்த மாநிலத்தின் அசைக்கமுடியாத சக்தியாகவும் நிழல் முதல்வராகவும் இருந்த தன்னுடைய நிலை இவ்வளவு கீழிறங்கியதற்கு அந்த வீடியோ தான் காரணம் என்று நினைக்கையில் அதை எடுத்த யாக்நியா கோஷின் மீது சொல்லிலடங்கா வன்மம் குடியேறியது. பின்னே எத்தனை சிரமப்பட்டு இந்த இடத்தை அவர் அடைந்தார் என்பதை அவர் ஒருவரே அறிவார். எப்பாடு பட்டாவது இந்த இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள நினைத்தவருக்கு அந்த யோசனை வந்தது. (மாலை நீளும்...)

லேட் அப்டேட்ஸ் தான் வரும் மக்களே! ஆனால் வரும்?
 
Ingesting a irukku....
DGP or DCP....ya?
Commissioner, Jt. Commissioner, ...ACP, DCP
நிறைய கதைகளில் படிக்கும் போது, confusion ஆ இருக்கும்,.
கொஞ்சம் explain பண்ணுங்க...pl.
 
Ingesting a irukku....
DGP or DCP....ya?
Commissioner, Jt. Commissioner, ...ACP, DCP
நிறைய கதைகளில் படிக்கும் போது, confusion ஆ இருக்கும்,.
கொஞ்சம் explain பண்ணுங்க...pl.

ஒரு மாநிலத்தோட உயரிய போலீஸ் பதவி(rank) டி.ஜி.பி(டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ்). ஆனால் கமிஷ்னர் அப்படிங்கறது ஒரு போஸ்டிங். கமிஷ்னர் ஆகணும்னா அவங்க ஒன்னு டி.ஜி.பி யாவோ ஏ.டி.ஜி.பியாவோ இருக்கனும். ஐ பி எஸ் முடிச்சா டைரெக்ட்டா acp, asp(assistant commissioner, assistant superintendent) ஜாயின் பண்ணலாம். அதுக்கு பிறகு sp/dc (deputy commissioner) dig, ig. adgp, dgp னு மேல்நோக்கி போகும். சில stateல ac, dcனு சொல்லுவாங்க சில ஸ்டேட்ல asp dsp னு சொல்லுவாங்க. ஆனா அவங்க ரேங்க் ஒன்னு தான். தமிழ் நாட்டுல எடுத்துக்கிட்டா மொத்தம் நாலு zoneஆ போலீசை பிரிச்சு இருக்காங்க. north, south, west, central. ஒவ்வொரு zone head - ig. ig க்கு கீழ dig. ஒரு dig ரெண்டு மூணு டிஸ்ட்ரிக்ட் கண்ட்ரோல் பண்ணுவார். ஒவ்வொரு டிஸ்ட்ரிக்ட ஒரு sp control பண்ணுவார். அவருக்கு கீழ dsp. ஆனா பெரிய பெரிய சிட்டிங்க எல்லாம் தனியா வரும். சென்னை கோவை திருச்சி மதுரை திருநெல்வேலி சேலம் திருப்பூர் எல்லாம் கமிஷ்னர் கண்ட்ரோல்ல வரும். இந்த கமிஷ்னர் ஒன்னு dgp, adgp, இல்ல ig ரேங்க்ல இருக்கலாம்.

இது போக ஒவ்வொரு மாநிலத்துக்கு கீழயும் நிறைய special units இருக்கும், like crime branch, vigilance, cybercrime, anti terror squad, anti trafficking squad, anti narcotics, finger print இப்படி. இந்த ஸ்பெஷல் யூனிட்ஸ் எல்லாம் ஒவ்வொரு adgp கண்ட்ரோல்ல வரும். அந்த adgpக்கு கீழ acp dcp னு வேலை செய்வாங்க. இப்போ நம்ம கதைக்கு வருவோம். மஹாராஷ்டிராவோட தலைநகர் மும்பைங்கறதால அது நேரடியா dgp கண்ட்ரோல்ல வரும். அந்த dgpக்கு கீழ ஏடிஜிபி ருத்ரன் வரார். அவருக்கு கீழ நம்ம 'இதயன்' அசிஸ்டன்ட் கமிஷ்னரா(acp) வேலை பாக்குறான். அவனுக்கு கீழ மாயந்தி முதலியோர் வேலை பாக்குறாங்க. இப்போ புரியுதா sis? இந்தக் கதையில மேற்சொன்ன ஸ்பெஷல் யூனிட்ஸ்ல நிறைய டீம் வரும். சொல்றேன்... இதுல இன்னும் சில வகைகள் இருக்கு. அதாவது இதெல்லாம் commissonerate system கீழ வரும். dual systemnu ஒன்னு இருக்கு. அதுல sp தன்னிச்சையாக செயல் பட முடியாது. அவர் collector கூட சேர்ந்து வேலை செய்யணும். அது இப்போ குறைஞ்சிட்டே வருது. பெரும்பாலும் commissonerate சிஸ்டம் தான்

கமிஷ்னர் is a posting. dgp, adgp dig are the ranks to reach the post ஆப் கமிஷ்னர், jc, dc. ac. நான் சொன்னது okவா? whoever becomes chennai commissioner is the head of tamil nadu police... now sylendra babu ips is the head of tn police.
 
Very clear....ஆனால், நம்ம தமிழ்நாட்டில்....acp or sp யா..?
நிறைய கதைகளில், முதலில் ACP னு சொல்வாங்க, பிறகு சில இடங்களில்
Sp யா மாறி இருக்கும்..
எனக்கு ரேங்கிங் புரியுது...ஆனால் designation னு சொல்லும் போது
மாறி,மாற்றி சொல்வதால் குழப்பம் வரும்.

Anyways, once again thank you very much :)
 
ஒரு மாநிலத்தோட உயரிய போலீஸ் பதவி(rank) டி.ஜி.பி(டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ்). ஆனால் கமிஷ்னர் அப்படிங்கறது ஒரு போஸ்டிங். கமிஷ்னர் ஆகணும்னா அவங்க ஒன்னு டி.ஜி.பி யாவோ ஏ.டி.ஜி.பியாவோ இருக்கனும். ஐ பி எஸ் முடிச்சா டைரெக்ட்டா acp, asp(assistant commissioner, assistant superintendent) ஜாயின் பண்ணலாம். அதுக்கு பிறகு sp/dc (deputy commissioner) dig, ig. adgp, dgp னு மேல்நோக்கி போகும். சில stateல ac, dcனு சொல்லுவாங்க சில ஸ்டேட்ல asp dsp னு சொல்லுவாங்க. ஆனா அவங்க ரேங்க் ஒன்னு தான். தமிழ் நாட்டுல எடுத்துக்கிட்டா மொத்தம் நாலு zoneஆ போலீசை பிரிச்சு இருக்காங்க. north, south, west, central. ஒவ்வொரு zone head - ig. ig க்கு கீழ dig. ஒரு dig ரெண்டு மூணு டிஸ்ட்ரிக்ட் கண்ட்ரோல் பண்ணுவார். ஒவ்வொரு டிஸ்ட்ரிக்ட ஒரு sp control பண்ணுவார். அவருக்கு கீழ dsp. ஆனா பெரிய பெரிய சிட்டிங்க எல்லாம் தனியா வரும். சென்னை கோவை திருச்சி மதுரை திருநெல்வேலி சேலம் திருப்பூர் எல்லாம் கமிஷ்னர் கண்ட்ரோல்ல வரும். இந்த கமிஷ்னர் ஒன்னு dgp, adgp, இல்ல ig ரேங்க்ல இருக்கலாம்.

இது போக ஒவ்வொரு மாநிலத்துக்கு கீழயும் நிறைய special units இருக்கும், like crime branch, vigilance, cybercrime, anti terror squad, anti trafficking squad, anti narcotics, finger print இப்படி. இந்த ஸ்பெஷல் யூனிட்ஸ் எல்லாம் ஒவ்வொரு adgp கண்ட்ரோல்ல வரும். அந்த adgpக்கு கீழ acp dcp னு வேலை செய்வாங்க. இப்போ நம்ம கதைக்கு வருவோம். மஹாராஷ்டிராவோட தலைநகர் மும்பைங்கறதால அது நேரடியா dgp கண்ட்ரோல்ல வரும். அந்த dgpக்கு கீழ ஏடிஜிபி ருத்ரன் வரார். அவருக்கு கீழ நம்ம 'இதயன்' அசிஸ்டன்ட் கமிஷ்னரா(acp) வேலை பாக்குறான். அவனுக்கு கீழ மாயந்தி முதலியோர் வேலை பாக்குறாங்க. இப்போ புரியுதா sis? இந்தக் கதையில மேற்சொன்ன ஸ்பெஷல் யூனிட்ஸ்ல நிறைய டீம் வரும். சொல்றேன்... இதுல இன்னும் சில வகைகள் இருக்கு. அதாவது இதெல்லாம் commissonerate system கீழ வரும். dual systemnu ஒன்னு இருக்கு. அதுல sp தன்னிச்சையாக செயல் பட முடியாது. அவர் collector கூட சேர்ந்து வேலை செய்யணும். அது இப்போ குறைஞ்சிட்டே வருது. பெரும்பாலும் commissonerate சிஸ்டம் தான்

கமிஷ்னர் is a posting. dgp, adgp dig are the ranks to reach the post ஆப் கமிஷ்னர், jc, dc. ac. நான் சொன்னது okவா? whoever becomes chennai commissioner is the head of tamil nadu police... now sylendra babu ips is the head of tn police.

Really helpful info pa. Thanks.
 
Advertisement

Top